திங்கள், 12 ஜூன், 2017

திங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



புளி மிளகாயை நினைத்தாலே எனக்கு மோர் சாதம் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.

இல்லைனா ‘புதிய மாங்காய் ஊறுகாய்’. புளிப்பு இல்லாத எந்த டிஃபனுக்கும் புளி மிளகாய் நல்லா இருக்கும். புதிய (‘கடுத்த’ என்று நாங்கள் குறிப்பிடுவோம். ஒரு நாள் ஆயிடுத்துன்னா, ‘புளிச்ச’) தோசை, அதிலும் ஊத்தப்பம், காரமில்லாத அரிசி உப்புமா, சப்பாத்திகூட ஓகே.. இவைகளுக்கு புளிமிளகாயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால்…செமயா இருக்கும் (காரமாகவும்).  [ ஆமாம்...  நாவூறுகிறது! - ஸ்ரீராம் ]



எங்க அம்மா, அடைக்கு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து அந்த மிளகாய்த் தொகையலைத் தொட்டுக்கொள்வார். புளி மிளகாயும் அந்த ரகம்தான். காரம் ஜாஸ்தி. [எங்க அம்மா பச்சை மிளகாயை அப்படியே உப்பு சேர்த்து பச்சையாகக் கடித்துத் தொட்டுக்க கொள்வார்! - ஸ்ரீராம்]



200 கிராம் பச்சை மிளகாய், புளி பேஸ்ட் 2 மேசைக்கரண்டி, கொஞ்சம் கட்டிப் பெருங்காயம், கடுகு, நல்லெண்ணெய் 4 மேசைக் கரண்டி (கூட இருந்தாலும் தப்பில்லை), கொஞ்சம் மஞ்சள்பொடி, தேவையான உப்பு போதும் புளி மிளகாய் பண்ண. 



புளிபேஸ்டை 1 டம்ளர் வருமாறு கரைத்துக்கோங்க. கொஞ்சம் நீர்க்க இருந்தா தப்பில்லை. கொதிக்கும்போது கெட்டியாகிவிடும்.

பச்சை மிளகாயை நீள வாக்கில் கட் பண்ணிட்டு, ஒரு தடவை தண்ணீரில் அலசினால், அதன் விதைகள் போய்விடும்.  அப்புறம் அதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்துக்குங்க.




இப்போ கடாயில, 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, சூடானபின், கடுகைத் தாளித்துக்கோங்க. அப்புறம் தண்ணீர் இல்லாத, உப்பு சேர்த்த பச்சை மிளகாயைப் போட்டு கொஞ்சம் வதக்கிக்கோங்க.  அதுல புளி ஜலத்தைவிட்டு, தேவையான உப்பு, பெருங்காயம், கொஞ்சம் மஞ்சத் தூள் போட்டு கொதிக்கவைங்க. புளி வாசனை போயிடும். மிளகாயும் நல்லா வெந்துடும். கலவையும் கொஞ்சம் கெட்டியாயிடும். இப்போ மீதமிருக்கிற நல்லெண்ணெயும் விட்டு கொஞ்சம் கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம்.

[பார்க்கும்போதே கவர்ச்சியாக சாப்பிட ஆசை ஏற்படுகிறது.  நாவில் அருவி!  எனக்கும் மிக மிகப் பிடித்த ஐட்டம்! - ஸ்ரீராம்]



நான், இந்தத் தடவை, ஒரு குடமிளகாயையும், 5-6 பச்சை மிளகாயையும் மிக்சில அரைத்து, புளி ஜலம் சேர்த்தபின்பு இதனையும் சேர்த்தேன்.

ஆறினபின் ஒரு பாட்டிலில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் 1 வாரத்துக்குமேல் இருக்கும்.

புளி மிளகாய் செய்யும்போது, ரொம்ப நெடியாயிருக்கும். எக்ஸாஸ்ட் ஃபேன் போட்டாலும், நம்ம மூக்குல நெடி ஏறாமப் பாத்துக்கணும். மிளகாயிலும் கொஞ்சம் காரம் குறைவாக உள்ளதை உபயோகப்படுத்தலாம்.

பின்குறிப்பு:

சிலர் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம் என்பார்கள் (காரம் குறைவாகத் தெரிய). ஆனால் வெல்லம்லாம் சேர்த்தோம்னா, காரம் நாக்குல தெரியாது. ஜாஸ்தி சாப்பிட்டு வயத்துக்குப் பிரச்சனையாயிடும்.
 
மிளகாயின் விதை உடலுக்கு நல்லதில்லை என்பார்கள். (சீரணமாகாது?).
மிளகாயை கட் பண்ணிவிட்டு கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். மறந்து கண்ணைத் துடைத்துக்கொண்டு, காரணமில்லாமல் அழாதீர்கள்.
பலர், ஊறுகாய்களுக்கு வெந்தயப் பொடி (வெந்தயத்தை வறுத்து பொடி செய்து) சேர்ப்பார்கள். காரத்தினால் உடல் சூடாயிடக்கூடாது என்பதற்காக வெந்தயம் சேர்க்கப்படுகிறது. நான் சேர்ப்பதில்லை.
  
செய்து பாருங்கள். ரொம்ப நல்லாருக்கும். (அதுவும் குளிர்காலத்தில்).

அன்புடன்,
நெல்லைத்தமிழன்.




தமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.

74 கருத்துகள்:

  1. இப்போல்லாம் புளியா தோசைக்கு (அன்றே அரைத்து அன்றே வார்க்கப்படும்) இந்தப் புளிமிளகாய்தான் தொட்டுக்க. எங்க வீட்டில் சின்ன வயசில் சாப்பிட்டது. இப்போது ரங்க்ஸுக்கும் பிடித்துவிட இதான் பண்ணிட்டு இருக்கேன். மோர் சாதத்துக்குக் கேட்கவே வேண்டாம். மாங்காயும் எனக்குப் புதுசாப் போட்ட ஊறுகாய்தான் பிடிக்கும். :))))

    பதிலளிநீக்கு
  2. இந்த புளிமிளகாய் எல்லாம் அதிகம் செலவில்லாதவை.. கைப்பக்குவமாக செய்யும்போது சுத்தம்.. சுகாதாரம்.. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்.. அதே போல கட்டித் தயிருடன் ரெண்டு பச்சை மிளகாய் சிறிது கல்லுப்பு... அடடா.... சொர்க்கம்!..

    பதிலளிநீக்கு
  3. அம்மாவிடம சொல்லி செய்ய சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  4. இந்த புளி மிளகாய் எல்லாம் கிராமப்புறங்களில் செலவில்லாது செய்யக்கூடியவை.. சொந்த கைப்பக்குவம்.. சுத்தம்.. சுகாதாரம்.. சுவை.. சந்தோஷம்.. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்.. அதைப் போலவே ரெண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் கல் உப்பு.. அடடா சொர்க்கம்..

    பதிலளிநீக்கு
  5. புளிமிளகாய்...அருமையா இருக்கு..

    பதிலளிநீக்கு
  6. ஆஆஆஆவ்வ்வ்வ் இன்று ஸ்ரீராம்... ஒரு ஸ்டைலாவே நடக்கிறார் தலையை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு, ஆரையும் கிட்ட வரக்கூடாதெனப் பேசியபடி ஹா ஹா ஹா வாழ்த்துக்கள் மகுடத்துக்கு...

    வருகிறேன்ன்ன் பபபபச்சை மிளகய்க்கூஊஉ

    பதிலளிநீக்கு
  7. 7 வது ஓட்டுடன் காலை வணக்கம் நண்பர்களே :) :)

    பதிலளிநீக்கு
  8. புளிமிளகாய் ரெசிப்பி சூப்பர். பாண், ரொட்டி போன்றவற்றுடன் தொட்டுச் சாப்பிடலாம் போல...! இதை இன்று செய்து பழகலாம் என்று இருக்கேன் :) ஏன்னா எங்கள் வீட்டில் சமையல் நான் தான். நெல்லைத் தமிழன் சாருக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. புளி மிளகாய் ..இது வரைக்கும் சாப்பிட்டதில்லை .ஸ்ரீராம் அங்கங்கே ப்ளூ கலரில் குஷில ஓடி ஓடி கமென்டராரே :)
    கண்டிப்பா செய்யறேன் ..எளிமையான குறிப்பு சுலபமா செய்யலாம் ..

    இங்கே பல வெரைட்டில மிளகாய் இருக்கு சிலது குட்டியா சிலது நீளமா ....

    பதிலளிநீக்கு
  10. புளி மிளகாய் காரசாரமாக ஜோராகத்தான் செய்யப்பட வேண்டும்.

    வெல்லமெல்லாம் சேர்க்கவே கூடாது.

    எந்தவொரு ஊறுகாயும் (மாவடு, மாகாளி போன்றவை தவிர) புத்தம் புதிதாக செய்து முதல் ஒரிரு வாரத்திற்குள் பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் ஜோராக, நிறம் மாறாமல் ஃப்ரெஷ்ஷாக அவை டேஸ்ட் ஆக இருக்கும்.

    இந்த புளிமிளகாய் போன்றவைகள் நம் ‘நவத்துவாரங்களுக்கும்’ கொஞ்சம் எரிச்சல் தரக்கூடியது என்றாலும்கூட, நாக்கிற்கு மிகவும் வேண்டித்தான் உள்ளது. :)))))

    இதன் பெயரைக் கேட்டதுமே, மஸக்கைக்காரிபோல உடனே சாப்பிடணும்போல நாக்கில் நீர் வழிகிறது.

    என் நாக்கில் நீர் வழிய இன்று நீர் காரணமாகிவிட்டீர்.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா படங்களுடன் நல்ல பதிவு.

    ஆனால் பச்சை மிளகாயை முழுசுமுழுசாக மிதக்க விட்டுள்ளீர்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    கட் பண்ணி சின்னச் சின்னத் துண்டுகளாக மட்டுமே எங்காத்தில் போடுவார்கள்.

    பாராட்டுகள் + வாழ்த்துகள் ஸ்வாமீ. :) பகிர்வுக்கு நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  11. instead cutting lengthwise, cut into small pieces crosswise and proceed as given above. it can be used for each 'kavalam' and enjoy ...........

    பதிலளிநீக்கு
  12. புளிக் கரைசல் அதிகமாக தேவையான அளவுக்குச் சேர்க்கவில்லை போலிருக்குது. இன்னும் கொஞ்சம் சிவந்த நிறம் வராமல், ஏதோ மோர்க்குழம்பு போலக் காட்சியளிக்கின்றது .... அந்தப்படத்தில் .... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான புளிமிளகாய்.

    //மிளகாயை கட் பண்ணிவிட்டு கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். மறந்து கண்ணைத் துடைத்துக்கொண்டு, காரணமில்லாமல் அழாதீர்கள்.//

    சின்ன குறிப்பு என்றாலும் முக்கியமான குறிப்பு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நானும் மிளகாய் விதைகளை நீக்கிட்டுத்தான் சமைப்பேன் ..
    ..நெல்லைத்தமிழன் நீங்க துருக்கி கடைகளில் விற்கும் வினிகரில் சேர்த்த மிளகாய் சால்டட் சில்லி பெப்பர் சாப்ட்டிருக்கீங்களா ? காரமே இருக்காது கொஞ்சம் ஆலிவ் எண்ணை வினிகர் உப்பு சேர்த்து செய்வாங்க அப்படியே எடுத்து ஜூஸோட கடிக்கலாம் ..டுனீசியா துருக்கி குர்திஷ் ஸ்பெஷல் இது ஆலீவ்சையும் இப்படி ஊறப்போட்டு வைப்பாங்க ..அப்படியே வேண்டிய அளவு அந்த மர பாத்திரங்களில் இருந்து எடுத்து தருவாங்க .எனக்கு ஸ்பெஷலா வெஜ் டோனர் செய்து அதில் வச்சி தருவாங்க ..இங்கே சூப்பர் மார்க்கெட்டில் இருக்கு ஆனா ஒரிஜினல் ருசி இல்லை

    பதிலளிநீக்கு
  15. //மிளகாயை கட் பண்ணிவிட்டு கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். மறந்து கண்ணைத் துடைத்துக்கொண்டு, காரணமில்லாமல் அழாதீர்கள்.//
    என்னை மாதிரி ஆளுங்களுக்கு கண்டிப்பா இந்த குறிப்பு அவசியம் .முகத்தில் காதில் கூட தேச்சிடுவேன் நான் :)
    HAAHAAA :)

    பதிலளிநீக்கு
  16. புதுப்புளிக் கரைசல் என்று நினைக்கிறேன். கலர் குறைவாக இருக்கு. நாங்கள் இதை மிளகாய்ப் பச்சடி என்போம்.புளி இன்னும் அதிகம் வேண்டும். புளி மிளகாய் என்பது எங்கள் ஊர் பக்கத்தில் மோர் மிளகாய் மாதிரி கெட்டியான புளிக் கரைசலில் மிளகாயைத் துளி நுனியில் வகிர்ந்து போட்டு பெரிய கற்சட்டிகளில் ஊறவைப்பார்கள் . அதைக்காயவைத்து மோர் மிளகாய் மாதிரி தயாரிப்பார்கள். அதுவும் ஊற ஊற வாஸனையாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஊறும்போதே ருசியாக இருக்கும். காய்ந்த பிறகு சேமிப்புதான். இதெல்லாம் சேர்த்துச் சாப்பிட ரஸனையும் வேண்டும். நேரமும் வேண்டும். காரம் அதிகமானால் கண்ணில் நீர்தான். மிளகாய், அந்தப்புளி ருசிதான். அன்புடன்.
    கடைசியில்தான் கமென்ட் போட நான் வருவேன். இவ்விட நேரம் அப்படி. இன்னிக்கு கொஞ்சம் சுருக்க அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  17. எங்க அம்மா செய்து சாப்பிட்டிருக்கேன்.இவர் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்பதால் செய்ததில்லை..:)

    பார்க்கும் போதே செய்து சாப்பிட ஆவல்..:) அம்மா செய்வது இஞ்சி புளி போல திக்காக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  18. எங்க அம்மா செய்து சாப்பிட்டிருக்கேன்.இவர் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்பதால் செய்ததில்லை..:)

    பார்க்கும் போதே செய்து சாப்பிட ஆவல்..:) அம்மா செய்வது இஞ்சி புளி போல திக்காக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  19. பொதுவாகவே நான் எந்த மிளகாயாக இருந்தாலும் விதைகளை நீக்கிடுவேன். :) இந்தப் புளி மிளகாய்க்கு என்றே சின்னச் சின்னதாக (நாட்டு மிளகாய் என்று சொல்வார்கள்.)மிளகாய் கிடைக்கும். அதை அப்படியே நுனியில் கீறி (காம்போடு போடுவோம்) விதைகளை மட்டும் நீக்கிட்டுக் கடுகு, வெந்தயம் தாளித்து நல்லெண்ணெயில் வதக்கிட்டுப் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்ப்பார்கள். மாமியார் வீட்டில் வெல்லம் கட்டாயம் உண்டு. எங்க வீட்டில் இல்லை. நானும் போடுவதில்லை. மாமியார் வீட்டில் மிளகாய்ப் பச்சடி என்றும் அப்பா வீட்டில் புளி மிளகாய்த் தண்ணி என்றும் சொல்வதுண்டு. பழைய சாதத்துக்கு இது நல்ல துணை!

    பதிலளிநீக்கு
  20. ஆதி வெங்கட் சொல்வது போல் இப்போதெல்லாம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு இஞ்சி சேர்த்துப் புளி இஞ்சி போலவே கெட்டியாகச் செய்கிறேன். புளி இஞ்சியைத் தொக்கு போல வதக்கி அரைத்துக் கொண்டு மீண்டும் தாளிதம் செய்து வதக்கிச் செய்யணும். அதுக்குப் பதிலாக இப்படி! இதையே கொஞ்சம் தளரவும் பச்சடி போல் கரகரவென அரைத்துக் கொண்டும் செய்யலாம். அதுவும் ஒரு ருசி!

    பதிலளிநீக்கு
  21. நான்ன்ன்ன்ன்ன் வந்துட்டேன்ன்ன்ன்ன்:))...

    http://www.ripleys.com/wp-content/uploads/2014/08/Cat-Landing-Grass-SMALLtrim.gif

    பதிலளிநீக்கு
  22. உறைப்புப் புளிப்பான பொருள் எனில்.. ச்ச்சும்மாவே சாப்பிட்டு முடிச்சிட்டு நெஞ்செரிவில் அவதிப்பட்டு, ஏச்சு வாங்குவதில் எனக்கொரு சந்தோசம்:).

    புளியையும் பச்சை மிளகாயையும் பார்த்ததும் மிளகாய் வற்றல் செய்யும் முறையாக்கும் என நினைச்சுட்டேன்ன்ன்.. சூப்பரா இருக்கு, ஆனா புளிசேர்த்து வற்ற விட்டு எடுக்கும்போது நல்ல ஒரு கலர் வருமெல்லோ.. அது இங்கே மிஸ்ஸிங்... அதுக்குக் காரணம் நெல்லைத்தமிழன்.. மிளகாயை அரைச்சும் போட்டு விட்டார்ர்.... அப்படி இல்லாமல் செய்து பார்க்கிறேன் இப்பவே:).. எனக்குப் புடிச்ச ஐட்டமாச்சே:)..

    ஆனா ஒண்ணு.. எனக்கு நெஞ்செரிச்சால்ல்ல்.. இங்குதான் ஓடிவருவேன்ன்ன்:)ஸூ பண்ண:). ஸ்ரீராம் புளொக்குக்கு இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கிறீங்களோ?:) சரி விடுங்கோ.. போனாப்போகுது உங்களிடம் இருக்கும் வைரம் பதிச்ச மகுடத்தை வித்தாவது கட்டிடுங்கோ:)...

    பகவான் ஜீ இப்போ பிஸி என்பதால அவருக்கு மகுடம் போடக்கூட நேரமில்லாமல் கிடக்குது:).

    பதிலளிநீக்கு
  23. நான் எப்பவும் விதைகளோடுதான் பச்சை மிளகாய் கறிக்குச் சேர்ப்பதுண்டு,... அதனால உறைப்பாக இருக்கும். ஆனா கொஞ்ச நாள் ஆதித்தியன் அவர்களின் சமையல் குறிப்புக்கள் பார்த்தேன்ன்.. அதில் அவர் எப்பவும் விதைகளை அழகா நீக்கிவிட்டே சமைப்பார்.

    அன்றிலிருந்து நானும் அப்படியே செய்கிறேன்.

    இங்கு நம் கடைகளில் எனில் குட்டிக் குட்டிக் காரப் பச்சமிளகாய்தான்[கரும்பச்சையில்] கிடைக்குது.. அப்படி எனில் வாங்க மாட்டேன்ன்.. காரம் அதிகம்.

    பாகிஸ்தான் கடைகளில் பெரிய வெண் பச்சை நிறப் பச்சை மிளகாய்கள் கிடைக்கும், பார்க்கவும் அழகு, காரமும் குறைவு.. அவற்றைத்தான் வாங்குவேன்.

    பதிலளிநீக்கு
  24. //மிளகாயின் விதை உடலுக்கு நல்லதில்லை என்பார்கள். (சீரணமாகாது?).//

    ஓ இது புதுத்தகவல். நான் அறிந்தது... விதைகளில் நிறைய அலர்ஜி இருக்காம் என.

    உங்களுக்கு ஒரு புறுணம் தெரியுமோ???..

    செத்தல் மிளகாயை தாளிதத்துக்கு சேர்க்கும்போது எப்பவும், விதைகளை, மிளகாய் ரின் க்குள்ளேயே , போட்டு விட்டு, கோதை மட்டுமே சேர்ப்பேன். அதனால விதைகள் நிறைய சேர்ந்திடும்.

    சேர்ந்த விதைகள் ஒரு 300, 400 கிரமுக்கு கிட்ட வந்திட்டுது.. அவற்றை நன்கு வறுத்துப் போட்டு, நிறைய விதை நீக்கிய பழப்புளி(தண்ணி சேர்க்காமல்), போட்டு அளவுக்கு உப்பும் போட்டு மிக்ஸியில் அரைத்துப் பவுடராக்கி.. பொட்டிலில் போட்டு ஃபிரிஜ்ஜில் வச்சிட்டேன் தெரியுமோ?.. இடியப்பம் புட்டோடு தொட்டும் சாப்பிடலாம், இல்லை எனில் தேங்காய்ப்பூ போட்டு சம்பலாகக் குழைத்தும் இன்ஸ்டண்ட்டாக சாப்பிடலாம்ம்ம் எப்பூடி என் ஐடியா?:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  25. எனக்கொரு சந்தேகம்.. இது நெல்லைத்தமிழன் செய்ததோ இல்ல அவரின் ஹஸ்பண்ட் செய்து அனுப்பியதோ?:) .. சுவாமிப்படம் மிஸ்ஸிங்:).

    பதிலளிநீக்கு
  26. மோர் சாதம்,புளிமிளகாய் இருந்தால்,மோர் மோர் என்று நாக்கு கேட்கும்!

    பதிலளிநீக்கு
  27. மோர் சாதம்,புளிமிளகாய் இருந்தால்,மோர் மோர் என்று நாக்கு கேட்கும்!

    பதிலளிநீக்கு
  28. //புளி மிளகாய் காரசாரமாக ஜோராகத்தான் செய்யப்பட வேண்டும்.

    வெல்லமெல்லாம் சேர்க்கவே கூடாது.

    எந்தவொரு ஊறுகாயும் (மாவடு, மாகாளி போன்றவை தவிர) புத்தம் புதிதாக செய்து முதல் ஒரிரு வாரத்திற்குள் பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் ஜோராக, நிறம் மாறாமல் ஃப்ரெஷ்ஷாக அவை டேஸ்ட் ஆக இருக்கும்.//

    வைகோ ஸார் சொல்லியிருக்கும் இதே கருத்துதான் எனக்கும்.

    //ஆனால் பச்சை மிளகாயை முழுசுமுழுசாக மிதக்க விட்டுள்ளீர்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    கட் பண்ணி சின்னச் சின்னத் துண்டுகளாக மட்டுமே எங்காத்தில் போடுவார்கள்.//

    ஆனால் இதில் மாறுபாடான கருத்து. எனக்கு முழுசாய் போட்டாத்தான் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  29. //புளிக் கரைசலில் மிளகாயைத் துளி நுனியில் வகிர்ந்து போட்டு பெரிய கற்சட்டிகளில் ஊறவைப்பார்கள் . //

    கரெக்ட் காமாட்சி அம்மா. எனக்கும் ஞாபகம் வந்து விட்டது. முன்பு ஒருமுறை கீதாக்கா பதிவொன்றில் கூடக் கேட்டிருக்கிறேன். என் அம்மா இதுபோலத்தான் செய்வார்கள். சலிப்பு வாடை வரும் முன் காலி செய்துவிடவேண்டும் என்பதால் கொஞ்சம் கொஞ்சம்தான் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  30. //ஆதி வெங்கட் சொல்வது போல் இப்போதெல்லாம் மிளகாயைக் குறைத்துக் கொண்டு இஞ்சி சேர்த்துப் புளி இஞ்சி போலவே கெட்டியாகச் செய்கிறேன்//

    கீதாக்கா... நோ.... எவ்வளவு வயதானாலும் எவ்வளவு கஷ்டம் என்றாலும் மிளகாய் மிளகாய்தான்! இஞ்சி தனி. அதுவும் செய்யலாம் ஆனால் தனியாக!! அதேபோல அரைத்துச் செய்யும் பச்சடியும் வேண்டாம். மிளகாய் உரு மாறாமல் கிடைக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  31. //புளிக் கரைசல் அதிகமாக தேவையான அளவுக்குச் சேர்க்கவில்லை போலிருக்குது. இன்னும் கொஞ்சம் சிவந்த நிறம் வராமல், ஏதோ மோர்க்குழம்பு போலக் காட்சியளிக்கின்றது //

    //புதுப்புளிக் கரைசல் என்று நினைக்கிறேன். கலர் குறைவாக இருக்கு.//

    ஆமாம். பழைய புளிதான் ஆப்ட்!

    பதிலளிநீக்கு
  32. நன்றி எங்கள் பிளாக் மற்றும் ஸ்ரீராம். இப்போ படத்தைப் பார்க்கும்போதே, பசி வந்துவிட்டதுபோல் இருக்கிறது. என்ன செய்ய. ரமதான் மாதமாயிற்றே. வீட்டுக்குப்போய் நானே சாதம் செய்தால்தான் சாப்பிடமுடியும். வெளில எந்தக் கடையும் (உணவு) திறந்திருக்காது வெளிலயும் சாப்பிடமுடியாது (தண்ணி கூட)

    பதிலளிநீக்கு
  33. @அதிரா... //உங்களிடம் இருக்கும் வைரம் பதிச்ச மகுடத்தை//

    மகுடம் மகுடம் என்கிறீர்களே? எங்கே? எங்களுக்கேது மகுடம்? அதைத்தான் நீங்களும் பகவான்ஜியும் அவ்வப்போது கில்லர்ஜியுமே வைத்துக் கொண்டிருக்கிறீர்களே....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாளாக வந்தால் மகுடம் கிடைக்கும் ,நான்கு பேராக வந்தால் யார் தலையில் வைப்பது :)

      நீக்கு
  34. அதிரா....

    //இது நெல்லைத்தமிழன் செய்ததோ இல்ல அவரின் ஹஸ்பண்ட் செய்து அனுப்பியதோ?:) .. சுவாமிப்படம் மிஸ்ஸிங்:). //

    அட, என்ன ஒரு அவதானிப்பு! ஆமாமோ?!!

    பதிலளிநீக்கு
  35. நன்றி கீதா மேடம். கடுத்த தோசைக்கு புளி மிளகாய் செம காம்பினேஷன். நீங்க சொல்லியிருக்கறபடி, குளிர்ந்த மோர் சாதத்துக்கு அட்டஹாசமா இருக்கும். (அதுவும் இப்போ அங்க இருக்கற வெயிலுக்கு ரொம்ப நல்லா இருக்கும்) எனக்கும் புது மாங்காய் ஊறுகாய்தான் பிடிக்கும். மாங்கா வத்தல் உபயோகப்படுத்திச் செய்கிற கார மாங்காய் ஊறுகாய், எனக்கு சுட சாதத்தில் கலந்து சாப்பிடத்தான் பிடிக்கும். மோர்சாதத்துக்கு அவ்வளவு பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  36. வாங்க துரை செல்வராஜு. பகல் நேரங்களில் உணவகம் செயல்படாததனால, இங்க உடனே உங்களைப் பார்க்கிறேன். எனக்கும் எலுமி ஊறுகாயைவிட மாங்காய்தான் பிடிக்கும். பச்சை மிளகாய், கல்லுப்புக்குப் பதில், எங்க அம்மாவுக்கு, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைச்சால் ரொம்பப் பிடிக்கும் (காரம் ரொம்ப அதிகம்). இது அடைக்குத் தொட்டுக்கவும் ரொம்ப நல்லாருக்கும்.

    பதிலளிநீக்கு
  37. நன்றி கில்லர்ஜி. ஒரு வரில என்னை நெகிழ வச்சுட்டீங்க. உங்களுக்கு எப்போதும் இறைவன் துணையிருக்கட்டும். உங்க குழந்தைகள் வளர்ந்து உங்களுக்கு நீங்கள் விரும்புவதைச் சமைத்துப்போடட்டும்.

    பதிலளிநீக்கு
  38. நன்றி ராஜீவன் ராமலிங்கம். பன், ரொட்டிக்கு நல்லா இருக்கும்னாலும், தோசை, அடை, மோர் சாதம் போன்றவற்றிர்க்கு இன்னும் நல்லா இருக்கும். பொதுவா கொஞ்சமாத்தான் தொட்டுக்கணும். இல்லைனா வயிற்றுக்கு நல்லதில்லை.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ஏஞ்சலின். குடைமிளகாய் உபயோகப்படுத்தாதீங்க. சாதாரண மிளகாயே போதும். விதை, ஸ்டோன் வர காரணமாகும் என்பதால் கூடாது என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன் (இதுபோல்தான் தக்காளி விதையும்)

    நீங்கள் சொல்லியிருக்கும் வினிகரில் ஊறவைத்த சால்டட் பெப்பர் சாப்பிட்டதில்லை. ஆனால், பிட்சாவுடன் ஒரு வினிகரில் ஊறவைத்த மிளகாய் கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டிருக்கிறேன். ரொம்ப ஆர்வமில்லை (ஏன்னா, எனக்கு டிரெடிஷனல் உணவுதான் பிடிக்கும். என் பசங்களுக்கு டிரெடிஷனல் உணவுன்னா அவ்வளவு ஆர்வமில்லை)

    பதிலளிநீக்கு
  40. வாங்க கோபு சார். நீங்கள் சொல்கிற எல்லாமே சரிதான். எங்க அம்மாவும் மிளகாயை கட் பண்ணித்தான் போடுவா. நான் கொஞ்சம் கட் பண்ணியும், கொஞ்சம் அரைத்தும் மீதியை இரண்டாக நெடுக வாக்கில் திருத்தின மிளகாயாகவும் போட்டேன். நீங்க சொன்னபடி, ஊறுகாய்னா, முதல் வாரம்தான் ரொம்ப நல்லா இருக்கும். அடை மாங்காய்னா (ரெண்டு கதுப்பையும் திருத்தி, ஆனால் மாங்காயோட இருக்கற மாதிரி) கூட 2 வாரம் ஆனாலும் நல்லா இருக்கும்.

    நான் மாகாளி ஊறுகாய் ஒரு முறைதான் சாப்பிட்டிருக்கிறேன். அந்த வாசனை எனக்குப் பிடிக்காது (மாகாளி ஊறுகாய்க்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது தெரியும்)

    பதிலளிநீக்கு
  41. நன்றி சுவாமி சார்.. உங்கள் வருகைக்கு. எனக்கு காரம் ரொம்பப் பிடிக்கும். பாதி மிளகாயே எனக்கு ஒரு கவளத்துக்கு வேணும். (காரம் அதிகமா சாப்பிடறதுனால கோபமும் அதிகமா வரும்)

    பதிலளிநீக்கு
  42. கோபு சார்... டிரெடிஷனலா இல்லாம, 2 குடை மிளகாயை அரைச்சுப் போட்டதுதான் (வாசனையா இருக்கும்னு நம்பிண்டு) கலர் வெளிறினதுக்குக் காரணம். அப்புறம் படம் எடுக்கற கோணமும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
  43. வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க காமாட்சியம்மா. நீங்கள் சொன்ன 'கற்சட்டி புளி மிளகாய்' நான் சாப்பிட்டதில்லை. என் ஹஸ்பண்ட், மோர் மிளகாய்னு சிறிய குடைமிளகாயில் பண்ணுவா. எனக்குப் பிடிக்காது, ஆனால் என் பசங்க, அருமை அருமைன்னு சொல்லிண்டே சாப்பிடுவாங்க.

    "கொஞ்சம் சுருக்க " - இந்த 'சுருக்க' வார்த்தையை என் சிறுவயதில்தான் கேட்டிருக்கிறேன். 'விரைவில்' என்பதற்கு அருமையான வார்த்தை.

    பதிலளிநீக்கு
  45. ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கீங்க ஆதி வெங்கட். கொஞ்சமா செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லாருக்கும். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். குளிர்ந்த சாதத்துக்கு நல்லாத்தான் இருக்கும். எனக்கு புளி இஞ்சி (பாலக்காட்டில் வாங்கினது) அவ்வளவு பிடிக்கலை.

    பதிலளிநீக்கு
  47. வருகைக்கு நன்றி அதிரா. நான் பண்ணினதில் மிஸ்டேக்னு பார்த்தா குடைமிளகாயைச் சேர்த்ததுதான். நீங்க சொன்ன வெளிர் பச்சை நிற (ஆனால் சிறியதான) மிளகாய் நல்லா இருக்கும். ஆனா, எனக்கெல்லாம் காரம் ரொம்ப இருக்கணும். மிளகாய் விதை செரிமானம் ஆகாது. இதை, சிறிது எண்ணெயில் வறுத்த உளுத்தம்பருப்பு, க.பருப்பு, பெருங்காயம் அப்புறம், வெறும் வாணலியில் வெடிக்கவிட்டு எடுத்த எள்ளுடன் சேர்த்து அரைத்தால் (உப்பு போட்டுதான்) இட்லி மிளகாய்ப்பொடி ரெடி. அதையும் செஞ்சுபாருங்க.

    இதைச் செய்தது நான். ஆனால், வெறும் கார புளிமிளகாயை சன்னிதியில் வைக்கவில்லை. அப்புறம் இரவு, சப்பாத்தியை (அரை குக் செய்யப்பட்ட சப்பாத்தி பாக்கெட் வாங்கி, வீட்டுல குக் பண்ணுவது) செய்து அத்துடன் சன்னிதியில் வைத்தேன். (சொன்ன நகைச்சுவையாத்தான் இருக்கும். வெறும் காரத்தை எப்படி கடவுளுக்கு வைப்பது என்று என் மனதில் தோன்றுவதால்)

    'ஏச்சு' - திட்டுக்கான இந்த வார்த்தை சிறு வயதில் கேட்டது.

    பதிலளிநீக்கு
  48. வாங்க சென்னைப் பித்தன் சார். அடிக்கற வெயிலுக்கு மோர் சாதமும் புளிமிளகாயும் 'இன்னும் இன்னும்' என்று சொல்லத்தான் வைக்கும்.

    பதிலளிநீக்கு
  49. ஸ்ரீராம் - ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் பின்னூட்டங்களை (திங்கக்கிழமை)ப் பார்க்கிறேன். சாப்பாடை ரசிக்கணும்னா, அதுல இன்டெரெஸ்ட் இருக்கணும் (நாக்கு முழ நீளம்னு சொல்லுவாங்க). நம்மைப்போல அப்படிப்பட்டவங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாத்தான் இருக்கு.

    இன்னும் ஸ்பெஷலிஸ்ட் மி.கி.மாவைக் காணோம்.

    பதிலளிநீக்கு
  50. //ஸ்ரீராம். said...
    @அதிரா... //உங்களிடம் இருக்கும் வைரம் பதிச்ச மகுடத்தை//

    மகுடம் மகுடம் என்கிறீர்களே? எங்கே? எங்களுக்கேது மகுடம்? அதைத்தான் நீங்களும் பகவான்ஜியும் அவ்வப்போது கில்லர்ஜியுமே வைத்துக் கொண்டிருக்கிறீர்களே....!!!///

    ஹா ஹா ஹா சற்று நேரத்துக்கு முன் நீங்க எங்கயோ கவலையீனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது.. அதை மீ புடுங்கிட்டேன்ன்ன்:) ஹா ஹா ஹா.

    //ஆனால் இதில் மாறுபாடான கருத்து. எனக்கு முழுசாய் போட்டாத்தான் பிடிக்கும்//

    அதே அதே அதிரபதே:)[ இதை நான் எங்கும் களவெடுக்கவில்லை].. எனக்கும் முழுசாக இரண்டாகப் பிளந்து போட்டு விதை நீக்கிப் போட்டு விட்டு நானே எடுத்துச் சாப்பிடுவேன்:) என்னை விட வீட்டில் ஆருக்கும் இப்பயக்கம் இல்லை:).. இன்னொன்று குட்டியாகக் கட் பண்ணிப் போட்டால் உறைப்பு அதிகமாகிடும்... இது என் கண்டு பிடிப்பூஊஊஊஉ(பின்பு பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்).

    பதிலளிநீக்கு
  51. ///நெல்லைத் தமிழன் said...///இதைச் செய்தது நான். ஆனால், வெறும் கார புளிமிளகாயை சன்னிதியில் வைக்கவில்லை. அப்புறம் இரவு, சப்பாத்தியை (அரை குக் செய்யப்பட்ட சப்பாத்தி பாக்கெட் வாங்கி, வீட்டுல குக் பண்ணுவது) செய்து அத்துடன் சன்னிதியில் வைத்தேன். (சொன்ன நகைச்சுவையாத்தான் இருக்கும். வெறும் காரத்தை எப்படி கடவுளுக்கு வைப்பது என்று என் மனதில் தோன்றுவதால்)///
    ஹா ஹா ஹா அது சரிதான், கறியை மட்டும் எப்படி சாப்பிடக்கொடுப்பது சுவாமிக்கு.. பிறகு அவருக்கு கோபம் வந்திடும்... ஆனா நீங்க சப்பாத்தியுடன் தானே மேலே படம் போட்டிருக்கிறீங்க.. அதனால்தான் யோசிச்சேன்:).

    ///'ஏச்சு' - திட்டுக்கான இந்த வார்த்தை சிறு வயதில் கேட்டது.///

    நாங்க ஏச்சு/ஏசுவது எனத்தான் சொல்லுவோம்:).... இது வந்து சும்மா செல்லமாகக் கடிவது எனப் பொருள்படும்.

    பதிலளிநீக்கு
  52. //நெல்லைத் தமிழன் said...

    இன்னும் ஸ்பெஷலிஸ்ட் மி.கி.மாவைக் காணோம்.///

    ஹா ஹா ஹா இப்போ கொஞ்ச நாளாவே அவங்க தலைமறைவு:)

    பதிலளிநீக்கு
  53. // மிளகாய் விதை செரிமானம் ஆகாது. இதை, சிறிது எண்ணெயில் வறுத்த உளுத்தம்பருப்பு, க.பருப்பு, பெருங்காயம் அப்புறம், வெறும் வாணலியில் வெடிக்கவிட்டு எடுத்த எள்ளுடன் சேர்த்து அரைத்தால் (உப்பு போட்டுதான்) இட்லி மிளகாய்ப்பொடி ரெடி. அதையும் செஞ்சுபாருங்க.///

    ஓ செய்து பார்க்கிறேன் கொஞ்ச நாட்களா நினைச்சுக்கொண்டிருக்கிறேன் இட்லிப் பொடி செய்யோணும் என.. இதுவரையில் செய்ததில்லை.. ஆனா இதில ஒரு சந்தேகம்... எள்ளு போட்டு வறுக்கும்போது எண்ணெய் வருகிறதே.. திரண்டு விடுவதுபோல வருதே.. பவுடராக வரக் கஸ்டப்படுது.. அதிகம் வறுக்கக்கூடாதோ?

    பதிலளிநீக்கு
  54. @asha bhosle athiraவெறும் வாணலியைச் சூடு பண்ணிக் கொண்டு எள்ளை நன்கு களைந்து கல்லரித்து நீரை வடிகட்டி வாணலியில் போட்டுப் பிரட்டிக் கொடுத்தால் படபடவென வெடிக்கும். உடனே அடுப்பை அணைக்கவும். ரொம்பவே வறுக்க வேண்டாம். சில எள் நன்கு முற்றியதாக இருந்தால் மிக்சி ஜாரில் அரைபடும்போது எண்ணெய் வந்து சேர்ந்துக்கும். அதனால் ஒரே சுற்று. நிறுத்திடுங்க!

    பதிலளிநீக்கு
  55. காரமான படையல்
    சிறந்த வழிகாட்டல்

    பதிலளிநீக்கு
  56. புது புது ரெசிபிகளாக பதிவு செய்து சாப்பிட தூண்டி விடுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  57. ///Geetha Sambasivam said...//
    ஓ மிக்க நன்றி கீதாக்கா, நான் செத்தல், கச்சான் உடன் எள்ளையும் சேர்த்து வறுத்தேன்.. எண்ணெய் விடவில்லை, ஆனாலும் சூட்டைக் கண்டதும் எண்ணெய் வெளியே வரத்தொடங்கிட்டுது.

    இங்கு வாங்கும் எள்ளு கழுவத் தேவையில்லை.. அப்படியே பால் போல படு சுத்தம்.. இன் உங்கள் முறைப்படி தனியே வறுத்து எடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  58. ///Bagawanjee KA said...
    தனியாளாக வந்தால் மகுடம் கிடைக்கும் ,நான்கு பேராக வந்தால் யார் தலையில் வைப்பது :)//

    ஹா ஹா ஹா இருப்பினும் ஸ்ரீராம் 10 மணி நேரங்கள் மகுடத்தோடு தான் உலாவந்தார்... அந்த மொட்டை மாடியில்:)

    பதிலளிநீக்கு
  59. ///middleclassmadhavi said...
    ரசித்தேன் :-))///


    ஹா ஹா ஹா... இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க பாலக்குமாரன்:)... எனக்கு இதைப் பார்த்ததும் இந்த வசனம் தேன்ன் நினைவுக்கு வந்துதூஊஊஊஊஊஉ:) ஹையோ மீ ரொம்ப நல்ல பொண்ணு... :).

    நெல்லைத்தமிழன் மேடைக்கு வரவும்:)..
    [நாரதர் கலகம் முடிஞ்சது:)]மீ கோயிங்:).

    பதிலளிநீக்கு
  60. குறிப்பு அருமை! மிகவும் பழமையான ஊறுகாய் இது! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாய் எழுதியிருப்பதைப்பார்க்கையில் நிஜமாகவே நா ஊறுகிறது!!

    பதிலளிநீக்கு
  61. நெல்லை, ஸ்ரீராம் டிட்டோ டிட்டோ...நெல்லை சொல்லுயிருக்கும் ருசியும்..அதான் க்கடுத்த..தோசைக்கு. எட்செட்ரா...ஸ்ரீராமின் ரன்னிங் கமெண்ட்ஸ்...ஸ்பா. நாக்கு ஊருது..என் அம்மா வீட்டிலும் நானும் இதே ரெசிப்பித்தான் ...இதோடு இஞ்சி சேர்த்தும் செய்வதுண்டு...கேரளத்தார் போல..

    கீதா

    பதிலளிநீக்கு
  62. நன்றி ஜீவலிங்கம்.

    நன்றி டி.டி. அங்க உள்ள வெயில் தாளமுடியலையா அல்லது புளிமிளகாயின் காரமா?

    நன்றி பகவான்'ஜி. இப்போ எல்லோருக்கும் 'மகுடத்தை' நினைத்து ரொம்பக் கவலைபோல.

    நன்றி அசோகன் குப்புசாமி.

    நன்றி மி.கிளாஸ் மாதவி. நீங்கள் போட்டிருந்த செய்முறைதான் டிரெடிஷனல். அதைத்தான் நாங்கள் எப்போதும் செய்வோம். ஆனால் நிறம் கொஞ்சம் ஆழ்ந்த பிரௌனாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  63. நன்றி அதிரா. எனக்கு பாலகுமாரன் வயது ஆகவில்லை (அவர் மகள் வயதாவது ஆகிவிட்டதா என்று தெரியவில்லை :))

    நன்றி மனோ சாமினாதன் மேடம்.

    நன்றி தில்லையகத்து கீதா. இப்போல்லாம் நீங்களும் பிஸி. துளசியும் பிஸியோ பிஸி (ஆனால் இப்போ பள்ளி விடுமுறைக் காலமாயிற்றே?)

    பதிலளிநீக்கு
  64. //ஹா ஹா ஹா இருப்பினும் ஸ்ரீராம் 10 மணி நேரங்கள் மகுடத்தோடு தான் உலாவந்தார்... அந்த மொட்டை மாடியில்//with camera haahaa

    பதிலளிநீக்கு
  65. நான் மிகவும் சாத்வீகமானவன் காரம் ஒத்துக் கொள்ளாது

    பதிலளிநீக்கு
  66. ஜி எம்.பி சார்... காரம், உப்பு போன்றவை மிக மிகக் குறைவாகச் சேர்ப்பவர்கள் எப்போதும் சாத்வீகமானவர்கள்தான். இதுனாலதான் பழைய காலத்தில் குருகுலத்தில் படிப்பவர்களுக்கு சாதாரண உப்பு/உறைப்பு இல்லாத சாப்பாடு பரிமாறப்பட்டது (நெய்குப்பதில் விளக்கெண்ணெய் என்றும் படித்திருக்கிறேன். என்றைக்கு சாப்பாடு ருசி குறைவு என்று எண்ணம் தோன்றுகிறதோ, அன்று குருகுலத்திலிருந்து அனுப்பிவிடுவார்களாம்). வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  67. மிளகாய் மலிவாகவும் தேவைக்கு அதிகமாக வாங்கி மீந்து போனாலும் இப்படி செய்வதுண்டு. இதிலெல்லம என் அப்பா எக்ஸ்பட் என சொல்ல வேண்டும்.மிளகாயை கழுவி புளிக்கரைசலில் உப்புச்சேர்த்து அவித்து கரண்டினால் மசித்து எடுத்த பின் கடுகு அரைத்து போட்டு ஆற விட்டு பாட்டில்களில் அடைத்து வைத்தால் மாதக்கணக்கில் இருக்கும். சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் உப்பும் புளியும், சேரும் போது மிளகாயின் காரமும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும், எனினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செனுமாப்போல அதிகமாக சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் வரும்.

    பதிலளிநீக்கு
  68. நன்றி கே.எஸ் வேலு

    நன்றி நிஷா - வெறும் புளியில் அவித்த மிளகாயை சாதத்துடன் கலந்து சாப்பிடறதா? சாப்பிட்ட உடனே டாக்டரிடம் போகணுமா அல்லது சாப்பிடுவதற்கு முன்னாலயா? அதைச் சொல்லலையே. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!