Monday, May 21, 2018

"திங்க"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி
திருவையாறு அசோகா தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு   ---  1 கப்
சர்க்கரை         ---  2½ கப்
இனிப்பில்லாத கோவா – 50கிராம்
நெய்            - ¼ கப்
கேசரி பவுடர்    - 1 சிட்டிகை
முந்திரி         - 5 பருப்பு

செய்முறை:

பயத்தம் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். நன்றாக வறுத்து விட்டால் சரியாக வேகாது.  பின்னர் தண்ணீரில் கழுவி விட்டு இரண்டு  மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.


வெந்த பயத்தம் பருப்பை கீரை மசிக்கும் மத்தால் அல்லது கரண்டியால் நன்கு மசிக்கவும்.
அதோடு சர்க்கரை, கோவா கேசரி பவுடர் இவைகளையும் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து அவ்வப்பொழுது நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். பின்னர் அதில் சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு, நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரியை சேர்த்தால் சுவையான அசோகா ரெடி!


ஒரிஜினல் திருவையாறு அசோகாவில் முந்திரி பருப்பு போட மாட்டார்கள். அதே போல பால் கோவா சேர்ப்பதற்கு பதிலாக வறுத்த பயத்தம் பருப்பை பாலில் ஊற வைத்து, பால் ஊற்றி அரைப்பார்கள்.

நான் மசித்த பருப்போடு சர்க்கரையை அப்படியே சேர்த்து விட்டேன். சர்க்கரை வெளுப்பாக இல்லாமல், பழுப்பாக இருந்தால் அழுக்காக இருக்கிறது என்று பொருள். அப்பொழுது, சர்க்கரையில் அது மூழ்கும் அளவை விட கொஞ்சம் அதிகமாக தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கரண்டி பால் சேர்த்தால் அழுக்கு தனியாக நுரைத்துக் கொண்டு வரும். அதை எடுத்து விட்டு பின்னர் அதில் மசித்த பருப்பு மற்றும் கோவாவை சேர்த்து கிளறலாம்.
சுவையான, செய்ய சுலபமான இனிப்பு இது. 

63 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா R/ கீதா G அனைவருக்கும் வணக்கம்...

துரை செல்வராஜூ said...

ஆகா... அசோகா...

அசோகா தஞ்சை அரண்மனையின் இனிப்புகளுள் ஒன்று.. விற்பனை நடைமுறைகளால் திருவையாற்றுக்கு பெயர் கிடைத்து விட்டது...

அசோகா மிகவும் பிடிக்கும்..

இப்போது ஊருக்குச் சென்றிருந்த போது அசோகா தின்றதில் 150 புள்ளிகளுக்கு மேலாக சர்க்கரையின் அளவு கூடிப்போனது தனிக்கதை...

துரை செல்வராஜூ said...

அருமையாக அசோகா...

ஒருத்தரையும் இன்னும் காணோமே!...

துரை செல்வராஜூ said...

ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் கூட இன்னும் வரவில்லையே..

ஸ்ரீராம். said...

சனி, ஞாயிறு விடுமுறைகளினால் மருத்துவமனையில் இருக்கும் கீதா ரெங்கனின் கணினி இன்று திங்கட்கிழமைதான் கவனிக்கப்படும் என்கிறார். எனவே அது குணமானால்தான் கீதா ரெங்கனைக் காணலாம்.

கீதா அக்கா சற்றே மெதுவாக வருவார். சற்று நேரத்தில் பானு அக்கா வரக்கூடும்!

ஸ்ரீராம். said...

அசோகா வீட்டில் செய்ய முற்சித்துப் பார்த்ததில்லை. திருமணங்களில் சாப்பிட்டிருப்பதோடு சரி. இங்கு எளிமையாகச் சொல்லி இருக்கிறார் பானு அக்கா. பாஸ் கிட்ட சொல்லி இருக்கேன். ஒருமுறை செய்து பார்க்கவ வேண்டும்.

துரை செல்வராஜூ said...

யுவர் ஹானர்...
பதிவின் படங்கள் ஒன்று கூட திறக்க வில்லை..

அத்துடன் இந்த டேபிளுக்கு இன்னும் காஃபியும் வரவில்லை...

PnP...

KILLERGEE Devakottai said...

ஆமாம் எனக்கும் படங்கள் திறக்கவில்லையே...

Geetha Sambasivam said...

/ கீதா G அனைவருக்கும் வணக்கம்...// நன்னி, நன்னி! இன்னிக்கு எழுந்து காஃபி ஆத்தும்போதே ஆறேகால்! :))))) நாலரைக்கு எழுந்துட்டு அரை மணி படுப்போம்னு மறுபடி படுத்ததில் ஐந்தேமுக்காலுக்குத் தான் எழுந்தேன். முடியலை! :)))) சில நாட்கள் இப்படி ஆயிடும். சில நாட்கள் நாலு மணிக்கே படுக்கையில் படுக்க முடியாமல் எழுந்துடுவேன்.

Geetha Sambasivam said...

அசோகாவுக்கு நான் கோதுமை மாவையும் நெய்யில் வறுத்துச் சேர்ப்பேன். பால் சுண்டக் காய்ச்சிச் சேர்ப்பேன். என்றாலும் திருவையாறில் பிரபலமான கடையில் இரு முறை அசோகா வாங்கியும் அவ்வளவாப் பிடிக்கலை! முன்னெல்லாம் நல்லா இருக்கும். :( இப்போத்தான் மார்ச் மாசம் போனப்போக் கூட வாங்கினோம். அவ்வளவு சுவை இல்லை.

Geetha Sambasivam said...

பானுமதி போட்டிருக்கும் படங்கள் எதுவுமே எனக்கு வரலை! :)))) முகநூல் வழியா வந்து பார்க்கிறேன் வருதானு!

நெ.த. said...

பதிவில் படங்கள் வரவில்லை.

அசோகா அல்வா ஒருமுறை சாப்பிட்டிருக்கேன். அவ்வளவாகப் பிடிக்கவில்லை. திருவையாறு ஆண்டவர் கடைதான் இதற்கு ஃபேமஸ் என்று படித்திருக்கிறேன்.

படங்கள் வந்ததும் செய்முறையைப் படிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா...

கில்லர் ஜி...

நெல்லைத்தமிழன்...

துரை செல்வராஜூ ஸார்...

படங்களை பதிவிலிட்டு ரிப்பேர் செய்திருக்கிறேன்.

இப்போது பார்த்து தகவல் சொல்லுங்கள்.

நெ.த. said...

இப்போ படங்கள் தெரிகிறது. செய்முறை சுலபம். படங்கள் அருமை.

துரைசாரின் ‘டயபெடிக்ஸ் அளவு கூடும்’ என்ற கமென்ட்தான் சிவப்பு விளக்காக எச்சரிக்கை செய்கிறது. பா.வெ க்குப் பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லை... உடனடியாக பார்த்துச் சொன்னதற்கு.

Geetha Sambasivam said...

இப்போப் படங்கள் தெரிகின்றன. குஜராத்தில் இதைப் பாசிப்பருப்பு அல்வா என்னும் பெயரில் மிக அருமையாகச் செய்வார்கள். முழு வெள்ளை உளுந்தை வறுத்தும் மாவாக அரைத்துக் கொண்டு உருண்டை அல்லது மைசூர்ப்பாகு மாதிரிச் செய்வார்கள். அதுவும் நன்றாக இருக்கும். பொதுவாகவே தித்திப்பு பட்சணங்கள் ராஜஸ்தான், குஜராத்துக்குப் பின்னர் தான் மற்ற மாநிலங்கள் எனத் தோன்றும்.

ஸ்ரீராம். said...

நன்றி கீதா அக்கா.

துரை செல்வராஜூ said...

வேலை முடித்து வந்தேனே....

செய்முறையின் படங்கள் அழகு.. நன்றி..

துரை செல்வராஜூ said...

அசோகா என்றால் வீட்டிலேயே செய்து கொள்வது தான்..

கடைப்பக்கம் போவதில்லை..

கீதாS அவர்கள் சொல்வதும்
நெ.த. அவர்கள் சொல்வதும் சரி...

திருவையாற்றில் விற்கப்படுவது முன்பு போலில்லை...

ஆனால் தஞ்சைப் பகுதி சமையல் கலைஞர்கள் பலரும் அசோகா செய்வதில் கைதேர்ந்தவர்கள்....

ஸ்ரீராம். said...

// செய்முறையின் படங்கள் அழகு.. நன்றி.//

நன்றி துரை செல்வராஜூ ஸார்...

துரை செல்வராஜூ said...

தஞ்சை அசோகா போல

தஞ்சாவூர் டிகிரி காஃபி
சந்திரகலா (இனிப்பு தான்)
கார சட்னி, கடப்பா, தயிர் வடை -

ஆகா...

அப்புறம் இன்னொன்னு...

சாம்பார்..ந்னா
தஞ்சாவூர் சாம்பார் தான்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திருவையாறு அசோகா முன்போல் இல்லை. இப்போது ருசி குறைந்துவிட்டது.

ஸ்ரீராம். said...

// சாம்பார்..ந்னா
தஞ்சாவூர் சாம்பார் தான்..//

துரை செல்வராஜூ ஸார்...

தஞ்சாவூர்ல "ஆனந் பவன், சாந்தி ஸ்வீட்ஸ், நியூ பத்மா கேஃப், மங்களாம்பிகா எல்லாம் இன்னமும் இருக்கோ?

வல்லிசிம்ஹன் said...

அசோகா வயிற்றுக்கு இதமாக இருக்குமோ.
சர்க்கரை பெயர் கேட்டாலே பின்னால் போகத் தோன்றுகிறது.

பார்க்க மிக அழகாகத் தெரிகிறது. ருசியும் அப்படியே இருக்கும்.
மனம் நிறை வாழ்த்துகள் பானும்மாவுக்கு.

நன்றி ஸ்ரீராம்.

Avargal Unmaigal said...


என் வீட்டம்மா திருவையாறு ஆள்தான் ஆனால் இதுவரை இப்படி ஒரு ஸ்வீட் பண்ணி தந்துது இல்லை....... என் மாமியாரும் செய்தது இல்லை... எனது மாமியாரும் இப்பொது இன்னொரு மகளின் வீட்டில் இப்பொது இருக்கிறார். அடுத்த வாரம் அவர்கள் வீட்டிற்கு போகிரோம் கண்ண்டிப்பாக இதை செய்து எடுத்து போகிறேன் சாப்பீடுவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.. இதை செய்தால் எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம என்று பதில் அளித்தால் நன்றாக இருக்கும்

துரை செல்வராஜூ said...

எல்லாம் பேர் மாறிக் கெடக்கு...

ஸ்ரீராம். said...

// எல்லாம் பேர் மாறிக் கெடக்கு... //

அபுரி ஸார்...

KILLERGEE Devakottai said...

படங்கள் தெரிகிறது ஸூப்பர்.

Bhanumathy Venkateswaran said...

வணக்கம். பயணத்தில் இருப்பதால் வர முடியவில்லை.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் சுலபம். செய்யச் சொல்லுங்கள்.

Bhanumathy Venkateswaran said...

கோதுமை மாவு சேர்த்தால் அசோகாவின் தனித்தன்மை கெட்டு விடாதா?

Bhanumathy Venkateswaran said...

//இப்போது ஊருக்குச் சென்றிருந்த போது அசோகா தின்றதில் 150 புள்ளிகளுக்கு மேலாக சர்க்கரையின் அளவு கூடிப்போனது தனிக்கதை...// அது சொந்த கதை சோகக் கதை.

Bhanumathy Venkateswaran said...

நன்றி ஜி!

Bhanumathy Venkateswaran said...

மூங்டால் ஹல்வா

Bhanumathy Venkateswaran said...

மூங்டால் ஹல்வா என்று பச்சை பயறில் செய்வார்கள்.

Bhanumathy Venkateswaran said...

திருவையாறு அசோகா கடையில் வாங்கி சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது.

Bhanumathy Venkateswaran said...

வயிற்றுக்கு வெகு இதம்தான். நன்றி வல்லிம்மா.

Bhanumathy Venkateswaran said...

தாராளமாக நான்கு நாட்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்குள் தீர்ந்து விடும்.

Bhanumathy Venkateswaran said...

நன்றி சகோ.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான செய்முறைகளுடன் அழகான படங்களுடன் திருவையாறு அசோகா இனிப்பு சுவையாக இருந்தது.

அசோகா அல்வா, பாசிபருப்புஅல்வா என கேள்விபட்டிருக்கிறேன். இனறுதான் திருவையாறு அசோகா என தெரிந்து கொண்டேன். கோதுமை அல்வாவை திருநெல்வேலி அல்வா என்பது போல்..

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தின்பண்டங்கள் பிரசித்தி.. மற்ற ஊர்களுக்கும் அது பரவி புகழயடையும் போது அதன் கீர்த்தி சற்று குறையுமோ என்னவோ..

பாசி பருப்பு பாயசம், வெல்லப்பாகு வைத்து பாசிப்பருப்பு உருண்டை என்று பாசிப்பருப்பில் நிறைய செய்திருக்கிறேன். இந்த மாதிரி செய்ததில்லை. இனி அடுத்த முறை இதை செய்கிறேன். இந்த இனிப்பை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Anuradha Premkumar said...

எனக்கு ரொம்ப பிடிக்கும்...

ஆஹா அசோகா..

நானும் 2 ஸ்பூன் கோதுமை மாவு வறுத்து சேர்ப்பேன்..

அழகிய பதிவு...

athira said...

என்னாதூஊஊஊ சீதையைத் திருவையாற்றுக்கு மாற்றிட்டாங்களாஆஆஆஆஆஆ?:) ஜொள்ளவே இல்லையே எனக்கு... சீதையை இலங்கையில இருக்கும் அசோகா மரங்களுக்குக் கீழ எல்லோ சிறை வைத்தார் அந்த மிசைக்காரர் எனப் படிச்சேன்:)..

இலங்கையில் எங்கள் ஊரில் நிறைய அசோக மரங்கள் இருந்துதா.. நாங்க அசோகா எனத்தான் சொல்லுவோம்.. எங்கள் வீட்டிலும் இருந்தது... ஆனா அது சீதையை சிறைப்பிடித்தது என்றமையால்.. வீட்டில் அசோகா வளர்க்கக்கூடாது, வளர்த்தால் அது வீட்டிலிருக்கும் பெண்களைச் சிறை பிடித்து வைக்கும்:)) என ஒரு உள்ளூர்க்கதை பரவிச்சுதா:)).. அம்மம்மாக்கள் தறிச்சுப் போட்டினம் ... அழகான மரங்கள்.

சரி சரி இன்று பானு அக்கா ரெசிப்பியோ.. சத்து இருங்கோ படிச்சுச் சுவைச்சிட்டு வாறேன்..

athira said...

பயறிலே செய்த அல்வா சூப்பராக இருக்கு. ஈசியாகவும் இருக்கு. ஆனா இந்த பால்கோவாவுக்கு மீ எங்கு போவேன்.. ஒரு ரெசிப்பிகுள் இன்னொரு ரெசிப்பியைச் சேர்த்திட்டீங்களே கர்ர்ர்ர்:)).

//ஒரிஜினல் திருவையாறு அசோகாவில்//
ஓ அப்போ இது ஒரிஜினல் இல்லையாஆஆஆஆஆஆ?:)) சவுண்டு கேட்கும்போதே நினைச்சேன்ன்.. சரியாப்போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா அப்போ ஒரிஜினல் தி.அ செய்திடலாம்.

athira said...

ஸ்ரீராமுக்கு இன்று என்ன ஆச்சோ?:)).. பெரிசு சின்னனாகவும் லெஃப்ட்டூஊஊஊஉ ரைட்டாகவும் படங்கள் போட்டுப் புயுப் புரட்சியை உருவாக்கியிருக்கிறார் யுவர் ஆனர்ர்ர்ர்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

கோமதி அரசு said...

அருமையான அசோகா அல்வா.
செய்முறை எளிமையாக இருக்கிறது.
படங்கள் சொல்லியது அழகாய்.
நன்றி. வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

// ஸ்ரீராமுக்கு இன்று என்ன ஆச்சோ?:)).. பெரிசு சின்னனாகவும் லெஃப்ட்டூஊஊஊஉ ரைட்டாகவும் படங்கள் போட்டுப் புயுப் புரட்சியை உருவாக்கியிருக்கிறார் //

இது பானு அக்கா படங்களை இணைத்து அனுப்பிய பாணி.

காலை இந்தப் படங்கள் யார் கண்ணிலும் படாமல் வேறு ஒளிந்துகொண்டிருந்தன. அப்புறம் சரிசெய்தேன்.

Geetha Sambasivam said...

பச்சைப் பயறில் செய்து நான் பார்த்தது இல்லை. பாசிப்பருப்பில் தான் குஜராத்தில் செய்வார்கள். ஆனால் வேக வைப்பதில்லை. உக்காரைக்கு உதிர்ப்பது போல் நெய்யை விட்டு/ கொட்டி அதிலே பருப்பை ஊற வைத்து நன்கு அரைத்துச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குவார்கள். இன்னொரு பக்கம் கோதுமை மாவையும் நெய்யில் வறுத்து(அதுக்கும் நெய் நிறைய) பின்னர் பருப்போடு சேர்ப்பார்கள். அதன் பின்னர் பாலைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டுப் பின்னர் சர்க்கரை, தேவையானால் இன்னும் நெய்! கிளறியதும் மு.ப., பா.ப, கா.தி. போன்றவற்றால் அலங்காரம், சிவப்புக் கலர் சேர்த்து ஏலக்காய்ப் பொடியும் சேர்ப்பார்கள்.

Geetha Sambasivam said...

கும்பகோணம் வெங்கடா லாட்ஜில் வேலை செய்த தலைமைச் சமையல்காரர் "சாமா" என்பவர் எங்க மாமியார் வீட்டுக் கல்யாணங்களில் வந்து சமைப்பார். அவர் என் நாத்தனார் கல்யாணத்தின் போது (1978 ஆம் ஆண்டு) ஜானவாசத்தன்று மாலை டிபனுக்கு இதைச் செய்திருந்தார். அவரிடமும் நானும், என் பெரிய நாத்தனார், மாமியார் ஆகியோர் கேட்டு அறிந்து கொண்டோம். கோதுமை மாவு சேர்த்துத் தான் அவரும் பண்ணி இருந்தார். அவரிடமே சோன் பப்டியும் கேட்டுத் தெரிந்து கொண்டாலும் அது மட்டும் என்னமோ சரியா வரலை! :( எனக்குத் தெரிந்து அப்போத் தான் கல்யாணத்துக்கு முதல்நாள் இரவுச் சாப்பாட்டில் சாம்பார் சாதம், வெஜ் புலவ், பூரி, கிழங்கு, ரசம், தயிர்சாதம், பழங்கள் உள்ள பச்சடி என்று போட்டார்கள். அதன் பின்னர் இப்போதெல்லாம் நிறையவே மாற்றங்கள், உணவு வகைகள் சேர்ப்புகள் என நடந்து வருகின்றன. ஆனால் அப்போ இலை போட்டுக் கீழே உட்கார்ந்து தான் சாப்பாடு.

ராஜி said...

அல்வா எப்படி இருந்தாலும் எதுல செஞ்சிருந்தாலும் ஐ லைக். அப்படியே எனக்கு கொஞ்சம் பார்சல் செய்யுங்க

Asokan Kuppusamy said...

அருமையான ரெசிபி பாராட்டுகள்

Bhanumathy Venkateswaran said...

நன்றி நெ.த. செய்து பாருங்கள்.

Bhanumathy Venkateswaran said...

வருகைக்கு நன்றி. வெல்லப்பாகு வைத்து பாசிப்பருப்பு உருண்டையா? ரெசிபி ப்ளீஸ்.

Bhanumathy Venkateswaran said...

நன்றி!

Bhanumathy Venkateswaran said...

ஹல்வாவோடு ராமாயணத்தை இணைத்த உங்கள் திறமைக்கு அரை கிலோ அசோகா. சுவைத்து மகிழுங்கள்.

Bhanumathy Venkateswaran said...

பால் கோவாவுக்கு எங்கேயும் போக வேண்டாம். பாலை சுண்ட காய்ச்சி சேருங்கள். சுண்ட காய்ச்சுவது என்றால் நன்றாக காய்ச்சுவது என்று பொருள். சுண்டைக்காயோடு இணைத்து விட வேண்டாம் ஹாஹாஹா

Bhanumathy Venkateswaran said...

நன்றி!

Bhanumathy Venkateswaran said...

இருந்ததை அதிராவுக்கு பார்சல் செய்து விட்டேனே..:((

Bhanumathy Venkateswaran said...

நன்றி!

காமாட்சி said...

நேற்று பூராவும் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. அசோகா குறிப்பு அருமை. அன்புடன்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

படங்களுடன் அருமையான வழிகாட்டல்

Thulasidharan V Thillaiakathu said...

பானுக்கா சூப்பர் ரெசிப்பி. பால் விட்டு கிளறுவதை விட இது இன்னும் ஈசிதான். கோதுமை மாவு கொஞ்சம் வறுத்துச் சேர்ப்பதுண்டு.

அப்புறம் பாசிப்பருப்பை வறுத்து அப்படியேயோ அல்லது பௌடர் பண்ணியோ வெல்லப் பாகு வைத்து கடலை உருண்டை பிடிப்பது போலவோ அல்லது லாடு செய்வது போலவோ...செய்யலாம் அக்கா. பாசிப்பருப்பு புட்டு...

உங்க ரெசிப்பி சூப்பர் அக்கா....எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனா என்ன விண்டோ ஷாப்பிங்க் செய்வது போல காக்காய் கடைக்கண் பார்வை அப்படியும் இப்படியும் தலையைத் திருப்பிப் பார்ப்பது போல பார்த்து....டக்கென்று ஒரு வாய் எடுத்து வாயில் போட்டு சுவைத்து..ஹா ஹா ஹா இப்படித்தான்...

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!