Friday, June 22, 2018

வெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... என்ன வேகமோ... தன்னை மீறுமோ


1983 இல் அல்லது 1979 இல் உருவான பாடலாய் இருக்கவேண்டும்.   வெளி வராத  திரைப்படம் மலர்களிலே அவள் மல்லிகை.  இசை கங்கை அமரன் என்கிறது இணையம். பாடல் எழுதியது யார் என்று தெரியவில்லை.​  
 
கங்கை அமரனாய்தான் இருக்கவேண்டும்.பி. சுசீலா குரலை பெரும்பாலும் கீழ், மற்றும் மத்திய ஸ்தாயிகளிலேயே கேட்டிருப்போம்.  ஜெயச்சந்திரனும் அங்ஙனமே...

அவர்களை உச்சஸ்தாயியில் பாடவைத்தால் எப்படி இருக்கும் என்கிற வித்தியாசமான எண்ணம் இந்த இசையமைப்பாளருக்கு வந்திருக்கவேண்டும்.

பாடலின் ஆரம்பமே சுசீலாம்மா குரல் இவ்வளவு உயரத்தில் தொடங்கினால் சரணங்களில்?  கேளுங்களேன்.

வெளிவராத படம் என்பதால் காட்சி கிடையாது!

சில இடங்களில் கதவிடுக்கில் மாட்டிய எலி ஞாபகத்துக்கு வரும் என்றாலும்...

அந்தக் காலத்தில் நான் ரசித்த பாடல்களில் ஒன்று.

சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் 
கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் 

கன்னி இளமயில் சின்ன மணிக்குயில் 
என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது 
கையிரண்டில் அள்ளி காதல் கதை சொல்லி 
உள்ளம் மகிழ்ந்திடும்போது இன்பம் வேறு ஏது?
நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன் வஞ்சி உனக்கென வாழ்கிறேன் 

இன்னும் அதற்கென்ன பார்வையோ தேவையோ என்ன தேவையோ 


சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு 
தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது?
மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை 
தொட்டுத்தழுவிடும்போது சொர்க்கம் வேறு ஏது?
மங்கை அழகி மலையருவி பொங்கிப்பெருகிடும் என்மனம் 
கங்கை நதிக்கென்ன தாகமோ என்ன வேகமோ தன்னை மீறுமோ 


82 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.. இன்று கொஞ்சம் சீக்கிரமே...!

துரை செல்வராஜூ said...

நான் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்..
பெரிதாக ரசித்ததில்லை...

ஆனால் இதனையெல்லாம் மீட்டெடுப்பது ஆச்சர்யம்...

துரை செல்வராஜூ said...

எங்கே கீ/கீ ஒருத்தரையும் காணோம்!...

ஸ்ரீராம். said...

// ஆனால் இதனையெல்லாம் மீட்டெடுப்பது ஆச்சர்யம்... //

எனக்கு ஜெயச்சந்திரன் பிடிக்கும். அவர் பட்டியலில் இந்தப் பாடலும் இருக்கிறது. இதைவிட மற்ற பாடல்கள் இன்னும் இனிமை என்றாலும் இதையும் எப்போதுதான் கேட்பது! தினமும் கல்யாணச் சாப்பாடே சாப்பிட்டாலும் போர் அடித்து விடாதா!!!!


// எங்கே கீ/கீ ஒருத்தரையும் காணோம்!... //

எனக்கும் தெரியவில்லை!

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்,
இது நாம் ரிகார்ட் கேட்கும்போது 78 ஸ்பிட்ல கேட்போம் இல்லையா. அதுபோல இருக்கிறது. மேலும் இது சுசீலா அம்மாவான்னு சந்தேகமா இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

ஸ்ரீராம். said...

மாலை / காலை வணக்கம் அம்மா.

ஆமாம் அம்மா. இணையத்திலிருந்து பாடல்கள் எடுக்கும்போது ஸ்பீட் சற்று மாறுபடுகிறதுதான். கொஞ்சம் மெதுவாக இருக்கலாம்!

இது சுசீலாம்மாவேதான். சந்தேகமே வேண்டாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாட்டு...

ஸ்ரீராம். said...

நன்றி தனபாலன்.

கோமதி அரசு said...

//அந்தக் காலத்தில் நான் ரசித்த பாடல்களில் ஒன்று.//

இப்போதும் ரசிக்க முடிவது மகிழ்ச்சி.

இந்த பாடல் கேட்ட நினைவு இல்லை.

//அவர்களை உச்சஸ்தாயியில் பாடவைத்தால் எப்படி இருக்கும் என்கிற வித்தியாசமான எண்ணம் இந்த இசையமைப்பாளருக்கு வந்திருக்கவேண்டும்.//

வித்தியாசமான எண்ணம் தான்.


ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அக்கா.

Asokan Kuppusamy said...

இனிமையான பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பாராட்டுகள்

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

KILLERGEE Devakottai said...

பாடல் கேட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்ஜி.

எழுதியது கங்கை அமரனாகத்தான் இருக்கும் என்பது எனது எண்ணம்.

ஸ்ரீராம். said...

எனக்கும் அப்படிதான் தோன்றியது கில்லர்ஜி.

நெ.த. said...

ஆஜர். பாடலைப் பிறகு கேட்கிறேன்.

ஸ்ரீராம். said...

ஓகே நெல்லை..

நெ.த. said...

பாடல் சுமார். இளையராஜாபோல் பி.சுசீலாவை ஒதுக்காமல் கங்கை அமரன் உபயோகப்படுத்தியுள்ளார். பொதுவாக ரசிகர்கள் பாடல் கேட்பதற்கும், இசையறிவு பூரணமா இருக்கறவங்க அனுபவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கும். பாடலின் சிறப்பை யாரேனும் விளக்கலாம்.

நெ.த. said...

கவிஞர் கண்ணதாசன், "என் பாடல்களில் திருத்தங்கள் வேணும்னா கங்கை அமரனை வைத்து திருத்திக்கோங்க, அவர் சரியாச் செய்வார்" எனப் பலமுறை பாராட்டிச் சொல்லும்படியான திறமைக்குச் சொந்தக்காரர் கங்கை அமரன் அவர்கள்.

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லைத்தமிழன். கண்ணதாசன் அப்படிச் சொல்லி இருப்பது எனக்குச் செய்தி. நான் படித்தது இல்லை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பாட்டு மிகவும் அருமை. இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறேன். பி. சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரல் மிகவும் பிடிக்கும்.ஜெயசந்திரன் அவர்களின் குரலும் மிகவும் அருமையாக இருக்கும். சில சமயங்களில் யேசுதாஸ் அவர்களின் குரலுடன் ஒத்துப்போவதாக எனக்கு தோன்றும். இந்த வெளிவராத படத்தின் பாடலை இபபோதுதான் கேட்கிறேன்.

சிலவிடங்களில் கதவிடுக்கில் மாட்டிய எலி.. நல்ல உவமானம்.. சிரிக்க வைத்தது. எனக்கு முதலிலிருந்தே அப்படித்தான் என எண்ண வைத்தது. ஆனாலும் இனிமையாகத்தான் இருக்கிறது
நல்ல இனிமையான குரலை ஏன் இப்படி பாட வைத்து விட்டார்களோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

R.Umayal Gayathri said...

எப்போதோ...கேட்ட நினைவு...இப்போது கேட்டுக் கொண்டே கருத்து இடுகிறேன்.பாடல் முடிகிறது...வரட்டா....

துரை செல்வராஜூ said...
This comment has been removed by the author.
துரை செல்வராஜூ said...

இளையராஜா அவர்களது இசையில் சுசீலா அம்மா அவர்கள் பாடிய பாடல்கள் பல உண்டு...

சொந்தமில்லை.. பந்தமில்லை.. (அன்னக்கிளி)
அமுதே.. தமிழே.. அழகிய மொழியே..(கோயில் புறா)
ராகவனே.. ரமணா...ரகுநாதா..( இளமைக் காலங்கள்)
ஆசையில பாத்திக் கட்டி.. (எங்க ஊர் காவல்காரன்)
அரும்பாகி மொட்டாகிப் பூவாகி...(எங்க ஊர் காவல்காரன்)
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு... ( வைதேகி காத்திருந்தாள்) காலைத் தென்றல் பாடி வரும் பாட்டு..( உயர்ந்த உள்ளம்)
தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி... ( எனக்குள் ஒருவன்)
வரம் தந்த சாமிக்கு.. லாலி..லாலி.. (சிப்பிக்குள் முத்து)
கற்பூர பொம்மை ஒன்று ..( கேளடி கண்மணி)
பொங்கலு..பொங்கலு.. ( வருஷம் பதினாறு)
பூங்காவியம்.. பேசும் ஓவியம்..(கற்பூர முல்லை)

இப்படி சிறப்பான பாடல்கள் இன்னும் பல இருக்கலாம்!..

வாணி ஜயராம் அவர்களுக்குக் கூட
இது ரோசாப் பூவு.. - என்றொரு மூனாம் தரப் பாடல் (ஒரு கைதியின் டைரி)கிடைத்தது...

L.R.ஈஸ்வரி அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ..

நான் வாழ வைப்பேன் - தபடத்துடன் ஓரங்கட்டப்பட்டவர் - TMS!..

ஆனால் பல வருடங்களுக்குப் பின்
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் (ஜிவாஜி - பத்மினி)
TMS - சுசீலா இருவரும் சேர்ந்து பாடும்
இளமைக் காலம் எங்கே.. - என்றொரு பாடல்..

அவ்வளவு தான் (என்று நினைக்கிறேன்!..)

துரை செல்வராஜூ said...

இன்னுமொரு பாடல்..
இளையராஜாவின் இசையில்
TMS/ சுசீலா..
சிந்து நதிக்கரையோரம் (நல்லதோர் குடும்பம்..)

ஸ்ரீராம். said...

துரை ஸார்... சுசீலாம்மா இளையராஜா இசையில் நிறையவே பாடியிருக்கிறார். லிஸ்ட் போட்டு கட்டுப்படியாகாது!

ஸ்ரீராம். said...

நான் வாழவைப்பேன் படத்தில் என்னோடு பாடுங்கள் பாடலை டி எம் எஸ் பாடுவதாகவோ, பாடியோ அது வெளியாகாததால் கோபம் என்றும் படித்த நினைவு. ரிஷிமூலத்தில் டி எம் எஸ் பாடல் 'ஐம்பதிலும் ஆசை வரும்' இருக்கே... அதிலேயே சுசீலாம்மா பாடல் 'மழை வருவது வயலுக்குத் தெரியும்' இருக்கு..

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். ஆமாம் நிறைய பேர் யேசுதாசுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் குழப்பிக் கொள்வதுண்டு. நான் இல்லை. எனக்குத் தெரியும்.

//சிலவிடங்களில் கதவிடுக்கில் மாட்டிய எலி.. நல்ல உவமானம்.. சிரிக்க வைத்தது. எனக்கு முதலிலிருந்தே அப்படித்தான் என எண்ண வைத்தது//

ஹா... ஹா... ஹா... ஆம்.

ஒரு வித்தியாசத்துக்காகத்தான் அப்படி முயற்சித்திருக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

துரை செல்வராஜூ said...

/// மயில் வருவது..///

ஆகா.. அந்தப் பாடலை ஏன் மறந்தேன்!..

சமீபத்தில் சகோ. கீதாR அவர்களது மகன் வந்தபோது அவர்களுக்காக சொல்லி இருந்தேனே!...

உண்மையில்
பட்டியலிட்டு கட்டுப்படியாகாது தான்!...

துரை செல்வராஜூ said...

அப்போது TMS அவர்கள் இலங்கை சுற்றுப் பயணத்தில் இருந்தார்...

அவர் பாடிக் கொடுத்துச் சென்ற பாடலை SPB அவர்களை வைத்து மீண்டும் ஒலிப்பதிவு செய்ததால் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டதாக பேசிக் கொண்டார்கள்...

G.M Balasubramaniam said...

பொதுவாக கேட்காத பாடலை தேர்ந்தெடுத்துப் போடுவதில் வல்லுனர் ஆகி விட்டீர்கள் அது சுசீலாவின் குரலா சொல்லாவிட்டால் தெரிந்திருக்காது

ஸ்ரீராம். said...

// பொதுவாக கேட்காத பாடலை தேர்ந்தெடுத்துப் போடுவதில் வல்லுனர் ஆகி விட்டீர்கள் //

அதாவது நீங்கள் எல்லாம் கேட்டிருக்காத பாடலை!!! இப்படி காத்த விட்டால் எப்படி அது சுசீலா குரல் மாதிரி இருக்கும்! நன்றி ஜி எம் பி ஸார்.

Geetha Sambasivam said...

நேத்திக்கே இன்னிக்கு ஓ.சா. போகப் போறேன்னு சொல்லி இருந்தேன். அதோட திங்கட்கிழமையே இந்த வாரம் முழுசும் "பிசி" நு வேறே தம்பட்டம் அடிச்சிருந்தேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லாம எப்படி இருக்கிறதாம். இன்னிக்குக் காலம்பரவே போயிட்டு வரதுக்குப் பனிரண்டரை மணி ஆயிடுச்சு! இப்போத் தான் கணினியில் முக்கியமான மடல்கள் பார்த்துட்டுப் பதிவுலகத்துக்கு வந்திருக்கேன். :)

Geetha Sambasivam said...

நாளைக்கும் ஓ.சா. தான்! ஆனால் இங்கேயே குடியிருப்பு வளாகத்திலேயே எதிர்க்குடியிருப்பு! அப்புறமும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை விஜயம் இருக்கு! :)))))

Geetha Sambasivam said...

இந்தப் பாட்டைக் கேட்க வீடியோ/ஆடியோவைக் க்ளிக் செய்ததில் நம்ம ரங்க்ஸ் பயந்துட்டார். அவர் கையிலிருந்து ஐபாட் கீழே விழறதுக்கு இருந்தது! உடனே ஆடியோவை மூடிட்டேன். :)))) பி.சுசீலானு சத்தியம் பண்ணிச் சொல்லணும்!

Geetha Sambasivam said...

துரை சகோதரர் இதுக்காகப் பல்வேறு ஆராய்ச்சிகள் பண்ணி இருக்காஶ்ரீராமைத் தோற்கடிச்சுடுவார் கூடிய சீக்கிரம் என நம்புவோம்! :)))) வெகு விரைவில் ஶ்ரீராமின் "மன்னர்" பட்டம் பறி போகப் போகுது!

ஸ்ரீராம். said...

/ இந்தப் பாட்டைக் கேட்க வீடியோ/ஆடியோவைக் க்ளிக் செய்ததில் நம்ம ரங்க்ஸ் பயந்துட்டார்.//

ஹா... ஹா... ஹா....

// வெகு விரைவில் ஶ்ரீராமின் "மன்னர்" பட்டம் பறி போகப் போகுது! //

எல்லோரும் இந்நாட்டின் மன்னர்!

அக்கா... கோச்சுக்காம சொல்லுங்க.. ஓ.சா. ன்னா என்ன?

Geetha Sambasivam said...

//அக்கா... கோச்சுக்காம சொல்லுங்க.. ஓ.சா. ன்னா என்ன? // இதுக்கு ஏன் கோவிச்சுக்கறேன்! ஜாலியா இருக்கே!

சொல்ல மாட்டேனே! அஸ்கு புஸ்கு, ஆசை தோசை அப்பளம், வடை! ;)))))))

ஸ்ரீராம். said...

ஆசை தோசை அப்பளம், வடை எல்லாம் வேண்டாம். ஓ.சா. ன்னா என்ன?

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, கண்டு பிடிங்க, கண்டு பிடிங்க! க்ளூ வேறே கொடுத்தாச்சு! தி.கீதா எங்கே காணோம்?

ஸ்ரீராம். said...

தி.கீதாவுக்கு இணைய இணைப்பு கஷ்டப்படுத்துகிறதாம்.

Geetha Sambasivam said...

ஓஓ, அப்போ சரி, வாட்சப்பிலும் இல்லை, இங்கேயும் இல்லைனதும் கவலையா இருந்தது!

ஞானி:) athira said...

///ஸ்ரீராம். said...
ஆசை தோசை அப்பளம், வடை எல்லாம் வேண்டாம். ஓ.சா. ன்னா என்ன?///

ஆவ்வ்வ்வ்வ்வ் அது ச்..ரீராம்ம்.. கீசாக்காவுக்கு ஓசிச் சாப்பாடாம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதைத்தான் ஓ சா என ஸ்ரைலா சொல்றா ஹா ஹா ஹா :)) விடமாட்டமில்ல:))

ஸ்ரீராம். said...

அதிரா..

// கீசாக்காவுக்கு ஓசிச் சாப்பாடாம்ம்ம்ம்ம்//

புதிரை அவிழ்த்ததால் ச்..ரீராம்ம்..மை மன்னிக்கிறேன்!! நன்றி..

கீதாக்கா... இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க?

ஞானி:) athira said...

இன்றைய பாடல் பற்றி எனக்கேதும் தெரியவில்லை.. எதுவும் சொல்லவும் முடியவில்லை.. கேட்டதாகவும் இல்லை:(.

துரை அண்ணன் சொல்லியிருக்கும் பல படங்கள் பார்க்கோணும் போல ஆசையா இருக்கு.. படப் பெயர்கள் அழகா இருக்கு. எனக்கு படப்பெயர் அழகாக மனதைக் கவர்வதுபோல இருந்தால் உடனே தேடிப்பார்ப்பேன்:)

ஸ்ரீராம். said...

// இன்றைய பாடல் பற்றி எனக்கேதும் தெரியவில்லை.. எதுவும் சொல்லவும் முடியவில்லை.. கேட்டதாகவும் இல்லை:(//

இது வெளிவராத படம் அதிரா.

துரை ஸார் சொல்லி இருக்கும் படங்கள் பார்த்ததில்லையா? வேணாம் ரிஸ்க்கு... பாட்டு மட்டும் கேளுங்க...

Geetha Sambasivam said...

ஹாஹாஹா, இதுக்கு நம்ம கவிதாயினி, தமிழ்ப்புலவி, ஔவையாரின் அவதாரம், தமிழில் "டி" வாங்கினவங்க வர வேண்டி இருக்கு! ஆனால் பாருங்க என்ன இருந்தாலும் அதிரடியின் தமிழ்ப்புலமைக்கு ஈடு இணை இல்லையாக்கும்!

ஞானி:) athira said...

///கீதாக்கா... இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க?///

haa haa haa..

https://media.giphy.com/media/xUPGctZ7nbJ0Xtqx9K/giphy.gif

Geetha Sambasivam said...

அதிரடி, ச்ரீராம்னே எழுதுங்க! :))))))

ஸ்ரீராம். said...

// ஹாஹாஹா, இதுக்கு நம்ம கவிதாயினி, தமிழ்ப்புலவி, ஔவையாரின் அவதாரம், தமிழில் "டி" வாங்கினவங்க வர வேண்டி இருக்கு! ஆனால் பாருங்க என்ன இருந்தாலும் அதிரடியின் தமிழ்ப்புலமைக்கு ஈடு இணை இல்லையாக்கும்! //

ஆமாம்... ஆமாம்... ஆமாம்.. நான் வேறு கவலையில் இருக்கேனாக்கும்... அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை!

// அதிரடி, ச்ரீராம்னே எழுதுங்க!//

என்னா வில்லத்தனம்...

Geetha Sambasivam said...

அதிரடி, அந்தக் குண்டுப் பூஸார் தான் நீங்களா? :)))))))

ஞானி:) athira said...

///Geetha Sambasivam said...

//ஆனால் பாருங்க என்ன இருந்தாலும் அதிரடியின் தமிழ்ப்புலமைக்கு ஈடு இணை இல்லையாக்கும்!//

அப்போ என் பதில் கரீட்டாஆஆஆஆஆஅ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ என் பொற்கிழி எங்கேஏஏஏஏஏஏஏஏ:) ஒரு குருட்டு லக்கிலே எடுத்துக் கொடுத்தேன் ச் ரீராமுக்கு:)) ஹையோ டங்கு ச்லிபாச்சு வெரி சோரி.. அதனை நீங்க கூப்பிடுவதுபோல படிக்கவும்:))

///அதிரடி, ச்ரீராம்னே எழுதுங்க! :))))))///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீசாக்கா. அவரைப் போய் அப்பூடி எல்லாம் ஜொள்ளக்கூடா:)) அபச்சாரம் அபச்சாரம்:))
ஆனா இன்னொரு குளூ:) இது 5 ஆவது.. கிடைச்சிருக்கு எனக்கு:)) அதாவது நீலக்கண்ணனாம்ம்ம்.. அப்போ ச் ரீராம் கெள அண்ணனின் கலர் இல்லை:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

ஞானி:) athira said...

//ஸ்ரீராம். said...
// ஹாஹாஹா, இதுக்கு நம்ம கவிதாயினி, தமிழ்ப்புலவி, ஔவையாரின் அவதாரம், தமிழில் "டி" வாங்கினவங்க வர வேண்டி இருக்கு! ஆனால் பாருங்க என்ன இருந்தாலும் அதிரடியின் தமிழ்ப்புலமைக்கு ஈடு இணை இல்லையாக்கும்! //

ஆமாம்... ஆமாம்... ஆமாம்.. நான் வேறு கவலையில் இருக்கேனாக்கும்... அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை!//

இல்லை எண்டால் மட்டும் டக்குப் பக்கெனக் கண்டு பிடிக்கிறவர் மாறியேஏஏஏஏஏஏஏஏஎ ஒரு பேச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எப்ப பார்த்தாலும் ஒரு சாட்டுச் சொல்லிக் கொண்டு:))

ஞானி:) athira said...

//Geetha Sambasivam said...
அதிரடி, அந்தக் குண்டுப் பூஸார் தான் நீங்களா? :)))))))//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மெல்லிய பூஸ் கிடைக்கல்லியே.. அது காஃபீல்ட்:))

ஸ்ரீராம். said...

// இல்லை எண்டால் மட்டும் டக்குப் பக்கெனக் கண்டு பிடிக்கிறவர் மாறியேஏஏஏஏஏஏஏஏஎ ஒரு பேச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:))//

................................ (மௌனம்)

ஸ்ரீராம். said...

அதிரா... எங்க உங்க செக் ஐ இரண்டு நாட்களாகக் காணோம்?

நெ.த. said...

துரை செல்வராஜு சார் - இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பாடல் பதிவின்போது (இன்னொரு இசையமைப்பாளர்) டேக் தவறினதுக்கு பியானோ/கிடார் வாசித்த இளையராஜா காரணம் என்று பி சுசீலா குற்றம் சாட்ட, தவறு செய்யாத இளையராஜா அவமானப்பட நேர்ந்தது. இளையராஜாவின் 100 பாடலுக்கு, 80 எஸ் ஜானகி, 10 ச்சிரேகா/ஜென்சி மற்றவர்கள், 3க்கும் குறைவாகவோ இல்லை அதுகூட இல்லையோ சுசீலா பாடியது. இதை கங்கை அமரன், சுசீலாமீதான கோபத்தில்தான் அவருக்கு பாடல்கள் கொடுக்கவில்லை என்று நினைப்பதாக கங்கைஅமரன் எழுதியிருக்கிறார்.

எஸ் ஜானகிக்கும் இளையராஜாவுக்கும் ஈகோ பிரச்சனை வந்து எஸ் ஜானகி பாடமாட்டேன் என்று சென்றுவிட்டார். படங்களை இந்தப் பிரிவு பாதித்ததால், இளையராஜா மீண்டும் ஜானகிக்கு பாடல்கள் கொடுத்தார். இது எஸ் ஜானகி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சொன்னது.

இளையராஜா இதுபோல் ஏவிஎம் இடம் (சரவணன்) கோபம் கொண்டு அவர்களின் படங்களைத் தவிர்த்ததும், அதேபோல் அந்த நிகழ்ச்சியில் சமாதானம் பேச வந்த ரஜினியை மட்டம் தட்டியதால் அதன்பிறகு ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இளையராஜாவுக்குப்போனதும், (இது கங்கை அமரன் எழுதியிருப்பது) Flexibleஆக இல்லாத்தால் மணிரத்னம் ரோஜாவுக்கு ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றதும், அதை உபயோகப்படுத்தி வைரமுத்து ரகுமானிடம் ஒட்டிக்கொண்டதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஞானி:) athira said...

என் செக் க்கு.. இருந்தால் கால் வலி எழும்பினால் கை வலி[வயசாயிடுச்செல்லோ:)] ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ ஸ்ரீராம்.. இல்லை எனில் என் கதை கந்தல் ஆகிடும்:))..

அவ இன்றும் நாளையும் வெளியில் எங்கோ அலுவலாம்.. அதனால இனி சண்டேயிலதான்:) இது வேற சண்டே:)) எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்ன்:))

ஸ்ரீராம். said...

நெல்லைத்தமிழன்..

சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் சொல்கிறீர்கள். இதெல்லாம் நான் அறியாதவை. கங்கை அமரன் புத்தகம் ஏதோ படிப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா?

ஸ்ரீராம். said...

// அவ இன்றும் நாளையும் வெளியில் எங்கோ அலுவலாம்.. அதனால இனி சண்டேயிலதான்:) இது வேற சண்டே:)) எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்ன்:)) //

ஓ... சரி... சரி...!

Bhanumathy Venkateswaran said...

'மலர்களிலே அவள் மல்லிகை' என்று இந்துமதி எழுதிய தொடர்கதை படித்த ஞாபகம் இருக்கிறது. அப்படி ஒரு படமும் வந்ததா? இந்த பாடலும் கேட்ட ஞாபகம் இல்லை.
இந்த பாடலின் ஒரிஜினல் வர்ஷனை பி.சுசீலாவும், ஜெயச்சந்திரனும் பாடியிருப்பார்களாக இருக்கும். இது அவர்கள் குரல் இல்லை. என்னதான் ஃபால்ஸ் வாய்ஸில் பாடினாலும் சுசிலாவின் குரல் இதனை கர்ண கொடூரமாக இருக்காது. ப்ரியா படத்தில் வரும் 'டார்லிங் டார்லிங் டர்லிங் பாடலை கூட ஹை பிச்சில்தான் பாடியிருப்பார். ஜெயச்சந்திரன் குரலின் கணமும் இதில் இல்லை.

Bhanumathy Venkateswaran said...

ஓ.சா. என்றால் ஓசி சாப்பாடு என்று படிக்கும் பொழுதே புரிந்து விட்டது. இது கூடவா ஸ்ரீராமுக்கு தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு முன்னாள் அதிர விடை சொல்லி விட்டார். (பிழைத்து போகட்டும், ஹா ஹா).

அதே போல சிந்து நதிக்கரை ஓரம்.. என்ற வரிகளை பார்த்ததும் சிவாஜி, வாணிஸ்ரீ நடித்த ஏதோ ஒரு படத்தில் கூட இப்படி ஒரு பாடல் வருமே என்று நினைத்தேன். என்ன படம் என்று துரை சார் கூறி விட்டார். நன்றி.

Geetha Sambasivam said...

//ஓ.சா. என்றால் ஓசி சாப்பாடு என்று படிக்கும் பொழுதே புரிந்து விட்டது. இது கூடவா ஸ்ரீராமுக்கு தெரியவில்லை // அதானே, ஜிங் சக்க,ஜிங் சக்க, ஜிங் சக்க! :)))))

Geetha Sambasivam said...

//இது அவர்கள் குரல் இல்லை. என்னதான் ஃபால்ஸ் வாய்ஸில் பாடினாலும் சுசிலாவின் குரல் இதனை கர்ண கொடூரமாக இருக்காது. // அதான் நானும் பாடி இருப்பது சுசீலாவானு சந்தேகப் பட்டேன். சுசீலா மாதிரித் தெரியலை எனக்கும்! குரலின் குழைவு காட்டிக் கொடுக்கும். இது என்னமோ குழைவே இல்லாமல் விறைப்பாக இருக்கு.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ஸ்ரீராம்: ..அதை உபயோகப்படுத்தி வைரமுத்து ..//

இதற்கு முன்பு சொல்லியிருப்பது சரியாக இருக்கக்கூடும். ஆனால், இது சத்யம்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

மேலே @ நெ.த. எனக் கொள்ளவும்!

நெ.த. said...

@ஏகாந்தன் - இதை இங்கே எழுதினா நிறையபேர் பொங்கிவரக் கூடும். இளையராஜா ஈகோ, கோபம் நிரம்பியவர். கங்கை அமரன் எல்லோருக்கும் நல்ல பிள்ளை டைப். இளையராஜாவினது வித்தியாகர்வம், காலப்போக்கில் அதிகமாகிவிட்டது. தன்னிடம் குழையாதவர், தன் நட்பு வட்டாரத்தில் இல்லை என்பதுபோல. அத்தனை நண்பனாக இருந்த எஸ்பிபி அவர்களையே தனது பாடல்களை மேடையில் பாடக்கூடாது (ராயல்டி தராமல்) என்றவர் இளையராஜா. இசை ஞானத்தில் இளையராஜா கடவுள் அருள் பெற்றவர் என்பதில் சந்தேகம் இல்லை.

'என்னால்தான் இளையராஜா' என்ற நிலையை அவர் என்றுமே விரும்புவதில்லை. அந்த மாதிரி மட்டம் தட்டுவதுபோலோ அல்லது அவரது திறமையைக் குறைவாக மதிப்பிடுவதுபோலோ யாரும் நடந்துகொண்டால், அவர்களைப் புறக்கணித்து அந்த நஷ்டத்தைப் பற்றிக் கவலை கொள்ளாத அளவு காலம் அவரை வைத்துள்ளது. இளையராஜாவின் நல்ல குணங்களையும் நாம் காணமுடியும். (எம்.எஸ்.வி மறைவுக்குப் பின்பு உதவி செய்தது போன்று)

பழகுவதில் வாலி அவர்கள் வெகு நைச்சியமானவர். யாரிடமும் கெட்டபெயர் வாங்கிக்கொள்ள மாட்டார். (உதாரணம், எம்ஜியாரைச் சீண்டுவதுபோல் ஒரு பாடல், கருணாநிதியின் படக்கம்பனிக்கு எழுதவேண்டிவந்தபோது, என்னைவிட கங்கை அமரன் நல்லா எழுதுவார் என்று அவரைக் கோத்துவிட்டுவிட்டார்). புகழ்வதில் வாலியை மிஞ்சமுடியாது. கங்கை அமரன் இல்லை, வை.முத்து ஆகவே ஆகாது, அதனால் வாலி மிக மிக வேண்டப்பட்டவராக இளையராஜாவுக்கு கடைசி வரை இருந்தார்

வைரமுத்துவைப் பற்றி நிறைய எழுதி அவரின் அடிப்பொடிகளின் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்வானேன்.

வெங்கட் நாகராஜ் said...

சுசீலா, ஜெயச்சந்திரன் என நம்பவே முடியவில்லை.....

முதல் முறை கேட்கிறேன். நன்றி.

ஸ்ரீராம். said...

// அப்படி ஒரு படமும் வந்ததா? இந்த பாடலும் கேட்ட ஞாபகம் இல்லை. //

வெளிவராத படம் பானு அக்கா.

// இந்த பாடலின் ஒரிஜினல் வர்ஷனை பி.சுசீலாவும், ஜெயச்சந்திரனும் பாடியிருப்பார்களாக இருக்கும்.//

இல்லை, நீங்கள் நினைப்பது தவறு. இதுவே ஒரிஜினல் வெர்ஷன்தான். சற்று அதிக வேகத்தில் இருக்கிறது. என்னிடம் இருக்கும் mp3 யில் சரியாக இருக்கும். ப்ரியா பாடலான டார்லிங் டார்லிங் பாடலை விட உச்சஸ்தாயி பாடல் இது.

// இது கூடவா ஸ்ரீராமுக்கு தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.//

இல்லை அக்கா... தெரியவில்லை. :))

ஸ்ரீராம். said...

கீதாக்கா..

// அதானே, ஜிங் சக்க,ஜிங் சக்க, ஜிங் சக்க! :)))))//

சந்தோஷம்.

// அதான் நானும் பாடி இருப்பது சுசீலாவானு சந்தேகப் பட்டேன். சுசீலா மாதிரித் தெரியலை எனக்கும்! //

மன்னிக்கவும். இது சுசீலா ஜெயச்சந்திரன்தான்.

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லைத்தமிழன்..

இளையராஜாவுக்கு மேலே கனம் அதிகம் என்று தெரியும். பேசுவதைக் கேட்க ஒருமாதிரிதான் இருக்கும். ஆனாலும் நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி அவர் இசை தேவன். கங்கை அமரன் அவ்வப்போது மேடைகளில் பேசுவது கேட்டிருக்கிறேன். சுவாரஸ்யமாகப் பேசுவார். அண்ணனை நன்றாகவே வாருவார்.

ஸ்ரீராம். said...

வாங்க வெங்கட்.. நன்றி.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பாடல்கள்
மீட்டுப் பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் ஜீ.யா.கா.லிங்கம்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ நெ.த.: இளையராஜா ஈகோராஜா ஆன கதைக்கு நன்றி. வைமு-வைப்பற்றி கிட்டத்தட்ட எல்லோருக்க்கும் புரிகிறது என்றே நினைக்கிறேன். நாளைக்கு ஸ்டாலினோ அல்லது ரஜினிகாந்தோ யார் முதல்வராக வந்தாலும், உரசுவதோடு நிற்காமல், ஒட்டிக்கொள்ள வசதியாக தன் வல இடப்பக்கங்களில் தாராளமாக ஃபெவி க்விக் தடவிக் காத்திருக்கிறார் என்பதாகவே இந்தச் சனிக்கிழமையில் தோன்றுகிறது. அடிகளும் பொடிகளும் ஆனந்தமடைக.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: இந்தப் படமும் தெரியவில்லை, பாடலும் கேட்ட நினைவில்லையே. பாடல் என்னவோ போல் உள்ளதே. வழக்கமாகக் கேட்கும் பாடல் போல் இல்லாதது போல் தோன்றியது ஸ்ரீராம்ஜி.

கீதா: ஸ்ரீராம் பாட்டு நீங்க சொல்லிருக்காப்ல கதவுக்கிடையில் மாட்டிய எலி போல இருக்கு...கல்பனா ராகவேந்திரா (நடிகர் ராகவேந்திராவின் மகள்) மலையாள ஐடியா ஸ்டார் சிங்கர் மற்றும் தெலுங்கு என்று நினைவு அதில் எல்லாம் முதல் பரிசு வென்றவர். குரல் நன்றாகத்தான் இருக்கும். திறமைசாலிதான் ஆனால் ஹை பிச்சில் பல பாடல்களை அவர் பாடும் போது ஹையோ என்று இருக்கும். அப்போது எனக்குத் தோன்றும் வரி இதுதான் கதவுக்கிடையில் மாட்டிய எலி போன்று கீச் கீச்சுனு ஏன் இப்படிக் குரல் போகுது இப்படி முயற்சி செய்யனுமா என்று தோன்றும். அப்படித்தான் இந்தப் பாடலிலும் தோன்றியது. சுசீலா என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. மட்டுமல்ல..ட்யூன் நன்றாக இருந்தாலும் இப்படியான முயற்சி இந்தப் பாடலைக் கொஞ்சம் பின் தள்ளிவிட்டதோனு தோனுது.

ஸ்ரீராம். said...

வாங்க துளஸிஜி... இந்த இணைப்பில் கொஞ்சம் ஸ்பீடாக உள்ளது பாடல். சற்றே குறைத்து நினைத்துப் பாருங்கள். நன்றாகவே இருக்கும். ஸ்லோ மெலடிகளுக்கு மத்தியில் சட்டென்று ஒரு வித்தியாசம்!

நன்றி கீதா... இணையம் சரியாகி விட்டதா?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!