Thursday, July 12, 2018

முக(ம்)மூடி முத்தம்


முகமூடி 

ஒப்பனை இல்லாமலேயே 
முகத்தை மறைக்கிறேன் 
இயல்பாய்த்தான் 
வந்து விடுகிறது இவையெல்லாம் 

உண்மை உணர்வுகளை 
ஒரு புன்னகையால், 
ஒரு நெற்றித் தொடுதலால், 
ஒரு மீசை வருடலால், 
ஒரு கைக்குட்டை துடைப்பால் 
மறைத்து 
செயற்கை பாவம் 
தருகிறேன்.

எந்த முகம் என் முகம் 
என்று தெரியாமல் 
சமயங்களில் 
நானே குழம்பிப் போகிறேன்.

===================================================================================================

ஜூலை ஆறாம் தேதி உலக முத்த தினமாம்.  2015 ஆம் வருடம் முத்த தினத்தை ஒட்டி ஃபேஸ்புக்கில் நான் பகிர்ந்த சில முத்தங்களை..  மன்னிக்கவும் முத்தக் கவிதைகளை இங்கு பகிர்கிறேன்.  இதற்கான உறுதியை சென்ற வாரமே உங்களுக்கு அளித்திருந்தேன்!

சென்ற வாரம் துளஸிஜி என் கவிதை இல்லையா என்று கேட்ட பாவத்திற்கு இந்த வாரம் தாளித்து விட்டேன்!  அவர் மனசுக்குள் "இனிமே கேப்பியா?  கேப்பியா?  கேப்பியா?" என்று தன்னைத்தானே கடிந்து கொள்ளக்கூடும்!=====================================================================================================
வேண்டும்...... வேண்டும்..

கல்வியை காசின்றி பெற 
மறுபடியும் ஒரு 
காமராஜர் பிறக்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் தேக்க  
மறுபடியும் ஒரு 
கரிகாலன் பிறக்க வேண்டும்.

இந்தியர்களுக்குள் ஒற்றுமை வர 
மறுபடியும் ஒரு 
பொது எதிரி வேண்டும்.

மொபைல் மற்றும் 
கணினிகளிலிருந்து நிமிர்ந்து 
உறவுகளுடன் கலக்க 
மறுபடியம் ஒரு 
கற்காலம் வரவேண்டும் 

மரங்கள் நட்டு குளங்கள் வெட்டி 
மண்வளம் காக்க நீர்வளம் பெருக்க 
மறுபடியம் ஒரு 
அசோகர் பிறக்க வேண்டும்.


==============================================================================================

94 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும் அழகாக மலர்ந்திருக்கிறது புதியநாள்.!!

“அன்புதான் உன் பலவீனம் என்றால் இவ்வுலகின் மிகச் சிறந்த பலசாலி நீதான்”

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

ஹை ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஉ...

ஆஹா கலர்ஃபுல் விசாலக் கிழமை!!!! ஈர்க்குதே...வரேன் வரேன்

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

Thulasidharan V Thillaiakathu said...

ஹை துரை அண்ணா நீங்க புதுசா போட்டுருக்கீங்களோனு பார்த்துட்டு அப்படியே ஸ்ரீரங்கம் போய்ட்டு வரேன்...

கீதா

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆம், நன்றி.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

KILLERGEE Devakottai said...

கவிதையை மிகவும் ரசித்தேன்.
முத்ததினத்துக்கு ஒருநாளா ? இப்படியே வருடத்தில் 365 தினமும் ஒதுக்கினால் மக்களுக்கு செலவுதான்.

அடுத்த வாரம் கொழுந்தியாள் தினம் வேறு அதுக்கு எவ்வளவு செலவு வரப்போகுதோ....?

Thulasidharan V Thillaiakathu said...

ஒரு நெற்றித் தொடுதலால்,
ஒரு மீசை வருடலால்,
ஒரு கைக்குட்டை துடைப்பால்
மறைத்து
செயற்கை பாவம்
தருகிறேன்.//

அந்த தொடல், வருடலில் இதற்கு இம்புட்டு அர்த்தம் இருக்கா!!!..

கீதா

துரை செல்வராஜூ said...

அந்த டூத்பேஸ்ட்டில்
அப்பனின் வியர்வையும்!...

அதனால் தான்
அந்த உப்பின் சுவை!...

Thulasidharan V Thillaiakathu said...

எந்த முகம் என் முகம்
என்று தெரியாமல்
சமயங்களில்
நானே குழம்பிப் போகிறேன்.//

அருமை! இது பொதுவாய் எல்லோருக்குமே பொருந்தும் தான்....

ரசித்தேன் ஸ்ரீராம்...

இதோ அனுக்கா முத்தத்தை பறக்க விட்டுருக்காங்களே பிடிச்சுட்டு.....ஓ ஸாரி படிச்சுட்டு.. வரேன்.....ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தலைப்பு ஹிஹிஹிஹி...நல்ல ஈர்ப்பு!! ரசித்தேன்...

கீதா

ஸ்ரீராம். said...

// அடுத்த வாரம் கொழுந்தியாள் தினம் வேறு அதுக்கு எவ்வளவு செலவு வரப்போகுதோ....? //

ஹா... ஹா.... ஹா.... கில்லர்ஜி... செலவு சில மணித்துளிகளும் கொஞ்சம் (கொஞ்சும்?) கவிதைகளும்தான்!!!!!

ஸ்ரீராம். said...

// அந்த தொடல், வருடலில் இதற்கு இம்புட்டு அர்த்தம் இருக்கா!!!..//

பின்னே இருக்காதா கீதா? யோசித்துப்பாருங்கள்... நீங்களே ஒருவரை கவனமாக கேட்பதற்கும் இருக்கும் ஆக்ஷன்களை நினைத்துப் பாருங்கள்!

:)))

ஸ்ரீராம். said...

// அந்த டூத்பேஸ்ட்டில்
அப்பனின் வியர்வையும்!...//

ஆஹா.... துரை ஸார்... சூப்பர்.

Thulasidharan V Thillaiakathu said...

ஃபேஸ்புக்கில் நான் பகிர்ந்த சில முத்தங்களை.//

ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ ஹையோ ஸ்ரீராம்....அடுத்த வரி வந்து அதை டபால்னு கவுத்துருச்சே...ஹா ஹா ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

// அருமை! இது பொதுவாய் எல்லோருக்குமே பொருந்தும் தான்....

ரசித்தேன் ஸ்ரீராம்...//

நன்றி கீதா.

// தலைப்பு ஹிஹிஹிஹி...நல்ல ஈர்ப்பு!! ரசித்தேன்...//

ஹிஹிஹி.. நன்றீஸ்.

துரை செல்வராஜூ said...

/// நீங்க புதுசா ஏதும் போட்டிருக்கீங்களா..ந்னு...///

வலுக்கட்டாயமாக என் மீது கூடுதலாக எட்டு மணி நேர வேலை சுமத்தப்பட்டுள்ளது...

இரவு 8 மணிக்கு ஆயத்தமானால் மதியம் 2 மணிக்குத் தான் வேலை முடித்து வரமுடியும்...

கணினி பக்கம் வர இயலவில்லை.
சனிக்கிழமை தான் அடுத்த பதிவு..

நன்றி..

ஸ்ரீராம். said...

// இரவு 8 மணிக்கு ஆயத்தமானால் மதியம் 2 மணிக்குத் தான் வேலை முடித்து வரமுடியும்...

கணினி பக்கம் வர இயலவில்லை.
சனிக்கிழமை தான் அடுத்த பதிவு..//

கொடுமைப் படுத்தறாய்ங்களோ....

துரை செல்வராஜூ said...

முத்தம்
அதனால் தான்
உலகில் இத்தனை
சத்தம்!....

Thulasidharan V Thillaiakathu said...

இதற்கான உறுதியை சென்ற வாரமே உங்களுக்கு அளித்திருந்தேன்!//

காப்பாத்திட்டீங்க இல்லைனா நடக்கறதே வேற.....ஹா ஹா ஹா ஹா

//சென்ற வாரம் துளஸிஜி என் கவிதை இல்லையா என்று கேட்ட பாவத்திற்கு இந்த வாரம் தாளித்து விட்டேன்! அவர் மனசுக்குள் "இனிமே கேப்பியா? கேப்பியா? கேப்பியா?" என்று தன்னைத்தானே கடிந்து கொள்ளக்கூடும்!//


துளசி நிச்சயமா மீண்டும் கேட்பார் பாருங்க!!! அவர் கேக்கலைனாலும் நான் கேட்டுருவேன்ல உங்களைப் பாடாய் படுத்தி கவிதையே எழுதவும் வைச்சுருவோம்ல ....விடமாட்டோம்ல....

கீதா

துரை செல்வராஜூ said...

ஆஹா..
காலையிலேயே
கச்சேரி
களைகட்டி விட்டது...

Bhanumathy Venkateswaran said...

அனைவருக்கும் காலை வணக்கம்.

Bhanumathy Venkateswaran said...

ஆஹா அனுஷ்காவின் பறக்கும் முத்தம் பெற்றுக் கொண்டேன். நன்றி.

ஸ்ரீராம். said...

// உலகில் இத்தனை
சத்தம்!..//

ஹிஹிஹி... ப்ளாக்கிலும்தான்!

ஸ்ரீராம். said...

// இதற்கான உறுதியை சென்ற வாரமே உங்களுக்கு அளித்திருந்தேன்!//

காப்பாத்திட்டீங்க இல்லைனா நடக்கறதே வேற.....ஹா ஹா ஹா ஹா//

இல்லைன்னா 'நம்ம ஏரியா' வம்பாயிடும் கீதா!!!

ஸ்ரீராம். said...

// துளசி நிச்சயமா மீண்டும் கேட்பார் பாருங்க!!! அவர் கேக்கலைனாலும் நான் கேட்டுருவேன்ல உங்களைப் பாடாய் படுத்தி கவிதையே எழுதவும் வைச்சுருவோம்ல ....விடமாட்டோம்ல....//

துளஸிஜி ரொம்ப அப்பாவியா இருக்காரே.. நம்ம ஏத்தி ஏத்தி விடறாரோ! இன்றைய பதிவில் முதலாவதும், இறுதியானதும் இப்போது எழுதப்பட்டவை! பழசு இல்லை.

ஸ்ரீராம். said...

துரை ஸார்..

// ஆஹா..
காலையிலேயே
கச்சேரி
களைகட்டி விட்டது... //

அரம மகிமை.

அமாவாசை, நல்ல நாள் வேறு!!!!

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் பானு அக்கா.

ஸ்ரீராம். said...

பானு அக்கா...

// ஆஹா அனுஷ்காவின் பறக்கும் முத்தம் பெற்றுக் கொண்டேன். நன்றி. //

அது உங்களுக்கும் சேர்த்தா...? பங்கு வந்துடுச்சே...!!!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா..... ஆஹா....

முத்தத்தின் சப்தம் தில்லி வரை கேட்க, என்ன என்று பார்க்க வந்தேன்! முத்த மழை பொழிந்திருக்கிறதே.... :) நடக்கட்டும் நடக்கட்டும்!

துரை செல்வராஜூ said...

என்னோட பங்கு எங்கே!?...

Thulasidharan V Thillaiakathu said...

முத்தம் பற்றிய முதல்ல நீங்க சொல்லிருக்கறதுல உங்க கவிதை நு நினைச்சு....கேய்வி கேய்க்க (அதிர்ஸின் டி தமிழின் விளைவு!!!) அப்புறம் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து பார்த்ததும் டவுட் வந்து கீழ உள்ள வரியைப் படிச்சதும் தான் தெரிஞ்சுது அத்தனையும் பாடல்கள் என்று....மீ ரொம்ப வீக்கு பாடல்களில்...ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நானும் அனுக்காவின் முத்தத்தைப் பிடிச்சுக்கிட்டேனே!!!

ஹையோ ஸ்ரீராம் துரை அண்ணா பாருங்க ரொம்பவே ஃபீலிங்க்....தன் பொண்ணு அனுக்கா கொடுத்த பங்கு வரலைனு...(இந்த வரி அதிர்ஸின் கண்ணில் பட பட...!!!!)...துரை அண்ணே நீங்க தான் ஓடி வந்து கேச் பண்ணனும்....ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா..
காலையிலேயே
கச்சேரி
களைகட்டி விட்டது...//

அரம மகிமை.

அமாவாசை, நல்ல நாள் வேறு!!!!//

ஹா ஹா ஹா ஹா ஹா எஸ் எஸ்.....அரம மகிமையே மகிமைதான்....எபி ஒளி வீசுது!!! ஹா ஹா ஹா

//இல்லைன்னா 'நம்ம ஏரியா' வம்பாயிடும் கீதா!!!//

ஹா ஹா ஹா ஹா ஹா எஸ் எஸ் இப்படி போட்டுத்தான் "நம்ம ஏரியாவை" வளைச்சுப் போடோணும்...அரம வா கொக்கானா...விட்டுருவோமா என்னா?!!!!!

கீதாG.M Balasubramaniam said...

பிடித்த விஷயங்கள் என்றால் என்னமாய் கற்பனைபெருகுகிறது இந்தா பிடியுங்கள் ஒரு ஆசி முத்தம்

Thulasidharan V Thillaiakathu said...

நம்ம ஏரியாவுல அது அனுஷ்னு யார் சொன்னது நு கேக்கறேன்...?! அனுஷோட அம்மா படம் போட்டு அனுஷ்னு கௌ அண்ணா எல்லாரையும் ஏமாத்திட்டார் ...ஹா ஹா ஹா ஹா ...அங்க அது அனுக்கா....பார்க்கறவங்க எல்லாரும் அனுஷோட அம்மாவையே "உங்க அக்காவா" நு கேக்கறாங்களாமே!!!!! ஹா ஹா ஹா ஹா

கீதா

G.M Balasubramaniam said...

உங்களுக்குத் தெரியுமா முத்தம்கொடுக்கும் போது கண் கள் மூடிக் கொள்ளும்

Thulasidharan V Thillaiakathu said...

உதட்டினில் கொடுத்தால்
அது முத்தம்
கன்னத்தில் கொடுத்தால்
அது பளார் சத்தம்//

இதுக்கு அனுஷ் (இனி நோ அனுக்கா!!!!!!!!!) இந்த ஸ்ரீராம் என்ன சொல்றார்? உதட்டுல கொடுத்தா ...ஓகே அதே உதடு கன்னத்துல பதிச்சாலும் முத்தம்தானே....பளார்னு சத்தம் ந்றாரே" அப்படியே சத்தம் வந்தாலும் அது "ச்" அல்லோ?!!!!! கன்ஃபுயூஸ்ட்!!!! யோசிக்கறாங்களோ?!!! ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சத்தம் இல்லாமல்......// ஹையோ ஹையோ கவிதை செம செம....ரொம்பவே ரசித்தேன் ஸ்ரீராம்.....ஹையோ அதுக்கு அனுஷ் படம் சூப்பர்!!! இன்னா வெக்கம் இன்னா வெக்கம்...ஹிஹிஹிஹிஹி (அதிர்ஸ் நோட் திஸ்....இனி உங்க ஏரியா இதுக்கு மேல...ஹா ஹா ஹா)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அடுத்தது ஹையோ ஹையோ தாங்கலை ஸ்ரீராம்....சத்தம் கேட்கும்.... சித்த உள்ள வாடி!!! ஆஹா அட்டகாசம் போங்க...ரொம்ப ரசித்தேன்...மீள் பதிவு!! சரி இந்த ஜூலை 6 க்கு எதுவும் எழுதலையா ஸ்ரீராம்!! உங்களுக்கொன்னும் வயசாகலையே! (இது தேம்ஸ் பாட்டியின் கண்ணில் படக் கூடா!!! முருகா!!)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உப்பு கரிக்கும் முத்தத்திற்கு துரை அண்ணாவின் கமென்ட் செம செம ரொம்ப ரசித்தேன் துரை அண்ணா..

//அந்த டூத்பேஸ்ட்டில்
அப்பனின் வியர்வையும்!...

அதனால் தான்
அந்த உப்பின் சுவை!..//

கீதா

ராமலக்ஷ்மி said...

முகமூடி கவிதை அருமை!

நெ.த. said...

//அந்த டூத்பேஸ்ட்டில்
அப்பனின் வியர்வையும்!...//

ரசித்தேன் துரை செல்வராஜு சார்.

Thulasidharan V Thillaiakathu said...

சித்த உள்ள வாடி//

இம்மாம் பெரிய வீட்டுல தேடிப் போகவே வேண்டாம்...நிறைய ரகசிய இடங்கள் இருக்கும்!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

கீதா

நெ.த. said...

கவிதைகளை ரசித்தேன் ஶ்ரீராம்.

துளசிதரன் சார் கேட்டதால் வந்த கவிதைகளா இல்லை அனுஷ்காவுக்காக வந்த கவிதைகளா?

இனி கவிதை வருவது அனுஷ்காவின் படங்கள் கிடைப்பதைப் பொறுத்தா?

Thulasidharan V Thillaiakathu said...

வேண்டும் வேண்டும்!!! கவிதை ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம். ரொம்ப பிடிச்சுச்சு...ஒரு கட்டுரையையே வரிகளில் அடக்கிட்டீங்க! வாவ் போட்டு மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம். வேண்டும் வேண்டும் நு கொடி பிடிச்சுடலாம்! (கேரளாவா இருந்தால்!!ஹா ஹா ஹா)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இன்று முத்த மழையிலும், சத்தத்திலும் எபி அதிருது!! ஹா ஹா ஹா ஹா!!

கீதா

கோமதி அரசு said...

கவிதை மழை நன்றாக இருக்கிறது.

மரங்கள் நட்டு குளங்கள் வெட்டி
//மண்வளம் காக்க நீர்வளம் பெருக்க
மறுபடியம் ஒரு
அசோகர் பிறக்க வேண்டும்.//
வேண்டும் வேண்டும் கவிதை மிக அருமை.
மரங்கள் நட அசோகர் பிறந்து வந்தாலும் இடம் இல்லாமல் போகும் போலவே!
சாலைகள் விரிவாக்கத்தால்.

காலத்துக்கு ஏற்ற கவிதை அருமை.

நம்ம ஏரியாவில் அனுஷ்காவை அம்மாஎன்று சொல்லிவிட்டதால் அதை இல்லை என்று உறுதி செய்ய முத்தக் கவிதைகளுக்கு அனுஷ்காவின் அழகிய படங்கள் .

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைத்தையும் ரசித்தேன். மறுபடியும் ஒரு காமராஜர் தேவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

ஏகாந்தன் Aekaanthan ! said...

முத்தமெல்லாம் ஒரு பெரிய விஷயம் என்று
சத்தம் போடுகிறீர்கள் காலையில் எழுந்து !

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ ஸ்ரீராம் : ...சித்த உள்ள வாடி..//

இதுக்குத்தான் பாலகுமாரனப் படிச்சுட்டு உடனே கவிதை எழுத ஆரம்பிக்கக்கூடாதுங்கறது..!

ஸ்ரீராம். said...

நன்றி தனபாலன்.

ஸ்ரீராம். said...

ஆஹா... சத்தம் தில்லி வரை கேட்டுவிட்டதா! நன்றி வெங்கட்.

ஸ்ரீராம். said...

உங்கள் பங்கை நீங்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்துரை ஸார்!!!

ஸ்ரீராம். said...

கீதா...

// அத்தனையும் பாடல்கள் என்று...//

பின்னூட்டங்களில் அங்கு நண்பர்கள் இன்னும் சில பாடல்களைச் சொல்லி இருந்தார்கள்!

// தன் பொண்ணு அனுக்கா கொடுத்த பங்கு வரலைனு.//

ஹாஹ்...ஹாஹ் ...ஹா....!

ஸ்ரீராம். said...

கீதா..

// "நம்ம ஏரியாவை" வளைச்சுப் போடோணும்...//

பதில் சொல்லோணும்.. வளைச்சுப் போடறது இல்லை!

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்..

// இந்தா பிடியுங்கள் ஒரு ஆசி முத்தம் //

ஆஹா... நன்றி ஸார். வயதான முத்தம்.. வாகான முத்தம்!

ஸ்ரீராம். said...

ஆமாம் கீதா... கௌ அங்கிள் அங்கே அனுஷ்ஷோட அம்மா படத்தைதான் வெளியிட்டிருக்கவேண்டும்!!!

ஸ்ரீராம். said...

ஜி எம் பி ஸார்..

// உங்களுக்குத் தெரியுமா முத்தம்கொடுக்கும் போது கண் கள் மூடிக் கொள்ளும் //

யாரோட கண்கள்?

அ) கொடுக்கிறவர்.
ஆ) வாங்குபவர்.
இ) அதைப் பார்க்கிறவர்!!!

ஸ்ரீராம். said...

// இதுக்கு அனுஷ் (இனி நோ அனுக்கா!!!!!!!!!) //

ஆமாம் கீதா.. நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன்!!!!!! கன்னத்தில் கொடுப்பது இவரல்ல, அவர்!!

ஸ்ரீராம். said...

கீதா...

// சத்தம் இல்லாமல்......// ஹையோ ஹையோ கவிதை செம செம....ரொம்பவே ரசித்தேன் ஸ்ரீராம்.....ஹையோ அதுக்கு அனுஷ் படம் சூப்பர்!!! இன்னா வெக்கம் இன்னா வெக்கம்..//

ஆஹா... ரசித்ததற்கு நன்றி. பாருங்க.. அது மூன்று வருடங்கள் முன்பு எழுதியது!

// சத்தம் கேட்கும்.... சித்த உள்ள வாடி!//

இதை இங்கு பிளாக்கில் கூட அப்போவே பகிர்ந்த நினைவு. இன்னும் சில வரிகளும் தொடரும்.. எஜமான், வேலைக்காரி என்று... எடிட் செய்துவிட்டேன்!

ஸ்ரீராம். said...

நன்றி ராமலக்ஷ்மி.

ஸ்ரீராம். said...

நெல்லை...

////அந்த டூத்பேஸ்ட்டில் அப்பனின் வியர்வையும்!...// ரசித்தேன் துரை செல்வராஜு சார். //

அவர் நல்லபடியா யோசிக்கிறார். நானோ....?!!!

ஸ்ரீராம். said...

நெல்லை...

// துளசிதரன் சார் கேட்டதால் வந்த கவிதைகளா இல்லை அனுஷ்காவுக்காக வந்த கவிதைகளா?//

தேதியைப் பாருங்கள்... இதெல்லாம் மூன்று வருஷங்களுக்கு முன் எழுதியது. அப்போ கவிதைக்குத்தான் படம். படத்துக்கு அல்ல!

// கவிதைகளை ரசித்தேன் ஶ்ரீராம்.//

நன்றி.

ஸ்ரீராம். said...

// வேண்டும் வேண்டும்!!! கவிதை ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம். ரொம்ப பிடிச்சுச்சு...ஒரு கட்டுரையையே வரிகளில் அடக்கிட்டீங்க! //

நன்றி கீதா. நீங்களும் துளஸிஜியும் போதும், என்னை "ஏத்தி விட"...!! அப்புறம் இன்னும் நிறைய உளற ஆரம்பித்து விடுவேன்.. ஜாக்கிரதை!

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அக்கா...

// வேண்டும் வேண்டும் கவிதை மிக அருமை.//

நன்றி அக்கா.

// மரங்கள் நட அசோகர் பிறந்து வந்தாலும் இடம் இல்லாமல் போகும் போலவே!
சாலைகள் விரிவாக்கத்தால்.//

ஹா... ஹா... ஹா... அதானே!

ஸ்ரீராம். said...

// நம்ம ஏரியாவில் அனுஷ்காவை அம்மாஎன்று சொல்லிவிட்டதால் அதை இல்லை என்று உறுதி செய்ய முத்தக் கவிதைகளுக்கு அனுஷ்காவின் அழகிய படங்கள் . //

கோமதி அக்கா... அப்படி நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பு அல்ல. காரணம் நான் சென்ற வாரமே இவற்றைப் பகிர்கிறேன் என்று உறுதி கொடுத்திருந்தேன், இரண்டாவது இவை மூன்று வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது!!!! (நொ.சா?!!)

ஸ்ரீராம். said...

வாங்க முனைவர் ஐயா..

// மறுபடியும் ஒரு காமராஜர் தேவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. //

ஆமாம். நன்றி ஸார்.

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார்..

// முத்தமெல்லாம் ஒரு பெரிய விஷயம் என்று
சத்தம் போடுகிறீர்கள் காலையில் எழுந்து ! //

இல்லையா பின்னே? என்ன, இப்படிச் சொல்லி விட்டீர்கள்!

// இதுக்குத்தான் பாலகுமாரனப் படிச்சுட்டு உடனே கவிதை எழுத ஆரம்பிக்கக்கூடாதுங்கறது..!/

ஹா.... ஹா... ஹா...

நெ.த. said...

@ஜி.எம்.பி சார் - //உங்களுக்குத் தெரியுமா முத்தம்கொடுக்கும் போது கண் கள் மூடிக் கொள்ளும்// - இதற்குக் காரணத்தை ஆராய்ந்து சொல்லியிருக்காங்க. அதுக்குக் காரணம், 'அடுத்து என்ன செய்யலாம்' என்ற நினைப்புதானாம்.

துரை செல்வராஜூ said...

எல்லாரையும் படைத்தானே -
அவனும் கூட!...

ஸ்ரீராம். said...

நெல்லை...

// 'அடுத்து என்ன செய்யலாம்' என்ற நினைப்புதானாம். //

அடுத்து என்ன செய்யலாம்?

ஸ்ரீராம். said...

// எல்லாரையும் படைத்தானே -
அவனும் கூட!... //

இது ஆப்ஷன் ஈ யா துரை ஸார்?!!

"அத்தனை போரையும் படைத்த அந்த சிவனுக்கும் வெட்கமில்லை" என்று அதனால்தான் கவிஞர் பாடிச் சென்றாரோ!!!

Geetha Sambasivam said...

வேண்டும், வேண்டும் கவிதையும் முகமூடிக் கவிதையும் ரசித்தேன். நல்ல பொருள் உள்ள கவிதை! முத்தக் கவிதைகள், சத்தக் கவிதைகள்! தமாஷாக இருந்தது. அனுஷ்காவின் படங்களையே பார்த்துப் பார்த்து போரடிக்குது! இளமையான கதாநாயகியே யாரும் இல்லையா? தமிழ்த் திரை உலகில்? :)))))

Geetha Sambasivam said...

துரை அவர்களின் கருத்து, பற்பசை பற்றியது அருமை! இப்போ அம்பேரிக்காவில் வேப்பங்குச்சி 3 உள்ளது பத்து டாலர் என விற்கின்றனர். அமேசானில் கூடக் கிடைப்பதாகச் சொல்கின்றனர். மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட விரட்டி கூடக் கிடைப்பதாகச் சொல்கின்றனர்! எவ்வளவு உண்மைனு தெரியலை. நம் நாட்டுக் கருவேலம்பட்டைப் பல்பொடியை விடச் சிறந்தது வேறே இல்லை!(இது இப்போ எல்லோரும் வெட்டணும்னு சொல்லும் கருக மரம் இல்லை. அது வெளிநாட்டுச் சரக்கு) கருவேலமரம் நம் நாட்டுச் சரக்கு. பெரிய மரமாக நான்கு, ஐந்து பேர் கைகளால் வளைக்கும்படி இருக்கும்.

நெ.த. said...

கீசா மேடம் - //அனுஷ்காவின் படங்களையே பார்த்துப் பார்த்து போரடிக்குது! // - ஸ்ரீராமுக்கு இப்போல்லாம் பொறுமை இல்லை. மொபைல்லயே ஏதோ ஒரு படத்தை செலெக்ட் பண்ணினா இப்படித்தான் இருக்கும் (ஒருவேளை 'பாஸ்'ஐ மனதில் வைத்து இப்படி சாதாரண போட்டோ போடுகிறாரோ?). கம்ப்யூட்டரில் உட்கார்ந்து செக் பண்ணினா நிறைய நல்ல படங்கள் கிடைக்கும் (எதிர் பார்ட்டி ரசிகராக இருந்தாலும் போனால் போவுது என்று ஐடியா தர்றேன்).

ஞானி:) athira said...

என்ன இன்று ஸ்ரீராம் ஒரே குஷியாக இருக்கிறார்?:).. முகத்தை மூடி:).. ஏதோ கிடைத்து விட்டதுபோலும் ஹா ஹா ஹா:)).

//எந்த முகம் என் முகம்
என்று தெரியாமல்
சமயங்களில்
நானே குழம்பிப் போகிறேன்.//

கையில உங்கட ஒரு ஃபோட்டோ வச்சிருங்கோ:))

ஞானி:) athira said...

ஆஹா முத்தக் கிறுக்கல்கள் ஓகே...

அனுக்காவின் முத்தம் ஆருக்காகவோ?:).. இருப்பினும் அவவுக்கு இப்படிக் குளிரும்வரை பார்த்துக் கொண்டிருக்கலாமோ ஸ்ரீராம்:).. ஒரு குல்ட் குடுக்கலாமே.

ஞானி:) athira said...

@ ஏகாந்தன் அண்ணன்..

நீங்க சொன்னது பலிச்சிட்டுதூஊஊஊஊ ஹா ஹா ஹா

http://gifrific.com/wp-content/uploads/2013/03/Cat-High-Five.gif

R Muthusamy said...

முத்த தினத்தில் நல்ல கவிதைகளுடன் இந்தப் பதிவை வெளியிட்ட தங்களுக்கு அன்பு முத்தங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

// வேண்டும், வேண்டும் கவிதையும் முகமூடிக் கவிதையும் ரசித்தேன். நல்ல பொருள் உள்ள கவிதை! //

நன்றி கீதா அக்கா...! ஆளைக் காணோமே என்று பார்த்தேன்.

// இளமையான கதாநாயகியே யாரும் இல்லையா? //

இளமையை விடுங்கள்... அழியக்கூடியது! அழகான என்று சொல்லுங்கள். நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்!!!

துரை ஸாரின் வரிச்சேர்க்கையை நானும் மிக ரசித்தேன்.

ஸ்ரீராம். said...

நெ.த

// ஸ்ரீராமுக்கு இப்போல்லாம் பொறுமை இல்லை. மொபைல்லயே ஏதோ ஒரு படத்தை செலெக்ட் பண்ணினா இப்படித்தான் இருக்கும்//

பொறாமை!

ஸ்ரீராம். said...

அதிரா..

குஷி இன்று இல்லை.. ஜூலை ஆறாம் தேதி...!

// கையில உங்கட ஒரு ஃபோட்டோ வச்சிருங்கோ:)) //

கஜினி சூர்யா ஆக்கிட்டீங்களே..!

ஸ்ரீராம். said...

அதிரா..

// இருப்பினும் அவவுக்கு இப்படிக் குளிரும்வரை பார்த்துக் கொண்டிருக்கலாமோ ஸ்ரீராம்:).. ஒரு குல்ட் குடுக்கலாமே. //

இதோ... இதோ கிளம்பி விட்டேன்! ஆமாம், குல்ட்னா என்ன? போர்வையா?

ஸ்ரீராம். said...

//ஏகாந்தன் அண்ணன்.. நீங்க சொன்னது பலிச்சிட்டுதூஊஊஊஊ ஹா ஹா ஹா //

என் கணினியில் பூனை ரொம்ப ஸ்லோ மோஷனில் ஹைஃபைவ் செய்கிறதே... என் கணினியில் மட்டுமா?

G.M Balasubramaniam said...

ஆஹா... நன்றி ஸார். வயதான முத்தம்.. வாகான முத்தம்! .ஆனால் நெற்றியில்விழும் சத்தமில்லாதமுத்தம்

ராஜி said...

இன்னுமா கிஸ் டே தொடருது?!

revathi narasimhan said...

முத்தத்திற்கு ஒரு நாள்.
குழந்தை முத்தம், அம்மா முத்தம் , பாட்டியின் சுருங்கிய கன்னங்களில் ஈஷிய முத்தம்
வயதான கணவரின் மனைவியின் தொடாத முத்தம் அனைத்தும் பெருகட்டும்.

அன்பைக் காட்டும் அணைத்தலும் முத்தமும் வாழ்க.
ஸ்ரீராம் உங்கள் கவிதைகள் ரசனை.

Asokan Kuppusamy said...

அடடா தெரியாமல் போச்சே நானும் ஒரு முத்த கவிதை வ(ரிந்ரைந்து வைத்திருக்கிறேன். வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பேனே முத்தத்தை..குழந்தைகளிடமும்..தாயிடமும் பெறுவது மிகவும் இனிமையானது

Thulasidharan V Thillaiakathu said...

// ஸ்ரீராமுக்கு இப்போல்லாம் பொறுமை இல்லை. மொபைல்லயே ஏதோ ஒரு படத்தை செலெக்ட் பண்ணினா இப்படித்தான் இருக்கும்//

பொறாமை!//

யெஸ் யெஸ் ஸ்ரீராம் அதே அதே!! ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சென்னையில் மழை என்று கேள்விப்பட்டேன். இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது மழை என்று சொல்லப்பட்டது அது முத்த மழை என்று!!

கவிதைகள் நான் கேட்டேன் என்று இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி!

கவிதைகள் அத்தனையும் அருமை. முகமூடி கவிதை அருமை. ஆமாம் அதன் அர்த்தங்கள் அழகா சொல்லியிருக்கின்றீர்கள்.

அந்த மூன்று கேப்பியா வுக்கும் மூன்று கேட்பேன் கோர்ட்டில் மூன்று முறை சொல்லுவது போல் சொல்லிக் கொள்கிறேன்!

முத்த நாளுக்கான பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள்.

கன்னத்தில் கொடுத்தால் பளார் சத்தமா! முத்தத்திற்கிடையில் இப்படியுமா ஸ்ரீராம்ஜி! பாவம் தான் பெறுபவர்.

மொத்தமாகத் தர யுத்த நிவாரணமா//

அருமை அருமை! மிகவும் ரசித்தேன். அதானே இன்ஸ்டால்மென்ட் தான் அதுவும் ரகசிய இன்ஸ்டால்மென்ட்! ஜூலை 6 முத்த நாள் என்பதற்காக அன்றே எல்லாமுத்தங்களையும் கொடுத்துவிடமுடியுமா! மற்ற நாட்கள் கன்னமும் உதடும் வறண்டு போய்விடுமே?!

மெத்தை காத்திருக்கு
சித்த உள்ள வாடி//

ஸ்ரீராம்ஜி! அசத்திவிட்டீர்கள். இந்தக் கவிதையை ரொம்பவே ரசித்தேன். வீடும் அதற்கு ஏற்றாற் போல். மற்ற முத்தக் கவிதைகளுக்கு ஏற்றமாதிரி அழகான படங்கள்!

உப்பு கரிக்கும் டூத் பேஸ்ட் முத்தமும் அட போட வைக்கிறது. எப்படி இப்படி எல்லாம் கற்பனை விரிகிறது!

வேண்டும் வேண்டும்// தலைப்பைப் பார்த்ததும் எங்கள் ஊர் நினைவுக்கு வந்தது. இங்கு அடிக்கடி கொடி பிடிப்பார்களே.

இந்தக் கவிதை அருமையோ அருமை! கருத்துள்ள கற்பனையில் விரிந்த கவிதை. எல்லோர் மனதையும் பிரதிபலிக்கும் கவிதை. மிக மிக ரசித்தேன்.

வாசித்து விட்டு மீண்டும் பார்த்த போது துரை செல்வராஜு ஐயாவின் அந்த உப்பு கரிக்கும் முத்தத்திற்கான கருத்தைப் பார்க்க நேர்ந்தது. ரொம்ப அருமையான கருத்து ஐயா. உங்கள் பார்வை வித்தியாசமாக டக்கென்று உங்களுக்கு உதித்திருக்கிறது அழகான கருத்து. யாருமே சிந்திக்காத வித்தியாசமான கருத்து.

இன்று எங்கள் ப்ளாக் வாசகர்கள் அனைவரையும் முத்த மழையில் நனைய வைத்துவிட்டீர்கள்.

துளசிதரன்ஜீவி said...

முத்தத்தில் நின்னு.. கவிதை டாப்!

முத்தம் என்றால் நிலைக்களம்
முகம் தான் என்று நினைப்பவர்கள்
சிறுகுழந்தைகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!