செவ்வாய், 15 செப்டம்பர், 2009

வெற்றி வெற்றி - மாபெரும் வெற்றி!

வெற்றி வெற்றி - மாபெரும் வெற்றி - இலங்கையிலே!
நாமும் வாழ்த்துகிறோம் - தோணி கரைசேர்ந்துவிட்டார்!
புகைப் படக்காரரை அடித்தவரையும் பாராட்டுகிறோம் --
விக்கெட்டுகள் கணக்கை - நேற்று ஆரம்பித்துவைத்தவரே அவர்தான்!
நாம் தோனியை - வெற்றி வெற்றி என்று கொண்டாடினாலும் -
இந்தியாவில் ஒருவர் மட்டும் - தோனியை தோ(ல்வி) நீ என்று சொல்லிக்கொண்டே 
இருக்கிறார் ! அவர், ஒரு கல்லூரி முதல்வர் - St Xavier College - Ranchi - Jharkand!

7 கருத்துகள்:

  1. விளையாட்டை பரிக்ஷையாக பாவித்து வெற்றி பெறும் தோனி, பரிக்ஷையை விளையாட்டாக எண்ணாது/எண்ணி வெற்றி பெற வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம்!

    பதிலளிநீக்கு
  2. ஒரு கலை அல்லது விளையாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கும் காரணத்தால் ஒருவருக்கு மற்ற எல்லாவற்றிலும் கூடுதல் அறிவு இருக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த வகையில் நியாயம்? பஜ்ஜியின் பந்து வீச்சு, பேட்டிங் பீல்டிங், மிஞ்சிப் போனால் அவருடைய ஹம்மர் இவை தவிர வேறு எது பற்றியும் எமக்குக் கவலை இல்லை

    பதிலளிநீக்கு
  3. And to Dravid too for being with 10 till he could compile his 100.

    பதிலளிநீக்கு
  4. கிரிக்கெட்டுக்கு மட்டும் இவ்வளவு கூட்டம் கூடுகிறதே, இப்படி பணம் மழையாகக் கொட்டுகிறதே என்று மற்ற விளையாட்டு ரசிகர்கள், வீரர்கள், பொது விமர்சகர்கள் அங்கலாய்ப்பது வழக்கம். கிரிக்கெட்டின் ஒவ்வொரு ஐந்து வினாடியும் ஒரு த்ரில்லை உள்ளடக்கி இருக்கிறது. வேறு எந்த விளையாட்டிலும் இந்த அளவு எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் இருப்பதில்லை. அப்புறம் இந்த ரெகார்டுகள்! எவ்வளவு வித விதமான ரெகார்டுகள்! கிரிக்கெட் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்திருப்பது எளிதில் புரிகிறது.
    ஆனால் இரண்டு மாட்சுகளில் அற்ப எண்ணிக்கைக்கு அவுட்டாகும் ஆட்டக்காரரை திட்டித்தீர்க்கும் ரசிகர் கோபம் ரசிக்கத் தக்கது. துரதிருஷ்டம் பீடித்த அந்த நபர் மீண்டும் ஒரு ஐம்பது அடித்து விட்டால் பீடத்தில் ஏற்றி தீப ஆராதனை காட்ட ரசிகமகாபக்தர் கூட்டம் தயார்.
    ஆனாலும் கிரிக்கெட்டில் கோடீஸ்வரர்களாகவும், இதர விளையாட்டுகளில் மசால் தோசைக்கு ஏங்குபவர்களாகவும் வீரர்கள் இருப்பது சஞ்சலம் தரும் விஷயம்தான்.
    மாடிவீட்டுக்காரனைப் பார்த்து மண்குடிசை ஏங்குவது சகஜம்தானே.
    கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரியங்கள் தம் சொத்துக்களில் ஒரு இருபது சதவிகிதத்தை இதர விளையாட்டு வசதிகளுக்கும் வீரர்களுக்கும் உதவினால் நன்றாக இருக்கும். மணியும் இருக்கிறது, பூனையும் இருக்கிறது. கயிறு இதோ. கட்டுவார்தான் காணோம்.

    பதிலளிநீக்கு
  5. கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தில் மற்ற ஆட்டங்களை ஊக்குவிக்க வேண்டுமா?
    குட்டி அரசியல் கட்சிகள் போல ஆட்டங்களும் பெருகிவிடும். பொய்க்கால் குதிரை, மூணு சீட்டு, நாடா குத்தல் போன்ற ஆட்டங்களுக்குக் கூட ஒரு வாரியம், அதற்கு நடக்க முடியாத தலைவர் இப்படி பெருகுமே தவிர உருப்படியாக ... ஊம் -ஹூம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!