செவ்வாய், 15 டிசம்பர், 2009

வலையாபதி பதில் அளிக்கிறார்!

அப்பப்போ வலையாபதியிடம் சில கேள்விகள், அலை, வலை, தொலைபேசியில் கேட்போம். அவர் சொல்லும் பதில்கள் சுவாரஸ்யமாக இருக்கும். வலையாபதிக்குத் தெரியாத விஷயங்களே கிடையாதோ என்று எங்கள் ஆசிரியர் குழுவுக்கு வியப்பாக இருக்கும். (சில டயத்துல பீலாவும் தாராளமாக விடுவார்.) இதோ இங்கே சில கேள்விகள், பதில்கள்.
எ கே : சமீபத்தில் வாய்விட்டுச் சிரித்தது எப்போது?
வ ப : இரண்டு மூணு நாளா நான் இதயம் பேத்துகிறது என்கிற வலைப்பதிவில், ஒரு பயணக் கட்டுரை படித்துவருகின்றேன். அதில் இயல்பாக உள்ள சில ஜோக்குகள் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தன.  (click here)
எ கே : தெலுங்கானா பிரிவினை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?
வ ப : இதி ஏமினும் பாக லேது - நேனு வேற ஒகட்டினும் சொப்பிந்துகு லேது.
எ. கே : அதையே தமிழ்ல சொல்லுங்க.
வ ப : 'அதையே தமிழ்ல'
எ கே : அட அதைச் சொல்லலீங்க!
வ ப : அதைத்தான் சொன்னேன் நான்; சொல்லலை அப்பிடீங்கறீஙகளே!
எ கே : நீங்க தெலுங்குல சொன்னத அப்பிடியே தமிழ்ல சொல்லுங்க.
வ ப : நீங்க தெலுங்குல சொன்னத அப்பிடியே தமிழ்ல.
எங்கள் : யோவ் வலை - அலையில, தொலையில எல்லாம் இப்பிடித்தான் வம்படிப்பே. நீ இப்போ எங்கே அலைஞ்சுகிட்டு இருந்தாலும் ஒரு நாள் இந்தப் பக்கம் வருவே இல்லே, அப்போ செய்யறேன் உன்னைக் கொலை!

4 கருத்துகள்:

  1. அட்டெண்டன்ஸ் போட்டாச்சு (ஓட்டும்தான்)

    பதிலளிநீக்கு
  2. // யோவ் வலை - அலையில, தொலையில எல்லாம் இப்பிடித்தான் வம்படிப்பே. நீ இப்போ எங்கே அலைஞ்சுகிட்டு இருந்தாலும் ஒரு நாள் இந்தப் பக்கம் வருவே இல்லே, அப்போ செய்யறேன் உன்னைக் கொலை!
    //

    அவ்வ்வ்வ்வ்வ் டீஆரு வசனம் தோத்தது...

    பதிலளிநீக்கு
  3. ரெண்டு கேள்வி கேட்டதுக்கே வலையாபதி வடிவேல் ஆயிட்டாரே..

    பதிலளிநீக்கு
  4. அண்ணாமலையான், பிரியமுடன் வசந்த், புலவன் புலிகேசி - எங்கள் வலையாபதி எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் படத்தை விரைவில் வெளியிடுகிறோம்; அந்த அடையாளங்களுடன் உங்க ஊருப் பக்கம் யாரையாவது பார்த்தால் - எங்களுக்குத் தெரிவிக்கவும். உங்க ஊர்ல மழை குளிர் எல்லாம் எப்பிடி இருக்கு?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!