வியாழன், 24 டிசம்பர், 2009

விவேகம் + ஆனந்தம் (அ) கேட்டதும் கிடைத்ததும்'

$$$

When I asked god for strength
He gave me difficult situations to face

When I asked God for brain and brawn
He gave me puzzles to solve

When I asked God for happiness
He showed me some unhappy people

When I asked God for wealth
He showed me how to work hard

When I asked God for favours
He showed me opportunities to work hard

When I asked God for peace
He showed me how to help others

God gave me nothing I wanted
He gave me everything I needed.

***************************

எனக்குச் சில வரங்களை நான்
இறைவனிடம் கேட்டேன் -

எது ஒன்றும் தரவில்லை - வேறு
'இவை உனக்கு' என்றான் -

'வலிமையைத் தா !' வென்று கேட்டதற்கு
'இன்னல்கள் இவை, ஏற்க !' என்று தந்தான்.

'அறிவாற்றல் கொடு' என்று அழுத்திக் கேட்டேன்
'அறியாத புதிர்கள் பல.... விடுவி' என்றான்.

'சந்தோஷம் தா !' என மெல்லக் கேட்டேன்
'சஞ்சலத்து மக்கள் இவர், நீ பார் !' என்றான்.

'நிதிக் குவியல் நிறையத் தா ' தயங்கிக் கேட்டேன்.
நெற்றியின் வியர்வை விழ உழை நீ' என்றான்.

'நல்வளங்கள் பல வேண்டும், அவை தா !' என்றேன்
கடினமாய் உழைப்பதற்குக் காட்டித் தந்தான்.-

'அமைதி மனமேனும் நீ தாயேன்' என்றேன்
'அடித்தட்டில் இவர்கள் பார் ! உதவு' என்றான் -

நான் கேட்டவற்றில் எதையும் அவன் தந்தானில்லை - நான்
கேளாத தேவை பல, எல்லாம் தந்தான்!

14 கருத்துகள்:

  1. //நான் கேட்டவற்றில் எதையும் அவன் தந்தானில்லை - நான்
    கேளாத தேவை பல, எல்லாம் தந்தான்!
    //

    அது..,

    பதிலளிநீக்கு
  2. //நான் கேட்டவற்றில் எதையும் அவன் தந்தானில்லை - நான்
    கேளாத தேவை பல, எல்லாம் தந்தான்!
    //

    அது..,

    இதுவும்தான்!

    பதிலளிநீக்கு
  3. கேட்டதெல்லாம் சரிதான்!அதிலொன்றும் பிழையில்லை
    கேட்டதுகிடைத்துவிட்டால் அதைப் பாதுகாத்துக் கொள்ளும்
    வித்தை தெரியும்வரை கிடைத்தும்பயனில்லை!
    முத்துக்கள் கிடைப்பதற்கு மூழ்கத் தெரிந்தால்தான்
    முத்தும் வரும்! காத்திருக்கும் பொறுமை வரும்!
    அதைத்தான் பெரியோர்கள் சொல்லிவைத்தார்
    வேண்டத்தக்கது அறிவோய் நீ-வேண்டுவ முழுதும்
    தருவோய் நீ! கிடைத்ததே பேரருள்தான்!

    பதிலளிநீக்கு
  4. Excellent Post.

    மிகச் சிறந்த பதிவு.

    (மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ஆங்கிலத்திலயும் தமிழ்லயும் எழுதினா, பின்னூட்டமும் அப்படித்தான் போடுவேன்.)

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராமலக்ஷ்மி

    நன்றி டாக்டர்,

    நன்றி அனானி,

    பதிலளிநீக்கு
  6. அருமையாகச் சொன்னீர்கள் கிருஷ் சார்,
    உங்கள் பதிலை அவர் வெகுவாக ரசித்தார்.

    சிரிக்க வைத்து விட்டீர்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை,
    அப்படியில்லை...ஆங்கிலத்தில் உள்ள அந்தக் கவிதையை தமிழில் அவர் சொல்லிப் பார்த்தார்

    பதிலளிநீக்கு
  7. கடவுளை நம்பி ஒரு பயனுமில்லை; அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. //அப்பாதுரை...
    கடவுளை நம்பி ஒரு பயனுமில்லை; அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

    அப்பா...அப்பிடியில்ல.கடவுள் கேட்டதற்கெல்லாம் வழிகாட்டியியிருக்கிறார்.
    இனி முயற்சி எங்கள் கையில்.

    பதிலளிநீக்கு
  9. ஓரளவு இது சம்பந்தமானது என நான் நினைக்கும் கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகள் :

    பிறப்பெனில் யாதென கேட்டேன் பிறந்து பார் என இறைவன் பணித்தான்

    இறப்பெனில் யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான்

    வாழ்வெனில் யாதென கேட்டேன் வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்

    அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில் ஆண்டவன் நீ எதற்கு என்றேன்

    ஆண்டவன் அருகில் வந்து அனுபவமே நான்தான் என்றான்

    பதிலளிநீக்கு
  10. //முத்துக்கள் கிடைப்பதற்கு மூழ்கத் தெரிந்தால்தான்
    முத்தும் வரும்//

    மிகவும் கஷ்டமும் நஷ்டமும் பட்டு சேகரித்த முத்துதான் உயர்வு என்றால் நீங்கள் சொல்வது சரி.
    ஆனால் பண்ணையில் முத்து வளர்க்கும் பொழுது நீரில் முழுகவும் வேண்டாம், மூச்சை அடக்கவும் வேண்டாம். ஒரே மாதிரி தரத்தில் நிறைய கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அனானிக்குத் தெரிந்தது அது தானா? அவ்வளவுதானா?
    பண்ணை வைக்கவும் பக்குவம் வேண்டும்
    முத்தை வளர்க்கிற வித்தையும் வேண்டும்
    வாய்ப்பந்தல் மட்டும் போதுமென்றால்
    முத்துக்கள் எச்சலில் தெறிக்கும் நீரில்தான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!