வியாழன், 16 செப்டம்பர், 2010

யார் அடிச்சாரோ?

பெங்களூரில் சில இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றில், வண்டியின் பதிவு எண் - விவரங்கள் முழுவதுமே கன்னடத்தில் பார்ப்பதுண்டு. தமிழ்நாட்டிலும், இதே போன்று எல்லாமே தமிழில் ஒரு சிலர் எழுதி இருக்கிறார்கள். வட மாநிலங்களில், இந்தி எழுத்துகள், இந்தி எண்கள் பார்த்த ஞாபகம் உள்ளது. 

ஒரு வண்டிக்கு பதிவு எண் என்பது எதற்காக? 

எனக்குத் தெரிந்தவரையிலும், ஒரு வண்டி விபத்தில் சிக்கினால், அல்லது விபத்து ஏற்படுத்தினால், அந்த வண்டியின் சொந்தக்காரரை அல்லது ஓட்டுனரை அடையாளம் காண இந்த எண் இன்றியமையாதது. காப்பீடு சம்பந்தப்பட்ட வழக்கு, வியாஜ்யங்களில் கூட, இந்த பதிவு எண், மிகவும் முக்கியமானது. கோர்ட்டில் விசாரணையின்பொழுது சாட்சிகளிடம் வண்டி எண் பற்றி கேள்விகள் கேட்கப்படும். 

இவ்வளவு முக்கியமான பதிவு எண் பற்றி, மத்திய மோட்டார் வாகன சட்டம் எண் 51 (Central Motor Vehicle Rule 51) சொல்வது என்ன தெரியுமா? 
சட்டம் எண் 51 (பகுதி) பதிவு எண் பலகையில், உள்ள எழுத்துகள் எல்லாம் ஆங்கிலத்திலும், எண்கள் அனைத்தும், அராபிய எண் உருவாக (1,2,3,4,5,6,7,8,9,0) இருக்க வேண்டும். 

சட்டம் எண் 50 : இந்த விதியை எந்த வகையிலாவது மீறுபவர்கள், ரூபாய் நூறு அபராதம் செலுத்தவேண்டும். 

அப்போ, ஒருமுறை அபராதம் செலுத்திவிட்டால், தொடர்ந்து அந்த சட்டத்திற்குப் புறம்பான பதிவு எண் பலகையை வைத்திருக்கலாமா? அல்லது அந்தப் பதிவு எண்ணைப் பார்க்கும் பொழுதெல்லாம் டிராபிக் போலீஸ்காரர்  (சார் - கோர்ட்டுக்கு வந்தால் நூறு ரூபாய் அபராதம்; இங்கேயே - ஐம்பது கொடுத்தால்....) பையை நிரப்பிக் கொள்ளலாமா? 

இதைப் படிக்கும் பொதுமக்கள், தங்கள் செல் காமிராவால், சட்டத்திற்குப் புறம்பான பதிவு எண் கொண்ட வாகனங்களை, படமெடுத்து, அந்தந்த மாநில டிராபிக் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி, விதி மீறல்களை சரி செய்ய சொல்லிக் கேட்டுக் கொள்ளமுடியுமா? 

(இதை நான் எழுதும் பொழுது, வாசலில், ಕೆ ಯೆ ೦೧ ಎಂ ಯೆ ೯೦೮೬ வண்டி ஓட்டுனர் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். முஜே பச்சாவ் !!)

28 கருத்துகள்:

  1. நீங்க யார் அடிச்சாரோ அப்படின்னு கேட்கறது.. போலிஸ் 'அடிச்ச' காசை இல்லையே...

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  2. Nice post... Hope they bring some awareness and people respect it

    //முஜே பச்சாவ்//
    Is that the name of the scooter person? ha ha ha

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமா யோசிச்சா மட்டும் போதாது.. அது பலருக்கும் பயனுள்ளதா இருக்கணும்.. இந்த பதிவு மாதிரி..
    வெல்-டன் 'எங்கள்'

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு

    பல வாகனங்களில் தமிழ் பற்றை காண்பிப்பதுபோல் தமிழில் எங்களை எழுதிவிடுகிறார்கள்.

    இது தவிர்க்க வேண்டிய ஒன்று

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. யார் அடிச்சாரோன்னு போட்டிருந்தீங்க.சரி...இரவுக்குத் தாலாட்டாக்கும்ன்னு நினச்சேன்.
    அக்கறையான பதிவுதான்.

    பதிலளிநீக்கு
  6. அப்போ, ஒருமுறை அபராதம் செலுத்திவிட்டால், தொடர்ந்து அந்த சட்டத்திற்குப் புறம்பான பதிவு எண் பலகையை வைத்திருக்கலாமா? அல்லது அந்தப் பதிவு எண்ணைப் பார்க்கும் பொழுதெல்லாம் டிராபிக் போலீஸ்காரர் (சார் - கோர்ட்டுக்கு வந்தால் நூறு ரூபாய் அபராதம்; இங்கேயே - ஐம்பது கொடுத்தால்....) பையை நிரப்பிக் கொள்ளலாமா?


    ......இப்படி கேள்வி மேல கேள்வி கேக்குறீங்களே!

    பதிலளிநீக்கு
  7. பெருசா தாயை வணங்குன்னு எழுதி கடுகு சைஸ்ல லைசன்ஸ் நம்பர்தான் ஃபேஷன் இப்போ

    பதிலளிநீக்கு
  8. இதெல்லாம்...வெறும் பேச்சுக்கு தமிழை வளர்த்தறேன்னு சொல்லி மார் தட்டுறவங்ககிட்ட சொல்ல முடியாது பிரதர்ஸ். நாம் இப்படி கரிசனப்பட்டுகிட்டாதேன் உண்டு.

    பதிலளிநீக்கு
  9. தமிழ்நாட்டில் தமிழில் எண் எழுதக் koodathaa

    பதிலளிநீக்கு
  10. நல்ல நல்ல கேள்விகளோட ஒரு ஆக்கப்பூர்வமான பதிவு. ட்ராபிக் கான்ஸ்டபிள்க்கே இந்த விஷயங்கள் தெரியுமோ என்னவோ.

    பதிலளிநீக்கு
  11. தமிழில் எண்ணை எழுதுவது ஒரு முரட்டு மொழிப் பற்றைத்தான் காட்டுமே ஒழிய என்ன காரணத்துக்காக எழுதப்படுகிறதோ அது பிரயோஜனப்படாது என்பதுதான் என் கருத்தும்.

    மொழிப்பற்றைக் காட்ட வேறு நல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன.

    அதுசரி, ஒருதரம் நம்மூரில் ஆங்கிலத்திலேயே பேசும் டைரக்டர் ஒருவர்(ஹி.. ஹி.. பேர் வேண்டாங்கோ!) அமெரிக்காவில் (பெரும்பாலும் அமெரிக்கர்களே இருந்த ஒரு அமைப்பில்) தமிழில் பேசியதாக பத்திரிகையில் படித்தேன்.

    இது எந்த ரக மொழிப்பற்று?

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  12. "யார் இடிச்சாரோ" என்பது மேலும் பொருத்தமான தலைப்பு? RTO office-ல் எல்லோருக்கும் ஒரே அளவில் ஒரே font-இல் அடித்துக் கொடுத்தால் இதை சரி பண்ணலாம். ( அமெரிக்காவில் அப்படித்தான்?)

    பதிலளிநீக்கு
  13. I remember Vivek's comedy in Samy movie with multiple name plates ??

    I have used my brother's scooter in Bangalore which had TN registration.

    I used to ride from Bangalore East (Tamil dominated) to South Bangalore (Bull Temple Road)

    The worst is when Cauvery Water problem issue trouble happens, I have to cover up the registration board as "For Regn" on a aging vehicle to avoid bash up !!

    பதிலளிநீக்கு
  14. United States of India என்று இந்தியாவின் பெயரை மாற்றணும்னு யாரோ அரசியல்வாதி அறிக்கை விட்டதா யாகூவில வந்துச்சே? நம்பர் ப்ளேட் விவகாரமா?

    பதிலளிநீக்கு
  15. ஆர வி எஸ் சார் போலீஸ் அடிச்ச காசை சொல்வதாக இருந்தால் 'எவ்வளவு அடிச்சாரோ?' என்று அல்லவா சொல்லி இருப்போம்!

    பதிலளிநீக்கு
  16. அ த ! என்ன முஜே பச்சாவ் என்பது ஸ்கூட்டர் ஆளின் பெயரா? உங்களுக்கும், எங்களைப் போல சௌராஷ்டிர பாஷை தெரியாது போலிருக்கு!

    பதிலளிநீக்கு
  17. நன்றி மாதவன், விஜய், ஹேமா. தமிழ் உதயம், ஜவஹர். சாய்.

    பதிலளிநீக்கு
  18. மற்றவர்களுக்கு, கமெண்டுகள் தயார் ஆகிக் கொண்டிருக்கின்றன. வெயிட் எ மினிட் ஃபார் ...... மினிட்ஸ்.

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் சித்ரா, சட்டத்திற்குப் புறம்பான பதிவுப் பலகை பொருத்தி இருப்பவர்களை, சட்டையைப் பிடித்து சட சட என்று கேள்வி கேட்க ஆசை. குறைந்தபட்சம் பதிவிலாவது பிடி பிடி என்று பிடித்ததில் ஒரு திருப்தி.

    பதிலளிநீக்கு
  20. // வானம்பாடிகள் said...
    பெருசா தாயை வணங்குன்னு எழுதி கடுகு சைஸ்ல லைசன்ஸ் நம்பர்தான் ஃபேஷன் இப்போ//
    வானம்பாடிகள் சார். கடுகு சைஸ்ல எழுத்துகள், எண்கள் - அதுவும் சட்டப்படி சரி இல்லைதான். சட்டம் எண் ஐம்பத்து ஒன்றில், எழுத்து, எண் அளவுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  21. // அன்னு said...
    இதெல்லாம்...வெறும் பேச்சுக்கு தமிழை வளர்த்தறேன்னு சொல்லி மார் தட்டுறவங்ககிட்ட சொல்ல முடியாது பிரதர்ஸ். நாம் இப்படி கரிசனப்பட்டுகிட்டாதேன் உண்டு.//

    நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான். ஆனால், சட்டப்படி தவறு என்று தெரிந்தால், அதற்கு அபராதம் செலுத்தவேண்டி வந்தால், இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம கொஞ்சம் குறையலாமே!

    பதிலளிநீக்கு
  22. குரோம்பேட்டைக் குறும்பன்18 செப்டம்பர், 2010 அன்று AM 11:39

    // LK said...
    தமிழ்நாட்டில் தமிழில் எண் எழுதக் koodathaa//

    அது சரி. நான் கூட என்னுடைய கணக்கு பரிட்சையில்,
    ௨௩ x ௩௬ = ௮௨௮
    என்று எழுதி இருந்தேன். அதைப் பார்த்த கணித ஆசிரியர், நான் அவரை 'சின்னி ஜெயந்த் பாஷை'யில் கிண்டல் செய்வதாக எண்ணி, என் தலையில் வைத்த குட்டு இன்னமும் வலிக்கின்றது. (இங்கே இருக்கின்ற கணக்கை, அராபிய எண் வடிவத்தில் சொல்வதற்கு - தமிழ்ப் பதிவு எண் பலகை கொண்ட வண்டி சொந்தக்காரர் யாராலாவது முடியுமா?)

    பதிலளிநீக்கு
  23. எல் கே க்கு நாங்க பதில் சொல்வதற்குள் கு கு சொல்லிவிட்டார்.
    எல் கே சார் - இன்று நாற்பது வயதுக்கு மேலே இருப்பவர்கள் யாராக இருந்தாலும், பெருக்கல் கணக்கு ஒன்று கொடுத்து, அவர்களை வாய் விட்டு சொல்லியபடி அந்தக் கணக்கைப் போடச் சொன்னால், வாய்ப்பாடு சொல்பவர்கள், தங்கள் தாய்மொழியில்தான் சொல்லுவார்களாம். என்னுடைய அலுவலகத்தில், இந்த நுட்பத்தைப் பயன் படுத்தி பலருடைய தாய்மொழியைக் கண்டு பிடித்த பெருமை என் நண்பர்கள் சிலருக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  24. மோ சி பாலன் சார். நீங்க சொல்லிருப்பது நல்ல யோசனைதான். ஆனால் நம்ம ஊரில் எல்லாம் ஆர டி ஓ அலுவலகத்திற்கும் - பதிவு எண் எழுதுகின்ற கலைஞர்கள் இருப்பிடத்திற்கும் தூரம் அதிகம். இரண்டு பேர்களுக்கும் டேஸ்டும் அலாதியானது, வித்தியாசமானது.
    ஆர டி ஓவில் ஆளைப பார்க்காமல், வண்டியைக் காட்டாமல் என்ன சான்றிதழ் வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். அவர்களுக்கு சட்டம் தெரியும்; போருட்படுத்தமாட்டார்கள். போர்டு எழுதுபவர், நம்ம டேஸ்டுக்கு, எதை, எப்படி வேண்டுமானாலும் எழுதித் தந்துவிடுவார். அவருக்கு சட்டம் தெரியாது. அதனால் நஷ்டமும் இல்லை!

    பதிலளிநீக்கு
  25. KU KU your maths teacher did right
    Check your sum and answer: two odd numbers multiplied cannot have an even number at the end.

    பதிலளிநீக்கு
  26. குரோம்பேட்டைக் குறும்பன்19 செப்டம்பர், 2010 அன்று AM 6:48

    அய்யே அனானி -
    பெருக்கல் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு எண்களும் ஒற்றைப்படை எண்கள் இல்லை. ஒன்று ஒற்றைப்படை, மற்றது இரட்டைப்படை. உங்க வண்டியில சட்டத்துக்குப் புறம்பான எண் பலகை இருந்தால், அதை சட்டபூர்வ எண்களாக மாற்றிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!