வெள்ளி, 1 ஏப்ரல், 2011

எலெக்ட்ரானிக் சாமியார் இருப்பிடம்.

                 
கே டி ஆர் தொலைபேசியில் அழைத்து, 'ஏன் சார் இவ்வளவு அவசரமா அவரைப் பற்றி பதிவு எழுதினீர்கள்?' கிரிக்கட் ஃபைனல் நடந்த பிறகு போட்டிருக்கக் கூடாதா? '

கே டி ஆர் மேலும் கூறுகையில், 'இன்று காலை அவரிடமிருந்து ஃபோன் வந்தது. பயந்த படியே அவரைப் பார்க்கச் சென்றேன். நான் போய்ச் சேர்வதற்கும், அவர் மும்பை கிரிக்கட் மாட்ச் பார்ப்பதற்காக, ஏர்போர்ட் செல்ல, காரில் ஏறுவதற்கும் சரியாக இருந்தது. இந்தப் பன்னிரண்டு நாட்களுக்குள் அவருடைய இருப்பிடத்தில் சிறிய மாற்றங்கள் - ஒன்று: 'பாலாஜி கேட்டரர்ஸ்' என்னும் போர்டைக் காணோம். (பெரிய, புதிய போர்டுக்காக ஆர்டர் கொடுத்திருப்பதாக எ. சா  சொன்னார்.) இரண்டு: குடிசை மேற்பகுதி, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் ஆக மாறியுள்ளது.'

நான் குறுக்கிட்டு "ரிசல்ட் அவருக்குத் தெரியும் என்றால் ......."

கே டி ஆர் தொடர்ந்தார். 'அவர் ஏன் மாட்ச பார்க்கப் போகவேண்டும்? என்றுதானே கேட்க வந்தீர்கள்? நான் அதை சற்று பூடகமாகக் கேட்டேன். '

அதற்கு அவர், "ரிசல்டை ஞான திருஷ்டியில் பார்க்கலாம்; ஆனால் பூனம் பாண்டேயை ஞான திருஷ்டியில் பார்க்க முடியாது என்று அப்பாதுரையிடம் சொல்லுங்கள்." என்று சிரித்தவாறே சொல்லி, கார் ஏறிப் போய்விட்டார்.

கே டி ஆர் கேட்டார்: "யார் சார் அப்பாதுரை?" (கே டி ஆர் எங்கள் ப்ளாக் பின்னூட்டங்கள் படிப்பதில்லை - அல்லது எங்கள் ப்ளாக் இ-மெயிலில் மட்டும் படித்து வருபவர் போலிருக்கு!)

(சாமியார் காரில் ஏறி உட்கார்ந்து, டிரைவருக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த சில வினாடிகளில், நைசாக அவருடைய இருப்பிடத்தையும், காரின் முன் பகுதியையும் செல் காமிராவால் படம் எடுத்துவிட்டாராம் கே டி ஆர். அந்தப் படத்தை எங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் இதை வெளியிடவேண்டாம் என்று சொன்னார். நாங்க அதை கீழே வெளியிடவில்லை. நீங்க அதைப் பார்க்கவில்லை. ) 

  

6 கருத்துகள்:

  1. ஒண்ணுமே புரியல. நா நேத்து சரியான விடை சொல்லிட்டதா நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இதான் குடிசையா? எல்லாம் வினாயக க்ருபை!

    கடைசியில் பூநம் கி ராத்தாயிடுச்சா? நீங்க மட்டும் எலக்சன்ல நின்னீங்க..

    பதிலளிநீக்கு
  3. துப்பறியும் சூயிங்கம்1 ஏப்ரல், 2011 அன்று PM 7:00

    படத்தை பூதக் கண்ணாடி கொண்டு ஆராய்ந்ததில், போர்டில் N BALU Caterer, Cell number ஆகியவை படிக்க முடிந்தது. கார் பதிவு எண் TN 03 ?? 2978 என்று இருப்பது தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  4. அப்பாஜியைத் தெரிலயா.
    இதுதான் ஏப்ரல் ஃபூல் !

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான ஏப்ரல் ஒன்றாக இருக்கிறதே... பாராட்டுகள் . நம்பும் மாதிரி கதை ஜோடிக்கவும் பொறுமை வேண்டும் ...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!