திங்கள், 4 ஏப்ரல், 2011

ஹானஸ்டி தி பெஸ்ட் பாலிசி

இலவச தொலைக் காட்சி, ஒரு ரூபாய் அரிசி, வாக்குக்கு ரொக்கம் இவை குறித்து பல வீடுகளிலும் சர்ச்சை நடக்கும் என்று தோன்றுகிறது. எரிந்த கட்சி, எரியாத கட்சி ( அப்படி என்றால் என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எல்லாவற்றிலும் இருக்கும்தானே.

வாங்கலாம் என்று கட்சி கட்டுபவர் முன்வைக்கும் வாதம் இப்படியாக இருக்கும்:

நான் வாங்காவிட்டால் என் பெயர் சொல்லி வேறு யாரோ அபேஸ் செய்யப் போகிறார்கள்.  அதற்கு நானே வாங்கிக்கொண்டு விடலாமே.

எவன் எவனோ எவ்வளவோ மூட்டை அடிக்கிறான்.  நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

வாங்கிக் கொண்டு வேலைக்காரி மாதிரி ஒரு டிசர்விங் கேஸ் பார்த்துக் கொடுத்துவிடலாம்.

வாங்கக் கூடாது என்பவர் சொல்லும் பாயின்ட்கள் இப்படி இருக்கும்:

என் பெயரை சொல்லி எவன் வாங்கினாலும் அந்தப் பாவம் அவனுக்கு. எனக்கு என்ன ஆயிற்று?

இது ஏழை பாழைகளுக்கான சலுகை. வசதி இருப்பவர் இதைப் பெறக் கூடாது.

இது ஒரு மாதிரி மறைமுக லஞ்சம். தேர்தல் சமயத்தில் வருமானால் அது வாக்குக்கு பணம் கொடுக்க ஒரு குறுக்குவழி என்று தான் கொள்ள வேண்டும். அதற்கு நாம் துணை போகக் கூடாது. 

எவனெவனோ ஊழல பண்ணினால் நானும் ஏன் பண்ண வேண்டும்?

வேலைக்காரி மாதிரி ஆட்களுக்கு தமக்குத் தாமே வாங்கிக்கொள்ளலாமே. நாம் ஏன் நடுவில் தலையை நுழைக்க வேண்டும்? 

சரி இந்த  வாதங்கள் எல்லாம் ஏன் இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?  அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திடீரென்று ஒரு நாள் காலை எங்கள் வீட்டு மோட்டார் (போர் வெல் பம்பு) ஸ்ட்ரைக் செய்து விட்டது.  துரை என்ற பிளம்பர் வந்து பார்த்து விட்டு, இரண்டு மணி நேரம் வேலை செய்து அதை சரி செய்து விட்டார்.
    
"துரை, எவ்வளவு கொடுக்கணும்? "

" உங்கள் இஷ்டம் சார், நீங்க கொடுப்பதைக் கொடுங்க. "

"சே அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, வேலை செய்பவர் தான் கூலி கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.  சொல்லுங்க எவ்வளவு தரணும்?"

"சரி ஒரு ஐம்பது ரூபாய் குடுங்க."

எனக்கு மூச்சே நின்று போய் விட்டது.  இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரே இந்த ஆள்! அவனவன் என்ன வேலை செய்தாலும் முன்னூறு, நானூறு என்று அடித்து வாங்குகிறார்கள்.  நானே இவருக்கு நானூறு தர ரெடியா இருந்தது எனக்கு மட்டும் தான் தெரியும்.  சரி, ஒரு நூறு நமக்கும் ஆதாயமாக இருக்கட்டும் என்று முன்னூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். 

நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள்.  துரை நூறு ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொள்ள மறுத்து, தயக்கத்துடன் நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு சென்றார்.  இரண்டு நாளைக்கு முன்னால்  நடந்த ஆச்சரியம் இது. 
    
நொண்டிச் சாக்கு சொல்லி கலர் டீவி, ஒரு ரூபாய் அரிசி என்று வாங்குபவர்களுக்கு மத்தியில் துரை போன்ற அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம். வேறு என்ன சொல்ல?
                      
                  

19 கருத்துகள்:

  1. அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  2. துரை என்று பெயர் முடியும் எல்லோரும் இப்படித்தான் ஜென்டில்மேனாக இருப்பார்கள். ;-))

    பதிலளிநீக்கு
  3. ஆர் வி எஸ் - இது என்னங்க திடீர் ஐஸ் - அப்பாதுரைக்கு? தமிழகம் வரும்பொழுது கடலை மிட்டாய் வாங்கி தருவதாக வாக்களித்திருக்கின்றாரா? அப்போ நாங்களும் சொல்லிடறோம் - துரை எல்லோருக்கும் ஜே!

    பதிலளிநீக்கு
  4. இரண்டு கேள்விகள்:
    - எரிந்த கட்சி, எரியாத கட்சி என்றால் என்ன? (எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கலாமா? இது இரண்டாவது கேள்வியல்ல)
    - ஓசியில் கிடைத்தால் வாங்கிக் கொள்வதில் என்ன தவறு? இல்லாமை என்பது இந்த நாளில் தமிழ்நாட்டில் (இந்தியாவில்?) பெரும்பான்மை மக்களிடையே பரவியிருக்கும் நிலையில், அரசியல் சுனாமி அத்தனை வளத்தையும் அடித்துக் கொண்டு போகும் நிலையில், இவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. கொடுப்பதில் தவறு இருக்கிறதா என்று பார்க்கலாம். கொடுத்தாலும் வாங்கிக்கொண்டாலும் வருமான வரி கட்ட வேண்டும் என்று சட்டம் வந்தால் இதன் moral சிக்கல் விலகும் - அதுவரை வேலைக்காரி மட்டுமல்ல எல்லோருமே deserving தான். ஆமாம், வேலைக்காரி என்ன வேலைக்காரி? வீட்டைச் சுத்தப்படுத்தும் சாதாரண வேலை செய்பவர் என்ற பொருளில் நீங்கள் சொல்லியிருந்தாலும் - எல்லாரும் காசுக்காக வேலை செய்யும் காரர்கள்/காரிகள் தானே? வறுமைக் கோடு, வளக்கோடு என்று செயற்கை எல்லைகளின் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இன்றைய நிலவரத்தில் வேறுபாடு இருக்கிறதா?

    RVSக்கு ரொம்போ தேங்க்சுங்க. (எலக்சன்ல நின்றிருக்கலாம் போலிருக்கே, ஒரு ஓட்டு விழுந்திருக்கும்.. இலவசமா எதுவும் தராமலே..:)

    அவர் ஏதோ ஜெ போட்டார்னா உங்களுக்கு ஏங்க பத்திகிது? இப்ப கடலைமிட்டாய் இலவசமா தரவச்சுட்டீங்களே? பாவம் பாருங்க இப்ப அவர் ரொம்ப வருத்தப்படுவாரு.

    அது சரி, அந்த ப்ளம்பர் ஒழுங்கா வேலை செஞ்சாரா? அதைச் சொல்லலியே? சில பேர் first impressionக்காக அப்படி நடந்து கொண்டு பணியைச் சரியாகச் செய்யாமல் மாதா மாதம் அதே ரிப்பேர் ஆகும்படி நடந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். யெஸ்டி வைத்திருந்த நாளில் மாதா மாதம் அதே ரிப்பேருக்கு காசு கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு வருடம் கழித்துத் தான் புரிந்தது. "உன் மனசு போல குடு தொரை" என்பார் மெகேனிக் - மற்றவர்களுக்கு விலைப்பட்டியல் படி காசு வாங்குவார்.

    பல கேள்விகள்னு மாத்திடுங்க.

    பதிலளிநீக்கு
  5. நம்ம முடியவில்லை. ஹானஷ்டாவது பாளிசியாவது? சென்னையில் சற்று யாரிடமும் கேட்டுப்பாருங்கள்
    சார் அட்வான்ஸ் வேணும், தவிர ஐநூறு ஆறு நூறு என்று சொல்லி என்னூருக்கு குறையாமல் கறந்துவிடுவார்கள்.
    எல்லோரும் ஆட்டோ காரர்கள் போலத்தான் கிடைத்த வரையில் கறந்துவிடுவார்கள்.
    நீங்கள் எந்த இடம் என்று சொல்லவில்லை. நிச்சயம் சென்னையாக இருக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  6. அப்பாதுரை சார் - எரிந்த கட்சி, எரியாத கட்சி என்பது, இப்பொழுதெல்லாம் நடக்கின்ற பட்டி மண்டபம், நீயா நானா போன்ற அந்தக் காலத்து பட்டிமண்டபம். லாவணி பாடுதல் என்று கூட சொல்வார்கள் என்று ஞாபகம். சிவபெருமானால் மன்மதன் எரிக்கப் பட்டான் என்று ஒரு தரப்பினரும், எரிந்து போய் விடவில்லை, உயிருடன் மீண்டான் என்று மற்ற தரப்பினரும் பாட்டு பாடி வாதம் புரிவார்கள். அதைத்தான் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று சொல்வார்கள்.
    எல்லோருமே வேலைக்காரர்கள் / காரிகள் தானே? மிகவும் சரியான கருத்து.

    பதிலளிநீக்கு
  7. அப்பாத்துரை said...
    //அது சரி, அந்த ப்ளம்பர் ஒழுங்கா வேலை செஞ்சாரா? அதைச் சொல்லலியே?//

    வரதட்சணை வேண்டாம்னு சொன்னா, மாப்பிள்ளைக்கு ஏதோ குறையென்று அர்த்தமாகிப் போன இக்காலத்தில், இந்தக் கேள்வியும் ‘அப்படி இருக்குமோ?’ என்று யோசிக்க வைக்கிறது. #காலத்தின் கோலம்!!

    பதிலளிநீக்கு
  8. மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்களை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம்.

    பதிலளிநீக்கு
  9. நொண்டிச் சாக்கு சொல்லி கலர் டீவி, ஒரு ரூபாய் அரிசி என்று வாங்குபவர்களுக்கு மத்தியில் துரை போன்ற அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம். வேறு என்ன சொல்ல?



    ..... இப்படிப்பட்டவர்களும் இன்றைய சூழ்நிலைகளில், இன்னும் இருக்க முடிகிறதே..... சூப்பர்!

    பதிலளிநீக்கு
  10. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    பெய்யெனப் பெய்யும் மழை.

    பதிலளிநீக்கு
  11. இருக்காங்க இப்படியும் சிலர். அதனால்த்தான் ஏதோ ஓடுது.

    பதிலளிநீக்கு
  12. @எல் .கே . நானும் ஆயிரத்தில் ஒருவன் தான்..இரண்ண்டு நாள் முன் என் தெருவில் ஒருவர் புதியதாக குடி வந்தார் அவர் வீட்டில் பேன் டியுப் லைட் காலிங் பெல் எல்லாம் மாட்டி கொடுத்தேன்.அவர்கள் ஐநூறு ரூபாய் க்டுத்தார்கள் நான் வாங்கவில்லை அவர்கள் வர்ப்புர்த்தியதால் நூறு ரூபாய் மட்டும் வாங்கி கொண்டேன். (உட்ரா க்வாட்டருக்கு ஆச்சி...)

    பதிலளிநீக்கு
  13. பெரிய தொரை இவருன்னு சொல்லுவாங்களே அது இவரா இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  14. @ப்ரியமுடன் வசந்த்
    ஆமாம்.. வசந்த்.. அஞ்சாவதா கமென்ட் போட்டுருக்காரே! அவரே தான்! ;-))

    பதிலளிநீக்கு
  15. @எங்கள்
    எனக்கு நிச்சயம் ஒரு கிரேட் கடலை மிட்டாய் வாங்கியாறேன் என்று அண்ணன் அப்பாதுரை எனக்கு டெலிஃபோனினார். நிச்சயம் உங்களுக்கும் ரெண்டு மிட்டாய் தருகிறேன். ;-)))

    பதிலளிநீக்கு
  16. அபூர்வமாக இப்படி சிலர் ஆச்சரியபடுத்தியபடிதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!