வியாழன், 28 ஏப்ரல், 2011

ஒரு மின்னல் வேகப் போட்டி!

            
இந்தியர்களுக்கு மட்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களும் (ஞாபக சக்தி அதிகம் இருந்தால்) பங்கு பெறலாம். இந்தப் போட்டியில் பங்கு கொள்பவர்கள், தங்களுடைய பர்ஸ், பணப்பெட்டி, பணம் எதையும் கமெண்ட் பதிவு செய்து முடிக்கும் முன்பு, பார்க்கக் கூடாது. இது மிகவும் முக்கியமான கண்டிஷன். கமெண்ட் செய்து முடித்த பின், விடையை சரி பார்த்து, புதிய கமெண்ட் கூடாது!
  
இப்போ போட்டிக்குச் செல்வோமா?


   
இந்திய பணம் - பத்து ரூபாய் நோட்டில் - இரண்டு பக்கங்களிலும் சேர்த்து, மொத்தம் எவ்வளவு மிருகங்களின் படங்கள் உள்ளன? அவை யாவை?
          
அல்லது - பத்து ரூபாய் நோட்டில் மிருகப் படங்களே கிடையாதா? (௦0?)
                    
பின் குறிப்பு: உதாரணமாக - இரண்டு கரடி படங்கள் இருந்தால், அவைகளை இரண்டு என்றுதான் பதிய வேண்டும்.

பின் பின் குறிப்பு. கருத்துரைகள் - உடனே வெளியிடப்படாது. பதில் அல்லாத, 'இடக்கு மடக்கு' கமெண்டுகளை, உடனே வெளியிட முயற்சிக்கின்றோம்!
 
(ஹி ஹி - இந்தப் பதிவில், பத்து ரூபாய்ப் படம் இல்லைங்க! ஆனால் இங்கு உள்ள படங்கள் என்னென்ன என்பது பற்றியும் பின்னூட்டம் பதியலாம்!).    
                              
ஆரம்பியுங்க, உங்க அட்டகாச கமெண்டுகளை!
               

23 கருத்துகள்:

  1. முதல் படம் புதிய இந்திய ரூபாயின் சின்னம். இரண்டாவது ஒரு ரூபாய் நோட்டு . ஒரு கட்டு வீட்டில் இருக்கு

    மூன்றாவது பழைய இருபது ரூபாய் நோட்டு . இதுவரை பார்த்தது இல்லை. அதற்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. :)) முதல் படத்தை பார்த்துட்டு நான் கூட ஏதோ கணக்குப் புதிர் போல இருக்கு, நமக்கில்லைன்னு நெனைச்சு விட்டுட்டேன். அப்புறம் பார்த்தா ச்ச்சிம்ம்பிளாத்தான் கேட்டு இருக்கீக. இந்த மாதிரி கேள்விக்கு நான் பதில் சொல்லத்தேவையில்லை. என் சிஷ்யன் எல்.கே கூட சொல்லிடுவான்! :))))

    பதிலளிநீக்கு
  3. //முதல் படம் புதிய இந்திய ரூபாயின் சின்னம். இரண்டாவது ஒரு ரூபாய் நோட்டு . ஒரு கட்டு வீட்டில் இருக்கு // ஆஹா ஆஹா.. என்னே கண்டுபிடிப்பு! புல்லரிக்கிது!

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு பக்கமும் ரெண்டு ஏர்மாடுகள் இருக்கும் என்று நினைவு. சரியா?

    பதிலளிநீக்கு
  5. நேர்மையா, எதையும் பாக்காம, பத்தே செகண்ட்ல பதில் எழுதிருக்கேன். ஒரேயொரு ஒத்தரூவாக் கட்டாவது பரிசாக் குடுத்த்டணும், ஆமா!!

    பதிலளிநீக்கு
  6. பத்து ருவா நோட்டு கையில இருப்பதால் பார்க்காம சொல்ல முடியாது. ( தெரியாது வின் நாசூக் வடிவம் )

    ருவா நோட்டின் இரண்டு செய்திக் கேள்விகள்.தெரிந்தவர்கள் விவரியுங்கள்

    1.இப்பெல்லாம் ஒரு ருவா நோட்டில் மட்டும் கவர்மெண்ட் ஆஃப் இண்டியா மற்றவை ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியா...ஏன்

    2. பணம் நாசிக்கில் அச்சடிக்க ரிசர்வ் பாங்க் கஜனாவுக்குள் அடிக்கும் தொகைக்கு சமமாக தங்க கட்டிகளை உள்ளே வைக்க வேண்டுமாமே..எப்படி

    பதிலளிநீக்கு
  7. சிங்கச் சின்னத்துல இருக்கற சிங்கங்களைக் கணக்கில் எடுக்கணுமா, அப்ப தெரியும் 3 சிங்கங்களை மட்டுமா, மறைந்திருக்கும் 4 -வதும் சேர்த்தா???!!!!

    பதிலளிநீக்கு
  8. மிடில்கிளாஸ் மாதவி அவர்களே! கண்ணுக்குத் தெரிபவைகளை மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்!

    பதிலளிநீக்கு
  9. யானை மற்றும் புலி இருக்கும்

    பதிலளிநீக்கு
  10. //இந்திய பணம் - பத்து ரூபாய் நோட்டில் - இரண்டு பக்கங்களிலும் சேர்த்து, மொத்தம் எவ்வளவு மிருகங்களின் படங்கள் உள்ளன? அவை யாவை?//


    இரண்டு பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் 9 மிருகங்கள் உள்ளன.

    யானை,புலி, காண்டாமிருகம் -இவைகள் ஒருபக்கம்.
    இந்திய அரசின் சின்னத்தில் உள்ள மூன்று சிங்கங்கள்,ஒரு குதிரை ,ஒரு காளை மாடு மற்றும் ரிசர்வ் பங்க்கின் சின்னமான ஒரு புலி மறுப்பக்கம் ஆறு மிருகங்கள் .
    மொத்தம் ஒன்பது. சரியா?

    பதிலளிநீக்கு
  11. மணி - ஆ ஒ : மூன்றிலே ஒன்றுதான் சரி.
    விஜய் - இன்னும் ஆழமாகப் பார்க்கவும்.
    கக்கு மாணிக்கம் - நிறைய மிருகங்கள் பட்டியல் இட்டு இருக்கின்றீர்கள் - இப்போ எங்களுக்கே சந்தேகம் வந்துடுச்சு - இவ்வளவுமா உங்க கண்ணுக்குத் தெரிகின்றது?

    பதிலளிநீக்கு
  12. நேஷனல் எம்பளத்தில் இருக்கும் மூன்று சிங்கத்தையும் சேர்த்தா? சேர்காமலா?

    பதிலளிநீக்கு
  13. //இந்தப் போட்டியில் பங்கு கொள்பவர்கள், தங்களுடைய பர்ஸ், பணப்பெட்டி, பணம் எதையும் கமெண்ட் பதிவு செய்து முடிக்கும் முன்பு, பார்க்கக் கூடாது. இது மிகவும் முக்கியமான கண்டிஷன். //

    பணத்தை பார்க்கவில்லையென்றாலும் அதன் படத்தை கூகுளில் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. அதனால் இந்த ஆட்டதுக்கு நான் வரலை.

    பதிலளிநீக்கு
  14. யாரு மிக‌ச்ச‌ரியாக‌ ப‌தில் சொல்றார்க‌ளே அவ‌ர்க‌ளை என் ப்ளாக்க‌ர் ஐடி வ‌ழிமொழியும்..:))

    பதிலளிநீக்கு
  15. இந்த முறை இந்திய வந்தபோது ஆயிரம் ரூபாய் நோட்டே பத்து நிமிடத்தில் ஸ்வஹா ஆகுது - ஐஞ்சும், பத்தும் எம்மாத்திரம். இந்தியாவில் பிச்சைக்காரர்கள் இப்போது கம்மி ஆனாலும் - இருக்கும் சிலரும் - நேராக மீல்ஸ் வாங்கிகொடு என்று கேட்பதால் - பத்து ரூபாய் பார்க்காவே இல்லை !! ஆட்டோக்காரனும் நேராக நூறு / இரணூறு என்று கேட்பதால் கஷ்டம் சாமி. பத்மநாபன் - என் வழிசல் எப்படி !!

    எனக்கு தெரிந்து சரக்கு மட்டும் தான் இந்தியாவில் சீப்பு என்று எல்லோரும் அங்கேயே குடித்தனம் நடத்துக்கின்றார்கள். என் கஸ்டமர் இருவரை டின்னர் சாப்பிட குப்பிட்டுக்கொண்டு போன இடத்தை பார்த்துவிட்டு நியூயார்க் சிட்டி ஆளே நாங்கள் "ஹாப்பி ஹவரில்" இவ்வளவு குடிப்பதில்லை என்று சத்தியம் செய்தார் !

    அநன்யா மஹாதேவன் - மறுமொழி சூப்பர் ?

    பதிலளிநீக்கு
  16. நிஜமாக நோட்டை பார்க்காமல் சொன்னேன், பார்த்தபிறகு தெரிந்து கொண்டேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  17. பெரியவங்க (அனன்யா & எல்.கே) மொதலே பதில் சொல்லிட்டாங்க... இதுக்கு மேல நான் சொன்னா மரியாதையா இருக்காது பாருங்க... அதனால நான் பிரெசென்ட் மட்டும் போட்டுக்கறேன்... :)))

    பதிலளிநீக்கு
  18. குரோம்பேட்டைக் குறும்பன்29 ஏப்ரல், 2011 அன்று PM 7:40

    நீங்க, நான்தானே பணத்தைப் பார்த்து எழுதக்கூடாது என்று சொன்னீங்க? அதனால, ஒரு புதிய பத்து ரூபாய் நோட்டை ஸ்டேப்பிள் பின்னை நீக்கி, கட்டிலிருந்து எடுத்து, என் மனைவியிடம் கொடுத்து நன்றாக ஆராய்ந்து, என்னிடம் சொல்லச் சொல்லி எழுதினேன்:
    ஒரு புலி, ஒரு யானை, ஒரு காண்டாமிருகம், மூன்று சிங்கங்கள். 'அவ்வளவுதானா? இன்னும் நன்றாகப் பார்!' மனைவி நன்றாகப் பர்ர்த்து விட்டு, ' ஒரு குரங்கு' .... என்ன? குரங்கா? ....
    'அடாடா - சாரிங்க ஸ்டேப்பிள் பின் ஓட்டை வழியா உங்க மூஞ்சி தெரிஞ்சதுங்க. அதைத்தான் குரங்குன்னு நெனச்சிட்டேன்!'

    பதிலளிநீக்கு
  19. குரோம்பேட்டைக் குறும்பன்

    I burst into laughter with your comment.

    பதிலளிநீக்கு
  20. குரோம்பேட்டைக் குறும்பன்1 மே, 2011 அன்று AM 6:51

    நன்றி சாய் சார்!

    பதிலளிநீக்கு
  21. நல்ல நகைச்சுவை மிஸ்டர் குரோம்பேட்டைக் குரங்கு - சாரி குறும்பன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!