வெள்ளி, 22 ஜூலை, 2011

இருபத்தொன்று முதல், முப்பது வரை ...


இருபத்தொன்று முதல், முப்பது பாயிண்டுகள் வரை பெற்றவரா? 

              
உங்கள் நண்பர்கள் உங்களை உடல் உழைப்புக்கு அஞ்சாதவராக, ஆனால் ஒரு குழப்பவாதியாக - ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கு அதிகம் அலட்டிக் கொள்பவராகப் பார்க்கின்றார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணா - ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதாக இருந்தால் கூட, அதற்கான செய்முறைப் பயிற்சிப் புத்தகம் ஏதாவது நூலகத்தில் இருக்கின்றதா என்று பார்ப்பீர்கள். நீங்கள் எந்த செயலையாவது உத்வேகத்தோடு தன்னிச்சையாக விரைவாகச் செய்துவிட்டீர்கள் என்றால் அதைக் கண்ணுறும் உங்கள் நண்பர்கள் மயக்கமாகிக் கீழே விழுந்து விடுவார்கள்! அவர்கள் பார்வையில், நீங்கள் எந்த ஒரு செயலையும் பல கோணங்களில் ஆ ஆ ஆ ரா ய் ய் ய் ந்து - கடைசியில் - அந்த செயலை செய்யாமல் இருப்பதே உத்தமம் என்று சும்மா இருந்து விடுபவர்! அவ்வாறு விடுவதற்கு - உங்கள் எச்சரிக்கை உணர்வே காரணம் என்று உங்கள் நண்பர்கள் நினைக்கின்றார்கள். 
                       
மிஸ்டர் எக்ஸ் பற்றி சொல்கிறேன். இவருடைய ஸ்கோர் என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? 

 உங்களுடன் கை குலுக்கினால், தனியாக அறையின் ஒரு மூலைக்குச் சென்று தன்னுடைய ஐந்து விரல்களும் சரியாக உள்ளதா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு 'செக்'கைக் கிராஸ் செய்வதாக இருந்தால் கூட ஜாக்கிரதையாக, இரண்டு பக்கங்களும் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒரு டி வி வாங்க வேண்டும் என்று கடைக்குப் போனார். அப்பொழுது காலை மணி பதினொன்று. ஒவ்வொரு மாடலாக அலசி ஆராய்ந்து, எதை எடுப்பது, எதை விடுப்பது என்று குழம்பி, கடைசியில் இரவு பதினொரு மணிக்கு, கடையை மூட வேண்டிய நேரம் வரும்பொழுது, விற்பனையாளரிடம், 'நாளைக்குக் கடை எப்போ திறப்பீங்க?' என்று கேட்டார்...  
                      

8 கருத்துகள்:

 1. அடுத்த பதிவிலதான் எனக்குச் சொல்லுவீங்க !

  பதிலளிநீக்கு
 2. ரெம்ப சிரமம் இல்லையா? இந்த குணாதிசயம்.

  பதிலளிநீக்கு
 3. எனக்கு அடுத்த பதிவுல கூட இல்ல!
  மிஸ்டர் X 50- 60?

  பதிலளிநீக்கு
 4. சுவாரசியமான கேரக்டர் போலிருக்கே?

  பதிலளிநீக்கு
 5. நம்பர் சொல்லி என்னன்னவோ பேசிக்கறங்காளே ....புரிய மாட்டேங்குதே....

  பதிலளிநீக்கு
 6. ஒஹோ, எனக்கு ரொம்பத் தெரிந்தவரா இருப்பார் போல இருக்கே:)

  முன் ஜாக்கிரதை முத்தண்ணா.;)

  பதிலளிநீக்கு
 7. 41 புள்ளி வாங்கியிருக்கிறேன். என்னைப் பற்றிய கணிப்பு எப்ப வரும்? (கவுண்டமணி பாணியில் '41 புள்ளி வாங்கினவங்களுக்கெல்லாம் சொல்றதில்ல என்று சொல்லிவிடாதீர்கள்!!)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!