வெள்ளி, 29 ஜூலை, 2011

எழுத்துப் புதிர் - விடைகள்..

                     
பதிவாசிரியர் நினைத்தது: 
                     
வல்லிசிம்ஹன் குண்டு மல்லிகையையும், ஜீவி அசோகமித்திரனையும், ஜெகேயை எல்லோரும், எஸ்ரா, பாலகுமாரனையும் எல்லோரும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பினோம். சுஜாதா / சாரு நிவேதிதா குழப்பம் வரலாம் என்று நினைத்தோம். அசோகமித்திரன் கதைக்கு டல்பதடோ பெயர் உதவும் என்றும், மலையாள வாடை நீல பத்மநாபனையும், கண்டுபிடிக்க உதவும் என்று நினைத்தோம். குண்டுமல்லிகைக் கதை மணியனோடு குழப்பம் வரும் என்று எதிர்பார்த்தோம். ஜேகே எங்கள் ப்ளாக்கில் வந்ததால் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அந்த சப்ஜெக்ட் காட்டிக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். அப்பாதுரை அரு ரா தவிர மிச்ச எல்லாம் கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்த்தோம். சில்வியா பெயர் சுஜாதாவின் சில்வியாவை நினைவுபடுத்தும் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை! இதெல்லாம் போக, ஒவ்வொரு பகுதியையும் முன் பின் அறியாமல் படித்ததில் சாரம் என்னவாக இருக்கும் என்று ஒரு ஆர்வம் வரவில்லை? இதைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்லவில்லை. 
         

        

12 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு எழுத்து நடை உண்டு. அதை வைத்துக் கண்டுபிடிக்க முடியாமல், வேறு வகையில் புதிரைப் பூட்டி வைத்தது தான் விசேஷமாகப் போய்விட்டது.

    விடைகளையும் புதிராக அமைத்தது வேறு சிறப்பைக் கூட்டி களைகட்டலுக்கும் காரணமாக ஆகியிருக்கிறது.

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அப்பாடா!
    எத்தனை முறை படித்து எத்தனை முறை யோசித்து பார்த்து . . . கடைசியில் விடை கொடுத்துவிட்டீர்கள்.

    இதில் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் எஸ்.ரா, சுஜாதா, பாலகுமாரன்.

    அசோகமித்ரன் கொஞ்சம்.

    மற்றவர்களின் எழுத்துகளுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை!

    எப்படியோ இரண்டு நாட்களாய் யோசிக்க வைத்துவிட்டீர்கள்!

    சீக்கிரம் அடுத்த புதிரைப் போடுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. HVL சொல்லியிருப்பதே எனக்கும் பொருந்துகிறது:/இதில் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் எஸ்.ரா, சுஜாதா, பாலகுமாரன்.

    அசோகமித்ரன் கொஞ்சம்./

    சுவாரஸ்யமான புதிர்.

    //ஒவ்வொரு பகுதியையும் முன் பின் அறியாமல் படித்ததில் சாரம் என்னவாக இருக்கும் என்று ஒரு ஆர்வம் வரவில்லை? இதைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்லவில்லை. //

    சொல்லாவிட்டாலும் நினைக்காமல் இல்லை:)!

    பதிலளிநீக்கு
  5. அப்பாடா!!.. விடையெல்லாம் நான் நெனைச்சமாதிரியே வந்திருக்கு....

    ஹி..ஹி..ஹி.. சமாளிஃபிகேஷன்
    :-))))))))

    பதிலளிநீக்கு
  6. புதிர்கள் கண்டுபிடிக்கா முடியாவிட்டாலும்.. முயற்சிக்கான முனைப்பை கொடுத்தது..அந்த வகையில் நன்றி.. அவ்வப்பொழுது இது மாதிரி புதிர் போடவும்...

    பதிலளிநீக்கு
  7. ஒருவரையாவது ஆழமாகப் படித்திருந்தால் தானே? சாரு நிவேதிதா படித்ததே கிடையாது - விடை சொன்னது fluke. அவருடைய முழுப்பெயர் கூட மறந்துவிட்டது. பாதிப் பெயர் போட்டு மீதிப் பெயரை நாகேஷ் போல் கேள்விக்குறியோட விட்டது ஏனென்று நினைக்கிறீர்கள்?

    (எதிர்பார்ப்புக்கு நன்றி?)

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம். என் மீது இவ்வளவு எதிர்பாரப்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை:)
    அரு.ராமனாதன்,அசோகமித்திரன் ,நீல பத்மனாபன் இவர்கள் அனைவரின் சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.

    நாவல்கள் வாங்கும் அளவிற்கு இளவயதில் ஐவேஜ் கிடையாது. புத்தகச் சந்தை வர ஆரம்பித்ததும்
    வாங்கி வைத்துப் படிக்காமல் தூங்கும் புத்தகங்களே அதிகம்,
    நீங்கள் லக்ஷ்மி, தேவன்,அனுத்தமா,அகிலன்,கல்கி என்று கொடுத்திருந்தாலும் ஏதோ தெரிந்திருக்கும்:)

    அருமையான பரீட்சை.
    சிந்திக்க வைத்துவிட்டீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் எங்கள் ப்ளாக்.
    மிகமிகச் சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் கடினமான புதிர்தான். ஒரு பாடலின் ராகத்தை கண்டு பிடிப்பது போலத்தான் இதுவும். நல்ல முயற்சி! நல்ல பதிவு!
    இதில் சுஜாதா, பாலகுமாரன் இருவர்தான் ஓரளவு எனக்கு தெரிந்தவர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!