திங்கள், 25 ஜூலை, 2011

உள் பெட்டியிலிருந்து 7-2011

                  
சவாரி? சமாளி!            
  
"நீயும் உன் மனைவியும் ஒற்றுமையாக சண்டை போடாமல் இருக்கிறீர்களே... எப்படி?"
  
"அதுவா...இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஹனிமூன் சென்றபோது நானும் என் மனைவியும் குதிரையில் சவாரி சென்றோம். என் மனைவி சென்ற குதிரை சண்டித்தனம் செய்து குதித்ததில், அவள் கீழே விழுந்து விட்டாள். மண்ணைத் தட்டிக் கொண்டு எழுந்த அவள் குதிரையின் பின்பக்கத்தில் தட்டி "இது உனக்கு முதல் வார்னிங்" என்று ஏறி உட்கார்ந்தாள். இரண்டாம் முறையும் இதே நடந்து அவள் இரண்டாவது வார்னிங்கும் கொடுத்தாள். மூன்றாவது முறை இது நடந்ததும் ஒரு துப்பாக்கியை எடுத்து குதிரையை சுட்டு விட்டாள். "அடப் பாவி...உனக்கு இரக்கமே இல்லையா...குதிரையை சுட்டு விட்டாயே" என்றேன்..என்னை ஆழமாக உற்று நோக்கியவள் "இது உங்களுக்கு முதல் வார்னிங்" என்றாள். அப்போதிலிருந்து இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்..."

---------------------------------------------
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்! 

"என்னம்மா நீ சொல்றே நாம் எல்லோரும் கடவுளால் படைக்கப் பட்டோம்னு...அப்பா சொல்றார், நாம் எல்லோரும் குரங்கிலிருந்து வந்தோம்னு.... எதும்மா உண்மை"
     
ரெண்டும்தாம்பா...நான் சொன்னது எங்க வீட்டுப் பக்கம் பற்றி... அவர் சொல்வது அவர் உறவுகள் பற்றி..."

-------------------------------------------
ஸ்மைல் ப்ளீஸ்! 

ஒரு இடி மின்னல் மழை நாளில் மகன் பயப்படப் போகிறானே என்று பள்ளிக்கு அழைத்து வரச் சென்ற தாய், அவன் ஒவ்வொரு மின்னலுக்கும் வானத்தைப் பார்த்து புன்னகைப்பது கண்டு காரணம் கேட்டாள். 
       
"கடவுள் என்னை போட்டோ எடுக்கறார்மா...நான் அழகாய் சிரித்து, போஸ் கொடுக்க வேண்டாமா?"

------------------------------------------
ஓடிய ஓட்டமென்ன? 
      
வீட்டை விட்டு ஓடிப் போன மகளால் துவண்டிருந்தது குடும்பம். மூன்று நாட்களுக்குப் பின் திரும்பி வந்த மகளிடம் தந்தை கோபமாய் கேட்டார், 
"இப்போ மட்டும் ஏன் திரும்பி வந்தே? என்ன வேணும் உனக்கு?" 

"நோக்கியா சின்ன பின் சார்ஜர்"

--------------------------------------------
        
"ஏண்டி... அந்த விஞ்ஞானியோட வீட்டை விட்டு ஓடிப்போனியே..., ஏண்டி திரும்பி வந்துட்டே...?"
    
"பாவிப் பய திரும்பி அழைச்சுட்டு வந்துட்டு 'சோதனை ஓட்டம்'னுட்டாண்டி"

------------------------------------------

(உருக்கமான ) நவீன காதல் கதை.

அவள் எப்போதுமே அவனுக்கு 'ஐ லவ் யூ', 'ஐ மிஸ் யூ'ன்னுட்டெல்லாம் மெசேஜ் அனுப்பிகிட்டு இருப்பாள். நேரம் காலம் கிடையாது.

ஒரு நாள் அபபடி நள்ளிரவு அவளிடமிருந்து வந்த மெசேஜ். தூக்கத்தினால் இவன் படிக்காமல் விட்டு விட்டான்.

மறுநாள் காலை அவள் அம்மா கிட்டயிருந்து அவனுக்கு கால் வந்தது.
"என் பொண்ணு நேத்து நைட் ஒரு ஆக்சிடனட்ல செத்து போயிட்டாப்பா..."

இவன் பதறிப் போய் நைட் படிக்காம விட்ட மெசேஜை எடுத்துப் படிச்சான்.

"டியர்...நான் உங்க தெரு முனைல தான் இருக்கேன்...ஆக்சிடன்ட் ஆயிடுச்சி ...இனி பிழைக்க மாட்டேன். கடைசியா ஒரு தரம் உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா... வாடா ப்ளீஸ்... "

நீதி: அப்போ கூட கால் பண்ணாம மெசேஜ்தான் அனுப்பியிருக்கிறாள்!

------------------------------------------------
   
வடை போச்சே...!
                  
பதினைந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு வடை விலை ஐம்பது பைசா. ஒரு கால் பண்ணினால் ஐந்து ரூபாய். இப்போ....வடை விலை ஐந்து ரூபாய். ஒரு கால் பண்ண ஐம்பது பைசா....டெக்னாலஜி ரொம்ப இம்ப்ரூவ் ஆகி விட்டதுதான்...

என்ன பயன்? வடை போச்சே....
     
-------------------------------------------------
                                                  

18 கருத்துகள்:

  1. அல்லாமே அருமையா.. அருமை..
    சும்மா.. கல கலன்னு சிரிக்க வைக்குது..

    (சாலமல் பாப்பையா ஸ்டைலுல காதுல விழுதா ?)

    பதிலளிநீக்கு
  2. இருபது வருஷத்துக்கு முன்னாடி சினிமா டிக்கெட்டோட விலை இருபது. வீடியோ கேசட் விலை இருநூறு.

    இன்னிக்கு டிக்கெட்டோட விலை இருநூறு. வி.சி.டி விலை இருபது.

    என்ன பயன். சினிமா போச்சே.

    பதிலளிநீக்கு
  3. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஆடியோ கேசட் விலை ரூ.100 -

    இப்ப சாங்க்ஸ் இண்டர்நெட்டுல Mp3 ஃப்ரீ..

    தமிழ் உதயம் -- super comment

    பதிலளிநீக்கு
  4. முதலாவது ஏற்கனவே கேள்வி பட்டது. மீதி எல்லாம் புதுசு. நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. சிரிக்க வைக்கிறீங்க போல.வடைதான் கவலையாப்போச்சு !

    பதிலளிநீக்கு
  6. ///பதினைந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு வடை விலை ஐம்பது பைசா. ஒரு கால் பண்ணினால் ஐந்து ரூபாய். இப்போ....வடை விலை ஐந்து ரூபாய். ஒரு கால் பண்ண ஐம்பது பைசா....டெக்னாலஜி ரொம்ப இம்ப்ரூவ் ஆகி விட்டதுதான்...// வடை ஐந்து ரூபாயா ,இலங்கையில இருபத்தி ஐந்து ரூபாய் ;-)

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் அருமை.

    ஸ்மைல் ப்ளீஸும், பறி போன வடையும் ரொம்பப் பிடித்தன:)!

    பதிலளிநீக்கு
  8. ஓடிப்போகும் ஜோக்குகளைத் தவிர எல்லாம் கேள்விப்பட்டது. அந்த குதிரை-மனைவி ஜோக்(கா அது?) ரொம்பக் கடுப்பு தரும்!! :-))))))

    மின்னல் ஜோக், சர்தார்ஜியை வச்சு சொல்லப்பட்டதாப் படிச்சேன். இதிலே குழந்தையை வச்சு சொன்னது, ரசிக்க வைக்குது.

    நோக்கியா சார்ஜர், அதுவும் சின்ன பின் - க்ளாஸ்!!

    பதிலளிநீக்கு
  9. உள்பெட்டியிலேர்ந்து அடிக்கடி இந்தமாதிரி சுவாரஸ்யமான சங்கதிகளை எடுத்துவுடுங்க.. நோக்கியா பின் சார்ஜர்.... ஹா... ஹா.. ஹா. ச்சான்ஸே இல்ல.

    மின்னல் ஜோக்கை நாம வெய்யில் படத்துலயே பார்த்துட்டோமோ ??....

    பதிலளிநீக்கு
  10. //"கடவுள் என்னை போட்டோ எடுக்கறார்மா...நான் அழகாய் சிரித்து, போஸ் கொடுக்க வேண்டாமா?" //
    :):):)

    நோக்கியா சார்ஜர் ஹா...ஹா...ஹா...

    பதிலளிநீக்கு
  11. சோதனை ஓட்டம் சூப்பர்!:)

    பதிலளிநீக்கு
  12. டெக்னாலஜி சிரிப்பா சிரிக்க வைக்குது...
    நோக்கியா, டெலிபோன் சார்ஜ், மெசஜ்,

    பதிலளிநீக்கு
  13. ஜோக்கெல்லாம் சூப்பர்.படத்தில் வடைகளைப் பார்த்தாலே நாக்கில் நீர் ஊறுகிறது.

    பதிலளிநீக்கு
  14. சிந்தையையும்
    சிரிக்க வைத்த
    சிறப்பான பதிவு நண்பரே

    நண்பர் தமிழ் உதயத்தின்
    சினிமா போச்சே கமெண்ட்டும்
    அமர்க்களம்

    பதிலளிநீக்கு
  15. Thamizh Uthayam super comment.
    innum ena ellaam ultaa aakiyirukkunu paarkkanum.

    பதிலளிநீக்கு
  16. கடைசியா வடையைப் பார்த்து ஜொள்ளு விட்டதுல என்ன படிச்சோம்னே மறந்து போச்சு.. ஆமா எங்க எடுத்தீங்க அந்த ஃபோட்டோவை..:))

    பதிலளிநீக்கு
  17. தேனம்மை மேடம் - வடை படம் கூகிள் பவனில் சுட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!