சனி, 16 ஜூலை, 2011

K J Y - M S V -M G R

நேற்று, 'நாளை நமதே' படம் ஏதோ ஒரு சேனலில் போட்டார்கள். ஹிந்தி யாதோங்கி பாராத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம். யாதோங்கி பாராத் பார்த்து விட்டு இதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. குறிப்பாக எம் ஜி ஆர் சொல்லும் 'ஓ ஐ ஸீ..' காட்சிகளிலும், கடைசிக் காட்சியில் எம் ஜி ஆர் ஓடும் ஸ்டைல் மற்றும் நடந்து கொண்டே 'ஓடு...ஓடு...உலகத்தின் எந்த மூலைக்கு வேணும்னாலும் ஓடு...' வசன உச்சரிப்பிலும்...!



முதலில் பிராண நாதா பிரேமா ஈஸ்வரி வசன காலம். 'இனி ஒரு பெண்ணை நான் மனதாலும் நினையேன்...' டி ஆர் எம் குரல் கூட மனதில் கேட்கிறது! பிறகு 'ஓ ஐ அம ஸாரி...' போன்ற ஆங்கில வசனங்கள்...(இதற்கு கல்யாணப் பரிசு தங்கவேலு குரல் கேட்கிறது) அப்புறம் நாயகனோ நாயகியோ ஒரு கோபமான காட்சியில் 'கெட் அவுட்' என்று முதலில் மெதுவாகவும், அடுத்து எதிர் பார்ட்டி இன்னும் என்னவோ பேச முற்பட, குரலை உயர்த்தி கையை நீட்டி' ஐ ஸே யூ கெட் அவுட்..' என்று கத்துவதும் பல படங்களில் இடம் பெறும் வழக்க சீன்கள்! அப்புறம் கதாநாயகன்கள் திடீரென ஆங்கிலம் பேசி புல்லரிக்க வைக்கும் காட்சிகள். ஆனால் இதில் எம் ஜி ஆர் அவப்போது நடுவில் ஐ ஸீ சொல்வார். எங்கள் கேசெட் கடைக் காரர் வசனத்துடன் பாடலை பதிந்து தருகிறேன் என்று இந்த மூன்று பாடல்களையும் பதிந்து தந்த போது இடத்தை வேஸ்ட் செய்து விட்டாரே என்று கோபப் பட்டேன். 'அந்த இடத்தில் இன்னும் ஒரு பாடல் பதிந்திருக்கலாமே மாதவராவ்...'


படம் சிரிப்பை வரவழைத்தாலும் ஜேசு அண்ணாவும் எம் எஸ் வீயும்
ஏமாற்றவில்லை. அந்தப் படத்தில் இந்த மூன்று பாடல்களும் ரசிக்க வைத்தன.
ஜேசு அண்ணா அங்குதான் சிரிக்க வைக்கவில்லையே தவிர, இங்கு அபபடி அல்ல. பாடல் நல்ல பாடல்தான். ஆனால் பிள்ளைத் தமிழ் என்பதை 'பில்லைத் தமிழ்' என்று பாடி புன்னகையுடன் ரசிக்கவைத்தார். அது தப்பு என்று தெரிந்தாலும் நண்பர்கள் பாடும் போது பில்லைத் தமிழ் என்றே பாடினார்கள்! இன்னொரு பாடலில் திருக்கோவிலை தெருக்கோவிலாக பாடியிருப்பார். இங்கு வரும் பாடல் ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் பாடல். எம் ஜி ஆர் படம். அதே எம் எஸ் வி. இது கூட 'ஹம்சக்கல்' என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்.

அதே படத்தில் குழந்தையை தூங்க வைக்க இன்னொரு ஜேசு பாடல்.

14 கருத்துகள்:

  1. குடும்பத்திற்கென ஒரு பாடல் இருந்தால்.. (எஸ்.வி. சேகரின் ஒரு நாடகம் நினைவில் வருகிறது..)
    பிரிய நேரிடின் குடும்ப உறுப்பினர்கள் பாடல் மூலம் பின்னர் ஒன்று சேரலாமே..
    நல்லா விஷயம்தான..

    'யாதோங்கி பராத்' (நினைவுகளின் ஊர்வலம்).. -- 1986 -87 ள் சென்னை தொலைக்காட்சியில் (பாஷை தெரியாமல்) பார்த்த நினைவு..

    'நாளை நமதே' எங்க
    ஊரில் மாரியம்மன் திருவிழாக்கால open air road ஷோவில் பார்த்தாகவும் நினைவு..

    பதிலளிநீக்கு
  2. தைரியமா குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம்.
    அதெல்லாம் ஒரு காலம் . . .

    பதிலளிநீக்கு
  3. அந்தக் கால உதித் நாராயண்-ஆ?!

    மறக்காத பாடல்கள்!

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே நல்ல பாடல்கள்.சத்தமாய்ப் போட்டுக் கேட்டேன் !

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு. நாளை நமதே, யாதோங்கி பாரத் இரண்டுமே பார்த்திருக்கிறேன். பாடல்களுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு
  6. எழுபதுகளில் வந்த பாடல்கள்,படங்கள் ஓரளவு நன்றாகவே இருந்தன.

    இங்கே செலக்ட் செய்து போட்டிருக்கும் அனைத்தும் முத்துக்கள்.

    எம்ஜிஆர் குரல் பறி போனது பாவமாக இருக்கும். ஐ சி சிரிக்க வைத்துவிட்டது.அதுவும் கன்னத்தில் விரலை வைத்து யோசித்துச் சொல்லுவார்.:௦)

    மிக்க நன்றி எங்கள்ப்லாக்.

    டௌன் மெமரி லேன் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. என்னை விட்டால், இரவுப்பாடகன் இரண்டும் அந்த நாளில் நிறைய முணுமுணுத்தவை.

    பதிலளிநீக்கு
  8. அருமையான
    அகம் மகிழ செய்த
    சிறப்பான பாடல்கள் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. //// HVL said...
    தைரியமா குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம்.
    அதெல்லாம் ஒரு காலம் . . .
    /////


    சார் ""என்னை விட்டால் யாருமில்லை "" என்ற பாடலைப் பார்த்த பிறகுமா இப்படி ஒரு வாசகம் உங்களிடமிருந்து ????????

    பதிலளிநீக்கு
  10. எங்கள் ப்ளாக்குக்கு ஜே! ஜே! ஹேமா கேட்டது போல் நானும் மிகவும் சத்தமாக வைத்து ரசித்து கேட்டேன்.
    பாடல்கள் தேனினும் இனிமை! 'பில்லை தமிழ் பாடுகிறேன், ஒரு பில்லைக்காக பாடுகிறேன்' என்று ஜேசுதாஸ் பாடுவதுதான் கொஞ்சம் இடறல்.
    'அழகெனும் ஓவியம் இங்கே' பாடலையும் எதிர்பார்த்தேன். இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!