வெள்ளி, 1 ஜூலை, 2011

தீனதயாளின் விலாசம் K 10

                                           
அத்தியாயம் 10: தீனதயாளின் விலாசம்! 

கா சோ: என்ன சாமீ - காரை ஓட்டிச் சென்றவர்கள் நிச்சயம் இவர்கள் இல்லை. யாரோ மாஸ்டர் பிளான் போட்டு, அதே இலவச விளம்பரங்கள் பேப்பரில் வந்திருந்த இவர்கள் பெயரையும், செல் எண்களையும் சொல்லிவிட்டு, காரைக் கிளப்பிக் கொண்டு போயிருக்கிறார்கள். 

எ சா: நீ சொல்வது சரிதான் சோபனா. அந்த இருவரும் இப்பொழுது வேறு ஊரில் அல்லது மாநிலத்தில் அல்லது வேறு நாட்டில் கூட இருக்கலாம். 

கா சோ: அப்போ வேறு கோணத்தில் இந்தக் கேஸை அணுகலாம் என்று தோன்றுகிறது. கார் காணாமல் போன இடத்திலிருந்து நமக்கு வேறு ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. கார் நின்றிருந்த இடத்திலிருந்து, கொஞ்சம் துப்பறியலாம். 

எ சா: சரி - கம்பியூட்டரில், நாம் வரிசையாக நமக்குத் தெரிந்த பாயிண்டுகளை எழுதலாம். 

- கார்த்திக் தன காரை விற்க விளம்பரம் கொடுக்கிறார்.

- காரை விளம்பரம் வெளியான அன்றே முதலில் ஒருவரும், பிறகு இருவரும் வந்து பார்வை இடுகிறார்கள். 

- இரண்டாவதாக வந்த இருவர், வேறு பெயர்கள், எண்கள் (அதே பேப்பரில் வேறு விளம்பரத்தில் வந்திருந்த விவரங்கள்) கொடுத்து,  கார்த்திக் எதிர் பார்ப்பதை விட அதிக பணம் கொடுத்து காரை ஓட்டிச் செல்கிறார்கள். ஆனால் டாக்குமெண்ட்ஸ் வாங்கிக்கொள்ளாமல், கார்த்திக்கிடமே விட்டுச் செல்கிறார்கள். 

- ஞாயிறு அன்று கார்த்திக்கிடமிருந்து ஓட்டிச் செல்லப்பட்ட கார், வேறு நிறம் வேறு பதிவு எண் மாற்றப்பட்டு, புதன் அன்று மாலையில் ஊருக்கு வெளியில் நிறுத்தப்படுகிறது. 

- அந்தக் காரில் வெள்ளியன்று வெடிகுண்டு பொருத்தப்படுகிறது. சற்று நேரத்தில் வெடிக்கிறது. 

கா சோ: சரி. இப்போ சில கேள்விகள்: 

# காரின் இரண்டாவது சாவி யாரிடம் உள்ளது? (எ சா - கார்த்திக்கிடம் ஃபோனில் பேசிவிட்டு, இரண்டாவது சாவி, கார்த்திக்கிடமே உள்ளது என்று உறுதி செய்துகொள்கிறார்)  
          

# காரை ஓட்டிச் சென்றவர்களிடமிருந்து, தீனதயாள் கைக்கு, காரின் சாவி எப்படி கிடைத்தது? 
   
# தீனதயாள் குண்டு வெடிப்பில் இறந்ததற்குப் பிறகு ஏன் இதுவரை யாரும் அவரைத் தேடவில்லை? 


எ சா: கார் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட நேரத்திலிருந்து, அதை தீனதயாள் வந்து தீண்டும் வரை இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. காரை ஓட்டிச் சென்றவர்கள், உடனே அந்தக் காரையும், அதன் சாவியையும் யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்றால், நேரே சென்று தீனதயாளிடம் இரண்டையும் கொடுத்துவிட்டு, கண்காணாத இடத்திற்குச் சென்றிருக்கலாம். ஆனால், இங்கோ காரை நிறுத்திவிட்டு, சாவியைக் கொண்டு போய் ......

கா சோ: சாமீ - திரும்பவும் இந்த சீக்வென்சை சொல்லுங்க? 

எ சா: (சொல்கிறார்.) 

கா சோ : சாமீ உடனே கிளம்புங்க. கார் நின்றிருந்த இடத்துக்குப் போவோம். நாம் அந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள கூரியர் செண்டர்களைப் பார்த்து கொஞ்சம் விவரங்கள் சேகரிக்க வேண்டும். 

+++++++++++++++++
    
முதல் கூரியர் கம்பெனி - கார் நின்றிருந்த இடத்திற்குப் பின்னால் ஐநூறு மீட்டர்கள் தள்ளி ஒரு சந்தில் இருந்தது. புதன் கிழமையன்று அதில் யாரும் வந்து லோக்கல் கூரியர் எதுவும் அனுப்பவில்லை என்று தெரிந்தது. 

இன்னொரு கூரியர் கம்பெனி, கார் நின்றிருந்த இடத்திற்கு முன்னால், முன்னூறு மீட்டர் தொலைவில், மெயின் ரோடிலேயே, இருந்தது. ஆமாம். அந்த புதன் கிழமை, மாலை ஏழு மணி சுமாருக்கு, இரண்டு பேர் வந்து, தீனதயாள் என்பவர் பெயருக்கு, ஒரு கார் சாவியை கூரியர் அனுப்பினார்கள். 
                       
"அது கார் சாவி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" 

"நாங்க கூரியர் கவர் பெற்றுக் கொள்ளும் பொழுது, அது கடிதமா அல்லது பொருளா - பொருளாக இருந்தால் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருளா என்றெல்லாம் கேட்டு வைத்துக் கொள்வோம். நாளை எங்களுக்கு ஒன்றும் பிரச்னை வரக்கூடாது அல்லவா? அதனால்தான். " 

"நான்தான் தீனதயாள் - எனக்கு அந்த கார் சாவி வந்து சேரவில்லை. அதில் என்னுடைய சரியான விலாசம்தான் எழுதி இருந்தார்களா என்று பார்க்கவேண்டும். அந்த கூரியர் ரசீதின் உங்கள் நகலைக் காட்டுங்கள்?" 
        
கூரியர் கம்பெனி ரசீதில் இருந்த தீனதயாளின் விலாசத்தை காசு சோபானாவின் அலைபேசி காமிரா ஒரு கிளிக் செய்து கொள்கிறது. அந்த விலாசத்தை வாய்விட்டுப் படித்த எ சா - "அட - டோர் நம்பர் தப்பாக - பழைய நம்பர் எழுதி இருக்கிறார்கள். - புதிய நம்பர் எழுதவில்லை. அதனால்தான் கார் சாவி எனக்கு வரவில்லை. சரி - நான் போய் இந்த விலாசத்திலிருந்து, அதைப் பெற்றுக்கொள்கிறேன். நன்றி."என்று சொன்னார் எ சா. பிறகு, அங்கிருந்து கிளம்பினர், கா சோ & எ சா.  
     
(தொடரும்) 
    

16 கருத்துகள்:

  1. இப்பத்தான் சூடு பிடிக்குது.
    கம்ப்யூடரில் பாயிண்டுகளை எழுதுவானேன்? :) அப்பத்தான் கேள்விகள் தோணுமோ? ம்ம்ம்.. இந்தக் கதையை கம்ப்யூடரில் பார்த்தப்போ எனக்கும் ஒரு கேள்வி தோணிச்சு: தப்பான முகவரிக்குப் பார்சல் அனுப்பியிருந்தால் இன்னேரம் திரும்பி வந்திருக்காதோ?

    பதிலளிநீக்கு
  2. விலாசத்தைப் பற்றி ஒரு விசாலமான தொடர்
    விலாசம் இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சு இருக்கு
    விறுவிறுப்பு கொடிக்கொண்டே போகுது நண்பரே

    பதிலளிநீக்கு
  3. பதிவாசிரியர்2 ஜூலை, 2011 அன்று AM 7:11

    அப்பாதுரை சார். அந்தக் கூரியர் ரசீதில் இருந்த விலாசம் முற்றிலும் சரியான விலாசம். தீனதயாளின் விலாசத்தைத் தெரிந்துகொள்ளத் தான் சாமியாரும் சோபனாவும் அங்கு சென்றிருக்கிறார்கள். மேலும் எ சா, தான்தான் தீனதயாள் என்று சொல்லிக்கொள்கிறார். தனக்குக் கூரியர் வந்து சேரவில்லை என்று சொல்லிக் கொள்பவர், சும்மா ஒளஒளாட்டிக்கு - அதில் உள்ள விலாசத்தைத் தவறான விலாசம் என்று சொல்கிறார். தவறான விலாசம் என்று சொன்னால், அந்த விலாசத்தை, அடிக்கடி சரிதானா என்று ஊன்றிப் படித்து, அதை கேமிராவில் படம் எடுத்து, மனதில் பதிய வைத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி அப்பாதுரை, ஏ ஆர் ஆர்!

    பதிலளிநீக்கு
  5. ஆ! புரியுது புரியுது. அதாவது தப்பான அட்ரெஸ்காரர் கிட்டே சாவியை டெலிவரி கொடுத்துட்டாங்கனு சாக்கு சொல்லி அட்ரெஸ் தெரிஞ்சுக்குறாங்க. பின்னிட்டீங்க போங்க.

    பதிலளிநீக்கு
  6. அட்ரஸ் கண்டுபிடிக்க நல்ல ஐடியா பண்ணி இருக்காங்க. சூப்பர்தான்!
    அட்ரஸ் மேல கிளிக் பண்ணி பாத்தேன். எனக்கு சரியா தெரியல. கண்டு பிடிக்க வேண்டியவங்களுக்கு சரியா தெரிஞ்சா சரிதான்.

    கதை நல்லா போகுது, தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அட இந்தக் கதைக்கு, இப்ப நாலு வாசகர்கள் ஆகிவிட்டார்கள்! பதிவாசிரியர் சந்தோஷத்தில், மற்ற ஆசிரியர்களுக்கு ஆளுக்கு ஒரு தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டார்!

    பதிலளிநீக்கு
  8. நாலு பேருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நாங்களும் படிக்கறோம்!

    நல்லாப் போகுது!

    பதிலளிநீக்கு
  10. நன்றி மிடில்கிளாஸ் மாதவி. இப்ப பதிவாசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கு கொசுறாக ஆளுக்கொரு பல்லி(முட்டை) மிட்டாயும் வாங்கிக் கொடுத்துவிட்டார்!

    பதிலளிநீக்கு
  11. தேன் மிட்டாய் - கைக்குக் கிடைத்தவுடனேயே கடிச்சுச் சாப்பிட்டுடோம். ஏவ் ... !!

    பதிலளிநீக்கு
  12. நீங்க முதலில் கதையை முடிப்பீன்களா இல்லை அப்பாவி முடிப்பான்களா ??

    பதிலளிநீக்கு
  13. ஐயோ அப்பாவியோட போட்டி போட எங்களால் முடியாது - அவங்க இருபத்துநாலு பகுதிகளுக்கு மேலாக எழுதிகிட்டு இருக்காங்க. எங்க பதிவாசிரியர் சொல்வது: 'கா சோ & எ சா, அநேகமாக இன்னும் ஐந்து அல்லது ஏழு அத்தியாயங்களுக்குள் கே யைக் கண்டுபிடித்து, சி பி ஐ வசம ஒப்படைத்துவிடுவார்கள்'

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!