சனி, 13 ஆகஸ்ட், 2011

ஜே போட வைக்கும் ஜோ பாடல்கள்...


'ஜோ'வைப் பார்க்கும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் பார்ப்பது போல இருக்கும்.

வாலியில் அறிமுகமான ஜோதிகா அடுத்தடுத்த படங்களில் ஒரு குறும்புப் பெண்ணாக ரசிகர்களை மகிழ்விக்க ஆரம்பித்தார். உதட்டைச் சுழிக்கும் குறும்பு நடிப்பும் துள்ளலும் ரசிகர்களைக் கவர வைத்த பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் அந்தக் குறும்பை வெளிப்படுத்தும் ஒரு பாடல். சூர்யா ஜோவைப் பார்த்த முதல் படமாக இருந்திருக்க வேண்டும்! சூர்யாவின் அறிமுகப் படமான நேருக்கு நேர் படத்தில் அவர் டான்சை கிண்டலடித்த பத்திரிகைகள் இதில் பாராட்டியதாய் ஞாபகம்.


அதே படத்தில் 'பொறுக்கி டான்ஸ்' ஆடும் ஜோ...பூவ பூவ பூவ பூவ பூவே...காலை மாற்றி வைத்து அவர் ஆடும் அந்த பொறுக்கி டான்ஸ் எப்படி? ரசிக்க முடிகிறது இல்லை?


மிக ரசிக்க வைத்த அவர் படம் ஒன்று குஷி. அப்புறம்தான் எஸ் ஜே சூர்யா தானே அவர் படங்களில் தானே நடித்து படுத்த ஆரம்பித்து விட்டார். குஷி படத்தில் 'யார் சொல்வதோ யார் சொல்வதோ....'


எப்போதுமே படம் பெயரில் குழப்பிக் கொள்ளும் படம் 'பூவெல்லாம் உன் வாசம்' . 'பூவெல்லாம் கேட்டுப் பார்' படப்பெயருடன் குழம்பும்! ஜோ வின் முன்கோபம் படத்தில் பிரசித்தம். அதில் அவர் தோன்றும் இனிமையான பாடல் 'திருமண மலர்கள் தருவாயா...'


அதே படத்தில் இன்னொரு பாடல். கே ஜே யேசுதாஸ் பாடும் பாடல். 'காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்..' இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகம்.


ஒரு இடைவெளிக்கு அப்புறம் வந்த ஜோ படம் பிரியமான தோழி. சற்றே முதிர்ச்சி தெரிந்தாலும் குறும்பு மாறாமல் ஆடும் பாடல். அவர் பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதும் மாதவன் குறும்பு செய்ய வரும்போது உதடு சுழிப்பதும்.... அப்புறம் இந்தப் பாடலைப் பற்றி ஒரு விஷயம். ஒரு மிகப் பழைய ஹிந்திப் பாடலிலிருந்து திறமையாக உருவப்பட்ட பாடல். மிலன் படத்தில் முகேஷ் பாடும் சாவன் கா மஹீனா பாடலின் சாயல்-குறிப்பாய் சரணத்தில்-நன்கு தெரியும்!


ஜோ பிரமாதப் படுத்திய படம் மொழி. அதில் அவர் வரும் (பாடுவதாக வரும் அல்ல) பாடல் ஒன்று...கண்ணால் பேசும் பூவே...

அவர் அபிநயம் காட்டும் க்ளிப்பிங்குடன் ஒரு சிறு அழகான பாடல், அழகான வார்த்தைகளுடன் 'மன்னிப்பாயா' பாடல்...!




ஜோ முதல் முறையாக நடிப்பில் அதகளம் செய்த சந்திரமுகி பாடல்...


எவ்வளவு பேர் முழுப்பாடல்களையும் பார்த்து ரசித்தீர்கள்? எவ்வளவு பேர் 'ஏற்கெனவே பார்த்ததுதானே' என்று தாண்டிச் சென்றீர்கள்?

வீ மிஸ் யூ ஜோ...

17 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு. ‘காக்க காக்க’ படப் பாடல்களை விட்டு விட்டீர்களே!

    கடைசியாகக் கேட்டிருக்கும் கேள்வி. ஹி.. இப்படியெல்லாம் தர்மசங்கடப் படுத்தக் கூடாது. ஜோ பாடல் கேட்கத் தோணுகையில் எல்லாம் இங்கு வந்து கேட்டுட்டு பதிவுக்கு ஜே போட்டுவிட்டுப் போவோம்:)!

    பதிலளிநீக்கு
  2. நானும் ஜோதிகாவின் ரசிகை. சிறந்த நடிகைகளென்று நான் வைத்திருக்கும் பட்டியலில் ஜோதிகாவிற்குப் பிறகு பெரும் வெற்றிடம்தான்.

    பதிலளிநீக்கு
  3. நானும் ஜோதிகாவின் ரசிகை. சிறந்த நடிகைகளென்று நான் வைத்திருக்கும் பட்டியலில் ஜோதிகாவிற்குப் பிறகு பெரும் வெற்றிடம்தான்.

    பதிலளிநீக்கு
  4. ஜோ வின் பாடல்களை போட்டு எங்கள் பிளாக்கை ஜோர் படுத்திவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  5. அட! உங்க எல்லாருக்கும் ஜோவை இவ்வளவு பிடிக்குமா!
    'ரிதம்' 'மொழி' இரண்டு படங்களும் எனக்கு பிடிக்கும். ஜோ இந்த இரண்டிலுமே மிதமாக நடித்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  6. இன்று பிறந்தநாள்(!) காணும் 'ஜோ' விற்கு வாழ்த்துக்கள்..

    -- எதயாவது கெளப்பி விடுவோம் சங்கம்..

    பதிலளிநீக்கு
  7. எனக்கு பிடிக்கும் என்று சொல்லக் கூடிய நடிகைகளில் ஒருவர் ஜோதிகா.

    பதிலளிநீக்கு
  8. ஜோ படல்களை மட்டும் ரசிங்க. இல்லைனா சூர்யா சண்டைக்கு வரப்போராரு. . .நல்ல பதிவு. . .
    பாடல்களில் மட்டும் இல்லை. ஜோ சிறந்த நடிகை என்பதிலும் மாற்று கருத்தே இல்லை. . .

    பதிலளிநீக்கு
  9. ஹிஹி.. நானும் ஒரு பாட்டையாவது கேட்டே தீரணும்னு ஒவ்வொண்ணா க்ளிக்கிப் பாத்து வாஸ்தவங்க.. பஞ்சீ ஜம்ப் நல்லா இருந்துச்சு. இவங்க தானா சந்திரமுகி? அநியாயத்துக்கு மொழி மாறாட்டம் செஞ்சுட்டீங்களே?

    விடுங்க.. என்னாச்சு அவங்களுக்கு?

    பதிலளிநீக்கு
  10. என்னதிது.. ஜோக்கு ஜொள் விடறது.... எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவின் மனைவிமார்கள் ப்ளாக் படிக்கறதில்லையோ!! :-))

    #இருந்தாலும் நானும் சொல்லிக்கிறேன் ”வி மிஸ் யூ ஜோ!!” :-))

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டைக் குறும்பன்14 ஆகஸ்ட், 2011 அன்று AM 11:26

    சுடிதார் அணிந்து வந்த சொர்கமே பாடல் இடம் பெற்ற படம் வந்த சமயம் - நான் கூட என் மனைவி மீது ஒரு பாடல் இயற்றிப் பாடினேன். 'நைட்டி அணிந்து வந்த நரகமே, உன் மீது வெறுப்பு வந்தது எப்போது - அதை நீ சொல்வாயா?..." சந்திரமுகிக்குப் பிறகு என் மனைவி ரா ரா --- ரா ரா - என்று பாடி, லக லக லக லக - என்று என்னைப் பார்த்து பல்லைக் கடிக்கின்றார்!

    பதிலளிநீக்கு
  12. //ஜோ'வைப் பார்க்கும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் பார்ப்பது போல இருக்கும்.//

    எங்கள் குடும்பத்திலும் ஒருவரைப் பார்க்கும் பொழுது, ஜோவைப் பார்ப்பது போலவே இருக்கும்!

    //'ஜே போட வைக்கும் ஜோ பாடல்கள்..'//

    பாடலாசிரியர் பாட்டை எழுதுகிறார்; இசையமைப்பாளர் இசையை அமைக்கிறார்; பாடகர் அந்தப் பாட்டைப் பாடுகிறார்..

    இவ்வளவு பேரும் அந்தப் பாடல் சம்பந்தப்பட்டு இருக்க, ஏன் உதடை அசைக்கும் நடிகரையோ, நடிகையையோ அவர் பெயர் சொல்லி அவர் பாடல் என்கிறோம்?..

    திரையில் நம் கண்முன்னால், பாடுவது போல அவர் தோற்றமளிப்பது, திரைக்குப் பின்னாலான அது சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் மறக்கடித்து விடுகிறதோ?..

    பதிலளிநீக்கு
  13. நன்றி ராமலக்ஷ்மி, நாங்கள் ரசித்ததை நீங்களும் மறுபடி ரசிக்கிறீர்களா என்று பார்க்கத்தான்....ஹி..ஹி..

    வாங்க chitra, part 1, part2,...அட, இது நல்ல ஐடியாவா இருக்கே...!

    ஆமாம் தமிழ் உதயம், நாங்கள் குறும்பு ஜோவையும் ரசிக்கிறோம்!

    நன்றி கீதா சந்தானம், அனுஷ்கா பாருங்களேன்! வெற்றிடம் நிரம்பலாம்!

    ரசித்ததற்கு நன்றி பத்மநாபன்.

    வாங்க meenaakshi, அட, ஆமாம் ரிதம் பாட்டு விட்டுப் போச்சே...!

    மாதவன், நன்றி.

    ரசித்ததற்கு நன்றி HVL,

    பிரணவன், ஜோவின் குறும்பையும், அப்புறம் நடிப்பையும் மட்டுமே ரசிக்கிறோம். சூர்யா கிட்ட சொல்லிடுங்க...

    வருக அப்பாதுரை, ஜஸ்ட் ரசித்த பாடல் காட்சிகளைப் பகிரும் எண்ணம் அவ்வளவுதான். ஒண்....ணும் ஆகலை அவங்களுக்கு. கல்யாணத்துக்குப் பின் திரையுலகை விட்டு விலகி சந்தோஷமா இருக்காங்க... மிலன் பாட்டு நினைவு வந்ததா அப்பாதுரை?

    RVS, அவர்கள் விருப்பத்தின் பேரில் போட பதிவுதாங்க இது...(எப்படியெல்லாம் கிளப்பி விடறாங்கப்பா)

    குரோம்பேட்டைக் குறும்பன், RVS கேட்ட கேள்வியை இப்போ நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்கணும்!

    ஜீவி சார், பாடல்களை ரசிக்கும்போது பாடகர்களும், எழுதியவரும் இசையமைத்தவரும் மனதில் நிற்பார்கள். நாம் ரசிக்கும் நிறையப் பாடல்கள் காட்சிகளாகக் காண சகிக்காது என்பதோடு அப்புறம் பாடல் கேட்கும்போது கூட காட்சி நினைவுக்கு வந்து தொல்லை பண்ணும். இது ஜஸ்ட் ஜோ வின் குறும்பு நடிப்புக்கும், அப்புறம் அவரே ஒரு பண்பட்ட நடிகையாக மாறியதையும் சொல்லி, அவர் காட்சிகளை ரசிக்க இட்ட பதிவு! எல்லோர் வீட்டிலும் ஒரு ஜோ இருப்பதுதான் அவர் விரும்பப் படுவதன் ரகசியம் போலும்! நன்றி சார்

    பதிலளிநீக்கு
  14. குரோம்பேட்டைக் குறும்பன்15 ஆகஸ்ட், 2011 அன்று AM 7:37

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களின் மனைவிகள் எப்படியோ தெரியவில்லை. ஆனால், என் மனைவி எங்கள் ப்ளாக் படிப்பதில்லை. எந்த ப்ளாகும் படிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  15. எனக்கென்னவோ, அவங்க அக்கா (நக்மா !!) காட்டிய அளவு இவர் காட்டவில்லை - நடிப்பை சொன்னேன் !!

    இந்தக்கால பாடல்களை இரண்டாம் முறை கேட்கவே பிடிக்கவில்லை. பார்ப்பதா !! மூச் ! ஏ.ஆர். ரெஹ்மான் பாடல்கள் சிலவற்றை தவிர.

    படம் பார்க்கும் போதே - வீட்டில் ஓடவிட்டு தான் பார்ப்பேன். திரை அரங்குகளில் பச்சையப்பன் கல்லூரி நாட்களாய் இருந்தால் - அதையும் ஓட விட்டு மிரட்டி பார்த்திருப்பேன் !! வார கடைசியில் வேங்கை பார்த்தேன். தமிழ்நாட்டில் இத்தனை அரிவாள் கலாச்சாரமா !! வரவே பயமா இருக்கு !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!