சனி, 27 ஆகஸ்ட், 2011

ஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் ...

                                         
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள்,
              
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். 
                         
நீங்கள் பெற்ற பாயிண்டுகள், ஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் என்றால் - உங்கள் நண்பர்களால் நீங்கள் எப்படிப் பார்க்கப் படுகின்றீர்கள் என்பதை இங்கே பார்ப்போம். 

  


உங்கள் நண்பர்களை அடிக்கடி மெய் சிலிர்க்க வைத்துவிடுவீர்கள். எங்கே இருந்துதான் உங்களுக்கு இவ்வளவு சக்தியும் உந்துதலும் வருமோ என்று உங்களை அதிசயமாகப் பார்த்து வியந்து போவார்கள், 
உங்கள் நண்பர்கள்! 

   

பறக்கும் குதிரைதான் நீங்க! தலைமைப் பண்பு உங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது.    


          
எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் சட்டென்று ஒரு முடிவு எடுத்து, தடாலடியாக வேலை செய்து முடிப்பீர்கள். அப்படி எடுக்கும் சில முடிவுகள் சில நேரங்களில் சரியான முடிவாக இல்லாமலும் போகும். ஆனாலும் மனம் தளர மாட்டீர்கள்! 

துணிச்சலும், விடா முயற்சியும் உங்களுக்குப் பல வெற்றிகளைத் தேடி கொடுக்கும். நீங்கள் எதையும் ஒரு முறையாவது முயற்சி செய்து பார்த்து விடுகின்ற அதிசய மனிதர். ரிஸ்க் எடுப்பது என்பது, உங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல! 

உங்களுடைய செயலாற்றும் உத்வேகம் மின் காந்த அலைகளாகப் பரவி, உங்கள்
நண்பர்களை - இரும்புத் துகள்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் காந்தம் போன்று - உங்கள் பக்கம் ஈர்க்கின்றது. 
                    
என்ன மாதவன், சாய் - சந்தோஷம்தானே? 

(அறுபத்து ஒன்று பாயிண்டுகளுக்கு மேலாகப் பெற்றவர்கள் யாராவது இருந்தால், எங்களுக்கு சொல்லவும் / எழுதவும். )

                                                 

4 கருத்துகள்:

  1. நன்றி.நான் 51 பாயிண்டுகள்..
    // எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் சட்டென்று ஒரு முடிவு எடுத்து, தடாலடியாக வேலை செய்து முடிப்பீர்கள். அப்படி எடுக்கும் சில முடிவுகள் சில நேரங்களில் சரியான முடிவாக இல்லாமலும் போகும். ஆனாலும் மனம் தளர மாட்டீர்கள்!
    [Image]துணிச்சலும், விடா முயற்சியும் உங்களுக்குப் பல வெற்றிகளைத் தேடி கொடுக்கும்.//

    இந்த வரிகள் என்னைப்பொருத்தவரையில் உண்மையானவை.
    இத்தனை நாள் பொறுமையாக இருந்ததர்க்கு நல்ல விதமாக கணித்து சொல்லியிருக்கீங்க.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. // எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் சட்டென்று ஒரு முடிவு எடுத்து, தடாலடியாக வேலை செய்து முடிப்பீர்கள். //

    கடவுளே, என்னோட மனைவி இதப் படிக்க வேண்டாம்..
    ஏற்கனவே, ஒரு வருஷமா ஃசோபா வாங்க யோசிச்சு.. யோசிச்சு.. முடிவே பண்ணல
    என்ன செய்ய.. ரொம்ப க்வாளிடியோட.. ஆனா குறைந்த விலையில கெடக்கலியே..

    எதுக்கும் மறுபடியும் டெஸ்ட் எழுதிப் பாக்கறேன்.. ஒரு வேளை தவறுதலா நா 50 க்கு மேல எடுத்துட்டேனோ ?

    பதிலளிநீக்கு
  3. 51 to 60வரை எடுத்தவர்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  4. சுவாரசியமான மனிதர்கள்!

    மாதவன் மறுபடி டெஸ்ட் எடுத்தா என்ன மதிப்பெண் வாங்கினீங்கன்னு மறக்காம சொல்லுங்க. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!