திங்கள், 8 ஆகஸ்ட், 2011

எட்டெட்டுஅன்புள்ள பதிவாசிரியருக்கு 
நீங்கள் அனுப்பிய 'எட்டெட்டு' தொடர் வதை - மன்னிக்கவும் தொடர் கதை வந்து சேர்ந்தது. நீங்க ஏற்கெனவே எழுதிக் (கிழித்த) கொலை செய்த 'கேயைத் தேடி' தொடர் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் இதை நான் பதிவிடுவதாக இல்லை. 
மீண்டும் மன்னிக்கவும்.

அன்புடன் 
பப்ளிஷர்.

பின் (குத்தும்) குறிப்பு: 
அதை யாரும் படித்ததாகத் தெரியவில்லை.

அன்புள்ள பப்ளிஷருக்கு 
'கேயைத் தேடி பதிவுகளை யாரும் படிக்கவில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிடமுடியாது. படித்தவர்களுக்கு புரியவில்லை அல்லது மறந்துவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். முந்தைய பதிவுகள் + கருத்துரைகள் புத்தக வடிவில் தயார் செய்துள்ளேன். அதற்கு சுட்டி அனுப்பியுள்ளேன். அதை எங்கள் ப்ளாக் பதிவில் கொடுக்கவும். 

அன்புடன் 
பதிவாசிரியர்.

அன்புள்ள பதிவாசிரியருக்கு 
உங்களுடைய தன்னம்பிக்கையை மெச்சுகின்றேன்.
வாசகர்களின் பொறுமையை போற்றுகின்றேன். 
ஆனால் சுட்டி கொடுக்கமாட்டேன். வாசகர்கள் என்னைக் கட்டி வைத்து உதைப்பார்கள் என்று தோன்றுவதால்.... 

அன்புடன் 
பப்ளிஷர். 

அன்புள்ள பப்ளிஷருக்கு 
இந்தக் கடிதப் போக்குவரத்துகளை ஆகஸ்ட் எட்டாம் தேதி காலை எட்டு எட்டுக்கு வெளியிடும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். அது 'எட்டெட்டு' தொடருக்கு முன்னுரையாக அமையும்.  

அன்புடன் 
பதிவாசிரியர். 

அன்புள்ள பதிவாசிரியருக்கு 
8 - 08 - 8:08 மீதி நான்கு எட்டுகள் எங்கே? 

அன்புடன்
பப்ளிஷர். 

அன்புள்ள பப்ளிஷருக்கு 
அது கதையில் வரும். 

அன்புடன் 
பதிவாசிரியர். 

13 கருத்துகள்:

 1. தைரியமா உள்ள எட்டு வைக்க சொல்லுங்க ...

  பதிலளிநீக்கு
 2. :-))) இன்னும் பல வெற்றி எல்லைகள் "எட்டுக"!!!

  பதிலளிநீக்கு
 3. குரோம்பேட்டைக் குறும்பன்8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:29

  அதே கேள்விதான். யார் அந்த பப்ளிஷர்?
  அட்ரஸ் கொடுங்க ஆட்டோ அனுப்புகின்றேன்.

  பதிலளிநீக்கு
 4. மிஸ்டர் பப்ளிஷர்:))!

  ஒதுங்கி நிற்க..:)!

  நமக்கு நாமே திட்டம்தானே வலைப்பதிவு? அதில் எங்கிருந்து இப்படியொரு பதவி முளைத்தது??

  ---

  பதிவாசிரியரே, அடுத்த பதிவு ஆறுதல்.

  'கேயைத் தேடி'ப் பயணப்படுங்கள். யாரும் படிக்கிறார்களா, புரிந்ததா எனக் கவலைப்படாமல் பதிந்து வாருங்கள். எவரேனும் பின்னாளில் இதைத் தேடி வந்து படிக்கக் கூடும். புத்தக வடிவில் தயார் செய்யப்பட்ட பதிவுகளும் கருத்துரைகளும் புத்தகமாகவே வெளிவரும் காலமும் வரக் கூடும். நல்ல முயற்சிகளும் செயல்களும் வீணாகிப் போவதில்லை. வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 5. பப்ளிஷரும் பதிவாசிரியரும் ஒன் மேன் ஆர்மியோன்னு தோணுது :-))

  பதிலளிநீக்கு
 6. அதான் முக்காகிணறு தாண்டியாச்சு இல்லையா. அப்பறம் எதுக்குங்க இப்படி எல்லாம்! கட கடன்னு காரியத்துல இறங்கி, சுறுசுறுப்பா கேயை கண்டுபிடிங்க! நாங்கதான் பின்னாடியே வந்துண்டு இருக்கோம் இல்லையா.

  புத்தக வடிவில் இருந்தால் படிக்க இன்னும் நல்லாவேதான் இருக்கும். அதனால சுட்டியை எங்களுக்கு சுட்டுங்க.

  பதிலளிநீக்கு
 7. "யார் அந்த ப்ப்ளிஷர்".
  நன்றி,
  பிரியா
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 8. எட்டு கமெண்ட்டுக்கு மேல் எழுதலாமா...?!!

  பதிலளிநீக்கு
 9. எட்டுக்கு மேலே போனால், பதினெட்டு வரை கமெண்ட் போடவேண்டும். அப்படிக் கமெண்ட் (இருந்தும்) போடாதவர்கள், அடுத்த ஜன்மத்தில், அந்தரத்தில் பாதிப் பறவையாகப் பறப்பார்கள்!

  பதிலளிநீக்கு
 10. எங்கள் குடுகுடுப்பைக்கு பயந்து இந்த கமென்ட்.

  பதிலளிநீக்கு
 11. நூல் பிடித்து நூல் பிடித்து இங்கே வந்து சேர்ந்தேன். பெரிய எட்டு எட்டா எடுத்து வைத்து சீக்கிரமே கடைசி பாகத்துக்கு வந்து சேருகிறேன்:)!

  பதிலளிநீக்கு
 12. இன்னிக்குத் தான் ஆரம்பிச்சிருக்கேன். ஆவியைக் கண்டாவது உடம்பு சரியாகும்னு நம்பிக்கை தான்! :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!