இசை ஞானம் பிறவியிலேயே வரும் என்று அடிக்கடி என்னுடைய அன்னை தந்தை கூறுவதைக் கேட்டதுண்டு. அது எவ்வளவு தூரம் சரியானது என்று யோசித்ததும் உண்டு.
சமீபத்தில் பெங்களூரில், உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். காலையில் விழிப்பு வந்ததும் 'படுக்கையை விட்டு எழுந்திருப்போமா - வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பாக எழுந்து வீட்டுக்குள் உலா வந்தால் - பார்ப்பவர்கள் ஏதேனும் சந்தேகப் படுவார்களோ?' என்றெல்லாம் யோசனையோடு படுத்திருந்த போது.....
ஹேமநாத பாகவதருக்குக் கேட்டது போன்று (வாய்ப் பாட்டு அல்லாத) வாத்திய ஒலி கேட்டது. அதுவும் நாதஸ்வர இசை! அந்த வீட்டில் உள்ள உறவினருக்கு சங்கீத ஞானம் ஏதோ கொஞ்சம் உண்டு என்றாலும் - இந்த அளவுக்கு எல்லாம் வாசிக்க நிச்சயம் தெரியாது. அதையும் தவிர, அவர் வீட்டில் சில புல்லாங்குழல்கள் மட்டும் எப்பொழுதோ பார்த்திருக்கின்றேன். அதையும் அவர் வாசிக்கும் பொழுது அடுப்பூதும் சத்தம் அதிகமாகக் கேட்கும்.
நான் கேட்ட நாதஸ்வர இசை ஒலி வடிவில் இங்கே கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள்.
யார் இதை வாசித்தவர் என்று மாடியிலிருந்து இறங்கி வந்து பார்த்தால் - வீதியில் இந்தக் கலைஞர் வாசித்தபடி நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டுப் பாருங்கள். கற்பனா ஸ்வரங்கள் பிரமாதமாக உள்ளன அல்லவா?
அவருடைய வாசிப்பு நன்றாக இருந்தது என்று கூறி, அவரைப் பாராட்டி, அவருக்குப் பணமும் கொடுத்து, ஒரு படமும் எடுத்து வைத்துக் கொண்டேன்.
தொடர்ந்து அவர், ஹிந்தோளம், மோகன கல்யாணி, பிலஹரி, பீம்ப்ளாஸ் என்று பல ராகங்கள் பிரமாதமாக இசைத்தபடி வீதியில் சென்றார்.
சக ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு, பிச்சைக்காரர்கள் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. இந்த வகை தெருக் கலைஞர்களை, பிச்சைக்காரர் என்று சொல்ல மனம் வரவில்லை.
கேட்க நன்றாக இருந்தது. பதிவாக போட்ட உங்களைப் பாராட்டுகிறேன்!
பதிலளிநீக்குமனம் நிறைந்த பாராட்டுக்கள்...இது மிகவும் பொறுமையும் பெருமையும் கூடிய விஷயம்.. நிச்சயம் இந்த பெயர் மாற்றம் தேவை.. மக்கள் கலைஞர்கள் என்றும் சொல்லலாம்....
பதிலளிநீக்குஇசை ஞானம்... இல்லை.
பதிலளிநீக்குகலைஞர் - அவரைப் பாராட்டியது - ஊக்குவித்தது: வாழ்த்துகள்.
//வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன்பாக எழுந்து வீட்டுக்குள் உலா வந்தால்//
இது அதிதர்மசங்கடமான நிலை. அதுவும், காலை எழுந்ததும் காஃபி என்றிருந்தால், வீட்டம்மா எழுஞ்சு வர்றவரை காத்திருக்கலாமா, அல்லது நாமே தட்டுமுட்டிப் போட்டுக்கலாமான்னு...
திருக் கலைஞர் சங்கராபரணம் படப் பாடல்கள் கேட்டுக் கற்றுக் கொண்டவர் போலும். நான் நாதஸ்வரம் வாசிக்க முயன்ற பொழுது வீட்டில் எல்லோருக்கும் ராம்ஜி நினைவு வந்தது !
பதிலளிநீக்குவருத்தமாகத்தான் இருக்கிறது இது போன்ற தெருக்கலைஞர்களை எண்ணும் பொழுது. அந்தக் கலைஞனின் அன்றைய தினத்தை விடிய வைத்த நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஒரு கலைஞரை கௌரவப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல விஷயம்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. . .
பதிலளிநீக்குஇவரை பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்தக்கூடாது. தெருக்கலைஞர்
பதிலளிநீக்குஎன்பது சரியான வார்த்தைதான்.
இவரை பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்தக்கூடாது. தெருக்கலைஞர்
பதிலளிநீக்குஎன்பது சரியான வார்த்தைதான்.
அருமையான வாசிப்பு.இப்படிபட்ட தெரு கலைஞரை ஊக்குவித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதெருவில் வாசிக்கும் கலைஞரின் மேதா விலாசம் அதி அத்புதம். அதுவும் காலைவேளையில் கேட்டால் இன்னும் இனிமை. மிகவும் நன்றி
பதிலளிநீக்குஸ்ரீராம்.