கற்றல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? 'கற்றல்' என்பதின் ஆழ்ந்த பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உண்மையாகக் கற்கும்போது, நீங்கள் கற்பதற்கு ஒரு தனிப்பட்ட ஆசானையோ, ஆசிரியரையோ நாடாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொண்டே இருக்கிறீர்கள்.



('திஸ் மேட்டர் ஆஃப் கல்ச்சர்' என்ற நூலில்.)
============================================
"என்னுடைய போதனைகளை நீங்கள் பரப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் உங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல், உங்களால் என்னுடைய போதனையை பரப்ப முடியாது. நீங்கள் என்னுடைய சில புத்தகங்களை வாங்கி விநியோகம் செய்யலாம். ஆனால் உங்களைப் புரிந்து கொள்வதே இதைக் காட்டிலும் முக்கியமாகும். உங்களை நீங்கள் புரிந்து கொண்டால், இவ்வுலகில் நீங்கள் ஒற்றுமையையும், புரிதலையும் பரவச் செய்வீர்கள். மனித குலத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வருவீர்கள். ஆனால் மற்றவருடைய போதனையை நீங்கள் பரப்பினால், இவ்வுலகில் மிகுந்த தீங்கையே ஏற்படுத்தும் வெறும் பிரசாரகராகவே நீங்கள் இருப்பீர்கள். பிரசாரம் உண்மை அன்று"
(6- 2- 55 அன்று ராஜ்காட்டில் ஆற்றிய சொற்பொழிவில். )
=======================================================
ஆமாம் தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்!
பதிலளிநீக்குபாடம் சொல்லிக் கொடுப்பவரெல்லாம் குரு இல்லை..
பதிலளிநீக்குவாழ்க்கையைப் புரிய வைப்பவரே
உண்மையான குரு!!
ஜென் குரு ஒருரிடம் பாடம் கேட்க ஆர்வமுடன் சீடர்கள் காத்திருந்தார்கள்..
பதிலளிநீக்குஎதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் குரு..
அமைதியைப் போக்கி ஒரு குயில் பெருங்குரல் எடுத்துக் கூவியது..
குரு எதுவும் பேசாமல் எழுந்து சென்றார்.
சீடர்கள் குருவிடம் கேட்டனர் ...
குருவே பாடம் எதுவும் நடத்தாமல் செல்கிறீர்களே என்று..
குரு சொன்னார்..
குயில் கத்தியதை எல்லோரும் கேட்டீர்களா..?
என்று கேட்டார்..
மாணவர்கள் ஆம் குருவே..
என்றனர்..
இதைவிட நான் என்ன புதிதாய் சொல்லிவிடப்போகிறேன்..
என்றார் குரு.
வாழ்க்கையே குரு ... ஒவ்வோரு அடி வைப்பிலும் பாடம்..
பதிலளிநீக்குஅருமை. வாழ்க்கை தான் ஆசான். அதை விட வெகு சிறப்பாக வேறு எதுவும் நமக்கு கற்று தர இயலாது.
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குஅருமையான விஷயங்களை தேர்வு செய்து கொடுத்து இருக்கீர்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅனுபவங்கள்தான் சிறந்த ஆசான். கற்று தெரிவதை விட பட்டு தெரிவது மிக்க நன்று.
பதிலளிநீக்கு//உங்களைப் புரிந்து கொள்வதே இதைக் காட்டிலும் முக்கியமாகும்.//
என்னை நானே உணர்ந்து கொள்ள இந்த ஒரு பிறவி போதாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் என்னையே நான் புதிது புதியாய் இன்னும் உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.