புதன், 10 ஆகஸ்ட், 2011

நாற்பத்து ஒன்று முதல் ஐம்பது வரை ...

                   
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள்,
              
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். 
                         
நீங்கள் பெற்ற பாயிண்டுகள், நாற்பத்து ஒன்று முதல் ஐம்பது வரையில் என்றால் - உங்கள் நண்பர்களால் நீங்கள் எப்படிப் பார்க்கப் படுகின்றீர்கள் என்பதை இங்கே பார்ப்போம். 

      


சுவாரஸ்யமான, உவகையூட்டுகின்ற, ஊக்கம் குன்றாத, இனிய மனிதர். உங்களை நண்பராக அடைவதற்கு எல்லோரும் விரும்புகிறார்கள். 'துரு துரு, சுறு சுறு' என்பதெற்கெல்லாம் விளக்கம் கேட்டால் உங்கள் நண்பர்கள் உங்களைத்தான் சுட்டிக் காட்டுவார்கள். 
            
அதோ அங்கே என்ன கூட்டம்? கூட்டமாக அமர்ந்து யார் பேசுவதை அப்படி உற்சாகமாக, ரசித்துச் சிரித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? நடுவே அமர்ந்து இப்படி எல்லோரும் ரசிக்கும்படிப் பேசிக் கொண்டிருப்பவர் யார்? அட! அது நீங்கள்தான்! 

               

ஆனால் இவ்வளவு இருந்தாலும், துளிக்கூட அகம்பாவமோ, கர்வமோ இல்லாமல் இருப்பது, உங்களுக்கு மட்டுமே சாத்தியம்! 
                   
உங்கள் நண்பர்கள் உங்களை பரிவு, பாசம், புரிந்துணர்வு மிக்கவராக, உற்சாகமூட்டக் கூடியவராக, எந்த சந்தர்ப்பத்திலும் தங்களுக்கு உதவக் கூடியவராகப் பார்க்கின்றார்கள். 
        

10 கருத்துகள்:

  1. இந்த அற்புத மனிதர்களை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி.

    வெகு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. இல்ல.. இல்ல.. இல்ல..
    அது நானில்ல.. !

    பதிலளிநீக்கு
  3. நன்றி. என்னை பற்றி நான் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. கலந்திருந்தால் இப்படி பேந்த பேந்த விழிக்காமல் இருந்திருக்கலாம்...வடை போன பின் வந்த ஞானம்....

    பதிலளிநீக்கு
  5. ஆஹா! நீங்க எல்லாம் என்னை பத்தி இப்படித்தான் நினைக்கிறீர்களா! பிரமாதம்! பிரமாதம்! வாழ்க எங்கள் ப்ளாக்!

    பதிலளிநீக்கு
  6. தற்பெருமை கூடாது என்பதால் நோ கமெண்ட்ஸ்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!