நான் ஒரு விகடன் பிரியன். இன்றைய காலகட்டத்தில் விகடனில் மட்டும் தான் சரியான விகிதத்தில் எல்லாம் தருகிறார்கள் என்று நினைக்கிறவன்.
ஒவ்வொரு இதழுக்கும் (சிலேடை இல்லை) ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அமுதசுரபி நான் வாங்கும் மற்றொரு பத்திரிகை. அவர்களுடைய ஸ்பெஷாலிட்டி அந்தக் காலத்து பெரிய எழுத்தாளர், பெரிய கவிஞர், பெரிய தேச பக்தர் இப்படியான ஒருவரது வாரிசு அல்லது ரசிகர் என்ன எழுதினாலும் அதை ஆர்வத்துடன் பிரசுரிப்பது.
குமுதம் வாங்கிக் கொண்டிருந்தேன். அதில் தலை தூக்கும் ஆபாசத்தை சகிக்க முடியாமல் அதை நிறுத்தி விட்டேன். எப்படியானாலும் விற்பனை என்பதே அவர்களது தாரக மந்திரம் போலும். வம்பு, கிசுகிசு தாக்கு கிளுகிளுப்பு என்று மசாலா மிக்சர் ஆக ஆக்கிவிட்டார்கள் நன்றாய் இருந்த குமுதத்தை. எஸ். ஏ பி என்ற கெட்டிக்காரர் மசாலாவை அளவாகப் போட்டு (நம்ம சுஜாதா மாதிரி) குமுதத்தை எப்போதும் டாப்பில் வைத்திருந்த காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகிறேன்.
அடுத்தது கல்கி. ரா.கி. மேலிருந்த பக்தி காரணமாக விடாப்பிடியாக கல்கி வாங்கிப் படித்தது ஒரு காலம். அது இப்போது முற்றிலும் நமக்குத் தெரியாதவர்களால் எழுதப் படுகிறது. விகடன் அளவு, விகடன் உத்தி, விகடன் எழுத்துரூ என்று என்ன செய்வது எப்படிச் செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதாக எண்ணத் தோன்றுகிறது.
என் அபிமான விகடனுக்கும் தோல் வியாதி, விக்கல், இருமல் வருவதுண்டு. என்றாலும் ஒப்பிடும்போது அது முன்னணியில் இருப்பதாக எனக்குப் படுகிறது. சமூக ஆர்வம், தொண்டு இவற்றில் அதன் பணி பாராட்டத் தக்கது.
இது விகடன் பாராட்டுக்கட்டுரை அல்ல. விகடனில் கவிதைகள் சொல்வனம் என்ற தலைப்பில் வெளியாகின்றன. குரு சுஜாதா சொன்ன மாதிரி யாரும் ஐம்பது வருஷம் கவிதை எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நமக்கும் தோன்றும்.
விகடன் கவிதைகளில் குழந்தைகளைக் கொண்டாடுவதும், காதலிக்கு ஆர்வச் செய்திகளை அனுப்புவதும் அடிக்கடி காணக் கிடைக்கிறது. "குழந்தை எடுத்துக் கொஞ்ச பொம்மையில் ஒளிந்திருந்தார் கடவுள்" என்ற பாணியில் நிறைய கவிதைகள். இவர்கள் எல்லாம் குழந்தைகளை அதட்டி, அடித்து, கண்டித்து வளர்க்கவே மாட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும். "ஏ சனியனே சோத்தை முழுங்கிட்டு பாடத்தை படிச்சுத் தொலையேன் " என்று கூவும் ரகம் அல்ல போலும்!
காதலி ஸ்தோத்திரம் இதற்கும் ஒரு படி மேலே. " கார்பன் டை ஆக்சைட் இருந்தால்தான் என்ன கண்ணே, அதுதான் எனக்கு தென்றல் காற்று, உன் மூச்சை என் முகத்தருகில் விடு" என்று புலம்பும் கவிஞர் குழு மிகப் பெரியது.
ஒரு பெண் வர்ணிக்கப் படுவதிலிருந்து அவள் ஸ்டேடஸ் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.
மென்மலர்
ஓவியம்\
காவியம்
தேவதை
என் நெருங்கிய சிநேகிதி.
என் ஆதர்சத் துணை
என் துணை
என் பெட்டர் ஹால்ப்
என் மனைவி
ஏய் உன்னைத் தானே
இந்த சனி
இன்னும் பலப் பல.
Age cannot wither, nor custom stale her infinite variety என்று ஷேக்ஸ்பியர் சிரஞ்சிவி வரி ஒன்றை எழுதினார். (அதை மதுரை மணி அய்யரின் இசைக்குப் பொருத்தி ஒரு ரசிகர் எழுதியிருந்தது வேறு விஷயம்). அது சராசரி வாழ்க்கைக்குப் பொருந்தாது என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு ஆண் அழைக்கப் படுவது இறங்கு வரிசையில் இப்படி இருக்கும்.
இந்த சனி,
இவரு
உங்க மாப்பிள்ளை, (அல்லது மாமா அல்லது தம்பி .....இப்படியாக )
டியர்
டேய்
ஹல்லோ
என் நலம் விரும்பி
என் நெருங்கிய நண்பர்
ஆனால் கவிஞர்களுக்கு ஸ்தாயி ஒரு இடத்திலிருந்து மாறுவதில்லை. ஜோக் எழுதுபவர்கள் இதற்கு நேர் மாறு. அது தனிக்கதை.
:: ராமன் ::
எங்கள் கமெண்ட்: இதுக்கு போட்டி பதிவு போடுவதற்கு கீதா மேடம் தயாரா?
தற்போது புதிய தலைமுறை நன்றாக உள்ளது. விகடன் எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து படித்து வருகிறேன். குமுதம், சுஜாதா ஆசிரியராக இருந்த பொழுது அடிகடி படித்ததாக நியாபகம். கல்கி ராஜநாராயணனின் திகல் பரவிய பொழுது தொடர்ந்து படித்தேன்.தற்போதைய அதன் புதிய வடிவமைப்பு சகிக்க வில்லை ...
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் விகடன் விகடன் தான்
நல்ல அலசல் ..
பதிலளிநீக்குகுமுதத்தில் பழைய 'கவர்ச்சி' இல்லை என்ற் தோன்றினாலும், குமுதம் தரம் குறையவில்லை. அப்படியே தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதே பார்முலாவை இழுத்து ப்லேஸ்டிக் பண்ணிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். நமக்குத்தான் வயதாகிவிட்டது. அல்லது ரசனையில் உயர்ந்துவிட்டோம் (எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளவும்).
பதிலளிநீக்குஎழுபது/எண்பதுகளில் கூட குமுதம் இதே போன்ற விமரிசனத்துக்கு உள்ளானது நினைவுக்கு வருகிறது. 'வயதானவர்களின் புலம்பல்' என்று அப்போது நினைப்பேன். இப்போது ரசனையுள்ளவர்களின் கரிசனம் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
அப்படிப் பார்க்கையில் விகடன் மிகவும் தரங்கெட்டு விட்டதாகத் தோன்றுகிறது. எனக்கு கல்கி, விகடன் என்றைக்குமே அவ்வளவாகப் பிடிக்காது - அதையும் சொல்லிவிடுகிறேன்.
மார்பிளவு காட்டும் நடிகைகளின் அட்டைப்படங்கள் விகடன் கல்கியில் எண்பதுகள் வரையில் நான் பார்த்ததே இல்லை.
பதிலளிநீக்குவெகுஜனப் பத்திரிகை என்பது வியாபாரம். வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள். சமூக உணர்வு இலக்கியம் எல்லாம் வேண்டுமென்றால் அதற்கு பக்கத்து கடை போக வேண்டியது தான்.
பதிலளிநீக்குஇருப்பதிலேயே most hypocritical பத்திரிகை விகடன் தான்.
பதிலளிநீக்குதில்லி வந்த பிறகு பத்திரிகைகள் படிப்பது குறைந்து விட்டது. நெய்வேலியில் இருந்தவரை தான் தொடர்ந்து படித்ததெல்லாம்! :)
பதிலளிநீக்குஅப்பாதுரை சொல்வதில் பாதி ஒத்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குராஜமுருகன் தொடர் அவர் படிக்கவில்லை என்று தோன்றுகிறது.
விளம்பரத்துக்கு அடிமையாகித்தன் தனித்துவத்தை இழந்தாலும் அவ்வப்போது தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறது விகடன்.
கல்கியையும் விட்டுவைக்கவில்லை மாறுதல்:(
குமுதத்தை எந்தக் காரணத்துக்காக நிறுத்தினேனோ அது எல்லாப் பத்திரிகைகளிலும் பரவி விட்டது.
ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று காத்திருந்த நாட்கள் உண்டு விகடனுக்காக.
பதிலளிநீக்குஅமுதசுரபியும் வாங்கி இருக்கிறோம்.
சர்க்குலேஸன் புத்தகங்கள் வாங்கும் போது எல்லா புத்தகங்களும் வாங்கி படித்துக் கொண்டு இருந்தேன்.
இப்போது எந்த பத்திரிக்கையும் வாங்குவது இல்லை.
ரயில் பயணங்களுக்கு புத்தகம் வாங்குவது உண்டு.
இணையத்தில் தினமலர் பத்திரிக்கையில் பிற இதழ்கள் என்ற பகுதியில் எல்லா புத்தகங்களில் உள்ள முக்கிய பகுதிகளை படித்துக் கொள்கிறேன்.
அலசல்... கலக்கல்...
பதிலளிநீக்குவிகடன் வடிவமைப்பு ஏமாற்றம் தருகிறது.ரசனைகளும் அவ்வப்போது மாறி வருகிறது.
பதிலளிநீக்குநல்ல அல்சல்.
பதிலளிநீக்குஎனக்கும் விகடன் தான் அதிகம் பிடிக்கும்.
குமுதம் அந்தக்காலத்து தரத்துடன் ஒப்பிடும்பொழுது குறைந்துவிட்டதா !!
பதிலளிநீக்கு//குமுதம் வாங்கிக் கொண்டிருந்தேன். அதில் தலை தூக்கும் ஆபாசத்தை சகிக்க முடியாமல் அதை நிறுத்தி விட்டேன். எப்படியானாலும் விற்பனை என்பதே அவர்களது தாரக மந்திரம் போலும். வம்பு, கிசுகிசு தாக்கு கிளுகிளுப்பு என்று மசாலா மிக்சர் ஆக ஆக்கிவிட்டார்கள் நன்றாய் இருந்த குமுதத்தை. //
ஆமாசம் என்பதே ஒரு ரிலேடிவ் டர்மினாலஜி. இட் ஆல் டிபென்ட்ஸ் ஆன் ஹௌ வி அப்ரோச் த சப்ஜெக்ட்.
ஜெயதேவரின் அஷ்டபதி எல்லா பாக்களின் அர்த்தம் எல்லோருக்கும் வார்த்தைக்கு வார்த்தை புரிஞ்சால் அதை சபைலே பாட முடியுமா ?அதில் இல்லாத கிளுகிளுப்பா ? சம்ஸ்க்ருதம் கற்றுக்கொண்டு அதை புரிந்துகொண்டா எல்லா மேடைகளிலும் பாடுகிறார்கள். ? . அது மட்டும் நன்றாக புரிஞ்சுதுன்னா !!!! இன்றைய குமுதம் தேவலாமே என்று தான் தோன்றும்.
என்ன , சில சமாசாரங்கள் இலை மறைவு காய் மறைவா அந்தக் காலத்துலே சாண்டில்யன் எழுதியபோது நம்ம எல்லாம் வரிக்கு வரி, பத்து தடவை
படிச்சு புளகாங்கிதம் ஆகிக்கொண்டு இருந்தோம். அம்மா அப்பா அந்த பக்கமா வரும்பொழுது புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக்கொண்டோம்.
இப்ப இந்தக்காலத்து புள்ளைங்களுக்கு அந்த ஒரு இன்டலக்சுவல் டிஸ்ஹானஸ்டி இல்லை. அதை நாம் ( கிழடுகள்) ஒத்துக்கொண்டால் தான் ஒரு பீஸ் ஆஃப் மைன்ட் உடன் காலம் தள்ள முடியும்.
யூ கான் ஃபைட் வித் எனிதிங்க். பட் நாட் வித் த ட்ரென்ட். வால்யூஸ் சேஞ்ச் ஃப்ரம் ஜென்ரேஷன் டு ஜெனரேஷன். ( திரு அப்பாதுரை வந்து இதை அப்படியே சுத்தத் தமிழில் சொல்லுவாராக )
சுப்பு தாத்தா.
எனது பின்னூட்டத்தில் ஆபாசம் என்பது ஆமாசம் என்று தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது.
பதிலளிநீக்குஆபாசம் என்பதே ஒரு ரிலேடிவ் டர்மினாலஜி. என்று படிக்கவும்.
வாசக தோஷஹ க்ஷந்தவ்யஹ.
சுப்பு தாத்தா.
இன்றைய காகிதப் பத்திரிகைகள், நாளைய எக்ஸ்க்ளூஸ்வ்லி இணைய இதழ்களாக இருக்கலாம்.
பதிலளிநீக்கு'குங்குமம்' உள்ளடக்கத்தில் எவ்வளவோ பரவாயில்லை!
எப்பவுமே விரும்பி படிக்கும் முதல் வார இதழ் விகடன்தான். அதிலும் முதலில் படிப்பது மதன் ஜோக்ஸ், கேள்வி பதில் பகுதிதான்.
பதிலளிநீக்குவார இதழ்கள் படிச்சு பல வருஷங்கள் ஆச்சு. இனி போனா மறுபடியும் அந்த சுவாரசியம் வருமான்னு தெரியல.
அப்பா வீட்டில் வாங்குவது கல்கி மட்டும்தான். கலைமகள்,
அமுதசுரபி இரண்டும் அவ்வப்போது வாங்குவார். மற்ற எல்லா வார இதழ்களும் சக குடித்தனக்காரர்கள் வீட்டில் இருந்து ஓசியில்தான். எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. அவங்க படிக்கறாங்களோ இல்லையோ எனக்கு வந்துடும். :) குமுதம், குங்குமம், சாவி, இதயம், பொம்மை, பேசும்படம், துக்ளக், ராணிமுத்து, மங்கையர் மலர், சினிமா எக்ஸ்பிரஸ் அத்தனையும் படிப்பேன்.
ஆனா இப்போ எல்லாம் எப்படி இருக்குன்னு தெரியாது. பாக்கணும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமையான கருத்து சூரி சார். இறைன்னதுமே ஆபாசம் எல்லாம் காக்கா உஷ் தான்.
பதிலளிநீக்குமொழிபெயர்க்கணுமா, பேஷா செஞ்சுடலாமே?
எதை வைத்தாவது நீ சண்டை போடலாம். ஆனால் போக்கை வைத்து முடிச்சு போடு. உற்பத்தியிலிருந்து உற்பத்தி வரை மதிப்பு சில்லறை.
(தமிழ் சினிமாப் பாட்டை இங்கிலிஷ் பண்ணி ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ், அதான் பின்னிட்டேன்)
ரொம்பவே சரி. எஸ்.ஏ.பி. நடத்திய குமுதத்தின் குசும்பும் நகைச்சுவை ரசனையும் டோட்டல் மிஸ்ஸிங். நட்சத்திரங்களின் பேட்டியும், மார்பிளவுப் படங்களும் (நன்றி அப்பாஸார்)தான் இப்போது காணக் கிடைக்கின்றன. கல்கி...? விகடனைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டு தள்ளாடுகிறது. தொடர்கதை என்கிற ஒரு விஷயத்தை அவர்கள்(ளாவது) செய்து கொண்டிருந்தார்கள். இப்போது ஆ.வி.யைப் பார்த்து அதையும் விட்டுவிட்டார்கள். சூரித்தாத்தா ரசிச்ச மாதிரி சாண்டில்யன், இன்னபிற எழுத்தாளர்கள் உருவாக எல்லாம் இனி வருங்காலத்தில...?
பதிலளிநீக்குintellectual dishonesty.. what a lovely term sury sir! excellent.
பதிலளிநீக்குintellectual dishonesty - what a lovely term sury sir! excellent.
பதிலளிநீக்குஎனக்கும் விகடன் தான் பிடிக்கும் புத்தகம் வாங்குவது இப்போது குறைந்து விட்டாலும் எப்போதும் வாங்கும் புத்தகம் விகடன் தான்.... சொல்வனத்தில் சில அருமையான கவிதைகளும் வருகிறது சார்..
பதிலளிநீக்குஉற்பத்தியிலிருந்து உற்பத்தி வரை மதிப்பு சில்லறை! ஹா ஹா ஹா - சிரிச்சு மாளலை அப்பாதுரை சார்!
பதிலளிநீக்குஅதிகம் விகடன் படித்ததில்லை ஆனால் அவர்களின் சமூக சேவை பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு...
பதிலளிநீக்குகுமுதம், குங்குமம் சினிமாவை மட்டும் நம்பி இருக்கின்றன...
அப்பாதுரையின் முழிபெயர்ப்பைப் படிச்சுச் சிரிக்க ஆரம்பிச்சது இன்னும் நிக்கலை. இந்தப்பதிவுக்கு பதில் எழுதணும்தான். ஆனால் கடந்த பத்து, பதினைந்து வருஷங்களாக விகடன் படிக்கிறதில்லை. புத்தகமா அது?
பதிலளிநீக்குகல்கி கொஞ்சம் பரவாயில்லை ரகமா இருந்தது. அதுவும் புலியைப்பார்த்து சூடு போட்டுக் கொண்டுவிட்டது. :((( நிறுத்திடலாம்னு யோசிக்கிறேன். இப்போதைக்கு துக்ளக் ஒண்ணு தான் படிக்கிறாப்போல் இருக்கு. :))))
எங்கள் கமெண்ட்: இதுக்கு போட்டி பதிவு போடுவதற்கு கீதா மேடம் தயாரா? //
பதிலளிநீக்குவிகடனைக் கிழிகிழினு கிழிச்சு எழுத ஆசைதான். :)))))))
எனக்குத் தெரிந்து குமுதத்தை எப்போதுமே ஆபாசம்னு தான் சொல்வாங்க. எங்க வீட்டிலே குமுதம் படிக்க எப்போதுமே 144 தடை உத்தரவு தான். நான் சின்ன வயசிலே அதிகம் படிச்சது கல்கண்டு, கண்ணன், மஞ்சரி, கலைமகள், ஆனந்த விகடன் ஆகியவையே. கல்கி தொடர்ந்து படிக்க ஆரம்பித்தது, அதில் இரண்டாம் முறையாகப்பொன்னியின் செல்வன் வந்தப்போ தான். குமுதம் அவ்வப்போது படிப்பேன். அவ்வப்போது கிடைக்காது.குங்குமம் அதன் ஆரம்ப காலங்களில் படிச்சிருக்கேன்.
பதிலளிநீக்குஎனக்கு பதிவு அப்டேட் ஆகாமல் கூகிள் சதி! :P :P :P :P அதனாலே தாமதமான பின்னூட்டம்.
பதிலளிநீக்குநானும் விகடன் ரசிகன்.
பதிலளிநீக்குஒரு முறையாவது சொல்வனத்தில் என் கவிதை வாறதா என்ற ஏக்கம் கிட்டத்தட்ட 25 வருடங்களாக தொடர்கிறது.
சிலேடை அல்ல -என்ற அந்த வரிகளில் ஒரு கவிதை ஒளிந்திருக்கிறது.
கல்கியில் பொன்விழா ஆண்டு கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். பொன்விழாவில் அழைத்து கௌரவப்படுத்தினார்கள். சுஜாதா போன்ற ஜாம்பவான்களை அருகில் பார்க்க முடிந்தது. கொஞ்ச காலம் கல்கி வாங்கி -- பிறகு நிறுத்தி விட்டேன்.
பதிலளிநீக்குநானும் கீதாவும் ஒரே படகில் மிதந்து கொண்டிருக்கிறோம். (அப்பாதுரை சிண்ட்ரோம்!)
பதிலளிநீக்குஎங்கள் வீட்டிலும் குமுதத்திற்கு என்றும் தடை தான். தினமணிக் கதிர், சாவி முதலியவை காணாமல் போனபிறகு கல்கி மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தோம். இப்போது எந்தப் பத்திரிகையும் வாங்குவதில்லை.
விகடன் நிலை பரிதாபம் தான்!