தொலைபேசியை எடுத்து, "ஹலோ" என்றேன்.
மறுமுனையில் பேசிய குரல், தொலைபேசி யார் பெயரில் பதிவாகி இருக்கிறதோ, அவர் பெயரைச் சொல்லி, 'அவர் இருக்கிறாரா' என்று கேட்டது.
'இல்லை.'
'அவருடைய அலைபேசி எண் கொடுப்பீர்களா?'
'மாட்டேன்.'
'ஏன்?'
'தெரியாது.'
'எப்போ வருவார்?'
'தெரியாது.'
'நீங்க யாரு?'
'தெரியா ...... இல்லை நான் அவருக்கு தூரத்து உறவு.'
'எவ்வளவு தூரம்?'
'முன்னூற்று நாற்பத்து ஒன்று கிலோ மீட்டர்!'
'உங்கள் பெயர் என்ன?'
'குப்புசாமி.'
'சரி, மிஸ்டர் குப்புசாமி, உங்களுக்கு எங்களுடைய இன்வெஸ்ட்மெண்ட் பிளான் பற்றி சொல்லட்டுமா?'
'வேண்டாம்.'
'ஏன்?'
'எனக்கு வருமானமே கிடையாது.'
'அப்போ எப்பிடி சாப்பிடுகிறீர்கள்?'
'கையாலதான்!'
மறு முனையில் பேசிக் கொண்டிருந்த குரல், மேலும் சம்பாஷணையை எப்படித் தொடர்வது என்று தெரியாமல், திகைத்து, இணைப்பை துண்டித்தார்கள்.
********* ***********
ஸ்ரீராமை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், அவர் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
'ஹலோ? ஸ்ரீராம் எங்கே?'
'ஆமாம். '
'அவர் ஆபீசில் ஆடிட் என்று சொல்லி காலையில் சீக்கிரமே கிளம்பிப் போயிருக்கிறார். '
'அலைபேசி கொண்டு செல்லவில்லையா?'
'எடுத்துக்கிட்டுப் போயிருக்கார்.'
'ஆனால் நான் கால் பண்ணினால், அலைபேசி சுவிட்ச் ஆஃப செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வருகின்றது?'
'ஆமாம். ஆடிட் நேரத்தில் அலைபேசியை ஆஃப் செய்து வைத்துவிடுவார். '
'ஓ? அப்போ சரி. எப்பவாவது அவர் வீட்டுக்கு கால் செய்தால், ஏகாம்பரம் பற்றி என்னிடம் பேச வேண்டும் என்று சொல்லிவிடு.'
'யாரு மாமா ஏகாம்பரம்?'
'கூகிள் ஏகாம்பரம் என்று சொன்னால், அவருக்குத் தெரியும்.'
'சரி.'
***************** ******************* ***************
மீண்டும் தொலைபேசி ர்ர்ர் ரிங் ரர்ர்ர்ர் ரிங்.
எடுத்தேன்.
'ஹலோ?'
'ஹலோ!'
மறுமுனையில் ஹலோ சொன்ன குரல், இதற்கு முன்பு பேசிய உபத்திரவ அழைப்பில் பேசிய குரல் போலவே இருந்தது.
'ஹலோ, நான் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், எனக்கு வருமானமே கிடையாது; என்னால் எங்கும் ஒரு பைசா கூட போடமுடியாது. இருந்தாலும் என்னால் சாப்பிட முடியும். கைகளாலும் சாப்பிடுவேன், ஸ்பூனாலும் சாப்பிடுவேன். போதுமா?'
'மாமா என்ன ஆச்சு உங்களுக்கு? இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?'
பேசியவர், ஸ்ரீராமின் தூரத்து சொந்தம். (ஹி ஹி - ஆமாம் தூரத்தில் வசிக்கின்ற சகோதரர்!)
'ஓ! நீங்களா!'
'ஆமாம்.'
'என்ன விஷயம்?'
'மாமா - உங்களுக்கு ஏற்காடு ஏகாம்பரம் என்று யாரையாவது தெரியுமா?'
'எனக்குத் தெரிந்தது எல்லாம் கூகிள் ஏகாம்பரம்தான். அதுவும் இன்று காலையில்தான்.அது போகட்டும், ஏற்காடு ஏகாம்பரம் யாரு?'
'அப்படி ஒருவர் சற்று நேரம் முன்பு எனக்கு போன் செய்தார்.'
'என்ன சொன்னார்?'
"இன்னும் ஒரு மணி நேரத்திற்குள், அவர் சொல்கிற இடத்திற்கு சொல்கிற அமவுண்ட் கொண்டு வந்து கொடுத்தால், ஸ்ரீராமை வீட்டுக்கு அனுப்புவோம். இல்லையேல் அவரை பல்லாவரம் பக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் சிறை வைத்துவிடுவோம்" என்றார்.
(முக்கியக் குறிப்பு: இந்தக் கதையில் காணப்படும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் -------------)
அனைத்தும் நிஜம் தானா...?
பதிலளிநீக்குஎன்னய்யா இது.. பாழடைஞ்ச பங்களானா பல்லாவரம் பக்கமா?
பதிலளிநீக்குOMG! Sriram anna, are you alright? அதான் உங்களை அரட்டைக்கச்சேரியில் காணவில்லையா? கடவுளே.. எப்படியாவது அந்த அமவுண்ட் கிடைக்காமல் பண்ணிடு.. ஏதோ சுஜாதாவின் யவனிகா படிச்ச மாதிரியே ஒரு ஃபீலிங்!
பதிலளிநீக்குஉங்கள் கற்பனையா... கனவில் வந்ததா ... :-)
பதிலளிநீக்குநல்ல காமெடி சார்.. போன் ல இப்படி பதில் சொன்ன நிஜமாவே திரும்ப தொந்தரவு பண்ண மாட்டாங்களா?
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் நாட்டில் நடக்குதே!
பதிலளிநீக்குராமா ஸ்ரீராமா எங்கிருந்தாலும் வந்துப்பா. பாழடைந்த் பங்களா வெல்லாம் வேண்டாம்.
பதிலளிநீக்குப ல ஆரம்பிக்கிற அத்தனை பிராணிகளும் இருக்கும்;)))))
அப்புறம் ஸ்ரீராமுக்கு என்ன ஆச்சு? அத சொல்லலயே!
பதிலளிநீக்குசீக்கிரமா மீட்டுக்கிட்டு வாங்க! பங்களா பார்க்க அத்தனை பாழடைஞ்ச மாதிரி இல்லை. பா, ப பிராணியெல்லாம் இருக்காதுன்னு நம்புவோம், வல்லிம்மா:)!
பதிலளிநீக்குAmount collect panna 'Nidhi' thirattalaama?!! :-))
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம்.. அப்புறம்....
பதிலளிநீக்குஸ்ரீராம் சார் எங்கே சீக்கிரம் சொல்லுங்க!
அடப்பாவமே!! ஸ்ரீராம் சாருக்கு என்னவயிற்று?? அவர் வீட்டுக்கு வந்தாரா இல்லையா?
பதிலளிநீக்குஶ்ரீராமை திருக்கடையூரில் தேடினீங்களா? அங்கே போகணும்னு சொல்லிட்டு இருந்தார். அது சரி, ஸ்ரீராமை எதுக்குப் பிடிச்சுட்டுப் போனாங்களாம்? பதிவு போடலைனா? இல்லாட்டி மொக்கைப் பதிவு போடறதாலேயா? இல்லைனா பாசிடிவ் செய்திகளில் ஏதேனும் தப்பு வந்துடுச்சாமா?
பதிலளிநீக்குதிருத்திட்டா விட்டுடுவாங்க தானே! இல்லாட்டியும் பரவாயில்லை, மெதுவா ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும். வழி தெரியும் தானே?
விழுப்புரத்திலே இருந்து நிலாவோட வந்து தாம்பரத்திலும் நிலாவைப் பார்த்ததாச் சொல்லி இருக்கார். இப்போத் தான் படிச்சேன். அதனால் வந்துட்டு இருக்கார் போல! :)))))
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு அப்லோடே ஆகலை. :(
பதிலளிநீக்குஸ்ரீராம் தப்பிச்சுண்டு வந்துட்டார். ஹிஹி, என்னோட பதிவுக்கு வந்து பின்னூட்டம் கொடுத்துட்டுப் போயிருக்காரே! :))))) நீங்க பாட்டுக்குப் பணத்தை எடுத்துண்டு போய் ஏமாந்துடாதீங்க!:))))))))))
பதிலளிநீக்கு