சனி, 21 செப்டம்பர், 2013

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) திரௌபதிக்கு உடையளித்த கிருஷ்ணன் அந்தக் காலம்.  தனியொருவராய் 400க்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தேடிச் சென்று உணவளிக்கும் இந்தக் காலக் கிருஷ்ணன் பற்றித் தெரிந்து கொள்ள...
                                            


2) படிப்பில்லாமல் குடிசைவாழ்க் குழந்தைகள் சமூகவிரோதிகளாகும் அபாயத்தைத் தடுக்க, 22 குழந்தைகளுடன் தொடங்கி, இன்று 250 குழந்தைகளுக்கு கல்வியும் மதிய உணவும் இலவசமாகவே கொடுத்து வரும் முத்துகிருஷ்ணன்.
                                                 


3)  'டயல் ஃபார் ப்ளட்' என்ற வாசகத்துடன் டி ஷர்ட் அணிந்திருக்கும் 27 வயது தருமபுரி இளைஞர் பற்றி விகடனில் செய்தி. அங்கு இந்தியன் பில்லர்ஸ் என்று இதற்காகவே பிரத்தியேக கால் சென்டர் நடத்தி வரும் வினோத் அமைப்பில் இதுவரை சுமார் 20,000 பேர் இரத்ததானமும், 218 பேர் கண் தானமும் செய்திருக்கிறார்களாம். ரத்த தானத்துக்குச் செய்யும் தொலைபேசிக் கட்டணத்தைத் தாங்கத்தான் அரசாங்க உதவியை நாடுகிறார் வினோத். அவர் கேட்பது ஒரு டோல் ஃப்ரீ நம்பர். இவரது தொலைபேசி எண் 9488848222. ரத்ததானம் செய்ய விரும்புவோர் இந்த தளத்துக்குச் சென்று பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.


4) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ஃபிரான்சிஸ் ஃபாண்டன் பெயரில் இயங்கும் இதய-மார்பு  மருத்துவ நிபுணர்களுக்கு என ஏற்படுத்திய EUROPEAN ASSOCIATION FOR CRDIO THORASIC SURGERY (EACTS) உலகம் முழுதும் உள்ள இத்தகைய மருத்துவர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கும் 'ஃபிராண்டன் பிரைஸ்' விருதைப் பெற்ற முதல் இந்திய மருத்துவர் சென்னையைச் சேர்ந்த சௌம்யா ரமணன். இவர் சென்னை முகப்பேரில் உள்ள டாக்டர் கே எம் செரியன் ஹார்ட் ஃபவுண்டேஷனில் ஃ பிரான்டியர் ஹெல்ப்லைன் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்.

                    
                                            

  5) இவரல்லவோ மனிதர்


                               


6) பெரிய நிறுவனம் என்று தயக்கம் பாராமல், நேரம் கெடுமே என்று சுணக்கம் பாராமல்,  நியாயத்துக்காக தைரியமாகப் போராடிய மெல்லிசைக்குழு நடத்தி வரும் ஸ்ருதி பாலாஜி பற்றிய செய்தி இட்லி வடையில்.

                                  

7) கடல் சுழலில் மாட்டிய தனது நண்பர்களைக் காப்பாற்றிய பள்ளி மாணவன் ரிஷி பற்றி அறிய...

                                                       

                              
                                                        
8) கடமையைச் செய்ய பயப்படாத துணிச்சல் பெண் சுகி பிரேமலா பற்றி... இந்த வருடம் முதல்வரிடமிருந்து 'கல்பனா சாவ்லா' விருது பெற்றவர் இவர்.

                                                     


9) கர்நாடக அமைச்சர் ஒருவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது அதிவேகத்தில் அவரது குழுவைத் தாண்டிச் சென்ற 7 பேர்கள் அடங்கிய கார் ஒன்று சற்று தூரத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததையும், அதிலிருந்த ஒருவர் உதவி கேட்டு ஜன்னல் வழியே கை நீட்டிக் கதறுவதையும் பார்த்து அமைச்சர் வண்டியை நிறுத்தி, அவரது ஓட்டுனர் (ரவிச்சந்திரன் என்று படித்த நினைவு) நீரில் குதித்துக் காரில் இருந்தோரைக் காப்பாற்ற, அமைச்சர் அருகிலிருந்த அதிகாரிகளுக்குத் தொலைபேசி, இவர்களுக்கு உதவ ஆவன செய்தாராம். பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஆபத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றிய ஓட்டுனரின் செயல் பாராட்டுக்குரியது.


 10) இயலாமை, முடியாது என்ற சொல்லையே மறக்கச் செய்த சக்கரநாற்காலியில் ஒரு சாதனையாளர்.

                                                     

18 கருத்துகள்:

  1. வழக்கம் போல கடந்த வார செய்திகள் அனைத்தையும் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள்.

    சிறப்பான பதிவு....

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் மிகவும் அருமை... சுட்டிகள் தந்தமைக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  3. செய்திகள் மனதிற்கு தெம்பளித்துப் போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்ல தொகுப்பு.
    சாதனை மனிதர்கள், சேவை உள்ளங்கள்!! 7,9 தக்க சமயத்தில் செய்யப்பட்ட உதவி.
    6. எல்லோரும் இப்படி கிளம்பினால்தான் சரி!

    பதிலளிநீக்கு
  5. பாலைகளுக்கு இடையே ஒரு
    சோலை

    அது தான் ஒரு
    ஆறுதலும்

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. இவ்வாறு தொகுத்து வழங்குவது
    நல்ல பணி! வாழ்த்து

    பதிலளிநீக்கு
  7. டயல் ஃபார் ப்ளட் மிக மிக உபயோகமான தகவல்

    பதிலளிநீக்கு
  8. எல்லாமே அருமையான செய்திகள். அறியாத "அரிய" தகவல்களும் கூட. தட்டச்சினீங்களா? நிறைய எ.பி. இருக்கு. இம்பொசிஷன் கொடுக்க நினைச்சேன். அப்புறமா இதுக்கு வேணாம்னு விட்டுட்டேன்.

    முதல்லே டாக்டர் செரியன்னு பேரை சரியா மாத்துங்க. செய்யன்னு போட்டிருக்கீங்க! :)

    பதிலளிநீக்கு
  9. சுட்டிகள் எல்லாவற்றிற்கும் சென்று படித்துவிட்டு வந்தேன். எல்லோருக்கும் பாராட்டுக்கள். சக்கர நாற்காலி சாதனையாளர் மிகவும் கவர்ந்தார். இவரல்லவா மனிதர் - இல்லை - இவரே மனிதர்! டாக்டர் சௌம்யா ரமணன், சுகி பிரேமலா, நண்பர்களைக் காப்பாற்றிய பள்ளி மாணவன் ரிஷி, அமைச்சர், உணவு வழங்கும் கிருஷ்ணன், இலவசக் கல்வி, உணவு வழங்கும் முத்துக்கிருஷ்ணன் சுருதி பாலாஜி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அனைத்துச் சுட்டிகளுக்கும் நற் செய்திகளுக்கும் நன்றி.
    சக்கர நாற்காலியில் ராஜ்யம் செய்யும்
    சாதனையாளர் மனதைத் தொடுகிறார்.
    ஸ்ரீ.ராஜண்ணா உயர்ந்த மனிதர்.வாழ்க பல்லாண்டு.
    அதே போல நாராயணன் கிருஷ்ணன் போன்ற மனிதர்களை அறிமுகம் செய்ததற்கும் எங்கள் ப்ளாகிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் அருமையான செய்திகள் லிங்க் கொடுத்தது மிகச்சிறப்பு! விரிவாக அறிய சுலபமான வழியாக அமைந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. எல்லா செய்திகளும் இதம். சூர்யாவின் சாதனைகள் வியக்க வைக்கின்றன. மாற்றுத் திறநாளிகள் மட்டுமின்றி அனைவரும் இவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. செய்திகள் அனைத்தும் நன்றாக இருந்தன. தன் திறைமைகளை கண்டு வேலை தந்தால் போதும் சூர்யாவின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டியது.
    குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. ரிஷியின் செயல் பாராட்டப்பட வேண்டியது தான்.

    கிருஷ்ணன் அவர்களின் தங்கும் இடம் கட்ட வேண்டும் என்ற ஆவல் நிறைவேற வாழ்த்துக்கள்.
    நல்ல மனிதர்கள் வாழ்க என்று வாழ்த்த தோன்றுகிறது இவரைப்பற்றி ஏற்கனவே படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான நல்ல உள்ளங்கள் பற்றிய விபரங்களுக்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!