திங்கள், 14 அக்டோபர், 2013

கல்கி, மக்கள் டிவி, ஆதார் கார்ட், தி இந்து, குடலை இட்லி, பிரபஞ்சன் - வெட்டி அரட்டை

 

கல்கி எவ்வளவோ காதல் கதைகள் எழுதியிருந்தபோதும் அவர் பாத்திரங்கள் ஒருபோதும் கட்டியணைத்துக் கொண்டதோ, குறைந்தபட்சமாக கன்னத்தில் கூட முத்தமிட்டுக் கொண்டதில்லையாம்.

தாகூர் எழுதிய ஒரு பகுதியை தமிழில் மொழிபெயர்த்த டி கே சி முத்தம் என்று வந்திருந்ததை இளமுறுவல் என்று மொழிபெயர்த்திருந்தாராம் - என்ன சம்பந்தமோ!

செம்மீன் கதையைத் தமிழில் சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தபோது மலையாளத்தில் சொல்லப் பட்டிருந்த 'சில' வர்ணனைகளை வெட்டித் தரச்சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்களாம்!

படித்தது.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

என்னதான் உச்சநீதிமன்றம் ஆதார் கார்ட் மானிய விவகாரங்களுக்காகக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று உத்தரவிட்டாலும் அரசு அதை மதிப்பதாகத் தெரியவில்லை. எரிவாயு உட்பட எல்லாவற்றுக்கும் கேட்டுக் கொண்டுதான் இருப்பதாகச் செய்தித்தாள் தகவல். எண்ணெய் நிறுவனங்களும் மனு போட்டிருக்கின்றன. நானும் ஆதார் கார்ட் வாங்கி விட்டால் நிறுத்தி விடக் கூடும் இந்தச் செய்திப் பகிர்தல்களை!

][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

தி இந்து தமிழ்ப் பேப்பரில் இரண்டாம் பக்கம் தினத் தந்தி சிந்துபாத் கதை போல ஒரு ஷெர்தில் பூதம் கதை வருகிறது! விகடன் இதழ் போல (அசோகன் அங்கிருந்து வந்தவர்தானே) தினமும் ஏதாவது ஒரு கட்டுரை... ஞானி, ஜெமோ, எஸ்ரா என்று யாராவது எழுதுகிறார்கள். தினமலர் போல நல்ல நேரம் ஜோதிடம்..சினிமாப் பகுதிகள்...  படிக்க நிறைய விஷயம் கிடைக்கிறது.
ஆனால் ஒன்று இரண்டாம் பக்கத்தில்  எனக்கு (நமக்கு) நிறைய பாஸிட்டிவ்  செய்தி கிடைக்கிறது!

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][

                                                      

ஊழல் விவகாரத்தில் லேட்டஸ்ட் சிறை லல்லுவுக்கு. மாறன் மீது வழக்கு பதிவாம். ஊழல் காரணமாக தண்டனை பெற்ற அரசியல்வாதி இந்தியாவில் உண்டா? அவர்கள் சம்பாதித்ததுதான் திரும்பப் பெறப் பட்டிருக்கிறதா? விடுங்கள்... அரசியல் நமக்கெதுக்கு...

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][[][][][][][][][][][][


சே. குமாரின் மனசு பதிவில் பிரபு படப் பாடல்களைப் பகிர்ந்திருந்தார். அதில் பாண்டித்துரை படத்தில் நான் அவ்வளவாகக் கேட்டிராத ஒரு பாடல் பகிர்ந்திருந்தார். எனக்கு அந்தப் படத்தில் மிகவும் பிடித்த பாடல் எஸ் பி பி - ஸ்வர்ணலதா பாடிய 'கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா ' பாடல். இளையராஜாவின் அருமையான இசையில் பாலுவின் கம்பீரக் குரலில் பாட்டு ச்ச்சும்மா இழுக்கும்!

பாடகர் Gaaனக் கருங்குயில் என்று பாடவேண்டும் என்றுதான் தோன்றும். குயில் பாட்டுக்கு ஃபேமஸ்! எனவே கானம் பாடும் குயில் என்று வரலாம். அதைக் காட்டுப் பறவையாக சேர்க்க முடியாது. எனவே 'க்கான'க் கருங்குயில் என்று பாடுவது சரி வராது. அப்போது கூட கானகக் கருங்குயில் என்று வர வேண்டுமோ என்னவோ...! 

ஏன் எஸ் பி பியும் ஸ்வர்ணலதாவும் Kaaனக் கருங்குயிலே என்று அழுத்தி அழுத்தி பாடுகிறார்களோ...

அதனால் என்ன... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...!



[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][]

குழல் இட்லியா? குடலை இட்லியா? டி கே எஸ் கலைவாணன் குழல் இட்லி, குழல் இட்லி என்றார். தேவாமிர்தம் என்ற ஒரு நிகழ்ச்சி மக்கள் டிவியில் வருகிறது. இது ஒரு வித்தியாசமான சமையல் கலை நிகழ்ச்சி. நான் வெள்ளி பிற்பகல் ஒருமணிக்குப் பார்த்தேன். தினமும் வருகிறதா என்று தெரியாது. யூ டியூபில் லிங்க் இருந்தால் இங்கு பகிரலாம் என்று தேடினேன், கிடைக்கவில்லை. 

இந்நிகழ்ச்சியில் ஒரு கோவிலைப் பற்றி காட்டுகிறார்கள். கோவிலின் சிறப்பைஎல்லாம் சொல்கிறார்கள். அந்தக் கோவிலின் நாயக தெய்வத்துக்கு உகந்த பிரசாதப் பொருளைச் சொல்லி விட்டு அதை எப்படிச் செய்வது என்று காட்டுகிறார்கள். இரண்டு முறை இந்நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். இரண்டு முறையும் பெருமாள் கோவில்தான். 

இப்போது பார்த்தது காஞ்சீபுரம் வரதராஜர் கோவில். அங்கு புகழ் வாய்ந்த இந்த குடலை அல்லது குழல் அல்லது காஞ்சீபுரம் இட்லி செய்து காட்டினார்கள். மண்பாண்டச் சமையல்.

பெருமாளுக்குச் செய்யும்போது காய்ந்த மிளகாய் சேர்க்கக் கூடாது என்றார் டி கே எஸ் க. பிரம்பால் ஆனா அந்தக் கூடை இப்போது அதிகம் கிடைப்பதில்லையாம். அதற்குள் அரிசி, உளுந்து மாவுக் கலவையில் மிளகு, சீரகம், நல்லெண்ணெய், அதே அளவு பசு நெய், சுக்கு என்று கலந்து, குழைத்து மனதார இலைகளால் மூடப் பட்ட அந்த பின்னப்பட்ட நீளவாக்குக் கூடைக்குள் விட்டு, மேலே மனதார இலையால் மூடி, மண்பாண்டத்தில் ஆதாரத் தட்டு என்று ஒன்று வைத்து, அதுவரை நீரூற்றி, அதில் இந்தக் கூடையை இருத்தி, மேலே பொருத்தமான அதே போன்றதொரு மன்பாண்டத்தால் மூடி மணிக்கணக்கில் வேக வைப்பார்களாம். (உஸ்... அப்பாடி!)

[]]][[][][][][][][][][][][][][][][][][][][][][][][[[][][][][][][][][][][][][][][][][][][][][][


                                                                   


கல்கியில் பிரபஞ்சன் எழுதும் மகாபாரதத் தொடர் அருமையாக இருக்கிறது. சுவாரஸ்யமாக இருக்கிறது. கதை மாந்தர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கொண்டு அவர்களைப் பற்றிச் சுருக்கமாக எழுதுகிறார். சிலரைப் பற்றிச் சொல்லும்போது இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே என்று தோன்றும். உதாரணம் பீஷ்மர், தர்மர், காந்தாரி.


18 கருத்துகள்:

  1. ஆதார் - மேலும் மேலும் குழப்பம் தான்...

    கச்சேரி பாட்டு இப்போது தான் கேட்கிறீர்களா...? !!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல தொகுப்பு. ஆதார் அட்டை வீணான செலவுகள்.மானியம் நேரடியாக கொடுக்க வேண்டும் என்றால் வேறு வழிகள் உள்ளன.

    பதிலளிநீக்கு
  3. தொகுப்பு அருமை.

    குழப்பங்கள் தொடரும். ஆதார் வாங்கி வைத்து விடுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  4. என்ன கனெக்ஷனா ?

    செம்மீன் படம் திருச்சி முருகன் தியேட்டரில் ஒரு காலை காட்சியாக பார்த்தது ஒரு அறுபது வருஷத்துக்கு முன்பா இல்லை ஐம்பது வருஷத்துக்கு முன்பு என நினைக்கிறேன்.

    காயலரிகத்து வலையளிஞ்சப்போ வள குலுக்கிய சுந்தரி எனும் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.

    அதை ஞான் எங்க காலேஜ் ஆநிவர்சரிலே பாடப்போய் அங்கன வந்திருந்த பெண் குட்டிகள் சந்தோஷித்து கண் சிமிட்டியது...எல்லாமே நினைவுக்கு வர்றது.

    அதிலே ஒன்னு......
    ஏன் சுவாமி, இந்த வயசான காலத்துலே இதெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வரீங்க....??


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  5. திரு. ஜெயமோகனின் 'நமக்குத் தேவை டான் பிரவுன்கள்' கட்டுரை (அக்.7)படித்தீர்களா? உணர்ந்தை உணர்ந்தவாறு சொன்ன கட்டுரை. வணிக எழுத்தாளர்கள் என்று ஒருகாலத்தில் கரித்துக் கொட்டியதற்கு பிராயச்சித்தமான கட்டுரை என்றும் கொள்ளலாம். ஜெமோ அடிக்கடி சொல்லும் வணிக எழுத்தாளர்கள் லிஸ்டில் இந்தத் தடவை பி.வி.ஆர். மிஸ்ஸிங். வணிக எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டு சேர்க்க பதிப்பாளர்கள் முயல வேண்டும்; இல்லையேல் அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று ஒரே போடாக போட்டு கட்டுரையை ஜெமோ முடித்திருந்தது அதிசயம். இந்த கருத்திற்காக ஜெமோவை முன்னிலைப்படுத்துகின்ற தளங்களில் எவ்வளவு சண்டை போட்டிருப்பேன் என்று நினைத்துப் பார்க்கையில் எனக்கு சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி DD கச்சேரிப் பாட்டா? எது?

    நன்றி TNM. சுப்ரீம் கோர்ட் எண்ணெய் கம்பெனிகளின் மனுவைப் பரிசீலிப்பதாய்ச் சொல்லியுள்ளது. பார்ப்போம்.

    நன்றி அப்பாதுரை. பொதுவாக அந்தக்கால எழுத்துகளில் ஆபாசம் என்ற ஒன்று இருப்பதைத் தவிர்த்தார்கள் என்று வந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுத்தது.

    நன்றி ராமலக்ஷ்மி. எங்கள் ஏரியாவுக்கு வந்து எடுக்கும்போது விடுவோமா?!! :)))

    நன்றி சுப்பு தாத்தா.

    நன்றி ஜீவி ஸார்... படித்தேன். அதன் சில வரிகளை முகநூலில் பகிர்ந்திருந்தேன். சுஜாதா, சிவசங்கரி, வாஸந்தி ஆகியோரை வணிக எழுத்தாளர்கள் என்று சொல்லியிருந்தார். இவர்களை ரசித்த வாசகர்கள் இப்போது இலக்கியம் பக்கம் ஒதுங்கியிருக்கிறார்கள் என்றார். சுஜாதா மறைவுக்குப் பின்னால் ரசிகர்கள் சேடன் பகத் படித்தார்கள் என்றார். படித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. காஞ்சீபுரம் இட்லி பற்றி பேச கீதா மேடம் வரணும்! :)

    பதிலளிநீக்கு
  8. //ல் ஒன்று இரண்டாம் பக்கத்தில் எனக்கு (நமக்கு) நிறைய பாஸிட்டிவ் செய்தி கிடைக்கிறது!
    // ஹா ஹா ஹா

    கல்கி படித்து பலநாளாகிறது.. மகாபாரதம் தொடருக்காக வேண்டுமானால் வாங்க முயல்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. அண்ணா...
    தொகுப்பு அருமை...
    கானக் கருங்குயிலே நல்ல பாடல்...
    இந்து பத்திரிக்கையில் இரண்டாம் பக்கம் பாஸிட்டிவ் செய்திகள் நிறைய கிடைக்கிறதா சந்தோஷம்... எங்களுக்கும் நிறைய படிக்கக் கிடைக்குமில்ல...

    பதிலளிநீக்கு
  10. நல்ல தொகுப்பு .
    குடலை இட்லி என்று தான் கேள்வி பட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. குடலை இட்லி என்கிற பெயர்தான் தெரியும். பூக்குடலை மாதிரி செய்து மந்தார இலைகளால் லைனிங் கொடுத்து செய்யும் அற்புதக் கலை அது.

    பதிலளிநீக்கு
  12. ஜெ­மி­னி ­க­ணே­சன் ­கட்ட்­டிப் ­பி­டி­க­கா­ம­லே­யே ­கா­தல் ­மன்­னன் ­­பட்­டம் ­வாங்ங்­கி­ன ­மா­தி­ரி­தான் ­கல்கி­யும்! நா­னும் ­இன்­னும் ­ஆ­தார் ­அட்­டை ­வாங்­க­லை. ப­டிக்­க ­சு­வா­ரஸ்­யம் ­தர்­ற ­எ­ழுத்த்­தா­ளர்­க­ளை ­வ­ணி­க ­எ­ழுத்த்­தா­ளர்­கள்­னு ­சு­ல­ப­மா ­சொல்ல்­லி­ட­றாங்­க...!

    பதிலளிநீக்கு
  13. அரட்டை - அருமை. ஆதார் - என்ன தான் .நடக்கிறது என்பது புரியாத புதிர்.....

    பதிலளிநீக்கு
  14. அப்போதைய கல்கியையும், இப்போதைய நிலையையும் என்ன சொல்ல?
    ஆதார் வாங்கியாச்சு! ஸோ, நோ வொரீஸ்!
    அங்கிருந்த பாட்டு வாத்தியார் Kaaன என்று தான் சொல்லிக் கொடுத்தாரோ என்னமோ?
    குடலை தான் சரி. வல்லி சொல்லியிருப்பது போல மந்தாரஇலையை பூக்குடலை போல செய்து அதனுள் இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுப்பார்கள். இதனை பொதுவாக காஞ்சிபுரம் இட்லி என்று சொல்வோம். வீட்டிலேயும் செய்வேன் - மைனஸ் குடலை!

    பதிலளிநீக்கு
  15. திரு ஜீவி அவர்களின் கருத்துரையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. ஆமாம், கல்கியின் காதலர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வது என்பது வெறும் கையைப் பிடிப்பது மட்டுமே! :)))))

    ஆதார் கார்ட் விவகாரம் ஒருவழியா எங்களுக்கு முடிஞ்சு போச்சு. காஸ் கம்பெனிக்கும் கொடுத்தாச்சு. மானியத்தைப் பத்தி அப்புறம் யோசிச்சுக்கலாம். :))))


    இந்து தமிப் பேப்பர் ஒரே ஒரு நாள் மாதிரிக்கு வாங்கிப் படிச்சது. அப்புறமா படிக்கலை.

    நீங்க சொல்ற எல்லாப் பாட்டுக்களுமே எனக்குப் புதுசு. ஹிஹிஹி, ரசனையே இல்லாமல் இருக்கேனோ! தெரியலை. ஜேசுதாஸ் கூட அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு பாடலைக் கொலை பண்ணி இருப்பாரே! "தெய்வம் தந்த வீடு" பாடலோ?

    குடலை இட்லி தான் சரியானது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காலம்பர எட்டரை மணிக்குப் போனால் பெருமாள் பிரசாதமாக இலவசமாகக் கிடைக்கும். அறநிலையத் துறைக்காரங்க கொடுப்பது பிரசாதம் இல்லை. :))))

    பொதுவாகவே சுவாமி பிரசாதம் செய்கையில் மிளகு, சீரகம் தான் சேர்க்கணும். என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் கூடப் பெருமாள் கோயில் புளிக்காய்ச்சலில் குறிப்பிட்டிருப்பேன். குடலை இட்லி எங்க வீட்டிலேயும் செய்வோம். ஆனால் இந்தக் குடலையில் வைக்காமல் சாதாரண இட்லி போல துணி போட்டு வேக வைத்துச் செய்வேன். இதற்குத் தொட்டுக்க கொத்சு தான் சிறப்பான காம்பினேஷன்.

    கல்கி வாங்கறதையே நிறுத்திட்டேனா. இதெல்லாம் தெரியவே இல்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!