Wednesday, October 30, 2013

உள்பெட்டியிலிருந்து 10 2013 அன்பு மனித பலவீனத்தைக் காட்டுகிறது. சூழ்நிலை உண்மை மனிதனைக் காட்டுகிறது!

                                            


 சிரிப்பைவிடக் கண்ணீரின் மதிப்பு எப்போது தெரியும்? எல்லோருக்கும் முன்னால் சிரிக்க முடியும். ஆனால் நெருக்கமானவர்கள் முன்னே மட்டுமே அழ முடியும்!


 இவருக்கு இப்படி ஒரு ஆதங்கம்!

புதிய மனிதர்களுடன் பேசாதே என்று அறிவுரை கூறும் அதே பெற்றோர்கள்தான் காதல் திருமணத்தை எதிர்த்து, நிச்சயிக்கப்படும் திருமணத்தை ஆதரிக்கிறார்கள். உன் முகத்தைப் பார்க்கும்முன்பே உன்னை நேசிக்கத் தொடங்கிய உன் அம்மாவின் அன்பை விடவா பார்க்காத காதல்கள் பெரிது?


 

 உங்கள் கண்ணீரைத் துடைப்பவரா? அவர் நினைவினாலேயே கண்ணில் நீரை வரவைப்பவரா? இருவரில் யார் உங்களுக்கு மனதுக்கு நெருக்கமானவர்?


 நிரூபிக்க முடியாவிடில் குற்றம் சாட்டாதீர்கள்.
மன்னிக்க முடியாவிட்டால் குறை சொல்லாதீர்கள்.
மறக்க முடியாவிட்டால் மன்னிக்காதீர்கள்.
 எந்தச் செல்வத்தினாலும் வாங்க முடியாதது நேரம். அந்த நேரத்தை உங்களுக்காகச் செலவழிப்பவர்களைப் புண்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களிமேல் வைத்திருக்கும் மதிப்பைப் புரிந்துகொள்ளுங்கள்.


 சினிமாத் திரை எல்லா கேரக்டர்களையும் பிரதிபலித்தாலும் வெண்மையாகவே இருப்பது போலவே நம் மனதையும் வைத்துக் கொள்ளலாமே...! நீங்கள் அறிந்ததற்கும், நீங்கள் உணர்வதற்கும் நடக்கும் யுத்தமே பெரிய யுத்தம்!


 நெருக்கம் மறையும்போது சம்பிரதாயங்கள் பிறக்கின்றன.


 வசதியான வரவைவிட உள்நுழைவைவிட வெற்றிகரமான வெளியேற்றம் நல்லது. பிரவேசிக்கும் பொழுதின் கைத்தட்டலை விட, வெளியேறிய பின்னும் நாம் நினைக்கப்படுவது சிறந்தது. 

 இதயம் என்பது சென்ட் பாட்டில் மாதிரி. திறக்காவிட்டால் வாசம் தெரியாது. திறந்தே இருந்தால் வாசம் இருக்காது!


 உங்கள்மேல் ஒருவர் கோபம் கொள்வது குறைந்து வருகிறது என்றால் நிச்சயம் அவரது வாழ்வில் உங்களுக்குள்ள முக்கியத்துவம் குறைகிறது என்று பொருள்! 


 சரியான மனிதர்களுடன் ஒத்துப் போவது எப்போதுமே தவறான மனிதர்களுடன் விவாதிப்பதைவிடச் சிறந்தது. பொருளில்லா வார்த்தைகளைவிட, அர்த்தமுள்ள மௌனம் சிறந்தது.

16 comments:

நம்பள்கி said...

[[உங்கள்மேல் ஒருவர் கோபம் கொள்வது குறைந்து வருகிறது என்றால் நிச்சயம் அவரது வாழ்வில் உங்களுக்குள்ள முக்கியத்துவம் குறைகிறது என்று பொருள்! ]]

உண்மை தான் போல! என் மனைவி என் மேல் வைத்துள்ள ""அன்பை"" வைத்து நான் சொல்லுகிறேன். நீங்கள் சொல்வது உண்மை.

தினமும் என் மனைவி என்னை திட்டும் திடும்...etc...

தமிழ்மணம் பிளஸ் +1 வோட்டு போட்டாச்சு!

திண்டுக்கல் தனபாலன் said...

பெரிய யுத்தம் உட்பட அனைத்தும் அருமை... நன்றி...

தமிழ்மணம் இணைக்க வழிமுறைகளை தங்களின் மெயிலுக்கு அனுப்பி இருந்தேன், கிடைத்ததா...?

இராஜராஜேஸ்வரி said...

நிரூபிக்க முடியாவிடில் குற்றம் சாட்டாதீர்கள்.
மன்னிக்க முடியாவிட்டால் குறை சொல்லாதீர்கள்.
மறக்க முடியாவிட்டால் மன்னிக்காதீர்கள்.அருமையான வரிகள்..!

இளமதி said...

அத்தனையும் மிக மிக அருமை!

எல்லாமே மனதில் இடம் பிடித்துக்கொண்டன..

பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

ஹேமா (HVL) said...

உங்கள்மேல் ஒருவர் கோபம் கொள்வது குறைந்து வருகிறது என்றால் நிச்சயம் அவரது வாழ்வில் உங்களுக்குள்ள முக்கியத்துவம் குறைகிறது என்று பொருள்!
- உண்மை

Geetha Sambasivam said...

கடைசிப் படம் தெரியலை. :))) எல்லாமே நல்லா இருக்கு.

Geetha Sambasivam said...

அலேக் அனுபவங்கள்னு டாஷ் போர்ட் காட்டுது, வந்தால் ஒண்ணும் இல்லை. :))))

kg gouthaman said...

அலேக் அனுபவங்கள் நாளைக் காலை நான்கு மணிக்கு பதிவேறும். ச்செடியூல் செய்யாமல் பப்ளிஷ் கொடுத்ததால் குழப்பம்.

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொன்றும் அருமை. கடைசி, மிகப் பிடித்தது.


sury Siva said...சுப்பு தாத்தா.


வல்லிசிம்ஹன் said...

அத்தனை வரிகளும் அருமை. கோபம் பற்றிய எண்ணம் நிதர்சனமாக உணர்வது.
நிருபிக்க முடியாவிட்டால் குற்றம் சொல்லாதீர்கள்.//எடுத்துக் கொடுத்த வரிகள் அனைத்தும் பொன்னானவை. நன்றி எபி.

Geetha Sambasivam said...

சுப்பு தாத்தா என்ன எழுதி இருக்கார்?? எனக்குத் தான் தெரியலையா???????????????????

ஸ்ரீராம். said...

நன்றி நம்பள்கி.

நன்றி DD

நன்றி RR மேடம்.

நன்றி இளமதி.

நன்றி ஹேமா (HVL)

நன்றி கீதா மேடம்.

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி சுப்பு தாத்தா!

நன்றி வல்லிம்மா.

கீதா மேடம்... சொல்ல ஒன்றுமில்லை என்பதை சுப்பு தாத்தா மறைமுகமாச் சொல்றார்!

sury Siva said...


//
சொல்ல ஒன்றுமில்லை என்பதை சுப்பு தாத்தா மறைமுகமாச் சொல்றார்!//
no.
//.பொருளில்லா வார்த்தைகளைவிட, அர்த்தமுள்ள மௌனம் சிறந்தது.//
yes.that is
சும்மா இரு.
s.t.


அப்பாதுரை said...

//சூழ்நிலை உண்மை மனிதனைக் காட்டுகிறது!

இங்கே 'மனிதன்' பெண்பாலைக் குறிக்க வேண்டும்.

sathya nammalwar said...

"நிரூபிக்க முடியாவிடில் குற்றம் சாட்டாதீர்கள்.
மன்னிக்க முடியாவிட்டால் குறை சொல்லாதீர்கள்.
மறக்க முடியாவிட்டால் மன்னிக்காதீர்கள்."
எல்லா பிரச்சனையான தருணத்திலும் சிந்திக்க வேண்டிய வரிகள்....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!