சனி, 26 அக்டோபர், 2013

பாஸிட்டிவ் செய்திகள்


1) படிக்கவில்லை. ஆனால் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். குறைந்த செலவில் மின்சாரம் உட்பட புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் சுப்பிரமணியம்.
                                    

2) சம்பளத்துக்காக மட்டும்தான் வேலையா? இல்லை என்கிறார் புதுமைப் பெண் பிரான்சிஸ் ஆரோக்கிய மேரி!
                                                    


3)  சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமுர்த்தி என்ற இளைஞர் 2012 கான "rolex award" ஐ சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் பெற்றுள்ளார் .  

                                                    
 

இவர் முன்பு கூகிள் நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தார். அதை துறந்து விட்டு ஒரு சுற்று சூழல் பாதுகாக்கும் நிறுவனத்தை சென்னையில் நிறுவி, அதை வேறு இரண்டு இந்திய மாநிலங்களிலும் விரிவு படுத்தி உள்ளார், இவரது தொண்டு நிறுவனத்தில் 900கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இலவசமாக வேலை செய்கின்றனர்.

அவருக்கு rolex நிறுவனம் அளித்த பரிசு தொகையான "50'000 சுவிஸ் பிராங்குகளை" அதாவது "2'993'792.70 ரூபாய்களை சென்னையில் உள்ள கீழ்கட்டளை பெரிய ஏரியை சீர் அமைக்க பயன்படுத்துவார். இவருக்கு நாமும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.


அந்த இளைஞரின் தொடர்பு விபரம் :
Arun Krishnamurthy:
9940203871, 9500043483, 9884737757
Mail us at: arunoogle@gmail.com, efievents@gmail.com
 
4) இது ஒரு பாஸிட்டிவ் செய்தியா என்று நீங்கள் நினைக்கலாம். ஏற்கெனவே இதய நோயை 80 களிலேயே எதிர்த்து நின்று இது வரை தாக்குப் பிடித்திருக்கிறார், இந்த 90 வயதில் வந்திருக்கும் புற்று நோயை எண்ணி மனம் தளராமல் மிகுந்த பாஸிட்டிவாக இருக்கும் இவரைப் பார்த்து மற்றவர்களுக்கும் தைரியம் வரலாமே. நாகேஸ்வர ராவ்
                                                 
 
5) அரசாங்கத்தை நம்பாமல், நடமாட முடியாத நிலையிலும் கூட, ஏற்கெனவே நடத்தி வரும் ஆதரவோற்றோருக்கான ஆறுதல் நிழலைத் தரும் திரு சிவப்பிரகாசம் பற்றிய செய்தி. 89 இல் சின்னதா ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலா இருக்கு. 2004-ல் சாலை விபத்தில் சிக்கி இவர் படுத்த படுக்கையாய் ஆனாலும், பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் போன்றவர்கள் உதவியோடு தொடர்ந்து ஆதரவு தரும் நல்ல மனிதர்.
                                      
 
6) அடுத்தவரைச் சொல்வதை விட, நாமே செய்து காட்டினால் நல்ல உதாரணமாக இருக்கும் என்று செய்து காட்டி மாணவர்களை வழி நடத்தும் பாசிட்டிவ் ஆசிரியர் ஜோதிமணி
                                            
 
7) சட்டம் படித்திருந்தால்தான் சட்ட நுணுக்கங்கள் தெரியுமா என்ன? இல்லை கோர்ட்டில் தனக்கு வாதாடிக் கொள்ள சட்டம் படித்திருக்க வேண்டுமா?  இல்லை என்று நிரூபிக்கும் பெரம்பலூர் எளம்பலூர் ராஜேந்திரன், அதை மக்களுக்கும் எடுத்துரைக்கிறார்.
                                          

 
8) ஈர நெஞ்சம் அமைப்பினரின் இன்னொரு நற்செயல். செய்யப்பட்டு துரத்தி விடப்பட்டு நடக்க இயலாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்த அவரின் நிலையைகண்டு B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தது.
                                                    

ஸ்ரீராமலுவை விசாரித்ததில் அவர் இரயில்வே துறையில் பணியாற்றியதும் மேலும் அவருக்கு கிடைக்கும் பென்ஷன் பணத்தை கேட்டு தனது மகன்கள் சித்ரவதை செய்து கைவிடப்பட்டதும் தெரியவந்தது. யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கு ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார்.
 
 
9) சாதனை ஆட்சியாளர் சகாயத்தின் இன்னொரு சாதனை. 'சத்து' இல்லாத துறையில் அவரைத் தூக்கிப் போட்டது அரசு. ஆனால் அங்கும் தன்னால் என்ன முடியும் என்று நிரூபித்திருக்கிறார். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கோ ஆப்டெக்சை நம்பிக்கையுடன் புதிய திட்டங்களால் நிமிர்த்தி இருக்கிறார். (நேரடிச் செய்திக்காக 'தி இந்து' பக்கத்தில் தேடித் தேடித் தேடி... கிடைக்காததால் இந்த லிங்க்!)




19 கருத்துகள்:

  1. தொடரும் பாசிட்டிவ் செய்திகள்......

    நல்ல மனம் வாழ்க..... நாடு போற்ற வாழ்க!

    பதிலளிநீக்கு
  2. வேங்கட நாகராஜ் அவர்கள் வலையிலே ஒரு துயர நிகழ்வினைப்படித்த பின்பு,

    இங்கு வந்தேன்.

    உலகத்தில் நல்லவர்களும் வல்லவர்களும் இருக்கையிலே ஒரு வகை புல்லினங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

    அவர்களுக்கும் நல்லவை புகட்ட நீங்கள் குறிப்பிட்ட மா மனிதர்கள் தாம் வாழ்ந்து காட்டி சமூகத்தை வழி நடத்துகிறார்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. ஈர நெஞ்சம் அருமையான பணியை செய்து வருகின்றனர்... இவர்களைப் பற்றியது புதிய தகவல்...

    பதிலளிநீக்கு
  4. அருண் கிருஷ்ணமுர்த்தி அவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்... வாழ்த்துகளை அனுப்புகிறேன்... மற்ற அனைத்து பாசிட்டிவ் செய்திகளுக்கும் மிக்க நன்றி... தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  5. பாசிடிவ் செய்திகள் மனதை உற்சாகப் படுத்துகின்றன

    பதிலளிநீக்கு
  6. அத்தனையும் அருமையான செய்திகள். தெரியவும் தெரியாத செய்திகள், முதல் முறையாக! :)))))

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கை விதைக்கும் பாசிட்டிவ் செய்திகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. ஈர நெஞ்சங்களுக்கு முதலில் வணக்கங்கள்.
    சட்டம் படிக்காமல் வாதாடும் மானுடருக்கும் நமஸ்காரம்.
    நம் நாகேஸ்வர ராவுக்கும் நல்வாழ்வு இறைவன் கொடுக்கட்டும்,.
    அனைத்துப் பாஸிட்டிவ் செய்திகளுக்கும் மிக நன்றி. மனம் விசாலமாகிறது மகிழ்ச்சியில்.

    பதிலளிநீக்கு
  9. கெட்டவை பற்றி பேசிப் பேசி எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதைவிட நல்லவையை மட்டுமே தெரியும் படுத்தும் முயற்சி நன்று.

    பதிலளிநீக்கு
  10. " நல்லார் ஒருவர் உளரேல் அவர் போட்டுட்டு எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை."---திரு. அருண் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிப் படித்த போது தோன்றியது .
    கலெக்டர் திரு. சகாயம் அவர்களுக்கு என் சல்யூட்.பாசிடிவ் செய்திகள் நம்பிக்கையுட்டுகின்றன.தொடருங்கள்......
    வாழ்த்துக்கள்




    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் சிறப்பான செய்திகள்! புற்று நோயை எதிர்த்து போராடும் நாகேஸ்வர ராவின் உறுதி பாராட்டத்தக்கது. அதே போல் காலிழந்தும் ஆதரவற்றவர்களுக்கு உதவுபரின் ஆர்வமும் தன்னம்பிக்கையும் சிறப்பானது! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. ஆரோக்கிய மேரி பற்றி மட்டும் படித்திருக்கிறேன். மற்ற செய்திகளையும் படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. ஆரோக்கிய மேரி பற்றி மட்டும் படித்திருக்கிறேன். மற்ற செய்திகளையும் படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நம்பிக்கை தரும் நல்ல செய்திகள். கோ ஆப் டெக்ஸ் செய்தி மட்டும் அறிந்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  15. அத்தனையும் அருமையான விபரங்கள்!
    அசத்தலான, பயன் தரக்கூடிய, நல்ல விபரங்களை வாராவாரம் தொகுத்துத் தரும் உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. பாசிட்டிவ் செய்திகள் அருமை...
    அரசியல்வாதிகளால் நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பந்தாடப்படுவதும் உப்புச் சப்பில்லாத துறைக்கு மாற்றப்படுவதும் அங்கு அவர்கள் சாதிப்பதும் எப்பவும் நடப்பதே... இறையன்பு கூட அப்படி மாற்றபட்டிருந்தார். போன முறை அம்மா ஆட்சிக்கு வந்தபோது... அதிலும் சாதித்தார்.

    திரு. சகாயம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. எல்லா செய்திகளும் அருமை. உண்மையான மனிதநேயம், தன்னம்பிக்கை, ஈரநெஞ்சம், செய்யும் தொழிலை உயர்வாய் நினைத்து நம்பிக்கையுடன் உழைப்பது என்று அருமையான மனிதர்களைப்பற்றிய செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே நல்ல செய்திகள் .தினமும் பேப்பரை பார்த்து மனமே கல்லாகி விட்டது .உங்கள் செய்திகள் மனிதம் இன்னும் வாழ்வதை உறுதிப் படுத்துகின்றன

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!