சனி, 5 அக்டோபர், 2013

சென்ற வார நல்ல செய்திகள்...


1) ஏழை தச்சுத் தொழிலாளி சாலையில் தவறவிட்ட 50,000 ரூபாயை கண்டெடுத்து  காவல்துறையில் ஒப்படைத்த சென்னை, அயனாவரம் டெய்லர்,  அப்துல் முஸ்தாக்.
                                              

2) இந்த கண்டுபிடிப்புகள் நடைமுறையில் எந்த அளவு சாத்தியம் என்று (இப்போது) தெரியா விட்டாலும் இது மாதிரி கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கும் மாணவனைப் பாராட்டலாம்! தண்ணீரில் இயங்கும் பைக், மற்றும் சோலார் சைக்கிள்.

                                                        

3) தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா பற்றி தமிழ் இந்து செய்தி.மரங்களை சக உயிரியாகவே நினைக்கிறார். அவற்றோடு பேசுவாராம்.

                                            

4)  சட்டைக்குள் கருணை. ரயிலில் அடிபட்டு இறக்கும் அன்கிளேயிம்ட் உடல்களை சிரத்தை எடுத்து,சகல 'காரியங்களுடன்' அடக்கம் செய்வது,  வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர் சிறுமிகளை அவரவர் வீட்டில் ஒப்படைப்பது என்று மனிதம் நிறை ரயில்வே காவலர் சுப்புராஜ் பற்றி தினமலரில் 

                                              

5) தன்னம்பிக்கை மனிதர் சேலம் எஞ்சினியர் சிவானந்தம்.
                                             


6) 'வாஷ்­பே­சி­'னி­லி­ருந்து வீணாகும் கழி­வு­நீரை, குறைந்­த­பட்ச மறு­சு­ழற்சி மூலமே நன்­னீ­ராக மாற்றி, மீண்டும் பயன்­ப­டுத்தும் முறையை கண்­டு­பி­டித்த மாணவர். இதை எவ்வளவு பேர்களால் செய்ய முடியும், பின்பற்றமுடியும் என்று தெரியவில்லை என்றாலும் கண்டுபிடித்த இந்த மாணவர் லயோலா பி எஸ் சி வேதியியல் படிக்கும் வைஷ்ணவ் இதற்காக மேயரிடமிருந்து பரிசு பெற்றிருக்கிறார்.
                                        


7) மதுவினால் சீரழிந்துகொண்டிருந்த ஒரு கிராமத்தையே, அந்த மக்களின் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஊட்டி, தடுத்து நிறுத்தி, மது இல்லாத கிராமமாக மாறவைத்த தங்கமான மனிதர் தங்கவேலின் சாதனை.

      


8) சிலசமயம் கடமையைச் சரிவரச் செய்தாலே கூட நல்ல செய்திதான். அப்படி ஒருவர். கூடுதலாக ஏழை மாணவர்களின் படிப்புக்கும் உதவி. விஜயராகவன்.
                                              



9)  சின்னஞ்சிறு பெண்ணின் ஞாபகசக்தி.
                                               


10) திருநங்கைகளுக்கு வீடு வாங்கிக் கொடுத்த சுஜாதா. 

 


11)  அலைபேசியை வைத்துக் கொண்டு 'கேம்ஸ்' விளையாடும் சிறுவர்களுக்கிடையே 7வது 9வது  வகுப்புகளில் படிக்கும் சிறுவர்கள்,  அதன் மூலமே இன்று இளம் தொழிலதிபர்களாக இருக்கும் செய்தி.

                             


12) உலகிலேயே மிக சிறந்த, குட்டி 'உளவு விமான'த்தை கண்டுபிடித்த தமிழன், செந்தில் குமார்

                                               



13) நெய்தலில் ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்து பரிசு வாங்கியிருக்கும் பானுமூர்த்தி.

                                 


14 கருத்துகள்:

  1. கண்ணில் பட்ட நல்ல செய்திகளை
    பதிவாக்கி எங்களையும் காணவைத்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்




    பதிலளிநீக்கு
  2. நல்ல செய்திகள் உற்சாகம்மளித்தன..

    பதிலளிநீக்கு
  3. மனதினை சந்தோஷப்படுத்தும் நல்ல நிகழ்வுகளினை பதிந்து உறசாக்மூட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. எதைச் சொல்வது எதை விடுவது.
    எத்தனை நல்ல செய்திகள். நற்செயல் புரிந்து பணம் திருப்பிக் கொடுத்ததையா, மரங்களின் தோழர் தாத்தவைப் பற்றியா,''காரியங்கள்'' செய்யும் நல்ல மனிதரைப் பற்றியா. அனைத்தும் நல்லவையே. படிக்கும் போதே மனம் பூரிக்கிறது. மிக மிக நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நல்ல செய்திகளைத் தொகுப்பாக்கியிருக்கிறீர்கள் அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கண்ணில் கண்ட நல்லவைகளை காட்சி படுத்தி எங்களை காண வைத்தமைக்கு மிகவும் நன்றி.
    அயனாவரம், டெயலர் அபதுல்முஸ்தாக் வாழ்க வளமுடன்.இயற்கையோடு பேசும் விஞ்ஞானி தாத்தா வாழ்க வளமுடன்.மனிதநேயம் மிக்க காவலர் சுப்புராஜ் வாழ்க வளமுடன். அவர் பணி வணக்கத்துக்கு உரியது.
    மது இல்லா கிராமம் தந்த திரு.தங்கவேலு அவர்கள் சாதனை மகத்தான சாதனைதான், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. அப்துல் முஸ்தாக் போன்றவர்கள் தான் மனிதத்தை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    தண்ணீரில் இயங்கும் பைக், மற்றும் சோலார் சைக்கிள் கண்டுபிடிப்புகளை பெரிய அளவில் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
    இயற்கை விஞ்ஞானி தாத்தா பல பேரன்களை உருவாக்கட்டும்.
    காவலர் சுப்புராஜ் நம் பாராட்டுக்களைப் பெறுகிறார்.
    தண்ணீர் தட்டுப்பாடு சமயத்தில் வைஷ்ணவ்வின் யோசனைகளை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும்.

    தங்கவேலின் சாதனை அசாதாரணமானது. அத்தனை குடும்பங்களின் வாழ்த்துக்களுடன், நம் வாழ்த்துகளும்.

    ரேஷன் கடத்தல்களை தடுத்து, அரசு பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் பொருத்தி - ஏழை மாணவர்கள் படிக்க உதவி - எத்தனை சாதனைகள்!விஜயராகவன் அவர்களுக்கு standing ovation!

    சிறுமி பாக்யஸ்ரீயின் நினைவாற்றல் புதுமையாக இருக்கிறதே! பிற்காலத்தில் மருத்துவராக வருவாரா?

    இளம் தொழிலதிபர்கள் ஷ்ரவண் குமரன் சஞ்சய் குமரன் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    திருநங்கைகளின் தோழி சுஜாதா, தமிழன் செந்தில் குமார், பானுமூர்த்தில் இவர்களுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே நல்ல செய்திகள். இந்தக் கழிவு நீரை மறு சுழற்சி செய்யும் திட்டம் ஏற்கெனவே சென்னையில் இயங்கி வருகிறது. தாம்பரத்தை அடுத்த கடப்பேரியில் தோஷி&தோஷி கட்டிடக் கான்ட்ராக்டர்கள் கட்டிய குடியிருப்பு வளாகத்தில் இந்த ஏற்பாடு இருக்கிறது. (மேற்கு)தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரண்டு கிலோமீட்டருக்குள் இருக்கிறது. அங்கே இம்முறை செயல்படுத்தப் போவதாக நாங்க அங்கே வீடு பார்த்தப்போ ப்ளான்டுக்குக் கூட்டிச் சென்று காட்டினார்கள்.

    பதிலளிநீக்கு
  10. காவலர் சுப்புராஜுக்கும், திரு தங்கவேலுக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல தகவல்கள்.

    இந்த முறை 13-ல் 8 ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்தவை போல! நல்ல முன்னேற்றம்! :-)))))))

    பதிலளிநீக்கு
  12. நல்ல செய்திகள். தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நம்மை சுற்றி இவ்வளவு நல்லது நடக்கிறது . நல்லவர்கள் இருக்கிறார்கள். என்பது மகிழ்ச்சி தருகிறது.
    நல்லோர் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!