திங்கள், 16 ஜூன், 2014

திங்க கிழமை 140616 :: சொல்லுங்கள் வெல்லுங்கள்.


ஐம்பது ரூபாய்க்குள் (கடையில் தின்பண்டமாக வாங்காமல்.) செலவு செய்து நான்கு பேர் காலை உணவு வயிறார சாப்பிடவேண்டும். 

எங்களுக்கு எழுதியனுப்புங்கள். அல்லது கமெண்ட் செய்யுங்கள்.   போட்டிக்கு வரும் கமெண்ட்கள் உடனே வெளியிடப்படாது. மற்ற கமெண்ட்ஸ் சற்று நேரம் கழித்து வெளியிடப்படலாம்! 

வருகின்ற ஞாயிறு வரையிலும் கால அவகாசம். 

வாழ்த்துக்கள்! 
      


28 கருத்துகள்:

 1. ரொம்ப சிம்பிள், ப்ரெட் ஒரு பாக்கெட் வாங்கி, கால் கிலோ தக்காளி, கால் கிலோ வெங்காயம் வாங்கி சான்ட்விச் செய்துடலாம்.

  முழு கோதுமை ப்ரவுன் ப்ரெட் 30 ரூபாய்

  தக்காளி கால்கிலோ 5 ரூ

  வெங்காயம் கால்கிலோ 5 ரூ(ஶ்ரீரங்கம் விலை) மிச்சம் பத்து ரூபாய் இருக்கும். பச்சைமிளகாய் கால்கிலோ 5 ரூ, கொத்துமல்லி 5ரூ வாங்கிக்கலாம். உப்பு வீட்டிலே இருக்கும். எண்ணெய், கடுகு வீட்டிலே இருக்கும். இல்லாட்டியும் அப்படியே வதக்கலாம். ப்ரெட்டில் வைத்து டோஸ்டரில் சுட்டால் சான்ட்விச் ரெடி.

  பதிலளிநீக்கு
 2. அதை விட எளிமையானது அரை கிலோ இட்லி அரிசி, 200 கிராம் உளுந்து ஊற வைத்து அரைத்து இட்லியோ தோசையோ செய்யலாம். தொட்டுக்க 100 கிராம் தக்காளி, 10 கிராம் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த துவையல். அல்லது பச்சைக்கொத்துமல்லி, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த பச்சைச் சட்னி.

  பதிலளிநீக்கு
 3. //(கடையில் தின்பண்டமாக வாங்காமல்.)// மாதவன் - இது உங்களுக்காகத்தான். ரெடிமேட் ஃபுட் எதுவும் வாங்கக்கூடாது. அம்மா உணவகம், அன்னதானச் சத்திரம், கோவில் உண்டக்கட்டி, எதுவும் கூடாது. நாலு பேருக்கு, வயிறு நிறைய காலைச் சிற்றுண்டி தயார் செய்யவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. கால் கிலோ ரவை, கால்கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி வாங்கிக் கொண்டு, கருகப்பிலை, கொ.மல்லி, ப.மி. 5 ரூபாய்க்குள் வாங்கிக்கலாம். (இங்கே கிடைக்குது) வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருகப்பிலை போட்டு எண்ணெய் சேர்த்து உப்புமாப் பண்ணலாம்.

  அவல் அரைகிலோ, காரட் 50கி, வெங்காயம் 50கி, உப்பு, எலுமிச்சை, ப.மி. கருகப்பிலை கொ.மல்லி.

  அவலை நன்கு களைந்து உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். காரட், வெங்காயம் துருவிச் சேர்த்துப் பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிடவும். சுத்தமான இயற்கை உணவு. வயிற்றை எதுவும் பண்ணாது.

  பதிலளிநீக்கு
 5. அவல்+தேங்காய்+சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்

  அவல் 20 ரூபாய் சர்க்கரை அல்லது வெல்லம் 10 ரூபாய்க்குக் கொஞ்சமாக இருந்தால் போதும். (கடையிலே அடிக்க வந்தால் நான் பொறுப்பில்லை) தேங்காய் பத்து ரூபாய்

  அவல் 20 ரூபாய் வாழைப்பழம் 10 ரூபாய்(இங்கே நல்ல பழமாகக் கற்பூர ரஸ்தாளி 20 ரூபாய்க்குக் கிடைக்கும்)+ தேங்காய் சேர்த்துச் சாப்பிடலாம்.

  பதிலளிநீக்கு
 6. கால் கிலோ ஜவ்வரிசி, 100 கிராம் வறுத்த கடலை, ஒன்றிரண்டு உ.கி. ப.மி. கருகப்பிலை, எலுமிச்சை சேர்த்து ஜவ்வரிசியை ஊற வைச்சு சாபுதனா கிச்சடி பண்ணலாம்.

  அரைகிலோ அரிசி 25 ரூ 200 கி பாசிப் பருப்பு 15 ரூ, இஞ்சி, மிளகு , ஜீரகம், உப்பு போன்றவை மீதம் பத்து ரூபாயில் வாங்கிப் பொங்கல் செய்து சாப்பிடலாம். என்ன நெய்யோ, எண்ணெயோ சேர்க்க முடியாது. ஏன்னா 50 ரூபாய் முடிஞ்சு போச்சே! :))))

  பதிலளிநீக்கு
 7. நாலு பேருக்கு என்ன, பத்து பேருக்கு கூட வயிறு நிறைய வைக்கலாமே.. இரண்டு பாட்டில் (ஒரு லிட்டர்) அக்வா பினா, நாற்பது ரூபாய், ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப களிமண் சேர்த்து குழைத்து அடித்தால் வயிறும் நிறையும், பத்து ரூபா பேலன்ஸ் வேற இருக்கும்.. ஐடியா எப்புடீ??

  பதிலளிநீக்கு
 8. ஆவி - அட்ரஸ் கொடுங்க. ஆட்டோ அனுப்பனும். (ஐடியா மணி பட்டம் ஆட்டோவில் கொடுத்து அனுப்புகிறோம்)

  பதிலளிநீக்கு
 9. Oh! I got it now. But still Rs.50 is too much. Buy the raw materials like Wheet (200 gm) (Rs.10) sugar 100 gm (Rs.5), oil 50 ml (Rs.5), salt Rs.5( Though this is not essential). + rs. 10 or 20 for gas(LPG) expense. + misc (remaining amount if for added flavour). Prepare couple of Chapati and keep it on the floor. More than 4 ants can have a complete Breatfast.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா.

  என்னை விட்டால் போதும் சாமி எழுதி அனுப்பும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 11. அரிசி வாங்கிக் கஞ்சி வைத்துக் குடித்தால் நாலு பேருக்கென்ன இன்னும் சிலருக்கும் வயிறாரக் காலை உணவாகலாம்.

  பதிலளிநீக்கு
 12. அரை கிலோ ரவை வாங்கி உப்புமா கிண்டிட்டால் போச்சு.

  பதிலளிநீக்கு
 13. அரை கிலோ ரவை வாங்கி உப்புமா கிண்டிட்டால் போச்சு...

  பதிலளிநீக்கு
 14. வயிராற என்றால்? நாலு பேருக்கும் என்ன வயசு? ஜீரண வசதி எப்படி?
  சைவமா அசைவமா?

  பதிலளிநீக்கு
 15. சொல்லுங்க. செய்துடலாம். பொரி வாங்கி நாலுபேரு சாப்பிடலாம். நிறைய தயிர் விட்டுச் சப்பிட்டால் வயிறு நிரம்பும்.

  பதிலளிநீக்கு
 16. ஏதாவது TRICK இருக்கிறதா?
  முயற்சித்துப் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 17. போட்டிக்கு என்னோட சாய்ஸ் பழைய சாதம் அல்லது நொய்க்கஞ்சி

  என்னை பொறுத்தவரை காலை உணவாக பழைய சாதத்தை அடிச்சிக்க வேறு எந்த பலகாரமும் இல்லை.உங்கள் போட்டிக்கு அது ஏற்றுகொள்ள முடியாத பட்சத்தில் எனது அடுத்த சாய்ஸ் நொய்க்கஞ்சி

  இதற்கு அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

  1 ஒரு கிலோ அரிசி / நொய் அரிசி - ரூ.40/-
  2. தேவையான உப்பு - ரூ.2/-
  4. பழைய சாதம்னா பச்சை மிளகாய், நொய்க்கஞ்சின்னா பாண்டியன் மட்டை ஊறுகாய் - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/-

  ஆனா நீங்க சாப்பாடு ஐட்டம் போட்டியில் சேராதுன்னு சொன்னா கேரள பாரம்பரிய உணவான புட்டு இந்த பந்தயத்துக்கு ஒத்துவரும் என தோன்றுகிறது. இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட)

  1. ஒரு கிலோ பச்சரிசி - ரூ.35/-
  2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு சொல்லுங்க, அரைக்கற செலவு குறையும். ஹி... ஹி... எங்கம்மா அப்படித்தான் சொல்லி அனுப்புவாங்க)
  3. தேவையான உப்பு - ரூ.2/-
  4. வாழைப்பழம் அல்லது சர்க்கரை - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/-
  புட்டுப் பழமோ அல்லது புட்டு சர்க்கரையோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.

  ஆங்ங்......எது .... புட்டு எப்படி செய்யணுமா....? ஆளை விடுங்க. நான் இந்த போட்டிக்கே வரலைன்னு நெனச்சுக்குங்க

  அடுத்ததா தமிழகத்தின் பாரம்பரிய உணவான கேழ்வரகு கூழ்.இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

  1. ஒரு கிலோ கேழ்வரகு அல்லது கம்பு - ரூ.35/-
  2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு மறக்காம சொல்லுங்க)
  3. தேவையான உப்பு - ரூ.2/-
  4. பச்சை மிளகாய் அல்லது வெங்காயம் (கடிச்சிக்க) - ரூ.8/-

  போதும் போதும்னு நீங்க கத்துவது கேட்பதால் இத்தோட முடிச்சிகிற்.......றேன்

  பதிலளிநீக்கு
 18. ம்ம்ம்... என்ன பதில் வரப் போகுது என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 19. ஏன் இந்தப் பின்னூட்டங்கள் எல்லாமும் இன்னிக்குத் திரும்ப ஒரு முறை வந்திருக்கு? இதான் பரிசா? :P :P :P :P :P :P :P

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!