திங்கள், 23 ஜூன், 2014

திங்க கிழமை. 140623:: சொல்லுங்க வெல்லுங்க போட்டி

            
சென்ற திங்க கிழமை பதிவில் வெளியான சொல்லுங்க, வெல்லுங்க, மெல்லுங்க - போட்டிக்கு வந்த சமையல் குறிப்புகள். 
                      பரிசு வெல்பவர்கள்: கீதா சாம்பசிவம், மற்றும் மாடிப்படி மாது. (மாடிப்படி மாது பெயரையும் விலாசத்தையும் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்) 
(நீலக் கமெண்ட் யாவும் எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் கருத்து)       

Geetha Sambasivam 

ரொம்ப சிம்பிள், ப்ரெட் ஒரு பாக்கெட் வாங்கி, கால் கிலோ தக்காளி, கால் கிலோ வெங்காயம் வாங்கி சான்ட்விச் செய்துடலாம்.

முழு கோதுமை ப்ரவுன் ப்ரெட் 30 ரூபாய் (ஹி ஹி முழு கோதுமை பிரெட் ஒரு பாக்கெட் நான்கு பேர்களுக்கு போதாது!)
   
தக்காளி கால்கிலோ 5 ரூ

வெங்காயம் கால்கிலோ 5 ரூ(ஶ்ரீரங்கம் விலை) மிச்சம் பத்து ரூபாய் இருக்கும். பச்சைமிளகாய் கால்கிலோ 5 ரூ, கொத்துமல்லி 5ரூ வாங்கிக்கலாம். உப்பு வீட்டிலே இருக்கும். எண்ணெய், கடுகு வீட்டிலே இருக்கும். (நைசா எண்ணைக்கு விலைப்பட்டியலில் இருந்து விடுதலை அளித்துவிட்டீர்கள்!) இல்லாட்டியும் அப்படியே வதக்கலாம். ப்ரெட்டில் வைத்து டோஸ்டரில் சுட்டால் சான்ட்விச் ரெடி.  
===============================================

Geetha Sambasivam

அதை விட எளிமையானது அரை கிலோ இட்லி அரிசி, 200 கிராம் உளுந்து ஊற வைத்து அரைத்து இட்லியோ தோசையோ செய்யலாம். தொட்டுக்க 100 கிராம் தக்காளி, 10 கிராம் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த துவையல். அல்லது பச்சைக்கொத்துமல்லி, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்த பச்சைச் சட்னி. 
=======================================

Geetha Sambasivam 

கால் கிலோ ரவை, கால்கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி வாங்கிக் கொண்டு, கருகப்பிலை, கொ.மல்லி, ப.மி. 5 ரூபாய்க்குள் வாங்கிக்கலாம். (இங்கே கிடைக்குது) வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருகப்பிலை போட்டு எண்ணெய் சேர்த்து உப்புமாப் பண்ணலாம். 

அவல் அரைகிலோ, காரட் 50கி, வெங்காயம் 50கி, உப்பு, எலுமிச்சை, ப.மி. கருகப்பிலை கொ.மல்லி.

அவலை நன்கு களைந்து உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். காரட், வெங்காயம் துருவிச் சேர்த்துப் பச்சைமிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிடவும். சுத்தமான இயற்கை உணவு. வயிற்றை எதுவும் பண்ணாது. 
===========================================
Geetha Sambasivam

அவல்+தேங்காய்+சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்

அவல் 20 ரூபாய் சர்க்கரை அல்லது வெல்லம் 10 ரூபாய்க்குக் கொஞ்சமாக இருந்தால் போதும். (கடையிலே அடிக்க வந்தால் நான் பொறுப்பில்லை) தேங்காய் பத்து ரூபாய். 
(ஹி ஹி பெங்களூரில் சிறிய தேங்காய் இருபது ரூபாய்; பெரியது முப்பது ரூபாய்!) 

அவல் 20 ரூபாய் வாழைப்பழம் 10 ரூபாய்(இங்கே நல்ல பழமாகக் கற்பூர ரஸ்தாளி 20 ரூபாய்க்குக் கிடைக்கும்)+ தேங்காய் சேர்த்துச் சாப்பிடலாம். 
====================================
Geetha Sambasivam

கால் கிலோ ஜவ்வரிசி, 100 கிராம் வறுத்த கடலை, ஒன்றிரண்டு உ.கி. ப.மி. கருகப்பிலை, எலுமிச்சை சேர்த்து ஜவ்வரிசியை ஊற வைச்சு சாபுதனா கிச்சடி பண்ணலாம்.

அரைகிலோ அரிசி 25 ரூ 200 கி பாசிப் பருப்பு 15 ரூ, இஞ்சி, மிளகு , ஜீரகம், உப்பு போன்றவை மீதம் பத்து ரூபாயில் வாங்கிப் பொங்கல் செய்து சாப்பிடலாம். என்ன நெய்யோ, எண்ணெயோ சேர்க்க முடியாது. ஏன்னா 50 ரூபாய் முடிஞ்சு போச்சே! :)))) 
=============================================


Madhavan Srinivasagopalan: 

Oh! I got it now. But still Rs.50 is too much. Buy the raw materials like Wheat (200 gm) (Rs.10) sugar 100 gm (Rs.5), oil 50 ml (Rs.5), salt Rs.5( Though this is not essential). + rs. 10 or 20 for gas(LPG) expense. + misc (remaining amount if for added flavour). Prepare couple of Chapati and keep it on the floor. More than 4 ants can have a complete Breatfast. 
==============================================

A Simple Man: 

uppumaa....

(not amma uppu :-) 

===================================
வல்லிசிம்ஹன்: 

சொல்லுங்க. செய்துடலாம். பொரி வாங்கி நாலுபேரு சாப்பிடலாம். நிறைய தயிர் விட்டுச் சப்பிட்டால் வயிறு நிரம்பும்.  

======================================
G.M Balasubramaniam: 

அரிசி வாங்கிக் கஞ்சி வைத்துக் குடித்தால் நாலு பேருக்கென்ன இன்னும் சிலருக்கும் வயிறாரக் காலை உணவாகலாம். 
=============================

பால கணேஷ்:  

அரை கிலோ ரவை வாங்கி உப்புமா கிண்டிட்டால் போச்சு. 
=============================

அருணா செல்வம்: 

உப்புமா கிண்டிட வேண்டியது தான். 
===================================

மாடிப்படி மாது: 

போட்டிக்கு என்னோட சாய்ஸ் பழைய சாதம் அல்லது நொய்க்கஞ்சி

என்னை பொறுத்தவரை காலை உணவாக பழைய சாதத்தை அடிச்சிக்க வேறு எந்த பலகாரமும் இல்லை. உங்கள் போட்டிக்கு அது ஏற்றுகொள்ள முடியாத பட்சத்தில் எனது அடுத்த சாய்ஸ் நொய்க்கஞ்சி. 

இதற்கு அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

1 ஒரு கிலோ அரிசி / நொய் அரிசி - ரூ.40/-
2. தேவையான உப்பு - ரூ.2/-
4. பழைய சாதம்னா பச்சை மிளகாய், நொய்க்கஞ்சின்னா பாண்டியன் மட்டை ஊறுகாய் - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/- 

ஆனா நீங்க சாப்பாடு ஐட்டம் போட்டியில் சேராதுன்னு சொன்னா கேரள பாரம்பரிய உணவான புட்டு இந்த பந்தயத்துக்கு ஒத்துவரும் என தோன்றுகிறது. இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட)

1. ஒரு கிலோ பச்சரிசி - ரூ.35/- (எந்த ஊர்ல சார்? புழுங்கல் அரிசியே அந்த விலைக்குக் கிடைக்காது!) 
2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு சொல்லுங்க, அரைக்கற செலவு குறையும். ஹி... ஹி... எங்கம்மா அப்படித்தான் சொல்லி அனுப்புவாங்க) (எங்க ஊர் மாவுமெஷினில் இந்த உதார் வேலை எல்லாம் நடக்காது! வேயிங் மெஷின் வைத்திருக்கின்றார்கள்!) 
3. தேவையான உப்பு - ரூ.2/-
4. வாழைப்பழம் அல்லது சர்க்கரை - ரூ.8/- ஆகமொத்தம் ரூ.50/- 
புட்டுப் பழமோ அல்லது புட்டு சர்க்கரையோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.
              
ஆங்ங்......எது .... புட்டு எப்படி செய்யணுமா....? ஆளை விடுங்க. நான் இந்த போட்டிக்கே வரலைன்னு நெனச்சுக்குங்க 

அடுத்ததா தமிழகத்தின் பாரம்பரிய உணவான கேழ்வரகு கூழ்.இதற்கு தேவையான பொருட்களின் அடக்கச் செலவுகள் (நான்கு பேருக்கு வயிராற சாப்பிட) .

1. ஒரு கிலோ கேழ்வரகு அல்லது கம்பு - ரூ.35/-
2. பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு மறக்காம சொல்லுங்க) (அட ஆண்டவா! திருந்தவே மாட்டீங்களா!) 
3. தேவையான உப்பு - ரூ.2/-  
4. பச்சை மிளகாய் அல்லது வெங்காயம் (கடிச்சிக்க) - ரூ.8/-
     
போதும் போதும்னு நீங்க கத்துவது கேட்பதால் இத்தோட முடிச்சிகி.......றேன் 
===========================================
                         

30 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது செஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.
    இப்படியான சின்னச் சின்ன போட்டிகளை வைப்பதால் வலையுலக நட்பு மலரும் தொடருங்கள் சேவையை. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. போட்டியில் வென்றோர்க்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கலந்து கொள்ளா(ல்லா)மல் போச்சே... ஹிஹி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. //மாடிப்படி மாது பெயரையும் விலாசத்தையும் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்) //

    அப்போ என் விலாசம் வேண்டாமா? என்ன அநியாயம்? :)

    பதிலளிநீக்கு
  5. //(ஹி ஹி முழு கோதுமை பிரெட் ஒரு பாக்கெட் நான்கு பேர்களுக்கு போதாது!)//

    என்ன ப்ரான்ட் வாங்கறீங்கனு தெரியலை. நாங்க மாடர்ன் ப்ரெட் வாங்கறோம். நாலு பேர் தாராளமாகச் சாப்பிட முடியுது. மேலே உள்ளதும், அடியிலே உள்ளதும் தள்ளினால் கூட! நான், ரங்க்ஸ், பையர், மாட்டுப் பெண் நாலு பேரும் ப்ரெட் சான்ட்விச் உ.கி. போட்டோ, காரட் போட்டோ, தக்காளி போட்டோ, பட்டாணி போட்டோ சாப்பிட்டிருக்கோம்.

    ஆனால் இதே மல்டி கிரெயின் ப்ரெடில் முடியாது. அது இரண்டு நபர்+ ஒரு சின்னக் குழந்தை மட்டும் சாப்பிடலாம்.

    மற்ற மைதா ப்ரெடெல்லாம் வாங்கறதே இல்லை.

    பதிலளிநீக்கு
  6. எண்ணெய் ஒரு டீஸ்பூன் போதுமானது. அதை எப்படிக் கணக்கிடுவதுனு தெரியாமல் சேர்க்கலை. :)))))

    ஆனால் சில சமயம் நான் ப்ரெடிலும் வெண்ணெய் தடவி, நல்லா எண்ணெய் ஊற்றியும் வதக்கிச் சேர்ப்பேன். அந்த முறையை இங்கே சொல்லலை! அதைக் கணக்கில் எடுத்துக்குங்க. வேணும்னா 50 எண்ணெய் பாமாயில் கடையில் கிடைப்பதை வாங்கிக்கலாம். அது தான் விலை குறைச்சல். கொத்துமல்லி, மிளகாயைக் குறைச்சுட்டு எண்ணெய்க்கு அந்தப் பணத்தை வைச்சுப்போம்.

    பதிலளிநீக்கு
  7. //(ஹி ஹி பெங்களூரில் சிறிய தேங்காய் இருபது ரூபாய்; பெரியது முப்பது ரூபாய்!) //

    எந்த ஊருனு சொல்லவே இல்லையே? பெங்களூரில் தேங்காய்க் கீற்றுகள் கிடைச்சாலோ, அல்லது உடைத்த மூடியாகக் கடைகளில் கொடுத்தாலோ வாங்கிக்கலாம். இல்லையா தேங்காயே வேணாம். :)))

    இது எப்பூடி இருக்கு?

    பதிலளிநீக்கு
  8. இங்கே ஶ்ரீரங்கத்தில் மார்க்கெட்டுக்குப் போனால் சின்னத் தேங்காய் பத்து ரூபாய்க்குக் கிடைக்கும்.

    அதோடு சில காய்கறிகள் கூறு கட்டி வைச்சிருப்பாங்க. குறைந்த பக்ஷமாகக் கால் கிலோ இருக்கும். அதெல்லாம் விலை குறைச்சல் தான். ரவா கிச்சடி செய்யக் காய்கள் எல்லாம் இப்படி வாங்கிட்டு ரவா கிச்சடியும் பண்ணிச் சாப்பிடலாம். :))))

    பதிலளிநீக்கு
  9. இது எதுவுமே வேண்டாம்னா அச்சுவெல்லம் 100 கிராம், வறுத்த கடலை அரைக் கிலோ வாங்கி நாலு பேரும் பங்கு போட்டுச் சாப்பிட்டுட்டுத் தண்ணீரை ஜில்லென்று குடிச்சுடலாம். நான்கு, ஐந்து மணி நேரம் தாங்கும். இது பரவாயில்லையா? :))))

    பதிலளிநீக்கு
  10. மாடிப்படி மாது சொல்லி இருக்காப்போல் அரைக்கிலோ புழுங்கலரிசி, 50 வெந்தயம் வாங்கி வறுத்து உடைச்சுக் கஞ்சி வைச்சு உப்பு மட்டும் போட்டுச் சாப்பிடலாம். :)

    பதிலளிநீக்கு
  11. சென்னையில் சிறிய தேங்காய் 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை. தி.நகர், கோயம்பேட்டில் 18 ரூபாய்க்குக் கிடைக்கலாம். பெரிய தேங்காய் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை!

    பதிலளிநீக்கு
  12. சென்னையில் பீன்ஸ் கிலோ 120 ரூபாய், கத்தரிக்காய் கிலோ 40 ரூபாய், அவரைக்காய் கிலோ 72 ரூபாய், உ.கி கிலோ 60 ரூபாய், சேப்பங்கிழங்கு கிலோ 40 ரூபாய்!

    பதிலளிநீக்கு
  13. கத்தரிக்காய் இங்கே அதிக பக்ஷ விலை கிலோ 30 ரூபாய், பீன்ஸ் 75 \ரூயிலிருந்து 80 க்குள்ளாக. உ.கிழங்கு 20 ரூ அல்லது 30 ரூபாய். சேப்பங்கிழங்கு கிலோ 20 ரூபாய்! :))))))))))))

    தேங்காய் 18 ரூபாய்க்கு வாங்கினால் மிகப் பெரிதாக இருக்கும். பத்து ரூபாய்க்குச் சின்னது. பதினைந்துக்கு நடுத்தரம்.

    பதிலளிநீக்கு
  14. திருஷ்டிப் பட்டுடுமோ திருச்சிக்கு? ஶ்ரீரங்கத்துக்கு?

    மல்லிகைப் பூ கால்கிலோ 20 ரூபாயிலிருந்து 30 க்குள்ளாக

    முல்லைப் பூ 100 கிராம் 10 அல்லது 15 ரூபாய். முல்லை சீசன் ஆரம்பிச்சால் இன்னமும்குறையும்.

    பதிலளிநீக்கு
  15. (திருஷ்டிப்) பூசணி சின்னதே இங்கு 20 ரூபாய். அங்கேயே 'சீப்'பாக வங்கி சுற்றிக் கொள்ளவும்!

    பதிலளிநீக்கு
  16. போட்டியில் வெற்றி பெற்றது வயிறார பச்சைமிளகாய் கடித்து பழைய சாதம் சாப்பிட்ட மாதிரி மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் பிளாக் ஆ"சிரி"யர் குழுவுக்கு நன்றி.


    //// ஒரு கிலோ பச்சரிசி - ரூ.35/- (எந்த ஊர்ல சார்? புழுங்கல் அரிசியே அந்த விலைக்குக் கிடைக்காது!) /////

    சரிங்க சார். ரூ.35/- க்கு எத்தனை கிராம் அரிசி கிடைக்குமோ அத்தனை கிராம் வாங்கிக்கலாம்.


    /////// பொடியாக அரைக்க - ரூ.5/- (மாவு மிஷின்காரனிடம் முக்கால் கிலோன்னு சொல்லுங்க, அரைக்கற செலவு குறையும். ஹி... ஹி... எங்கம்மா அப்படித்தான் சொல்லி அனுப்புவாங்க) (எங்க ஊர் மாவுமெஷினில் இந்த உதார் வேலை எல்லாம் நடக்காது! வேயிங் மெஷின் வைத்திருக்கின்றார்கள்!) ///////

    இது என்னோட தப்புதாங்க, எல்லார்கிட்டயும் இந்த ஐடியாவ உளறிக்கொட்டினது மாவுமிஷின்காரனுக்கு தெரிஞ்சு போச்சு. அதான் உஷாராயிட்டான்

    பதிலளிநீக்கு
  17. கீதா சாம்பசிவம் விலாசம் ஏற்கெனவே எங்கள் ப்ளாக் கோடவுனில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது!

    பதிலளிநீக்கு
  18. மேலும் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு ஏற்கெனவே 22/7 (PI) போட்டியில் ஒரு பரிசு டியூ!!

    பதிலளிநீக்கு
  19. //மேலும் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு ஏற்கெனவே 22/7 (PI) போட்டியில் ஒரு பரிசு டியூ!!//

    ஹை, ஜாலி! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்! ஸ்வீட் எடு கொண்டாடு! :)

    இப்போதைய ட்ரென்ட் தங்கம் தான். எங்கே பார்த்தாலும் கிலோ கணக்கில் தங்கக் கடத்தல். அதனால் பொற்காசுகளாவே அனுப்பிச்சுடுங்க! :))))))

    பதிலளிநீக்கு
  20. @ஶ்ரீராம், ஏற்கெனவே இங்கே பூஷணிக்காய்க்கும், பறங்கிக்காய்க்கும் திருஷ்டிப் பட்டிருக்கு போல! இரண்டும் சரியாவே கிடைக்கலை இந்த வருஷம். அதிலும் பறங்கிக் கொட்டை சின்னது கண்ணிலே பட்டே ஒரு வருஷம் ஆச்சு! :( பால் கூட்டு பண்ணலாம், துவையல் அரைக்கலாம், அடையில் தேங்காய் போல் கீறிப் போடலாம். இப்போ அது இருக்குமிடமே தெரியலை! :(

    பதிலளிநீக்கு
  21. 50 ரூபா காசில் இத்தனை ஐயிட்டங்கள் செய்யலாமா? நிறைய கத்துக்க வேண்டி இருக்குது! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  23. கீ சா இப்படிப் பின்றாங்களே!.தொப்பி உஷ்!

    பதிலளிநீக்கு
  24. நான் ஊரில் இல்லாத காரணத்தால் போட்டியில் பங்கு ஏற்க முடியவில்லை. (கலந்து கொண்டால் மட்டும்)

    பரிசை வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    கீதா அவர்கள் வெற்றிபெறவில்லை என்றால் தான் ஆச்சிரியம்.

    எங்கள் ஊரில் தேங்காய் வில்லை 18
    தக்காளி 24. எங்கள் வீட்டுக்கு வரும் காய்கறிவிற்பவர் மொத்தகணக்கு தான் சொல்வார். மற்ற காய்கறி விலை சரியாக தெரியவில்லை அடுத்தமுறை வாங்கும் போது கவனமாய் ஒவ்வொன்றின் விலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. தென்னை மரங்களுக்கு வியாதி என்பதாலும் சரியான மழை இல்லாமல் மரங்கள் காய்ந்து பட்டுப் போவதாலும் தேங்காய் விளைச்சல் கம்மி தான். நான் பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் என்று சொன்னது பொள்ளாச்சித் தேங்காய். ஶ்ரீரங்கம் மார்க்கெட்டிலே கிடைக்கும். கடைகளில் உயர்ந்த பக்ஷ விலை 18 ரூபாய் தான். ஆனால் பெரிதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  26. அட்டகாசமாய்க் குறிப்புகள் எழுதி போட்டியில் வெற்றி பெற்ற கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கும் மாடிப்படி மாது அவர்களுக்கும் பாராட்டுகள். கீதா மேடம் என்னமா யோசிக்கறாங்க... அசத்தல்.

    பதிலளிநீக்கு
  27. Vவாவ்.. இது எங்கள் ப்ளாகா கீதா ப்ளாகானு தோண்ப்போச்சு. நல்ல குடும்பப் பெண்ணூக்கான அத்தனை விவரங்களும் கீதாவின் பட்டியலில். மாடர்ன் ப்ரெட் நல்லாப் பெரிதாகவே வரும். பால்ம் ஆயிலா. வேணம்பா. வெறும் சாண்ட்விச்சே போறும். சககல சமையல் வல்லி பட்டம் கீதாமாக்குத் தான்.

    பதிலளிநீக்கு
  28. மாடிப்படி மாதுவின் பழைய சாத ரெசிபி சூப்பர். இதுவும் ஒத்துவரும்.வாழ்த்துகள் மாது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!