ஞாயிறு, 15 ஜூன், 2014

ஞாயிறு 258:: பூக்கள் என்ன பேசுகின்றன?


                                            
   

12 கருத்துகள்:

 1. வசீகரிக்கும் மௌனமொழி
  எனச் சொல்லலாமா ?

  பதிலளிநீக்கு
 2. அடுக்குச் செம்பருத்தி: என்னை மாதிரியே நிறமா இருக்கியே! உன் பேர் என்ன?

  அடுக்கு அரளி: என் பெயர் அடுக்கு அரளி, நான் எல்லா நிறத்திலேயும் பூப்பேனே!

  அடுக்குச் செம்பருத்தி: ஹிஹி நானும் தான், பிங்க், வெள்ளை, மஞ்சள், சிவப்புனு எல்லா நிறத்திலேயும் இருப்பேனே!

  அடுக்கு அரளி: இன்னிக்கு என்ன நீ தனியா இருக்கே?

  அடுக்குச் செம்பருத்தி: நான் இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு வரேன். அதான் ஒற்றைப் பூவாக இருக்கேன். இன்னும் கொஞ்ச நாட்களில் பாரேன்.

  அடுக்கு அரளி: என்னை அம்மனுக்குச் சாத்தறதிலே விசேஷம்.

  அடுக்குச் செம்பருத்தி: ரொம்பப் பீத்திக்காதே! என்னையும் எல்லா சுவாமிகளுக்கும் சாத்துவாங்க.

  பதிலளிநீக்கு
 3. இன்னாய்யா மனுசன் நீ !!
  இம்புட்டு வெய்யிலிலே
  என் உசிரே போகுதய்யா !!


  ஏ . சி. ரூம் லேந்து எனை
  எட்டிப் பார்க்கும் ஏ மனுசா !
  கிட்ட வந்து பக்கம் உட்காரு
  நான் கருகிடுவேன் என் வேதனை பாரு.

  கெஞ்சி உன்னை கேட்டுக்கறேன்.
  கொஞ்ச நேரம் என்னையும் உன்
  பஞ்சு மெத்தை பக்கத்திலே
  பதினஞ்சு டிக்ரீ ஏ சி. ரூமிலே
  பத்தே அவர் உட்காரவையேன்.

  புழைச்சுபோறேன் நானுமுன்
  புண்யத்திலே சாரி பிச்சையிலே.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 4. சூரி சார், 15 டிகிரி ஏசி ரூமிலே செடிகளை வைச்சா அவ்வளவு தான். நம்ம ஊர் வெயிலுக்கு நல்லாவே தாக்குப்பிடிக்கும். என்ன 2 தரமாவது தண்ணீரைக் காட்டணும். தெளிச்சாலே போதும்,முகம் மலரும்.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. பூ1:ஜுவுக்குள்ள மிருகத்தை அடைச்ச மாதிரி தொட்டிக்குள்ளே அடைச்சுட்டாங்களே!!
  பூ2:இல்லாட்டா மத்திரம், நீ வாக்கிங் போகப் போறியாக்கும்?!
  பூ1: நான் போகணுமா? நம்ம வேர் கொஞ்சம் தள்ளிப் போய் இன்னும் சத்து எடுத்துக்கலாம் இல்லையா?
  பூ2: இந்த மட்டும் மாடியிலாவது நம்மை வளர்க்கிறாங்களேன்னு சந்தோஷப்படு!! எதையும் பாஸிடிவாக நினை!! பாஸிடிவ் நினைப்பு வர, கொஞ்சம் சனிக்கிழமை எங்கள் ப்ளாகையும் படித்துப் பார்!! :-))

  பதிலளிநீக்கு

 7. எத்தனை நேரம் என்னை செடியிலேயே பறிக்காமல் விட்டு வைப்பார்கள்.?

  பதிலளிநீக்கு
 8. பூவே உன்னை நேசித்தேன்.... என்று ஒன்று மற்ற பூவிடம் சொல்கிறதோ!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!