திங்கள், 1 ஜூன், 2015

இதுவும் 'திங்க'க்கிழமைதான்!


பல வருடங்களுக்கு முன்பு, என் அண்ணன் மகள் (அடிக்கடிக்) கூறிய சமையல் குறிப்பு. 
   

" பரங்கிக் காயைப் பறிச்சி,
பட்டை எல்லாம் சீவி,
பொடிப்பொடியா நறுக்கி, 
உப்பு காரம் போட்டு, 
தின்னத் தின்ன ஆசை,
இன்னும் கேட்டால் பூசை!" 

செஞ்சுப் பாத்து, தின்னுப் பாத்து, சுவையா இருந்தா 
எனக்கும் சொல்லுங்க! 

Pumpkin (Cucurbita spp.), fresh,
Nutritive value per 100 g.
(Source: USDA National Nutrient data base)
PrincipleNutrient ValuePercentage of RDA
Energy26 Kcal1%
Carbohydrates6.50 g5%
Protein1.0 g2%
Total Fat0.1 g0.5%
Cholesterol0 mg0%
Dietary Fiber0.5 g2%
Vitamins
Folates16 mcg4%
Niacin0.600 mg4%
Pantothenic acid0.298 mg6%
Pyridoxine0.061 mg5%
Riboflavin0.110 mg8.5%
Thiamin0.050 mg4%
Vitamin A7384 IU246%
Vitamin C9.0 mg15%
Vitamin E1.06 mg7%
Vitamin K1.1 mcg1%
Electrolytes
Sodium1 mg0.5%
Potassium340 mg7%
Minerals
Calcium21 mg2%
Copper0.127 mg14%
Iron0.80 mg10%
Magnesium12 mg3%
Manganese0.125 mg0.5%
Phosphorus44mg5%
Selenium0.3 mcg<0.5%
Zinc0.32 mg3%
Phyto-nutrients
Carotene-a515 mcg--
Carotene-ß3100 mcg--
Crypto-xanthin-ß2145 mcg--
Lutein-zeaxanthin1500 mcg--

9 கருத்துகள்:


  1. ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக வாங்கித் திங்கனும்.

    பதிலளிநீக்கு
  2. சூப்பர். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா பாடல் ஒன்று உண்டு.

    பரங்கிக்காயைப் பறிச்சு பட்டை எல்லாம் சீவி பொடிப்பொடியாய் நறுக்கி எண்ணெயிலே தாளித்து இன்பமாகத் தின்னலாம். :)

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சிம்பிளா இருக்கே!
    அலகாபாத்தில் இருந்தபோது இளம் பரங்கிக் கொட்டை கிடைக்கும்.அதில் கூட்டு செய்தால் அல்வா மாதிரி இருக்கும்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே.

    பரங்கிக்காய் ௬ட்டு, சாம்பார், துவையல் என்று பல விதத்தில் செய்து சாப்பிடலாம். வெறும் பரங்கியை எப்படி சாப்பிடுவது.? சாப்பிட்டுப் பார்த்தால் சுவையாக இருக்குமா.? அதையும் முயற்சித்து விடலாம்.பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. இளம் பறங்கிகொட்டையில் பால் கூட்டு செய்யலாம், துவையல் அரைக்கலாம், அடைக்கு நறுக்கிப் போடலாம், தேங்காய்க் கீற்றுப் போல் இருக்கும். சாம்பாரிலும் போடலாம். கொஞ்சம் நிறம் பச்சையானதிலும் துவையல் அரைக்கலாம், மலையாள முறைப்படியான கூட்டுச் செய்யலாம். (தேங்காய்ப் பால் விட்டு) சாம்பாரில் போடலாம். இதையும் அடைக்குப் போடலாம். மஞ்சளாகி விட்டால் நாங்கள் வாங்குவதில்லை. ஆனால் இதைத் துருவி அல்வா செய்வார்கள் எனக் கேள்வி.

    பதிலளிநீக்கு
  6. பரங்கிக்காயில் தொக்கும், பாயசமும் கூட செய்யலாம். நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அருமை. எளிய குறிப்பாக உள்ளது. கூட்டு செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  8. இது ஊறுகாய் ஸ்டைல்....நல்லாருக்கும்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!