எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான உறவு பற்றி என்ன சொல்கிறீர்கள் செல்லப்பா ஸார்?
"குழந்தை வளருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உடல் வளரும்போது உள்ளமும் வளருகிறது. இரண்டும் சேர்ந்து வளர்கையில் உருவாவதுதான் 'நான்' என்பது......
* அசோகமித்திரன் அவர்களுக்கு அஞ்சலியாக எழுதப்பட்டிருக்கும் அப்பாவின் சிநேகிதிகள் நட்பின் உயர்வைக் சொல்லும் அருமையான படைப்பு. அவர் தளத்தில் இது வெளியாகும்போது 'சிநேகிதிகள் என்று பன்மையில் சொல்லப் பட்டிருப்பதால் இதில் இன்னும் தொடர்கள் வருமா?; என்று கேட்டிருந்தேன். வரும் என்றுதான் சொல்லியிருந்தார்.
பள்ளிப்பருவத்தில் படித்த ஆண்நண்பர்கள் இருவருடன் இன்னும் (ரொம்ப அக்கேஷனல்)
தொடர்பு இருக்கிறது எனக்கு. ஆனால் சிநேகிதிகள்? ஊ....ஹூம்!!!
* சமீபத்தில் ஸ்ரீமான் சுதர்சனம் ஒரு மீள்வாசிப்பு செய்தேன். தேவனின் வர்ணனையில் கோமளம் சுதர்சனத்துக்கு வாய்த்த அழகிய மனைவி. சுதர்சனமோ அசட்டுக்களையுடன் அம்மாஞ்சித் தோற்றம். யாருக்கு யார் என்று யார் முடி போடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கெல்லாம் தோன்ற வைக்கும் பாத்திரப்படைப்பு அது. அது போல அழகியான முனியம்மாவின் இளம் கழுதை.
தோழி கழுதையாக (!) இருந்தாலும் தோழன் பற்றிய சம்பவம் அல்லது கதை இது. ஒரு பெண் நினைத்து விட்டால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு விடுவாள் போலும்!
* பின்னர் நடக்கவிருப்பதை முன்கூட்டியே சில சகுனங்கள், செயல்கள் நம் மனதுக்கு அறிவுறுத்தி விடும் அனுபவங்களை பேசும் உள்ளிருந்து பேசும் குரல்
சிறுவயதில் நாம் விளையாடிய கில்லி ஆட்டம், வண்டியோட்டுதல் உட்பட
சுவாரஸ்யமான சில விஷயங்களையும் உடன் சொல்லி நம் நினைவலைகளை சம்பந்தப்பட்ட
விஷயங்களில் தட்டி எழுப்புகிறது. எனக்கு இந்த மாதிரி அனுபவங்கள்
குறைவுதான். இந்த உள்ளுணர்வுகள் தொடரை ஏஞ்சலின், தில்லையகத்து கீதா
ஆகியோர் கூட அவரவர்கள் தளத்தில் எழுதி இருந்தார்கள் என்று நினைவு.
* காலம் வரும்
என்னும் அனுபவம் எல்லோரையும் போலவே எனக்கும் உண்டு என்பதை அவர் தளத்திலேயே
எழுதி இருந்தேன். "எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும், அதிர்ஷ்டமும்
இருக்கணும்" என்பார்கள் இல்லையா? அது.
பிரார்த்தனையாக வேண்டிக்கொண்டது என்பதை பொறுத்தவரை இன்னமும் என் கல்யாண வேண்டுதலையே நிறைவேற்றவில்லை நான்! 27 வருடங்கள் ஆகி விட்டன!
* கனவுகளில்
இறந்தவர்களுடன் சேர்த்து, இப்போது உயிருடன் இருக்கும் உறவினர்களை நானும்
பார்த்திருக்கிறேன். நல்லவேளையாக எனக்கு 'அப்படி' நிகழவில்லை! எனக்கு
அதிகமாக வந்த கனவு யானை துரத்துவதுதான். என்னைப் பொறுத்தவரை கனவுகள் பலிக்கும் நேரம் குறைவுதான். அர்த்தமில்லா கனவுகள்தான் அதிகம் கண்டிருக்கிறேன்.
* லஞ்சம்
தெரிந்து கொடுக்கிறோம். தெரியாமல் தருகிறோம். விரும்பியும்
விரும்பாமலும் தருகிறோம். நமக்கு வேலை ஆகவேண்டுமென்றால் வேறு வழியில்லை
என்கிற நிலைமை. 'ஸம்திங்' நானும் அழுதிருக்கிறேன் நிறைய!
* ஒவ்வொரு
வருடமும் கொடிநாள் வசூல் கட்டாயம் எங்கள் அலுவலகத்தில். சம்பளத்திலேயே
பிடித்து விடுவார்கள். ஓ... அதற்கு கொடியெல்லாம் தருவார்களா!! இதுவரை
கண்ணால் பார்த்ததே இல்லை! ஆனால் லஞ்சம் என்பது அழகிய தேவதையா? அது எனக்குத் தெரியாது!
* கௌதமன்
மாமா சொல்வார். அவர் தந்தை - என் தாத்தா - அந்தக் காலத்தில் சிறு
காய்கறிகள் பயிரிடுவாராம். உதாரணமாக கொத்தவரங்காய். அதை அந்தத் தெருவில்
இருப்பவர்களுக்கு 'விற்பனை' செய்வாராம். மார்க்கெட்டில் என்ன விலை
விற்கிறதோ, அதைவிட குறைந்த விலை. ஆனால் என்ன, அளந்து போடுவதை விட கொசுறு
என்று அதிகம் போடுவாராம். சொல்லிச் சொல்லி இன்றும் சிரிப்பார்கள். எங்கள்
தாத்தா ஒரு சுவாரஸ்யமான கேரக்டர். மொத்தத்தில் நாமெல்லாம்
வியாபாரத்துக்கு லாயக்கில்லை!
என் உறவினர் ஒருவர்
கூட தேள்கடி போன்றவற்றுக்கு மந்திரம் சொல்லி விஷம் இறக்குவார். என்
மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது நானும் தர்காவுக்கு அழைத்துச் சென்று
ஓ(ஊ)தியிருக்கிறேன். அப்துல்லாவிடம் இருந்த 7 பசுக்களில் ஒன்றின் பெயர் லட்சுமி. சுவாரஸ்யம்தான் இல்லை?
* வோட்டுக்குப் பணம்
வாங்கக்கூடாது என்பது கௌதமன் உள்ளிட்ட என் மாமாக்களின் கொள்கை. ஆனால்
நான் ஒருமுறை இரண்டு பெரிய கட்சிகளும் கொடுத்த மிகச் சிறிய தொகையை
வாங்கியிருக்கிறேன். ஆனால் இருவருக்கும் போடவில்லை. அப்போது புதிதாக
உதயமான நடிகர்க் கட்சிக்குப் போட்டேன். வழக்கம்போலவே என் ராசி, அந்தக்
கட்சி தோற்றுப் போயிற்று!! வோட்டுக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் எப்போதே
இருந்திருக்கிறது பாருங்கள்!
* அவனுக்கு கிரி என்று பெயர்
என்னும் வரியில்தான் ஃபிளாஷ்பேக் போல கதையே! என்னுடைய சிறு வயது 'உயிர்' நண்பனை
பற்பல வருடங்கள் கழித்துச் சந்தித்தபோது என்னைவிட நல்ல நிலைமையில்
இருந்தான். சிறுவயதின் பழைய விஷயங்களை பேசினால் முகம் சுளித்தான்!
ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி பணமாக மாற்றவேண்டும் என்று போதித்தான். அப்போது எனக்குத் தோன்றியது கண்ணெதிரே இருப்பது என் பழைய நண்பன் இல்லை! ஒரு தேர்ந்த, ஸி ஏ படித்த, ஒவ்வொரு நிமிடத்தையும் பணம் பண்ணும், கணக்காளர்தான் கண்ணுக்குத் தெரிந்தா(ன்)ர்.
* மதுரைக்
காமராஜர் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வியில் நானும் சேர்ந்திருந்தேன்.
முடிக்கவில்லை. இதுவரை என் சான்றிதழைக் கூட வாங்கவில்லை. அதாவது கல்வியை
நான் முடிக்கவில்லை! பாதிக்கிணறு தாண்டினேன் என்கிறார். நான் கிணற்றின் அருகிலேயே இன்னும் நிற்கிறேன்!
* மீண்டும் பூத்த கொன்றை மரம் ஒரு திறமையான சிறுவயது நண்பனை நினைவு கொள்கிறது. கற்பனையா? உண்மையா? இரண்டும் கலந்து வருபவைதானே நல்ல படைப்பு? சற்றே நீளமான அனுபவம் அல்லது கதை. கோவனைச் சந்திக்க எனக்கும் ஆவல். கோவி மணிசேகரன் நினைவாக நண்பனுக்கு கோவன் என்று பெயர் சூட்டி விட்டாரோ! இந்தப் படைப்பைப் படித்தபோது, வானதி பதிப்பகம் இவரது புத்தகத்தை வெளியிடுமளவு இளவயதில் சரித்திரக்கதை எழுதி (வானவல்லி) புகழ் பெற்றுள்ள திறமையான சாளையக்குறிச்சி வெற்றிவேல் நினைவுக்கு வருகிறார்.
திரு.செல்லப்பா ஐயா அவர்களின் மின்னூல் இணைப்பு
தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யவேண்டிய இடம்...
உங்களுடன் தொடர்பு செய்து சொன்னதும் நல்லா இருக்கு...!
பதிலளிநீக்குதிரு.செல்லப்பா ஐயா அவர்களின் மின்னூல் இணைப்பு : http://www.pustaka.co.in/home/ebook/tamil/sollattuma-konjam
// தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யவேண்டிய இடம்... // இணைப்பு தவறாக உள்ளது --> (வெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்!) - நேற்றைய பதிவிற்கு செல்கிறது...
பதிலளிநீக்குசரியான இணைப்பு : http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462606
நேற்றைய பதிவு அல்ல... வெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்! - Friday, June 2, 2017 பதிவு...
பதிலளிநீக்குநன்றி தனபாலன். மாற்றிவிட்டேன். நீங்கள் கொடுத்திருக்கும் புஸ்தகா இணைப்பையும் இணைத்திருக்கிறேன். சுலபமாக செய்வதாக நினைத்து ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் தமிழ்மண இணைப்பையே கொடுத்துக் கொண்டிருக்கிறேன். சில பழைய பதிவுகளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். இனி வரவேண்டிய பதிவுகளுக்கும் கூட மாற்றவேண்டும். நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குஐயா அவர்களின் எழுத்து நம்மை கட்டிப்போட வைக்கும் வல்லமை வாய்ந்தது
பதிலளிநீக்குதம =1
இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே :)
பதிலளிநீக்குஆஹா உங்கள் அனுபவங்களையும் சேர்த்து ஒரு சிறப்பான விமர்சனம். படிக்கத் தூண்டும் விமர்சனம். நன்றி.
பதிலளிநீக்குஅருமையான நடை ரசித்தேன்
பதிலளிநீக்குVery interesting!
பதிலளிநீக்குவணக்கம் ஶ்ரீராம்..
பதிலளிநீக்குஐயா அவர்களின் எல்லாக் கதைகளையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள். செல்லப்பா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புத் தம்பி வெற்றிவேலையும் நினைவூட்டியுள்ளீர்கள். இவ்வளவு சிறிய வயதில் அவரின் சாதனை வியப்புக்குரியது. இப்போது அவர் 'வென்வேல் சென்னி' எனும் புதினத்தை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குராய செல்லப்பா அவர்களின் ‘சொல்லட்டுமா கொஞ்சம்’ சுவாரஸ்யமாக
பதிலளிநீக்குஇருக்கிறது.அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஸ்ரீராம். செல்லப்பா நன்றாகவே எழுதுபவர். நிறையவே சொல்லலாம் அவர் !
நல்லதொரு விமர்சனம்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
சுவாரஸ்யமாக இருக்கே கொஞ்சமாக சொன்னதே !!
பதிலளிநீக்குஇன்னும் எனது உள்ளுணர்வு பதிவை ஸ்ரீராம் மறக்கலையா :))
நான் ..பற்றிய ஐயா அவரது விளக்கம் அருமை
//சொல்லட்டுமா கொஞ்சம்?//
பதிலளிநீக்குஇப்பூடிக் கேட்டுப்போட்டு.... படிக்கப் படிக்க முடியாதளவுக்குப் பதிவைப் போட்டிருக்கிறாரே....கர்ர்ர்ர்ர்ர்:).
// பள்ளிப்பருவத்தில் படித்த ஆண்நண்பர்கள் இருவருடன் இன்னும் (ரொம்ப அக்கேஷனல்) தொடர்பு இருக்கிறது எனக்கு. ஆனால் சிநேகிதிகள்? ஊ....ஹூம்!!! //
ஹா ஹா ஹா ரொம்பக் கவலையாக இருக்குதுபோல:).
எனக்கும் பள்ளிக்கால நண்பி இங்குதான் இருக்கிறார.. இப்போ பமிலி ஃபிர்ன்ட்ஸ் ஆக இருக்கிறோம்ம்.. அப்பப்ப சந்திப்போம். படிக்கும்போது இருந்ததுபோலவேதான் இப்பவும் இருக்கிறது நட்பு... எதுவும் குறைந்துவிடவில்லை. அனைத்தும் பயமில்லாமல் பரிமாறிக்கொள்வோம்.. அவ்ளோ நம்பிக்கை.
சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன். இராய செல்லப்பா அவர்கள் அனுபவத்திலிருந்து எழுதுவதால் (சூழ்'நிலை அவரது அனுபவத்திலிருந்து வரும்), அவருடைய கதைகள் நம்மை ஒன்றச்செய்யும். திறமைசாலி. அவருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇது மதிப்புரையா, விமரிசனமா என்று குழம்பிப்போனேன். என்ன சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆரம்பப் பத்திகள் இருக்கு என்று தோன்றியது. 'கௌதமன் மாமா' என்ற இடம் வரும்போதுதான், புத்தக மதிப்புரையை, தன் அனுபவத்திலிருந்து இணைத்து விமர்சிரித்திருக்கிறீர்கள் என்று புரிந்தது.
இப்போல்லாம் த.ம வாக்கு அதிகமாயிக்கிட்டே போகிறது. இந்த AWARENESS அதிரா அவர்களால்தான் வந்தது என்று நினைக்கிறேன்.
/// ஒரு பெண் நினைத்து விட்டால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு விடுவாள் போலும்! ///
பதிலளிநீக்குமனதில் அன்பு இருப்பின் எக்குறையும் தெரியாதே.. சில பெண்கள் அவசரப்பட்டு முடிவெடுத்து ஏற்றுக்கொண்ட பின்னரே அவதிப்படுகின்றனர்.. தப்பான முடிவெடுத்திட்டமோ என...
யார் திட்டினாலும் பறவாயில்லை:) இப்போ சில நிகழ்ச்சிகள் பார்ப்பதால்தான் தெரிய வருகிறது பெண்கள் எவ்ளோ துன்பப் படுகிறார்கள் என.... இல்லை எனில் எல்லாப் பெண்களும் நம்மை மாதிரித்தான் சுகந்திரமாக இருக்கிறார்கள் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.
// "எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும், அதிர்ஷ்டமும் இருக்கணும்" //
பதிலளிநீக்குஉண்மைதான், நானும் இப்படி நம்புவதுண்டு... நேரமும் அதிர்ஷ்டமும் சரியாக அமையும்போதுதான் மகுடமும் கிடைக்கிறது:).. ஆனா நாமும் கொஞ்சம் பாடுபடோணுமாக்கும்:) ஹா ஹா ஹா:).
// பிரார்த்தனையாக வேண்டிக்கொண்டது என்பதை பொறுத்தவரை இன்னமும் என் கல்யாண வேண்டுதலையே நிறைவேற்றவில்லை நான்! 25 வருடங்கள் ஆகி விட்டன!//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்த வருடமாவது நிறைவேத்திப்போடுங்கோ:).
//என்னைப் பொறுத்தவரை கனவுகள் பலிக்கும் நேரம் குறைவுதான். //
எனக்கு கன்னா பின்னா எனக் கனவுகள் வரும்.. ஆனா நிறைய அறிகுறிகள் கனவின் மூலம் எனக்கு காட்டிக்கொடுத்திருக்கிறது.. கொடுத்துக் கொண்டும் இருக்கிறது... சுவாமிப்படத்துக்கு விளக்கு கொழுத்த மறந்தாலோ இல்லை ஏதும் காரணத்தால் விட்டாலோ.. இரவு கனவில் ஆராவது சொல்வார்கள்.. உன் வீட்டுக்குள் வரமாட்டேன்ன் இருட்டாக இருக்கு என:)... இப்படி நிறைய சொல்லலாம்..
ஒரு பெரீய ஆல மரத்தை கொப்புக்கொப்பாக வெட்டி இழுக்கிறார்கள்.. எனக்கு அழுகை அழுகையாக வருது நெஞ்செல்லாம் மூச்செடுக்கேலாம் போகுது.. விடிய அம்மாவிடம் சொன்னேன்.. நல்லதில்லையே என்றா.
அன்று தகவல் வந்துது, நன்றாக இருந்த பெரியப்பா.. ஹ்ஹார்ட் அட்டாக்கில் போய் விட்டார் என.. இப்படி நிறையச் சொல்லலாம் வேண்டாம்ம்:).
///நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்குஇப்போல்லாம் த.ம வாக்கு அதிகமாயிக்கிட்டே போகிறது. இந்த AWARENESS அதிரா அவர்களால்தான் வந்தது என்று நினைக்கிறேன்.///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:) ஊரெல்லாம் புகைப்போகப்போகுதூஊஊஊஊஊஊ:)..
thank you..
https://1qqfpe4dlq3lr5vysisa8xy6-wpengine.netdna-ssl.com/wp-content/uploads/2015/08/kitten-offering-flowers.jpg
இராய.செல்லப்பா அவர்களின்
பதிலளிநீக்கு‘சொல்லட்டுமா கொஞ்சம்?’ என்ற
மின்நூல் அறிமுகம் அருமை!
கொஞ்சம் சொன்னாலும்
கனக்கச் சிந்திக்க வேணும்
என்று
நூலின் தலைப்புச் சொல்கிறதே!
@அதிரா. பூசார் பூ கொடுப்பதாகத் தெரியவில்லையே. வீட்டில் வைத்திருந்த பூக்களைத் திருடிச்செல்வதாகத்தான் அவர் முகமும் தோற்றமும் காண்பிக்கிறது.
பதிலளிநீக்குஅருமையான விமரிசனம். புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டி விடுகிறது. ஏற்கெனவே புத்தகங்கள் படிக்க வேண்டியது இருக்கிறது. :)
பதிலளிநீக்கு/// லஞ்சம் தெரிந்து கொடுக்கிறோம். தெரியாமல் தருகிறோம். விரும்பியும் விரும்பாமலும் தருகிறோம். நமக்கு வேலை ஆகவேண்டுமென்றால் வேறு வழியில்லை என்கிற நிலைமை. 'ஸம்திங்' நானும் அழுதிருக்கிறேன் நிறைய! ////
பதிலளிநீக்குஉண்மைதான் இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை... எல்லாமே உயர்ந்துகொண்டே இருக்கிறது அங்கு....:).
இராய செல்லப்பா ஐயா வின் லஞ்சக் கவிதை மிக அருமை.
///கௌதமன் மாமா சொல்வார். அவர் தந்தை - என் தாத்தா///
ஆவ்வ்வ் சொல்லவே இல்லை?:).. இப்போ வெளியே சொல்லத் தைரியம் வந்திருக்கிறதுபோலும்:).. இது கெள அண்ணனுக்குத் தெரியுமோ தெரியேல்லை ஹா ஹா ஹா:).
//அப்துல்லாவிடம் இருந்த 7 பசுக்களில் ஒன்றின் பெயர் லட்சுமி. சுவாரஸ்யம்தான் இல்லை?//
ஆச்சர்ர்யம்தான், மனதில் பெயர் பிடித்திருந்தாலும், வைக்கும் தைரியம் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை...
//வோட்டுக்குப் பணம் வாங்கக்கூடாது என்பது கௌதமன் உள்ளிட்ட என் மாமாக்களின் கொள்கை. ஆனால் நான் ஒருமுறை இரண்டு பெரிய கட்சிகளும் கொடுத்த மிகச் சிறிய தொகையை வாங்கியிருக்கிறேன். ஆனால் இருவருக்கும் போடவில்லை.///
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இருங்கோ உங்களுக்கு இப்பவே சங்கிலி வரப்போகுது கைக்கு:)..
பழைய நண்பனைப் பார்த்தால் பழைய நினைவுகள் தான் எழும், இல்லையெனில் அவர் இப்போ அவராக இல்லை என்பதே அர்த்தம்.
// நான் கிணற்றின் அருகிலேயே இன்னும் நிற்கிறேன்!///
ஹா ஹா ஹா கவனம் கிணற்றுக் கட்டை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ:).
நெல்லைத்தமிழன் சொன்னதைப்போல நானும் ஆரம்பம் குழம்பித் தெளிவடைஞ்சேன் இது புத்தக விமர்சனம் என:)..
புத்தகமும் அருமை, அதுக்கான உங்கள் எழுத்துக்களும் இன்னொரு புத்தகம்போல இருக்கிறது... அதிக அலட்டல் இல்லாமல்.
ஊசிக்குறிப்பு:
சகோ ஸ்ரீராமும் இப்போ எழுத்துக்களுக்கு மினக்கெட்டுக் கலர் அடிக்கத் தொடங்கிட்டார்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:).
//நெல்லைத் தமிழன் said...
பதிலளிநீக்கு@அதிரா. பூசார் பூ கொடுப்பதாகத் தெரியவில்லையே. வீட்டில் வைத்திருந்த பூக்களைத் திருடிச்செல்வதாகத்தான் அவர் முகமும் தோற்றமும் காண்பிக்கிறது.///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ நான் எது செஞ்சாலும் சந்தேகக்கண்ணோடயே பார்க்கிறாங்க எல்லோரும்:). ஒரு கொமெடி நினைவுக்கு வருகிறது.
நண்பன் 1: நான் எது செஞ்சாலும் என் மனைவி விடுறாவில்லை, அதுக்குக் குறுக்கே நிக்கிறா..:( என்ன பண்ணட்டும் நான்?:).
நண்பன் 2: அப்போ கார் ஓட்டிப் பாரன்:).
ஹா ஹா ஹா:).
நன்றி DD.
பதிலளிநீக்குஉடனடியாக கோளாறைச் சுட்டிக்காட்டி சரி செய்ய உதவியமைக்கு. ரசித்தமைக்கும் நன்றி.
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி. இதற்கு மேல் சொன்னால் போரடித்து விடும்! எல்லாம் அளவுதான்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குநன்றி மிகிமா!
பதிலளிநீக்குநன்றி ராஜீவன் ராமலிங்கம்.
பதிலளிநீக்குநன்றி ஏகாந்தன் ஸார். நிறையவே சொல்லியிருக்கிறார் அவர். அங்கு சென்று படிக்கலாம்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி ராஜி.
பதிலளிநீக்குநன்றி நாகேந்திரபாரதி.
பதிலளிநீக்குநன்றி விஜய்.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின்.
பதிலளிநீக்கு//இன்னும் எனது உள்ளுணர்வு பதிவை ஸ்ரீராம் மறக்கலையா ://
ஜீவி ஸார் ,இதோ இங்கேயே கூட செல்லப்பா ஸார் சொல்லியிருப்பது போலவும் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இணக்கமான புள்ளி வந்து விட்டால் மனதில் நின்று விடுகிறது இல்லையா?
வாங்க அதிரா...
பதிலளிநீக்கு//படிக்கப் படிக்க முடியாதளவுக்குப் பதிவைப் போட்டிருக்கிறாரே..//
'எழுத்துரு' சரியில்லையா?!!! அல்லது வளவள என்றிருக்கிறது என்கிறீர்களோ?!!! பள்ளிப்பருவத்தில் சிநேகிதிகளுடன் அவ்வளவு பேச்சு வார்த்தை கிடையாது! நிறைய பெயர்களே நினைவில் இல்லை!!! சுமதி, ஷோபா, ஃபிரான்சிஸ்கா செல்லத்தாய் போன்ற சில பெயர்கள்தான் நினைவில்!
//அனைத்தும் பயமில்லாமல் பரிமாறிக்கொள்வோம்..//
பயம் எல்லாம் இல்லை. தூரம் அதிகமாகி விட்டது. முன்பு ஒரு பதிவு கூட எங்கள் தளத்தில் எழுதி இருந்தேன்!
வாங்க நெல்லைத்தமிழன்...
பதிலளிநீக்கு//இது மதிப்புரையா, விமரிசனமா என்று குழம்பிப்போனேன். //
மதிப்புரை என்றும் இல்லை, விமர்சனம் என்றும் இல்லை. நான் போடுவதெல்லாமே படிப்பதன் பகிர்வே.. படிக்கும் வாசகர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம், அபிப்ராயம் வரும் எழுத்தாளர்களின் எழுத்துகளை படிக்கும்போது. இவை என் உணர்வுகள் என்று சொல்லலாம். அதாவது செல்லப்பா ஸாரின் 'நானு'ம் நானும் சந்திக்கும் புள்ளி!
//இந்த AWARENESS அதிரா அவர்களால்தான் வந்தது என்று நினைக்கிறேன். //
கண்டிப்பாக. அதிராவுக்கு நன்றி. வாக்கின் எண்ணிக்கையும் கூடுவதற்கு அவர்தான் காரணம். கடந்த சில பதிவுகளில் தமிழ்மண லிங்க் என்று நான் ஒரு குழப்படி செய்திருந்தேன். தனபாலன்தான் சுட்டிக் காட்டி உணர வைத்தார்.
வாங்க அதிரா..
பதிலளிநீக்கு//சில பெண்கள் அவசரப்பட்டு முடிவெடுத்து ஏற்றுக்கொண்ட பின்னரே அவதிப்படுகின்றனர்.. //
அன்பு என்பதை குழப்பிக் கொள்கிறார்களோ! ஆனால் மாறான பெண் ஒருவரை நான் என் நட்பின் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
@அதிரா
பதிலளிநீக்கு//ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்த வருடமாவது நிறைவேத்திப்போடுங்கோ:).//
வருடத்தைத் தவறாகக் கொடுத்திருந்தேன். மாற்றி விட்டேன்!!! சீக்கிரமே நிறைவேற்றி விடுவோம்! கல்யாண மாலை காய்ந்து, வதங்கி பத்திரமாக இருக்கிறது!
//பெரியப்பா.. ஹ்ஹார்ட் அட்டாக்கில் போய் விட்டார் என.. இப்படி நிறையச் சொல்லலாம் வேண்டாம்ம்:). //
இதில் கூட எனக்குத் தோன்றுவதென்னவென்றால்... 'சம்பவம்' நடந்த பிறகு அதை ஏற்கெனவே நாம் கண்ட கனவுடன் பொருத்திப் பார்க்கிறோமோ..!!!
நன்றி நண்பர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா.. நன்றி. காணோமே என்றே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குவாங்க அதிரா..
பதிலளிநீக்கு//இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை..//
இந்தியா மட்டும்தானா!
//இப்போ வெளியே சொல்லத் தைரியம் வந்திருக்கிறதுபோலும்://
கௌ என் உறவு என்று எல்லோருக்கும் தெரியுமே.. உங்களுக்குத் தெரியாதா?!!
//வைக்கும் தைரியம் //
என்பது உண்மை!
@அதிரா..
பதிலளிநீக்கு//பழைய நண்பனைப் பார்த்தால் பழைய நினைவுகள் தான் எழும், இல்லையெனில் அவர் இப்போ அவராக இல்லை என்பதே அர்த்தம்.//
ஆம். அதைத்தான் இப்போதும், பழைய பதிவொன்றிலும் சொல்லியிருக்கிறேன்!
//நானும் ஆரம்பம் குழம்பித் தெளிவடைஞ்சேன் இது புத்தக விமர்சனம் என//
விமர்சனம் என்று நான் நினைக்கவில்லை. அதை படித்தபோது இருந்த என் உணர்வுகளை உங்களுக்கு கடத்துகிறேன்!!!
//புத்தகமும் அருமை, அதுக்கான உங்கள் எழுத்துக்களும் இன்னொரு புத்தகம்போல இருக்கிறது... அதிக அலட்டல் இல்லாமல்.//
ஓ... நன்றி, நன்றி. தன்யனானேன்.
//ஸ்ரீராமும் இப்போ எழுத்துக்களுக்கு மினக்கெட்டுக் கலர் அடிக்கத் தொடங்கிட்டார்ர்ர்ர் //
ஹா.... ஹா... ஹா... கலரடிப்பது எப்பவுமே உண்டு என்றாலும், வேறு கலரில் இருப்பது அந்தந்த பதிவுகளின் தலைப்புகள்.
//அப்போ கார் ஓட்டிப் பாரன்//
ஹா... ஹா... ஹா... (கர்ர்ர்ர்ர்ர் சொல்லணுமோ!)
//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//
வருடத்தைத் தவறாகக் கொடுத்திருந்தேன். மாற்றி விட்டேன்!!!!///
என்னாதூஊஊஊஊஉ கல்யாணம் கட்டிய வருடக் கணக்கில் தவறோ ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. உங்கள் பாஸ் இடம் இதைச் சொல்லி, நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டு ஓடிவந்து மாத்திவிட்டதுபோல இருக்கே இப்போ:).. 25 வருடம் எனில் அப்போ 2 வருடம் திருமணம் முடிக்காமலோ குடும்பம் நடத்தினனீங்க எனக் கேட்டிருப்பாவே?:)) ஹா ஹா ஹா.. உந்தக் காட்சி என் மனத்திரையில் விரிகிறது:).
அது என்னமோ தெரியல்ல திருமண விசயத்தை.. திகதியை.. கலர்களை எல்லாம் கரீக்டாக் கணக்கு வைத்திருப்போர் பெண்கள்தேன்ன்:).. ஆண்களுக்கு ... இதைத்தவிர மற்ற எல்லாம் நினைவில் இருக்கும்:) ஹா ஹா ஹா ஹையோ ஏதோ ஒரு ஃபுளோல சொல்லிட்டேன்ன்ன்ன்.. வெரி சோரி:).. தடி எடுத்திடாதீங்கோ ஆரும்:).
ஸ்ரீராமின் டச்! ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்றால்! செல்லப்பா சார் அவரது அனுபவங்களிலிருந்து எழுதுவதாலோ என்னவோ நமக்கும் சில ஏற்பட்டிருக்கும் என்பதால் ஒன்றிவிடும் வகையில் இருக்கும் அவரது எழுத்தும். மிக அழகாக எழுதுபவர். உங்கள் விமர்சனமும் உங்கள் அனுபவங்கள் சிலதும் சொல்லி எழுதியிருப்பது மேலும் மெருகூட்டிவிட்டது!!! செல்லப்பா சாரின் சமீபத்திய பதிவுகள். அவரது தளத்திலும் வாசித்ததுண்டு. இருவருக்குமே வாழ்த்துகள்! பாராட்டுகள்!
பதிலளிநீக்குகீதா: மேற் சொன்ன கருத்துடன்....ஸ்ரீராம் நன்றி எனது உள்ளுனர்வு பதிவையும் இங்கு குறிப்பிட்டமைக்கு ஆம் ஏஞ்சல், செல்லப்பா சார் எழுதியவுடன் நான் எழுதி வைத்திருந்ததை முடித்து வெளியிட்ட ஒன்று. இன்னும் இருக்கிறது ஏற்கனவே எழுதத் தொடங்கி முடிக்காமல்.. செல்லப்பா சாரின் அம்மாவிடம் பேசினீர்களா வை வாசித்ததும், கிட்டத்தட்ட அதே கருவில் எழுதிய கதையை முடித்துவிட வேண்டும் என்று நினைத்து இன்னும் முடிக்காமல் இன்னும் இப்படி பல இருக்கின்றன...
வாழ்த்துகள்! மிகவும் ரசித்தேன் உங்கள் விமரசனத்தை!!!
உங்களின் ஆரம்பவரிகளைப் படித்ததும் ஒரு வேளை செல்லப்பா சாரிடம் நீங்கள் ஏதேனும் நேர்காணல் செய்து போட்டிருக்கிறீர்களோ ...கேட்டு வாங்கிப் போடும் கதைகள் போல இந்த நேர்காணலும் தொடங்கியிருக்காரோ?!!!...ஆஹா! அப்ப நமக்கும் மெயில் ஏதேனும் வந்துருக்குமோ கேள்விக் கணைகளுடன்??!!!! சொக்கா இதென்ன சோதனை...கேட்டுத்தானே பழக்கம்...பதில் சொல்லிப் பழக்கமில்லையே..ஆனாலும் மனசுக்குள் ஒரு சிறு நிம்மதி...செல்லப்பா சார் எழுத்தாளர். நாமெல்லாம் எழுத்தாளர் இல்லை அதனால் வந்திருக்காது....என்று நினைத்துக் கொண்டே மெயில் செக் செய்ய சென்றேன் ஹிஹிஹி....!!! அப்புறம் வாசிக்க வாசிக்கத்தான் தெரிந்தது...செல்லப்பா சாரின் புத்தகம் என்று. உங்கள் ஆரம்பம் அசத்தல். வித்தியாசமான தொடக்கம்!!! மிகவும் ரசித்தேன் அதை...
பதிலளிநீக்குகீதா
ஹைய்யா!! இன்று தம பெட்டி கண்ணில் பட்டதே!! ஓட்டு போட்டாச்சே!!!
பதிலளிநீக்குகீதா
அருமையான விமர்சனம்
பதிலளிநீக்கு@அதிரா : //...சுவாமிப்படத்துக்கு விளக்குக் கொழுத்த மறந்தாலோ...//
பதிலளிநீக்குஒரு சின்ன கரெக்ஷன் : விளக்குக் ’கொழுத்த’ அல்ல. ‘விளக்கு ஏற்ற’ என்பதுதான் சரி. ’விளக்கேற்றி வைக்கிறேன்.. விடிய விடிய எரியட்டும்.. நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்..’ -பி.சுசீலாவின் குரல் காதில் விழுகிறதா !
@@ ஹாஹ்ஹா :)
பதிலளிநீக்கு@ஏகாந்தன் ...
இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில வர வேண்டிய நேரத்தில் வரவே வராது
நானும் 2011 லருந்து சொல்லி சொல்லி இளைச்சிட்டேன் :)
சொல்லட்டுமா கொஞ்சம்?..
பதிலளிநீக்குஅன்பின் திரு இராய.செல்லப்பா அவர்களின் கைவண்ணம் தனித்தன்மையானது..
அருமையான விமர்சனத்துடன் இனிய பதிவு.. வாழ்க நலம்!..
///ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்கு@அதிரா : //...சுவாமிப்படத்துக்கு விளக்குக் கொழுத்த மறந்தாலோ...//
ஒரு சின்ன கரெக்ஷன் : விளக்குக் ’கொழுத்த’ அல்ல. ‘விளக்கு ஏற்ற’ என்பதுதான் சரி. ’விளக்கேற்றி வைக்கிறேன்.. விடிய விடிய எரியட்டும்.. நடக்கப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்..’ -பி.சுசீலாவின் குரல் காதில் விழுகிறதா !//
ஹா ஹா ஹா அப்பாடல் மீக்கும் பிடிக்கும்:).. ஆனா அது எங்கள் பேச்சுவழக்கு :).. விளக்கு கொழுத்துறது எனச் சொன்னால்தான் நோர்மலான பெண் என நினைப்பினம்:).. விளக்கேற்றப் போகிறேன் என்றால்ல் ஒரு தடவை உற்று:) லுக் பண்ணுவினம் ஹா ஹா ஹா:).. ஆனா கோயிலில் விளக்கேற்றுவது எனத்தான் சொல்லுவோம்.. வீட்டில்தான் கொழு/ளு.. த்துறது ஹையோ மீ கொயம்பிட்டனே இப்போ:).
//Angelin said...
பதிலளிநீக்கு@@ ஹாஹ்ஹா :)
@ஏகாந்தன் ...
இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில வர வேண்டிய நேரத்தில் வரவே வராது
நானும் 2011 லருந்து சொல்லி சொல்லி இளைச்சிட்டேன் :)//
https://origin.ih.constantcontact.com/fs003/1103447193507/img/99.jpg
//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில...
பதிலளிநீக்குபோகட்டும்.. ந ன ண சமாசாரம் எப்படி?
நன்றி துளஸிஜி. தன்யனானேன்!
பதிலளிநீக்குநன்றி கீதா ரெங்கன்.
நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குசெல்லப்பா சாரின் ஊர்க்கோலம் என்னும் நூலை எடுத்து படிக்க முயற்சிக்கிறேன் மின்னூலில் எழுத்துருக்கள் மிகவும் சிறியதாக உள்ளது வாஅசிக்கச் சிரமமாய் இருக்கிறது
பதிலளிநீக்கு@அப்பாதுரைJune 9, 2017 at 7:01 AM
பதிலளிநீக்கு//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில...
போகட்டும்.. ந ன ண சமாசாரம் எப்படி?///ஹா ஹா அதும் தகராறு தான் ஆனா அவ்வளவு மோசம் இல்லை :)
@அதிரா: // ஹா ஹா ஹா அப்பாடல் மீக்கும் பிடிக்கும்:).. ஆனா அது எங்கள் பேச்சுவழக்கு :).. விளக்கு கொழுத்துறது எனச் சொன்னால்தான் நோர்மலான பெண் என நினைப்பினம்:).. //
பதிலளிநீக்குஅடடா! ப்ரமாதம்!
அருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குபுத்தக விமர்சனமும், உங்கள் கருத்தும்(மலரும் நினைவுகளும்) அருமை.
நானும் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழக அஞ்சல் வழி கல்வி படித்தேன் பட்டபடிப்பு பதியில் நின்று விட்டது
சான்றிதழை வாங்கவில்லை.
//அப்பாதுரை said...
பதிலளிநீக்கு//இந்த பூனைக்கு ழ .ல ,ள ,ர ,ற வர வேண்டிய இடத்தில...
போகட்டும்.. ந ன ண சமாசாரம் எப்படி?///
அதெல்லாம் பத்துப்படி.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதேஏஏஏஏஏஏ.. அத்துப்படி:)..
//ஏகாந்தன் Aekaanthan ! said...
பதிலளிநீக்கு@அதிரா: // ஹா ஹா ஹா அப்பாடல் மீக்கும் பிடிக்கும்:).. ஆனா அது எங்கள் பேச்சுவழக்கு :).. விளக்கு கொழுத்துறது எனச் சொன்னால்தான் நோர்மலான பெண் என நினைப்பினம்:).. //
அடடா! ப்ரமாதம்!//
தங்கூ தங்கூஊஉ:)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஏகாந்தன் ..நோ :) சும்மாவெ இந்த பூசாரை பிடிக்க முடியாது இப்பொ இந்த பாராட்டு கேட்டு மேடம் ஜம்பிங் .இங்கிலாந்து அதிருது
பதிலளிநீக்கு///Angelin said...
பதிலளிநீக்குஏகாந்தன் ..நோ :) சும்மாவெ இந்த பூசாரை பிடிக்க முடியாது இப்பொ இந்த பாராட்டு கேட்டு மேடம் ஜம்பிங் .இங்கிலாந்து அதிருது//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு டமில்ல டி என இந்த உலகத்துக்கே தெரியும்:) அது பொறாமை இவவுக்கு கர்:)