புதன், 4 ஜூலை, 2018

கேளுங்க, சொல்றோம்! புதன் 180704




கீதா சாம்பசிவம் :

கௌதமன் சார், அந்த சிவப்பு வண்ணக் குழந்தை ஏன் 3 கிளவிகள் சே, எல்லாம் இந்த அதிராவால் வந்தது! கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுத்திருக்கார்? இப்போத் தான் எழுதக் கத்துக்கறாரோ? 


ப: ஆமாம் இப்போதான் பல் முளைச்சிருக்கு! 

கௌதமன் சார், உங்களுக்குப் பதில் சொல்லக் கஷ்டமான கேள்வி எது?

பதில் :  கௌ அங்கிள்...    இந்தாங்க மைக்!


சீனியர் கே ஜி , இந்தாங்க மைக்கு !

அடுத்து வருவது.

இங்கே உங்களைக் கேள்வி கேட்கும் எங்களில் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பவர் யார்?ஏன்?

  
இப்போது புரிந்திருக்குமே.

பதில் :   புத்திசாலித்தனம்னா என்ன?

எந்தக் கேள்வி உங்களைச் சிந்திக்க வைத்தது?



போன கேள்வி !


பதில் :   எல்லாக் கேள்விகளும்.
    
எந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தடுமாறினீர்கள்?


ஏறக்குறைய எல்லாவற்றுக்கும்தான்.
  

பதில் :   

எரிச்சல் அடைய வைத்த கேள்வி எது? 


இது இல்லை.

பதில் :   இந்தக் கேள்விதான் என்று சொன்னால் உங்களுக்கு எரிச்சல் வருமா?
     
கௌதமன் சார்! காசு சோபனா பேரிலேயே காசு இருக்கே! எல்லோருக்கும் கொடுப்பாங்களா? : 

ப: ஹி ஹி அது கஞ்ச சோபனா! 

தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை வைச்சால் பிடிக்குமா? வேர்க்கடலை வைச்சால் பிடிக்குமா? அல்லது எதுவுமே கூடாதா? 

ப: பொட்டுக் கடலையை தனியாகச் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சட்னி ரூபத்திலும் நல்லா இருக்கும். வேர்க்கடலை வறுத்தோ வேகவைத்தோ சாப்பிட்டால் நல்லா இருக்கு. சட்னியில் சேர்த்தால், தானும் கெட்டு, சட்னியையும் கெடுத்துவிடுகிறது!

கட்டாயம் தேங்காய் வைக்க வேண்டும்.

இது வரை நீங்க சாப்பிட்டதிலேயே மிகவும் பிடிச்ச உணவு எது? எங்கே? யார் எப்போச் சமைச்சாங்க? 

ப: சின்ன வயதில், இரவு சீக்கிரமாகத் தூங்கிவிடுவேன். காலை வரை, கட்டை போல துயில்! ஒருமுறை, வருடாந்திர லீவுக்கு அண்ணனுடன் சேர்ந்து, கண்கொடுத்தவனிதம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். (ஒ வி) அக்காவும், குடும்பமும் அங்கே இருந்தார்கள். அண்ணன், மற்றும் அக்கா குழந்தைகள் எல்லோரும் ஒருநாள் மாலை கோவிலுக்குச் சென்றிருந்தார்கள். நான் வழக்கம்போல வீட்டில் கொர் கொர்... 
மறுநாள் காலை, நான் எழுந்ததும், அக்காவின் பெரிய பெண் (என்னைவிட வயதில் மிக மூத்தவர்) அவருடைய அப்பாவின் வெற்றிலைப் பெட்டியில், எனக்காக வைத்திருந்த, அனுமாருக்குச் சார்த்தப்பட்ட வடைமாலை வடை ஒன்றை எனக்குக் கொடுத்தார். அதன் சுவை இன்றுவரை எனக்கு மறக்கவில்லை!

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவதிலேயே உங்க திறமைக்குச் சவால் விட்ட கேள்வி எது?

ப: இதுவரை அப்படி ஒரு கேள்வி வரவில்லை என்று நினைக்கிறேன். 

பதில் சொல்லும்போதுத் திண்டாடிய அனுபவம் உண்டா? 

ப: வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு, தவறான பதில் சொல்லி, திண்டாடிய அனுபவங்கள் நிறைய உண்டு.  

கேள்விக்குப் பதில் சொல்லறேனு மாட்டிக் கொண்டதாய் நினைப்பீங்களா?


ப: நல்ல பொழுது போக்காகவும், மன நிறைவாகவும் இருக்கு. எனவே மாட்டிக்கொண்ட நினைப்பு இல்லை. 

நாங்க கேட்கும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைச்சிருக்கும். அப்போ ஏதேனும் தேடிக் கண்டு பிடிக்கும்படி நேர்ந்திருக்கா? அதாவது கூகிளாரின் தயவை நாடிப் போவீங்களா? 

ப: சில சமயங்களில் அப்படியும் உண்டு.

ஆசிரியர்களிலேயே ச்ரீராம் தான் சின்னவர்னு நினைச்சேன். அப்போ இந்தச் சின்னவர் யாரு? நீலவண்ணக் கண்ணன் ச்ரீராம் தானே? 

ப: கே ஜீ க்கள் பற்றி மே முப்பதாம் தேதி கேள்வி பதில் பகுதியில் அதிரா வின் கேள்வி ஒன்றுக்கு பதிலாக சொல்லியிருக்கேன். சீனியர் கே ஜி , ஜூனியர் கே ஜி, எல் கே ஜி என்று! இதில் எல் கே ஜிக்கே வயது அறுபத்தாறு ஆகுது! 

ஆசிரியர்களில் சின்னவர் ஸ்ரீராம் என்று நான் சொன்னால், சின்னவள் சண்டைக்கு வரக்கூடும்! 

  அதிரா :

தமனா அனுக்கா:) குறைந்தது 4 வித்தியாசங்கள் கூறவும்?:).. இதுக்கு நீல வண்ணப் பதில்களும் நிட்சயம் தேவை:)) 

ப: இது அந்த நீலவண்ணக் கண்ணன் அனுப்பிய நீ குழாய் சுட்டி! 



தமன்னா பாட்டியா (?) என்று அவர் பெயரிலேயே சந்தேகம் கேட்டிருப்பதை, இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை! 

நெ த நோட் திஸ் பாயிண்ட்! (நாராயண, நாராயண! )

நீண்ட தூரம் சைக்கிள் ஓடிய அனுபவம் உண்டோ?[நான் ஓடியிருக்கிறேன் 30 கிலோ மீட்டர்]. 

ப: சைக்கிள் விடக் கற்றுக்கொண்டது நாகையில். அந்த அனுபவங்களை இங்கே படித்து சிரியுங்கள் ! 

அதற்கு பலநாட்கள் கழித்து ஒருநாள், அக்கா மறந்து வைத்துவிட்டு வந்த சாவி ஒன்றை எடுத்து வர அக்காவின் பக்கத்து வீட்டு உஷாவின் சைக்கிளை கடன் வாங்கி, தாறுமாறாக ஓட்டி, ஒரு  (கூடைக்கார) பறவை முனியம்மாவின் டிக்கியில் இடித்து, அவர் துரத்தியபோது சைக்கிளோடு ரொம்பதூரம் ஓடியிருக்கிறேன்!  

ப: ஓடியவா, ஓட்டியவா? உண்டு. அப்பாவை டபிள்ஸ் ஏற்றிக்கொண்டு நீண்டதூரம் ஓட்டியிருக்கிறேன். 


வெயிலுக்கு மயங்கி விழுந்த அனுபவம் உண்டோ? [நான் விழுந்திருக்கிறேன் ஹா ஹா ஹா].. ஆனா மயங்கும்போது எனக்குத் தெரியும் .. உடனே அப்பாஆஆ எனக் கத்தியிருக்கிறேன்ன்.. அப்பா டக்கெனத் தாங்கி விழவிடாமல் பிடிச்சிருக்கிறார்.. இரு தடவைகள்.. சின்ன வயசிலதான் எல்லாம்..
ஆம் என்றாலும் இல்லை என்றாலும் விளக்கத்தோடு பதில் தேவை. 


ப: சின்ன வயதில் நானும் இரண்டு முறைகள் மயக்கம் அடைந்து விழுந்ததுண்டு. பெரும்பண்ணையூர் என்ற ஊரில் முதல் முறை. அப்புறம் ஏழாம் வகுப்புப் படித்தபோது ஊட்டி பக்கத்தில் நஞ்சநாடு என்ற ஊர் பள்ளியில். இரண்டு சந்தர்ப்பங்களிலும் வெயில் காரணம் இல்லை. என்ன காரணம் என்று யாரும் ஆராயவில்லை! 

ப: வெயிலுக்கு மயங்கியதில்லை; மயிலுக்கு மயங்கியிருக்கிறேன். 






சிலபேர் தங்கள் வீட்டில மட்டும் பந்தி பந்தியாகக் கதைக்கிறார்கள்.. பதில்களும் பந்தியாகக் குடுக்கிறார்கள் ஆனா அடுத்தவங்க வீட்டுக்குப் போனால் ஒரு சொல்லு மட்டும் பேசி விட்டு சென்று விடுகிறார்களே இவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? 

ப: நானும் பெரும்பாலும் அப்படித்தான்! 

ஏஞ்சல் :

அந்த பொண்ணு படத்தை போட்டு கூகிள்ன்னா பேர் மால்விக்கா ஷர்மா னு கூகிள் சொல்லுது.

ப: சூப்பர்! பெயர் தெரியாது என்று பொய் சொன்னேன். நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க!

1,பேய் ,பிசாசு ,பூதம் இதெல்லாம் வெவ்வேறா இல்லை ஒன்றுதானா ??
எனக்கு விளக்கம் அனைவரிடமிருந்தும் தேவை :)

   
ப: கல்யாணத்திற்கு முன்னாடி, எல்லாம் வெவ்வேறு என்று நினைத்திருந்தேன். 

பதில் : ஆவியை விட்டுட்டீங்க ஏஞ்சல்..  

ஒன்றில்லை ஒன்றுக்கொன்று சொந்தம்.


2,இந்த உலகத்தில் சிலர் பணக்காரர் சிலர் PAUPER ஏன் இந்த வித்யாசம் ?

ப: நானும் அடிக்கடி இப்படி நினைப்பது உண்டு. ஆனால், அவரவர்கள்  நிலைமைக்கு அவரவர்கள்தான் காரணம் என்று நினைத்து மனதைத் தேற்றிக்கொள்வேன்.                 

பதில் : மேடுன்னு இருந்தா பள்ளமும் இருக்கணும் இல்லையா? 

ஒண்ணு தமிழ் இன்னொண்ணு இங்கிலீஷ் என்பதால் வித்தியாசம் ?
 
3, கண்ணுக்கு மை அழகா ?
யார் கண்ணுக்குண்ணும் தெளிவுபடுத்தனும் ?

ப: ஆமாம். அனால் கருவிழிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே! Green eyes, Blue eyes இருப்பவர்கள் மை இட்டுக்கொண்டால் பார்க்க பயங்கரமா இருக்கும். 

  


பதில் : தெரியாது. ஆனால் கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்லி இருக்காங்க..

  


எல்லார் கண்ணுக்கும் (இ)மையழகு.


4, ஸ்பைஸ் கேர்ள்ஸில் உங்களுக்கு பிடித்தவர் :)

ப: அஞ்சுல ஒன்றும் நல்லா இல்லே! 

பதில் : யாரு அதிகமா கூச்சப்படறாங்களோ அவங்க...  

5, உங்களின் பெயர் (உங்களுடைய பெயரின் ) சூட்டப்பட்டதன் காரணம் ?

பதில்: கோத்ரம். 

பதில் : நட்சத்திரம்.

   
6,பிறரிடம் பிடிக்காத 3 விஷயங்கள் ?

ப: புறம் பேசுவது, உரத்த குரலில் சண்டை போடுதல், சிலரை மரியாதை இன்றி நடத்துவது. 

பதில் : வம்பு, சண்டை, கோபம் 


7,ரகசியமாய் நீங்கள் மெச்சும் ,ரசிக்கும் நபர் ?
இதில் ஒரு ஆண் ஒரு பெண் இரு பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றது ?


ப: ஸ்கூல் பஸ் வருவதற்குக் இந்த அபார்ட்மெண்டில் காத்திருக்கும் ஒரு (துருதுரு) குட்டிப் பெண்; என்னுடைய குட்டிப் பேரன்.   

பதில் : மகன், பாஸ்.



சஞ்சய் சுப்ரமணியன், ரஞ்சனி_காயத்ரி.


8,பிடிக்காத பாடல் வரிகள் ?
(எனக்கு இந்த குயிலை பிடிச்சி காலை உடைச்சி பாட்டை கேட்டாலே வெறி கிளம்பும்
அதுமாதிரி மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை இதுவும் பிடிக்காது )


ப: யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே ... என்னும் அந்தக் காலத்துப் பாடல். 

அப்புறம் 

வாலமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணமாம்... 


பதில் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே...



9,நீங்கள் செடிப்பிரியரா ? சமீபத்தில் வாங்கிய புது செடி என்ன ?


ப: செடிப்பிரியர் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் செடிகள் வளர்க்க புது முயற்சிகள் செய்வேன். சமீபத்து சந்தோஷம், தோட்டத்தில் நான் போட்ட மாங்கொட்டை முளைத்து வந்திருக்கு. அதை சரியாக நட்டுவைத்து, நீர் ஊற்றி வருகிறேன். 

விலை கொடுத்து வாங்கியது என்றால், ஒரு கறிவேப்பிலைக் கன்று அறுபது ரூபாய்க்கு வாங்கினேன், மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போ பெரிய மரமாக வளர்ந்திருக்கு. 

பதில் : இல்லை. 



10,சமீபத்தில் கனவில் துரத்திய நாலுகால் விலங்கு ? 

ப: நான் துரத்தினேன் -- ஒரு டைனோசரை !

பதில் : ஓடிக்கொண்டிருக்கும்போது திரும்பி எத்தனை கால்னு எண்ணிக்கிட்டிருக்க முடியுமா என்ன!
   
பானுமதி வெங்கடேஸ்வரன்:

யாராவது செலிபிரிட்டியை பார்க்க வேண்டும் என்று துடித்ததுண்டா? அப்படி ஆசைப்பட்டு சந்தித்த அவர் ஏமாற்றமளித்தாரா? சந்தோஷமூட்டினாரா? 

ப: ஸ்ரீராமின் தந்தை, நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, (நான் துடிக்காது இருக்கும்போது) அவர், ஜெயகாந்தனைப் பார்க்க என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போனார். ஜெ கா , காரை எடுத்துக்கொண்டு அப்பொழுதுதான் எங்கேயோ வெளியில் கிளம்பிக்கொண்டிருந்தார். " Fix up some other time" என்று சொல்லி, புர்ர் என்று போய்விட்டார். பா ஹே வுக்கு ஏமாற்றம். மற்றபடி, எந்த செலிப்ரிடியையும் பார்க்கவேண்டும் என்று நான் துடித்தது இல்லை.  சிலரை அருகே பார்த்தது உண்டு. (உதாரணம் : சிவாஜி, எம்ஜியார், சுஜாதா ரங்கராஜன்)


செலப்ரிட்டி சுஜாதா ரங்கராஜன். அவர் எட்டாமலே இருந்துவிட்டார்.
  
கோமதி அரசு :

புடலங்காய் ஒரு சிறந்த மருந்து.....   உண்மைதானே ? விளையாட்டு இல்லையே? 






வாட்ஸ் அப் : 

நெல்லைத் தமிழன் : 



1. ஏன் ஆரம்ப ஆர்வம் போகப்போக பிளாக் நடத்துபவர்களிடம், அதுவும் எழுத்தாற்றலும் நிறைய ஃபாலோயர்ஸ் இருந்தாலும் ஆர்வம் போவதற்குக் காரணம் என்னவா இருக்கும்?  

ப: தனி மனித ப்ளாக் அப்படி இருக்கலாம். எங்களைப் போல ஒரு குழுவாக எழுதுபவர்களுக்கு, நிறைய ஆர்வம், நிறைய விஷயங்கள் எழுதக் கிடைப்பதால், யாராவது ஒரு ஆசிரியருக்கு எழுத போர் அடித்தாலும், அந்த நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் முன்னின்று எழுதிவிடுகின்றோம். 



ஆரம்ப வேகம் படிப்படியாகக் குறைவது நியதிதானே. அடியோடு காணாமல் போகாதவரை சரிதான்.



2. முகநூல், கணிணியில் எப்போதும் உட்கார்வதால் மற்றவர்களிடம் அர்ச்சனை வாங்கியதுண்டா?

ப: என்னதான் வாட்ஸ் அப் , முகநூல் எல்லாம் நம் நேரத்தை விழுங்கினாலும், செய்ய வேண்டிய கடமைகளை, அந்தந்த நேரத்தில் ஒழுங்காக செய்துவிடுவதால் பிரச்னை எதுவும் வருவதில்லை.



இல்லையே !


3. பாராட்டுகளைவிட curseகளை செல்ஃபோன், முகநூல், வாட்சப் போன்றவைகளைக் கண்டுபிடித்தவர்கள் பெறுவது எதனால்?

ப: நான் அவர்களை திட்டியது இல்லை. வாழ்த்துவது உண்டு. 


அவர்கள் பாராட்டை வேண்டியோ கண்டனங்களை எதிர்பாராமலோ இல்லை என்பதையும், அவர்கள் வேண்டியதைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் நினைக்கிறேன்.

4. இரண்டு வேளைகள், 300 நாட்களாவது என்று வருஷம் பூராவும் அடுக்களையில் உழலும் பெண்களின் கஷ்டத்தை அறிந்திருக்கிறீர்களா? அதிலும் ஒவ்வொரு வேளை என்ன என்ன செய்வது என்பது தலையைப் பிய்த்துக் கொள்ளும் வேலைதானே? 

ப: அடுக்களையில் உழல்வது எல்லாம் அந்தக்காலம். இந்தக் காலத்தில் (at least) அடுக்களையில் யாரும் உழல்வது இல்லை. எல்லாத்துக்கும் எந்திரங்கள் வந்து வாழ்வை சுலபமாக்கிவிட்டன !

சமையல் மட்டும் தானா ? இன்னபிறவும் ஏராளமாக இருக்கின்றன என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

5. நீங்கள் சமையல் செய்து நல்லா இருக்குன்னு வீட்டார் பாராட்டியிருக்காங்களா? அப்போ, நாம இப்படி பாராட்டினதே இல்லையே என்று நினைச்சிருக்கீங்களா? 

ப: சில புதிய முயற்சிகளுக்கு பாராட்டுகள், இரு தரப்பிலும் உண்டு.


முதலில் சமையல் பாராட்டும்படி இருக்க வேண்டுமே.


6. எந்த நியூஸ் சேனலிலும் கொலை, விபத்து, இயற்கை இடர்களைத் தவிர பாசிடிவ் செய்திகளே வருவதில்லை என்பதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?  

ப: எல்லோருமே எங்கள் ப்ளாக் ஆ நடத்துறாங்க, வாரம் ஒரு நாலாவது பாசிடிவ் செய்திகளை மட்டும் தொகுத்து வழங்க! 

பாசிடிவ் விஷயங்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது.  அல்லவை தாமே வந்து மோதுகின்றன போலும்.

7. சம்பந்தமில்லாத கதம்பங்களிலும் மற்ற ஆசிரியர்களின் அனுமதி பெறாமல் அனுக்கா படத்தை நுழைத்துவிடுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: சந்தோஷமாக! 


அனு(அ)க்காவையே நுழைக்காதவரை அட்டியில்லை !


8. எப்படி தளத்துக்கான இடுகைகள் தயார் பண்ண, மற்ற இடுகைகளில் படித்துக் கருத்திட சிலருக்கு இருக்கும் ஆர்வம் எல்லோருக்கும் இருப்பதில்லை?  

ப: உண்மைதான். ஸ்ரீராமைப் பார்த்து நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். 

இங்காவது நெரிசல் இல்லாததை எண்ணி சந்தோஷப் பட வேண்டாமோ ?

9. ஏன் பெரும்பாலானவர்களுக்கு உப்புமா பிடிப்பதில்லை. எளிதாக செய்யமுடிவதாலா?

ப: மனிதர்கள் எல்லோரும் பெரும்பாலும் தன்னலக்காரர்கள். அதனால I என்ற எழுத்தில் ஆரம்பித்து,  I என்ற எழுத்தில் முடிகின்ற  Idli யை விரும்புகிறார்கள். பிறர் நலம் விரும்பாத காரணத்தால், U என்ற எழுத்தில் ஆரம்பித்து,  U என்ற எழுத்தில் முடிகின்ற Uppumaavu வை வெறுக்கிறார்கள் போலிருக்கு! 


(வயிறு) உப்புமே என்பதாலோ ?


10.. முன்பெல்லாம் சீசனுக்கு ஏற்ற பழங்கள் வந்ததுபோய் எல்லாப் பழங்கள், காய்கள் எல்லாக் காலத்திலும் கிடைக்கிறதே, இது நல்லதா கெட்டதா?

ப: நல்லதுதான். கெட்டதாக இருந்தால் யாரும் வாங்கமாட்டார்களே! 

இப்போது ஆண்டு முழுதும் ஒரே (கோடை) சீசன் ஆனதை கவனிக்கவில்லையா ?
 
   

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்! 

   


95 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா எல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நேற்று கரன்ட் போயிடுச்சு ஸோ முந்தைய பதிவுக்கு பதில் கொடுக்க முடியலை அதை முடிச்சுட்டு இங்க ராஜஸ்தான் போயி கோடரி வேந்தனை பார்த்துட்டு தஞ்சை திருச்சி எல்லாம் போகணும் ஒரே சுற்றுப் ப்யணம் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அட்டெண்டன்ஸ் போட்டாச்சு...ஹா ஹா ஹா இன்னும் யாரையும் காணலை ஸோ போயிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கே-ப பிறகு வந்து படிக்கிறேன். நடக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இந்த நாள்....

    அனைவருக்கும்...


    மகிழ்வாக...

    சிறப்பாக...

    அமைய...

    எனது வாழ்த்துக்களும்...💐💐💐☔☔☔🌻🌼🌻🌼

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரி அனுபிரேம்

    பதிலளிநீக்கு
  7. //பதில் : மகன், பாஸ்.// ஶ்ரீராம், இப்படி உங்களை வெளிப்படையாக் காட்டிக்கலாமோ? மற்றவர்களில் கௌதமன் தவிர இன்னொருத்தரைக் கண்டு பிடித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. இன்னைக்குப் புதிர்க் கிழமை என்பதால் தாமதமாய் வந்தேன். துரை எங்கே?

    பதிலளிநீக்கு
  9. வாங்க கீதாக்கா... அதுதான் எல்லோருக்கும் தெரிந்து விட்டதே... அதுதான்! அடுத்த வாரம் கலரை மாற்றி விடுவோமா?

    பதிலளிநீக்கு
  10. //அடுத்த வாரம் கலரை மாற்றி விடுவோமா?// உங்கள் எழுத்து காட்டிக் கொடுத்துடும். :) அப்பாவை சைக்கிளில் வைத்து ஓட்டியதை முதல்லே சொன்னப்போவே நினைச்சேன், என்ன இவர் இவ்வளவு வெளிப்படையாத் தன்னைக் காட்டிக்கிறாரேனு. அடுத்து "பாஸ்" என்னும் வார்த்தை! :) உங்களையும் அறியாமல் வரும் இத்தகைய வார்த்தைகள் உங்களைக் காட்டிக் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அதுவும் மயிலுக்கு மயங்கி இருக்கிறேன்னு போட்டுட்டுப் பக்கத்திலேயே "நன்றி ஶ்ரீராம்" என ஶ்ரீதேவியின் படம். ஹெஹெஹெஹெ! எங்கப்பா குதிருக்குள் இல்லைனு சொல்றீங்க! :))))))

    பதிலளிநீக்கு
  12. கௌதமன் சார், எல்கேஜி நீங்க தானே? சீனியர் கேஜிஒய்! ஜூனியர் கேஜிஎஸ்! அப்போ ஶ்ரீராமும், காசு சோபனாவும் குழந்தைங்களா?

    அவங்க ரெண்டு பேரில் பல் முளைக்காத குழந்தை யார்?


    எல்லாம் சரி! மத்த இரண்டு பேரும் ஏன் எ.பி. ஆசிரியர்களாக இல்லை? கேஜிவி மற்றும் கேஜிஜ! தனி ஆட்சியைத் தான் விரும்பறாங்களா?

    உங்க எல்லோருக்குமே நகைச்சுவை உணர்வு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்?

    பதிலளிநீக்கு
  13. மிச்சத்துக்குப் பின்னர் வரேன். :)))))

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    கண்கொடுத்தவனிதம் ஊர் பேர் அழகாய் இருக்கே!
    இப்படியே சொல் வழக்கில் இருக்கா? மாற்றிவிடாமல் இருக்கிறார்களா மக்கள்?

    அக்காவின் பெரிய பெண் அன்பாய் உங்களுக்கு என்று பத்திரமாய் வெற்றிலை பெட்டியில் பத்திரபடுத்தி கொடுத்ததால் அதற்கு சுவை மேலும் கூடி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. பொட்டுக் கடலையை தனியாகச் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சட்னி ரூபத்திலும் நல்லா இருக்கும். வேர்க்கடலை வறுத்தோ வேகவைத்தோ சாப்பிட்டால் நல்லா இருக்கு. சட்னியில் சேர்த்தால், தானும் கெட்டு, சட்னியையும் கெடுத்துவிடுகிறது!//

    உண்மை. லேசாக அரைத்தால் நன்றாக இருக்கும் நன்றாக அரைத்து விட்டால் நிலக்கடலை எண்ணெய் கக்கி விடும் ருசி கெட்டுவிடும்.

    பதிலளிநீக்கு
  16. இப்படி சைக்கிள் அனுபவம் பலருடைய வாழ்வில் உண்டு ஜி.

    பதிலளிநீக்கு
  17. இது அந்த நீலவண்ணக் கண்ணன் அனுப்பிய நீ குழாய் சுட்டி! //

    இருவர் ரசிகர்களுக்கும் பயன்படும்.
    நம் குடும்பத்தில் உள்ள இரு ரசிகர்களுக்கும் (ஸ்ரீராம், நெல்லைத்தமிழன்) பிடித்து இருக்கும்

    பதிலளிநீக்கு
  18. மீதியை படிக்க அப்புறம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. //கல்யாணத்திற்கு முன்னாடி, எல்லாம் வெவ்வேறு என்று நினைத்திருந்தேன். //

    இது ரொம்ப அநியாயம்

    பதிலளிநீக்கு
  20. //ஒண்ணு தமிழ் இன்னொண்ணு இங்கிலீஷ் என்பதால் வித்தியாசம் ?//

    நல்ல பதில்

    பதிலளிநீக்கு
  21. கேள்வி பதில்களை ரசித்தேன். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. நீலம் நீலவண்ணக்கண்ணன் தானே!! இன்றும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. துரை அண்ணா எங்கே!! அதிரடி குளிசை கொடுத்து நித்திரைக்குத் தள்ளிட்டாங்களா அல்லது அதிரடியின் ரெசிப்பி அதான் அந்தக் கத்தரிக்கா செஞ்சு சாப்பிட்டீங்களோ?!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  24. //புடலங்காய் ஒரு சிறந்த மருந்து..... உண்மைதானே ? விளையாட்டு இல்லையே?//

    என் கேள்விக்கு காணொளி கொடுத்து உண்மை என்று சொன்னத்ற்கு நன்றி.
    என் அத்தையை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்து இருந்த போது அங்கு பார்த்தேன் "தூக்கமின்மை நோய்க்கு சிறப்பு சிகிட்சை பிரிவு" என்று இருப்பதை. இப்படி எளிதான காய்கறி வைத்தியம் இருக்கும் போது ஆஸ்பத்திரி போய் மருந்து மாத்திரை சாப்பிட்டு பின் விளைவுகள் ஏற்படுமே என்று கவலை வந்து விட்டது எனக்கு.

    எனக்கும் சில நேரம் தூக்கம் வராது.தொடர்ந்து தூக்கமில்லாதவர்களுக்கு சொல்ல நல்ல குறிப்பு கொடுத்தீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. //மனிதர்கள் எல்லோரும் பெரும்பாலும் தன்னலக்காரர்கள். அதனால I என்ற எழுத்தில் ஆரம்பித்து, I என்ற எழுத்தில் முடிகின்ற Idli யை விரும்புகிறார்கள். பிறர் நலம் விரும்பாத காரணத்தால், U என்ற எழுத்தில் ஆரம்பித்து, U என்ற எழுத்தில் முடிகின்ற Uppumaavu வை வெறுக்கிறார்கள் போலிருக்கு!//

    இது உல்டாவாக இருக்கே!
    பிறர் நலம் விரும்புபவர்கள் அவர்கள் வயிற்றை கெடுக்காமல் இருக்க இட்டுலியை கொடுத்து விட்டு தாங்கள் உப்புமா சாப்பிடுவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
    .

    பதிலளிநீக்கு
  26. சஞ்சய் சுப்பிரமணியனையும், ரஞ்சனி காயத்திரியையும் ஏன் ரகசியமாக ரசிக்க வேண்டும்? வெளிப்படையாகவே ரசிக்கலாமே.

    பதிலளிநீக்கு
  27. /மனிதர்கள் எல்லோரும் பெரும்பாலும் தன்னலக்காரர்கள். அதனால I என்ற எழுத்தில் ஆரம்பித்து, I என்ற எழுத்தில் முடிகின்ற Idle யை விரும்புகிறார்கள்.//

    தன்நலம் பேணவேண்டியதும் முக்கியமாய் இருக்கிறதே இப்போது.

    வயிற்றுக்கு கெடுதல் செய்யாது என்பதாலும் நம் உடல் நலத்தை நாம்தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதனால Idli யை விரும்புகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  28. @ஏஞ்சல்: நீங்கள் பேய்,பிசாசு,பூதம் பற்றிய கேள்விக்கு எல்லோரிடமிருந்தும் பதில் எதிர்பார்க்கிறேன் என்று எழுதியிருந்தீர்கள். ஆசிரியர்களுக்கு முன்னால் நான் பதில் சொல்லக்கூடாது என்று காத்திருந்தேன்.
    என் அனுமானம், பேய்,பிசாசு இரண்டுமே departed souls.

    பதிலளிநீக்கு
  29. முந்தைய பதிலின் தொரடர்ச்சி: முன்னது கொஞ்சம் சாத்வீகமானது. நர்ஸாக பணியாற்றிய ஒரு பெண்மணி இறந்த பிறகும் அவர் வாழ்ந்த ஏரியாவில் சிலருக்கு பிரசவம் பார்த்திருக்கிறாராம்.
    மனதில் குறையோடும், வன்மத்தோடும் இறந்தவர்களின் அல்லது தற்கொலை செய்து கொண்டவர்களின்ஆவிகள் பிசாசாகும்.
    பூதம் என்பது முற்றிலும் வேறு. தேவர்கள், யக்ஷர்கள், போல பூதங்கள். நிறைய ஆற்றல் கொண்டவை. பூதம் நாதன் என்று ஐயப்பனை சொல்கிறோம். பூதம் கணங்களின் தலைவர் என்று விநாயகரை கூறுகிறோம்.

    பதிலளிநீக்கு
  30. கண்கொடுத்தவனிதம்//

    ஹை பெயர் சூப்பரா இருக்கே! காரணப்பெயரோ. அப்பஓ அந்த ஊருக்கு ஒரு கதை இருக்கணுமே என்ன கதை?

    கீதா

    பதிலளிநீக்கு
  31. //கௌதமன் சார்! காசு சோபனா பேரிலேயே காசு இருக்கே! எல்லோருக்கும் கொடுப்பாங்களா? :

    ப: ஹி ஹி அது கஞ்ச சோபனா! //

    ஹா ஹா ஹா அப்போ காஞ்ச சோபனா:))

    பதிலளிநீக்கு
  32. //தமனா அனுக்கா:) குறைந்தது 4 வித்தியாசங்கள் கூறவும்?:).. இதுக்கு நீல வண்ணப் பதில்களும் நிட்சயம் தேவை:))

    ப: இது அந்த நீலவண்ணக் கண்ணன் அனுப்பிய நீ குழாய் சுட்டி! //

    ஹா ஹா ஹா குழாயில் சுட்டி அனுப்பி எப்படியோ தப்பி விட்டார்ர்:)) சரி இன்னொரு முறை மாட்டாமல் போயிடுவாரா பார்க்கலாம்:))

    பதிலளிநீக்கு
  33. //ப: வெயிலுக்கு மயங்கியதில்லை; மயிலுக்கு மயங்கியிருக்கிறேன். //

    இது நீல மைப் பதில்தானே?:) அவரிடம் மயில் எப்போ?:)).. ஓ முன்பு மயிஸ்[ல்] பின்பு அனுஸ் ஆஆஆஆ புரியுது புரியுது ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  34. 8,பிடிக்காத பாடல் வரிகள் ?
    //வாலமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணமாம்... ///

    நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ கெள அண்ணன் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டூஊஊஊ.. ரிப்பீட்டில் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று, போன என் போஸ்ட்டுக்கு போட நினைச்சு விட்டிட்டு, சரி அடுத்த போஸ்ட்டின்போது போடலாம் என இருக்கிறேன்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    எனக்கு அதில் பிடிச்சதே அந்த மியூசிக்கும் நகைச்சுவை வரிகளும்தான்... அது வால அல்ல வாளைமீனாக்கும் ஹா ஹா ஹா..

    யோசிச்சுப் பாருங்கோ ஒரு கதை அங்கு சொல்கிறார் பாட்டில்.. இரு மீன்களுக்கு திருமணம் நடக்குது.. அதுக்கு ஆட்களாக வேறு மீன்கள் வருகிறார்கள்.. கற்பனை பண்ண நல்லா இருக்குதெல்லோ ஹா ஹா ஹா.. நான் 200 தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன் அதை..


    கெள அண்ணன்.. தீர்ப்பை மாத்துங்கோஓஓஓஓஓஒ:))

    பதிலளிநீக்கு
  35. ////பதில் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே...///

    ஏன் இது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை?:).. சில வேளைகளில் ஒரு பொய்யாவது சொல்லி நம்மை மகிழ்விக்க மாட்டினமோ என மனம் எண்ணுமெல்லோ:))..

    இப்போ தேவதைக் கிச்சினில போய் .. நாம் ஒரு பொய்யாவது.. “சூப்பரா இருக்கு” எனச் சொல்ல மாட்டோமா என:)) அதைச் சமைச்ச தேவதை எதிர்பார்ப்பாவெல்லோ ஹா ஹா ஹா பீஸ்ஸ் படிச்சதும் கிலி:)ச்சிடுங்கோ :))

    பெயர் வாயில் வருகுதில்லை.. பென்சில் படத்தில் நடிச்ச ஹீரோ.. அந்த சிங்கர்.. தன் வகுப்புத் தோழியை விரும்பித்தானே மணம் முடிச்சாராம்... அவவும் சிங்கர்.. அப்போ அவ கணவரிடம் கேட்பாவாம் ஏதாவது ஒரு பாட்டைச் சொல்லி .. இதை எனக்காகத்தானே பாடினீங்க என..

    அவர் ஏதோ உத்தமர் மாதிரிச் சொல்வாராம் இல்லை உனக்காகப் பாடவில்லை என.. அப்போ அந்தப் பிள்ளை திரும்பச் சொல்லுவாவாம் பொய்க்காவது சொல்லுங்கோவன் உனக்காகத்தான் பாடினேன் என.. கேட்டுக் கெஞ்சுவாவாம் ..இல்லை உனக்காகப் பாடவில்லை என அடமாகச் சொல்லுவாராம்.. அவதான் ஒரு பேட்டியில் சொன்னா...

    பதிலளிநீக்கு
  36. //இது நீல மைப் பதில்தானே?:) அவரிடம் மயில் எப்போ?:)).. ஓ முன்பு மயிஸ்[ல்] பின்பு அனுஸ் ஆஆஆஆ புரியுது புரியுது ஹா ஹா ஹா...//


    அதுக்கு முன்னாடி ஹேம்ஸ் :))

    பதிலளிநீக்கு
  37. 10,சமீபத்தில் கனவில் துரத்திய நாலுகால் விலங்கு ?

    ப: நான் துரத்தினேன் -- ஒரு டைனோசரை !///

    கெள அண்ணன் துரத்தினாலும் துரத்தி இருப்பார் ஜொள்ள முடியாது.

    //பதில் : ஓடிக்கொண்டிருக்கும்போது திரும்பி எத்தனை கால்னு எண்ணிக்கிட்டிருக்க முடியுமா என்ன!//

    ஹா ஹா ஹா ச் ரீராம் நீங்க எங்கேயோ போயிட்டீங்க:)) இந்தப் பதிலுக்காகவே உங்களுக்கு மிஸ்டர் இந்தியாப் பட்டம் தரப்போறேன்ன்ன்ன்ன்:)) ஹையோ நெ.தமிழன் ஏன் என்னைத்துரத்துறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  38. /
    இப்போ தேவதைக் கிச்சினில போய் .. நாம் ஒரு பொய்யாவது.. “சூப்பரா இருக்கு” எனச் சொல்ல மாட்டோமா என:)) அதைச் சமைச்ச தேவதை எதிர்பார்ப்பாவெல்லோ ஹா ஹா ஹா பீஸ்ஸ் படிச்சதும் கிலி:)ச்சிடுங்கோ :)) //

    ஹலோவ் சர்ச் போயிட்டு வரேன் பதில் சொல்ல

    பதிலளிநீக்கு
  39. ///
    1. ஏன் ஆரம்ப ஆர்வம் போகப்போக பிளாக் நடத்துபவர்களிடம், அதுவும் எழுத்தாற்றலும் நிறைய ஃபாலோயர்ஸ் இருந்தாலும் ஆர்வம் போவதற்குக் காரணம் என்னவா இருக்கும்?

    ப: தனி மனித ப்ளாக் அப்படி இருக்கலாம். எங்களைப் போல ஒரு குழுவாக எழுதுபவர்களுக்கு, நிறைய ஆர்வம், நிறைய விஷயங்கள் எழுதக் கிடைப்பதால், யாராவது ஒரு ஆசிரியருக்கு எழுத போர் அடித்தாலும், அந்த நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் முன்னின்று எழுதிவிடுகின்றோம். ///

    ம்ஹூம்ம்.. நீங்க நடு பஜாரில கூப்பிட்டு வச்சு என்னை அடிச்சாலும் பறவாயில்லை:)).. நான் உண்மையை விளம்பியே[நேக்கு டமில்ல டி ஆக்கும்] தீருவேன்ன்ன்.. ஸ்ரீராம் இல்லை எனில் எங்கள் புளொக் தூங்கிவிடும் என்பதுதான் உண்மை ஆக்கும்:))

    பதிலளிநீக்கு
  40. //9. ஏன் பெரும்பாலானவர்களுக்கு உப்புமா பிடிப்பதில்லை. எளிதாக செய்யமுடிவதாலா?//

    ஓ இது நெ.தமிழன் கேள்வியோ? இதுக்கு என்னோட பதில் தமிழ்நாட்டினர் அடிகடி செய்வதால் பிடிக்காமல் போகிறது போலும். நமக்கு உப்புமாப் பிடிக்கும் ஏனெனில் மாதம் ஒருமுறை செய்வதே மிகக் குறைவு என்பேன்:))

    பதிலளிநீக்கு
  41. சைக்கிள் ஓடிய கதையை நைட் வந்து படிக்கிறேன்ன்.. இப்போ அவசரமாக வந்தேன்.. ஓகே அனைவருக்கும் பாய் பாய்:)) இது வேற பாய்:))

    பதிலளிநீக்கு
  42. மயில்னாலே ஸ்ரீதேவிதானா? நிஜமா மயிலைச் சொல்லக் கூடாதா? கிர்ர்ர்ர்ர்ர்...

    பதிலளிநீக்கு
  43. //சஞ்சய் சுப்பிரமணியனையும், ரஞ்சனி காயத்திரியையும் ஏன் ரகசியமாக ரசிக்க வேண்டும்? வெளிப்படையாகவே ரசிக்கலாமே.//

    அதானே?!!

    பதிலளிநீக்கு
  44. கண் கொடுத்த வனிதம் ஊரின் பெயருக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
  45. ஆசிரியர்களில் சின்னவர் ஸ்ரீராம் என்று நான் சொன்னால், சின்னவள் சண்டைக்கு வரக்கூடும்! //

    ஆ ஆ ஆ ஆ ஆ அதாரு சின்னவள்!! விபரீதமா இருக்கே ஹா ஹா ஹா ஹா ஹா….அதிரா இது உங்கள் கண்ணில் பட்டதோ?!! ஹயோ நாரதர் கலகமாயிருச்சோ…சரி சரி நன்மையில்தான் முடியும்….எனிவே மீ ரன்வேயில் ஓடிங்க்….

    கீதா

    பதிலளிநீக்கு
  46. ப: மனிதர்கள் எல்லோரும் பெரும்பாலும் தன்னலக்காரர்கள். அதனால I என்ற எழுத்தில் ஆரம்பித்து, I என்ற எழுத்தில் முடிகின்ற Idli யை விரும்புகிறார்கள். பிறர் நலம் விரும்பாத காரணத்தால், U என்ற எழுத்தில் ஆரம்பித்து, U என்ற எழுத்தில் முடிகின்ற Uppumaavu வை வெறுக்கிறார்கள் போலிருக்கு! //

    அட செமையான பதில்….இதை இன்னும் ரசித்தேன்…

    கீதா


    பதிலளிநீக்கு
  47. : எல்லோருமே எங்கள் ப்ளாக் ஆ நடத்துறாங்க, வாரம் ஒரு நாலாவது பாசிடிவ் செய்திகளை மட்டும் தொகுத்து வழங்க
    ரசித்த பதில்……அதானே…

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ஹையோ யாரது இந்த ஜோ ஃபோட்டோவைப் போட்டது..ஹூம்.....ஷோபனா ஃபோட்டோ கிடைக்கலையோ!!!

    ஓ பேய் பிசாசுக்காக இந்த ஃபோட்டோவா ஹா ஹா ஹா ஹா அப்ப ஓகே

    கீதா

    பதிலளிநீக்கு
  49. ஏஞ்சல் நீவக வுக்கு முன்பு மயில் இப்ப அனுக்கா காலம் மாறிப்போச்சு..வயசு வயசு...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  50. ஏன் இது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை?:).. சில வேளைகளில் ஒரு பொய்யாவது சொல்லி நம்மை மகிழ்விக்க மாட்டினமோ என மனம் எண்ணுமெல்லோ:))..
    //

    ஹா ஹா ஹா அதிரா அதான் அவர் அப்பப்ப சொல்லிட்டிருக்காரே அதான் இப்ப சொல்லலையாக்கும்...

    .இப்போ தேவதைக் கிச்சினில போய் .. நாம் ஒரு பொய்யாவது.. “சூப்பரா இருக்கு” எனச் சொல்ல மாட்டோமா என:)) அதைச் சமைச்ச தேவதை எதிர்பார்ப்பாவெல்லோ ஹா ஹா ஹா பீஸ்ஸ் //

    ஹா ஹா அதிரா சொல்லாம இருப்பாங்கனு நீங்க நம்புறீங்களோ??!!!!!!!! எதுக்குக் கியிக்கனும்!!!! இங்கன வந்து எல்லாரும் சொல்லட்டும்....ஏகாந்தன் அண்ணா வந்தா இதுக்குச் சொல்லுவார்.....இப்ப ஃபுட்பாலில் இருக்காரோ,,,

    அதிரா அது ஜிவி ப்ரகாஷ் சைந்தவி...நீங்க சொல்லிருப்பது ஜிவி ப்ரகாஷ் ஏ ஆர் ரஹ்மானின் மருமகன். ம்யூஸிக் டைரக்டரும் கூட....சைந்தவி சிங்கர். அதானே சில பொய்கள் நல்லாத்தான் இருக்கும் நீங்க் அசொல்லுறது ஆனா பொய்னு தெரிஞ்சுருச்சுனா அது இன்னும் விபரீதமாச்சே அதிரா....பல சந்தேகங்களும் வந்துடுமே...

    எனக்குத் தெரிந்த பெண்ணும் ஆணும் லவ்விட்டிருந்தாங்க....அப்போ நீங்க சொன்னா போல அந்த ஆண் தன் லவரை மகிழ்விக்க இப்படியான சின்ன சின்ன பொய்கள் சொல்லிருக்கார். ஆனா அது அவர் மனதிலிருந்து இல்லை ஜஸ்ட் லிப் வேர்ட்ஸ் பொய் என்று அப்பெண்ணுக்குத் தெரிஞ்சதும் விபரீதமாகிட்டது....கவிதைக்குப் பொய் அழகா இருக்கலாம் ஆனா காதலில் சில சமயம் பொய்கள் காலைவாரிவிட்டுடும் ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  51. பதில் : மகன், பாஸ்.//

    ரசிப்பதை மெச்சுவதை சொல்லியிருக்கீங்களா ஸ்ரீராம்....அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும் அதுவும் ரசிக்கும்படி இருக்கும்ல?!!!

    அது சரி மஞ்சள் லைன்.....ஏன் ரஞ்சனி காயத்ரி யை ரகசியாக ரசித்தல் மெச்சுதல்...புரியலையே ஓ அவர்களிடம் நேரடியாகச் சொல்லமுடியாது என்பதாலோ?!

    கீதா


    பதிலளிநீக்கு
  52. பத்திரிகைத் துறையை நாலாவ்டு தூண் என்பார்கள் ...அது போல எபிக்கு எல்லா ஆசிரியர்களுமே பலம் என்று சொல்லலாம் என்றாலும் ஸ்ரீராம் தூணாய் நின்று தாங்குகிறார் எனலாம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  53. தமன்னா பாட்டியா (?) என்று அவர் பெயரிலேயே சந்தேகம் கேட்டிருப்பதை, இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை! //

    ஹ ஹா ஹா ஹா ஹாஹ் ஆ ஹாஹாஹஹஹஹஹஹாஹ்ஹஹஹ்ஹ்ஹ்ஹ் ஹையோ சிரித்து முடிலைப்பா....ஸ்ரீராமின் குறும்பை மிகவும் ரசித்து சிரித்தேன்....ஹா ஹா அதுவும் நெ த நோட் திஸ்னு வேற ஹின்ட்....(நாரதர் வேலை ஸோ நாராயணா நாராயணா நு வேற இதுல...ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
  54. /
    ஸ்ரீராம். said...
    மயில்னாலே ஸ்ரீதேவிதானா? நிஜமா மயிலைச் சொல்லக் கூடாதா? கிர்ர்ர்ர்ர்ர்...

    July 4, 2018 at 2:19 PM//

    நம்பிட்டோம்னு சொன்னா நம்பவா போறீங்க :)

    பதிலளிநீக்கு
  55. ,பிறரிடம் பிடிக்காத 3 விஷயங்கள் ?

    ப: புறம் பேசுவது, உரத்த குரலில் சண்டை போடுதல், சிலரை மரியாதை இன்றி நடத்துவது.

    யெஸ் கௌ அண்ணா

    பதில் : வம்பு, சண்டை, கோபம் .//

    ஹைஃபைவ் ஸ்ரீராம்......எனக்கும் இந்த மூணும் அலர்ஜி....கோபம் கூட ஓகே ஆனா அதை வார்த்தைகளால் கத்துவது என்பது அலர்ஜி....என்றாலும்......சரி சரி ஃபுல்ஸ்டாப்...

    கீதா

    பதிலளிநீக்கு
  56. நம்பிட்டோம்னு சொன்னா நம்பவா போறீங்க :)//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல்....

    கீதா

    பதிலளிநீக்கு
  57. @ கீதா
    :))))))))))))))
    http://www.memezero.com/media/memes/XY154D.jpg

    பதிலளிநீக்கு
  58. பாசிடிவ் விஷயங்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அல்லவை தாமே வந்து மோதுகின்றன போலும்.//

    யெஸ் சீனியர்!!! இது மிகவும் உண்மையே…

    கீதா

    பதிலளிநீக்கு
  59. சம்பந்தமில்லாத கதம்பங்களிலும் மற்ற ஆசிரியர்களின் அனுமதி பெறாமல் அனுக்கா படத்தை நுழைத்துவிடுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

    ப: சந்தோஷமாக!


    அனு(அ)க்காவையே நுழைக்காதவரை அட்டியில்லை !//

    இந்த பதிலுக்காக நம் அரம சங்கத்திலிருந்து உங்களுக்குப் பொன்னாடை போட்டு பொக்கே கொடுத்து அரிசி மிட்டாய் கொடுத்து விசிலடித்து நன்றி நவில்கிறோம்…..

    கீதா

    பதிலளிநீக்கு
  60. http://www.memezero.com/media/memes/XY154D.jpg//

    ஹையோ ஏஞ்சல் செம செம ......ரசித்து முடில...சிரிச்சு முடில....ஸ்ரீராம் வீட்டு முருங்கி மரத்துல தொங்க விட்டுருவோம்....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  61. கேள்விகளுக்குச் சளைக்காமல் சிரிக்கும்படி சிந்திக்கும்படி ரசிக்கும்படி எல்லாம் சளைக்காமல் பதில் கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.

    ஆசிரியர்கள் எளிதாகக் கேள்வி கேட்டுவிடுவார்கள் ஆனால் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதுதான் கடினம். நீங்கள் எல்லோரும் அதை நன்றாகவே செய்கிறீர்க்ள்.

    பள்ளியில் படிக்கும் போது லஞ்ச் கொண்டு செல்வது வழக்கம் தான். கல்லூரிக்கு வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு சென்றீர்களா இல்லை கேண்டினில் சாப்பிடுவீர்களா?

    பள்ளியில், கல்லூரியில் முன் பெஞ்சா பேக் பெஞ்சா? முன் பெஞ்சில் இருந்து கொண்டு ஆசிரியர் பாடம் எடுத்த போது தூங்கியதுண்டா? தூங்கும் போது கேள்வி கேட்டால் உங்கள் ரியாக்ஷன் எப்படி?

    பேக் பெஞ்ச் என்றால் பாடம் கவனித்ததுண்டா? இல்லை ஆசிரியரைச் சொல்லி நகைச்சுவையா? அப்படி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

    நீங்கள் வெஜிட்டேரியன் என்று தெரியும். எப்போதேனும் உங்களுக்கே அறியாமல் தெரியாமல் நான்வெஜ் சாப்பிட்டிருக்கின்றீர்களா அறியாத வயதில் அல்லது அறிந்த வயதில்...அதாவது தெரியாமல்...நண்பர்கள் வற்புறுத்தல் அல்லது அவர்கள் உங்களுக்கே தெரியாமல் கொடுத்து...என்று.. எனக்குத் தெரிந்த நண்பரின் மகன் வெஜிட்டேரியன். அவன் சிறு வயதில் தன் நண்பனின் வீட்டில் விளையாடிய போது அவன் அம்மா (ஹிந்திக்காரர்கள்) அவனுக்குக் கொடுத்திருக்கிறார்கள் ஃபிஷ் ஃப்ரை. இவனும் சாப்பிட்டுருக்கான். அப்புறம் அந்த அம்மா இவன் அம்மாவிடம் சொல்லியிருக்கார் "மச்லி காயா" என்று. இவனிடம் இவன் அம்மா கேட்ட போது அம்மா அது சேனை ஃப்ரை என்று சொல்லியிருக்கிறான். அப்புறம் அவன் சாப்பிட்டதில்லை. அதான் இந்தக் கேள்வி.

    இன்னும் கேள்விகள் இருக்கின்றன அடுத்த வாரத்திற்குக் கேட்கிறேன்.

    துளசிதரன்

    (கீதா: ஆமாம் ஆமாம் துளசி போதும். பாவம் ஆசிரியப் பிள்ளைகள்... நிறைய ஹோம்வொர்க் கொடுக்கக் கூடாது...ராத்திரி தூங்க வேண்டாமா?.ஏற்கனவே நிறைய ஹோம்வொர்க் வந்தாச்சு....!!!)

    பதிலளிநீக்கு
  62. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  63. யானையின் பலம் எதிலே //
    பாட்டை தேடினேன்

    கண்ணதாசன் அவர் வரிகள்
    நல்ல கருத்துள்ள பாடல்

    பதிலளிநீக்கு
  64. @கீதா//

    ஹையோ கீதாவுக்கு ஒண்ணுமே பிரியுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பொய் சொல்வது என்பது வேறு கீதா, அதை இதுக்குள் இழுக்கக்கூடாது..

    இங்கு நான் சொல்லும் பொய் என்பது.. ஒரு குட்டிக் குட்டிச் சந்தோசத்துக்காக சொல்லப்படுவது அதில் தப்பே இல்லை. ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த சொல்லப்படும் செல்லப் பொய்கள்.. பொய் என ஆகிடாது என்பதைத்தான் சொல்கிறேன்.. மற்றும்படி பொய் சொல்லக்கூடாது.. நான் வீட்டிலும் சொல்லி வச்சிருப்பது.. நீங்க என்ன தப்பு பண்ணினாலும் எனக்கு பொய் சொல்லாமல் உண்மை சொன்னால், திட்டினாலும் மன்னிப்பேன், ஆனா பொய் சொல்லி அதைக் கண்டு பிடிச்சனோ பின்பு எனக்குக் “கெட்ட” கோபம் வந்திடும் என ஹா ஹா ஹா.

    ஸ்கூலில் முதலாம் ரெண்டாம் வகுப்பில், மரம் கீறச்சொன்னால்.. ஒரு கோடு போட்டு மேலே ஒரு பச்சை கலர் அடிச்சுப் போட்டு கொண்டோடி வந்து காட்டுவார்கள்.. ஓஓ வவ்வ்வ்வ்வ்வ் சோஓ பியூட்டிஃபுல்... வெரி நைஸ்.. ஐ லவ் இட்.... என்றால் போதும் அன்று அவர்களில் நாளே ஹப்பி ஆகிடும்... ஒருவித நாணத்தோடு நெளிவார்கள்.. ஒரு சிரிப்பு சிரிப்பார்கள்.. அந்த அழகை சொல்லி முடியாது... இதுதானே செல்லப் பொய்..

    அதைத்தான் ஒரு பொய்யாவது சொல் கண்ணே...

    இப்போ ஆசையா மனைவி, புளொக்கில ரெசிப்பி பார்த்து.. அல்வாக் கிண்டி வச்சிட்டு காவல் இருக்கும்போது, வீட்டுக்குப் போனதும் சாப்பிடக் குடுத்தால்... அது சரியில்லை ஆயினும்.. முதலில் நல்லாயிருக்கு என ஒரு பொய் சொல்லி சாப்பிட்டு விட்டுப் பின்னர், மெதுவா சொல்லலாம், இன்னும் கொஞ்சம் இறுக்கமாக்கியிருக்கலாம், சீனியைக் குறைச்சிருக்கலாம்.. இப்படி..

    ஹையோ வியக்கம் கொடுத்துக் குடுத்தே வெந்து போயிட்டேன் நான்:)).

    பதிலளிநீக்கு
  65. ஏஞ்சல், ஸ்ரீராம், நெல்லை எனக்கு முக்கியமான ஒரு டவுட்...தமனா பாட்டியா அப்படினா ஆச்சி அதிரா அவங்களை எப்படிக் கூப்பிடுவாங்க?!!!! ஹிஹிஹிஹிஹி இது உங்களுக்கு மட்டும்.....இது பூஸார் கண்ணில் படாமல் இருக்கக் கடவது.....மீ இன் ரன் வே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  66. @கீதா ரங்கன் - //ஏஞ்சல் நீவக வுக்கு முன்பு மயில் இப்ப அனுக்கா காலம் மாறிப்போச்சு..வயசு வயசு...ஹா ஹா ஹா.... தமனா பாட்டியா அப்படினா ஆச்சி அதிரா //

    நீங்க பதிவை முழுவதும் படிக்கறதில்லை போலிருக்கு. 50 கிலோ தாஜ்மஹாலை 'அ' வோட கம்பேர் பண்ணி என்னதான் போட்டிருக்காங்கன்னு பார்த்தா, 'அ' 35 வயசு 78 கிலோ, 'த' 27 வயசு, 51 கிலோ. ரெண்டுபேரும் ஜாதிப்பேர் போட்டுக்கிட்டிருக்காங்க. தமிழ்நாட்டுலதான் அந்த வழக்கம் இல்லையே.. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  67. பணக்காரர்கள் - ஏழைகள் - //ஆனால், அவரவர்கள் நிலைமைக்கு அவரவர்கள்தான் காரணம் என்று நினைத்து மனதைத் தேற்றிக்கொள்வேன். // - சரியான பதிலாக நான் நினைக்கறேன்.

    பெரிய பெரிய பணக்காரர்கள் படு ஏழை பின்புலத்திலிருந்து வந்தவர்கள். பெரிய ஏழையானவர்கள், பெரிய பணக்கார பின்புலத்திலும் பிறந்திருக்கிறார்கள். ஏழையாகப் பிறப்பது தவறல்ல. ஏழையாக இறப்பது பெரும்பாலும் அவரவர் கையில்தான் உள்ளது. நீங்க படிச்சிருப்பீங்களே.. நீட், +2ல முதல் இடங்களில் வருபவர்களில் பலர், கஞ்சிக்குக்கூட வழியில்லாத, குடிசையில் வாழும் பெற்றோர்களின் குழந்தைகள்.

    பதிலளிநீக்கு
  68. //செல்போன், வாட்சப் போன்றவற்றைக் கண்டுபிடித்தவர்கள் - ப: நான் அவர்களை திட்டியது இல்லை. வாழ்த்துவது உண்டு. // - இது ஒவ்வொருவருடைய நிலையைப் பொறுத்தது என்று நினைக்கிறேன். எ.பி ஆசிரியர்கள் எல்லாம் குறைந்தபட்சம் வேலைக்குபோகும் பசங்களை உடையவர்கள் (இல்லை பேரன் பேத்தி உடையவர்கள்). நம்ம பசங்க படிக்கறதைவிட, வாட்சப், கம்ப்யூட்டர் கேம்ஸ், செல்போனில் முழுகுதல் என்று இருக்கும்போது, நமக்கு இதைக் கண்டுபிடித்தவர்கள் மேல்தான் கோபம் வரும் (மக்களுக்கு டாஸ்மாக் மேல் கோபம் வருவதுபோல ஹா ஹா ஹா).

    பதிலளிநீக்கு
  69. பதில்: கோத்ரம். - கவுதமன்

    பதில் : நட்சத்திரம். - திருவோணம் - ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  70. //ப: அடுக்களையில் உழல்வது எல்லாம் அந்தக்காலம். இந்தக் காலத்தில் (at least) அடுக்களையில் யாரும் உழல்வது இல்லை. எல்லாத்துக்கும் எந்திரங்கள் வந்து வாழ்வை சுலபமாக்கிவிட்டன !//

    இது சரியான பதில் இல்லை. மிக்சி இருக்கு, எரிவாயு இருக்கு, குளிர்சாதனப் பெட்டி இருக்கு. ஆனால் நம்ம எதிர்பார்ப்பு எங்கேயோ இருக்கு. இவைகள் இல்லாதபோது, காலை ஒரு சாப்பாடு, இரவு டிபன் பண்ண வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போ மூணு வேளை, பலவித உணவு சமைக்கணும்..... எ.பில எல்லாரும் ஆண்கள் என்பதால் கஷ்டம் தெரியலையோ?

    பதிலளிநீக்கு
  71. //நட்சத்திரம். - திருவோணம் - ஸ்ரீராம்//

    ஸ்ரீராமரின் நட்சத்திரம் திருவோணமா!

    பதிலளிநீக்கு
  72. //அதைத்தான் ஒரு பொய்யாவது சொல் கண்ணே...//

    சமையல், ருசி, அழகு, லேட்டாக வருவது.... இந்த விஷயத்தில் எல்லாம் பொய் சொல்லலாம். காதலில் பொய்? ஒருவகையில் காதலே பொய்தான் என்றும் சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
  73. //..(எனக்கு இந்த குயிலை பிடிச்சி காலை உடைச்சி பாட்டை கேட்டாலே வெறி கிளம்பும்)

    எழுதினவனைப் பிடிச்சு கையை ஒடிக்கணும்போல வருதில்ல ஆத்திரம்? எத எப்படி எழுதினாலும் அதப் பாட்டுன்னு நெனச்சுத் தலையாட்டி ரசிக்கிறான்களே, அவிங்களோட தலயப் பிடிச்சு அந்தப்பக்கமா திருப்பி வச்சுட்டா என்ன? புரியாமத்தான் கேக்குறேன்..

    பதிலளிநீக்கு
  74. @ஏகாந்தன் சார் ..ஆமாம் மயில் என்றாலே அதன் தோகை விரித்து நடனம் அது எத்தனை அழகு .
    .அநேகமா பாடலாசிரியரை இப்படி எழுத சொன்னாரோ டைரக்டர் :(
    அந்த டைரக்டர் படங்களில் பெண்கள் கூந்தலை ஓட்ட வெட்டுவது பனிஷ்மெண்டுக்கென இப்படி பல கேவலம் இருக்கும்

    பதிலளிநீக்கு
  75. @ Angel: .. அந்த டைரக்டர் படங்களில் பெண்கள் கூந்தலை ஓட்ட வெட்டுவது பனிஷ்மெண்டுக்கென இப்படி பல கேவலம் இருக்கும் //

    பொதுவாகவே கேவலம் என்கிற வார்த்தை தமிழ் சினிமாவோடு இரண்டறக் கலந்து வருஷங்கள் பல ஓடிவிட்டன. அபூர்வமாக அவ்வப்போது, ஒன்றிரண்டு பொறுத்துக்கொள்ளக்கூடிய படங்கள் இடையிடையே வரலாம் என்பதைத் தவிர, குறிப்பிட்டுச் சொல்லும்படி தமிழ் சினிமாவில் ஏதுமில்லை. ஏதோ குப்பையை விசிறிப் பணம் சம்பாதித்துவிடுகிறார்கள். தவிர்ப்பது மன ஆரோக்யத்திற்கு நல்லது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  76. / யானையின் பலம் எதிலே //
    பாட்டை தேடினேன்

    கண்ணதாசன் அவர் வரிகள்
    நல்ல கருத்துள்ள பாடல் // நிறைய இருக்கு ஆனா ஸ்ரீராமுட மிக ஆத்மார்த்த பிரிய ஹீரோவால் பாடல் பார்த்தும் ஓடிட்டேன்
    முதலில் பத்தி பின்னூட்டம் மட்டும் போட்டு மீதி கட்டாகி ஜிமெயிலில் காபி பேஸ்டும்போது :)இப்போதான் கவனிச்சேன்

    பதிலளிநீக்கு
  77. @ஏகாந்தன் சார் .வெரி ட்ரூ .நான் படம் பார்ப்பதேயில்லை :) அந்த படத்தை எப்பவோ டிவிலாபார்த்தது

    பதிலளிநீக்கு
  78. ஒரு வழியா இப்போ தான் இணையம் கெடைச்சது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  79. ஆளாளுக்கு ஒவ்வொரு சப்ஜெக்ட்டை எடுத்து வச்சுப் பேசிப்போட்டுப் போயிருக்கினம்:)) என்ன பேசுறாங்க என்றே சிலசமயம் புரியமாட்டேனென்கிறதே:) ஒருவேளை ஞானி ஆகிட்டதால இப்படியோ?:)..

    பதிலளிநீக்கு
  80. நிஜமான மயில்:)) இப்பூடித்தான் இருக்குமாமே:) காதில பூ எல்லாம் வச்சிருக்காதாம்:)..

    http://4.bp.blogspot.com/-IAPufSlrrMM/UFRC3nNGpzI/AAAAAAAABmY/RpFn30GWmxo/s1600/peacock-animal.jpg

    பதிலளிநீக்கு
  81. https://2.bp.blogspot.com/-nqcoquX2Iho/Vdcum-WhJNI/AAAAAAAAGXk/U-xVtVdBoS8/s1600/11036626_495039317338623_1154098225247552174_n.jpg

    yes yes :)

    பதிலளிநீக்கு
  82. அதிரா நீங்க போட்டது அ மயில் நான் போட்டது த மயில் :)

    பதிலளிநீக்கு
  83. ஆனா ஸ்ரீராமுட மிக ஆத்மார்த்த பிரிய ஹீரோவால் பாடல் பார்த்தும்

    கிர்ர்ர்ர்ர்ர்ர்...... அவர் என் ஆ ஹீ இல்லை.

    பதிலளிநீக்கு
  84. வாங்க துரை செல்வராஜூ ஸார்.... இனிய இரவு வணக்கம்னு சொல்லலாம்னு பார்த்தால் நான் இதை காலையில் பார்ப்பதால் காலை வணக்கமே சொல்லிடலாம்!!

    பதிலளிநீக்கு
  85. என்னடா... அடுத்த பதிவை வெளியிடலையே என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    நட்சத்திரம் திருவோணம் - எதையாவது சொல்லி வம்பு வளர்ப்போம்னுதான். (பு.பூ எனச் சொல்கிறார்களா என்று பார்த்தேன் ஹாஹா)

    பதிலளிநீக்கு
  86. //என்னடா... அடுத்த பதிவை வெளியிடலையே என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.//

    இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன!!!!

    பதிலளிநீக்கு
  87. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  88. //ஆசிரியர்களில் சின்னவர் ஸ்ரீராம் என்று நான் சொன்னால், சின்னவள் சண்டைக்கு வரக்கூடும்! /அந்தச் சின்னவள் தான் காசு சோபனாவா? கோபம் வரும் என்பதால் தான் காசுகொடுத்து சமாதானம் செய்து வைச்சிருக்கீங்களோ?

    உங்க எல்லோருக்குமே சங்கீதத்தில் ஆர்வமும், ருசியும் இருக்கு. எல்லோருமே பாடுவீங்களா? கேஜிஜ நல்லாப்பாடுவார்னு ஶ்ரீராம் சொன்னார். அது போல உங்க எல்லோருக்கும் சங்கீத ஞானம் உண்டா?

    கேஜிவியும் கேஜிஜவும் ஏன் இதில் ஆ"சிரி"யர்கள் பட்டியலில் இல்லை? அதே போல் ஶ்ரீராமின் அண்ணா?அவர் ஏன் இல்லை?

    குரோம்பேட்டை குசும்பன் வந்தால் கேஜிஜி வர மாட்டார். கேஜிஜி வந்தால் குசும்பன் ஒளிஞ்சுப்பார்! இருவரும் ஒருவர் என்பதாலா?
    முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு தரம் கேஜிஜி சார், அதிகாலை வேளையில் காஃபி போடும்போது (மைக்ரோவேவ்?) அமானுஷ்யமாக யாரோ வந்து பால் ஊத்தினதாப்படிச்ச நினைவு! இப்போவும் அதே அமானுஷ்யம் தான் பால் கொடுக்கிறாரா? பால் பாத்திரத்தில் இருக்கும் தானே! அதுவும் மறைஞ்சுடுமா?

    பதிலளிநீக்கு
  89. @ கீதா சாம்பசிவம்: //அமானுஷ்யமாக யாரோ வந்து பால் ஊத்தினதா..//

    கேஜிஜி அமானுஷ்யத் திலகமா? தனியா ஒரு நாள் ஒதுக்கிடலாமோ!

    பதிலளிநீக்கு
  90. கேள்விக் கணைகளும் பதில் கணைகளும்
    அருமை

    பதிலளிநீக்கு
  91. 1) தாய்லாந்து இளம் கால்பந்து வீரர்கள், குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டது பற்றி....
    2) 'வேலியில் போகும் ஓணானை எடுத்து காதில் மாட்டிக்கொண்டது போல' -- உதாரணம், மேற்கண்ட செய்தியுடன் தொடர்பு படுத்தாமல் சொல்லவும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!