செவ்வாய், 24 ஜூலை, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : வேர்கள் - துரை செல்வராஜூ




வேர்கள்...
துரை செல்வராஜூ 

---------------------------



மழை இப்போது தூறிக் கொண்டிருக்கின்றது...

ஆனால், சாயங்காலம் வெளிச் .. என்றிருந்தது ஆச்சர்யந்தான்...

புண்ணியம் செய்தார்க்கு பூவுண்டு.. நீருண்டு .. - என்று
ஜனங்கள் பேசிக் கொண்டு வந்ததை நினைத்துக் கொண்டார் ரத்னசாமி...

பெரியவருக்கு 87 வயது... ஒரு நோயில்லை.. நொடியில்லை...
இருந்த இருப்பில் இயற்கையோடு கலந்து விட்டார்...

பெரியவர் என்றால் ரத்னசாமியின் தம்பி செந்தில் நாதனுக்கு மாமனார்...

விளக்கு வைப்பதற்கு முன்பாகவே -
எல்லாவற்றையும் முடித்தாகி விட்டது...

வீட்டுக்கு வந்து திருவிளக்கு பார்த்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
ஹோட்டலில் இருந்து எல்லாருக்கும் சாப்பாடு வந்தது....

பேருக்கு ரெண்டு வாய் சாப்பிட்டு விட்டு ஆளுக்கு ஆள்
அங்கும் இங்குமாக சாய்ந்து விட்டார்கள்...

சரி.. நாமும் படுக்கலாம்!..
- என்று, ரத்னசாமி ஆயத்தமான வேளையில்
படியேறி வந்து கொண்டிருந்தார் கணேசமூர்த்தி...

தந்தை வழியில் மாமன் முறை..
குடும்பத்தின் பெரியவர்களில் இவர் தான் மூத்தவர்...

வாங்க மாமா!... - ரத்னசாமி விசுப்பலகையை விட்டு எழுந்தார்...

இருப்பா.. இரு... அப்படியே உட்காரு!...

ரத்னசாமியின் அருகில் அமர்ந்து கொண்டார்..

உனக்குத் தான் தொந்தரவு கொடுத்துட்டோம்...

அதெல்லாம் ஒன்னும் இல்லை.. மாமா!...

நாளைக்கு செய்யக் கூடாதாம்.. நாள் நல்லா இல்லே..ன்னுட்டானு..ங்க....
அதனால தான் உன்னைய இங்கேயே தங்க சொல்லிட்டோம்...
நாளான்னைக்குக் காலையில பத்து மணிக்கு சொல்லியிருக்கு...
பலசரக்குக் கடையப் போட்டுட்டு இருக்கிறது உனக்கு கஷ்டமா இருக்கும்!...

அதனால என்ன மாமா!... இதெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை!...

இருந்தாலும் வரவு செலவு வகையறா எல்லாம் இருக்கே...

பையன் பார்த்துக்குவான்...
அவனும் இப்போ எங்கூட கடையில தான் இருக்கான்!...

ஆமா.. சாயங்காலம் பார்த்தது உம் மகனை... எங்கே அவன்!?...

வீட்டுக்கு அனுப்பி ரெண்டு போர்வை எடுத்து வரச் சொல்லியிருக்கேன்...
இப்போ வந்துடுவான்....

உன் சம்சாரம்!?..

மேலே மாடியில!..

சரி..  ரத்னம்... நா கிளம்பறேன்..
எனக்கு இந்த ஈரவாடை ஒத்துக்காது...
மல்லி கஷாயம் போட சொல்லியிருக்கேன்...
ஒரு வாய் குடிச்சிட்டு படுக்க வேண்டியது தான்..
உனக்கு ஏதும் வேணுமா!?.. சொல்லு!...

கொஞ்சம் தண்ணி மட்டும் வேணும்..

அந்தவேளையில் அந்தப் பெண் அவர்களைக் கடந்து போக -

இந்தாம்மா!.. கொஞ்சம் இங்கே வா!.. - என்றார் கணேச மூர்த்தி....

அருகில் வந்து நின்ற அந்தப் பெண்ணை ஏறெடுத்துப் பார்த்த ரத்னம் கேட்டார்..

யாரு மாமா இந்தப் பொண்ணு?...

பெரியவரோட பேத்தி..
உன் தம்பி மச்சினன் இருக்கான்..ல்ல சேது... அவனோட மக!...
அம்மாடி... மாமாவுக்கு தண்ணி வேணுமாம்... கொண்டு வந்து கொடு...
நா கிளம்பட்டுமா!..

சரிங்க மாமா!....

கணேச மூர்த்தி அங்கிருந்து சென்றதும் -
அருகில் நின்ற பெண்ணை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தார் ரத்னம்..


புன்னகை தவழும் முகம்.. அகன்ற விழிகள்.. குறுகுறு.. - என்று இருந்தன...

உங்களுக்குத் தண்ணி வேணுமா?..

ஆமாம்...மா!...

குடிக்க வேணுமா?.. வேறதுக்கும் வேணுமா?..

திடுக்கிட்டுப் போனார் ரத்னம் ...

வேறதுக்கும் வேணுமா?.. - சட்டென அர்த்தம் புரியவில்லை..

இல்லே.. ராத்திரியில கை கால் கழுவணும்..ன்னா -
அதோ ரோஜாச்செடிக்குப் பக்கமா திரும்புங்க...
லெட்ரீன் பாத்ரூம் இருக்கு... அதுக்காக சொன்னேன்!...

அடேங்கப்பா!... -  உள்ளுக்குள் வியந்தார்..

ஓ.. அப்படியா!.. இப்போ குடிக்கத் தண்ணி கொடும்மா!...

சூடா வேணுமா?.. வெதுவெதுப்பா வேணுமா?.. ஜில்லு...ன்னு வேணுமா?..

கேள்விக் கணைகளால் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றார் ரத்னம்..

தண்ணி கேட்டது ஒரு குத்தமாடா....ன்னு தானே நெனைக்கிறீங்க!..

அந்தப் பெண் இளநகை பூத்தாள்...

இவள் சாதாரணப் பெண்ணே அல்ல!.. - என்று,
திருவிளையாடல் பாணியில் நினைத்துக் கொண்ட ரத்னம்
தானும் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்..

வெதுவெதுப்பா!...

சரி.. இதோ வர்றேன்... - மின்னலாக வீட்டுக்குள் ஓடினாள்..

ஐந்து நிமிட இடைவெளியில் வெளிப்பட்டாள் -

ஒரு கையில் பிளாஸ்க் இருந்தது...
மற்றொன்றில் சிறிய சொம்பும் -
அதனுடன் சின்னஞ்சிறிய குவளையும்....

செம்பு....ல இருக்கிற தண்ணிய இப்போ குடிங்க!...
ராத்திரிக்குத் தேவைப்பட்டா - இதில பிளாஸ்க்....ல இருக்கு!...

நெஞ்சம் நெகிழ்ந்து போனது ரத்னத்திற்கு...

உன் பேரென்னம்மா!?...





வசந்தி!... உங்க பேரு!?..

என் பேரு ரத்னம்.. ரத்னசாமி..

நீங்க எங்களுக்கு என்ன வேணும்?..

சொன்னா புரியுமா!...

புரியற மாதிரி சொல்லுங்களேன்!...

இவ்வளவு வெவரமா இருக்கிற உனக்கா புரியாது!..
- என்று, நினைத்துக் கொண்ட ரத்னம் சொன்னார்...

உனக்கு மாமா முறை!...

எப்படீ?..

உங்க அப்பாவோட தங்கச்சி இருக்காங்களே...

ஆமாம்!...

அவங்களோட வீட்டுக்காரருக்கு அண்ணன்!...

ஹை... பெரிய மாமா!.. ஆனா, இந்தப் பத்து வருசத்தில
செந்தில் மாமா வீட்டுக்கு நீங்க வந்ததா உங்களப் பார்த்ததேயில்லை!...

உரிமையுடன் எதிரில் அமர்ந்து கொண்டு வியந்தாள்..

விசேஷம்...ன்னு அவங்களும் விரும்பிக் கூப்பிடலை....
விருந்து...ன்னு நாங்களும் வீட்டுப்படி ஏறலை!..

அப்படி என்ன பிரச்னை?..

அது தான் தெரியலை!...

சரி.. செந்தில் மாமாவோட அக்கா பொற்கொடி... உங்களோட தங்கை!..

ஆமாம்...

அவங்க உங்களோட ராசியா!...

இல்லை!...

ஏன் இப்படி!?..

தெரியலை....ம்மா!...

அவங்க ரெண்டு பேரும் ராசியா இருக்காங்களே!...

அது... காலம் இட்ட கட்டளையா இருக்கலாம்!..

எப்போது..ல இருந்து இந்த மாதிரி ஆச்சு?..

எல்லாம் அவங்க அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான்!...

நீங்க மூத்தவங்க... அந்த காலத்து... ல
எவ்வளவோ கஷ்டப்பட்டு இருப்பீங்க!...
உங்க தம்பி தங்கைகளுக்கு நல்லதெல்லாம் செஞ்சிருப்பீங்க!..

அதையெல்லாம் பேசினா பெருங்கதை ஆயிடும்!..

யாரா இருந்தாலும் அந்த நல்லதை எல்லாம்
நெனைச்சு பார்க்கலை....ன்னா என்ன மனுசங்க?...

நெனைச்சுப் பார்த்து எனக்கு என்ன வைரக்கிரீடம் வைக்கவா!..
அண்ணே.. ன்னு ஒரு வார்த்தை.. அதுக்குத் தானே பஞ்சமா போச்சு!..

அடிதடியா.. வாய்ச் சண்டையா!..
அப்படி என்ன கோபம் பெரியவங்களுக்கெல்லாம்!?...

அகங்காரம்!.. அது ஒன்னு போதாதா!..

இதைத் தொலைக்கிறதுக்கு யாரும் மெனக்கிடலையா!?...

இதுக்குள்ளே ஒன்னும் இல்லை...ங்கிறது எல்லாருக்கும் தெரியும்...
ஆனா.. பாழும் மனசு தான் எதையும் ஒத்துக்கிறதில்லையே!...

நீங்க அன்னைக்கு அந்த மாதிரி சொன்னீங்களே!..
நீங்க தான் அதுக்கு இந்த மாதிரி செஞ்சீங்களே!..
அப்படி..ன்னு பழைய சேதிகளை பேசிப் பேசியே
பெரிசா கிளறி விட்டு மனசை ரணமாக்கறது..

ரத்னத்தின் முகத்தையே - பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி..

அந்த வனக்குரங்கு விழுதை விட்டாலும் விடும்....
இந்த மனக்குரங்கு பழசை விடுறதே இல்லை!...

பழசையெல்லாம் பிடிச்சபடி காலத்துக்கும்
தொங்கிக்கிட்டு இருக்கிறது தான் அதுக்கு இஷ்டம்!...

ஒருத்தருக்கு ஒருத்தர் சந்தோஷமா இருந்தா
நோய் நொடி..ன்னு ஒன்னுமே கிடையாது...

பெரிய ஐயா எல்லாம் -
இத்தனை காலம் ஆரோக்கியமா இருந்ததுக்கு என்ன காரணம்?..
அன்பும் அரவணைப்பும் தான்.. ஒருத்தருக்காக ஒருத்தர் வாழறது தான்!..

தங்கச்சிக்குப் பிடிக்கும்..ன்னு புதருக்குள்ள கைய விட்டு
நாவப்பழம் பொறுக்குவான் - அண்ணன்....

அண்ணனுக்குப் பிடிக்குமே...ன்னு
சேலைத் தலைப்புல அயிரை மீன் சேந்திக்கிட்டு வருவா - தங்கச்சி...

அதுதானம்மா வாழ்க்கை...
அந்த வாழ்க்கையில குற்றங்குறை இருந்ததேயில்லை..
அந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்காதா....ன்னு தவிக்குது மனசு...

போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் பொங்கல் வைக்கிறதா சந்தோஷம்?...
இருக்குறப்போ - ஒரு வாய் தண்ணி கொடுக்கிறது தான் சந்தோஷம்!...

ரத்னம் கலங்கிய மனதுடன் பேசிக் கொண்டிருந்தபோது
மாடியின் வெளிநடையிலிருந்து இறங்கி வந்தான் சேது - வசந்தியின் அப்பா...

மச்சான்... நீங்க இன்னும் தூங்கலையா!...
நீ என்னம்மா... தொந்தரவு செஞ்சுகிட்டு இருக்கே!..

ஒன்னும் இல்லே...ப்பா!..

காலாகாலத்துல தூங்குங்க!... - என்றபடி, கடந்து சென்றான்....

ம்.. மாமா.. உங்களை ஒன்னு கேக்கவா!...

கேளேம்மா!...

அத்தையும் வந்திருக்காங்களா?..  - கேட்டு விட்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்...

ம்.. வந்திருக்காங்களே!..

யாரு அவங்க!?.. - கண்களில் ஆவல் தெறித்தது..

பச்சைக் கலர் புடவை கட்டிக்கிட்டு
எல்லாருக்கும் பந்தி பரிமாறுனாங்களே - அவங்க தான்!..

ஓ.. அவங்க தானா!...
உங்கள மாதிரியே நல்லவங்களா தெரியறாங்க... சரிதானே!..

மென்மையாகச் சிரித்தார் - ரத்னம்..

உங்கள நெனைச்சா பெருமையா இருக்கு மாமா!... - வசந்தி முணுமுணுத்தாள்..

ஏம்மா!... - ரத்னத்தின் மனம் கசிந்தது..

இவங்கள்...லாம்
இவ்வளவு தூரம் அலட்சியம் செஞ்சும்
பந்தம் வேணும்..ன்னு வந்திருக்கீங்க...
பாசம் வேணும்..ன்னு காத்திருக்கீங்க!...

அந்த வேளையில் -
நிதானமான சத்தத்துடன் இருசக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது...

யாரோ வர்றாங்களே.. இந்த நேரத்தில!.... - வசந்தி எழுந்தாள்..

என் பையன்.. வீட்ல இருந்து போர்வை எடுத்து வர்றான்!...

அப்படியே நகர்ந்து சுவற்றுடன் ஒட்டிக் கொண்டாள் - வசந்தி...

உங்க பையனா!.. நீங்க சொல்லவேயில்லை!..

நீ தான் கேட்கவேயில்லையே!... - ரத்னம்..

இருசக்கர வாகனத்தை நடை ஓரமாக நிறுத்திவிட்டு
வாசல் கதவைத் திறந்து கொண்டு படியேறி வந்தான் அவன்..

அப்பா... இதுல பல்பொடி, சோப்பு, துண்டு எல்லாம் இருக்கு....
வேறதுவும் வேணுமா.... உங்களுக்கு?...

போதும்..ப்பா!.. வீட்டுக் கதவை நல்லா பூட்டிக்கிட்டு தூங்கு!..
காலைல எழுந்ததும் நான் போன் பண்றேன்!..

நான் கிளம்பறேன்!...

சரி... மழை நேரமா இருக்கு... ஜாக்கிரதை!...

சரிப்பா!.. - திரும்பி நடந்தான்..

பேரு என்ன?.. - கிசுகிசுத்தாள் வசந்தி..

கார்த்திக்!.. - என்றார் ரத்னம்..

கூப்பிடவா!..

ம்!..

அத்தான்!..

சட்டென நின்ற கார்த்திக் திரும்பிப் பார்த்தான்...



***

அடுத்த சில மாதங்களில் -
பெரியவர்களின் நல்லாசியுடன்
இரு வீடுகளிலும் மங்கலத் தோரணங்கள் கட்டப்பட்டன..

விடுபட்டிருந்த சொந்தங்கள் எல்லாம்
கார்த்திக் - வசந்தி கல்யாணத்துக்கு வந்திருந்தன..

ஏதோ அன்றுதான் புதிதாகப் பிறந்து வந்த மாதிரி
எங்கெங்கும் சிரிப்பு.... சந்தோஷம்....

கல்யாண விருந்தில் பேசிக்கொண்டார்கள்...

அண்ணாச்சி வீட்டுக் கல்யாணம்...னா கேக்கணுமா!..
சீரகச் சம்பா பிரியாணியில இருந்து
தினைப் பாயசம் வரைக்கும்... ஆகா!...
ஃஃஃ

73 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ:) ரிப்ளை பட்டின் இருப்பதால் இனிக் கூவலாம்ம்:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  2. பதில்கள்
    1. துரை அண்ணா உங்கள் தளம் திறந்தாலே விளம்பரங்கள் தான் வருகின்றன எனக்கு. உள்ளே நுழையவே முடியலை...நம்மூரில்தான் ஆன்மீகம் வியாபரமாக மாறுதேனு வருத்தம் இருந்தா....நம்ம..துரை அண்ணாவின் அருமையான ஆன்மீகத் தளம் திறந்தால் விளம்பரங்கள்....இந்த ப்ளாகர் என்ன செய்கிறது என்று தெரியலை...
      கீதா

      நீக்கு
    2. நீங்கள் சொன்னதும் நான் போய் திறந்து பார்த்தேன். எனக்கு அப்படி ஒன்றும் அங்கு தஞ்சையம்பதியில் வரவில்லையே கீதா...

      நீக்கு
  3. என் கமென்ட் வந்ததா ஸ்ரீராம்...என்ன பிரச்சனை என்று தெரியவில்லையே...கமென்ட் அப்படியே நிக்குதே

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம் ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு... நல்வரவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்... ஆன்மீகப் படங்களுக்கு நிறைய கான்டாக்ட் வச்சு, அவங்கள்டேர்ந்து வரும் படங்களைப் போடுவது மாதிரி, பெண்களின் ஓவியங்களை எங்கேயிருந்து சேகரிக்கிறீங்க? எப்போவும் ரொம்ப அருமையான செலெக்‌ஷன். பாராட்டுகிறேன்.

      நீக்கு
  5. என்னாச்க்சு ஸ்ரீராம் உங்கள் கமென்ட் பாக்ஸ் மாத்தியிருக்கீங்களோ?!!! வித்தியாசமாக இருக்கிறது...இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா?

    நேற்றிலிருந்து துரை அண்ணா வின் திருக்காளகத்தியைப் பார்க்க முடியவில்லை. தளம் திறந்தாலே விளம்பரம் தான் வருகிறது...இப்போதும் முயற்சி அங்கு...

    அட இங்கும் துரை அண்ணாவின் கதை...வரேன்...

    ஒன்னும் புரியலை...எல்லாமே மாறியிருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. / உங்கள் கமென்ட் பாக்ஸ் மாத்தியிருக்கீங்களோ?!!!//

      ஆமாம் கீதா... தனபாலன் மாற்றிக் கொடுத்தார். பதில் சொல்லும் பட்டன் வந்துள்ளது பார்க்கவில்லையா?!!

      நீக்கு
    2. அதான் பார்த்தேன் சூப்பரா இருக்கு இப்ப....ஹப்பா ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணி பண்ண வேண்டியதில்லை...சூப்பர்...

      கீதா

      நீக்கு
    3. சகோதரி கீதாவிற்கு :- உங்கள் கணினியில் "Adblock Plus" என்று தேடுங்கள்... "Adblock Plus - Chrome Web Store" என்பதை சொடுக்கி "Install" செய்யுங்கள்... விளம்பர தொல்லை நீங்கும்...

      நீக்கு
    4. டிடி இன்றுதான் இதைப் பார்க்கிறேன். கண்டிப்பாக செய்துவிடுகிறேன். அப்போது பல தளங்களிலும் கருத்து போட இயலாமல் ஆட்ஸ் வந்து கொண்டே இருந்தது. உங்கள் தளத்திலும்....

      செய்து விடுகிறேன்...

      மிக்க நன்றி டிடி...டிடி இருக்க பயமென்!!! இப்ப உங்களை வலைத்தள பிரின்ஸிபால் ஆக்கிட்டேன்...ஹிஹிஹிஹி அப்புறமா சொல்லறேன் ஏன்னு...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் இன்றைய கதாநாயகர் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாநாயகரைப் பார்த்துட்டேன்....நாயகி உண்டோ?!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா யாரது அந்த நாயகி? சரி சரி எனக்கு எதுக்கு வம்பு போட்டாச்சு இங்க நம்ம பூஸார் பார்த்துக் கொள்வார் அந்த சானலை ஹா ஹா ஹா வரேன் வாசித்துவிட்டு

      கீதா

      நீக்கு
  8. என்னது... தஞ்சையம்பதிக்குப் போனால் விளம்பரமா?...

    நான் அப்படி ஏதும் செய்து வைக்கவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா இது நீங்கள் செய்தது இல்லை....ப்ளாகரின் வேலை இப்படிக் கொஞ்ச நாள் கில்லர்ஜி மற்றும் மதுரைதமிழனின் தளங்கள் எனக்கு வந்தன..இப்போது அங்கு வரவைல்லை...அது போல் உங்கள் தளத்திலும் அப்புறம் வராது...

      கீதா

      நீக்கு
  9. கதையில தான் - நாயகர் பலசரக்கு கடை வெச்சிருக்கார்...

    அவருக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை... விளம்பரமும் செய்வதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நான் அப்படி ஏதும் செய்து வைக்கவில்லை. //

      // அவருக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை... விளம்பரமும் செய்வதில்லை.. //

      ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    2. துரை அண்ணா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
  10. துரை அண்ணா ஆதி வெங்கட்ஜி/வெங்கட்ஜி தளத்தில் ஸ்ரீராமின் காவேரி ஓடுகிறது பார்க்கலையா அண்ணா ஹா ஹா ஹா ஹா ஹா..இப்பல்லாம் என் நாக்கு ரொம்ப நீண்டுருச்சோ!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. // இவ்வளவு வெவரமா இருக்கிற உனக்கா புரியாது.. என்று நினைத்துக் கொண்ட ரத்னம்....//

    என்று இருக்க வேண்டும்...

    அன்பின் ஸ்ரீராம்,
    தயை கூர்ந்து -
    ரத்னம் என்று திருத்தி விடுங்கள்.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தி விட்டேன் துரை ஸார்..... திருத்தி விட்டேன் துரை அண்ணா.

      நீக்கு
  12. மூனு நாளா கணினியைத் தெறக்கவேயில்லை...

    எல்லாரும் சொல்றாங்க -
    நல்லா இருக்கு.. நல்லா இருக்கு..ந்னு...

    எனக்கு வழக்கம் போல குழப்பம்!...

    இதுக்கு முன்னாலயும் நல்லாத்தானே இருந்தது!?... அப்படின்னு...

    இப்போ நுண்ணலை வழியா Web Version பார்த்தேன்....

    அருமை..அழகு....
    வாழ்க நலம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எனக்கு வழக்கம் போல குழப்பம்!...

      இதுக்கு முன்னாலயும் நல்லாத்தானே இருந்தது!?... அப்படின்னு...//

      ஹா... ஹா... ஹா...

      // இப்போ நுண்ணலை வழியா Web Version பார்த்தேன்....
      அருமை..அழகு....
      வாழ்க நலம்!...//

      நன்றி (டிடி)

      நீக்கு
  13. நீங்க அன்னைக்கு அந்த மாதிரி சொன்னீங்களே!..
    நீங்க தான் அதுக்கு இந்த மாதிரி செஞ்சீங்களே!..
    அப்படி..ன்னு பழைய சேதிகளை பேசிப் பேசியே
    பெரிசா கிளறி விட்டு மனசை ரணமாக்கறது../

    அகங்காரம்/// கதையில் வரும் இப்படியான பல வரிகள் ...மனதை எங்கோ இழுத்துச் செல்கிறது...

    இதோ இன்னும் முழுசா படிச்சுட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  14. திருத்தி விட்டேன் துரை அண்ணா//

    ஸ்ரீராம் எனக்கு இது ரொம்பப் பிடித்துவிட்டது...சூப்பர் ஸ்ரீராம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஸ்ரீராம் எனக்கு இது ரொம்பப் பிடித்துவிட்டது...சூப்பர் ஸ்ரீராம்!!! //

      நன்றி கீதா...

      நீக்கு
  15. பழசையெல்லாம் பிடிச்சபடி காலத்துக்கும்
    தொங்கிக்கிட்டு இருக்கிறது தான் அதுக்கு இஷ்டம்!...

    ஒருத்தருக்கு ஒருத்தர் சந்தோஷமா இருந்தா
    நோய் நொடி..ன்னு ஒன்னுமே கிடையாது...//

    அண்ணா ஹைஃபைவ்!!! நான் இதை அடிக்கடிச் சொல்லிக்கிட்டே இருப்பேன்...நம் மனம் தான்...என்று....அருமையான வரிகள் அண்ணா!! சமீபத்தில் கூட வாட்சப்பில் அம்பேரிககவில் ஒரு பல்கலைக்கழகம் இதனைக் கண்டு பிடித்ததாகச் சொல்லி சுற்றியது....இதைத்தானே நம்மூரில் ஆண்டாண்டு காலம் சொல்லி வருகிறோம் அன்பே சிவம் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      இளசுகள் பேசிக்கிறதையெல்லாம் ஒட்டுக் கேட்கிறதாவது?...

      இருந்தாலும் அதையெல்லாம் அவங்க அவங்க கற்பனைக்கு விட்டுட்டேன்...

      இதில் - அந்தப் பொண்ணு வசந்தி
      சேதுவின் மகள்...

      பெரியவங்க... ன்னு மரியாதை கொடுத்தாளே,

      அதைச் சொல்லணும்....

      யாரோ கிழம் தண்ணி கேட்டதுன்னு கடமைக்கு கொடுத்துட்டுப் போகாம பக்குவமா உபசரித்தாளே...

      அவங்க பானும்மா - தளத்தில சொல்லியிருந்தாங்களே பரிமாறுவது பற்றி...

      பரிமாறுவது அன்னத்தை அல்ல..
      அன்பினை...

      இதைத்தான்
      ஔவையார் சொன்னாங்க..

      உண்ணீர் உண்ணீரென்றே
      ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடியுறும்...

      ஆகா..
      இருந்தமிழே உன்னால் இருந்தேன்..

      நீக்கு
    2. // பரிமாறுவது அன்னத்தை அல்ல..
      அன்பினை...
      இதைத்தான்
      ஔவையார் சொன்னாங்க..
      உண்ணீர் உண்ணீரென்றே
      ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடியுறும்...
      ஆகா..
      இருந்தமிழே உன்னால் இருந்தேன்.. //

      அருமை. அருமை. அருமை.

      நீக்கு
    3. பெரியவங்க... ன்னு மரியாதை கொடுத்தாளே,

      அதைச் சொல்லணும்....

      யாரோ கிழம் தண்ணி கேட்டதுன்னு கடமைக்கு கொடுத்துட்டுப் போகாம பக்குவமா உபசரித்தாளே...

      அவங்க பானும்மா - தளத்தில சொல்லியிருந்தாங்களே பரிமாறுவது பற்றி...

      பரிமாறுவது அன்னத்தை அல்ல..
      அன்பினை...//

      செம செம.....உணவே கூட அதற்கான விதிமுறைகளின் படி பரிமாறினாலும் அன்பு இருக்க வேண்டும்!! அழகான மனதைக் கவர்ந்த வரிகள் அண்ணா...

      கூடவே ஓவையின் வரிகளும் சொல்லி அசத்தறீங்க அண்ணா... என்ன சொல்ல.. வார்த்தைகள் இல்லை...

      ஆமாம் அப்பெண் வசந்தி பெரியவர்களிடம் கொண்டுள்ள மரியாதாய் ஆமாம் ஆமாம்.

      சரி சரி இளசுகள் என்ன பேசிருக்கும்னு நாங்களே கற்பனையில் பறக்கிறோம் ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  16. அனைவருக்கும் காலை வணக்கம். துரை சாரின் கதையா? வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ஆஹா! கல்யாணம் இபப்டி திடுதிப்புனு வந்துருச்சே...ஹா ஹா ஹா ஹா கொஞ்சம் அந்த ரெண்டு இளசும் பேசுறத கேட்டு இங்க போட்டுருக்கலாம்ல...போங்க அண்ணா .!!! ஹா ஹா ஹா ஹா..

    பரவால்ல எப்படியோ ஒரு கல்யாணம் உறவுகளைச் சேர்த்து வைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சி....

    கதை அருமை...பல உறவுகள் எப்படி பிளக்கின்றன என்பதை நிதர்சனமான வார்த்தைகளில் சொல்லியிருபது அருமை அண்ணா...

    அண்ணாவின் மனம் கதாநாயகரின் மனதில் பிரதிபலிக்கிறது!!!

    கதையை மிகவும் ரசித்தேன் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கீதாவைப் பார்த்துவிட்டாலே வர்ட்ப்ரெஸ் சண்டித்தனம் செய்கிறது. கமெண்ட்ஸை ஒளித்துவிடுகிறது! துரை அண்ணா வீட்டுக்குப் போனால் ப்ளாகர் விளம்பரப் பலகைகளைப் போட்டுவிடுகிறது எதிரே! ஒரே திகிலா இருக்கு காலை வேளையில். மிஸ்ட்ரி வலுக்கிறது நிமிடத்துக்கு நிமிடம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாளா ஏகாந்தன் ஸார்?

      நீக்கு
    2. ஐயோ! ஒட்டக்கூத்தனும் வந்தாச்சா! ஒன்னும் புரியலே!

      நீக்கு
    3. இதைக்கண்டது இன்றுதான் சிரித்துவிட்டேன்.ஏகாந்தன் அண்னா ஹா ஹா ஹா...

      இன்னும் உங்க வீட்டுக்கு வரலை வரனும்.!!!!

      கீதா

      நீக்கு
  19. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எத்தனை அருமையான கதை துரை செல்வராஜு.

    அப்படியே கண்முன்னே நடப்பது போலக் காட்சிகள்
    விரிகின்றன. இப்படி எல்லாம் பேசக்கூடிய பெண்களும் இருக்கிறார்களா.
    சுற்றம் ஒன்று சேர்ந்ததே மிக மகிழ்ச்சி. என்ன துடுக்கு அந்தப் பொண்ணு அத்தான்னு கூப்பிட்டுவிட்டதே. ஆஹா .அருமை அருமை.
    விளிப்புகளும் வார்த்தையாடல்களும் இனிமை.

    நிறைய நிறைய எழுதுங்கள். நன்றி ஸ்ரீராம். இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நன்றி ஸ்ரீராம். இருவருக்கும் வாழ்த்துகள்./

      நன்றி வல்லிம்மா.. காலை வணக்கம்.

      நீக்கு
    2. பெரிய ஐயா எல்லாம் -
      இத்தனை காலம் ஆரோக்கியமா இருந்ததுக்கு என்ன காரணம்?..
      அன்பும் அரவணைப்பும் தான்.. ஒருத்தருக்காக ஒருத்தர் வாழறது தான்!..

      தங்கச்சிக்குப் பிடிக்கும்..ன்னு புதருக்குள்ள கைய விட்டு
      நாவப்பழம் பொறுக்குவான் - அண்ணன்....

      அண்ணனுக்குப் பிடிக்குமே...ன்னு
      சேலைத் தலைப்புல அயிரை மீன் சேந்திக்கிட்டு வருவா - தங்கச்சி.//// அந்த நாளும் வந்திடாதோ.

      நீக்கு
  20. //அந்த வனக்குரங்கு விழுதை விட்டாலும் விடும்....
    இந்த மனக்குரங்கு பழசை விடுறதே இல்லை!...

    பழசையெல்லாம் பிடிச்சபடி காலத்துக்கும்
    தொங்கிக்கிட்டு இருக்கிறது தான் அதுக்கு இஷ்டம்!...// கண்ணீருடன் படிச்சேன். நிகழ்வுகள் நேரில் பார்க்கிறாப்போல்! கல்யாணத்தின் மூலமாவது அனைவரும் ஒன்று சேரட்டும். அருமையான உணர்வு பூர்வமான கதை அல்ல சம்பவம்!

    பதிலளிநீக்கு
  21. நல்ல உரையாடலில் போய்க்கொண்டு இருந்தபோது... வசந்தி அத்தான் என்று அழைக்கவும் சட்டென திரும்பி பார்த்தேன்.

    தம்பி கார்த்திக் வாழ்க வளமுடன்.

    அன்பின் ஜி க்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம்.
    கதையை படித்துக் கொண்டு வரும்போதே இந்த முடிவை எதிர்பார்த்தேன்.

    வசந்தி, மாமா உரையாடல் அருமையாக இருந்தது.

    //போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் பொங்கல் வைக்கிறதா சந்தோஷம்?...
    இருக்குறப்போ - ஒரு வாய் தண்ணி கொடுக்கிறது தான் சந்தோஷம்!...//

    உண்மை உண்மை.
    நன்றாக சொன்னீர்கள்.

    உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.
    மணமக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  23. நேற்றுதான் தனபாலன் சொன்னார், மாற்றிக் கொடுத்து விட்டாரா அருமை.
    நானும் தனபாலனிடம் சொல்லி மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. நல்லதுக்கு போகவில்லை என்றாலும் இறப்புக்கு கண்டிப்பாய் போக வேண்டும் என்பார்கள்.
    பெரியவர்கள் போனால் கல்யாணசாவு என்பார்கள்.
    கல்யாணம் வந்து விட்டதே!

    பதிலளிநீக்கு
  25. அழகான கதை...

    // அகங்காரம்!.. அது ஒன்னு போதாதா!.. //

    எங்கும் பல பிரச்சனைகளுக்கு இதுவே காரணம்...

    பதிலளிநீக்கு
  26. மழை நேரத்து தூவானம் போல் இதமான கதை..

    அருமை..


    மறுமொழி பெட்டி வந்தாச்சு..இனி இன்னும் அதிகமாக மறுமொழிகள் பறக்கும்...

    பதிலளிநீக்கு
  27. உறவுகள் விட்டுப் போகாமல், நல்ல,கெட்டகாரியங்களுக்கு விஜயம், ஒருசட்டி,பருப்பிலோ,அல்லது ஒருசட்டி நெருப்பிலோ நடக்கும், கூடும் என்பார்கள். வஸந்தியைப் போன்ற ஒருபெண், இனிய விசாரிப்பு பார்த்தலரிது. அருமையான வார்த்தைகள். கதை நீரோட்டமாக ஒடுகின்றது. மனதில் நிற்கிறது. அருமை. அன்புடன்.

    பதிலளிநீக்கு
  28. நல்ல கதை!
    //அந்த வனக்குரங்கு விழுதை விட்டாலும் விடும், இந்த மனக்குரங்கு பழசை விடுவதில்லை//
    அதுதானே பாதி பிரச்சனைகளுக்கு காரணம்.
    இறந்து போன பெரியவர் நிஜமாலுமே நல்ல மனிதர்தான். பிரிந்து கிடந்த சொந்தங்களை இணைத்து வைத்து விட்டாரே. வாழ்க!

    பதிலளிநீக்கு
  29. மனதுக்கு இதமான இனிய கதை துரை அண்ணா .

    பதிலளிநீக்கு
  30. ஆஆஆஆஆஆஆவ்வ்வ் துரை அண்ணனுக்கு ஆரு மொட்டை அடிச்சதூஊஊஊஊ?:) இது கலா அண்ணிக்குத் தெரியுமோ?:)).. அதிரா இந்தக் கதையைப் படிக்கோணும் எனத்தானே நேர்த்தி வச்சு மொட்டை போட்டனீங்கள் துரை அண்ணன்?:))...

    இது ரொம்ப ஓவரா இல்லையோ அதிரா.. என ஸ்ரீராம் மாஇண்ட் வொயிஸ் கேய்க்குதேஏஏஏஏஏஎ:) சரி சரி முடிஞ்சவரை அடக்கி வாசிக்கிறேன்ன் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்..

    இன்று ஆடிச் செவ்வாய் எல்லோ.. எனக்கு மிக மிக பிடிச்ச செய்வாய்.. அது என்னமோ தெரியல்ல சொன்னா நம்பவும் மாட்டீங்க... கண்ணதாசன் அங்கிளில் எனில் எனக்கு எவ்வளவு ஆசையோ.. அப்படித்தான் எனக்கு இந்த ஆடி வெள்ளி ஆடிச்செய்வாய் இரண்டிலுக் சொல்ல முடியாத ஆசை.. ஆடி வெள்ளிப் பாடலும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன்ன்ன்.. இதில இருந்து என்ன தெரியுது? அதிரா ஒரு அரை லூஸ்ஸ்ஸ்ஸ்:)) ஆங் ஒண்ணுமில்லே.. இதை விடுங்கோ கதை படிக்கப்போறேன்ன்.. ஆலம் வேரா? மாம் வேரா படிச்சிட்டு வாறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  31. //பெரியவர் என்றால் ரத்னசாமியின் தம்பி செந்தில் நாதனுக்கு மாமனார்..//

    ஹையோ ஆண்டவா ஆரம்பமே கொயப்புறாரே:).

    //தங்கச்சிக்குப் பிடிக்கும்..ன்னு புதருக்குள்ள கைய விட்டு
    நாவப்பழம் பொறுக்குவான் - அண்ணன்....

    அண்ணனுக்குப் பிடிக்குமே...ன்னு
    சேலைத் தலைப்புல அயிரை மீன் சேந்திக்கிட்டு வருவா - தங்கச்சி...///

    மிக அழகு..

    பதிலளிநீக்கு
  32. அழகான முடிவு அருமையான கதை, துரை அண்ணன் மொட்டை அடிச்சதில் தப்பே இல்லை..

    //தினைப் பாயசம் வரைக்கும்... ஆகா!...// கலியாணத்துக்கும் தினைப் பாயாசமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    பதிலளிநீக்கு
  33. திருமணங்கள் நிச்சயிக்க நேரம்காலம் இடமெதுவும்தேவையில்லை

    பதிலளிநீக்கு
  34. குமுதம் கதைகளில் மாருதி ஏதோ பேருக்கு வரைந்துதள்ளுவதைத்தான் பார்த்திருக்கிறேன். அவருடைய ப்ரமாதமான படம் ஒன்றை செலக்ட் செய்துபோட்டு அசத்தியிருக்கிறீகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது துரை செல்வராஜு சார் செலெக்‌ஷன் (என்று என் மனதுக்குப் படுகிறது) அவர் ரொம்ப அருமையான கலெக்‌ஷன் வச்சிருக்கார்னு நினைக்கறேன்.

      நீக்கு
    2. அப்புறம் ஏகாந்தன் சார்... மாருதி அவர்களின் படங்களில் முகம் ரொம்ப வசீகரமாக இருக்கும். ஜெ.வின் படங்களில்....

      நீக்கு
    3. நெ.த - செலெக்‌ஷன் துரை சாரா! அப்ப, பாராட்டு அவருக்குத்தான்.

      ஆமாம். மாருதி படங்களில் முகம் வசீகரமாக இருக்கும். ஜெ.யின் படங்களோ வசீகரமாக இருக்கும்.

      நீக்கு
  35. வசந்தி மாதிரி ஆட்கள் மிகவும் குறைவுன்னு நினைக்கறேன். கதை நல்லா இருந்தது. நல்ல ஃப்ளோ. குடும்பங்களைச் சேர்த்துவைக்கும் நல்ல குணம் கொண்டவர்கள் இருந்தால் எப்படி இருக்கும்.....

    எனக்குத் தெரிந்தவர்கள், சண்டையில் பிரிந்துவிட்டனர். அப்போ, இரண்டு ஃபேமிலிகளில் ஒன்றின் பெரியவர், நம்ம சண்டை பசங்களை பாதிக்கக்கூடாது, அவங்க எப்போதும்போல் வந்து போகணும் என்று சொன்னார். ஆனால் அது நடைபெறலை. அதன் விளைவு, ரொம்ப நட்புடன் ஃப்ரெண்ட்லியா இருந்த பசங்க, கண்ணாடியில் விழுந்த விரிசல் மாதிரி, அந்த நட்பு இன்று வரை தொடரலை. அவங்க வீட்டுக்குப் போனா, அப்பாவின் மனசு (அவர் காலமாகியிருந்தபோதும்) நோகுமோ என்ற செண்டிமெண்டில், குடும்பங்கள் பிரிந்தது பிரிந்ததுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்ம சண்டை பசங்களை பாதிக்கக்கூடாது, அவங்க எப்போதும்போல் வந்து போகணும் என்று சொன்னார்//

      ஹா ஹா ஹா “ஆடு பகை , குட்டி உறவோ?:)”.. சாத்தியப்படாது:)).

      ஆனால் என் விருப்பமும் எப்பவும் இப்படித்தான், எனக்கு ஆரோடும் கோபம் எனில் அதுக்காக ஆரையும் பேச விடாமல் தடுத்திடகூடாது என நினைப்பேன், எனக்கு கோபம் எனில் அது என்னோடுதானே..

      நீக்கு
    2. வசந்தி, அதிரா போன்றவர்கள் மிகக் குறைவு இவ்வுலகில்.

      நீக்கு
    3. //ஏகாந்தன் Aekaanthan
      வசந்தி, அதிரா போன்றவர்கள் மிகக் குறைவு இவ்வுலகில்.///

      ஹையோ ஆண்டவா, ஜேசுவே!!!.. ஏ எண்ணன் ஏதோ தெரியாமல் அதிராவைச் சொல்லிட்டார்:) அவரை காப்பாத்தி மன்னிச்சு அருளும்:)).. அதிராவும் இப்போ ஆடிச்செவ்வாயும் அதுவுமா கட்டிலுக்குக் கீழ பூந்திட்டேன்ன் ஹையோ கல்லெறிகள் வரபோகுதேஎ:)).. ஹா ஹா ஹா பின்ன அதிராவைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டால் போதுமே நாடே கொந்தளிக்கும்:)) ஹையோ ஜாமீஈஈஈஈஈ:))

      நீக்கு
  36. ஆஹா... இன்னிக்கு துரை செல்வராஜூ ஐயா எழுதிய கதை....

    ரொம்பவே நல்லா இருக்கு கதை. விட்டுக் கொடுத்துப் போவது தானே வாழ்க்கை. எதையோ நினைத்து உறவுகளை முறித்துக் கொள்வது தான் இப்போது அதிகமாக நடக்கிறது.

    கதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  37. இந்த கதை படித்து இந்த காலத்தில் இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்களா என்று எண்ண தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  38. அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்....

    வலைத்தளத்தில் எனது கதையையும் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு முதற்கண் நன்றி...

    தொடர்ந்து

    எனது கதையை வாசித்து மகிழ்வுடன் பாராட்டி ஊக்கப்படுத்திய

    திருமிகு
    கீதாரங்கன், கீதாசாம்பசிவம்,
    நெ.த, ஏகாந்தன்,DD,
    பானுமதி வெங்கடேஸ்வரன், கில்லர் ஜி,
    வல்லிசிம்ஹன், காமாட்சியம்மா,
    கோமதிஅரசு,அனுராதா, ஏஞ்சல், ஞானி அதிரா, GMB ஐயா, வெங்கட் நாகராஜ், அசோகன் குப்புசாமி

    ஆகிய அனைவருக்கும்
    தனித்தனியாக நன்றியினைச் சொல்வதற்கு ஆசைதான்...

    ஆயினும் நெருக்கடியான சூழல்...

    ஐந்து மணி நேர தூக்கத்துக்கிடையில் அடுத்தொன்றை செய்வதற்கு இயலவில்லை....

    எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தங்களுக்குக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

    தங்களது உற்சாக மொழிகள்
    எனக்கு அமுதத் துளிகள் ஆகின்றன..

    நன்றி.. வணக்கம்

    என்றும் அன்புடன்,
    துரை செல்வராஜூ..

    பதிலளிநீக்கு
  39. அன்பின் நெ.த.. அவர்களுக்கு,

    இந்தப் பதிவில் உள்ள ஓவியம் எனது தேர்வு தான்..

    75/80 களில் கதை எழுதி அனுப்பிவிட்டு மாருதி அவர்களுடைய ஓவியத்துடன் வராதா... என்ற பேராசையுடன் காத்துக் கிடக்கும் மனம்...

    ஆனால் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவேயில்லை...

    புளித்த பழம் பிடிக்காத நரியைப் போல் அங்கிருந்து விடுபட்டபின்

    ஸ்ரீராம் தூண்டிவிட்டார் மறுபடியும்....

    இப்போது
    எனது தளம்.. எனது எழுத்து...

    கதைக்குப் பொருத்தமாக மாருதியின் படங்கள் மகிழ்வூட்டுகின்றன...

    திரு. மாருதி அவர்களுக்கு நன்றி...

    அழகிய படத்துடன் கதையை ரசித்த தங்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  40. திரு துரை செல்வராஜ் அவர்கள் தொடும் துறை எதுவுமே சிறப்பாக இருக்கும். சிறுகதையும் அவ்வாறே. கதாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. கதாசிரியர், ஓவியத்தை இடம்பெற வைத்த சூழலைப் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  41. அழகான கதை...
    வனக்குரங்கு ,மனக்குரங்கு அருமை...

    பதிலளிநீக்கு
  42. துளசியின் கருத்தை அன்றே போட முடியாமல் போனது வருந்துகிறேன் ஸ்ரீராம் அண்ட் துரை அண்ணா...-கீதா

    துளசிதரன்: கதை மிக மிக அருமை துரை செல்வாரஜூ ஐயா! நல்ல எண்ணங்களே கதை முழுவதும் பரவி நிற்கிறது. இப்படியும் குடும்பங்கள் அமைந்துவிடாதா என்ற ஒரு ஏக்கத்தையும் வரவழைக்கிறது. அருமை! மிகவும் ரசித்தேன். வேர்கள் தழைக்கட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!