வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வெள்ளி வீடியோ 180810 : சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு





1994 இல் வெளிவந்த 'என் ஆசை மச்சான்' திரைப்படத்தில் தேவா இசையில் ஒரு பாடல்.  விஜயகாந்த், முரளி, ரேவதி, ரஞ்சிதா நடித்த படம்.



இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் கேட்கும் ரகம்.  கருப்பு நிலா, ராசிதான் கைராசிதான், ஆடியில சேதி சொல்லி...   மூன்றாவதாகச் சொல்லி இருக்கும் பாடல்தான் இன்றைய பாடல் தெரிவு.



பாடலை எழுதி இருப்பவர் காளிதாசன்.



பாடலைக் கேட்கும்போது சுசீலாம்மா பாடுவது போலவே இருக்கிறது.  சுசீலாம்மா குரல்தான் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் பாடியிருப்பது கே எஸ் சித்ரா.  கொஞ்சம் மெதுவான டெம்போவில் ஒரு லிங்க் இருக்கிறது.  அதில் கேட்டால் தெளிவாக சித்ராதான் என்று தெரிகிறது.



நான் பகிர்ந்திருக்கும் காணொளி சற்று வேகமான டெம்போவில் இருந்தாலும் இதையே ரசிக்க முடிகிறது.



ரேவதியின் எளிமையான நடனம் பார்க்க நன்றாய் இருக்கிறது.  மிகவும் இனிமையான பாடல்.




ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்
சொந்தஞ் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவருதான் 

சேல மேல சேல வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைப்பிடிச்ச ஒரே ஒரு உத்தமரு

வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்

மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமங்கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல

சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம் தான்

மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

41 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. வெள்ளிக்கிழமை அதுவுமாக
    மங்களகரமான பாடல்....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம்.

    நல்ல பாடல். ரேவதிக்காக பார்க்கலாம்! :) கேட்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேவதிக்காக மட்டுமல்ல, சித்ராவுக்காகவும் கேட்கலாம் வெங்கட். காலை வணக்கம்.

      நீக்கு
  5. நான் ரசித்த கிராமியப் பாடல்களில் ஒன்று. அருமை.

    பதிலளிநீக்கு
  6. நான் ரொம்ப விரும்பி கேட்பேன் இந்த பாடலை...

    பதிலளிநீக்கு
  7. சுசீலாம்மா குரல் போல இருந்தாலும் சித்ராவை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
    கிழக்கு வாசல் ரேவதி மாதிரி இருக்கு.
    என்ன கதையோ. பாடல் கேட்ட நினைவில்லை.
    நன்றாக இருக்கிறது. வி.காந்த் கம்பு சுற்றாமல் இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜயகாந்த் கம்பு சுற்றாமல் இருந்திருக்கலாம்! ஹா... ஹா... ஹா.. நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  8. நல்ல கிராமீய மணம் கமழும் பாடல். இதற்கு முன் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்....இப்போதும் கேட்டுக் கொண்டே....கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நானும் ரசித்த பாடலே... ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  11. இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கும் கேட்டு இருக்கிறேன்.
    ஆடியிலே என்று ஆரம்பம் வருவதால் இந்த பாடலை பகிர்ந்தீர்களா?
    பாடலை கேட்டேன்.
    படம் பார்த்து இருக்கிறேன், படத்தின் முடிவு பிடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. நன்றி கோமதி அரசு அக்கா.

      நீக்கு
  12. என் ஆசை மச்சான் திரைப்படத்தில் தேவா இசையில் கே.எஸ்.சித்திரா குரலில் ஒலிக்கும் "ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மீண்டும் கேட்க வாய்புக் கொடுத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பாடலைப் பார்த்தேன் கேட்டேன்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நல்ல அருமையான பாடல். படம் பார்த்ததில்லை. பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன்
    கே. எஸ் சித்ரா அவர்களின் குரல் இனிமையானது. இப்போதும் தங்கள் பதிவின் மூலம் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. நேற்றைய கே. ப.லும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதையும் படித்து ரசித்தேன். நேற்று என்னால் வலைத் தளம் வர இயலாமைக்கு வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. நேற்றைய கதையின் தொடர்ச்சி...

    https://engalcreations.blogspot.com/2018/08/2.html

    பதிலளிநீக்கு
  16. எனக்கு மிகவும் பிடித்த பாடல்! மறுபடியும் கேட்க/பார்க்க வைத்ததற்கு இனிய நன்றி!

    பதிலளிநீக்கு
  17. மிக அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  18. எத்தனை தரம் பார்த்தாலும் சலிக்காத படம். அந்த காலத்தைய கேப்டன்?! பார்க்கும்போதெல்லாம் பெருமூச்சு விட வைக்கிறார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!