வெள்ளி, 19 அக்டோபர், 2018

வெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின


1984 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம்.  இளையராஜா இசை.  





படம் பெயர் சிதாரா.  பானுப்ரியா கதாநாயகி, சுமன் கதாநாயகனாக நடித்த படம்.  இது தூர்தர்ஷன் மட்டுமே வந்த நாட்களில் தொலைக்காட்சியில் பார்த்த படம்.



நான் பகிரப்போகும் இந்தப் பாடல் 1983 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆனந்தக்கும்மி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் டியூனை இந்தப் பாடலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.  




தமிழில் பெண்குரல் மட்டும் பாடும் பாடலை தெலுங்கில் டூயட்டாக போட்டிருக்கிறார்.  எஸ் பி பியின் குரலில் பாடல் இனிமையாக இருக்கும்.



இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாக இருக்கும்.  குறிப்பாக குக்குக்கூ குக்குக்கூ கோகிலா ராவே பாடல்.  இது எஸ் பி பியின் தனிப்பாடல்.  காதல் வழியும் பாடல்.  வழியும் காதலுக்கு மொழி அவசியமில்லை.

முதல் பாடல்...    குக்குக்கூ குக்குக்கூ...


1983 இல் வெளியான சலங்கை ஒலி (சாகர சங்கமம்) படத்தில் "நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்" பாடலின் முடிவில் "காவிரி மங்கை வந்தாளம்மா இந்நடுங் கைவீசி..." என்றொரு டியூனில் முடியும்.  பின்னர் வந்த நாட்களில் பாடலில் அந்த வரிகள் இடம்பெறவில்லை.  அந்த டியூன் இந்தப் படத்தில் "கின்னரசாமி ஒச்சிந்தம்மா வெண்ணெல பைசேஸி '  பாடல் ஆகி முழு பாடல் ஆகியது.





இந்தப் படத்தில் ராதாவை லீட் ரோலில் நடிக்க வைக்க முதலில் இயக்குனர் வம்சி எண்ணி இருந்தாராம்.  பட்ஜெட் ஒத்து வராததால் அந்த காலை அங்கு வந்து சான்ஸ் கேட்டுச் சென்ற பானுப்ரியா நினைவு வந்து அவரை ஹீரோயின் ஆக்கினார்களாம். 




இரண்டு பாடல்களையும் ரசிக்கலாம்.  எஸ் பி பிக்காக, இளையராஜாவுக்காக...

மில மில மெருசின தாரா...  மின்னுல விடின சிதாரா...


37 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் வழங்கியுள்ள
    வெள்ளித் திரையிசை கேட்க வரும் கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. ஆகா..

    தமிழே.. ததிங்கிண தோம்...
    இதில் தெலுங்கு வேறயா!...

    கேட்போம்....
    அப்படியே ஒரு நாளைக்கு
    சிரிசிரி முவ்வலு!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசைக்கு மொழி அவ்வளவு தேவை இல்லை. இளையராஜா இசையை, பாடும் நிலா பாலு குரலை ரசிக்கலாம்.

      நீக்கு
  3. இது நல்லாருக்கே...

    செந்தமிழுடன் -
    களி தெலுங்கும்
    கவின் மலையாளமும்
    எழில் கன்னடமும்...

    சொல்ல நன்றாகத் தான் இருக்கு!..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஶ்ரீராம்... சுண்டல் மஹாத்மியம் வரும் வியாழனில் வருமா?

    இன்று சுந்தரத் தெலுங்கா? கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வணக்கம் நெல்லை..

      சுண்டல் மஹாத்மியம் (கடந்த) ஞாயிறு படங்களுடன் சரி!

      நீக்கு
  5. முதல் பாடல் கேட்டதில்லை... இரண்டு பாடல்களின் இசையும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி டிடி. இரண்டாவது பாடல் தமிழில் கேட்டிருப்பீர்கள்.

      நீக்கு
  6. ஆனந்தக் கும்மி உள்ளம் முழுதும்....

    80 களில் (85 க்குள்) வெளியான பாடல்களுள் ஓராயிரம் முறைக்கு மேல் கேட்ட பாடல்..

    இப்பவும் கேட்டு மகிழும் பாடல்...

    காலையிலேயே எழுதியிருப்பேன்..
    அழைத்ததே வேலை அழைத்ததே..

    அப்புறம்
    பானுவின் கண்கள் பாடலை விட அழகு..

    இத்தனைக்கும்
    ஆனந்தக் கும்மி திரைப்படத்தை பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்.... ஒவ்வொரு நடிகைக்கும் இங்கு ஒவ்வொரு ரசிகர்தாம் இருக்கும் போலிருக்கே..

      நீக்கு
    2. அப்படித்தான் இருக்கும் போல!..

      அடுத்த பதில்
      கில்லர்ஜி சுமலதா.. ந்னு சொல்றார்....

      நீக்கு
    3. ஆனந்தக்கும்மி அண்ணனின் நண்பர் அழைத்ததால் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு அப்போது ஆளானவன் நான்! ஆனால் இளையராஜா அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஹிட் ஆக்கியவர். இன்றும் கேட்கும் "ஓ வெண்ணிலாவே, திண்டாடுதே ரெண்டு கிளியே, தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி" போன்ற பாடல்கள்... நன்றி துரை செல்வராஜூ ஸார். பானு ப்ரியாவின் கண்களுக்கும் சிவித்யாவின் கண்களுக்கும் ரசிகர்கள் உண்டு.

      நீக்கு
  7. சிதாரா பாடலில் சுமனை கண்டவுடன் சுமலதா நினைவு வந்து போனது.

    இரண்டாவது பாடல் ஓ... மைனா தெலு(ங்)கில் முதன்முறையாக இன்று கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.. சும என்று வருவதாலா? இவரைக் கண்டதும் அவர் ஏன் நினைவுக்கு வரவேண்டும்?

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    இரண்டு பாடல்களும் கேட்டேன். இரண்டு பாடலும் நன்றாக இருக்கிறது இனிமையாய்.
    இரண்டாவது பாடலில் எஸ்.பி ஷலைஜா கணவர் இருக்கிறார். விக்கிரமன் படமா? ஒரே பாடலில் பெரிய ஆளாகி விடுகிறார் பானுப்பிரியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா... ஆமாம் ஷைலஜா கணவர்தான்.

      //விக்ரமன் படமா?//

      ஹா... ஹா... ஹா... ரம்யா கிருஷ்ணன் கணவர் வம்சி படம்!

      நீக்கு
  9. இப்பதிவின் தலைப்பினை திரும்பத் திரும்ப வேகமாகப் படித்துப் பார்க்கிறேன். முடியவில்லை. பாடல்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல் சுளுக்கிக் கொண்டதோ.... ஹா.. ஹா... ஹா...

      நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. ஆனந்த கும்மி பாட்டு ரசித்தேன் ..ஒரு கிளி உருகுது தானே ..இனிய இசைக்கு மொழி தடையில்லை மிகவும் அழகான பாட்டு .
    குக்கூ ரசிக்கலை ...அத்தனை கிளிக்குழந்தைகளை இத்துனூண்டு கூண்டில் அடைத்த பிசாசை அடிக்க தோணுது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்... ஆனந்தக்கும்மி பாட்டு என்றே பெயர் வைத்துவிட்டீர்களா!! குக்குக்கூவும் நன்றாய் இருக்கும். குறிப்பாக சரணங்கள்..

      நீக்கு
  11. அங்கே நம்ம ஏரியாவில் உங்க அனுஷை 50 வயசு ஆன்ட்டி ஆக்கிட்டார் குரோ குரு அது தெரியாமலே இங்கே தெலுங்கு கன்னடம்னு பாரதஹவிலாஸ் ரேஞ்சுக்கு பாட்டு ரசிக்கிறீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதோடு வந்தாலும் காதல்... அது
      வயதாகி வந்தாலும் காதல்...!

      நீக்கு
    2. https://i.ytimg.com/vi/8gvH5ATjShc/hqdefault.jpg

      ஆத்தாடி இந்த பேனாவை ஒளிச்சிடுவோம் இல்லேனா கவிதை கொட்டோ கொட்டுனு கொட்டும் போலிருக்கே

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. ஹிஹிஹி... இது கூட சினிமாப பாட்டுதான் ஏஞ்சல்... ஆமாம் நேற்றைய பதிவுக்கு உங்களைக் காணோமே...

      நீக்கு
    5. வந்தேன் படித்தேன் யானையை அதன் பார்வையை பார்த்தேன் ..எதோ சொல்லமுடியாத ஒரு துக்கம் அதன் கண்களில் அப்படியே என்னை பற்றிக்கொள்ள சொல்லாம கொள்ளாம ஓடிட்டேன்

      நீக்கு
  12. உங்கட சில தமிழ்ப் பாட்டுக்கே சிலர் ஓடி ஒளிக்கினம் இதில தெலுங்கை இறக்குமதி செய்து என் நாக்கை சுழிக்கப் பண்ணி என்ன்னை மானபங்கப்ப்டுத்தியாச்சூஊஊஉ இதோ இப்பவே போகிறேன் மீஈஈஈ ரூஊஊஊஊஉ க்கு ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா... பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். ரசிக்கலாம்.

      நீக்கு
  13. தெலுங்கு பாடலும் நன்றுதான் பதிவிற்கு பாராட்டு

    பதிலளிநீக்கு
  14. தேவகோட்டை ஜி, சொன்ன மாதிரி சுமன் சுமலதா சேர்ந்து நடித்த படம்
    ஆராதனை. சுமன் ஆவியாக வருவார்.// இளம் பனித்துளி விழும் நேரம்
    இலைகளில் மகரந்தக் கோலம் //என்ற பாட்டு மிகப் பிரபலம்.
    ஓ மைனா பாட்டும்தான்.

    பதிலளிநீக்கு
  15. இந்தப் படத்தின் கரு தான் கார்த்திக், ரோஜா நடிச்ச ஒரு படத்தின் கருவோ? அதிலும் இப்படித் தானே ரோஜா ஒரே பாடலில் பெரிய பாடகியாவார்? நல்ல பாடல்கள் உள்ள விக்ரமன் படம் அது! பெயர் தான் மறந்து போச்ச்! பானுப்ரியா நல்ல நடிகை. ஆனால் சோபிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  16. சிதாரா என்னும் பெயரிலேயே ஓர் நடிகை இருந்ததாக நினைவு. சில காலங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் கூட அவர் நடிச்சிருக்கார்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!