சனி, 28 செப்டம்பர், 2019

உடைமை இழந்தோர் குடை பெற்றார்...


1)  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேலு. கிரீன் நீடா என்ற பெயரில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்....  (நன்றி ஏகாந்தன் ஸார்)






2) நல்ல செய்திகள் வருவதில்லைவந்தாலும் கண்களில் படுவதில்லைபட்டதில் ஒன்று இங்கே (நன்றி விகடனுக்கே).

அகில இந்திய அளவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில்,  தமிழ்நாடு தேசிய சாதனை படைத்துவருகிறது - அதுவும் சத்தமில்லாமல், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகநமது தமிழ் மீடியாடெலிவிஷன் சேனல்கள்  ஏதாவது சொல்லிற்றாதெரியவில்லை. ’பொதிகை’ குறிப்பிட்டு, ஒரு வாக்கியமாவது சொல்லியிருக்கும்ஆனால் நமது பெருமக்கள் கேட்டிருக்க வாய்ப்பு குறைவு.

பல்வேறு மாநில வேளாண் துறை சாதனைகளுக்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவரும் தேசிய விருதான  ‘”க்ரிஷி கர்மன்” விருதுக்காக (Krishi Karman - வேளாண் உற்பத்தி விருது) - 2017-18- ஆம் ஆண்டு அபரிமித எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி சாதனைக்காக (தேசிய சராசரியைவிட இருமடங்கு), தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த விருது தமிழ்நாடு அரசின் வேளாண் நற்திட்டங்கள்,  துறை செயல்பாடுகளுக்கானது என்றாலும், பின்னணியில் வியர்வை சிந்தி,  கடுமையாக உழைத்தவர்கள், சாதனை விளைச்சலைக் காட்டியவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகள் அன்றோ? விருது உண்மையில் தமிழ் விவசாயிகளுக்கே அர்ப்பணம் என்பதால், பாராட்டலாமே...   (நன்றி ஏகாந்தன் ஸார்)


3)  காஜா புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு குடைகள் கொடுத்த ஆசிரியை வசந்தா சித்திரவேலு.  (நன்றி ராமலக்ஷ்மி)




4)  கேரளப் பெண்ணின் துணிவு.  





5)  கிராமங்களில், விவசாய நிலங்களில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறை, மழைநீர் சேகரிக்க பயன்படுத்தினால், நிலத்தடி நீர் வேகமாக உயரும்' என, பொறியாளர் ஒருவர் கூறுகிறார்.  

இதுகுறித்து, பொறியாளர், மேகவண்ணன் கூறியதாவது:கிராமங்களில், விவசாய நிலங்கள் மத்தியில், தண்ணீருக்காக, பலரும் ஆழ்துளை கிணறுகள் அமைத்திருப்பர். தண்ணீர் வரவில்லை எனக்கூறி, அவற்றை கைவிட்டிருப்பர்.அந்த ஆழ்துளைகளில் பலவும், விவசாய நிலங்கள் மத்தியிலேயே இருப்பதால், அவற்றை, மழைநீர் சேகரிக்க பயன்படுத்தலாம். மழைக்காலத்தில், விவசாய நிலங்களில், 1 அடி முதல், 2 அடி உயரம் வரை, தண்ணீர் தேங்கியிருக்கும்.

அவ்வாறு தேங்கியிருக்கும் மழைநீரை, வயலில் இருந்து, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்கு திருப்பி விட்டால், அப்பகுதியில், நிலத்தடி நீர் வேகமாக உயரும்.சமீபத்திய மழை நீரை, மதுராநெல்லுாரில் உள்ள ஆழ்துளை கிணற்றில், முயற்சி செய்தேன். சுமார், 3 மில்லியன் கனஅடி நீர், கைவிடப்பட்ட ஆழ்துளையில் சேகரிக்கப்பட்டு உள்ளது.....


30 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும், மோடி புகழ் கீசா மேடம் உட்பட.

    இன்று நிறைய நல்ல செய்திகள். பகர்ந்து கொண்டவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகர்ந்து கொண்டவர்களுக்கு -  இது கூட நல்லாதான் இருக்கு.

      காலை வணக்கம் நெல்லை.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்த நாள் இனியதாக அமைய எனது பிரார்த்தனைகளும்.

    பாஸிடிவ் செய்திகள் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள். பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  

      இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகள் மக்கள் பார்ப்பதில்லையே...

    கேரளபெண் செய்தது சரியே ஆனால் இதை படமெடுத்த நடிகர் உண்ணி முகுந்தன் ஏதாவது விபத்து நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு எடுத்து இருப்பானோ...

    இந்த செயலை அந்தப்பெண்ணைவிட அந்த நடிகனே செய்து இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி...  அந்தச் சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது உன்னி அங்கு சென்றிருக்கக் கூடும்!!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...இனிய காலை வணக்கம்.

      புயல் கடந்து போய்விட்டதா?

      நீக்கு
    2. புயல் கடந்து கொண்டிருக்கிறது. இன்றி இடியில்லா மழை.
      இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.

      அனைத்து செய்திகளும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
      குடை கொடுத்த டீச்சர், மரம்வளர்க்கும் நீடா மங்கலத்தார்,

      நல்ல விஷயத்தைப் பகிர்ந்திருக்கும் பொறியாளர் மேகவண்ணன்

      பகிர்ந்து கொண்ட ஏகாந்தன் ஜி அனைவருக்கும் நன்றி.
      கிருஷி கர்மான் விருது தமிழருக்குக் கிடைத்தது உயர்ந்த பெருமை.
      சனிக்கிழமைக்கான நல்ல செய்திகளைத் தரும் எங்கள் ப்ளாகுக்கு மிக மிக நன்றி.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  6. பொதிகை செய்திகளில் உண்மை இருக்கும். ஆனால் கவர்ச்சி இருக்காது. இப்போது உண்மை யாருக்கும் வேண்டாமே.

    நல்ல செய்திகளை ஆர்வத்தோடு வெளியிட்டு வருவதை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் மிக நல்ல செய்திகள்.
    கீரின் நீடா மிக அருமையான செய்தி. அவருக்கு வாழ்த்துக்கள்
    உடைமை இழந்தவர்களுக்கு மழை காலத்தில் குடை கொடுத்தது மகிழ்ச்சி, அந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    தைரியமான பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.
    நீர் வரத்தை அதிகபடுத்த ஆழ்துளை கிணற்றில் ஏற்பாடு செய்தவர் வாழ்க!

    பதிலளிநீக்கு
  8. இன்று நிறைய நல்ல செய்திகள்...

    ஆக்கமும் ஊக்கமும் கொண்டவர்கள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. ஆனால் நடுச்சாலையில் போக்குவரத்து விதியைப் பேசிய பெண்ணுக்கு உண்மையிலேயே நல்ல விதியாக இருந்திருக்கக் கூடும்...

    இல்லேன்னா...
    காத்தடிச்சுக் கீழே விழுந்தா.... ந்னு கதை வேறமாதிரிப் போயிருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ கேரளா டிரைவராயிருக்கப்போக சரி...   இதுவே நம்மூர் ட்ரைவராயிருந்திருந்தா...!!

      நீக்கு
    2. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் எதிர்பாராமல் நிலைதடுமாறி கீழே விழிந்தால் பின்னால் வரும் வாகனங்கள் மேலேறி நசுக்குவதே பொழப்பாப் போச்சு - தமிழகத்தில்!..

      சிங்காரச் சென்னையில் தண்ணீர் லாரிகளின் சக்கரத்தில் சிக்கி அழிந்தோர் எத்தனை பேர்?...

      லைசன்ஸ் வாங்குறவன் ஒருத்தன் ... ஓட்டி உயிர் எடுப்பவன் ஒருவனாக இருப்பானோ?...

      நாராயண.. நாராயண...

      நீக்கு
    3. //லைசன்ஸ் வாங்குறவன் ஒருத்தன் ... ஓட்டி உயிர் எடுப்பவன் ஒருவனாக இருப்பானோ?...//

      நீட்டான வேலை!

      நீக்கு
  10. உடமை இழந்தவர்களுக்கு குடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரி போல்தான் இருக்கும் இருந்தாலும் தன்னால் முடிந்ததை செய்தபெண்மணி பாராட்டுக்குரியவர்

    பதிலளிநீக்கு
  11. இங்கே பொதிகையோ மக்கள் தொலைக்காட்சியோ வருவதில்லை. தூர்தர்ஷன் பாரதி வந்து கொண்டிருந்தது. அதுவும் வரதாத் தெரியலை. பட்டியலில் காணோம். அனைத்துமே நல்ல செய்திகள். ஆழ்துளைக் கிணறு விஷயம் ஏற்கெனவே வந்துடுச்சுனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ஊர் ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு குடை கொடுத்ததை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தமிழக விவசாயிகளை வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல செய்திகள்.

    ஆசிரியர் வசந்தா சித்திரவேலு அவர்களைப் பற்றிய இந்தச் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டவர் பதிவர் அமைதி அப்பா. முன்னர் ஆசிரியையின் பேட்டி பொதிகைத் தொலைக்காட்சியில் வந்த போதும் பகிர்ந்திருந்தார். ஆசிரியையைப் பற்றிய மேலதிகத் தகவல்களைக் கேட்டிருக்கிறேன். அவர் தரும் போது இங்கே பகிர்ந்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தமிழக வருகை காரணமாக பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. Schedule செய்து வைத்த பதிவுகள் மட்டும் வெளியானது. தகவல் பகிர்ந்ததோடு சரி. தில்லி திரும்பிய பின்னர் தான் மெதுவாக எல்லோருடைய விடுபட்ட பதிவுகள் பக்கமும் வந்து கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவுகளும் இன்று படித்து விடுவேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!