சனி, 5 அக்டோபர், 2019

மூன்று இட்லி 10 ரூபாய், ஒரு தோசை 15 ரூபாய்



1)  30 ஆண்டுகளாக, குளம் துார் வாரப்படாததால், 3 அடி வரை மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை இருந்தது. அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, 19 லட்சம் ரூபாய் வரை, நிதி திரட்டினர். தொடர்ந்து கிராம மக்கள், இளைஞர்கள் இணைந்து, குளத்தின் கரைகளை பலப்படுத்தியும், 8 அடி வரை ஆழப்படுத்தியும் துார் வாரினர்.

தஞ்சை அருகே, இளைஞர்கள் முயற்சியால், துார் வாரப்பட்ட குளத்தில், தண்ணீர் நிரம்பியதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





2)  சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சாலையில் கிடந்த 52 பவுன் நகைகளை மீட்டு போலீஸார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.





3) ...... இதனால் காலை 4 மணிக்கே இவர்கள் எழுந்து, இங்குள்ள மற்ற குழந்தைகளின் உதவியுடன் வெஜிடபிள் சூப், முடக்கத்தான் சூப், வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை சூப், மணத்தக்காளி கீரை சூப், கானப்பயிர் சூப் என உடலுக்கு ஊக்கம் அளிக்கும் பல்வேறு சூப் வகைகளை விடுதி முன்பு விற்கின்றனர்.   இதன் அருகிலேயே ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இணைந்து டிபன் கடை தொடங்கி உள்ளனர். இங்கு மூன்று இட்லி 10 ரூபாய், ஒரு தோசை 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


44 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அன்ட் மற்றும் எல்லோருக்கும்...

    ஒரு ரூபாய் இட்லி செய்தி கூட சமீபத்தில் வந்ததே....அதுவும் ஒரு மூதாட்டி பற்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ இன்று இந்த பூஸாரை சரிக்கட்டப் போய் இங்கு துரை அண்ணாவுக்கு முன்ன வர முடியலை!!!!!! ஹிஹிஹிஹி இல்லைனா பூஸார் என்னை விரட்டு விரட்டுன்னு விரட்டுவாங்க....ஏன் என் பதிலைப் பார்க்கலைனு...ஹா ஹா ஹா ஹா..

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா.  

      அது வேற...   இது வேற...

      நீக்கு
  2. அனைத்தும் பாராட்டிற்கு உரியவை...

    தஞ்சி பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் நல்ல உழைப்பாளிகள்....

    ஏரியை மீட்டெடுத்திருக்கின்றனர்....
    இயற்கை அன்னை அரவணைத்து நிற்பாள்...

    பதிலளிநீக்கு
  3. ஏரி பற்றிய செய்தியைப் படித்ததும், கடல் போன்று பெரிதாக காட்சியளித்த பீர்க்கங்கரணை ஏரியில் பொக்கலைன் வைத்து மண் நிரப்பி வாழும் இடமாக இப்போது மாற்றிக்கொண்டிருப்பதை சில நாட்கள் முன்பு பார்த்த நினைவு வந்தது. 87ல், தண்ணீர் குறையும் காலங்களில் அங்கு ஜெபக் கூட்டங்கள் நடத்துவார்கள். சிலர் ஓரமாக குடிசைகள் கட்ட ஆரம்பித்திருந்தனர். அரசே முனைந்து ஏரியை அழிப்பதைக் காண மனது வருந்தியது. மக்களும் அதைக் கண்டுகொள்ளாமல் பின்னால் தண்ணீருக்கு லபோ திபோ என்று அடித்துக்கொள்ளப் போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப நிலையில் இருக்கும் ஆபத்துகளை நாம் யாருமே முதலில் லட்சியம் செய்வதில்லை - நோய் உட்பட.  நன்றாய் பெரிதானதும் லபோதிபோ என்று அடித்துக் கொள்கிறோம்.  

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கு....கடைசி வரி ஆமாம் அப்படித்தான் அடிச்சுக்கப் போறாங்க...இதே நிலைதான் என் கிராமத்திற்கும் இன்னும் சில வருடங்களில் வரப் போகுது ஊரைச் சுத்தி தண்ணி தண்ணீர் கஷ்டமே இருந்ததில்லை. நெல் அரிசி எல்லாம் ஊரிலேயே கிடைத்துவிடும். வெளிக்கடையில் வாங்கியதே இல்லை....ம்ம்ம்

      இங்கு சொல்லப்படும் கிராமத்து மக்கள் போல இருந்தால் நல்லாருக்கும்னு தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது

      சரி சரி நான் என் கதைய இங்கு மீண்டும் கொண்டு வரவில்லை....

      கீதா

      நீக்கு
  4. தூர்வாரப்பட்ட குளம் சிறந்தசேவை நலம்பெறப்போவது அம்மக்களே பார்பதற்கு மகிழ்சியாக இருக்கிறது.
    நகையை ஒப்படைத்த தொழிலாளர்கள் பாராட்டுக்கள்.
    சாப்பாட்டுக் கடை தன்னலம் இல்லா சேவை வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.   பாராட்டப் படவேண்டியவர்கள்.  நன்றி சகோதரி.

      நீக்கு
  5. ஊரணியை தூர் வாரியது பாராட்டுக்குறியதே...

    கல்லல், தேவகோட்டை அருகிலுள்ள ஊர்.

    பதிலளிநீக்கு
  6. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சாலையில் கிடந்த 52 பவுன் நகைகளை மீட்டு போலீஸார் மூலம்உரியவர்களிடம் ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.//

    இன்றைய சந்தை விலையில் சுமார் இருபது இலட்சம் மதிப்பிருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜோஸப் ஸார்.  நிச்சயம் பெரிய விஷயம் அது.  

      விடயம் என்று சொல்லவேண்டும்.  ஏனென்றால் அது தேவகோட்டையார் ஊராம்!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்!!

      சரி!! அதெல்லாம் ஓகே "கில்லர்"??????????? ஜி ஓடி வாங்க இதுக்கு இன்னா பதில்?!!!! ஹையோ அவர் கோடரியை எடுத்துட்டு ஓடி வரதுக்குள்ள மீ ரன்னிங்க்...

      கீதா

      நீக்கு
  7. அனைத்து செய்திகளும் பாராட்ட தகுந்தவை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இணையம் இப்பொழுதுதான் கிடைத்தது.

    குளத்தைத் தூர் எடுத்து சீர் செய்த இளைஞர்கள் என்றும் சிறப்புடன் வாழ்க.

    பொன்னைக் கண்டெடுத்து ஒப்படைத்த நல்லவர்களுக்கு என்றும் நன்மை கிடைக்கட்டும்.

    அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி. 10.30 ஆகிவிட்டது.இறைவன் கருணையில்
    மீண்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    நீர் நிலைகளை தூர் வாரும் நல்லதொரு பணிகள் தற்போது தங்கள் பதிவுகளின் மூலமாக அறிந்து வருகிறேன்.அவ்விதத்தில், தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களும் ஊர் மக்களுமாக குளத்தில் தூர்வாரி கடல் போல் விரிவுபடுத்தி, மரக்கன்றுகள் நட்டு குளத்தை பசுமை நிறைந்ததாக செய்திருப்பது சந்தோஷமாக உள்ளது.

    கல்லல் அருகே தங்கத்தை தவற விட்டவர்களிடம் காவல்த்துறை மூலமாக, நேர்மையாக ஒப்படைத்த மூன்று தொழிளார்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது போல் நேர்மையான உள்ளங்கள் உடையவர்களால்தான் இன்னமும் மழை பெய்து கொண்டு உள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    தங்கி, படித்து வரும் விடுதியருகேயே உணவுகளை எளிய முறையில் தயாரித்து குறைந்த விலையில் விற்று அதன் மூலம் படிப்புச் செலவை பேணி வரும் அந்த விடுதியில் தங்கியிருப்போருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இன்று மூன்றுமே நல்ல முத்தான செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. தஞ்சை அருகே கிராம இளைஞர்கள் மக்களால் தூர்வாரப்பட்டு இப்போது நிறைந்திருக்கும் குளம் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் தேவைகளைத் தாங்களே கஷ்டப்பட்டேனும் நிறைவேற்றிக் கொள்வது அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தினம் ஒரு பதிவு என்ற கொள்கையிலிருந்து சற்றே தளர்த்திக் கொள்ளக் கூடாதா?.. வாரத்தில் 5 நாட்களுக்கு பதிவுகள் போட்டு, பதிவு அம்சங்களை சற்றே விரிவாக்கி இன்னும் புதுப்புது அம்சங்களோடு சுவாரஸ்யமாக்கலாமோ?..

    முக்கியமாக இரண்டு நாட்களுக்கு ஓய்வு என்பது மற்ற நாட்களுக்கான பதிவமைப்பில் மேலும் மேலூம் மாற்றங்களை ஏற்படுத்த உதவும்.

    இந்த நாளுக்கு இந்தப் பதிவு என்னும் வழக்கத்தை புரட்டிப் போட்ட மாதிரி மாறுதலுக்கு உள்ளாக்கி அதையும் இதையும் எதையும் எதனுடனும் கலந்து (தொடர்கதை, புதுக்கவிதை, சிறுகதை, குட்டி விமரிசனக் கட்டுரைகள், பத்திரிகை, எழுத்தாளர் பற்றி, மாமூலான சில் அயிட்டங்கள் --) என்று கதம்பமாக்கி... இப்படி கொஞ்ச நாள் போகட்டுமே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... அந்த அந்த நாட்களுக்கு எதிர்பார்ப்போடத்தான் நான் வருகிறேன்.

      வெள்ளி பாடல்கள் எனும்போது கொஞ்சம் ஆர்வம் குறையும். சனிக்கிழமை நல்ல செய்திகள் என்பது ஒரு சமூக்க்கடமை என்பதுபோல வெளியிடறாங்க. ஞாயிறு பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. எபில படித்ததை வைத்து சில சமயம் கிழமையை நினைவில் வைத்துக்கொள்வேன்.

      சனிக் கிழமையை இன்டரெஸ்ட் ஆக்க விமர்சனம் பகுதி, புத்தக விமர்சனம்னு கொண்டுவந்தாங்க. வ்வள்ளி வாசகர் சொல்லும் பாடலையும் போடறாங,க. இதுல தொடர்ந்து யாரேனும் கலந்துகொண்டிருக்கலாம்.

      எபி இன்டெரெஸ்டிங்கா இந்த ஃபார்மெட்டுலயே இருக்கட்டும் என்பது என் எண்ணம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் தன்னுடன் தொடர்பு கொண்ட அத்தனை பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் போடுகிறார்.
      சொந்த பிளாக் பணிகள் தனியாக வேறு.
      அதிகச் சுமையால் ஆழ்ந்து செயல்பட முடியாத நிலை.
      அதைத் தாண்டி தொடர்ந்து இப்படி இழுத்துப் போட்டுக் கொள்வது அதற்கு அதற்கு மேல் என்று ஆசை காட்டும். முடிவில்லாத சுழல் வட்டம் இது.
      வாரத்திற்கு 4, 5 பதிவுகள், நறுக்குத் தெரித்தாற் போல என்றால் ஸ்ரீராமின் வளர்ச்சிக்கு அது இதை விட இரண்டு மடங்கிற்ககு
      அடிப்படை திறமையை ஊக்குவிக்கும். இந்த இயந்திர கதி அதில் இல்லை.
      எங்கள் பிளாக்க்கின் ஒவ்வொரு பதிவும் இன்னும் ஆழ உழுது விளைச்சல் காண வேண்டி தான் இந்த சஜஷன்.
      அரட்டைக் கச்சேரியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு எபி தனக்கு கிடைத்திருக்கிற வாசகர்களை பிரமாதமாக உபயோகித்துக் கொள்ள வேண்டிய காலத்தின் அழைப்பாக இதை நான் கருதுகிறேன்.

      நீக்கு
    3. ஜீவி சார்... நீங்கள் சொல்வது உண்மை. ஶ்ரீராமுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்குதுன்னு யோசிப்பேன். பல நேரங்களில் வியாழன் இடுகை எப்படித்தான் எழுதறாரோன்னு நினைப்பேன். ஆனா பெரும்பாலும், சனி, ஞாயிறு, புதன் ஶ்ரீராமின் பங்களிப்பு மிகவும் குறைவுன்னு தோணுது. திங்கள், செவ்வாய் -செலெக்‌ஷன், தட்டச்சு, ஷெடியூல் என்பதால் ஓடுகிறதுன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. அலுவலக வேலைகளுக்கு இடையே தான் இத்தனையும் என்பது பெரிய விஷயம். எவ்வளவு உழைப்பு.. எவ்வளவு மனித மணித் துளிகள்..

      அன்றைய பதிவு அன்றையோடு போச்சு என்கிற மாதிரி இல்லாத நிலை வர வேண்டும்.

      அதற்கென்ன செய்யலாம்?.. யோசியுங்கள். ஆலோசனை சொல்லுங்கள்..

      நீக்கு
  12. நகைகளை உரியவரிடத்தில் காவல்துறை மூலம் ஒப்படைத்தவர்களுக்குப் பாராட்டுகள்.

    தேனி சமதர்மபுர காப்பகக் குழந்தைகள் மற்றும் அங்குஇருந்து படித்து வளர்ந்தவர்கள் வாவ் போட வைத்து மனதைத் தொட்டுவிட்டார்கள். மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள்!

    அனைத்துச் செய்திகளும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  13. குளங்களைத் தூர்வாறும் புண்ணியவான்கள் அதிகரிக்கட்டும், நாட்டில். இதுதான் அதிஅவசியம்.

    பதிலளிநீக்கு
  14. தேனீர்க்கடையும், சூப் முதலிய ஆரோக்கிய பானக்களும் தயாரித்துக் கொடுக்கும் இந்த
    குழந்தைகளும் காப்பக மாணவிகளும் நல்ல நலம் பெற வேண்டும்.

    இன்னும் தங்களை வளர்த்த இல்லத்துடன் தொடர்பு வைத்திருக்கும்
    இந்த அன்பு குழுவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் இந்திய நேரப்படி மாலை வணக்கம். இங்குள்ளவர்களுக்குக் காலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். சனி, ஞாயிறு இரட்டையர் வர மாட்டாங்க என்பதால் அதிகம் கருத்துகள் பதிவாகவில்லை போல! :)

    பதிலளிநீக்கு
  16. ஆங்காங்கே இப்படி ஏரி, குளங்களைத் தூர்வாரும் செய்திகள் கிடைத்துவருவதற்கு மனதில் மகிழ்ச்சி பெருகி வருகிறது. இரண்டு நாட்கள் முன்னர் கூட ஸ்ரீபெரும்புதூர்(?) கோயில் குளம்(?) தூர்வாரப்பட்ட் செய்தியைக் காண நேர்ந்தது. இதே போல் காவிரி ஆறும், அதன் துணை ஆறுகளும் முக்கியமாய் அரிசிலாறு தூர்வாரப்பட வேண்டும். கிராம மக்களுக்கு மனதில் அதற்கான முனைப்பு ஏற்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூர் வாருவது என்றால் இப்போ உள்ள அரசியல்வாதிகளுக்கு, மணல் கொள்ளை அடிப்பது என்றுதான் அர்த்தப்படுகிறது போலும்.

      நீக்கு
  17. அதே போல் உணவு குறைந்த விலையில் கொடுப்பவர்கள் பற்றியும் அதிகமாகச் செய்திகள் வருகின்றன. சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கண்டெடுத்தும் அதைக் காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவர்களுக்குப் போய்ச் சேரும்படி செய்த தொழிலாளர்கள் விரைவில் நல்ல நிலைமைக்கு வந்து சிறப்பாக வாழப்பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  18. பாராட்டுக்குரிய செய்திகள். போற்றத்தக்கவர்கள்.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. அனைத்து செய்திகளும் மிக அருமை.
    நல்ல உள்ளங்களின் உழைப்பால் ஏரி கடல் போல் ஆகி விட்டதை படிக்க ஆன்ந்தம்.
    இது போல் நிறைய ஏரிகளை மக்கள் மீட்டு எடுக்க வேண்டும்.

    நகைகளை எடுத்து கொடுத்த நல்ல மனிதர்களை பாரட்ட வேண்டும், பிறர் பொருளுக்கு ஆசை படாத உன்னத குணம் வாழ்க!

    காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டே கடை நடத்துவது அவர்களூக்கு பொது மக்கள் ஆதரவு தருவது நல்ல விஷ்யம். படிப்பையும் கவனித்து படித்து வாழ்வில் உயர வேண்டும் வாழ்க வளமுடன்!

    நல்ல செய்திகளை தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  22. காப்பகக் குழந்தைகள் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத் தெரிந்தவ்ர்கள்

    பதிலளிநீக்கு
  23. சிறப்பானவர்கள் பற்றிய சிறப்புப் பகிர்வு. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!