புதன், 30 அக்டோபர், 2019

புதன் 191030 : முழு சுதந்திரம் என்பது சாத்தியமா ?



ஏகாந்தன் : 

“தூங்கும்போது ஆளை அமுக்கும் அமுக்குவான் பேய் பற்றி தெரியுமா?”




# ஆள் அமுக்குவான் பற்றிக் கேள்விப் பட்டதுண்டு.

& வயிறு நிறைய சாப்பிட்டு, உடனே படுத்துத் தூங்குபவர்களுக்கு அந்த மாதிரி உணர்வு வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 
பெரும்பாலும் சிறு வயதில் நான் இரவு ஏழுமணிக்கே கண் அயர்ந்து சாமியாட ஆரம்பித்துவிடுவேன். என்னுடைய அம்மா என்னை சாப்பிட வைப்பதற்காக 'பொத் பிசாசு ' என்று ஒரு காரக்டரை உண்டாக்கி, என்னை பயமுறுத்தி சாப்பிட வைத்ததுண்டு. 
நள்ளிரவில் வீட்டுக்கு விசிட் செய்கின்ற 'பொத் பிசாசு' என்ன செய்யும் என்றால், பெரியவர்களை , அவர்கள் அதிகம் வெயிட் இருப்பதால், ஒன்றும் செய்யாதாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையையும் தன் இரண்டு கைகளாலும் சற்றுப் பிடித்து உயர்த்துமாம். வயிறு நிறைய சாப்பிட்ட குழந்தை வெயிட் ஜாஸ்தியாக இருப்பதால், அவற்றைத் தூக்க முடியாமல், பொத் என்று கீழே போட்டுவிடுமாம். சாப்பிடாத குழந்தைகள் வெயிட் இல்லாமல் லைட் ஆக இருப்பதால், தூக்கிக்கொண்டு பறந்துவிடுமாம். சிறு வயதில் பயத்திலேயே உறைந்து  இரவு உணவு சாப்பிட்டிருக்கிறேன்! 

சங்கமித்திரை அதிரா: 

1. பேய்க்கு ஏன் வெள்ளை ஆடைதான் பிடிக்கும்?

# இருட்டில் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதால் இருக்கும்.

& பேயோசான்ல அதுதான் கிடைக்குதாம். பாரதிராஜா பாடல் காட்சிகளில் நடிக்கும் உப நடிகைகள்  (தனம் தன்னனம் தந்தன தான என்று பாடிக்கொண்டு நடமிடுபவர்கள் ) உபயோகித்த வெள்ளை ஆடைகள் சல்லிசான விலைக்குக் கிடைப்பதால், அவற்றை மொத்த விற்பனைக்காக வாங்கிச் சென்றுவிடுவாராம், பேயோசான் கடைக்காரர்.


ஏஞ்சல் :

நானும் பேயார் பற்றியே ஆரம்பிக்கிறேன் :) ஹாலோவீன் வேற வருது :) அதனால் அவங்களுக்கு டெடிகேட் செய்யணும் :)
1, பேயார் இரவில்தான் உலாவுவார் என்று சொல்லப்படுது ஆனா எங்கள் பிளாக் பேயார் மட்டும் ஆல் ரவுண்டரா ?? இரவு பகல் எந்நேரமும் விசிட்டிங் வராரே எப்பிடி ?


# பகலிலும் உலா வரமாட்டார் அழைத்தால் தவிர.

& ஒருவேளை அவர் பகல் நேரங்களில், இருட்டு அறையில் உட்கார்ந்து மொபைல் மூலமாக கமெண்ட் எழுதுகிறாரோ! 


2, பேயார் மைண்ட் ரீடிங்க்லாம் செய்வாரா ?


# ரீடிங் அல்ல இன்'வேடிங்' செய்யலாம்.

& மைன்ட் ரீடிங், ரைட்டிங், ஸ்பீகிங் எல்லாமே செய்வாராம். என்னுடைய மைண்டுல நேற்றிரவு பிரத்யட்சமாகி சொன்னார். 

3,பேய்கள் எப்போ தூங்குவாங்க ? தூக்கமே வரலைன்னா ரொம்ப கஷ்டமா இருக்குமே ?அதோட அவங்க என்ன சாப்பிடுவாங்க ? பசியோடயே இருப்பாங்களா இல்லைனா பசி வரவே வராதா ?


# உடல் சார்ந்த உணர்வுகளான பசி உறக்கம் உடலுதிர்த்த பின் இரா.

& பேய்கள் தூங்குவது நாம் விழித்திருக்கும் நேரங்களில். பஞ்ச பூதங்களான நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு எல்லாவற்றிலும் உள்ள நியூட்ரான் மட்டும் சாப்பிடுவார்களாம்! ஒரு பேய்க்கு, ஒருநாள் முழுவதற்கும் ஒரே ஒரு நியூட்ரான் போதுமாம்!


4, ஆற்றலுக்கு /சக்திக்கு அழிவில்லை என்பது உண்மையா ? 


# ஆற்றலுக்கு மட்டும் அல்ல பொருளுக்கும்தான் (matter) அழிவில்லை,  மாற்றம் மட்டுமே.

& உண்மைதான். Energy can neither be created nor destroyed; it can only be converted from one form to another. என்று படித்திருக்கிறோம். ஆனால், மாற்றம் அடையும் ஆற்றல் முழுவதுமாக மாற்றம் அடைவதில்லை. உதாரணமாக, In the internal combustion engine, heat energy is converted into mechanical energy.  A major portion of the heat energy is carried away by the exhaust gas. 

என்னுடைய இளைய அண்ணன் முதன்முதலாக வேலை பார்த்த ஊரில் அவர் தங்கியிருந்த அறைக்குக் கீழே ஒரு ஹோட்டல்காரர், அண்ணனைப் போன்ற பிரம்மச்சாரிகளை நம்பி ஹோட்டல் வைத்திருந்தார். அண்ணனும் அவருடைய நண்பர்களும், ஹோட்டல்காரர் அரைக்கும் உளுந்து மாவை  'Law of conservation of mass  தியரி'யை வைத்தே கிண்டல் செய்வார்கள்.  

உளுந்து மாவை ...... 
அரிசிமாவுடன் கலந்து ஆவியில் வைத்தால் இட்லி.
இட்லி மிகுந்தால், இட்லி உப்புமா. 
உளுந்து மாவைப் பிசைந்து எண்ணையில் பொரித்தால் வடை.
வடை மீதமானால் வடைகறி,
மிகுந்துபோன வடைகளை அரைத்து மேலும் பொருட்கள் சேர்த்து போண்டா. 
போண்டா மிகுந்து போனால் மறுநாள் சட்டினி. 
அந்தச் சட்டினியும் மிகுந்துபோனால் என்ன செய்வீர்கள் அய்யா என்று கேட்டு அவரைப் படுத்துவார்களாம்! 

5, சுதந்திரம் முழு சுதந்திரம் என்பது சாத்தியமா ?


 # கட்டுப் பாடற்ற சுதந்திரம் சாத்தியமானாலும்கூட விரும்பத் தக்கதல்ல.

& சென்ற வாரம் அ பி கா வில், (அதாகப்பட்டது அமேசான் பிரதம காணொளி ) ஆடை (இல்லா அ பால்) படம் பார்த்தேன். அதில் கூட அவர்கள் சொல்லியிருக்கும் தீம், 'கட்டுப்பாடற்ற முழு சுதந்திரம்' ஆபத்தானது என்பதுதான். 

6, Tamanna’ (Try And Measure Aptitude And Natural Abilities). தமன்னா டெஸ்ட் வந்த மாதிரி அனுஷ்க்கா /பாவனா எல்லாம் வருமா ?
இது காமெடிக்குதான் கேட்டேன் :))))))))))))))))))


# த.. அ.. பா.. பற்றிய பதிவுகளுக்கு சிலகாலம் தடை விதிக்கப் பட்டுள்ளதால் நோ கமெண்ட்.

& புதுசா இருக்கே! சரி, நான் ஏதாவது முயற்சி செய்கிறேன்.

ANUSKA = (Test of) All New Useful Skill and Knowledge Acquired. 

BAVANA = (Test for) Bringing-out All Versatile And Natural Abilities. 


வாட்ஸ் அப் :


நெல்லைத்தமிழன்: 

1. ஒரு இடத்தில் விளையும் இயற்கை உணவு இன்னொரு இடத்தில் (landscape) வாழ்பவர்களுக்கு நல்லது என்று சொல்ல முடியும்? உதாரணமா நாம எள் எண்ணெய், தே. எண்ணெய், க எண்ணெய், நெய் இவற்றில் புழங்கினவங்க. நமக்கு பாமாயில், ஆலிவ் ஆயில், சூர்யகாந்தி ஆயில் போன்றவை ஹெல்த்துக்கு நல்லதாக இருக்க முடியுமா? 

# பழக்கமான உணவு ஒத்துப்போகும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இதர உணவு எதுவானாலும் கெடுதல் என்பது சரியாக இராது என்று தோன்றுகிறது.

& நெல்லைத் 'தமிழரா'ன நீங்க, தமிழே தெரியாத தமன்னாவை ரசிப்பதில்லையா! அதுபோல, ஒத்துப்போவது என்பது பிராந்தியத்தைப் பொறுத்த விஷயம் இல்லை என்றுதான் தோன்றுகிறது! 

2. அந்த சமயத்துல கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம் என நீங்கள் வருத்தப்படும் நிகழ்வு என்ன?

# சட்டென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை. எனினும் "யோசனை இன்றி அவசரக் குடுக்கை" மாதிரி நான் பேசுவதாக குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறேன்.

& சிறிய வயதில், பக்கத்து வீட்டுக் கல்யாண பந்தி. 
இலையில் பட்சணங்கள், கூட்டு, பொரியல், பச்சடி வகையறாக்கள் அணி வகுத்திருந்தன. சாதம், பருப்பு, நெய் பரிமாறப்பட்டவுடன், இனிமேல் எது வந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, எல்லாவற்றுக்கும் நோ சொல்லி, பருப்பு சாதம் சாப்பிட்டவுடன் பட்சணங்களை ஒன்றொன்றாக இரசித்துச் சாப்பிட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் கிடுகிடுவென வரிசையாக எல்லோர் இலையிலும் எதையோ போட்டுக்கொண்டு வந்தார். தீர்மானமாக வேண்டாம் என்று மறுத்து அனுப்பிவிட்டுப் பார்த்தால் - அடாடா மீண்டும் வடை + ஜாங்கிரி வேண்டுவோர்க்குப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார். ஆஹா ! வடை போச்சே! 
ஹூம். அந்த சமயத்தில் கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம்! 


3. எப்போதும் கதைகளில் சுப முடிவுதான் எதிர்பார்க்கிறவங்க வயதானதால் சோக முடிவுகளை கதையில்கூட விரும்பாததுதான் காரணமா?

# பொழுது போக்காக மட்டுமே படிக்கப் படுவது  "சுப முடிவு" ரகமாகத்தான் இருக்கும். அதைத் தாண்டிய நட்சத்திரக் கதைகளும் கூட நிறைய "சுப முடிவோடு" இருந்தால்தான் பிடிக்கிறது. 

& கதைகள் படிக்கும்போது ஏதோ ஒரு காரெக்டரை நாமாகவோ அல்லது நமக்குப் பிடித்த / தெரிந்த ஒருவராகவோ எண்ணிப் படித்தால், சுப முடிவு, சந்தோஷ முடிவு என்று எதிர்பார்க்கத் தோன்றும். அது இல்லாமல் நாம் வேடிக்கைப் பார்க்கின்ற third party என்ற நிலையில் இருந்து படித்தால், முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். 

என்னுடைய மன்னி ஒருவர் ஒவ்வொரு வாரமும் தொடர்கதை படிக்கும்போது, கடைசி பாராவை முதலில் படித்துவிட்டு, பிறகுதான் கதையைப் படிப்பார்கள். கதைப் புத்தகம் என்றாலும் கதை முடிவைப் படித்துவிட்டுதான் கதையைப் படிப்பார்கள். சோகமான முடிவு என்று தெரிந்தால், அந்தக் கதையைப் படிக்க மாட்டார். 

4. Tamanna பற்றி எ.பி. ஆசிரியர்களின் அபிப்ராயம் என்ன?

# சினிமாவில் அழகி. வேறு என்ன ?

& தமன்னா முகத்தில் ஒரு அப்பாவித்தனம் + குறும்புத்தனம் தெரியும். மற்ற நடிகைகள் முகத்தில் இந்தக் கலவையைப் பார்க்க முடியாது. 

பழைய இடுகைகளில் ரெகுலராக வந்தவர்கள் ஏன் இப்போது வந்து கருத்து தெரிவிக்கிறதில்லை? பிளாக்குக்கே வருவதில்லையா இல்லை பிளாக்குகளுக்கு நேரம் செலவழிப்பதில்லையா?  (ரா.ப, , மூங்கில்காற்று, ம.சா, ர.நா, சூ.சி, மா.ஸ்ரீ என்று லிஸ்ட் நீளுகிறது)

# இது பற்றி நாம் என்ன சொல்ல முடியும் ? நேரமின்மை, அக்கறையின்மை காரணமாக யாரும் விலகி இருக்க உரிமை உண்டு. அவர்களை இறுத்திக்கொள்வது நம் சாமர்த்தியம்.

& நானும் அடிக்கடி நினைத்துப் பார்க்கும்  (விடை கிடைக்காத) கேள்வி இது. எல்லோருக்கும் ஒரே காரணம் இருக்காது. வெவ்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். 

 //ரித்விக் ராஜா அடுத்த வருடம் 'காசுக் கச்சேரிக்கு'ச் சென்று விடுவார் என்று நம்பலாம். T M கிருஷ்ணாவின் சிஷ்யர். இந்தமுறை கேட்டதில் ராமகிருஷ்ண மூர்த்தி நன்றாகப் பாடுவதாக மாமா சொன்னார். ஸ்வர்ண ரேதஸ் இன்னும் பிற்பகல் கச்சேரிதான் செய்து கொண்டிருக்கிறார்.// 2013ல் நீங்கள் எழுதியவர்களின் இன்றைய நிலை என்ன? (ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் உட்பட)

# இப்போது பலரும் மிக நன்றாகப் பாடுகிறார்கள் . ஶ்ரீரஞ்சனி உட்பட.


 "இப்போதெல்லாம் பார்க்கவே பொறுமை தேவைப்படுகிறது" - இது மாதிரியான விமர்சனத்தை எந்த எந்த சங்கீதக் காரர்களுக்கு (வாய்ப்பாட்டு) நீங்கள் வைப்பீர்கள்?

# "பார்க்கவே பொறுமை" என இசை நிகழ்ச்சியை விமரிசிப்பது சரியல்ல. கேட்க நன்றாக இருப்பது தான் முதன்மையானது. பலர் நன்றாகப் பாடுவது போல சிலர் மோசமாகப் பாடுவதும் இருக்கத்தான் செய்யும்.

எதுனால பாடகர்கள் மேடையில் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் கான்ஸ்டிபேஷன் வந்தவர்களைப்போல் முகத்தை வைத்துக்கொண்டு பாடுவதும், ஈ அல்லது காக்காய் விரட்டுவதுபோல் அபிநயம் பிடிப்பதும் - பாடும்போது, நிகழ்கிறது? இது பெண்களிடம் ஏன் கிடையாது?

# முன் கேள்விக்கான விடையைப் பாருங்கள். பெண்கள் தாங்கள் நல்லமுறையில் காணப்பட வேண்டும் எனும் சிரத்தை மிக்கவர்கள். ஆண் பாடகர்களிலும் அப்படி நினைப்பவர்கள் உண்டு .  மற்றபடி அங்க சேட்டைகள் ஈடுபாட்டின் பிரதிபலிப்பாக அமையக் கூடும். சங்கீத சாஸ்திரம் அதை ஏற்கவில்லை என்பது உண்மை. இசையின் தரம், கற்பனை வளம்தான் முக்கியம். இதர விஷயங்களைப் புறம் தள்ளி இசையை ரசிக்கக் கற்க வேண்டும்.

பசங்க வீட்டுக் காசை சுவாதீனமா செலவு செய்வதுபோல, அவங்க காசை செலவு பண்ணுவாங்களா?
அப்பா, பையனின் காசை எடுத்து நினைத்தபடி செலவு பண்ண முடியுமா? அல்லது பையனின் காசை வாங்க அவர்கள் கூச்சப்படுவார்களா?

# பையனின் சம்பாத்தியம் இருப்பிடம்,  பிள்ளைகள் கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற பல செலவுகளுக்கானது.  அதை எடுத்து "நினைத்தபடி" செலவு செய்ய பெற்றோருக்கு உரிமை இல்லைதான். பொறுப்பான பெற்றோர் அதில் கை வைக்கத் தயங்குவது நியாயமானதே. அதே சமயம் வசதி இருக்குமானால் பெற்றோருக்காக அநாவசியத்துக்கானாலும் செலவுக்குத்தர முன்வருவதே நல்ல பிள்ளைகளுக்கழகு.

 ================================================

காடராக்ட் 3 :: கண்கள் எங்கே ? நெஞ்சமும் அங்கே! கர்லாக்கட்டையும் அங்கே! 

நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால், வந்திருப்பது காடராக்ட்தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முன் காடராக்ட் என்பது என்ன என்று தெரியாமல் இருந்தது.  அதனால், அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அண்ணன் $  அவர்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். அவருக்கு காடராக்ட் அனுபவம் இரண்டு கண்களிலும் உண்டு. 

அவர் காடராக்ட் என்பது என்ன என்பதை மிகவும் சுலபமாக சொன்னார்



எந்த கண்ணுல காட்டராக்ட்  இருக்குதுன்னு சந்தேகமா இருக்குதோ,  அந்த கண்ணு வழியாகப் பார்க்கும்போது எல்லாமே ஒரு polythene bag வழியா பாக்குறா மாதிரி  தெரியும் என்று சொன்னார். 


சரி இப்போ என்னுடைய கண்ணை டெஸ்ட் பண்ணிப் பாத்திடலாம்னு சொல்லி,  அபார்ட்மெண்ட்ல இருக்குற சர்வீஸ் ரூம் ஜன்னல் வழியே, சுற்றுப்புறத்தை அப்படியே பாத்துக்கிட்டு இருந்தேன். இடது கண்ணை மூடி, வலது  கண்ணை மட்டும் திறந்து, பார்த்தேன்.  கலக்கல் வியூ.  அந்த மாதிரி வலது கண்ணை மூடி, இடது கண்ணைத் திறந்து அதன் மூலம் பார்த்தேன். கலங்கல் வியூ.  ரெண்டு கண்ணையும் மாறி மாறி மூடித் திறந்து,  கம்பேர் பண்ணிப் பார்த்தேன்.


வெறும் செடி கொடிகளை மட்டும் பாக்காமல் , நமக்கு தெரிஞ்ச மனுஷங்க வருவாங்க பார்க்கலாம் அப்படின்னு பார்த்துகிட்டு இருக்கும் போது, அங்கே தன் குழந்தையை கைத்தள்ளு  வண்டியில் வைத்து தள்ளிகிட்டு சிங்கம்மா வந்தாங்க.  பயப்படாதீங்க சிங் அப்பாவின் மனைவி சிங் அம்மா. அவ்வளவுதான். அவங்க, முன்பே,  (அதாவது குழந்தை அவங்க வயிற்றில் இருக்கும் போதே )  அப்பார்ட்மெண்ட் சுற்றிலும்  நடந்து  நடைப் பயிற்சி  பண்ணுவாங்க. 


குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் அவங்க,  அந்தக் குழந்தையை,  கைத் தள்ளு வண்டில வெச்சுகிட்டு வேகமாக  நடப்பாங்க. அவங்களும் எக்சர்சைஸ் பண்ணுவாங்க.  மனசுக்குள்ள அந்த குழந்தையும் தன்னோட சேர்ந்து நடந்து  வருகிறது என்று அந்த அம்மா நினைத்துக்கொள்வார் போலிருக்கு! 

அந்தக் குழந்தையின் முகம் பார்த்தால், எனக்கு இதுதான் தோன்றும்.  கடவுள், ஒரு காம்பஸ் வைத்து வட்டம் வரைந்து, கண், மூக்கு, வாய், காது எல்லாம் அழகாக அமைத்து அனுப்பி வைத்திருக்கிறார் என்று! 

நடைப்பயிற்சி செய்யும்போது நான் எப்போதுமே கடிகார ஓட்ட திசையில்தான் (clockwise; அதாவது ப்ரதக்ஷணமாக) அபார்ட்மெண்டை  சுற்றி வருவேன். 

ஆனால் வடநாட்டவர்கள் பெரும்பாலும்  anticlockwise சுற்றுக்கள்தான் சுற்றுவார்கள். 

நான் நடைப் பயிற்சி எதிர் திசையில் செல்லும்போதெல்லாம், அந்தக் குழந்தையின் கருவண்டு விழிகள் என் மீது மோதும். ஒரு மோகனப் புன்னகையை என் மீது வீசியவாறு செல்லும் அந்தக் குழந்தை. 

ஜன்னலிலிருந்து அந்தக் குழந்தையின் முகத்தை, இடது கண்ணாலும், வலது கண்ணாலும் மாற்றி மாற்றி மூடித் திறந்தபடி பார்த்துப் புன்னகைத்தவாறு என் கண் பார்வையை சோதித்தேன். 

ஆஹா! இது என்ன விபரீதம்! அந்த அம்மா என்னைப் பார்த்து முறைத்தபடி அபார்ட்மெண்ட் club house நோக்கி வேகமாக குழந்தை வண்டியைத் தள்ளியபடி நடந்தார். நான் அவரைப் பார்த்துக் கண்ணடித்துப் புன்னகை செய்தேன் என்று நினைத்துவிட்டார் போலிருக்கு. 

ஏன் கிளப் ஹவுஸ் பக்கம் சென்றார் என்று யோசித்துப் பார்த்ததில் என் மரமண்டைக்கு  ஓர் உண்மை சட்டென்று உறைத்தது. இவர் நடைப்பயிற்சி செய்கின்ற நேரங்களில், குழந்தையின் 'சிங்' அப்பா, கிளப் ஹவுசில், பெரிய சைஸ் அப்பளக்குழவியை Y axis ல் சரிபாதியாக வெட்டியதைப் போன்ற தோற்றமுடைய கட்டைகளைச் சுழற்றி உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்! 






இவர் போய் அவரிடம், 'ஒரு ஆள் என்னைப் பார்த்துக் கண்ணடித்துப் புன்னகை செய்கிறான்' என்று சொன்னால், அவரு அந்த கர்லாக் கட்டைகளை அங்கே கீழே இறக்கி வைக்காமல் கொண்டுவந்து, என் தலையில் அல்லது முதுகில் இறக்கி, மொத்திவிடுவார் என்று பயம் வந்துவிட்டது. 

ஆண்டவா! ஐ ஆப்பரேஷனுக்கு முன்னாடி, புத்தூர் கட்டுப் போட்டுக்க வேண்டி வந்துடுமோ? 
      
==============================================

பார்ப்போம்! 

==============================================



108 கருத்துகள்:

  1. அன்பின் KGG அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் அனைவருக்கும். சமீபத்தில் TAMANNA என்ற ஆப்டிடியூட் டெஸ்டை CBSE, NCERT பசங்களுக்கு நடத்தப் போவதாக நியூஸ் பார்த்தேன். அது எவ்வளவு தூரம் உபயோகம் என்றுதான் கேள்வி கேட்டேன். நடிகையை அல்ல

    நான் உங்களிடம் வாட்சப்பில் கேட்ட சிறிது நேரம் கழித்து அதே கேள்வியை வேறு வடிவத்தில் ஏஞ்சலின் கேட்டிருந்தார்.

    இரண்டுக்குமான பதில் சரியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை.  வாங்க...

      நீக்கு
    2. கேள்வி டெஸ்ட் பற்றி என்று புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. மேலும் டெஸ்ட் பற்றிய விபரங்களும் அறிந்திருக்கவில்லை. மேலும் இரு கலைஞர்கள் பெயரும் குறிப்பிடப் பட்டது சற்று திசை திருப்பி விட்டது. காமெடி என்று கருதி மறப்போமா ?

      நீக்கு
    3. மறக்கலாம் அதற்கு முன் அந்த டெஸ்ட் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது. பெயர் ரொம்ப சிரமப்பட்டு தேர்ந்தது போல் தெரிகிறது.

      நீக்கு
  3. நானும் எந்த நாவலிலும் முதல் சேப்டர் பாதி படிக்கும்போதே நாவலின் கடைசி சேப்டர், அதாவதி கிளைமாக்ஸை முழுமையாகப் படித்துவிடுவேன். தொடர்கதையைப் படிக்காத்தற்கு இதுவும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ ! நீங்களும் சஸ்பென்ஸ் தாங்காதவரா!

      நீக்கு
    2. எனக்கென்னவோ புத்தகத்தை முழுசாய்ப் படிப்பதில் சோம்பேறித்தனம் என்றே தோன்றுகிறதே

      நீக்கு
    3. கடைசி சாப்டர், கடைசி பாரா, கடைசி லைன் படிப்பவர்களுக்கு ஆளுக்கு ஒரு காரணம் இருக்கும். சுபமான. சுகமான முடிவு என்றால் புத்தகம் முழுவதையும் ரசித்துப் படிக்ககூடும் சிலர். Erle Stanley Gardner கதைகளை மட்டும் கடைசி அத்தியாயம் படித்தால் ஒன்றும் புரியாது.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்தப் பதிவு நேத்திக்கே வெளியானதாக என்னோட டாஷ் போர்ட் சொல்லுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா...    வாங்க...   நன்றி.

      நீக்கு
    2. // இந்தப் பதிவு நேத்திக்கே வெளியானதாக என்னோட டாஷ் போர்ட் சொல்லுது! // திங்கட்கிழமையே பார்த்ததாக ஏஞ்சல் கருத்து உரைத்திருந்தார்! எல்லாம் பேய் லீலை! நான் என்ன சொல்வது!

      நீக்கு
    3. அடுத்த தீபாவளி ரிலீஸ்.. பேய்லீலா..!
      பெண்பேய் என்றும் கேள்வி.. ஹீரோயின் யாராக இருக்கும்?

      நீக்கு
    4. நிறைய ஹீரோயின்ஸ் இருந்தால், பேய்ஸ் லீலா, பேய் லீலாஸ் என்று படத்தின் பெயரை வைக்கலாம்!

      நீக்கு
  5. அமுக்குவான் பேய் பத்தி எங்க பெரியம்மாவும் எங்களிடம் சொல்லுவார். நாங்க தூங்காமல் கொட்டம் அடிக்கும்போது சொல்லுவாங்க. தூங்கலைனா அமுக்குவான் பேய் வந்து தூக்கிட்டுப் போயிடும்னு! நான் எனக்கு ஆசையா இருக்கு, வந்து தூக்கிட்டுப் போகட்டும் என்பேன். இது ஒரு பிடாரி! என்பார்! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா உங்க பெரியம்மா ஒரு தீர்கதரிசி என்று திரு சாம்பசிவம் சொல்கிறார் --- எனக்குக் கேட்கிறது!

      நீக்கு
  6. காடராக்ட் பத்தின பதிவு அருமை. சிங்கம்மா பற்றியும் நன்றாகச் சொல்லி இருக்கீங்க! நீங்க உங்க குடியிருப்பு வளாகத்திலிருந்து அவங்களைப் பார்ப்பது சரி, ஆனால் அவங்களுக்கு நீங்க எப்படித் தெரிவீங்க? தரைத்தளத்தில் இருக்கீங்களா? முதல், இரண்டாம் தளம்னா நீங்க பார்ப்பது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. இல்லையா? காலம்பர வரேன்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை ததும்பும் பொன்னாளாக அமையவும் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ஆகா.. முதலில் வந்த கேள்வி பதில்கள் எல்லாம் இன்றும் பேய்களைப் பற்றிய ஆரவாரந்தானா..! மிகுதியையும் படித்துக் கொண்டு பிறகு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. பேய்கள் பற்றிய கேள்விகளும், அதற்கு பதில்களும் நன்றாக இருக்கிறது.

    //என்னுடைய அம்மா என்னை சாப்பிட வைப்பதற்காக 'பொத் பிசாசு ' என்று ஒரு காரக்டரை உண்டாக்கி, என்னை பயமுறுத்தி சாப்பிட வைத்ததுண்டு.//

    அம்மாவின் ''பொத் பிசாசு' விளக்கம் அருமை.

    'ஒத்த கண்ணன் ' வந்து விடுவான் என்று என் மாமியார் பயமுறுத்தி பேரன் பேத்திகளுக்கு சாப்பாடு தருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! அக்கா பயமுறுத்தும்போது அதில் ஒத்தக் கண்ணன் வருவதுண்டு!

      நீக்கு
    2. நானெல்லாம் எப்போச் சாப்பாடு போடுவாங்கனு காத்திருக்கும் ரகம். அதனால் இம்மாதிரிக் கதைகள் எல்லாம் செல்லுபடி ஆகாது! :)))) எங்க பொண்ணு தான் சாப்பிட ரொம்பப் படுத்துவா. அவளுக்கும் கதைகள் சொல்லித் தான் சாப்பாடு கொடுப்பேன். இல்லைனா தேவனின் நகைச்சுவை நாவல்கள் வாசித்துக் காட்டுவேன்.

      நீக்கு
    3. ஆட! ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே!

      நீக்கு
    4. உண்மை தான். பொன்னியின் செல்வன் வரை அவங்களுக்கு வாசித்துக் காட்டி இருக்கேன். அப்புறமா இப்போ சமீபத்திலே 2011 ஆம் ஆண்டில் வந்தப்போ அதைப் படிக்கணும்னு சொன்னாங்கனு கிரிட்ரேடர்ஸில் சொல்லி வைத்து ஆங்கில மொழிபெயர்ப்பு ஐந்து பாகங்களும் இரண்டு பேருக்கும் வாங்கிக் கொடுத்துப் படிச்சாங்க.அவங்களுக்குப் பிடிச்ச தமிழ் எழுத்தாளர்கள் "தேவன்" "கல்கி" இருவரும் தான்.

      நீக்கு
  10. அனைத்து கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. //ஜன்னலிலிருந்து அந்தக் குழந்தையின் முகத்தை, இடது கண்ணாலும், வலது கண்ணாலும் மாற்றி மாற்றி மூடித் திறந்தபடி பார்த்துப் புன்னகைத்தவாறு என் கண் பார்வையை சோதித்தேன்.//

    நானும் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டு மங்களூர் ஓட்டை கண்களை மூடி பார்த்தேன். (இடது, வலது கண்ணை மூடி சோதித்துப் பார்த்தேன்) அப்புறம் எங்கள் வீட்டு ஆடும் பாவை தஞ்சாவூர் பொம்மையை தூரத்தில் வைத்து அதன் வண்ணத்தை பரிசோதனை செய்தேன்.

    நல்ல தகவல்களை நகைச்சுவை சேர்த்து தொடர் போகிறது.


    பதிலளிநீக்கு
  12. ஸ்வாரஸ்யமான கேள்வி பதில்கள்.

    காட்ராக்ட் - மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய்,தமன்னா,,பொத் பிசாசு எல்லாம் சுவாரஸ்யம். அம்மா செய்யும் ப்ளாக்மெயில் சாதம் கங்கைக் கரையில் போய் அழும் என்பதுதான். ஹாலோவீன் பூசணியை ப் பேரன் தனி ஆளாக செய்து வைத்தான். எனக்கே பயமாக இருந்தது. என்னவோ ரசனை:(

      நீக்கு
    2. ஹா ஹா - போன வருடம் ஹாலோவீன் என்றால் என்ன என்றே தெரியாமல், கதவைத் தட்டிய குட்டீஸ் எல்லோரையும் பார்த்து பேய்முழி முழித்தேன். அவங்க பயன்துகிட்டுப் போயிட்டாங்க!

      நீக்கு
  13. //நெல்லைத் 'தமிழரா'ன நீங்க, தமிழே தெரியாத தமன்னாவை ரசிப்பதில்லையா ?//

    இப்படி கூட்டத்தில் கட்டிச்சோற்றை அவிழ்க்கலாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா நெ த என்ன செய்கிறார் பார்ப்போம்!

      நீக்கு
    2. கில்லர்ஜி... கேஜிஜி சாருக்குத் தெரியாது... அந்தப் பெண் எவ்வளவு நன்றாக தமிழ் பேசும்னு....

      ஐயோ... என் விரதம் போச்.... இனி இதைப் பத்திப் பேசக்கூடாது. கப் சிப்.

      நீக்கு
    3. எல்லாப் புகழும் dubbing ஆர்டிஸ்டுக்கே !

      நீக்கு
    4. என்னாதூஊஊஊஊஉ நெ.தமிழனின் கப்புப் போச்சா:)) ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே விரதம் போச்சா:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
  14. கேள்வி பதில்கள் அருமை... காட்டராக்ட் பற்றிய விளக்கமும்...!

    பதிலளிநீக்கு
  15. காடராக்ட் சோதனை. முதுகில் டிபன் கட்டி விடப் ம்போகிறது சார்.:)

    பதிலளிநீக்கு
  16. சாப்பிலைன்னா
    ரெண்டு கண்ணன் வந்துடுவான்..ந்னு
    பயப்பட்ட காலங்கள் இனியும் வருமோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கம்மா ரொம்ப தாராளம்.   கஞ்சத்தனமா  இரண்டு கண்ணன் என்றெல்லாம் சொல்வதில்லை. 
       
      அம்மா என்ன பயமுறுத்துவது "அஞ்சு கண்ணன் பத்து கண்ணன் வந்துடுவான்..."  மேல் போர்ஷனில் குடியிருந்த ஒரு வயதான மேல்  "பே.."  என்று சத்தம் கொடுத்து எக்ஸ்டரா எஃபெக்டில் என்னை பயமுறுத்துமாம்...

      நீக்கு
    2. //ரெண்டு கண்ணன் வந்துடுவான்..ந்னு// - உடனே பசங்க... அப்பாவுக்கு நீதான் பயப்படுவ. நாங்கள்லாம் பயப்பட மாட்டோம் என்று பதில் சொல்லிடுவாங்க, இந்தக் காலத்துல.

      நீக்கு
  17. அமுக்குவான் பேய் - இந்த அனுபவம் 87ல் எனக்கு ஏற்பட்டிருக்கு. ரூமில் அப்பா ஒரு மூலையிலும் நான் ஒரு மூலையிலும் படுத்திருந்தோம். என்னை ஏதோ அமுக்குவதுபோல ஃபீலிங். கையை காலை அசைக்க முடியலை. வாயைத் திறக்க முடியலை. சில நிமிடங்களே ரொம்ப நேரம் ஆனதுபோல எண்ணம். அப்புறம் அசைக்க முடிந்ததும், அப்பாவை எழுப்பி அவர் அருகில் படுத்துக்கொண்டேன். எனக்கு இந்த மாதிரி எந்த சங்கடங்கள் ஏற்படும்போது மனம் கடவுள் துதியில் இறங்கிவிடும். அப்போ புருஷசுக்தம் மனதுக்குள் சொன்னேன் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சொல்லியிருப்பதுபோல் எனக்கு ஏற்பட்டதுண்டு. அந்த சமயத்தில், அதாவது அந்த nightmare-ன்போது, நம்மால் மூச்சுவிடமுடியாது திணறுவதுபோலவும், நம்மை யாரோ அழுத்தி நசுக்குவதுபோல், விடுபடமுடியாத மரண பயத்தில்... தவிக்கும் உடல், மனம்! கண்விழித்துக் கொஞ்சம் படபடப்பு அடங்கி, தண்ணீர் குடித்துவிட்டு எதிரே இருக்கும் பெருமாள்படத்தை பயபக்தியுடன் சேவித்துவிட்டு தூங்க முயற்சித்தது நடந்திருக்கிறது சிறுவயதில்..

      நீக்கு
    2. மதுரையில் மேலாவணி மூலவீதியில் குடித்தனம் இருந்தப்போ மாடி அறையில் எனக்கும் என் தம்பிக்கும் இம்மாதிரி அனுபவம் ஏற்பட்டு இரண்டு பேரும் கத்தின கத்தலில் அக்கம்பக்கம் அனைவரும் மாடிக்கு ஓடி வந்து என்ன, என்ன? குழந்தைங்க கூட யாரும் துணைக்கு இல்லையா? அப்பா, அம்மா இல்லையானு எல்லாம் கேட்டாங்க. சுமார் ஒருவாரம் தொடர்ந்து நாங்க இருவரும் இரவு ஒரே நேரம் கத்தி இருக்கோம். அப்புறமா மசூதிலே ஆரம்பிச்சு எல்லா இடங்களுக்கும் போய் மந்திரிச்சுக் கயிறு போட்டாங்க! அப்புறமா வரலை. ஆனால் இப்போவும் அப்போ அப்போ நான் தூக்கத்தில் கத்தறேன்னு ரங்க்ஸ் சொல்லுகிறார். பேய்ப்படம் எல்லாம் பார்க்காதே, திகில் கதைகள் படிக்காதேனும் சொல்லுவார். ஆனால் கத்தத் தான் செய்திருக்கேனே தவிர்த்து பேய், பிசாசுனு உளறவில்லையே! அதோடு அதுங்களைப் பார்க்கும் "இனிமையான" அனுபவத்தை எப்படி விட்டுக் கொடுக்கிறது! )))))

      நீக்கு
    3. எனக்கு மனதில் பயம் தோன்றினால் உடனே "கந்த சஷ்டி கவசம்" தான். அதை இல்லைனா "அக்ரதப்ருஷ்ட" ஸ்லோகம்.

      நீக்கு
  18. //5, சுதந்திரம் முழு சுதந்திரம் என்பது சாத்தியமா ?//

    முழுச் சுதந்திரம் என்பது வேறு; சுதந்திர உணர்வு என்பது வேறு.

    மானுட இனத்தின் சுதந்திர உணர்வு என்பது எப்படியிருக்கும் என்பதை New York Times Square-ல் உணர்ந்த அனுபவம் உண்டு.

    https://en.wikipedia.org/wiki/Times_Square

    பதிலளிநீக்கு
  19. பேய்களை பற்றி அடிக்கடி விவாதித்து அதன் மீதிருக்கும் பயத்தை போக்கி விட்டீர்களே? நியாயமா?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ! நிஜமான பேயை நான் சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகுமோ பயமாத்தான் இருக்கு!

      நீக்கு
    2. அப்போ இதுவரை நீங்க சந்திக்கவே இல்லையா கெள அண்ணன்:).... சே சே வாழ்க்கையின் பாதியை வீணாக்கிட்டீங்களே:) ஹா ஹா ஹா

      நீக்கு
  20. சிங் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட் என்பது தெரியாமல் சிங்கக்குட்டியிடம் காடராக்ட் டெஸ்ட் பண்ணினீர்களா? தேவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் எப்படித் தப்பிக்கப் போகின்றேனோ!

      நீக்கு
  21. ஆஆஆ நான் டாஸ் போர்ட் போய்த் தேடுவதில்லை, வேறு முறையில் வச்சிருக்கிறேன், அதில் புதுப்போஸ்ட் மேலே வந்து நிற்கும், எங்கள் புளொக் பார்த்தால் நேற்றைய போஸ்ட்தான் நிற்கிறது புதுசு வரவில்லை.. அப்போ ஆஆஆஆஆ கெள அண்ணன் கட்ரரக் க்கு போனதில காரணமாகி போஸ்ட் போடல்லியோ என நினைச்சு இங்கு வந்தால் இருக்கே:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் திங்களே சொன்னேன், தலைப்பை மாத்துங்கோ என, அதாவது நான் சொன்னதன் அர்த்தம், புது போஸ்ட் ரெடியாக்குங்கோ என்று.

    இப்படி தட்டுப்பட்டு பப்ளிஸ் ஆகிட்டால் அதை ரிவேர்ட் ரு ட்ராவ்ட் ல வச்சு மீண்டும் பப்ளிஸ் பண்ணும்போது புதுசா சிலசமயம் வராது, அதனால இப்படிக் கை தட்டுப்பட்டு வெளியானால், மொத்த போஸ்ட்டையும் கொப்பி பண்ணி, நியூ போஸ்ட்டை ஓபின் பண்ணி பேஸ்ட் பண்ணி, தலைப்பிட்டு வெளியிடுங்கோ இனிமேல்:)) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரொம் ப ரயேர்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:)).. எத்தனை பேர் புதன் கிழமை போஸ்ட் இல்லை என திரும்பிப் போயிட்டினமோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் சுற்றிச் சுற்றி வருவதைவிட, எது எப்படியோ ஆகட்டும் என்று பேசாமல் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது!

      நீக்கு
    2. நானும் அப்படித்தான்.. செவ்வாயில் இறங்கி இறங்கி புதனுக்குள் வருகிறேன். கைப்பேசியில் வேறு படிக்கிறேனா ? ஒன்றை படித்த பின் முன்னது மறந்து விடும் போது மீண்டும் செவ்வாய்க்கு சென்று அங்கிருக்கும் வலைக்குள் நுழைந்து புதனை சென்றடைகிறேன்.காரணம் புதனின் அறிவு சுவாரஸ்யம்.

      நீக்கு
  22. ஹா ஹா ஹா “பொத் பிசாசு” சூப்பர்ர்:)).

    தமனாக்கா பற்றியா இம்முறை எல்லோரும் அதிகம் பேசுறீங்க?:) எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:))

    “வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று சொல்லி வைப்பாங்க
    உந்தன் வீரத்தைக் கொளுந்திலேயே கிள்ளி வைப்பாங்க”.. ஹா ஹா ஹா நினைவுக்கு வரும் வரிகள்..

    பதிலளிநீக்கு
  23. . Tamanna பற்றி எ.பி. ஆசிரியர்களின் அபிப்ராயம் என்ன?

    # சினிமாவில் அழகி. வேறு என்ன ?/////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவருக்கு உடனடியா கறரக் ஒபரேசன் பண்ணோனும்:)😀😺😺😺😺😺😺

    பதிலளிநீக்கு
  24. பேயார் சுவாரசியம்.
    எனக்கு சஸ்பென்ஸ் ஆக இருக்கவேண்டும் நாவலானாலும்,படம் என்றாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அதுதான் சரி அதே கண்கள் திரைப்படம் வந்த சமயம், விமரிசகர்கள், பத்திரிகையாளர், இரசிகர்கள் எல்லோருக்கும் ஏ வி எம் நிறுவனம், "தயவு செய்து, இந்தப் படத்தின் முடிவை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் " என்று விளம்பரப்படுத்தினார்கள். நான் பார்த்த அந்தக் காலத்தில் அந்தப் படத்தின் முடிவு முற்றிலும் எதிர்பாராத முடிவாக இருந்தது.

      நீக்கு
    2. @மாதேவி, அதே, அதே! த்ரில் இல்லைனா சுவாரசியமே இல்லை.

      நீக்கு
  25. ஆழ்துளைக்கிணற்றில் அடிக்கடி குழந்தைகள் விழுவதும், அதற்கு அரசையும் இஸ்ரோவையும் குற்றம் சொல்லுவது சரியா?

    இதை நேரடி ஒளிபரப்புச் செய்ததும் சரியானதா? மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதாக இல்லையா?

    சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் தங்கள் தொண்டர்களை இத்தகைய ஆழ்துளைக்கிணறுகள் திறந்திருந்தால் அவற்றை மூடுவது என ஓர் இயக்கம் ஆரம்பித்து நடத்தினால் நல்லது எனத் தோன்றுகிறது! இல்லையா?

    பதிலளிநீக்கு
  26. இப்போது வரும் தமிழ்ப்படங்களில் பாடல்கள் புரியும்படி இருக்கிறதா? அவற்றில் அர்த்தம் உள்ளதா? எனக்கென்னமோ ஒரே இரைச்சலாகத் தெரிகிறது!

    ஸ்ரீராம் இப்போதைய தமிழ்ப்படங்களின் பாடல்களைப் பகிராமல் பழைய பாடல்களையே பகிர்வது ஏன்?

    கதையம்சம் நீதிகளைச் சொல்லுவதாக அமையாமல் எதிரிடையாகவே ஏன் சொல்லுகிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராம் இப்போதைய தமிழ்ப்படங்களின் பாடல்களைப் பகிராமல் பழைய பாடல்களையே பகிர்வது ஏன்?// - கீசா மேடம்... கேள்வி தவறு. ஸ்ரீராம் இப்போதைய... பகிராமல் 80களின், 90களின் பாடல்களையே பகிர்வது ஏன்?. இதுக்கு பதில், ஸ்ரீராம் அப்பா, இந்த பிளாக் நடத்தினார்னா, அவர், 50களின், 60களின் பாடல்களையே பகிர்வார். நாம அந்த அடலசண்ட் வயதுல, காதல் வயதுல கேட்ட பாடல்களைத்தான் நமக்குப் பிடிக்கும். இதுதான் பொதுவான விதி என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. எங்கள் பதில்கள், அடுத்த வாரம்.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. பேயார் பற்றிய கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது. "பொத் பிசாசு" கதை நன்றாக உள்ளது. இனி எங்கள் வீட்டில் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைக்கு இந்த கதை சொல்லலாம். ஆனால் இந்த கால குழந்தைகள் இந்த பிசாசை நம்புமான்னு தெரியவில்லை.

    கண்ணில் புரை வந்திருக்கான்னு இப்படியெல்லாம் டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்று அறிந்து கொண்டேன். நகைச்சுவையாக இருந்தது. அந்த சிங் அப்புறம் வந்தாரா என அறிய ஆவல். தொடர்கிறேன். இந்த கமெண்ட் எழுதி அனுப்பும் நேரம் நெட் இணைப்பு போய் விட்டது. மறுபடி டைப் செய்தால் முன்னதாக அடித்தது மறந்து விட்டது. ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி. இந்தக் காலக் குழந்தைகளுக்கு பொத் பிசாசு எடுபடாவிட்டால், iron man, bat man, food man, zomato Jeeny என்று ஏதாவது கதை விட வேண்டியதுதான்!

      நீக்கு
  28. ஆஆஆஆஆ இப்போதான் கண் கட்ரரக் கதைக்குள் நுழைகிறேன்....

    //ஜன்னலிலிருந்து அந்தக் குழந்தையின் முகத்தை, இடது கண்ணாலும், வலது கண்ணாலும் மாற்றி மாற்றி மூடித் திறந்தபடி பார்த்துப் புன்னகைத்தவாறு என் கண் பார்வையை சோதித்தேன். //
    ஹா ஹா ஹா இதை நாங்க நம்புவமோ?:)).. எழும்பி நடக்கிற சிங்கம்மாவைப்:) பார்க்காமல் பிராமில உறங்கும் குழந்தையைப் பார்த்தாராம்:)).. ஏதோ படிக்கும் எங்களுக்கும் கட்ரரக் இருக்கும் எஉம் நினைப்போ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஹா..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் சிங்கப்பா என்னைத் தேடி வந்தால், தேம்ஸ் நதிக்கரைக்கு அனுப்பி வைக்கிறேன்!

      நீக்கு
  29. //ஆண்டவா! ஐ ஆப்பரேஷனுக்கு முன்னாடி, புத்தூர் கட்டுப் போட்டுக்க வேண்டி வந்துடுமோ? //
    ஹா ஹா ஹா கர்ர்ர்:) இந்தப் பயம் உள்ளே இருந்தாலும்:) பார்ப்பதை ஆரும் நிறுத்துவதில்லை:)).. ஆனாலும் கெள அண்ணன் பயம் வாணாம்.. அது கண்ணில கட்ரரக் இருக்கென டொக்டர் சொன்னதால நீங்க தப்பிச்சுடலாம்:)) அதனால ஒபரேஷன் முடியும் வரை நீங்க ஆரை வேணுமெண்டாலும் பாருங்கோ ஹா ஹா ஹா:))..

    உங்கள் இந்த தொடருக்கும் இடம் கொடுப்போமே என்றுதான் போனதடவை கேள்விகள் எழுதி இருந்தும் நான் கேட்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேட் அட்வைஸ் ! ஆப்பரேஷன் முடிஞ்சு ஒரு மாதம் ஆயிடுச்சே!

      நீக்கு
  30. மறந்திடக்கூடாதே என்பதற்காக நோட் பண்ணி வைத்துப்போட்டு, பின்னர் இப்போ எங்கே அந்த நொட்டை வச்சென் எனத் தேட வேண்டியதாப்போச்ச்ச்:)). இதோ வருகிறார்கள் என் குமரிகள் சே..சே.. இதென்ன இது இண்டைக்கு டப்பு டப்பாவே வருதே:)).. கிளவிகள்.. சே..சே.. கேள்விகள்.

    1.வாய் இருந்தால் வங்காளம் போகலாம்[எதையும் சாதிக்கலாம்] என்பது உண்மையோ?

    2.எந்தவித கெட்ட பழக்கமுமில்லாதவர்கள், நல்லவர்களாகவே இருப்பவர்கள் அகாலமரணமடைவது ஏன்?

    3.முயற்சி செய்தால் எதையும் அடையலாம் என்பது உண்மையோ?

    4.பாத்திரமறிஞ்சு பிச்சை இடு.. என்பதன் அர்த்தம் என்ன?.

    5.பேய்க்கு ஏன் கால்கள் இருக்காது என்கிறார்கள்?..

    இவ்ளோதேன்ன்:)) இப்போதக்கு:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேய்க்கு //
      கால்கள் /கால் இருந்தா அது நடந்து //போய் // விடுமே ஹாஹாஹீஹீ 

      நீக்கு
    2. //.வாய் இருந்தால் வங்காளம் போகலாம்//

      ஹையோ ஹையோ கப்பல் பிளேன் எதிலையும் போலாம் வங்காளத்துக்கு 

      நீக்கு
  31. பேயேது.. பிசாசேது.. பூதந்தானேது ? - என்கிற புகழ்பெற்ற திரைப்பாடலை எழுதிய கவிஞ்ஞர் - ஸ்டூடியோவிலிருந்து இரவில் நடக்க ஆரம்பித்தவர், வீடுபோய்ச் சேரலியாமே? வெவரம் பரையுமோ சாரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது யாரு! "தேரேது சிலை ஏது திருநாள் ஏது தெய்வத்தையே மனிதர் எல்லாம் ஏது. ஊர் ஏது உறவு ஏது உற்றார் ஏது உறவெல்லாம் பகையாக ஆகும் போது." என்றுதான் பாடல் கேள்விப்பட்டிருக்கின்றேன்! நீங்க புதுசா கரடிவிடறீங்க!

      நீக்கு
  32. ஆஹாஆ யாருமேயில்லை :) @ சங்கு மித்ரா இன்னிக்கு நான் தான் 100 வது தங்க மெடல் எடுக்க போரீயின் 

    பதிலளிநீக்கு
  33. வேலை பிசி நிறைய ஆன்லைன் கோர்ஸைஸ் முடிக்க இருக்கு அதனால் கேள்விகளுக்கு தரற்காலிக விடுப்பு :)அதான் சுங்க மைத்திரி  நிறைறைய கேட்டிருக்காங்களே 

    பதிலளிநீக்கு
  34. ஒரு பக்கம் வாயுள்ள பிள்ளை பிழைக்கும்! என்று சொல்லுகிறோம். இன்னொரு பக்கம் "எம்புட்டு வாய்!" என்கிறோம். அப்போ என்னதான் செய்வது?
    இப்போதைய பெண்கள்/பிள்ளைகளில் நிறைய முதிர்கன்னர்கள்/முதிர் கன்னிகள் இருந்தாலும் நான் பார்த்தவரையில் பெற்றோர் இன்னமும் இந்த நக்ஷத்திரம் வேண்டாம். அந்த நக்ஷத்திரம் சரியா வராதுனு சொல்லுகிறார்களே! அது சரியா?

    முற்காலங்களில் ஜாதகப் பொருத்தமே பார்க்க மட்டார்கள் என என் பெற்றோர் சொல்லிக் கேட்டிருக்கேன். அப்படி இருந்தும் இன்னமும் ஜாதகத்தை நம்பிப் பெண்ணுக்க்ஜ்ம் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து வைக்காமல் இருப்பது சரியா?

    பெண்ணும் பிள்ளைக்யும் ஒருவருக்கொருவரைப் பிடித்து விட்டால் கல்யாணம் செய்து கொள்வதில் தவறு ஏதேனும் தெரியவில்லை. ஆனால் இன்னமும் பெரும்பாலான பெற்றோர் இதை ஏற்கவில்லை, இது சரியா?

    பதிலளிநீக்கு
  35. //ஈ அல்லது காக்காய் விரட்டுவதுபோல் அபிநயம் பிடிப்பதும் - பாடும்போது, நிகழ்கிறது? இது பெண்களிடம் ஏன் கிடையாது?/

    இதை பார்த்ததும் பார்த்ததும் ஒன்று நினைவுக்கு வருது ..முந்தி குமுதம் ல யாரோ விமர்சனம் பண்ணாங்க மார்கழி கச்சேரியில் நித்யஸ்ரீ கண்ணை மூடி லயிச்சு பாடறப்போ :) //மேடம் பார்த்து ரொம்ப நேரம் கண் மூடிட்டு பாடதிங்க யாரும் திருடங்க ஜிமிக்கியை அபேஸ் செய்யக்கூடும்னு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ! ஆனால் மேடையில் அவங்க பாடும்போது கண்ணை மூடி பாடினாலும், ஆடியன்ஸ் எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்பார்களே!

      நீக்கு
  36. //ஆனால் வடநாட்டவர்கள் பெரும்பாலும்  anticlockwise சுற்றுக்கள்தான் சுற்றுவார்கள். //

    ஹயோ இதை படிக்கும்போதே எதோ வம்பில் மாட்டுவீங்கன்னு நினைச்சேன் :)
    என்னா ஒரு ஆராய்ச்சி :)  அது பெரும்பாலும் திருமதி சிங்கங்கள்தான் ஆன்டி க்ளாக்வைஸ் சுற்றுவாங்க அப்போதானே க்ளாக்வைசா சுத்தற அங்கிள்ஸ்களை  எதிர்பாராத கோணத்தில் நேருக்குநேர் வாட்ச் பண்ணமுடியும் :) இங்கே பார்க்கிற சிங்கங்கல்லாம் பையை தூக்கிட்டு பின்னாடி பெண் சிங்கங்களை தொடர்தே செல்வர் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கங்களை இப்படி அசிங்கங்களாக ஆக்கிட்டீங்களே!

      நீக்கு
  37. அந்த கர்லாக்கட்டை உடஞ்சிச்சா என்னச்சுன்னு அறிய ஆவலா வெயிட்டிங் :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!