சனி, 12 அக்டோபர், 2019

திருடன் உள்ளே நுழையும்போதே ..


1)  இதுதான் ஆரம்பம்.    ஆரம்பம் சரியாய் இருந்தால் அனைத்தும் சரியாய் இருக்கும்.  இந்த 'பார்வையிடல்' அவருள் ஒரு விதையை விதைக்கட்டும்.  ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதாஅரசுப்பள்ளி மாணவியின் அறிவொளி பெருகட்டும்...






2)  "........தெருவோர இரவு பள்ளி என அழைக்கப்பட்டாலும், '1 ரூபாய் இரவுப் பள்ளி'ன்னு தான், மக்கள் அழைக்கின்றனர். மாணவர்களிடம், 1 ரூபாய் சம்பளம் வாங்கி வந்தேன். அதுவும், இப்போது வாங்குவதில்லை.
நான் படித்தது, பிற குழந்தைகளுக்கு பயன்படட்டுமே என, இலவசமாகவே சொல்லிக் கொடுக்கிறேன்.........."

திருச்சி, அரியமங்கலம், சீனிவாச நகரில், 1 ரூபாய் கூட சம்பளமே வாங்காமல், ஆண்டுக்கு, ௩௦௦ நாட்களுக்கு மேல், இரவுப் பள்ளி நடத்தும், 80 க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு கல்வி அளிக்கும், திருமணம் ஆகாத, கோமதி.



3)  ஒரு ரூபாய் மருத்துவமனை!   இதைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.  ரயில் நிலையங்களில் அரசால் அமைக்கப்பட்டிருக்கும் இங்கு மருத்துவருக்கு ஒரு ரூபாய்தான் கட்டணமாம்.





4)  அரசுப்பள்ளி ஆசிரியர் மணிவண்ணனின் கண்டுபிடிப்பு...   மக்களுக்கு உதவலாம்.  வெறும் 7,000 ரூபாய்தான் ஆகும் என்கிறார்.   திருட்டைத் தடுக்க உதவும்  பற்றி படிக்க...






68 கருத்துகள்:

  1. இனிய காலை வனக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் நான் இன்னும் நேற்றைய பாடலில் இருந்து வெளிவரவில்லை. மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது....விட மாட்டேன் விட மாட்டேன் ஹா ஹா ஹா !!!

      ஸ்ரீராம் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராகம் கண்டுபிடிக்கும் முயற்சியில் நான் ஈடுபடக் காரணம்...அது மனதை மிகவும் நிறைவாக்குகிறது! ஒரு சந்தோஷம்...எங்கள் வீட்டில் என் கஸின்கள் நாங்கள் (பாடகி கஸின் அவள் அம்மா/என் மாமி) மற்ற கஸின்ஸ் பாடுபவர்கள் எல்லாம் சேர்ந்தால் இப்படித்தான் ....இப்போது அந்தக் கஸின் பாவம் தன் 17 வ்யது சிவியர் ஆட்டிசம் குழந்தையைக் கவனிப்பதிலேயே வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டாள்...அச்சாத்திய திறமை கொண்டவள்...அவள் அதற்கு முன் தானே ஸ்வரம் போட்டுப் பாடும் அளவு திறமை கொண்டவள்...)

      இப்போது அவளையும் நான் மீண்டும் உற்சாகப்படுத்த, நானும் உற்சாகம் பெற இது உதவுகிறது ஸ்ரீராம்...மிக்க மிக்க நன்றி..

      கீதா

      நீக்கு
    3. கேட்க (படிக்க) சந்தோஷமாய் இருக்கிறது கீதா.    பாடலை இப்படி ரசிப்பவர்களைக் கண்டால் ஒரு ஆனந்தம் தானாய் வருகிறது.

      நீக்கு
    4. //வனக்கம்// ஆஆஆஆஆஆ டிவில தமிழ் பேசுவது போல வந்திருச்சே!!! கீபோர்ட் கீ எல்லாம் லூஸாக ஆடிக் கொண்டிருக்கு ஹிஹிஹிஹி...அதான் தட்டச்சும் போது பல பிழைகள் வருது.

      கீதா

      நீக்கு
    5. நான் நீங்கள் வல்லினமாகச் சொல்லாமல் மென்மையாகச் சொல்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

      ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவின் செய்திகளை மீண்டும் ஒரு முறை படிப்பதில் ஆனந்தம்...

    வழங்கிய ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸோ..    எல்லாம் படித்த செய்தி என்பதை சொல்லாமல் சொல்கிறீர்கள்...!!  

      நீக்கு
    2. எல்லம் மனதில் மகிழ்ச்சி விளைத்த செய்திகள் என்று சொல்கிறேன்!..

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்த நாள் அனைவருக்கும் நன்மைகள் நிறைந்ததாக பிரகாசிக்க வேண்டுமென இறைவனிடம் மனமாற வேண்டிக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா...    பிரார்த்தனைகளுக்கு நன்றி.  வாங்க..  வாங்க...

      நீக்கு
  5. காலை நேரத்தில் வந்திருப்பவர்கள் அனைவருக்கும் காலை வணக்கம், மாலை நேரத்தில் வரப் போகிறவர்களுக்கு மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதா அக்கா...    வாங்க... வாங்க...   பிரார்த்தனைகளுக்கு நன்றியும், நல்வரவும்...

      நீக்கு
  6. இஸ்ரோ மாணவி பற்றிப் படிச்சேன். அதே போல் இலவசக்கல்வி அளிக்கும் கோமதி பற்றியும். மற்றவை புதியது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. சென்னை மயிலாப்பூரில் ஒரு ரூபாய் மருத்துவமனை என்றே இருந்தது/அல்லது இப்போவும் இருக்குனு நினைக்கிறேன். என் பெரியப்பா என்ன உடம்பு வந்தாலும் அங்கே தான் காட்டுவார். எங்களையும் அங்கே போகச் சொல்லி வற்புறுத்துவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ...    முன்னர் நாம் அதைப் பற்றி இங்கு வெளியிலிருக்கிறோமா?

      நீக்கு
    2. //இங்கு வெளியிலிருக்கிறோமா?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வெளியிட்டிருக்கிறோமா என்பது "வெளியிலிருக்கிறோமா?" என வந்திருக்கு. மயிலை மருத்துவமனை பற்றி நீங்கள் எழுதியது இல்லை. ஆனால் வேறொரு ஒரு ரூபாய் மருத்துவமனை பற்றித் தஞ்சாவூர்? கும்பகோணம்? மதுரை? நினைவில் இல்லை. எழுதி இருக்கீங்க! சுமார் ஒரு வருஷம் ஆகி இருக்கலாம் அது குறித்து எழுதி!

      நீக்கு
    3. ட்டி விட்டுப்  போச்சுக்கா...    மன்னிச்சுக்கோங்க...

      நீக்கு
  8. அன்பு ஸ்ரீராம், துரை, கீதா ரங்கன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அருமையான செய்திகள். ஒரு ரூபாய் டாக்டர், மருத்துவமனை மிக மிகப் பாராட்டுக்கு உரியது.

    திருட்டு அலார்ம், மிக மிக அவசியம். எத்தனையோ கொள்ளைகள்
    நடப்பதற்கு முன்பே கண்டு பிடிக்கப்படுமே.
    அந்த சிறுவனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். எல்லோரும்
    இந்தக் கருவியை வாங்கி நலன் பெற வேண்டும்.
    ஒன்பதாம் வகுப்பு மாணவி ,இஸ்ரோ போவது போல இன்னோரு மாணவி நாசா கெண்டருக்கு வரப்போகிறார் என்று செய்தி வந்ததே. இருவருக்கும் மனம் நிறை ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      இப்படி எல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் தவிர, எவ்வளவு உபயோகத்துக்கு வருகின்றன என்பதும் கேள்விக்குறி...    ஆனாலும் அவரின் ஆர்வத்தைப் பாராட்டவேண்டும்!

      நீக்கு
  9. ஸ்ரீராம் கோமதி பற்றிய செய்தியின் லிங்க் இயற்கை விவசாயம் செய்பவருக்குப் போகிறதே...

    இஸ்ரோ செல்லும் மாணவிக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராம் கோமதி பற்றிய செய்தியின் லிங்க் இயற்கை விவசாயம் செய்பவருக்குப் போகிறதே...//

      அடடா...     இப்போது பாருங்கள் மாற்றி இருக்கிறேன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    செய்திகள் சுவையானவை. ஒன்பதாவது படிக்கும் மாணவியின் திறமை போற்றத்தக்கது. அவருடைய திறமை காரணமாக இஸ்ரோ செல்லும் அவருக்கு வாழ்த்துக்கள்.

    ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை கோமதியைப் பற்றி முன்பே இங்குதான் படித்தேன். தான் கற்ற கல்வியின் பயனை பிறருக்கு, ஊதியம் அதிகம் எதிர்பார்க்காது வழங்கும் அவருக்கும் பாராட்டுக்கள்.

    இந்த தடவை அதை கிளிக் செய்தால் விவசாய பலன் குறித்த வேறு செய்தி வருகிறது. எனினும் இரு பாஸிடிவ் செய்திகளுக்கும் மகிழ்ச்சி.

    ஒரு ரூபாய் மருத்துவமனையின் பயன்பாடு மிகச்சிறந்தது. ரயிலில் போகும் வழியில் பிரசவ வலி எடுப்பதென்பது மிகவும் சிரமம்தான். அதற்கு உபகாரமாக இருக்கும் இந்த மருத்துவமனை போல் நிறைய வந்தால் நலமாக இருக்கும்.

    பூட்டிய வீட்டிற்குள் வரும்/வந்த திருடனை கண்டு பிடிக்க கருவிகள் கண்டு பிடித்தவருக்கு பாராட்டுக்கள். அவருடைய இந்த பயன்பாட்டு கருவி வருபவர்களை படம் எடுக்கும் வெப் கேமரா மாதிரி பயனுள்ளதாக இருந்து புகழடைய வாழ்த்துக்கள்.

    நல்ல செய்திகளை பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      ரவா உப்புமா போல கோமதிப்பற்றி மறுபடி செய்தியா? பிழை திருத்தி விட்டேன்.  ஆனால் இந்தச் செய்தி  ஏற்கெனவே கொடுத்திருக்கிறேனா?   செய்தித்தாளில் மறுபடி பார்த்ததும் பாகிர்ந்து விட்டேன் போல..  இதை அவல் உப்புமா என்று நினைத்து படிக்கவும்.  ரவா உப்புமாவை மறந்து விடவும்!

      நன்றி அக்கா.

      நீக்கு
    2. ஹா. ஹா. ஹா. அவ(ள்)ல் நிறையவே பாதித்து விட்டாள் போலும். நன்றி. நன்றி.

      நீக்கு
  11. கோமதி பற்றிய லிங்க் போவது வேறு செய்திக்கு என்றாலும் நீங்க சொல்லியிருப்பதிலிருந்து புரிந்து கொண்டேன். அருமையான பணி. வாழ்த்துகள்.

    ஒரு ரூபாய் மருத்துவமனை நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ரயில்வே மருத்துவமனைகள் தொடங்கியிருப்பது சிறப்பு பயணிகளுக்கு மிக மிக உதவும் ஒன்று..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஒரு ரூபாய் மருத்துவமனை ஏழைகளுக்கு பயனாகட்டும்.
    ஆசிரியர் மணிவண்ணன் அவர்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  13. ஆசிரியை,ஒரு ரூபாய் மருத்துவமனை,திருடனை கண்டுபிடிக்க அலாரகருவி கண்டுபிடிப்பு,மாணவி அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி மாதேவி...

      சில நாட்களுக்குமுன் உங்களிடம் திங்கட்கிழமைப் பதிவுக்கும், கேவாபோவுக்கும் எழுதி  அனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தேன்.  படித்தீர்களா?   பதில் ஒன்றும் சொல்லவில்லையே......

      நீக்கு
  14. திருட்டைக் கண்டுபிடிக்க உதவும் கருவி அபாரம்...கூடவே வேறொன்றும் தோணுதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....

    டெக்னாலஜி வளர்ந்துவிட்டதே.....எப்பவுமே ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால் இப்படி பப்ளிக்காகச் சொல்லப்படும் போது கூடவே இதனை முறியடிக்க திருட்டுக் கூட்ட வல்லுநர் ஒருவர் இருப்பாரே...

    எனவே இந்த ஆசிரியர் அதனை முறியடிக்க முடியாதபடியான சீக்ரெட் லாக் கருவியில் வைத்திருந்தால் நல்லது அந்த சீக்ரெட் லாக் பப்ளிக் சீக்ரெட் ஆகக் கூடாது!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. திருடன் -ன்னு டைட்டில் போட்டவுடனேயே கூட்டம் அலைமோதுதே..

    பதிலளிநீக்கு
  16. ஒரு ரூபாய் மருத்துவமனை தமிழகமெங்கும் திறக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. 1. சபீதாவைப் பாராட்டுவோம்.
    2,3. அரிய சேவை. போற்றுவோம்.
    4. பலருக்கும் பயனாகக் கூடும் இவரது கண்டுபிடிப்பு.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. தாம் வகுப்பு மாணவி சபீதா, அரசுப்பள்ளி மாணவியின் அறிவொளி பெருகட்டும்...//

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  19. டைட்டிலே ஒரு கவர்ச்சியோ என்ற நினைப்பில்.. மேலே கருத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குப் புரிந்துவிடும்! புரியாத சிலரும் இருப்பரோ என்கிற சிந்தனையில்...

      நீக்கு
  20. சபீதா மட்டுமல்ல. ஒவ்வொரு அரசுப்பள்ளியிலிருந்தும், வருஷத்துக்கு ஒரு முறையாவது சிறந்த மாணவ, மாணவியரை இப்படி அனுப்பவேண்டும்.

    உடனே, எல்லோரும் இஸ்ரோவுக்குத்தான் போகவேண்டும், நாஸாவுக்கு அனுப்பப்படவேண்டும் என்று கொள்ளக்கூடாது. அறிவியல் என்பது வானியல் மட்டுமே அல்லவே. தலைசிறந்த கல்வி/ஆய்வுக்கழகங்களில் சில என உலகத்தரவரிசையில் வரும் இந்திய ஆய்வுக்கழகங்கள் உண்டு. உதாரணம்: இந்திய விஞ்ஞானக் கழகம் (Indian Institute of Science (IISC), பெங்களூர், இந்திய விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகம் (CSIR), புது தில்லி, Tata Institute of Fundamental Research (TIFR), Mumbai, Saha Institute of Nuclear Physics, Kolkata, Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Bangalore, Indian Institute of Science Education and Research, Tirupati போன்ற கல்வி/ஆய்வுக்கழகங்களில் பள்ளி மாணவ, மாணவியர் ஒரு இரண்டு-நாள் விசிட் அடித்தாலே போதும். உள்ளத்தில் உயரவேண்டும் எனும் உத்வேகம். அறிவினில் தெளிவு உண்டாகும்.
    இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாட்டு கல்வி அமைச்சகம் சம்பந்தப்பட்ட கல்விக்கழகங்களோடு தொடர்புகொண்டு வருடாந்திர ஏற்பாடுகளாக அமைத்தால் நமது இளைய தலைமுறைக்கு நல்லது. செய்வார்களா!

    பதிலளிநீக்கு
  21. இன்று அரசுப்பள்ளியிலிருந்து இஸ்ரோவுக்கு செல்லும் மாணவி அனிதா நாளை அந்த இஸ்ரோவிலேயே விஞ்ஞானியாக பணியாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 
    தான் கற்றதை மற்றவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கற்பிக்கும் ஆசிரியைக்கு வேலை கிடைக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது. 
    துருடர்கள் வந்தால் செல்ஃபோனுக்கு தகவல் அனுப்பும் செயலிகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இருந்தாலும் தன சொந்த முயற்சியால் அதை சாதித்திருக்கும் பள்ளி ஆசிரியர் பாராட்டுக்குரியவர்தான். 

    பதிலளிநீக்கு
  22. ஒரு ரூபாய் மருத்துவமனை, ஆஹா! ரயில்வே நிர்வாகத்தின் பணி சிறப்பு.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே சென்னை மயிலையிலும் இருக்காமே...   கீதா அக்கா சொல்றாங்க...

      நீக்கு
  23. //ரயில் பயணியிரின் அவசர சிகிச்சைக்காகவே, இந்த மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. //

    பாராட்டப் பட வேண்டிய விஷயம். மத்திய ரயில்வே துறைக்கு நன்றி. தமிழக ரயில் நிலையங்களிலும் இதே சேவை இருக்கலாம்.
    மத்திய அரசு என்றாலே ஏனோ பல நலத் திட்டங்களை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். அல்லது அதன் பங்களிப்பு இல்லாதது மாதிரி காட்டிக் கொள்கிறார்கள். ஏனோ தெரியவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு தெரிகிற விஷயம் இது!.. :))

    பதிலளிநீக்கு
  24. //ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதா, 15. // - இஸ்ரோ பார்வையிடலைச் சாத்தியமாக்கியவர்கள் பாராட்டுக்குறியவர்கள். எளிய திறமையான அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு எல்லா உதவிகளும் கிடைக்கணும், அவர்கள் அறிவுப்பசியைத் தூண்டிவிட

    இரவுப்பள்ளி - கோவில் கட்டுவதைவிட கல்வி அளிப்பது மிகுந்த புண்ணியம் அளிக்கும். அவங்க ஒரு தலைமுறையையே வாழ வைக்கிறாங்க. கோமதி அவர்கள் பாராட்டுக்குறியவர்கள்.

    மற்ற நல்ல செய்திகளையும் படித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  25. போற்றத்தக்கவர்கள். போற்றுதற்குரிய பணி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  26. ஒரு உரூபாய்
    மருத்துவப் பணியும்
    கற்பித்தல் பணியும்
    கடவுள் பணி என்பேன்.
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  27. அந்தப் பெண்ணை நாசா தங்களை வந்து பார்வையிட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது.

    ஒரு வாரம் என்று நினைக்கிறேன்.
    அணுவைப் பற்றி அந்தப் பெண் எழுதிய கட்டுரைக்குப் பரிசாக
    இந்தப் பயணம்.
    அவள் மீண்டும் நம் நாட்டுக்கு வந்து இன்னும் சிறப்பாப் படிப்பாள். இன்னும் பள்ளி மாணவிதானே.

    பதிலளிநீக்கு
  28. பள்ளி மாணவிக்கு வாழ்த்துகள் மேலும் பல சாதனைகள் செய்து மிளிர வேண்டும்.

    திருடன் வந்தால் அறிவிக்கும் கருவி நல்ல ஐடியாவாக இருக்கிறது. வாழ்த்துகள் அதை உருவாக்கிய ஆசிரியருக்கு

    கோமதி அவர்களுக்கும் வாழ்த்துகள் நல்ல மனம் படைத்த ஆசிரியை.

    ஒரு ரூபாய் மருத்துவமனை அட போட வைத்தது/. நல்லதொரு விஷயம் இது.
    அனைத்தும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. அனைத்து செய்திகளும் அருமையான நல்ல செய்திகள்.
    இலவசமாய் இரவு பள்ளி நடத்தும் ஆசிரியை பற்றி உங்கள் முகநூல் தளத்தில் படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. அனைத்தும் சிறப்பான செய்திகள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!