ஞாயிறு, 27 அக்டோபர், 2019

ஞாயிறு : முன்தொடரும் வாகனம் - எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்



நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.  வாழ்த்தப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றி.



=======================================================================================================



பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்கள்

நீல வானம்

சூரியனின்  கதிர்கள் மூன்றும் சேர்ந்தால் 

இடத்தை விட்டு நகர்வதற்கு மனம் வருவதில்லை

அப்போது  பார்த்த வலப்புற மலைப்பாதையில் பயணம்

கம்பியில் ஒரு தூமகேது!

முதல் முறையாக ஒரு சிலுவை தாங்கிய கட்டடம்

ஏனிங்கு விளம்பர பலகைகள் ஒரு பொதுக்கூட்டம் போட்டிருக்கிற மாதிரி

படிக்க முடியவில்லை!


காலை வேளை , சாலை வளைவு  அழகு 



நிழல் விழாத இடங்களும்


நிழல் படிந்த சாலையும் , சாலையிலிருந்து வேகத்தடை உபயம்

ரசனை மிக்க லொகேஷன், வீடு மட்டுமல்ல, கடையும்தான்


பின்தங்கிய பசுமை!


அதோ அந்தக் கார்.....


அது ஏன் பிடிவாதமாக நம்மை முன்தொடர்கிறது?!

பஸ்ஸுக்கு காத்திருக்கும் குடும்பம்

மேகம் முளைக்கிறது

சுரங்க வாயில்

கடந்துவந்த பாதையைக் காண ஒரு சந்தர்ப்பம்



சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் 
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் 
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்.





72 கருத்துகள்:

  1. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. எங்கெங்கும் மகிழ்ச்சி
    என்றென்றும் தங்குக...

    பதிலளிநீக்கு
  3. இங்கே வரப்போகும் நண்பர்களுக்கும் வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நீங்க கொண்டாடி முடிச்சு அலுப்பு வரும்போது இங்கே ஆரம்பிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. பிரார்த்தனைகளுக்கு நன்றி.   நல்வரவு.   தீபாவளி வாழ்த்துகள்.

      நீக்கு
  4. இன்னிக்கு என்னமோ என்னோட மௌஸ் கூட (நான் மடிக்கணினியிலும் மௌஸ் பயன்பாடுதான். இல்லைனா கைகள் வலி வருகிறது.) குதியோ குதினு குதிக்குது. நான் க்ளிக் செய்யும் முன்னரே வெளியிடு என்னும் குறியீட்டைக்கண்டதுமே குதித்துக்கொண்டு கருத்துகள் வெளியாகின்றன. அதுவும் தீபாவளி கொண்டாடுகிறது போல! அதுக்குள்ளே ஒரு Video call, ஒரு Audio call! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம் குடும்பத்துக்கு தீபாவளி வாழ்த்துகள்.

      தலை(வி) இருக்க வாலாடலாமா? மௌசைக் கண்டித்து வையுங்கள்.

      நீக்கு
    2. மௌஸ் கொண்டாடுகிறது போல!   அல்லது உங்களுக்கு தூக்கக் கலக்கம் 

      நீக்கு
    3. போய்ப் படுக்கிறது தான் சீக்கிரமே தவிர, தூங்கறதுக்கு/தூக்கம் வர ஒவ்வொரு நாட்கள் பதினோரு மணி கூட ஆயிடும். கண்ணுக்கு அதிகம் வேலை இரவில்கொடுக்க வேண்டாம் என்பதால் சீக்கிரம் போய்ப் படுத்துடுவேன். ஆகவே தூக்கக்கலக்கம் தான். மௌஸ் அடிக்கடி இப்படிக் குதிக்கும். சில சமயங்கள் பிரித்து வைத்த பக்கமே காணாமல் போகிறது! :))) எ.பி.பேயாரோனு நினைச்சேன். ஆனால் அவர் நல்ல பேயார்!

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்

    தங்களுக்கும், வரும் அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.  உங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  6. எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவில் எனக்குப் பரிச்சயமான கேஜிஒய் சார் மற்றும் குடும்பம், ஶ்ரீராம் & ஃபேமிலி, கேஜிஎஸ் சார், இதுவரை காணாத கேஜிஜி சார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    தளத்தில் பரிச்சையமான அனைத்து நண்பர்களுக்கும் (மேல் சாவனிஸ்ட் இல்லீங்கோ.. இது கோ.அ மேடம், கீசா மேடம், வ.சி மேடம், கீ.ர அக்கா, க.ஹ மேடம், பா.வெ மேடம் மற்றும் பலருக்கும் பொருந்துமுங்கோ) இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ரெண்டு மூணு மேடங்களை விட்டுவிட்டதாகத் தெரிகிறது. விளாவாரியாக இது பின்பு பேசப்படுமோ !

      நீக்கு
    2. நன்றி நெல்லைத்தமிழன்.   தீபாவளி வாழ்த்துகள்.

      நீக்கு
  7. பெயர் எழுதி வாழ்த்த ஆரம்பித்தால் பலர் விட்டுப்போகும் அபாயம் இருக்கு. அதிரசம் செய்பஙர்கள், ரவா லட்டு செய்தவர்கள் என பலர் மிஸ் ஆகிவிட்டனர். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மேடையில் பேசுவது  சுஜாதா ஒருதரம் சொல்லியிருந்தார்.  இவரைக் கடைசியாகப் பேசச் சொல்லி நேரம் ஒதுக்கியிருந்தார்களாம்.  இவர் பேசவேண்டும் என்றுநினைத்துக் கொண்டிருந்த எல்லாவற்றையும் முன்னால் வந்த பேச்சாளர்கள் பேசிவிட, இவர் டர்ன் வரும்போது எழுந்து மேடையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி விளித்து, இதனுன் என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன் என்று அமர்ந்து விட்டாராம்!

      நீக்கு
  8. ரசனை மிக்க லொகேஷன் மிக அருமை. படம் பிடித்தவரின் ரசனை அருமை. இத்தகைய நீல வானத்தை மலைப்பிரதேசங்களிலேயே காண முடிகிறது. திடீரென மேகங்கள் எங்கிருந்தோ முளைச்சு வானத்தையே மூடிடும். அரவங்காட்டுக் குடியிருப்பின் வாசலில் இருந்து எதிரே வெலிங்க்டன் மலையில் நகரும் மேகக்கூட்டங்களையும் வானவில் போல் வளைந்தே காணப்படும் வானத்தையும் பார்த்து ஆச்சரியமா இருக்கும். இதன் முன் நாம் எவ்வளவு சிறியவள் என்னும் எண்ணம் தோன்றும். திடீரென எதிர் மலையில் மழை பெய்யும். இல்லைனா கீழே அரவங்காடு ரயில்வே ஸ்டேஷனில் மழை பெய்யும். எங்க குடியிருப்புப் பக்கம் மழை பெய்யாது. மேகங்கள் என்னைக் கடந்து வீட்டுக்குள்ளே நுழையும்! சொர்க்கம்!

    பதிலளிநீக்கு
  9. எப்படியோ ஒரு ஜிவாஜி படத்தின் பாடலைக் கொண்டு வந்துட்டீங்க! ஜன்மம் சாபல்யம் ஆகி இருக்கும். ஆனாலும் ஜிவாஜி நல்லவேளையாக் கதாநாயகனா நடிக்காததால் எனக்கு இந்தப் படம் பிடிக்கும். ரசித்திருக்கேன். (யாரு அங்கே அப்பாடா! என்பது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாந்தேங்!....

      இந்த ஒன்றாவது பிடித்திருக்கிறதே....

      நீக்கு
    2. அது என்ன மாயம்!...

      பந்தம் பாசம், இன்பம் துன்பம், பண்டிகை திருநாள் என்பனவாகிய குறித்த திரைப் பாடல்கள் நடிகர் திலகம் அவர்களுக்கே (பெரும்பாலும்)அமைந்திருக்கின்றன....

      நீக்கு
    3. நடிகர் திலகம் குடும்பக் கலைஞர் ! மற்றவர்களைப் பற்றி இப்படி எளிதாகச் சொல்லமுடியாது..

      நீக்கு
    4. திரு ஏகாந்தன் அவர்களது கருத்து ஏற்புடையது....

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..


      விடியற்காலையில் தங்களது தளத்தில் பதிவு செய்ய முயன்றேன்.. முடியவில்லை...

      நீக்கு
    5. என்ன, சிவாஜி அதில் கதாநாயகன் இல்லையா?  பின்னே யார் கதநாயகன்?  அப்புறம் எனக்கென்ன பயம்...   வெள்ளி வீடியோவில் போட்டு விடுவேனே...

      நீக்கு
    6. //பந்தம் பாசம், இன்பம் துன்பம், பண்டிகை திருநாள் என்பனவாகிய குறித்த திரைப் பாடல்கள் நடிகர் திலகம் அவர்களுக்கே (பெரும்பாலும்)அமைந்திருக்கின்றன....//

      அடடே....

      நீக்கு
    7. @ துரை செல்வராஜு:
      நன்றி. தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் தீபாவளி தரும் இன்ப உணர்வுகளில் திளைத்திருப்பீர்களாக!
      என் தளத்தில் கருத்து பதிவுசெய்வதில் தடங்கலா, அல்லது தாமதமாகிறதா.. ஏனிப்படி? தெரியவில்லையே..

      நீக்கு
    8. //..விடியற்காலையில் தங்களது தளத்தில் பதிவு செய்ய முயன்றேன்.. முடியவில்லை//

      ஓ...இது கீதாஜி அவர்களுக்கான கமெண்ட் போலிருக்கிறதே ! நான் சம்பந்தமில்லாமல் குறுக்கே வந்துவிட்டேனோ..

      நீக்கு
    9. //என் தளத்தில் கருத்து பதிவுசெய்வதில் தடங்கலா, அல்லது தாமதமாகிறதா.. ஏனிப்படி? தெரியவில்லையே..//ஏகாந்தன் சார், உங்கள் தளம் வேர்ட் ப்ரஸ்! எனக்கும் சமயங்களில் பிரச்னை வரும். இப்போதெல்லாம் கூகிள் மூலமாகவே கருத்துச் சொல்கிறேன்.

      நீக்கு
  10. ஓகே, தூங்கப் போறேன். காலம்பர எழுந்துக்கணும். 2 நாட்களாக இங்கே குளிர் பத்து டிகிரிக்குப் போய்விடுகிறது. நேற்று வெளியே போனப்போக் குளிரோடு காற்றும் சேர்ந்து அடித்தது. கோட் போட்டுக்கொண்டு போக வேண்டி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு சென்னையில் இப்போது குளிர் நின்றுபோய் வியர்க்க ஆரம்பித்து விட்டது!

      நீக்கு
  11. அழகிய காட்சிகள் ஜி

    தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. எப்போதும் போலவே படங்கள் அருமை.

    அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் நெல்லைத்தமிழன் திண்டுக்கல் தனபாலம் கில்லர்ஜி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மாமா மாமிகளுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழனுக்கும் எங்கள் தீபாவளி தின வாழ்த்துகள். என்ன ஒண்ணு.. இங்க இருந்தபோது வெடிச்சத்தம்லாம் கேட்டு தீபாவளி மனசுல நிக்கும். அந்த ஊர்ல எங்க இதெல்லாம்....

      நீக்கு
    2. நன்றி மதுரை...   உங்களுக்கும் மாமிக்கும் எங்கள் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    3. எங்க ஊருல் அதாவது எங்க வீட்டுல தினமும் தீபாவளித்தான் மாமி போடும் சத்ததைவிடவா தீபாவளி வெடி சத்தம் பெரிதாக இருந்துவிடப் போகிறது

      நீக்கு
    4. @ மதுரைத் தமிழன் - //மாமி போடும் சத்ததைவிடவா தீபாவளி வெடி சத்தம்// - உங்களுக்குத் தெரியுமா? மனசுல நம்முடைய குற்ற உணர்ச்சினால, எழுத்துல அதுக்கு நேர் மாறாக எழுத்தாளர்கள் எழுதுவாங்களாம். அதாவது ஒரு எழுத்தாளர், 'பெண்மை வாழ்க, பெண்களை ரொம்ப மதிக்கணும்... மனைவியை ரொம்ப மதிப்பவர்கள், குழந்தைகளிடம் அன்பாக இருப்பவர்கள்' என்ற மாதிரி ரொம்ப எழுதினாங்கன்னா, அவங்க சொந்த வீட்டுல, இதுக்கு நேர் மாறாக டெரர் ஆகத்தான் நடந்துகொள்வார்களாம். நீங்க அந்த மாதிரி எழுத்தாளர் இல்லையே?

      சும்மா..டவுட் வந்தது..கேட்டேன்.

      இதுக்கு நீங்க பதில் எழுதினாலும் யாரும் நம்ப மாட்டாங்க. ஒரு போட்டோ (வீங்கின முகத்துடன்...இல்லைனா ரொம்ப சுருங்கிய முகத்துடன்) போட்டுட்டீங்கன்னா... என் (எங்கள் எல்லோரின் ஹா ஹா) டவுட் கிளியராயிடும்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  15. முன்னால் போகும் வாஹனம் முன் தொடரும் வாஹனம் என்றால் பின்னால் வருவது வழிகாட்டியோ? அகராதியை மாற்றி விட்டீர்கள். தீபாவளி வாழ்த்துகள்
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா... ஹா..   

      வாங்க ஜேகே ஸார்...    கவனித்து பதில் சொல்லி இருப்பதற்கு நன்றி.

      உங்களுக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  16. 'எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்' படித்ததும் பிடித்தது.
    நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்துகள்.தித்திக்கட்டும் தீபாவளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி மாதேவி.   உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. பாடல்கள் நல்ல தேர்வு.
    பிடித்த பாடல்.
    இனிமையான பாடல்.தலைப்பை பார்த்து நினைத்தேன் இந்த பாடலை , கீழே பகிர்ந்து இருக்கிறீர்கள் பாடலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.   தலைப்பில் பாடல் உள்ளே இருக்கிறியாது என்று சொல்லி விட்டேன்!  நன்றி அக்கா.

      நீக்கு
  20. அமைதியான அழகான சாலை.
    சுகமான பயணம்.
    இயற்கையை ரசித்து கொண்டு பயணம் செய்ய மகிழ்ச்சிதான்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. எங்கள் ப்ளாக் குழும ஆசிரியப் பெருந்தகைகள், அவர்தம் குடும்பத்தினர், மற்றும் எபி-யின் வாசக, வாசகிகள் அல்லது பார்ட்னர்கள் (!), அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் தேன் தீபாவளி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார்.   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  22. வாழ்த்துகள் உரைத்த எல்லோருக்கும் நன்றி. வாழ்த்தியவர்களுக்கு, எங்கள் வாழ்த்துகள் உரித்தாகுக!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    ஞாயிறு படங்கள் அருமை. இரண்டாவது படம் நீல வானம் மிகவும் நன்றாக உள்ளது. படங்களும் அதற்குரிய வாசகங்களும் பொருத்தமாக அழகாக உள்ளது ரசித்தேன்.

    பாட்டுக்கள் தீபாவளிக்கு மிகப் பொருத்தம்.
    நான்தான் "நீல வானம்" என்று படித்து விட்டு சிவாஜி பாட்டையும், கார்கள் போகும் பாதைகளையும், ஜெமினியின் பாட்டையும் (இரண்டும் நன்றாக ஒத்துப் போகிறது இல்லையா? இரண்டாவது பாச மலரில் வருமே.. ஜெமினி, சாவித்திரி பாடும் பாடல் யார் யார் யார் அவள் யாரோ... ) கேட்டு மகிழ்ந்ததும், இன்று "வெள்ளியோ" என சந்தேகம் கொண்டு காலண்டரைப் போய் ஒரு முறைப் பார்த்து வந்தேன். ஹா. ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா, நீலவானம் படம் இங்கே எங்கே வந்தது? ஒண்ணு "மூன்று தெய்வங்கள்" இன்னொன்று "கல்யாணப்பரிசு". அதோடு "யார்யார், யாரவள் யாரோ!" பாடல் பாசமலரில் வராதே!

      நீக்கு
    2. அது வேறு ஒன்றுமில்லை சகோதரி.. மூன்று தெய்வங்கள் பட பாடல் எனத் தெரியும். அந்தப் பாடலை ரேடியோவில், தொ. காட்சியில் ஏற்க்கனவே நிறைய கேட்டு ரசித்திருக்கிறேன். நேற்று இங்கும் கேட்டு ரசித்தேன். நீலவானம் ஞாயறு படங்களில் ஒன்றான கேப்ஷன். இதுவும் அதுவும் (மூ. தெய்வங்கள்) சிவாஜி படம் (எனவே இதற்கும், அதற்கும் ஒரு கற்பனை முடிச்சு.)

      இது போல ஞாயரின் கார் யயண படங்களுக்கும், பாசமலர் ஜெமினி பாட்டுக்கும் ஒரு க. முடிச்சு. பாசமலரில்தானே அந்த பாட்டு?அப்படித்தான் நினைத்தேன். சரியாக தெரியவில்லையோ ? (ஸ்ரீராம் சகோதரர் தயவு செய்து முந்தைய பதிவுதானே என எண்ணாமல் உதவிக்கு வரவும். ப்ளீஸ். ஹா. ஹா. ஹா.)

      தங்கள் சந்தேகங்களை கேட்டதற்கு மிக்க நன்றிகள் சகோதரி. (நான் எப்போதுமே வி.. ரி.. வாக எழுதுபவள்.நேற்று என்னவோ இப்படி தொடர்பில்லாத வகைகளாக சுருக்கி... ஹா. ஹா. ஹா.) நன்றி சகோதரி.

      நீக்கு
  24. cherry blossoms டோக்யோ வாழ்க்கை நாட்களை நினைவுபடுத்துகிறது

    பதிலளிநீக்கு
  25. எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும், வாசக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

    அழகிய பயணக் காட்சிகள்!

    பதிலளிநீக்கு
  26. எல்லோரும் தீபாவளி நன்றாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
    இனிய தீபாவளிப் பாடல்கள். மூன்று தெய்வங்கள்
    படப்பாடல் மிக இனிமை.
    உன்னைக் கண்டு நானாட பாடல் ,ஞாபகம் வருதே தான்
    நினைவுக்கு வருகிறது.
    படங்கள் திகட்டாத அழகாக இருக்கின்றன. கொடுக்கப் பட்ட காப்ஷன் களும்
    கூடவே பயணிக்க வைக்கிறது.

    எங்கள் ப்ளாக் குழும ஆசிரியர்களுக்கும்,
    எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கும்
    தீபாவளி நன்னாள் என்றும் ஒளி தரட்டும்.
    மனம் நிறை வாழ்த்துகள்.
    வெகு நாட்களுக்குப் பிறகு பட்டி மன்றத்தோடு தீபாவளி சாப்பாடு இனிதே
    நிறைவேறியது.

    பதிலளிநீக்கு
  27. அருமையான பதிவு

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  28. இன்னும் ஏழரை ஆகலை இங்கே. ஆனால் கணினியில் சார்ஜ் தீர்ந்து போச்சு! ஆகவே காலம்பரத் தான் வரணும். வர்ட்டா?

    பதிலளிநீக்கு
  29. அழகான படங்கள்.

    பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!