அடுத்த வீட்டுப் பெண் படத்தின் ஹிந்திப் படம் படோசன். 1968 இல் வெளிவந்த திரைப்படம். உண்மையில் படோசன், அடுத்த வீட்டுப்பெண், இவை யாவற்றுக்குமே பெங்காலிதான் மூலம். தெலுங்கில் இரண்டு முறையும், ஒருமுறை கன்னடத்திலும் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதைக்கான தலைப்பு எல்லா மொழிகளிலும் அதேதான்! அடுத்த வீட்டுப் பெண் தமிழில் 1960 இல் வெளிவந்தது.
ஆர் டி பர்மன் இசை. இந்தப் படத்தில் இரண்டு கிஷோர் குமார் பாடல்கள் ஒன்று எனக்கு மிகவும் பிடித்த "மேரே சாம்னேவாலி கிட்கி மெய்ன்.." இரண்டாவது "கெஹனா ஹை... கெஹனாஹை.."
இதைத்தவிர இன்னொரு பாடல் இந்த 'பாயிபத்தூர்...'
சாயிரா பானு பின்னர் வந்த நம்மூர் ஜெனிலியா மாதிரி போல இந்தப் படத்தில்! அல்லது இந்தக்காட்சியில்.! லதா மங்கேஷ்கரின் இனிய / இளைய குரலில் பாடல். இதில் சரணத்தில் வரும் ஹம்மிங் தமிழில் எஸ் பி பி இழுப்பார்!
சாய்ரா பானுவின் நடிப்பு சற்றே எரிச்சலைக் கொடுத்தாலும் பாடலை கேட்கலாம். அடுத்து அதே பாடலை தமிழில் எஸ் பி பி குரலில் தட்டாது தவறாது கேளுங்கள்.
வரிகள் இந்தப் பாடலுக்கு நான் கொடுக்கவில்லை!
இனி தமிழுக்கு வருவோம்... முன்னால் அந்த ஹிந்திப்பாடலை தவறாது முழுசாக கேட்டீர்கள் இல்லையா? அப்போதுதான் தமிழில் எப்படியிருக்கிறது என்று சொல்ல முடியும்!
'ஏன்' திரைப்படம் மறுபடியும். இதில் முன்னரே ஒரு பாடல் பார்த்தோம். 'இறைவன் என்றொரு கவிஞன்...' இன்றைய பாடல் அதே படத்தின் இன்னொரு பாடல். இசை டி ஆர் பாப்பா என்று போட்டிருக்கும். நம்பாதீர்கள். மேலே கேட்டீர்கள் அல்லவா? இசை ஆர் டி பர்மன். எஸ் பி பி - சரளா இணைந்து பாடி இருக்கும் இந்தக் காட்சியில் ஏ வி எம் ராஜன் - லக்ஷ்மி அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள்.
ஹிந்திப் படத்திலிருந்து காபி அடிக்கும்போது அப்போது இப்படி ஒரு உரையாடல் தயாரிப்பாளருக்கும் இசை அமைப்பாளருக்கும் நடந்திருக்கக் கூடும்...
"அண்ணே... அந்த பாட்டைக் கேட்டீங்க இல்லே... நல்ல டியூன்ணே... செம... அதை அப்படியே நம்ம தமிழ்ல கொண்டுவர்றோம்.."
"செஞ்சுடலாம்.. ஆனா நான் என் டியூன் நிறைய வச்சிருக்கேன்... கேக்கறீங்களா? நான் கூட நல்லா டியூன் போடுவேன்ணே..."
"கேப்போம்... கேப்போம்... அது தனியா... ஆனா இந்தப் பாடலும் கட்டாயம் அடிக்கிறோம்..."
"சரிண்ணே... அடிச்சுடறேன்... பணம் கொடுக்கறவர் நீங்க... நீங்க சொன்னா கேட்டுதானே ஆகணும்..."
"ஆனா அந்தப் படத்துல ஸீன் நல்லாயில்ல... குளிச்சுட்டு வருது... நாற்காலி மேல ஏறி குதிக்குது... குரங்கு சேஷ்டை எல்லாம் பண்ணுது... நாம அப்படி வைக்கக் கூடாது... கௌரவமா இருக்கணும்... பக்தியா இருக்கணும்... இன்னும் சொல்லப் போனா அண்ணன் தங்கச்சி பாட்டா ரெண்டு பேரும் பாடறா மாதிரி வச்சுடலாம்... என்ன சொல்றீங்க...."
"நீங்க சொன்னா சரிதான்ணே...."
கற்பனை உரையாடல்தான்! இனி பாடலுக்குப் போவோம்!
எஸ் பி பியின் இனிய குழைவான குரல் இந்தப் பாடலுக்குப்பெரிய ப்ளஸ்.
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம்பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம்பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
அண்ணனுக்கு பெண்பார்க்க வரும் அண்ணியை என் கண்பார்க்க
என் தங்கையின் துணையை நான் பார்க்க அந்த இன்பத்தை நீ பார்க்க
மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும்
திரு நாளுக்கு வருகின்ற விருந்தினர்கள் அவர் பாவை என் உறவினர்கள்
முன்னவனோ ஆலமரம் தம்பிமுளைத்து வரும் சின்னமரம்
எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம் எங்கள் வாழ்வே அன்பு மயம்...
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவாங்க... வாங்க...
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குவருவாயா வேல் முருகா!...
பதிலளிநீக்குஇனிய பாடல்... 😃.. மகிழ்ச்சி.. நன்றி..
ஹிந்திப் பாடலையும் கேளுங்க...
நீக்குA very good morning .ஸ்ரீராம். இன்னும் வரப் போகிறவர்களுக்கு
பதிலளிநீக்குவணக்கங்கள். வருவாயா வேல்முருகா மனம் நிறைக்கும் பாடல்.
வெகு இனிமை. அந்தத் தம்பி தானே ராமு படத்தில் நடித்தது.
வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். படோசன் பாடலும் கேட்டிருப்பீர்கள். இப்போது கேட்டீர்களா?!! ஆம், அந்தப் பையன்தான் ராமுவில் பார்க்கும் முகமும் என்று நினைக்கிறேன். நான் இந்தப் படமும் பார்க்கவில்லை. அந்தப்படமும் பார்க்கவில்லை!
நீக்குபடோஸன் கேட்காமல் இருக்க முடியுமா.
நீக்குகிஷோர் குமார் குரல் .இனிமேல் யார் பாடமுடியும் அது போல. ஜனரஞ்சகம், க்ளாஸிக் எல்லாம் கலந்து
இசையிலிருந்து வழுவாமல் ஒலிக்கும் அந்தக் குரல்.
நம் பிபிஎஸ் ,மாலையில், மலர்ச்சோலையில் என்ன வசீகரமோ அதே போலத்தான்.
தங்கவேலு ,எம் சரோஜா நகைச்சுவை வெகு பிரபலம்.
அஞ்சலிதேவியின் நளினம் ,சைராபானுவுக்கெல்லாம் வராது.
கோவையில் எங்கள் நண்பர் சைராபானு என்று தம் லாரிக்குப் பெயர் வைத்தார்:)
அம்மா நான் லிங்க் வகையறாவில் கிஷோர் கொடுத்திருந்தாலும்,
நீக்குகாணொளியில் லதாமங்கேஷ்கர் பாடல் கொடுத்திருக்கிறேனே....
சாய்ரா பானுவை திலீப்குமார் காதலித்து மணந்தார் என்று ஞாபகம். இல்லையா?
ஆமாம். கேட்டேன் மா. கிஷோர் முதலில் ரசித்தேன் பா.:)
நீக்குஸாயிரா பானு 70 களில் கனவுக்கன்னி. அவருடைய வோ ஹை ஸரா ஹஃபா. தினம் கேட்பேன்.
நீக்குhttps://youtu.be/GmqJaXF-AFIஇதோ இந்தப்பாடல்.
நீக்குஜாய் முகர்ஜியுடன் ஆடும் பாடலா? ஷாகிர் படம். அதிலேயே இன்னொரு பாடல் உண்டே... 'தில் வில் பியர் வியார்' இரண்டுமே எனக்கும் மிகவும் பிடிக்கும்மா.
நீக்குஓ. அதும் தான்.:)
நீக்கு'தில் வில் Bier வியார்' -ஆ!
நீக்குஹா... ஹா... ஹா... ப்யார்!
நீக்குஇனியகாலை வணக்கம் ஸ்ரீராம்...
பதிலளிநீக்குதேம்ஸ் பக்கம் போய் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு ஹூஸ்டன்ல வித விதமான பாரம்பரிய ரசம் குடித்துவிட்டு தில்லியில் ஒரு கால் வைக்கும் போது கணினி ஏற்கனவே இதோ இதோ நான் டயர்டாகிட்டேன் படுக்கப் போறேன் என்று தேம்ஸில் குரல் எழுப்ப அது தில்லி வந்ததும் உட்கார்ந்துவிட....!!!!!!
கொஞ்சம் இளைப்பாற வைத்து வந்திருக்கிறேன். பார்ப்போம் எதுவரை ஓடுகிறது என்று..
பாட்டு கேட்டுவிட்டு வருகிறேன் ஸ்ரீராம்..
கீதா
வாங்க கீதா... இனிய காலை வணக்கம். மெதுவா வாங்க... ரெண்டு பாட்டையும் கேளுங்க... கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.
நீக்குபாடலைக் காப்பி அடிக்கட்டும். அதற்காக முருகனை அழைப்பதற்கு முன்னால் வளைந்து நெளிந்து அந்தத் தொகையறாவை துண்டித்திருக்கலாம். ஹம்மிங்குக்கும்,சட்டேன முருகனைக் காண்பிப்பதற்கும் பொருத்தம் இல்லை.
பதிலளிநீக்குஅழகான குடும்பப் படம். நானும் இந்தப் படம் பார்க்கவில்லை. அந்தப் பையன் முகம் பல தடவை தொலைக் காட்சியில் பார்த்ததனால் நினைவில் இருக்கிறது. நீங்கள் கண்டு பிடித்ததுதான் அதிசயம். துப்பறியும் சாம்பு மாதிரி.
//நீங்கள் கண்டு பிடித்ததுதான் அதிசயம். துப்பறியும் சாம்பு மாதிரி.//
நீக்குஹா...ஹா... ஹா... நான் எங்கே கண்டு பிடிச்சேன்? நீங்க சொன்னதை வழிமொழிந்தேன்! ஓ.. அதுதான் துப்பறியும் சாம்பு மாதிரி என்கிறீர்களா?!!!!!
அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். படோசனும் பார்த்திருக்கேன். அடுத்த வீட்டுப் பெண்ணும் பார்த்திருக்கேன். காலம்பர வந்து மத்ததைப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.....நல்வரவும், வணக்கமும், நன்றிகளும்...
நீக்கு//காலம்பர வந்து மத்ததைப் பார்க்கிறேன்.//
இப்படிதான் நேற்றும் சொன்னீங்க! உங்க கால்வலி தேவலாமா?
அடுத்த வீட்டுப் பெண்'ணை காப்பியடிக்க மொழி பேதமின்றி போட்டு போடுறாங்களே...
பதிலளிநீக்குதமிழ் கேட்ட பாடல்
ஹிந்தி கேட்டேன் பாடல்
தமிழே காபிதான் கில்லர்ஜி. பெங்காலிதான் மூலம் !
நீக்குநன்றி.
ஜி காப்பியடிப்பதில் எல்லா மொழியினரும் ஒன்றே...
நீக்குஎன்று சொல்கிறேன்.
அது சரி... நன்றி ஜி.
நீக்குவருவாயா வேல் முருகா..
பதிலளிநீக்குஎன் மாளிகை வாசலுக்கே!..
வருவேன் நான்
உனது மாளிகை வாசலுக்கே!..
நீ வருவாய் என நானிருந்தேன்...
ஏன் மறந்தாய் என நானறியேன்!..
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி!..
வரச்சொல்லடி.. அவனை
வரச்சொல்லடி.. என்
வாயார ஒரு முத்தம்
நானாகத் தரவேண்டும்..
வரச்சொல்லடி...💋
இதற்குத் தானே காத்திருந்தாய்
கோல முருகா!..
ஆளை உடுங்கப்பா சாமிகளா!...
நல்லாயிருக்கு லிஸ்ட். அப்போ நானும் கொஞ்சம்....
நீக்குவருகவே வருகவே.. என் தலைவா
வரவேண்டும் மகாராணி
காத்துக் காத்துக் கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்...
வா வா வசந்தமே..
😀 😀 😀
நீக்குஹா ஹா ஹா துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம்
நீக்குபாடல் வரிகளைக் கொண்டே கவிதையா!!!!!!
கீதா
👋 👋 👋....
நீக்குஇந்தப் படத்தில் இரண்டு கிஷோர் குமார் பாடல்கள் ஒன்று எனக்கு மிகவும் பிடித்த "மேரே சாம்னேவாலி கிட்கி மெய்ன்.." இரண்டாவது "கெஹனா ஹை... கெஹனாஹை.."//
பதிலளிநீக்குஎனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.
நன்றி ஜோஸப் ஸார். கிஷோரின் ரசிகன் நான்.
நீக்குஇறைவன் என்றொரு கவிஞன்...' இன்றைய பாடல் அதே படத்தின் இன்னொரு பாடல். //
பதிலளிநீக்குஇது எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல். பழைய சுகமான நினைவுகளை தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி.
'இறைவன் என்றொரு கவிஞன்' சென்ற மாதம் பகிர்ந்திருந்தேன் ஜோஸப் ஸார். நன்றி.
நீக்குகற்பனை உரையாடல்தான்!//
பதிலளிநீக்குஆனால் சுவையான கற்பனை:))
நன்றி ஜோஸப் ஸார்.
நீக்குஸ்ரீராம் பாடல் கேட்டிருந்திருப்பேன் ஆனால் டக்கென்று நினைவுக்கு வரவில்லை எனவே இப்ப கேட்டதாகவே வைச்சுக்கறேன் ஹிஹிஹி
பதிலளிநீக்குட்யூன் அருமை! அதான் ஹிந்தி ட்யூன். அதே தானே தமிழ்ல போட்டிருக்காங்க (அப்புறம் எதுக்கு இசையமைப்பாளர்னு பெயர்??? தமிழிலும் ஆர் டி பர்மனிடம் சொல்லிவிட்டுப் அவர் பெயரையே போட்டிருக்கலாமே...அப்படி முடியாதோ? நடைமுறையில்?
தமிழ் வெர்ஷன் எஸ்பிபி அருமை. என்ன வாய்ஸ்!
வா வா முருகா வுக்கு ஹம்மிங்க் பொருத்தமாக இல்லை. அப்படியே போட்டிருப்பதால் பாடல்வரிகளுக்கு ஏற்ப இசை இல்லை..
கீதா
இந்தப் பாடலில் (தமிழ்) ப்ளஸ் என்பது எஸ் பி பி... எஸ் பி பி... எஸ் பி பி மட்டுமே!
நீக்குதமிழ் வெர்ஷன் எஸ் பி பி யால் சூப்பாராகிடுச்சு. எஸ் பி பி வாய்ஸ் வாவ் செம
பதிலளிநீக்குநாயகனும் எனும் இடத்தில் கொடுக்கும் அசைவு அப்புறம் எல்லா வரிகளிலும் பாலு ஒரு ஃபீல் கொடுத்து சின்ன சின்ன அசைவுகள் கமகங்கள் கூர்ந்து கவனித்துக் கேட்டால் தெரியும் கவனிச்சீங்கதானே ஸ்ரீராம்...
அதுவே இந்த ட்யூனுக்கு ஒரு ஆர்னமெண்டலாகிடுது...எஸ்பிபி டாப்ஸ்...
கீதா
என் மைண்ட் வாய்ஸை அப்படியே கேட்ச் பண்ணியதற்கு நன்றி கீதா!
நீக்குஹிந்தி ட்யூன் தான் அப்படியே தமிழ்ல வந்திருக்கு..ஓகே
பதிலளிநீக்குஇன்னொன்னு கவனிச்சீங்களா ஸ்ரீராம்....ட்யூன் ஆரத்திப் பாடல்னு பாடுவாங்கல்ல பஜன்ஸ்ல நாராயண நாராயண் ஓம் சத்ய நாராயண நாராயண ஓம்னு அதே மெட்டு...வட இந்தியாவுலதான் இந்த ஆரத்தி இந்த மெட்டுல கூடுதல் அது இப்ப இங்கும் வந்துருச்சு.
இப்ப எனக்கு ஒரு டவுட்டு இந்தப் பாட்டு கேட்டப்புறம்....இந்த ட்யூன் பர்மனின் அமைத்த இசையிலி இருந்து பஜனுக்கு வந்ததா இல்லை வைஸ் வெர்சாவா?!!!
கீதா
ஓ... இது எனக்கு செய்தி.
நீக்குஎனவே அந்தக்கேள்விக்கு என்னிடம் விடையில்லை!
அட... நீங்களும் ஆரத்தி பாடல் டியூன்னு இங்க சொல்லியிருக்கீங்க.
நீக்குஆர்த்தி பாடல் ட்யூன் வித்தியாசமாய் இருக்கும்.
நீக்குஸ்ரீராம் உரையாடல் ஹா ஹா ஹா ரகம்!!!
பதிலளிநீக்குஅப்படினா நிறைய இப்படி உரையாடல் நடந்திருக்குமோ...
கீதா
அதே கண்கள் படத்துக்கோ வேறு எதற்கோ கிட்டத்தட்ட இந்த மாதிரி உரையாடல் தயாரிப்பாளருக்கும் வேதாவுக்கும் நடந்த மாதிரி படித்த நினைவு. அதே கண்கள் படத்தில் வேதா சொந்த இசை அமைத்திருப்பார். என்று சொல்வார்கள். ஆனால் ஆங்கிலப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் உருவி இருப்பார்.
நீக்குஅதே ட்யூன் என்பதால் தமிழில் எஸ்பிபியிடம் அந்தப் பாடலை மட்டும் சொல்லிருப்பாங்க...மற்றபடி முழு சுதந்திரம் எஸ்பிபிக்கு அதான் அவர் பாணியில் விளையாடியிருக்கிறார்...
பதிலளிநீக்குகீதா
செமையா....!
நீக்குYes Yes ஸ்ரீராம் மீண்டும் 4,5 தடவை கேட்டாச்சு...
நீக்குகீதா
இனிமையான பாடல். ஹிந்தி கேட்டதில்லை.
பதிலளிநீக்குநன்றி சகோதரி மாதேவி.
நீக்குஉங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். அதிரா போல எனக்கும் ஒரு சந்தேகம். இங்கு அப்புறம் தரப்படும் பதில்களை நீங்கள் படிப்பீர்களா என்று!
நீங்கள் ஏன் திங்கக்கிழமைக்கு சமையல் குறிப்பும், செவ்வாய்க்கிழமைக்கு கதையும் அனுப்பக் கூடாது?
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் மிக அருமையாக உள்ளன. "வருவாயா" பாடல் நிறைய தடவை கேட்டு ரசித்திருக்கிறேன். எஸ்.பி. பியின் குரலில் பாடல் தேன்..(இதைவிட ஏதேனும் இனிமை யென்றால் அது..)
ஆனால் இது "அடுத்த வீட்டுப் பெண்" என்று தெரியாது. (ஹிந்தி தழுவலைதான் சொல்கிறேன்.) நீங்கள் சொல்லியிருப்பது பார்த்தால், அடுத்த வீட்டுக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணாக தெரிகிறதே..!
அடுத்த வீட்டுப் பெண் என்று பழைய படம் ஒன்று உண்டல்லவா? தங்கவேலு, அஞ்சலிதேவி, டி. ஆர் ராமசந்திரன் நடித்தது. அதில் ஒரு பாடல் மிகவும் நன்றாக இருக்கும். "கண்ணாலே பேசி, பேசி கொல்லாதே..." அதே பாடல் தெலுங்கிலும் நன்றாக இருக்கும். அங்கிருந்து இங்கா, இங்கிருந்து அங்கா என்ற விபரம் தெரியாது.
இந்த ஹிந்தி பாடலும் கேட்டிருக்கிறேன். "ஆராதனா" பாடல்கள் கூட சில தமிழ் படங்களில் இடம் பெற்றிருக்கின்றன. படங்கள் பெயர் சரிவர தெரியவில்லை. நினைவிலிருந்தவையும் காலப் போக்கில் மறந்து விட்டது. (உங்களுக்குத்தான் விரல் நுனியில் இவையெல்லாம் அத்துப்படி) நீங்கள் நினைவுபடுத்தும் போது அன்றைய தினம் முழுவதும் அந்தந்த பாடல் பழைய கேட்ட ரசித்த நினைவுகளுடன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இனிமையான நினைவுகளுக்கு நன்றி.
சிவகாமியின் செல்வன், நாளை நமதே என்ற படங்களில் கூட ஹிந்தி பாடல்கள் உள்ளதோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குஅங்கிருந்து இங்கா... அங்கிருந்த்து இங்கா... எல்லாமே பெங்காலியிலிருந்துதான்.... பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.
ஆராதனாவின் தமிழ்ப்படம் சிவகாமியின் செல்வன். ஆனால் அதில் பாடல் ஒன்றும் காபி இல்லை. பதிலாக ஆராதனாவில் வரும் குங்குநாராஹீஹை பாடல் தமிழில் (கிட்டத்தட்ட) அருணோதயம் படப்பாடலில் எங்கள் வீட்டு தங்கத்தேரில் பாடலில் காபி அடிக்கப்பட்டிருக்கிறது. அதே பாடலின் ஆரம்ப ஹம்மிங் கிட்டத்தட்ட ஆவணி மலரே ஐபிபிசி நிலவே பாடலில் வரும்.
நாளை நமதே ஹிந்தியில் யாதோங்கி பாராத். பாடல்கள் தமிழிலும் எம் எஸ் வி தூள் கிளப்பியிருப்பார். காபி அடித்து அல்ல. யாதோங்கிபாராத் பாடல் எதுவும் காபி அடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
//ஐபிபிசி நிலவே//
நீக்கு*ஐப்பசி
இரண்டு பாடலையும் கேட்டேன். சாயி ஆரத்தியில், 'ஜெய் ஜெகதீசகரே' என்று வரும். அதே மாதிரி இந்தப் பாடல்கள் இருக்கின்றன. ஒருவேளை ராகம் ஒன்றா? கீதா ரங்கன் சொல்லணும்.
பதிலளிநீக்குபாடல் ஓகே ரகம்.
நன்றி நெல்லை.
நீக்குஜெய்ஜெகதீஷு ஹரே... not கரே !
நீக்குஇன்று கேட்டுத்தான் பார்ப்போமே என ஹிந்திப் பாட்டுக் கேட்டேன், எனக்கென்னமோ அதன் பின் தமிழ்ப்பாடல் பெரிசாக எழும்பியதாக தெரியவில்லை:))..
பதிலளிநீக்குஹிந்தியிலும் ஆஞ்சனேயரை வச்சிருக்கினம்.. ஏன் அந்தக்காவைக் குறை சொல்றீங்க குரங்கு டான்ஸ் என, நல்லாத்தான் ஆக்ட் பண்ணுறா...
அப்பாடி.. நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க...
நீக்குவருவாயா வேல்முருகா அடிக்கடி கேட்ட பாடல் ரசிச்ச பாட்டு .. ஆனா எனக்கென்னமோ அந்த ஹிந்தி வொயிஸ் இன்னும் நல்லா இருப்பதைப்போல ஒரு ஃபீலிங்ஸ்:)
பதிலளிநீக்குஅப்படியா? ஆச்சரியமே... நல்லாதான் இருக்கும். நானும் அடிக்கடி ரசிக்கும் பாடல்தான். தமிழில் எஸ் பி பி தான் ஸ்பெஷல். இதை நான் அடிக்கடி சொல்கிறேன்!
நீக்குவல்லிம்மா கொடுத்திருக்கும் பாடலையும் கேட்டுப்பாருங்கள். புதிய மாதிரியாக நன்றாக இருக்கும்.
அண்ணன் - தங்கை பாடல் என்றால் 'இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்' (போலீஸ்காரர் மகள்) பாடலை அடிச்சிக்க வேறொன்று இனிமேல் வருமா என்பது சந்தேகம் தான்.
பதிலளிநீக்குநல்ல பாடல்தான் ஜீவி ஸார்... நான் இந்தப்பதிவுக்காக அமைத்த கற்பனை உரையாடல் அது.
நீக்குமட்டுமல்லாமல்,
மலர்ந்தும் மலராத போன்ற பாடல்கள் எல்லாம் நினைவில் வரவில்லையா... நான் அண்ணன் தங்கை பாடல்களுக்காக என்றே ஒரு வெள்ளியை ஒதுக்கி இருந்தேன். பற்பல பாடல்களை சொல்லி, நான் இறுதியாக என் தெரிவாகக் கொடுத்திருந்தது 'வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்'
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க...
நீக்குஇரண்டு பாடல்களையும் கேட்டேன்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்கள்.
முன்பு ஹிந்தி பாடல்கள் அடிக்கடி கேட்பேன். இப்போதும் கேட்கிறேன் பழைய பாடல்களை தான்.
காலை விருந்தினர் வருகை.
நவராத்திரி நிறைவு பெறும் வரை சரியான நேரத்திற்கு ஆஜர் ஆக முடியாது. நேரம் கிடைக்கும் போது வருவேன்.
ஆமாம். நவராத்திரி சமயம். வீடு ஜேஜே என்று களைகட்டி ஜம்மென்றிருக்கும். என்ஜாய்!
நீக்குஇரண்டு பாடல்களையும் ரசித்ததற்கு நன்றி அக்கா.
அடுத்தவீட்டுப்பெண் என்றதும் அஞ்சலிதேவிக்காக டி ஆர் ராமச் சந்திரன் தங்கவேலு பாடும் பாடல்தான்என்று நினைத்தேன்
பதிலளிநீக்குஇல்லை ஜி எம் பி சார். இது வேறு. நன்றி ஸார்.
நீக்கு//ஹிந்திப் படத்திலிருந்து காபி அடிக்கும்போது அப்போது இப்படி ஒரு உரையாடல் தயாரிப்பாளருக்கும் இசை அமைப்பாளருக்கும் நடந்திருக்கக் கூடும்...//
பதிலளிநீக்குகற்பனை உரையாடல் அருமை.
நன்றி அக்கா.
நீக்குஅடுத்தவீட்டு பெண் படத்தில் இந்த காட்சிக்கு வரும் பாடலையிம் பகிர்ந்து இருக்கலாம் இனிமையாக இருக்கும்.
பதிலளிநீக்கு'பிரேமையின் ஜோதியினால்' பாடலையும் போட்டு இருக்கலாம். மிக நன்றாக இனிமையான பாடல்.
ஹா... ஹா... ஹா... போட்டிருக்கலாமோ...
நீக்குஜி எம் பி (நம் பதிவர் அல்ல) பாடும் ப்ரேமையில் யாவும் மறந்தோமே பாடல் நினைவிருக்கிறதா?
அன்பு கோமதி மா. ப்ரேமையின் ஜோதியினால் பாடல் மிக அழகு. அதுவும் தெலுங்கிலிருந்து வந்திருக்கும்..ஏனெனில் ப்ரேமை தமிழில்லையே::)
நீக்குஸ்ரீராம்,
நீக்குஎஸ்பிபி நமோ நமஹ. அவரைப் பத்தி சொல்லாமல் விட்டது தப்புதான்.:)
கிஷோர் தா பிரபாவத்தில் இவரை விட்டு விட்டேன்.
ஹா... ஹா... ஹா... நன்றி அம்மா. அதே அளவு கிஷோர் எனக்குப் பிடிக்கும். கிஷோரின் மிகப் பெரும் ரசிகன் நான்.
நீக்குநீங்கள் குறிப்பிட்டிருப்பது கர்னாட்டிக் இசைப் பாடகரை என்று நினைக்கிறேன். அவர் ஜி என் பி. ‘எம்’அல்ல.
நீக்குஆமாம்... ஆமாம்...
நீக்குஹிந்திப் பாடலை முதலில் கேட்கப்போய், ஸாய்ரா பானுவின் நடிப்பு குமட்ட, ஆஃப் செய்துவிட்டு தமிழில் சரணடைந்தேன். நல்ல காலம், புலிக்குப் பயந்து பேயிடம் மாட்டிக்கொண்டதுபோல் இல்லை தமிழ் வீடியோ.
பதிலளிநீக்குவருவாயா வேல்முருகா.. பாடலை ஆனந்தமாக பலவருடங்களுக்கு முன் கேட்டிருக்கிறேன். படம் பார்க்கவில்லை. எஸ்பிபி யின் குரல் அந்தப் பாடலில் நன்றாக இழைகிறது.
ஹப்பாடி... ஒத்த கருத்து. நன்றி ஏகாந்தன் ஸார்.
நீக்குநேற்று பொல்லுப் பட்டுக் கோபமான ஏ அண்ணன், இன்று ஹிந்திப்பாட்டுக் கேட்டு கூலாகிட்டார்ர்:)) ஹா ஹா ஹா...
நீக்குஜி எம் பி (நம் பதிவர் அல்ல) பாடும் ப்ரேமையில் யாவும் மறந்தோமே பாடல் நினைவிருக்கிறதா?நினைவு இருக்க்//
பதிலளிநீக்குநினைவு இருக்கே!
அவர் ஜீஎன்பீ யாய் இருக்கலாம்
நீக்குமுதல் பாடல் - அவ்வளவாக பிடிக்காத பாடல் - மேரே சாம்னே வாலி கிடுக்கி பாடல் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஅதே ட்யூனில் தமிழ் பாடல் - அப்படியே மாற்றி விட்டார்களே! கற்பனையான கலந்துரையாடல் சிறப்பு.
இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்.