கிருஷ்ண கானத்தில் நாம் இதுவரை இங்கு பகிராத அடுத்த பாடல் கோகுலத்தில் ஒருநாள் ராதை..
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
R D Burman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
R D Burman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
26.5.23
4.10.19
27.6.11
இந்தி(ய) இசைப் புயல் ஆர் டி பர்மன்

இந்தி(ய) இசையுலகின் இசைப் புயல் மெலடி கிங், பல்லாயிரக் கணக்கான இசை ரசிகர்களின் இதய தெய்வம் ஆர் டி பர்மன் பிறந்த நாள் இன்று.
ராகுல் தேவ் பர்மன். பெயர் சொல்லும் போதே அதிர்கிறது. பலப்பல பாடல்கள் மனதில் ஆக்கிரமிக்கின்றன. இதைச் சொல்லலாம், அதைச் சொல்லலாம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.

Pancham போன பிறகு இனிய பாடல்களுக்கு பஞ்சம் இந்தித் திரையுலகினரால் செல்லமாக பன்ச்சம்தா என்று செல்லமாக அழைக்கப் படும் ஆர் டி பி தனது ஒன்பதாவது வயதில் Funtoosh படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து சாதனை செய்தார் என்பது ஆச்சர்யப் பட வைத்த செய்தி.
தனது கடைசிக் காலத்தில் உடல் நலம் ஒத்துழைக்க மறுத்ததால் தந்தை எஸ் டி பர்மன் ஒப்புக் கொண்ட பல படங்களுக்கு ஆர் டி பர்மன் முடித்துக் கொடுத்தார் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆராதனா, கைட் போன்ற படங்களைச் சொல்லலாம்.
பூத் பங்களா என்ற படத்தில் மெஹம்மூத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். அதே மெஹ்மூத்துக்கு லாக்கொமே ஏக் படத்தில் கிஷோர் குரலில் 'சந்தா ஓ சந்தா' என்ற அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்.

கிஷோர் குமார் குரல் ஆர் டி பர்மனுக்காகவே படைக்கப் பட்டது போலும் என்பது போல இருவரின் காம்பினேஷனில் பற்பல இணையற்ற பாடல்கள்.அஜ்நபி, ஆந்தி, கேல் கேல் மெய்ன், ஆப் கி கசம், அமர் பிரேம், ஜவானி திவானி, ஆ கலே லக் ஜா, வாரன்ட், எத்தனை படங்களில் எத்தனை பாடல்கள்...
ஷோலே படத்தில் ஆர் டி பரமனே பாடிய 'மெஹ்பூபா...மெஹ்பூபா 'பாடலை முதலில் கிஷோரை பாடச் சொல்லி அவர் மறுத்த பின் இவரே பாடியதாகக் கேள்வி.
கேரவான் இன்னொரு அற்புதமான பாடல்களைக் கொண்ட படம்.

டிஸ்கோ பைத்தியம் தொடங்கிய எண்பதுகளின் பிற்பகுதியில் ஆர் டி பி மறக்கப் பட்டதும், ஒதுக்கப் பட்டதும் சோகங்கள். அவர் ஒரு பெரிய ஹிட்டுடன் மீண்ட 1942 a love story அவர் கடைசிப் படமானதும் சோகம்.
கேல் கேல் மெய்ன் படத்தில் ஆஷா வுடன் ஆர் டி பர்மன் இணைந்து பாடிய பாடல். தமிழில் இது பின்னர் பிரதிஎடுக்கப் பட்டது!
நிறையச் சொல்ல ஆசை... நேரம் கம்மி... இசைக்கு மொழி தேவை இல்லை. பாடல்களை முழுவதும் கேளுங்கள்...
15.1.11
கிஷோர்...கிஷோர்...2
கிஷோர் பாடினால் நாம் ரசிக்கலாம்...நாம் பாடினால் யார் ரசிப்பார்...! (தத்துவம்..!)
ஆந்தி படத்தில் அத்தனை பாடலும் அற்புதமான பாடல். ஆந்தி என்றால் புயல். அரசியல்வாதி மனைவியைத் திருமணம் செய்யும் கணவனாக சஞ்சீவ் குமார்.
"எங்கிருந்து வருகிறோம்...எங்கு போகிறோம்..இந்தத் தகவல் நமக்குத் தெரிவதில்லை.."
குல்சாரின் அருமையான வரிகள்...அரைகுறையாகப் புரியும்போதே இவ்வளவு ரசிக்க முடிகிறதே...அனைத்தும் புரிந்தால்...?
இதே படத்தில் வாழ்வில் பல சங்கடங்களைச் சந்தித்து பின்னர் மனைவியாக இருந்தாலும் நெருங்க முடியாத உயரத்துக்குச் சென்றதால் பிரிந்த மனைவியை சந்திக்கும் போது பழைய நினைவுகளில் மனம் பாடும் (படும்) பாடலாக வரும் பாடல். என்ன பாடல்...என்ன சுகமான ட்யூன்..? லதாவின் குரலுக்குதான் என்ன இனிமை? கிஷோருக்கு கொஞ்சம்தான் சான்ஸ். ஆனால் அவர் பாடும் சரணத்தை நான் இப்படி அர்த்தப் 'படுத்தி' வைத்திருக்கிறேன்..."இரவை நிறுத்தி விடு...நீ என்னுடன் இருக்கும் (பேசும்) இந்த இரவின் சந்திரன் மறையவே கூடாது..இரவு முடியக் கூடாது.."
ஆப் கி கசம் பாடல்கள் அனைத்தும் மிக இனிய பாடல்கள். ஆர் டி பர்மனின் அற்புதங்கள். முதலில் ஒரு காதல் பாடல்.கிஷோர் லதாவின் மிக இனிய பாடல்களில் ஒன்று.
அழகிய மும்தாஜ்..
இதே படத்தில் மனைவியை சந்தேகப் பட்டு அவளைப் பிரிய நேரிட்டு வாழ்வைத் தொலைத்த நாயகன் "வாழ்வின் பயணங்களில் உழன்று" பாடும் பாடல்...
அழகிய ராஜேஷ் கன்னா படிப் படியாக வயதாகி பிச்சைக் காரன் தோற்றத்துக்கு வருவதைப் பாருங்கள்...
சந்தித்து விட்டுப் பிரிவது காதலில் ரொம்பக் கஷ்டமான விஷயம்..."போய் வருகிறேன் என்று மட்டும் சொல்லாதே.." என்று ஒரு பாடலே பாடி விடுகிறான் நாயகன்.."கபி அல்விதா நா கெஹ நா..." என்று உருகும் கிஷோர் குரல்...காட்சி கொஞ்சம் திராபை. பாடலைக் கேட்கத் தவறாதீர்கள்! சல்தே சல்தே படத்தில்...பப்பி லஹரி இசையில்.
"எங்கு போனாலும் எனது இந்தப் பாடலை நினைவில் வை...அழுகையிலும் சிரிப்பிலும் நீ போதும் எனக்கு காதலில்..காதலித்துக் கொண்டே நாம் எங்காவது காணாமல் போய் விடுவோம்..." என்றெல்லாம் இந்தப் பாடலை கொச்சையாக மொழி பெயர்க்கலாம். காட்சியை மறந்து குரலிலும் பாடலிலும் கவனம் வைத்து பாடல் கேளுங்கள்..
4.1.11
"இசையால் மயங்காத..." - கிஷோர்.
அன்றைய பொழுதுகளில் மனதை வருடிய சில பாடல்களை சொல்லிப் பகிர்ந்து கொள்ள ஆசை.
நீண்ட நாள் ஆசை. சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போன் ஆசை.
அந்த நாள் 'ரங்காவளி, மன் சாஹே கீத், மனோ ரஞ்சன் ஜெய் மாலா சாயா கீத், ஆப் கே ஃபர்மாயிஷ்' காலங்களை நினைவு 'படுத்தும்' ஆசை.
ஹிந்திப் பாடகர்களில் மிகவும்....மிகவும் பிடித்த பாடகர் கிஷோர் குமார். கடவுள் இந்தியாவுக்கு அளித்த கொடைகளில் ஒருவர். முதலில் எல்லாம் கொஞ்சம் மூக்கால் பாடிக் கொண்டிருந்தார் என்று ஆரம்பக் காலப் பாடல்களைக் கேட்கும் போது தோன்றும். சல்தி க நாம் காடி படத்தில் அவர் பாடிய 'ஏக் லடுக்கி பீகி பாகி சி' பாடல் ஒரு புதிய பாணியில் அமைந்தது என்று சொல்லலாம். எஸ் டி பர்மனும் ஆர் டி பர்மனும் கிஷோரின் பல இனிய பாடல்களைக் கொடுக்கக் காரணமாயிருந்தவர்கள்.
குறிப்பாக ஆர் டி பர்மன் கிஷோர் காம்பினேஷன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாயின.
ஆர் டி பர்மன் கிஷோர் கூட்டணியுடன் ராஜேஷ் கன்னா வும் சேர்ந்தால்... இதில் பல பாடல்கள் சூப்பர் ஹிட். ராஜேஷ் கன்னாவின் நடனத்தைப் பாருங்கள். அது தனிரகம். இந்தப் பாடலுக்கு (ஏ ஜோ மொஹப்பத் ஹை) தமிழில் நினைவுக்கு வரும் பாடல் சொல்ல முடிகிறதா,,,
கீழே வரும் பாடலில் வருபவர் சஞ்சீவ் குமார். அந்தக் காலத்தில் இது மாதிரி காட்சிகள் அதிகம். அதாவது ஒரு பார்ட்டி நடக்கும். 'அப்பாவி' இளம் ஹீரோ யாரோ கேட்டதற்கு பதிலாகவோ அல்லது எல்லோருடைய வற்புறுத்தலுக்கும் இணங்கியோ பாடுவார். குறிப்பாக தனது கனவில் நினைத்து வைத்திருக்கும் 'பெயரில்லா' தனது கனவுக் காதலியை நினைத்துப் பாடும் பாடல். கிஷோரின் குரல், ஆர் டியின் இசை, பாடல் வரிகள்..."என் அன்புக்கு பதிலாக நீ ஏன் எனக்கு இவ்வளவு துன்பத்தைத் தருகிறாய்?" என்று பாடுவதும் அழகு. இதே மாதிரி பார்ட்டியில் அப்புறமும் ஒரு ஹீரோ தன் வருங்கால மனைவியைப் பற்றி பாடிய பாடல் மிகப் பிரபலம்..என்ன சொல்லுங்கள்...!
மகனைப் பற்றியே சொன்னால் எப்படி? மறுபடி ஒரு எஸ் டி பர்மன் பாடல். காட்சியில் வருபவர் தேவ் ஆனந்த்.. ஹிந்தித் திரையுலகின் எவர் கிரீன் ஹீரோ...அவர் ஸ்டைல், அவர் நடையைப் பாருங்கள். ஹிந்தியின் எம் ஜி ஆர் அவர்! இந்தப் பாடல் ஒரு புதிய முறையில் அமைந்தது. வரிகளில் அந்தாதி கேள்விப் பட்டிருக்கிறோம். இது ட்யூனில் அந்தாதி போல மாலையாகக் கோர்க்கப் பட்ட அழகிய பாடல்! "பூக்களின் வண்ணம் கொண்டு இதயத்தின் பேனாவைக் கொண்டு உனக்கு தினமும் எழுதும் கடிதம்... நீ என் இதயத்தின் அருகிலேயே இருப்பதை எப்படிச் சொல்வேன்... மேக மின்சாரம், நிலவின் குளிர்ச்சி இரண்டையும் ஒருங்கே கொண்ட உன் காதல் என்னை பலப் பல ஜென்மம் எடுக்க வைக்கிறது..." பாடலில் வரும் இசை..சந்தூர் என்று நினைக்கிறேன்... அப்பா பர்மன் ஒன்றும் சளைத்தவரல்ல!
ஒரு வேண்டுகோள்...கிஷோர் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போய் விடாமல் எல்லாப் பாடல்களையும் முழுமையாகக் கேட்டு அனுபவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நிறையப் பேருக்கு தெரிந்திருக்கும். இவரைத் தெரியாதவர்கள் இருந்தால் அல்லது கேட்காதவர்கள் இருந்தால் கேட்டு ரசியுங்கள்.
இது முதல் தவணை. இனி அவ்வப் போது தொடரும்..! கபர்தார்!
7.5.10
பிடித்த பாடகர்கள் - தொடர் பதிவு
அநன்யா மகாதேவன் அவர்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த மைக்கை எங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறோம். நன்றி அநன்யா.
பிடித்த பாடகர்கள் என்பது பிடித்த பாடல்களைப் பொறுத்து அமைகிறது. பிடித்த பாடல்கள் என்பது அந்தப் பாடலின் வரிகளைப் பொறுத்தோ, டியூனைப் பொறுத்தோ அமைகிறது. பிடித்த பாடகர் என்பதால் அவர்கள் பாடிய எல்லாப் பாடல்களையும் கண்ணை மூடிக் கொண்டு ரசித்து விட முடிவதில்லை. எல்லாப் பாடகர் பாடிய பாடல்களிலும் பிடித்த பாடல்கள் நிறைய இருக்கும்.
விஷயத்துக்கு வருவோம்..கடல் கணக்கில் உள்ள பிடித்தவைகளிலிருந்து ஐந்து மட்டுமா...மனசே வரலை. எனக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரொம்பப் பிடிக்கும், யேசுதாஸ் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் திரை இசையில் தன் குரலால் என்னைக் கவர்ந்தவர், மயக்கியவர், இப்போதும் உருக வைப்பவர் ஹிந்தித் திரையுலப் பாடகர் கிஷோர் குமார். அவர் அறுபது அல்லது அறுபத்தைந்துகளுக்குப் பின் பாடிய பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் என்றாலும் ஹிந்தியின் கிரேட் R.D.பர்மன் இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மனதை விட்டு அகலாதவை. லாக்கோ மே ஏக் 'சந்தாவோ சந்தா', புத்தா மில் கயா 'ராத்துக் கலி', ஜோஷீலா 'கிஸகா ரஸ்தா தேகே..' கட்டி பதங் பாடல்கள், எதைச் சொல்ல, எதை விட....SD பர்மன் இசையில் பிரேம் பூஜாரி 'ஃபூலோன்கே ரங்ஸே...' ஷர்மிலீயில் 'கில்தே ஹை குல் யஹான்...', லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் 'தாக்'கின் 'மேரே தில் மே ஆஜ் கியா ஹை', பியா கா கர் 'யே ஜீவன் ஹை..' தோஸ்த் 'காடி புலாரி ஹை..' கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் ப்ளாக் மெயில் பாடல்..."மேலும் அஜ்நபி, அபிமான், ஆந்தி, அந்தாஸ், அனாமிகா, அமர்ப்ரேம் பாடல்கள்... நிறைய இருக்குங்க...
அடுத்து பி. ஜெயச்சந்திரன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் பாடல்கள் நிறைய நல்ல பாடல்கள் இருந்தாலும் எல்லா பாடல்களையும் மிக நல்ல பாடல்கள் என்று சொல்ல முடியாது. TMS பாடல்களும் அப்படியே...(ஸாரி சாய்ராம்..!) ஏன், இது எல்லாப் பாடகர்களுக்குமே பொருந்தும். ஆனால் ஜெயச்சந்திரன் பாடிய தொண்ணூறு சதவிகிதப் பாடல்கள் மெலடி வகையைச் சேர்ந்தது..இளையராஜா இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள்..வைதேகி காத்திருந்தாள் படத்தில் காத்திருந்து காத்திருந்து, ராஜாத்தி உன்னை, (இந்தப் படம் வெளியானபோது மதுரை சினிப்ரியா தியேட்டரில் ஒன்ஸ் மோர் கேட்டு மறுபடி போட்டார்கள்) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, காற்றினிலே வரும் கீதம் படத்தில் ஒரு வானவில் போலே, சித்திரச் செவ்வானம், கிழக்கே போகும் ரயில் படத்தின் மாஞ்சோலைக் கிளிதானோ...
பட்டியலில் அடுத்து நினைவுக்கு வருகின்ற பிரபலப் பாடகர், பி பி ஸ்ரீனிவாஸ். பல பாடல்கள் உள்ளன. இவருடைய ஹிட் ரேட்டும் அதிகம். (இதையும் அப்பாதுரை ஒத்துக் கொள்ள மாட்டார்..!)
டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா -
ஹரிஹரன்...
எங்கள் ஐந்து பாடகர்கள் பட்டியல் இது: (இங்கே உள்ள வரிசை & எழுதப்பட்டுள்ள வரிசை தர வரிசை அல்ல. அவர்கள் எல்லோருமே சமமாக எங்களுக்குப் பிடித்தவர்கள்.)
# ஹரிஹரன்.
'எல்லாமே நாம் ஏற்கெனவே கேட்ட, கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்கள்தானே...இங்கு கொடுத்துதான் கேட்க வைக்க வேண்டுமா?' என்று தோன்றியதால் அதிகமாக இங்கே பாடல்கள் இணைக்கவில்லை ...சரிதானே?
பிடித்த பாடகர்கள் என்பது பிடித்த பாடல்களைப் பொறுத்து அமைகிறது. பிடித்த பாடல்கள் என்பது அந்தப் பாடலின் வரிகளைப் பொறுத்தோ, டியூனைப் பொறுத்தோ அமைகிறது. பிடித்த பாடகர் என்பதால் அவர்கள் பாடிய எல்லாப் பாடல்களையும் கண்ணை மூடிக் கொண்டு ரசித்து விட முடிவதில்லை. எல்லாப் பாடகர் பாடிய பாடல்களிலும் பிடித்த பாடல்கள் நிறைய இருக்கும்.
அப்பாதுரையைக் கேட்டால் MSV அவர்களையும், சாய்ராமைக் கேட்டா ல் TMS போல பாடகர் உண்டா என்றும் சொல்வார்கள்...!
தமிழ் உதயம் ரமேஷ் தெரிவு செய்யும் பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களாகவே இருக்கும். அவர் தன் ப்ளாக்கின் சைட் பாரில் பிடித்த பாடல் லிஸ்ட் சொல்ல ஒரு நிரந்தர இடமே ஒதுக்கி விட்டார். ஐந்து பாடகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கும் இந்தத் தொடர் பதிவு அழைப்பை விடுத்திருக்கும் அநன்யா மஹாதேவன் அழைப்பை ஏற்றுக் கொள்ளும்போது தமிழ் உதயம் பாடல்களையும் நம் கணக்கில் (!) சேர்த்து விடலாமே..
விஷயத்துக்கு வருவோம்..கடல் கணக்கில் உள்ள பிடித்தவைகளிலிருந்து ஐந்து மட்டுமா...மனசே வரலை. எனக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரொம்பப் பிடிக்கும், யேசுதாஸ் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் திரை இசையில் தன் குரலால் என்னைக் கவர்ந்தவர், மயக்கியவர், இப்போதும் உருக வைப்பவர் ஹிந்தித் திரையுலப் பாடகர் கிஷோர் குமார். அவர் அறுபது அல்லது அறுபத்தைந்துகளுக்குப் பின் பாடிய பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் என்றாலும் ஹிந்தியின் கிரேட் R.D.பர்மன் இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மனதை விட்டு அகலாதவை. லாக்கோ மே ஏக் 'சந்தாவோ சந்தா', புத்தா மில் கயா 'ராத்துக் கலி', ஜோஷீலா 'கிஸகா ரஸ்தா தேகே..' கட்டி பதங் பாடல்கள், எதைச் சொல்ல, எதை விட....SD பர்மன் இசையில் பிரேம் பூஜாரி 'ஃபூலோன்கே ரங்ஸே...' ஷர்மிலீயில் 'கில்தே ஹை குல் யஹான்...', லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் 'தாக்'கின் 'மேரே தில் மே ஆஜ் கியா ஹை', பியா கா கர் 'யே ஜீவன் ஹை..' தோஸ்த் 'காடி புலாரி ஹை..' கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் ப்ளாக் மெயில் பாடல்..."மேலும் அஜ்நபி, அபிமான், ஆந்தி, அந்தாஸ், அனாமிகா, அமர்ப்ரேம் பாடல்கள்... நிறைய இருக்குங்க...
Mere Dil Mein Aaj Kya Hai .mp3 | ||
| ||
Found at bee mp3 search engine |
பட்டியலில் அடுத்து நினைவுக்கு வருகின்ற பிரபலப் பாடகர், பி பி ஸ்ரீனிவாஸ். பல பாடல்கள் உள்ளன. இவருடைய ஹிட் ரேட்டும் அதிகம். (இதையும் அப்பாதுரை ஒத்துக் கொள்ள மாட்டார்..!)
உடனே நினைவுக்கு வருகின்ற பாடல்கள்,
பூ வரையும் பூங்கொடியே, ரோஜா மலரே ராஜகுமாரி, பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வர துடித்தேன் - அன்று உனைத் தேன் என நான், நிலவே என்னிடம் நெருங்காதே. ... நிலவுக்கு என்மேல், இளமை கொலுவிருக்கும், சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?, மையேந்தும் விழியாட, துள்ளித் திரிந்த பெண்ணொன்று, ஏதோ மனிதன் பிறந்து விட்டான், காலங்களில் அவள் வசந்தம்.....
டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா -
இவர் பெயரைச் சொன்ன உடனேயே ஒரு நாள் போதுமா, தங்க ரதம வந்தது, சின்னக் கண்ணன் அழைக்கிறான், (குருவிக்காரன் பொஞ்சாதியை மறந்து விடுங்கள்! அது ஒரு திருஷ்டிப் பொட்டு) எல்லாமே ஞாபகம் வருகிறது. திரை இசையை விடுங்கள்..அவர் பாடிய எண்ணிலடங்காத கர்னாடக சங்கீதப் பாடல்கள்...தியாகராஜர் கீர்த்தனைகள், சம்பிரதாயக் கீர்த்தனைகள், சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள், அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள், அஷ்டபதி, இன்னும்..இன்னும்..அவற்றை கேட்க ஒரு நாள் போதுமா?
ஹரிஹரன்...
இவர் தொன்னூறுகளில் தமிழில் அறிமுகமாகி புகழ் பெற்றிருந்தாலும் எண்பதுகளுக்கு முன்பிலிருந்தே ஹிந்தியில் கஜல் முதலான தனிப் பாடல்கள் முதல் சினிமாப் பாடல்கள் வரை பாடியிருப்பவர். நீ காற்று.. நான் மரம், முதல் முதலில் பார்த்தேன், நிலா காய்கிறது, உயிரே உயிரே, (இந்தத் தலைப்பில் இரண்டு பாடல்கள் உண்டு..இரண்டுமே ஹிட்..ஒன்று பம்பாய் படப் பாடல், இன்னொன்று சல்தே சல்தே என்ற லதாஜியின் ஹிந்திப் பாடல் மெட்டில் அமைந்த பாடல்...) சீனு என்ற படத்தில் வரும் கேசவா என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களோ... இவருடைய கலோனியல் கசின்ஸ் ஆல்பம் ரொம்பப் பிரபலம். கஜல்கள் அதை விட...
எங்கள் ஐந்து பாடகர்கள் பட்டியல் இது: (இங்கே உள்ள வரிசை & எழுதப்பட்டுள்ள வரிசை தர வரிசை அல்ல. அவர்கள் எல்லோருமே சமமாக எங்களுக்குப் பிடித்தவர்கள்.)
# ஹரிஹரன்.
'எல்லாமே நாம் ஏற்கெனவே கேட்ட, கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்கள்தானே...இங்கு கொடுத்துதான் கேட்க வைக்க வேண்டுமா?' என்று தோன்றியதால் அதிகமாக இங்கே பாடல்கள் இணைக்கவில்லை ...சரிதானே?
இந்த மைக்கை இங்கே மேடையில் அப்படியே விட்டுச் செல்கிறோம். எங்களுக்கு நன்றி சொல்லி மைக்கைக் கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும், அவர்களின் சுவையான பதிவுக்கும் எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)