புதன், 5 பிப்ரவரி, 2020

புதன் 200205:: நீங்க எண் 5 ல் பிறந்தவரா?


பெப்ரவரி ஐந்தாம் தேதி. 

இந்திய கிரிக்கட் - பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பிறந்தநாள். 

எந்த மாதத்திலும் ஐந்தாம் தேதியில் மற்றும் 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள், ஏராளமான நண்பர்களை உடையவர்கள். இவர்களின் பேச்சை இரசித்துக் கேட்பவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.  நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு, தாமாகவே போய் உதவி செய்வார்கள். இவர்களுக்கு எளிதில் கோபம் வராது. ஆனால் கோபம் வந்தால் துவம்சம் பண்ணிவிடுவார்கள். சுலபமாக இவர்களை ஏமாற்றுபவர்களும் சிலர் உண்டு. 
      



    
இவர்களின் அதிர்ஷ்ட தேதிகள் 5, 14, 23. இந்த தேதிகள் புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வந்தால் இன்னும் சிறப்பு. (ஆம் கீ சா மேடம், இன்று உங்களுக்கு மிக ராசியான நாள். இன்று துவங்குகின்ற யாவும் துலங்கும்.) 

வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுப்பவை. 

கேள்வி பதில் : 


நெல்லைத்தமிழன்: 

ஏன் நாம் எல்லோரும் ஒருவர் இறந்தவுடன் கோபமே இல்லாதவர், இன்சொல் பேசுபவர், கண்ணியமானவர் என்றெல்லாம் உண்மைக்கு மாறான சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை?

(அப்படி மறக்கும் உயர்ந்த குணம் நமக்கு இருக்குமானால் அதை ஏன் ஒருவர் உயிரோடு இருக்கும்போது காண்பிக்கும் பக்குவம் இருப்பதில்லை?)
               
# இறந்தவர்கள் மீது குறை சொல்லலாகாது என்பது ஒரு பண்பாடு.  எனினும் இல்லாததைச் சொல்லி சங்கடத்துக்கு ஆளாவதைக் காட்டிலும் ஆத்ம சாந்தி பெறட்டும் எனச் சொல்லித் தப்பிக்கலாம். 
ஒருவரது வாழ்நாளில் அவரைப் புகழ்ந்து பேசும் சந்தர்ப்பம் அமைதல் அரிது.

(Do not speak ill of the dead)

$ ஒருக்கால் நீத்தார் சுற்றம் இன்னும் இருக்கிறார்கள் என்னும் ஜாக்கிரதை காரணமாகவும் இருக்கலாம்.

& // அப்படி மறக்கும் உயர்ந்த குணம் நமக்கு இருக்குமானால் அதை ஏன் ஒருவர் உயிரோடு இருக்கும்போது காண்பிக்கும் பக்குவம் இருப்பதில்லை?// 

ஒரு கதை சொல்கிறேன், படிங்க. 

ஓர் அலுவலகத்தில் ஒரு தலைமை அதிகாரி. கொடுங்கோலர், சிடுமூஞ்சி. வாழ்நாளில் யாரையுமே பாராட்டியது இல்லை. மாற்றலாகி வேறு கிளைக்குச் செல்கிறார் என்று சுற்றறிக்கை வந்தது. அவரிடம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பயங்கர சந்தோஷம். 

அவருடைய பிரிவுபசார விருந்தில் அவரை இந்திரன், சந்திரன், கோபமே இல்லாதவர், இன்சொல் பேசுபவர் என்றெல்லாம் ஒவ்வொருவராக புகழ்ந்து பேசினார்கள். 

அதிகாரி, எல்லாவற்றையும் கேட்டவாறு, சந்தோஷமாக உட்கார்ந்திருந்தார்.  அவ்வப்போது  தன் மொபைலில் மெசேஜ் பார்த்து, படித்து, பதில் அனுப்பிக்கொண்டிருந்தார். 

எல்லோரும் பேசி பின் அவர் பேச வந்தார். " நீங்க ஒவ்வொருவரும் என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருந்திருக்கின்றீர்கள் என்பதை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். என் தலைமையை நீங்கள் யாருமே விரும்பவில்லையோ என்ற எண்ணத்தில்தான், நான் வேறு கிளைக்கு மாற்றல் கேட்டு, தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தேன். நீங்க எல்லோரும் பேசியதைக் கேட்டவுடன், என்னுடைய சந்தேகம் பறந்து போய்விட்டது. உங்கள் எல்லோருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி சொல்கிறேன்.  என்னுடைய மொபைலில் சற்றுமுன் தலைமை அலுவலகத்திற்கு, 'மாற்றல் வேண்டாம்' என்று மெசேஜ் அனுப்பினேன். அவர்களும், சரி நீங்கள் இந்தக் கிளையிலேயே தொடரலாம் என்று செய்தி அனுப்பியுள்ளார்கள் ... " 

ஊழியர்கள் நிலை என்ன என்று சொல்லவும் வேண்டுமோ! மெ மு வி மு து மு. (யார் இதற்கு சரியான விளக்கம் எழுதப்போகிறார்கள், பார்ப்போம்) 

// ஏன் நாம் எல்லோரும் ஒருவர் இறந்தவுடன் கோபமே இல்லாதவர், இன்சொல் பேசுபவர், கண்ணியமானவர் என்றெல்லாம் உண்மைக்கு மாறான சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை?// 

இறந்தவர்களைப் புகழ்கிறவர்கள், அவர் நிச்சயம் திரும்பவரமாட்டார் என்ற சந்தோஷத்தில் பேசுபவர்களாகவும் இருக்கலாம்தானே! 

பெண்களின் அழகைப் பற்றி பேச, எடைபோட ஆண்கள்தானே சரியானவர்களாக இருக்க முடியும்?

$ பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு அழகு என்பதும் ஒரு அளவுகோல் தானே!

& பெண்களின் அழகைப் பற்றிப் பேசுவது என்றால் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எடை போடுவது இயந்திரங்களால் (weighing machine) மட்டுமே இயலும்! 

        
இந்த வாரம் வேறு யாரும் கேள்வி கேட்கவில்லை என்பதால், இத்துடன் இந்த அலைவரிசையில் புதன் பதிவு முடிவடைந்து, அடுத்த புதன் பதிவு,  அடுத்த புதன்கிழமைக் காலை இந்திய நேரப்படி ஐந்து முப்பதுக்கு ஆரம்பமாகும் என்று தெரிவித்து வணக்கம் கூறி விடை பெறுபவர் ... 





109 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. மென்னு விழுங்கவும் முடியலை, முழுதும் துப்பவும் முடியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன், என்ன ஆச்சு?  தொண்டையில் கீச்கீச்சா?!!!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கௌதமனுக்கு பதில்! :) மெ முவி முதுமு மென்னு முழுங்கவும் விடலை முழுதும் துப்பவும் முடியலை

      நீக்கு
    3. இந்தமாதிரி எழுதுவதில் புகழ் பெற்ற கீசா மேடம் கேஜிஜி சாரின் புதிருக்கு அ.கு ஆக பதிலளித்திருக்க வேண்டாம். மற்றவர்களுக்கு வாய்ப்பை விட்டுக்கொடுத்திருக்கலாம் ஹா ஹா

      நீக்கு
    4. கீசா கரெக்ட். நெ த : அதுவும் கரெக்ட்!

      நீக்கு
  3. நீங்க சொன்னதிலே அநேகமாக எல்லாமே சரியா இருக்கு. ஆனால் புதன்கிழமை எனக்கு ராசினு குறிப்பாச் சொன்னதுக்கு என்ன காரணம்? ம்ம்ம்ம்ம்??????? என்னை மட்டும் குறிப்பாச் சொன்னதுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடத்துக்கு எல்லா நாளும் ராசிதான். இதில் கேஜிஜி சாரின் ஜோசியம் தவறுதான் ஹாஹா

      நீக்கு
    2. யாரையாவது வம்புக்கு இருக்கவேண்டும் என்பதற்காக கீ சா மேடம் என்று பெயர் குறிப்பிட்டேன்.

      நீக்கு
  4. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரை, அன்பு கீதா மா, அன்பு நெ.த, அன்பு ஸ்ரீராம் அனைவருக்கும் தஞ்சை பெருங்கோயில் கும்பாபிஷேகம் கண்ட மகிழ்ச்சியுடன் இனிய காலை வணக்கம்.
      ஐந்தாம் எண் என்றால் என் கணவர், துளசி இருவருக்கும் பொருந்தும். அவர் மார்ச் 5,
      துளசி கோபாலுக்கு இன்று.
      எல்லோருடனும் அனுசரித்துப் போவதில் வல்லவர்கள்
      என்று என் தாயார் சொல்லுவார்.
      அவர் எண் ஜோதிடம் சிறிது கற்றவர்.

      நீக்கு
    2. ஒருவரின் பிறவி எண் என்று இன்னொரு கணக்கு இருக்கு. யாருக்கானும் தெரியுமா?..

      நீக்கு
    3. தெரியும். Overall கூட்டுத்தொகை. பிறந்த தேதி + மாதம் + வருடம்.

      நீக்கு
  5. ஒரே கேள்வி இருமுறை வந்திருக்கிறது. இந்த வாரம் நெல்லைத் தமிழருக்கு அதிர்ஷ்டம். ஆ"சிரி"யர்களில் மூத்தவர்கள் மூவருமே பதில் சொல்லி இருக்காங்க! நானும் கேள்விகளோடு வர நினைச்சேன். முடியலை. பார்ப்போம் இந்த வாரம் யாரை மாட்டி விடலாம்னு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. கேள்வியின் அந்தப் பகுதிக்கான விடை என்பதை உயர விளக்கு (highlight) பண்ணுவதற்காக அந்தப் பகுதியை ரிபீட் செய்தேன்.

      நீக்கு
  6. 5,14,23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

    ஆக,
    இதையும் ஒரு பகுதியாக ஆரம்பித்து விடலாம்...

    ஏனென்றால்
    எனக்கு சரியாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு புதனும் ஏதேனும் வித்தியாசமாக எழுதவேண்டும் என்கிற ஆர்வத்தில் எழுதினேன்.

      நீக்கு
    2. கேஜிஜி சார்... புது வீட்டில் இப்போ இண்டெர்னெட் செட் பண்ணியாச்சு..... முதல் பின்னூட்டம் எ.பிலதான்.

      வித்தியாசமாக கேள்வி பதில்கள் பகுதியுடன் இந்த மாதிரி தருவதை பாராட்டறேன்.

      நீக்கு
    3. நன்றி, நன்றி. எனக்கு விலாசம் அனுப்புங்கள், in WhatsApp.

      நீக்கு
  7. ஜோசியப் பகுதி ஆரம்பித்துள்ள பழம் பெரும் ஜோசியர் கௌதமன் சாருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. ஒருவரது தளத்தில் தன் கருத்துகளை-உயர்ந்தவர் என்பதுபோன்ற பதிக்காமல், பாராட்டாமல் ஒருவர் மறைந்த பிறகு எழுதினால் அதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியலை. அந்தமாதிரி சில கருத்துகளைப் படித்த உடனே தோன்றிய கேள்வி அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவகாரமான கேள்வியா? நல்ல வேளை. நான் மாட்டிக்கலை!

      நீக்கு
  9. 5-ல் பிறந்தவர்கள் (5,14,23) என்னைப்போல அனேகர் இருப்பார்கள்.ஆமாம், நண்பர்கள் உண்டு. நல்லது, கெட்டது சொல்வதுண்டு. ஏமாற்றப்படுவதும் அனாயாசமாக நிகழ்கிறது.. ஏனெனில் நாங்கள் நல்லவர்களாயிற்றே! நல்லவர்களை நாதாரிகள் நசுக்கப் பார்ப்பது, நாட்டில் காணக் கிடைக்கும் கண்கொள்ளாக் காட்சியல்லவா..

    அதுசரி, நியூமராலஜியின் மீது ஏன் வந்தது திடீர் பித்து ? Cheiro ராத்திரி கனவில் வந்து கையைக் காட்டு என்றாரா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா எல்லாவற்றிலுமே இன்டரஸ்ட் உண்டு. அவ்வப்போது வெளியே பொங்கும்!

      நீக்கு
  10. ரசனையாக இருந்தது கேள்வி பதில்கள் ஜி

    பதிலளிநீக்கு
  11. ஞாயிறு இரவுதான் கேள்விகள் அனுப்பவில்லை என்பது நினைவுக்கு வரும் அளவிற்கு பிஸி. கீதா அக்கா, ஏஞ்சல் இவர்கள் கேள்விகள் அனுப்புகிறேன் என்று கூறியதாக நினைவு. அவர்களும் அனுப்பவில்லை போலிருக்கிறது. கை கொடுத்த நெ.த.வுக்கு கை அல்லது கை தட்டல் கொடுக்கலாம். பதில்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  12. 5,14,23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாள் என்று யாருக்காவது சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் பா.வெ.மேடத்திற்கு சொல்லியிருக்கலாம். கீதா அக்கா எட்டாம் எண்ணுக்குறியவர் என்று நினைக்கிறேன், அல்லது மூன்றாம் எண்ணா??
    நான் பார்த்தவரையில் 5 எண்காரர்கள் முன் கோபிகள். ஐந்தாம் எண் பெண்களால் தந்தைக்கும், கணவனுக்கும் அதிர்ஷ்டம் உண்டு. தந்தை மீது பாசம் கொண்டவர்கள். மாறிக்கொண்டே இருப்பார்கள். நேற்று பிடித்தது இன்று பிடிக்காது. இன்றைக்கு பிடிப்பது நாளை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.
    வேகமாக பேசும் பலர் ஐந்தாம் எண் காரர்களாக இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ தவறுகள் இறந்தவர்களிடம் இருந்திருக்கலாம்.
      அதை அவர் இருக்கும் போதே நாம் சொல்லி இருக்கலாம்.
      நம்மிடையே ஒருவர் இல்லை என்றால்
      அவரது நேர்மறை எண்ணங்களே நம்மை நிறைக்க வேண்டும்.
      எதிர்மறை எண்ணங்கள்
      இருக்கும் நிம்மதியைக் குறைப்பதோடு, நம் ஆத்மாவில் கறையாகப் படித்து நம்
      மனதில் கசப்பு வளரக் காரணமாகும்.
      நம் உடலுக்கே அது நல்லது இல்லை.

      நீக்கு
    2. // நான் பார்த்தவரையில் 5 எண்காரர்கள் முன் கோபிகள். ஐந்தாம் எண் பெண்களால் தந்தைக்கும், கணவனுக்கும் அதிர்ஷ்டம் உண்டு. தந்தை மீது பாசம் கொண்டவர்கள். மாறிக்கொண்டே இருப்பார்கள். நேற்று பிடித்தது இன்று பிடிக்காது. இன்றைக்கு பிடிப்பது நாளை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.
      வேகமாக பேசும் பலர் ஐந்தாம் எண் காரர்களாக இருப்பார்கள்.// புதிய தகவல்களுக்கு நன்றி. பெட்டகத்தில் சேமித்து வைத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
    3. // நம்மிடையே ஒருவர் இல்லை என்றால்
      அவரது நேர்மறை எண்ணங்களே நம்மை நிறைக்க வேண்டும்.
      எதிர்மறை எண்ணங்கள்
      இருக்கும் நிம்மதியைக் குறைப்பதோடு, நம் ஆத்மாவில் கறையாகப் படித்து நம்
      மனதில் கசப்பு வளரக் காரணமாகும்.
      நம் உடலுக்கே அது நல்லது இல்லை.// ஆம். சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
    4. நன்றி கௌதமன் ஜி.
      என்னை விட மூத்தவர்களிடம் அவ்ஸ்தைப்பட்ட காலங்களையே
      நினைத்துக் கொண்டிருந்தால்,இப்போது 30 வருடங்களுக்குப் பின்னும்
      என்னை வருத்த அனுமதித்தால் எவ்வள்வு பெரிய தவறு.

      சிரமம் என்பது இரு பக்கத்துக்கும் பொருந்தும். என்னால் அவர்கள் என்ன
      தொந்தரவுகள் அனுபவித்தார்களோ
      என்றும் யோசிக்க வேண்டும். சொல்வது சுலபம் தான்.
      ஆனால் மனதை சமாதானமாக வைத்துக் கொள்வது
      பழகிக் கொள்ள வேண்டிய ஒன்று.
      உபன்யாசம் செய்வதாக எண்ண வேண்டாம். இவை நான் உணர்ந்தவை.

      நீக்கு
    5. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி. நீங்க சொன்னா நாச்சியார் சொன்னமாதிரி!

      நீக்கு
    6. அது இருக்கட்டும்.... 1ம் எண் காரர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். எந்த அளவு பொருந்திப் போகவில்லை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஹா ஹா

      நீக்கு
    7. எண்ணும் புதனும் பொருந்தி வரும்போதுதான் எழுதுவேன். நானே எண் 1ல் பிறந்தவன். என் பையர் எண் 1. ஆனால், அடுத்த புதன் 3,12,21,30 தேதியில் பிறந்தவர்களுக்குதான் ஜோசியம்.

      நீக்கு
    8. //என்னை விட மூத்தவர்களிடம் அவ்ஸ்தைப்பட்ட காலங்களையே
      நினைத்துக் கொண்டிருந்தால்,இப்போது 30 வருடங்களுக்குப் பின்னும்
      என்னை வருத்த அனுமதித்தால் எவ்வள்வு பெரிய தவறு.//
      உண்மை! உண்மை! முற்றிலும் உண்மை! மறப்பதும்,மன்னிப்பதும் உறவுகளை மட்டுமல்ல, நம்மையும் மேம்படுத்திக்கொள்ள உதவும். 

      நீக்கு
    9. //நெல்லைத்தமிழன்5 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 1:26
      அது இருக்கட்டும்.... 1ம் எண் காரர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்///

      இதுக்குப் பதில் விரைவில் வருகிறேன்ன் இப்ப்போ ரைம் இல்லை:)) பாய் பாய்...

      நீக்கு
    10. முதலாம் எண்ணில் பிறந்தோர், அனைத்து எண்களுக்குள்ளும் லக்கானவர்கள்.. அவர்கள் வாழ்க்கை நல்லபடியே மேலே மேலே போகும்.. பின்யோகக்காரர் என்றுகூடச் சொல்லலாம், ஆனா கொஞ்சம் பொய் சொல்வார்களாமே ஹா ஹா ஹா[இது நான் சொல்லவில்லை கேள்விப்பட்டதுதான் நம்பர் சாஸ்திரம்] மற்றது பொதுவில் எல்லோரோடும் பழகுவார்கள், கொஞ்சம் பயந்த சுபாவம் அல்லது கூச்ச சுபாவம் இருக்கும்... மறதி அதிகமாக இவர்களுக்குண்டு... தான் மற்றவர்களுக்குச் செய்ததையும் மறந்திடுவினம், மற்றவர்கள் தமக்குச் செய்ததையும் மறந்திடுவார்களாம்.


      1ம் எண்காரர்களுக்கு 4ம் எண்காரர்களோடு வாக்குவாதம்/பிரச்சனை வராதாம், காந்தமும் இரும்பும்போல ஒத்துப்போகுமாம்.. இத்தனையும் நான் அறிஞ்சவை.

      நீக்கு
    11. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய எண் 1, என் மனைவியின் எண் 4. என் மகன் எண் 1, மருமகள் எண் 4.

      நீக்கு
    12. வாவ்வ்வ்வ் உண்மையாகவோ கெள அண்ணன், இப்படி எண்பொருத்தம் இருப்பின் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்பினம்...

      நீக்கு
    13. //1ம் எண்காரர்களுக்கு 4ம் எண்காரர்களோடு வாக்குவாதம்/பிரச்சனை வராதாம்,// அடடா.... இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் இப்போ நான் எப்படி 4ம் எண் ஆட்கள் யார் யார் என்று கணக்கெடுப்பது?

      நீக்கு
  13. ஆஹா புதன் கிழமையும் வந்துவிட்டதே.. இன்று ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென மிளிர்கிறாரோ நெல்லைத்தமிழன் ஹா ஹா ஹா.. அவரின் கிளவிகள் சே..சே டங்கு சஸ்லிப்பாகுதே:)) கேள்வி.. நியாயமானதே... பதில்களும் அழகு.

    அதென்னமோ தெரியவில்லை, நீங்கள் குறை நினைச்சாலும் திட்டினாலும்.. :)) எதுவாயினும், இப்போ ஜனவரி பிறந்ததிலிருந்து புளொக் பக்கம் வரும் ஆசை குறைந்து கொண்டே வருது... நானும் ஒரு போஸ்ட் போட்டு ஆரம்பிச்சு மீண்டும் பழைமைக்குத் திரும்ப நினைக்கிறேன், முடியவில்லை, மனம் இடங் கொடுக்குதே இல்லை.. பார்ப்போம்ம்.. விரைவில களம் இறங்கப்போறேன்ன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் blog எழுதுவதில் ஒரு இடைவெளி வந்துவிட்டால், அதைக் கஷ்டப்பட்டு உடனே fill செய்யவேண்டும். இல்லையேல் இடைவெளி நாளுக்குநாள் பெரிதாகிக்கொண்டே போகும்.

      நீக்கு
  14. 5ம் எண்ணில் பிறந்தோரின் நல்ல பக்கத்தை மட்டும் சொல்லிப்போட்டு நிறுத்திட்டீங்க:)).. நான் அறிஞ்ச ஒன்று சுழட்டல் பேர்வழியாக இருப்பார்களாம்:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு.. இங்கு யாரெல்லாம் 5 எனத் தெரியேல்லையே:))..

    கெள அண்ணன் அஞ்சுல அஞ்சுவும் அடங்குவா தானே?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹெலோ நான் 4 ஆம் நம்பர்ர்ர்ர்ர்ர் 

      நீக்கு
    2. நீங்களும் 4 ஆம் நம்பர் ?? வல்லிம்மா .ஹை சூப்பர் .

      நீக்கு
    3. //Angel5 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 10:05
      நீங்களும் 4 ஆம் நம்பர் ?? வல்லிம்மா .ஹை சூப்பர் .//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வல்லிம்மா 9ம் நம்பர்...

      நீக்கு
    4. //
      Angel5 பிப்ரவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 8:09
      ஹெலோ நான் 4 ஆம் நம்பர்ர்ர்ர்ர்ர் //

      உங்கட பெயர் அஞ்சு என அஞ்சு நம்பெரூஊஊஊஊஊஉ சொல்லுதெல்லோ அதைச் சொன்னேனாக்கும் அது டப்பா?:))

      நீக்கு
  15. ஏகாந்தன் cheiroஎழுதியது கைரேகை சஸ்திரம் எண் சாத்திரமல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Cheiro கைரேகையில் ’மட்டும்’ நிபுணரல்ல. அவர் ஒரு புகழ்பெற்ற numerologist, palmist, astrologer and also a clairvoyant! பன்முகத் திறமை அவரிடம் கூடி நின்றது. அவரிடம் எண்ஜோசியம் பார்க்கவந்த ஹாலிவுட் பிரபலங்கள் பலர்.

      Clairvoyant ? இதைப்பற்றி நான் இங்கே எழுதினால், பதிவாகிவிடும் அது!

      மேலும், நான் கௌதமன் சாருக்குக் கொடுத்த பின்னூட்டத்தை சரியாகப் பார்க்கவும்.

      நீக்கு
    2. ஏகாந்தன் சார் சொல்லியிருப்பது தான் சரி.

      நீக்கு
  16. //
    பெப்ரவரி ஐந்தாம் தேதி.

    இந்திய கிரிக்கட் - பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பிறந்தநாள். ///

    9ம் திகதி வந்தபின்பும் இப்படித் தொடர்வீங்களோ கெள அண்ணன்?.. இல்ல ச்சும்மாதான் கேட்டேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த புதன் கிழமை 3,12,21,30 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு பலன்.

      நீக்கு
    2. என்ன இது 5 க்குப் பிறகு 3 எப்பூடி வரும்????? நோ இது அலாப்பி விளையாட்டு.. 5 க்குப் பின்னால 4 க்கு சொல்லோணும் இல்லை எனில் 6 க்குச் சொல்லோணும்:))

      நீக்கு
    3. அடுத்த புதன் கிழமை பெப்ரவரி 12 என்பதால் 3 மற்றும் மூன்றின் கூட்டு எண்கள் 12, 21,30 ஆகியவை அலசப்படும்.

      நீக்கு
  17. ///ஏன் நாம் எல்லோரும் ஒருவர் இறந்தவுடன் கோபமே இல்லாதவர், இன்சொல் பேசுபவர், கண்ணியமானவர் என்றெல்லாம் உண்மைக்கு மாறான சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை?///

    ஆஆஆஆ இது உண்மைதான் ஆனாலும் சில ஜென்மங்கள் இருகிறார்கள், ஒரு அப்பாவி இறந்தபின்னர்கூட வேணுமெனத் திட்டுவினம்...

    அது நம் மனித மரபுதானே நெல்லைத்தமிழன், ஒரு உயிர் பிரிந்திட்டால், அவரைப்பற்றி கூடாதனவற்றைப் பேசுவது அழகல்ல என்பதைப்போல பழக்கப்பட்டுவிட்டோம்... அப்படிச் சொன்னால் அது செத்த பாம்பை அடிப்பதைப்போலத்தானே வரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயம்தான். அது எனக்கும் தெரியும். ஆனா, இருக்கும்போது இன்சொல் பேசாமல், சண்டை போட்டுக்கொண்டு இருந்துவிட்டு, மறைந்தவுடன் பண்பாளர், அன்பாளர் என்றெல்லாம் பேசுவது நகைப்பிற்கிடமில்லையா?

      நீக்கு
    2. உண்மைதான், எதுவும் பேசாமலே இருப்பது எவ்வளவோ மேல்... ஆள் போனபின் பேசி என்ன நடக்கப்போகிறது?.. என்னைப்பொறுத்து உயிர் போனபின், என்ன சிலை வச்சென்ன தங்கத்தால பாடை கட்டி என்ன ... எல்லாம் ஒன்றுதான்.

      நீக்கு
  18. //பெண்களின் அழகைப் பற்றி பேச, எடைபோட ஆண்கள்தானே சரியானவர்களாக இருக்க முடியும்?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதுக்கு இவருக்கு இந்த வீண் கவலையாக்கும்?:) ஹா ஹா ஹா.. அடுத்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தாலே கப்பு ஹையோ கற்புப் போயிடுமாம் இதில அதைப்பற்றி பேச வேற வேண்டுமாம்:)).. களி சாப்பிட ஆசையாக்கிடக்குது போல:)).. சின்மயி அக்காவைத் தேடிப்போகிறேன் நான்.. என்னை ஆரும் தேடாதீங்கோ ஹா ஹா ஹா:)..

    //ஆனால் எடை போடுவது இயந்திரங்களால் (weighing machine) மட்டுமே இயலும்! ///
    ஹா ஹா ஹா பின்ன தூக்கிப் பார்த்துத்தானே எடை சொல்ல முடியும்:)) அந்தத் தைரியம் உங்களுக்கு இருந்தால் எங்கே இன்று ஒரு பெண்ணை எடை பார்த்துச் சொல்லுங்கோ ரோட்டில வச்சு:)) ஹா ஹா ஹா:)) என்னால முடியல்ல.. :)

    பதிலளிநீக்கு
  19. என்ன இம்முறை பொசுக்கென முடிஞ்சு போச்ச்ச்ச்சு:).. எங்கே கூடையுடன் வரும் அஞ்சு.. அஞ்சூஊஊஊஊஊஊ கமோன் ச்ச்ச்சும்மா வரக்கூடாது.. கூடையுடன் வரவும்.. நானும் சில கிளவிகளைக் கூட்டி வருவேன்.. 2,3 நாட்களுக்குள்.. கணக்கெடுங்கோ கெள அண்ணன்...

    பதிலளிநீக்கு
  20. கெள அண்ணன்...

    நாங்கள்தான் வழமையாக அடிக்கடி காணாமல் போவோம்ம்:)) ஆனா எதுக்கு ஸ்ரீராம் தொடர்ர்ச்சியாகக் காணாமல் போகைறாராம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு கிழமை அவருக்கு லீவு குடுத்தாச்சு அது போதும், இனி புளொக்குக்கு வரட்டாம் எனச் சொல்லுங்கோ ஸ்ரீராமிடம்:))... இது நாட்டுக்கு நல்லதில்லையே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் பதில் சொல்லட்டும்.

      நீக்கு
    2. நிலைமை அப்படி!  பழக கொஞ்ச நாட்கள் ஆகலாம்.  எப்படி நேரத்தை நிர்வகிப்பது என்பதை திட்டமிட வேண்டும்!

      நீக்கு
    3. ஸ்ரீராம்... நேரத்தை நிர்வகிக்க ஒரு ஐடியா... 15 வற்றல் மிளகாய், 1 தக்காளி, புளி என்றெல்லாம் போட்டு சட்னி செய்வதை பாஸிடம் அல்லது பசங்கள்ட விட்டுவிட்டு, அந்த நேரத்தில் பிளாக் வேலைகளைக் கவனிக்கலாம் ஹா ஹா.

      இன்றைக்கு அதுதான், அடைக்குத் தொட்டுக்க. செம காரம். ஆனா 2 அடைக்கு இது, 1 அடைக்கு தயிர். கொஞ்சம் நீர் சேர்த்துக்கொண்டால் (தக்காளியில் தேவையான அளவு நீர் இல்லைனா) இன்னும் நல்லா இருக்கும்.

      நீக்கு
    4. வருஷத்துக்கு ஒரு தடவை! அதுவும் வேண்டாம் என்கிறீர்கள்.  பார்ப்போம்!

      நீக்கு
    5. ஆஆ ஸ்ரீராம் லாண்டட்ட்ட்:)).. வருடத்தில் ஒருக்கால் என முன்பே பழக்கியிருந்தால் எங்களுக்குப் பழகிப்போயிருக்கும் ஸ்ரீராம்:)).. இது புதுசெல்லோ:)).. ஒருவேளை அடுத்த வருடமும் இப்படி நிகழ்ந்தால் பழகியிருப்போம்:))..

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. போன வருடத்தில ஒரே ஒருநாள்தான் ஸ்ரீராம் சமைச்சார்ர்:)) அதுக்கே கிச்சின் குடுக்காட்டில் எப்பூடி:))

      நீக்கு
    6. ஆஆஆ
      //வருடத்தில் ஒருக்கால் என முன்பே பழக்கியிருந்தால் எங்களுக்குப் பழகிப்போயிருக்கும் ஸ்ரீராம்:)).. இது புதுசெல்லோ:))..//

      இதை நான் மாத்திப் புரிஞ்சிட்டேன்ன்.. வருடத்தில் ஒருக்கால் என நான் சொன்னது.. காணாமல் போவதை.. சமைச்சதை அல்ல...

      நீக்கு
    7. எங்க கடைசிப் பேரன், இங்க இருப்பவன் 1ஆம் தேதி பிறந்தவன் தான். ஸ்ரீராம். சூரியனின் ஆதிக்கம். மேனேஜ்மெண்ட் தெரிந்தவர்கள்.

      நீக்கு
  21. ஆஹா ஜோசியமும் ஆரம்பித்தாயிற்றா! நடத்துங்க!

    கேள்விகள் குறைவு என்றாலும் ஸ்வாரஸ்யம். பதில்களும் தான்!

    பதிலளிநீக்கு
  22. இறந்தவர்களைப்பற்றி குறை சொல்லக் கூடாது என்பதற்கு காரணம் அவர்களால் அதற்கு விளக்கம் அளிக்க முடியாது என்பதாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் இருக்கலாம்.

      நீக்கு
    2. அது புறம் பேசுவது போலாகிவிடும்.
      ஆமாம் அவர்களை இப்போது நாம் குற்றம் சாட்டுவது போல
      அவர்கள் இருக்கும்போது பேசி இருப்போமா.

      ஒரே ஒரு தடவை, நான் வெளியே போய் விட்டு வரும்போது,
      என்னைப் பற்றி, மற்றவர்கள் பேசுவதைக் கேட்க நேர்ந்தது. சரியான
      சோம்பேறி என்று.

      கொதிப்பாக இருந்தாலும் உள்ளே போய்
      எல்லோருக்கும் டிபன் செய்து கொடுக்கத்தான் சீக்கிரமே
      வந்தேன் என்பது விருந்தாளிகளுக்குத் தெரியும்.
      பத்து வருடங்களில் அனைவருமே மாறிவிட்டார்கள்.

      சிலர் உயிரோடு கூட இல்லை.
      இதெல்லாம் புரிய இத்தனை வயதாக வேண்டி இருந்தது.
      ஓஹோ மீண்டும் லெக்சர். மன்னிக்கவும்.

      நீக்கு
  23. எங்க வீட்டுக்காரரும் ,மகளும் 5.மருமகனும் 23ஆம் தேதி.
    மூவருமே எல்லோருடனும் ஒத்துப் போவார்கள்.
    நானோ 9 ஆம் எண்ணின் ஆதிக்கம்.
    என் மருமகள்,அவள் வீட்டுக்காரரான சின்ன மகன் இருவருமே 18,27ஆம் தேதி பிறந்தவர்கள், பெரிய மகனும் ,அவன் மனைவியும் 13,31 ஆம் பிறந்தவர்கள்.
    இரு தம்பிகளும் 1 ஆம் எண். கண் கட்டுகிறது.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்றாம் எண் காரன் என்று இங்கு சொல்லப்போவதில்லை.  எதற்கு வம்பு!

      நீக்கு
    2. என்னாதூ ஸ்ரீராமும் ஒன்றாம் நம்பரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      நீக்கு
  24. 1,சமீபத்தில் உங்கள் மனதை வருத்தப்படுத்திய புகைப்படம் எது ?எனக்கு இந்த படத்தை பார்த்ததும் வேதனை மிஞ்சியது :(https://www.cnet.com/news/amazon-launches-new-alexa-device-for-kids-but-privacy-issues-will-still-scare-some-parents/ 

    2, உங்களுக்கு  மேலுள்ள அலெக்ஸ்சா கிடைச்சா அதுகிட்ட என்ன கேள்வி கேட்பீங்க ?

    3, உங்கள் முதல் மாத சம்பளத்தை என்ன செய்தீங்க :) ? ஐ மீன் எவ்ளோ சேமிச்சிங்க எவ்ளோ செலவு பண்ணினீங்க ?

    4, இப்போதெல்லாம் எல்லாரும் ஸில்லி (SILLY )விஷயத்துக்குலாம் CHILLI சாப்பிட்ட விளைவை தருகிறார்களே ? இதன் காரணம் என்ன ?இப்போதெல்லாம் பொறுமை என்பது குறைந்துவிட்டதா ?

    5, இன்னமும் நம் சென்னை வீதியில் கல் உப்பு தள்ளு  வண்டியில் விற்கிறார்களா ?

    6, ஒருவரை காதலித்து பின்பு பிரிந்தபின்  அசிங்கப்படுத்தி பொதுவெளியில் பேசுவது எங்க நாட்டு வழக்கம் .பொய்யென்று மறுக்க முடியாது யாராலும் :)  பிரிதலையும் புரிதலோடு பிரிந்து  அழுக்கை வீசி அசிங்கப்படுத்தாதது வெளிநாட்டு வழக்கம் .ஒரே உலகில் வாழ்கிறோம் ஏன் இத்தனை வேறுபாடு ?

    7, யாரோ செய்த பாவத்துக்கு சம்பந்தமேயில்லா வேற யாரோ எதுக்கு தண்டனை அனுபவிக்கனும் ? (கொரோனா )

    8, பிரக்ஞை என்பது எப்பவுமே நம்முள்  அமைதியா உறங்கி தேவைப்படும் நேரத்தில் எழும்புவதா ? இல்லை திடீரென உதிப்பதா ? 

    9, நல்லதும் கெட்டதும் ஒரே உள்ளத்திலிருந்து வெளிப்படுதே ? இது எப்படி சாத்தியம் ?

    10, உண்மையாகவே பேய் பிசாசு  இருக்காங்களா  ? இல்லை எல்லாம் நம்முடைய மன கணிப்பா ?        உண்மையா பேய் இருந்தா துர்சம்பவங்கள் நடக்கும்போது அவர்கள் மக்களை காப்பாற்றலாமே ? மேலும் மனுஷர்கள் கெட்டது செய்யும்போது நங்குன்னு தலையில் கொட்டி திருத்தலாமே ? இதெல்லாம் அவங்க ஏன் செய்யவில்லை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆ நான் ஜொன்னனே ஜொன்னனே.. அஞ்சு கூடையோடயே வந்திட்டா...

      ///ஐ மீன் எவ்ளோ சேமிச்சிங்க எவ்ளோ செலவு பண்ணினீங்க ?//

      இதைவிட .. உங்கட முதல்மாதச் சம்பளம் எவ்வளவு என அதிராவைப்போல நேரடியாகவே கேட்டிருக்கலாம்:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

      நீக்கு
    2. ///ஒரே உலகில் வாழ்கிறோம் ஏன் இத்தனை வேறுபாடு ?//

      எல்லாம் தோல் கலராலயா இருக்குமோ:))

      //9, நல்லதும் கெட்டதும் ஒரே உள்ளத்திலிருந்து வெளிப்படுதே ? இது எப்படி சாத்தியம் ?//

      இல்லயே.. நல்லது ப்ப்ப்புரொம் அதிரா:)).. மற்றது ப்ப்ப்ப்புரொம் அஞ்... ஹையோ மீ ஒண்ணுமே ஜொள்ளல்லே ஓடிடுறேன்ன் ஜாமீ நான் புளொக் எழுதப்போறேன்ன் டும் டும் டும்ம்ம்ம்:))

      நீக்கு
    3. ஏஞ்சல் கேள்விகளுக்கு பதில்கள் அளிப்போம்.

      நீக்கு
    4. ஏஞ்சலின்.. முதல் கேள்வியை தவறா புரிஞ்சுக்கிட்டு பதில் எழுதறேன்.

      மனதை வருத்தப்படுத்திய அல்ல, கடுகடுப்பாக்கியது.. வாழ்க்கைல ஏரே ஏழு ரெசிப்பி.. கேக் போல் கட் பண்ணும் கேசரி, குழைசாதம்,.. போன்று எழுதிவிட்டு சமையல் தாரகைனு சிலர் தனக்குத்தானே பட்டம் வச்சிக்கறாங்களே அது.. ஹா ஹா ஹா

      நீக்கு
    5. @ நெல்லைத்தமிழன்//

      http://www.guliver.ro/wp-content/uploads/2015/04/rexfeatures_4471822al.jpg

      நீக்கு
  25. ஆனாலும் எங்கள் பிளாக் பேயாருடன் இங்கே அளவளாவியதில் இருந்து அவை அதுங்க அது இதுன்னு சொல்ல மனம் வரலை இனிமேல் எல்லாரும் மிஸ்டர் /திரு /திருவாளர் பேயார் என்று அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை பேயார் படித்தால் சந்தோஷப்படுவார்.

      நீக்கு
    2. கிக் கி கி கீ க்ரீச் ! ரோம்ப சண்டோஷம்!!

      நீக்கு
  26. என்னுடைய கிளவிகளைக் கூட்டி வந்திட்டேன்:)).. அதிகம் எல்லாம் இல்லை:)).

    1. எந்த ஒரு நல்ல விசயத்துக்கும் வலது கால், கையைத்தான் உபயோகிக்க வேண்டும் என்பது ஏன்? நம் உடம்பின் அத்தனை உறுப்புக்களும் நமக்கு முக்கியமானவைதானே..

    2. முதலைக் கண்ணீர் வடிக்காதே என்பார்களே.. அப்படி என்றால் என்ன?

    3. படிச்சால் போதும் என்கிறார்களே... படிப்பிருந்தால் மட்டும் எல்லோருக்கும் நல்ல வாழ்வு கிடைக்குமோ?

    4. உப்பு உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர், ஆனா ஏன் உப்புக்கிருக்கும் மரியாதை, சீனி புளிக்கெல்லாம் இல்லை?

    5. நாம் வெளி நாட்டு உணவுகளை நம் வீட்டில் செய்கிறோம், ஆனா அப்படி வெளிநாட்டவர் யாரும் நம் இடியப்பம் புட்டு இட்டலி தோசை எதையும் செய்ததாகவே அறியவில்லையே, ஆனா விரும்பிச் சாப்பிடுகிறார்கள் .. என்ன காரணமாக இருக்கும்?.

    6. எப்பவும் அடுத்தவர்களைக் குறை கூறுவதும், அடுத்தவர்கள் பற்றியே பேசுவதுமாக இருப்போர் எப்படிப் பட்டவர்கள்?... அதுவும் ஒருவித மனநிலைக் குறைபாடாக எடுக்கலாமோ?..

    இம்முறை 6 பேர்தான் உங்களுக்குக் கெள அண்ணன்:)).

    பதிலளிநீக்கு
  27. கேள்விகள், பதில்கள் எண் ஜோதிடம் எல்லாம் அருமை.

    பின்னூட்டங்களை படித்து ரசித்தேன்.

    நீங்கள் சொன்ன கதை சிரிப்பை வரவழைத்து விட்டது. வெற்று புகழ்ச்சியால் மீண்டும் கஷ்டப்பட போகும் ஊழியர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!