வெஜிடபிள் கோன் சூப்
ஆஆஆ ரொம்பக் குளிருதே .. எப்போ சூப் ரெடியாகுமோ:))
வெஜிட்டபிள் கோன் சூப் செய்வதற்கு, நாம் வீட்டில் சமைக்கும் மரக்கறிகளின், தண்டுகளை வீசிடாமல் சேர்த்து வைக்கோணும், பெரும்பாலும் இலைகளை எடுத்துவிட்டுத் தண்டுகளை எறிவோமெல்லோ அப்படி எறியாமல், அவற்றை சேர்த்து வச்சு சூப் செய்திடலாம், தண்டில்தான் அதிக சத்துக்கள் இருக்கு.
இது என்னிடம், வீட்டில் இருந்த மரக்கறிகள் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன், ஒரு பிழை நடந்துவிட்டது, சிகப்பு மரக்கறி சேர்த்தால், சூப் கறுப்பாகிடும். நான் இங்கு சிவத்த வெங்காயமும், சிவப்பு ட்ரடிஸ்[Radish] உம் சேர்த்தேன் அதனால சூப் கலர் கறுப்பாகி விட்டது, இதே முறையில் சிக்கன் சூப் செய்தேன் அது வெள்ளையாக இருக்கு, என்பக்கத்தில் வெளிவரும்.
பெரிய பெரிய துண்டுகளாக வெட்டினால் போதும், உள்ளி, வெங்காயம், பச்சை மிளகாயும்[விரும்பினால்] சேருங்கோ.. மற்றும் மிளகுப்பவுடர், கொஞ்சம் உப்பு சேர்த்து இப்படி தண்ணி விட்டு நன்கு அவிக்கவும்.
இப்படி நன்கு அவிஞ்சதும், கொஞ்சம் மெதுவாக கடைவதுபோல நசித்து.. நன்கு வடித்தெடுக்கவும்.
கொஞ்சம் கோன்[நான் சேர்ப்பது ஃபிரீசரில் இருந்த சோளன்], கொஞ்சம் புரோகோலி, காலிபிளவர், கரட்டும் போடலாம் மற்றும் ஸ்பிரிங் ஆனியனும் சேர்க்கலாம், இப்படி மிகவும் குட்டியாக ரெடி பண்ணி வையுங்கோ [நிறையப் போடக்கூடாது.. பட்டும் படாமலும் தெரிவதுதான் நல்லது].. இதில் சுவீட் பெப்பரும் சேர்த்தேன் நான்.
பின்னர் அந்த வடித்த வெஜிடபிள் ஸ்ரொக் கை அடுப்பில் வச்சு, நன்கு கொதிக்கும்போது[கொதிக்காமல் சேர்க்கக்கூடாது], வெள்ளை சோள மா பவுடர்[white corn flour] அதில் என் அளவுப்படி ஒரு லீட்டர் ஸ்ரொக் க்கு 4-5 மேசைக்கரண்டி மா தேவைப்படும், மாவை வெண்சூட்டுத் தண்ணியில் கரைச்சு, இப்படி சேர்க்கவும். சூப் ஓரளவு தடிப்பான பதமாக அதாவது மெல்லிய கஞ்சிப் பதமாக வரோணும்.. அப்போது வெட்டி வைத்திருக்கும் அந்த மரக்கறிகளையும் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அதிராவின் ஸ்பெஷல் சூப் ரெடி, பிரட் ரோஸ்ட் உடன் சாப்பிட சுவையோ சுவை.
சூப் குடிச்சால் இந்த டிஷ் இலவசம்:))..
நான் அடிக்கடி செய்யும் கொள்ளு சுண்டல்:)
ஆனால் இம்முறை நெ.தமிழனுக்காகவே செய்தேனாக்கும்:)
=============================
“மொட்டுக்களை உடைத்து விட்டமைக்காக, செடியிடம்
தென்றல் மன்னிப்புக் கேட்பதில்லை”
======🙏======
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குகுளிருக்கு இதமான சூப்....
பதிலளிநீக்குஆனால் இங்கே வியர்க்கிறதே...!
நீக்குஎன்ன!... வியர்க்கிறதா?...
நீக்குசூப்பின் சுவையை நினைத்தா!...
( வந்த வேலை இனிதே நிறைந்தது)..
நல்லவேளை....
நீக்குஅவிகளுக்காக அதைச் செஞ்சேன்...
இவிகளுக்காக இதைச் செஞ்சேன்...ந்னு
நமக்கு எதையும் கொடுக்கவில்லை...
சூப் வீட்டில் போணியாகாது போல...
கீதாக்கா வந்தால் தான் தெரியும்...
//என்ன!... வியர்க்கிறதா?... சூப்பின் சுவையை நினைத்தா!...//
நீக்குஇதற்கெல்லாம் நாங்கள் அசர மாட்டோமுல்ல... நாங்களும் தஞ்சாவூர்தான்!
ஆஆஆஆ மீயும் எழும்பி வந்திட்டனே.... இன்று சரியான காத்து மழை.. இடையிடையே ஹேல் ஸ்ரோனும் விழுந்து கொண்டிருகுது... சூப் செய்தால்தான் சரி...
நீக்குசூப் குளிருக்கும் மற்றும் உடல் நலமில்லை தடிமன், மூக்கடைப்பு அனைத்துக்கும் நல்லம்தான் ஸ்ரீராம்...
தஞ்சாவூர்க்காரர் மட்டும்தான் அசர மாட்டினமோ.. மீயும் தேன்:)) ஹா ஹா ஹா..
வந்துட்டேன் துரை, போணி ஆயிருக்கு போல! :)))))
நீக்கு//துரை செல்வராஜூ10 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 6:44
நீக்குநல்லவேளை....
அவிகளுக்காக அதைச் செஞ்சேன்...
இவிகளுக்காக இதைச் செஞ்சேன்...ந்னு
நமக்கு எதையும் கொடுக்கவில்லை...//
ஓ இதை அப்போ கவனிக்கத் தவறிட்டேன்னே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) துரை அண்ணன் உங்களுக்காகவே வோஷிங்டனில் இருந்து மேபிள் நட்ஸ் எடுத்து வந்து என்பக்கம் போட்டேன் நீங்க காக்கா போயிட்டீங்க அதைப் பார்க்காமல்:(.
இதில பாருங்கோ...
நீக்குஅதிராவவின் தளத்துக்கு வரும் போதெல்லாம்.. Intly.com என்று ஒரு குறுக்குத் திரை வந்து மறைத்து கணினியின் எல்லா சன்னல்களையும் மூடிவிட்டுப் போய்விடும்...
அதை சரி செய்யும் நுட்பம் எல்லாம் தெரியாது...
இதே போலத் தான் திருமதி மனோ சாமிநாதன் அவர்களது தளமும்...
இதை எனது பதிவு ஒன்றிலேயே சொல்லியிருக்கிறேன்...
இது அதிராவுக்குத் தெரியாமலேயே போய் விட்டது...
அதிராவின் தளத்துக்கு வரக்கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை...
இந்தக் கருத்து
அதிராவின் கண்ணில் பட்டால் அதிர்ஷ்டம் தான்....
//இந்தக் கருத்து
நீக்குஅதிராவின் கண்ணில் பட்டால் அதிர்ஷ்டம் தான்....//
ஹா ஹா ஹா துரை அண்ணன், இக்கருத்து முன்பும் என் கண்ணில் பட்டு, பதிலும் போட்டனே.. நீங்கள்தான் கவனிக்கவில்லையோ... குறை ஒன்றும் இல்லை துரை அண்ணன்.. எல்லாம் விதி.. எப்போது எது நடக்க வேண்டுமோ அப்போது உங்களுக்கும் எத்தடையும் இருக்காது பாதை கிளீனாகும் என் பக்கம் வர.. மற்றும்படி .. காலம் செய்த கோலம் கடவுள் செய்த குற்றம்.. பாட்டு நினைவுக்கு வருது ஹா ஹா ஹா..
இல்லாட்டில் பிரித்தானியாக் காண்ட் கோர்ட் க்கு வாங்கோ அங்கு பேசி ஒரு முடிவுக்கு வருவோம்ம்.. ஸ்ரீராம் என் கட்சிக்கு ஜாட்சி ஜொள்ளோணும்:)) ஹா ஹா ஹா..
அருமையான சூப். நல்ல காலைக் குளிருக்கு (நம்ம பங்கிற்கு ஶ்ரீராமை வெறுப்பேற்றுவோம்) அருமையான சூப். வெங்காயம் போன்றவற்றை விலக்கி இங்கே செய்யச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஇதில் ஸ்ப்ரிங் ஆனியன் சில கட் பண்ணி, மிளகுப் பொடி சேர்த்துச் சுவைத்தால்...ஆஹா...
//நல்ல காலைக் குளிருக்கு (நம்ம பங்கிற்கு ஶ்ரீராமை வெறுப்பேற்றுவோம்) //
நீக்குகொண்டாடுங்கள்!
///நெல்லைத்தமிழன்10 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 6:12
நீக்குஅருமையான சூப்.///
ஆஆஆஆஆஆஆ மீ பெயிண்ட்டாகிறேன்ன் எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ:)) ஹையோ எப்பூடி எப்பூடி எப்பூடி இப்பூடிச் சொல்ல மனசு வந்துது நெல்லைத்தமிழனுக்கு?:)) ஹா ஹா ஹா.. எல்லாம் கொள்ளு சுண்டல் சாப்பிட்ட எபெக்ட் ஆக இருக்குமோ?:))..
இப்போ கீசாக்கா வருவா பாருங்கோ.. இதை விட்டுப்போட்டு, நான் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன் கோன் க்குப் பதில் அதைப் போட்டு காச்சுவேன் என தன் ரெசிப்பிப் புகழ் பாடிக்கொண்டு ஹா ஹா ஹா..
நன்றி நெல்லைத்தமிழன்... விரும்பாதவற்றை தவிர்க்கலாம், பெப்பர் உப்பு பச்சைமிளகாய் காரத்தைக் கொடுப்பதால் சேர்த்தால் நல்லது.
நான் கண்டு பிடிச்சிட்டேன், மஸ்றூம் சேர்த்தால் கறுக்கிறது சூப். சிவப்பு வெங்காயமும் கலரை மாத்தும்... என் பக்கத்தில் இதன் எசப்பாட்டில்:)) சூப் கறுக்கவில்லை:).
//இப்போ கீசாக்கா வருவா பாருங்கோ.. இதை விட்டுப்போட்டு, நான் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன் கோன் க்குப் பதில் அதைப் போட்டு காச்சுவேன் என தன் ரெசிப்பிப் புகழ் பாடிக்கொண்டு ஹா ஹா ஹா..// நேத்திக்குச் சாயங்காலம் என்னமோ வர முடியலை! எல்லோரும் நேத்திக்குனு பார்த்து என்னை எதிர்பார்த்திருக்கீங்க! :)))))
நீக்குஅதிரடி, என்னோட செய்முறையைச் சொல்லிட்டேனே! கீஈஈஈஈஈஈஈழே பாருங்க!
@ Geesaacca
நீக்குhttp://www.catster.com/wp-content/uploads/2018/07/Cat-hiding-under-a-dresser-looking-scared-or-nervous.jpg
இங்கு நடைப் பயிற்சிக்காக உள்ள பூங்காக்களின் வெளியே சூப்புகள் (அவை ஜூஸ்... கொதிக்க வைக்காதவை) விற்கிறார்கள். 30 ரூபாய்க்கு பாகற்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், சிறிது தேசிக்காய் ஜூஸ் கலந்து தந்தார்கள். அருமையா இருந்தது.
பதிலளிநீக்குஎனக்கு சூப் வகைல ஸ்வீட் கார்ன் சூப் மட்டும்தான் பிடித்தமானது. மற்றபடி இரயிலில் கொடுக்கும் தக்காளி சூப்லாம் பிடிக்கவே பிடிக்காது
அருகம்புல் உட்பட சில சூப்கள் விற்கும் கடை ஒன்று இங்கும் சாலையில் கண்ணில் பட்டது. நான் சுவாரஸ்யம் கொள்ளவில்லை!
நீக்குஒரு ஸ்மூத்தி மேக்கர் வாங்கினால் நாமே செய்யலாமே.. எதுக்கு கடைக்கு.... என்னிடம் இருப்பதைப் பின்பு படம் போடுகிறேன்... வீட்டில் எனில் நம் சுவைக்கேற்ப செய்யலாம்.
நீக்குஇந்த ஜூஸெல்லாம் வீட்டிலேயே செய்துக்கலாமே! வெளியில் ஏன் வாங்கிக் குடிக்கணும்? நாங்க காலையில் சீக்கிரம் எழுந்து விட்டால் நெல்லிக்காய் 2+ பாகற்காய் இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு அடித்து ஜூஸ் குடித்த பின்னரே ஒரு மணி நேரம் கழித்துக் காஃபி. நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் ஆவாரம்பூ தேநீர்!
நீக்குஎனக்காக கொள்ளு சுண்டலா? எனக்கு இனிப்பு சுண்டல் மட்டுமே ரொம்பப் பிடிக்கும். கர்ர்ர்ர்
பதிலளிநீக்குஉங்களுக்கு கொள்ளு சுண்டல் அவர் கொடுக்கும் காரணம் புரியவில்லையா நெல்லை?!!
நீக்குகொள்ளு சாப்பிட்டு இளைக்கும் உடம்பா? ஹா ஹா.... காலையிலேயே மனசு ஜாங்கிரிக்கு அலைபாய்ந்தால் இளைக்கும் வாய்ப்பேது?
நீக்கு//
நீக்குஸ்ரீராம்.10 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 6:40
உங்களுக்கு கொள்ளு சுண்டல் அவர் கொடுக்கும் காரணம் புரியவில்லையா நெல்லை?!!//
ஹா ஹா ஹா
//எனக்கு இனிப்பு சுண்டல் மட்டுமே ரொம்பப் பிடிக்கும். கர்ர்ர்ர்//
சுண்டலில் இனிப்பு இருக்கிறதோ இது என்ன புயுக் கதை:)).. அதெல்லாம் உங்களுக்கு ஆகாது.. இதையே சாப்பிடுங்கோ நெ.தமிழன்.
அதிரா சொன்ன மாதிரிக் கொள்ளை முளைக்கட்டிச் சுண்டல் செய்து எங்க பையருக்கு தினமும் கொடுப்பேன். நானும் சாப்பிட ஆசைதான். ஆனால் வாயு உடனே வந்து வேலையைக் காட்டுகிறது.
நீக்குகீசாக்கா முளைக்கட்டியபின் வாயு இல்லாமல் இருப்பதைப்போல ஃபீலிங்கா இருக்கெனக்கு.. எனக்கு தானியங்கள் சிலது.. கடலை கெளபி போன்றவை முளைக்கட்டி அவிச்சால் வாயுத்தொல்லை இல்லை, வாய்வுத்தொல்லை என நான் சொல்வது, வயிறு ஊதிவிடுகிறது, ... அப்படி எனில் வெறும் வயிற்றில் சாப்பிடாமல் ஈவினிங் சாப்பிடுங்கோ..
நீக்குஉள்ளி வேறு, வெங்காயம் வேறா ?
பதிலளிநீக்குஇதில் ஆனியன் வேறு வருகிறதே...
ஒரே குசப்பமாக இருக்கிறது.
-SivasRegalசிவசம்போ
உள்ளி என்றால் பூண்டு இல்லையோ ஜி?
நீக்குஉள்ளி என்றால் வெங்காயம்.
நீக்கு(தேவகோட்டை தமிழில்)
பூண்டு நீங்கள் சொல்லியே அறிகிறேன் ஜி
ஹையோ ஹையோ... வெங்காயம், பூண்டு இவைகள்தாம் தமிழ். இந்த உள்ளி, உள்ளிப்பூண்டு இதெல்லாம் தமிழ் இல்லை. வேற்று மொழி. தேவகோட்டைக்கார்ர் இதை மறந்துட்டாரே.
நீக்குஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சனை:) கில்லர்ஜிக்கு உள்ளியில் பிரச்சனை ஹா ஹா ஹா.. அதுதானே இத்தனை வருடமாக என் சமையல் குறிப்புக்கள் பலவற்றைப்:)) பார்த்த பின்புமோ இக்குழப்பம் கில்லர்ஜி:))..
நீக்குஇப்போ ஸ்ரீராம் நெ.தமிழனுக்கெல்லாம் டவுட்டே வருவதில்லை:)).. தலைக்கு மேல வெள்ளம் சாண் ஏறியென்ன முழம் ஏறியென்ன.. மொமெண்ட்டாக இருக்குமோ?:)) ஹா ஹா ஹா..
வெங்காயம் = வெங்காயம்
நீக்குஉள்ளி = பூண்டு...
எங்களுக்கு தெரியும் பூண்டுதான் உள்ளி என, ஆனா ஊரில் ஏன் நம் நாட்டில் உள்ளிதான் புழக்கத்தில் உள்ளது.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்... வாங்க பானு அக்கா...
நீக்குகோன் சூப் என்பதை கோன் ஐஸ் க்ரீம் போல ஏதோ ஒன்று என்று நினைத்து விட்டேன், பிறகுதான் கார்ன் என்பதை அதிரா கோன் ஆக்கி விட்டார் என்று மண்டைக்குள் பல்ப் எரிந்தது. ஹி ஹி!
பதிலளிநீக்குமுதலில் நானும் அப்படிதான்.....
நீக்குமூணு வருஷத்துக்குமேல அதிரா எழுதுவதைப் படித்துமா இன்னும் சந்தேகம் வருது? அவர் தமிழே அபூர்வம். அவருக்கு மட்டும்தான் புரியும்.
நீக்குமத்தவங்கள்ளாம் புரிஞ்ச மாதிரி கடந்து செல்ல வேண்டியதுதான்.
ஆஆஆஆஆ அது ஹோன் ஆஆ?:)) ஹா ஹா பேசாமல் இங்கிலிஸ் ஐயே பாவிப்போம் என்றாலும் அடிக்க வாறாங்க:)).. அதனால என் தமிழே எனக்குதவி:)).. பழகுங்கோ.. பலதையும் படிச்சால் நல்லம்தானே என பெரியவங்க ஜொள்ளி இருக்கினம்.
நீக்குசிகப்பு காய் போட்டால் சூப் கறுப்பாகிவிடும், அப்போ பச்சை காய் போட்டால் பச்சையாக்கி விடுமோ? லாஜிக் எங்கயோ இடிக்குதே ராடிஷ் தோல் மட்டும் தான் சிகப்பாக இருக்கும், பீட்ரூட் போடமாட்டார்கள். காரட் பிங்க் கலர். சிகப்பு கலர் கொடுக்காது. வெஜிடபிள் ஸ்டாக்குக்கு மிளகு தூள், உப்பு போட்டு வேக வைக்கக் கூடாது. மிளகு தூள் தான் சூப்பை கறுப்பாகி விட்டது. மிளகுத்தூள் உப்பு சூப் பரிமாறும் முன்னர் தான் போட வேண்டும்.
பதிலளிநீக்குJayakumar
கறுப்பாக்கும் ரகசியத்தின் மெயின் ஹீரோ.. திருவாளர் மஸ்றூம் தான் எனக் கண்டு பிடிச்சிட்டேன் ஜேகே ஐயா... மற்றும் சிகப்பு வெங்காயமும் கலரை மாத்தும்.
நீக்குமிளகுத்தூளால் பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை, வெள்ளை சோளன் மா அதனை மறைச்சுப் போடும்...
என் பக்கம் பாருங்கோ வெள்ளை சூப்ப்.. இப்போ காண்பிக்கப்படுகிறது:)
https://gokisha.blogspot.com/2020/02/blog-post.html
இங்கு திருவனந்தபுரத்தில் உள்ளி என்பது shallots அல்லது சின்ன வெங்காயம். சவாள என்பது onion அல்லது பெரிய வெங்காயம் அல்லது பெல்லாரி வெங்காயம். உள்ளி பூண்டு அல்லது பூடு அல்லது வெளுத்துள்ளி என்பது garlic அல்லது பூண்டு ஆகும். இது நாரோயில் கார்க்கும் பொருந்தும்.
பதிலளிநீக்குAthe Athe
நீக்குeங்கள் யாழ்ப்பாணப் பாஷை மற்றும் உணவு வகைகளைக் கவனிச்சால் பெரும்பாலும் கேரளாவை ஒத்ததுபோலவே இருக்கும்.
நீக்குசின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்போம்.
ஆனா பூண்டை, உள்ளி எனத்தான் சொல்வோம்.
ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் மாதிரி சூப்!
பதிலளிநீக்குசூப்பர் மா. அதிரா,, சாப்பிட நன்றாகத் தான் இருக்கும்.
இங்கே குளிருக்கு இதமாகவும், ஜுரத்துக்கு ஒரு மாற்றமாகவும் செய்து கொடுத்தேன். ஆனால் பூண்டு போடவில்லை.
காரட், பெல்பெப்பர் ,ப்ரொக்கொலி ரொம்பப் பிடிக்கும்.
கொள்ளு சுண்டல் நல்ல ஐடியா. இங்கே கிடைக்குமா
என்று தெரியவில்லை. சாப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
நன்றி மா.
ஆஆ வாங்கோ வல்லிம்மா... உண்மை காச்சல் எனில் இப்படி கொஞ்சம் மிளகுக்காரத்தோடு செய்து, பிரெட் ரோஸ்ட் உடன் நன்றாக இருக்கும்... பூண்டு உடம்புக்கு நல்லது மற்றும் மரக்கறிகளில் ஏதும் வாய்வுக்குணம் இருக்குமெல்லோ.. முக்கியமாக கொலிபிளவர், புரோக்கோலியில்.. அதுக்காகவும் பூண்டு சேர்த்தால் நல்லது மற்றும் படி நம் விருப்பம்.
நீக்குகொள்ளு இங்கு தமிழ்க் கடை மற்றும் பாகிஸ்தான் கடைகளிலெல்லாம் கிடைக்குது.. நான் மாதம் 3,4 தடவையாவது செய்கிறேன்.
குளிருக்கு இதமாக சூப். பார்க்க நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குசூப் அருமை.
பதிலளிநீக்குசெய்முறை படங்கள் எல்லாம் அழகு.சூப்புக்கு காத்து இருக்கும் பூனையார், பூவில் தேன் எடுக்கும் வண்ண்த்துப்பூச்சி அழகு.
வடிவேல் சொல்வது சரிதான், பிள்ளைகளை காலை எழுப்பும் அம்மாக்களின் சத்தம் எனக்கு கேட்கிறது.
தென்றல் மொட்டை உடைக்கிறதா? அவ்வளவு மெல்லிய மொட்டை தாங்கிய செடியா?
வாங்கோ கோமதி அக்கா.. ஹா ஹா ஹா முதல் படத்திலேயே உங்களை மயக்கி விட்டேன் போலும்.. அதையே ரசிச்சுக் கொண்டிருக்கிறீங்கள்... பூஸாருக்கும் குளிருதாம்.
நீக்குஎங்களுக்கு இந்த வீக் ஹொலிடே:))
கொள்ளு சுண்டல் பார்க்கவே அழகு.
பதிலளிநீக்குகொள்ளு சுண்டலுக்கு எவ்வளவு நேறம் ஊற வைத்தீர்கள்? (8 மணி நேரமா)
எவ்வளவு நேரம் வேக வைத்தீர்கள்.( 20 நிமிடம் இருக்குமா?)
பூ போல இருந்ததா? அப்போதுதான் என் போன்றவர்கள் சாப்பிட வசதி.
நான் கோமதி அக்கா, ஒரு நாள் முழுக்க ஊற விடுவேன், தேவைப்பட்டால் முளைக்கட்டவும் விடுவேன்.. எனக்கு இந்த தானியங்களோடு விளையாடி சுண்டல், வடை செய்வதென்பது ஒரு அலாதி பிரியம்.. கொள்ளு வடை என் அடுத்த போஸ்ட்டில் போடுறேன் பாருங்கோ.. எதுக்கும் நேரம் போதாமல் போயிடுது.
நீக்குஇங்கு குளிர் என்பதால் கொஞ்சம், கூட நேரம் ஊற விடோணும், ஆனா பொதுவா 8-10 மணி நேரம் போதும்.
அவிப்பது அடுப்பில் எனில் ஒரு மணி நேரமாவது எடுக்கும், பதம் பார்த்துப் பார்த்து அவிய விடுவேன். ஆனா இப்போ எலக்றிக் பிரசர் குக்கர் வாங்கியதிலிருந்து, ஊறாத கொள்ளையும் 8 நிமிடத்தில் கரைச்சுத்தருகிறது... உங்கள் விசில் முறையில் எனில் கொஞ்சம் 5-6 விசில்கள் வைக்கோணும் என நினைக்கிறேன் கோமதி அக்கா, அது எனக்கு சொல்ல தெரியவில்லை..
ஆனா நல்ல பூப்போல கடலை அவிந்துவருவது போல வரும், சொஃப்ட்டாகவே இருக்கும்...
அருமை
பதிலளிநீக்குசுவை
நன்றி.
நீக்குவித்தியாசமாகத் தான் இருக்கு...!
பதிலளிநீக்குஅப்படியோ!! நன்றி டிடி.
நீக்கு// ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் மாதிரி சூப்! // மிகச் சரியாக சொன்னீர்கள் வல்லியக்கா அவர்களே. என்ன ஒரு சுவை அந்த "ப்ளாக் பாரஸ்ட்" கேக். அதே சுவையுடன் இந்த ஸ்வீட் கார்ன் சூப்பும் இருக்கும் போல் இருக்கிறது. அதன் கூட உண்ண டோஸ்டட் ப்ரெட் சூப்பர். சூப்பைவிட நீங்கள் அதை present செய்திருக்கும் விதன் அருமை அதிரா அவர்களே. எங்கள் காலை சிற்றுண்டி முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்குஅன்பு ரமா, என்னை மாமி என்றே அழைக்கலாம். சின்னக்குழந்தைகளுக்கு எப்படி அக்காவா இருக்கிறது :)
நீக்குஅதிராவின் சூப் பார்த்ததும் ப்ளாக்ஃபாரஸ்ட் கேக் நினைவுக்கு வந்தது. ஜஸ்ட் ப்யூர் யோசனை.
இங்கே இஞ்சி,மஞ்சள் ,மிளகு கஷாயம் தான் இப்போ
வழக்கத்தில் இருக்கு.
நீங்க கூட செய்முறை அனுப்பலாம். சுவையாக இருக்கும்.
வாங்கோ ரமா அக்கா மிக்க நன்றி.. என்னை இப்பொழுதுதான் பார்க்கிறீங்கள் என நினைக்கிறேன்..போகப் போகப் பழகிவிடுவீங்கள் அதிரா என்றால் எப்படித்தான் இருப்பா என ஹா ஹா ஹா.
நீக்குவல்லிம்மா- வல்லிமாமி ஆவ்வ்வ் இதுவும் நல்லா இருக்கே..
இந்தியாவில் சாதாரணமாக எல்லோரையும் மாமி எனச் சொல்லுவார்கள் ஆனா எங்கள் ஊரில், மாமி என்றால் உரிமை இருக்குமிடத்தில் மட்டுமே அப்படி அழைப்போம், மற்றும்படி பார்ப்போரை எல்லாம் ஆன்ரி எனத்தான் அழைப்போம்...
அதிரா ,உண்மைதான்..
நீக்குஎனக்கு சாதம் வைத்த கஞ்சியில் சூப் செய்தால் சுவையாக இருக்கு என்று தோன்ருகிற்து
பதிலளிநீக்குகஞ்சியில் வெங்காயம் உப்பு பால் சேர்த்துக் குடிப்பதும் ஒரு அருமையான சூப்தான் கி எம் பி ஐயா, ஆனா இப்போதைய கஞ்சி எல்லாம் ஒருவித மணமாகவும், சாயம் கலந்ததுபோலவும் வருகிறது.. பயமாக இருக்கிறது..
நீக்குதனித்தனியாக நன்றி சொல்லத் தவறி விட்டேன்ன்..
பதிலளிநீக்குவந்திருக்கும் அனைவருக்கும் நன்றி..
https://rlv.zcache.com/cute_scottish_fold_noodles_cat_thank_you_postcard-r3990d227e5a94fcf8fe2669dd78f53cc_vgbaq_8byvr_540.jpg
பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சியும், அதைப் பிடிக்கக் காத்திருக்கும் பூசாரும் வெகு ஜோர்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா நன்றி வல்லிம்மா
நீக்குஎனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகனும்
பதிலளிநீக்குநீங்க horn இதையும் கோன் என்கறீங்க இப்போ corn இதையும் கோன் என்கரறீங்க இப்போ எதுன்னு நாங்க புரிஞ்சிக்கிறது :)
ஏஞ்சலின் - இது ஒரு புதன் கேள்வியா? நான் சாப்பிட்டேன், வட இந்திய உணவகத்தில் நானும் மட்டர் பனீரும் சாப்பிட்டேன். நானும் நண்பனும் வெளியில் சென்றோம். இதிலெல்லாம் நாம் எப்படி 'நான்' என்பதற்கு அர்த்தம் கொள்கிறோம்?
நீக்குஸ்ஸ்ஸ்ஸ் :)) இந்த மாதிரி சமயத்தில் நீங்க இப்படி ஸ்கொட்லான்ட் பக்கம் சாயக்கூடாது சொல்லிட்டேன் :) இதை பாத்தா பூஸ் குதியோ குதின்னு ஜம்ம்பும் :)
நீக்குஆஆஆஆஆவ்வ்வ் நெல்லைத்தமிழனின் கொமெண்ட் வந்திருக்குது ஆனா எனக்கு அடி விழுந்திருக்கும் என நினைச்சேன்ன்ன்ன்ன்.. பட்..பட்..பட்ட்.. மீ ரெண்டாம் தடவையாகப் பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனக்காராவது யுட்டாறிய தண்ணி அடிச்சு எழுப்புங்கோ.. குளிர் தண்ணி வாணாம்ம் தடினமாக்கிடும்:))...
நீக்குஹா ஹா ஹா அதானே நல்லாக் கேழுங்கோ நெ.தமிழன்.. டமில் தெரியாதோரை பக்கத்து வீட்டில வச்சுக்கொண்டு மீ படும் பாடிருக்கே அப்பப்பா:)).
//இதை பாத்தா பூஸ் குதியோ குதின்னு ஜம்ம்பும் :)//
ரெசிப்பி போட்டதன் பலனை அனுபவிச்சுக்கொண்டிருப்பதைப்போல இருக்கூஊஊஊஊஊஉ ஹா ஹா ஹா:))
சூப் நல்லா இருக்கு நிச்சயம் செய்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குஆஆஆ வாங்கோ அஞ்சு.. இம்முறை என் எனமீஸ் எல்லாம்[நெ.தமிழனையும் உங்களையும் ஜொன்னேன்ன்:))] என் ரெசிப்பி நல்லாயிருக்கு செய்யப் போகிறோம் என்பதைப் பார்த்தால் எனக்கு கிச்சினை மூட விருப்பமில்லை:)).. இன்னும் ஒரு பத்து ரெசிப்பியாவது செய்யோணும் போல வருதே.. ஆஆஆஆஆஆ சரி சரி ஓடாதீங்கோ ஹா ஹா ஹா நன்றி அஞ்சு.
நீக்குஅதிரா... ரொம்ப ஹேப்பியா இருக்க வேண்டாம்.
நீக்குஒரு வீட்டிற்குப் போனால் சாப்பிடறீங்களான்னு கேப்பாங்க. உடனே, அதை எதிர்பார்த்துத்தான் ஆறடி நீள இலை கொண்டுவந்திருக்கிறேன், தட்டு எடுத்துட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி சாப்பிட உட்காருவாங்களா?
இல்லை உங்களைப் பார்க்கிறவங்க, நல்லாருக்கீங்களா அதிரா என்றால் நல்லாருக்கேன் என்று பதில் சொல்லாமல், இல்லை நேத்துலேர்ந்து தலைவலி, அப்போ அப்போ முட்டிவலி, கொள்ளு ஒத்துக்க மாட்டேங்குது, நீங்க எந்தப்பக்கத்திலேர்ந்து கேட்கறீங்கன்னு சரியா தெரியலை என்று பிரச்சனையை அடுக்குவீங்களா?
ஏதோ செய்முறையைப் படிச்சோம், நல்லாருக்குன்னு சொன்னோம். அதுக்காக பூமில கால் பாவாம குதிக்கிற மாதிரி இருக்கே ஹா ஹா ஹா
முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே டயடிங்க் இருந்தப்போ இந்த சூப் தான் சில சமயங்கள் உணவே! ப்ரெடெல்லாம் இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெறும் சூப் மட்டுமே! ஆனால் நான் சோள மாவு கரைத்து விட்டதில்லை. ஒயிட் சாஸ் பண்ணி வைச்சுப்பேன். அதான்! மிளகுபொடி சூப் குடிக்கையில் தனித்தனியாகக் கிண்ணங்களில் ஊற்றிய பின்னர் அவரவர் ருசிக்கு ஏற்பச் சேர்ப்பேன். ஆனால் வெங்காயம், (நோ பூண்டு)கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, சோம்பு போன்றவற்றை ஒன்றிரண்டாகத் தட்டி ஒரு துணியில் கட்டி சூப் ஆரம்பநிலையில் கொதிக்கும்போது அதற்குள் போட்டு விடுவேன்.
பதிலளிநீக்குஆஆஆஆஅ கீசாக்கா வந்திருக்கிறா, நான் இப்போ நினைச்சுக் கொண்டே வந்தேன், பயணம் வெளிக்கிட்டுவிட்டீங்கபோல காணல்லியே என...
நீக்குஅது கீசாக்கா சூப்பில் பல ரகம்.. ரசம் செய்வதைப்போல.. அதில் வெஜ் கோன் சூப் எனில் இப்படித்தான் வைக்கோணும்...
நான் ஜொன்னனே கீசாக்கா இதை விட்டுப்போட்டு தன் ரெசிப்பியை களம் இறக்குவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா.. முதல்ல இந்த ரெசிப்பி எப்பூடி இருக்கெனச் சொல்லுங்கோ கீசாக்கா:))
அட! அதை மறந்துட்டேனா? இப்படியும் ஒரு நாள் செய்து பார்த்துட்டுச் சாப்பிட்டுவிட்டுச் சொல்றேன் அதிரடி! தைரியமாகக் களம் இறங்கலாம் இல்லையா?
நீக்குஇஃகி,இஃகி,இஃகி, உங்க சூப் செய்முறையும் நல்லாவே இருக்கு. சும்மாவானும் உங்களை வம்புக்கு இழுத்தேன். :))))))))
ஹா ஹா ஹா இத இத இதத்தான் காணல்லியே எனச் சொன்னேன்ன்.. நல்லதோ கூடாதோ எப்பூடி இருக்குதெனச் சொல்லோணுமில்லையோ?:)) நன்றி கீசாக்கா நம்பிச் செய்யுங்கோ... நான் இன்றும் செய்தேன் அவரைக்காய் முருங்கக்காய் எல்லாம் போட்டேன்ன்:))... வீசப்போகும் தண்டுகளை வீசாமல் ஃபிரிஜ்ஜில சேர்த்து வைத்துப்போட்டு ஒருநாள் இப்படி சூப் ஆக்கிடோணும்..
நீக்குபாருங்கோ இன்னும் ஸ்ரீராம் நீல மையில எழுதுகிறார் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
இப்போல்லாம் ஶ்ரீலாம் நேரமில்லாத்தால மற்ற ஆசிரியர்கள்ட தன் பேனாவைக் கொடுத்துட்டுக் கிளம்பிட்டார்னு நினைக்கிறேன்.
நீக்குஅவர் நீலப் பேனா தூக்கினால்தான் நான் கதையும் செய்முறையும் அனுப்பப் போறேன் ஹா ஹா
ஒயிட் சாஸ் ஏற்கெனவே நானும் சொல்லி இருக்கேன், வல்லியும் கூடச் சொன்ன நினைவு. மைதாமாவு+வெண்ணெய்+பால். மைதா சேர்க்காதவர்கள் சோளமாவிலே பண்ணிக்கலாம்.
பதிலளிநீக்குசூப்பிற்கு சிலசமயம் கிரீம் சேர்ப்பினம் ஆனா வெண்ணெய் பால் எல்லாமோ.. ? தெரியவில்லை.. ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.. ஆனா சூப் எனில் கொஞ்சம் காரசாரமாக அல்லது புளிப்பாக இருந்தால்தானே குளிருக்கு இதமாக இருக்கும் கீசாக்கா.
நீக்குசூப்பை யார் சொன்னாங்க அதிரடி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒயிட் சாஸ் பண்ணும் விதத்தைச் சொன்னேன். வெண்ணெயில் மாவை நன்கு பிஸ்கட் வாசனை வரவரைக்கும் பிரட்டி விட்டுப் பின்னர் பாலை ஊற்றிக் கொண்டு கால் டீஸ்பூன் உப்புச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கினால் ஒயிட் சாஸ் தயார். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு எந்த சூப் செய்தாலும் கடைசியில் இதை இரண்டு மேஜைக்கரண்டி விட்டுக் கலந்தால் சூப் குடிக்கத் தயார்.
நீக்குஓ அப்படியோ கீசாக்கா.. பார்ப்போம் இனி முயற்சிக்கிறேன்.
நீக்குஅந்தப் பூஸார் வண்ணத்துப் பூச்சியைப் பார்க்கிற பார்வையே சரியில்லை. வடிவேலுவோட இந்த மீம்ஸ் எத்தனையாவது முறையாப் பார்க்கிறேன், சொல்ல முடியலை! :))))
பதிலளிநீக்குஹா ஹா ஹா அது கீசாக்கா.. ஸ்ரீராமுக்கு அனுப்புவது 2,3 மாதங்களுக்கு முன்பெல்லோ.. அதனால இதை இங்கு அனுப்பியதை மறந்து என் பக்கம் போட்டு விட்டேன் அஜீஸ் பண்ணிடுங்கோ.. மிக்க நன்றி.. இங்கு காத்து மழை.. கொஞ்சமா ஸ்னோவும் கொட்டியது முதல் முறையாக.. மீ ஹொலிடேயை என்சோய் பண்ணப்போறேன்ன்ன்ன்ன் குல்ட்டுக்குள் இருந்து ஹா ஹா ஹா.
நீக்குஆஹா இதுதான் எசபாட்டா. இப்ப் இங்கு வந்திருக்கும் சபீனா புயலுக்கு இந்த சீப் செய்து குடிக்க நல்லாயிருக்கும். நாங்களும் பிரட் டோஸ்ட் செய்து சாப்பிடுவதுதான். அதற்கேன் உப்பூடி கறுப்பா வரும்வரையா டோஸ்ட் செய்வது...
பதிலளிநீக்குஅழகான படம் 1வது. வடிவேலு ஜோக் பலதடவை சுத்தி சுத்தி வந்துகொண்டிருக்கு.. 🙂
ஆஹா வாங்கோ அம்முலு என் யூப்:)... அது சீப்:) அல்லவாக்கும் கர்ர்ர்:)) அங்குவரை மணத்து விட்டதே:)).. ஹா ஹா ஹா..
நீக்குஅது ரோஸ்ட் இப்படி முறுகினால்தானே வீட்டில பிடிக்குது எல்லோருக்கும்.
பிரெட் ரோஸ்ட் செய்யும்போது, முதலில் கொஞ்சம் மாஜரினைப் பூசி, ரோஸ்ட் பண்ணியபின்னரும் பூசும்போது இப்படி முறுகலாகவும் வாசமாகவும் இருக்கும்..
நன்றி அம்முலு.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமுதல் படமே அருமை. "என்னைப் போல் இறகுகள் இல்லாவிடினும்,யறக்க கற்று கொள். குளிர் விட்டு போகும்."என்கிறதோ பட்டாம்பூச்சி. அது போல். "நீயும் இப்படி உபதேசிப்பதை விடுத்து, குளிருக்கு ஒரே இடத்தில் வெற்றுடம்புடன் இப்படி படபடப்பதை நிறுத்தி, என்னைப்போல மப்ளர் சுற்றி, கண்களை சிமிட்டி இப்படி படுத்திருந்து பார்.. குளிருக்கு எவ்வளவு அடக்கமாக இருக்கிறதென்று உணர்வாய்.." என்கிறதோ நம்ம பூசார்.. முதல் படம் நிறைய கற்பனையை தூண்டுகிறது.
வெஜிடபுள் சூப் அருமையாக, மிகவும் பொறுமையாக செய்துள்ளீர்கள். படங்கள் செய்முறை விளக்கங்கள் நன்றாக உள்ளது. நான் இது போலெல்லாம் அடிக்கடி செய்ததில்லை இனி இப்படி செய்து பார்க்கிறேன். (எப்பவும் பசிக்கு சோற்றால் அடைத்த சுவருதான்..என்ற பழமொழியை நாங்கள் உண்மையாக்குபவர்கள். ஹா. ஹா. ஹா.மற்றபடி தினமும் ஏதாவதொரு டிபனாலும் அடைப்போம்...) சிறுதானியங்கள் வாயுவை உண்டாக்கும் என்பதினால், அதுவும் எப்பவாவதுதான். ஆனால் ஓரிரு மாதத்திற்கு ஒருமுறை அந்த டிபனாகிய அடையில் இவை கலந்து வந்து விடும்.
எனக்கும் வடிவேலு மாதிரி ஆறு மணிக்கு எழுந்திரிக்கதான் கஸ்டமாக உள்ளது. "பின்னே இப்படி அர்த்த ஜாமத்தில் மொபலை வைத்திருந்தால் ஆறு மணிக்கு எப்படி எழுந்திருப்பதாம்? என மனசாட்சி பதிலளிக்கிறது." "ஆனால் என்ன செய்வது? இப்போதுதானே என்னைத் தொட்டு தூக்க உன் கடமைகள் இடமளிக்கிறது" என என் செல்போஃன் மனசாட்சியை இடிக்கிறது. ஹா. ஹா. ஹா.
/மொட்டுக்களை உடைத்து விட்டமைக்காக, செடியிடம்
தென்றல் மன்னிப்புக் கேட்பதில்லை/
வாசகம் மிகவும் நன்றாக உள்ளது. ரசித்தேன்.
தென்றலின் இதமான காற்றினால் மொட்டுக்களுக்கு பாதிப்பு ஏதும் வராது என்பது தென்றலுக்கு மட்டுமல்ல செடிகளுக்கும் தெரியும்."அதனால் நீ எக்காரணம் கொண்டும், புயலாக மட்டும் மாறி விடாதே..! அதுதான் மன்னிக்க முடியாத குற்றம்."என செடிகள் தென்றலுக்கு எச்சரிக்கை செய்து கொண்டேயிருக்கும்..
அத்தனையும் அருமை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா.. நீங்க லேட்டூஊஊஊஊஊ:), இருப்பினும் உங்களுக்கு ஒரு டம்ளர் எடுட்த்ஹு ஒளிச்சு வச்சிருக்கிறேன்ன்.. அதோ அந்தப் புகைக்கூட்டுக்குக் கீழே பாருங்கோ இருக்குதாக்கும்.
நீக்குஆஹா கற்பனை சிறகடிச்சுப் பறக்கிறதே.
//இனி இப்படி செய்து பார்க்கிறேன்.//
அதுசரி தொதல் என்னாச்சூ?:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதாக்கும்:) செய்வேன் எனச் சொல்லிட்டால் செய்யும் வரை விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா உரலுக்குள் தலையைக் குடுத்தபின் இடிக்குப் பயந்தால் எப்படி??:))...
நீங்களும் நம் கட்சிதானே.. அதாவது பின் தூங்கி.. பின் எழும் சே..சே.. முன் எழும் கட்சீ எனச் சொல்ல வந்தேன்ன்:))..
மொத்தத்தில் செடிகள் அடுத்தவரைக் குற்றம் சொல்வதில்லை:))... எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றன என வரும்பொல எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..
மிக்க நன்றிகள்.
வெஜிட்டபிள் கோன் சூப் ...
பதிலளிநீக்குஅடடா அருமையா இருக்கு அதிரா...அந்த
கோன் தான் ஏதோ புதுசா கோன் வடிவில் போடுவீங் ன்னு நினைச்சுட்டேன்😝😝😝.
அது சோள மாவு 😄😄😄..ஆஹா...
Healthy soup💪💪💪