வியாழன், 13 பிப்ரவரி, 2020

இறுதி வரை துணிச்சல் காட்டிய சதாம்!

விசுவரூபம் 
பிலஹரி 
முந்தைய பகுதி படிக்க ... 





ன்னார் வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போது,  மணி பத்தடிக்கிறது.

வாசற் கதவு தாழ்ப்பாள் போடப் பட்டிருக்கிறது.  எல்லையற்ற அலுப்புடன் இரண்டு மூன்று தடவை கதவைத் தட்டுகிறான்.

எவரோ நடந்து வரும் ஓசை கேட்கிறது.  மறுவினாடி கதவு திறக்கப்படுகிறது.  கையில் சிறிய சிம்னி விளக்குடன் நின்று கொண்டிருக்கிறாள் அவன் மனைவி மங்களம்.

"ஏன் இன்னிக்கு இவ்வளவு நேரம்?  இத்தனை நேரம் திண்ணையில் உட்கார்ந்துட்டு, இப்போதான் உள்ளே போனேன்!" என்று கூறும் மனைவியைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான் மன்னார்.

பனியனையும் கழற்றி விட்டு மேல் துண்டு ஒன்றை விரித்துக்கொண்டு தரையில் படுக்கிறான் மன்னார்.

"ஏன் இன்னிக்கு இவ்வளவு நேரம்?" கேட்டவாறே, அவன் அருகில் அமர்கிறாள் மங்களம்.

பதில் இல்லை.

"ஏன் இவ்வளவு கோபம்?"

மௌனம்தான் பதில்.

கீழே அமர்ந்தவள், அவன் நெற்றிக்கட்டில் கை வைத்துப் பார்க்கிறாள். 

"ஜுரம் கூட இல்லையே!  ஏன் இவ்வளவு ஆயாசம்?  என்ன நடந்தது?"

"பேசாதே மங்களம்!  என் மனசு சரியில்லை!  ஒரு தம்ளர் தண்ணீர் கொடு!  போதும்!  எனக்குச் சோறு வேண்டாம்!..."

மௌனமாக எழுந்து செல்லும் மங்களம் மறு நிமிடம் தம்ளரில் நீர் கொண்டு வருகிறாள்.  ஒரு வாய் குடிக்கிறான் மன்னார்.

"வெந்நீரா இது?"

நெருப்பை உள்ளடக்கி, மேலே சாம்பல் பூத்துக் கிடைக்கும் அனற்துண்டமாக, கோபத்தை உள்ளே மூடி வைத்து, மேலுக்குப் பொறுமையுடன் கேட்கிறான் மன்னார்.

"ஆமாம்!...  ராத்திரியிலே நீங்க வெந்நீர் தானே சாப்பிடற வழக்கம்!"

அவள் சொல்லிமுடிக்கவில்லை...  கையிலுள்ள தம்ளர் பத்தடி தள்ளிப் போய் உருண்டு விழுகிறது.

"தரித்திரம்!...   பீடை!...  வெந்நீரா அது?...   ஐஸ் மாதிரி இல்லே?"

அவன் உறுமலில் அறை நடுங்குகிறது.  அவள் சிரிக்கிறாள்.

"இதுக்கா இவ்வளவு கோபம்?....,  சாயங்காலமே வைத்த வெந்நீர்; ஆறிப் போயிருக்கும்.  கொஞ்சம் பொறுங்கள். இதோ அடுப்பு மூட்டி, ஒரு நொடியில் கொண்டு வருகிறேன்!"

கொஞ்சம் கூடக் கோபமோ, பதட்டமோ இல்லாமல் வெகு சாவதானமாகச் சொல்லி விட்டுத் திரும்பிய மனைவியை வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான் மன்னார்.

மத்தியானம் நடந்த அந்த நிகழ்ச்சி அவன் உள்ளத்திரையில் நிழலாடுகிறது.  தன்னையும் ஒரு மனிதனாக எண்ணாமல் அந்த மனிதர் நடந்து கொண்ட முறை, அவன் உள்ளத்தை எப்படி ரணகளமாக்கி விட்டது?  இப்போது அதைவிடக்கொடூரமாக நடந்து கொண்டும் இவ்வளவு சாவதானமாக- ஒன்றுமே நடவாததுபோல-நடந்துகொள்கிறாளே மங்களம்.  அது எப்படிச் சாத்தியமாகும்?

"மங்களம்!  இப்படி வா!"

தன்னருகே வந்தமர்ந்த மனைவியை இரண்டு முறை ஏற இறங்கப் பார்க்கிறான் மன்னார்.  உள்ளத்திலே கொந்தளிக்கும் வேதனை 'குபீ' ரென்று பொங்கி யெழுகிறது.  அவன் உதடுகள் துடி துடிக்கின்றன.  இமைகள் படபடக்கின்றன.  அவனைக் கண்டு  மங்களம் திடுக்கிடுகிறாள்.

"என்ன இது?  என்ன நடந்தது?" என்று பர பரப்புடன் அவள் கேட்கும்போது அவன் வாய் விட்டு அழத் தொடங்குகிறான். 

"மங்களம்!....  மங்களம்!..." என்று தான் அவனால் அழ முடிகிறதே தவிர, வார்த்தைகள் வெளி வரவில்லை.



அவனுடைய தலையைத் தன்னுடைய மார்பகத்திலே பதித்த வண்ணம், தெப்பமாகக் கிடக்கும் அவன் முகத்தையும், கண்களிலிருந்து பெருகும் நீரூற்றையும் துடைக்கிறாள் அவள்.  

"என்ன இது பச்சைக் குழந்தை மாதிரி...  என்ன நடந்தது?...  அதைச் சொல்லுங்கள்!..."  என்று அவன் காதோடு காதாக அவள் கேட்கிறாள் - கொஞ்சும் குரலில்.

"மங்களம்!  நான் ஒண்ணு கேட்கறேன்!...  பதில் சொல்றியா?..."

தலையசைக்கிறாள் அவள்.

"சுற்றி வளைச்சுக் கேட்கல்லே!...  நேரிடையாகவே கேட்கிறேன் !..." என்று கூறிவிட்டு, சற்றுத் தயங்கிய மன்னார், "மங்களம்!...  நான் உயிரோடு இருக்கறது அவசியமா?" என்று நிதானமாகக் கேட்கிறான்.

அவளுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.   உடல் நடுங்குகிறது.

"சொல் மங்களம்!  நான் உயிரை வைச்சுண்டு இருக்கிறது, நியாயமா?...  நீ சொல்லு!"

வெறி கலந்த குரலில் அவன் மறுபடியும் கேட்கிறான்.  அவன் வாயைப் பொத்துகிறாள் அவள்.

"வாயை மூடுங்கள்!...  என்ன கேள்வி இது!...  உங்களுக்கு என்ன வந்து விட்டது இன்று!  ஏன் இப்படி என்னைக் கொல்கிறீர்கள்?" என்று கரகரத்த குரலில் அவள் கேட்கிறாள்.

"ஆமாம் மங்களம்!...  நான் ஏன் இருக்கணும்?..  எனக்குப் படிப்பு இருக்கா, கெளரவம் இருக்கா, பணம் இருக்கா, இல்லே - பார்க்கத்தான் அழகா இருக்கேனா?...  இது ஒன்றும் இல்லாம நானும் மனுஷன்னு ஏன் உலவணும்?"

உள்ளத்தைப் பிழிந்து, அங்கே ஊறிக் கிடக்கும் வேதனையைச் சொல்லால் வெளியே கொட்டுகிறான் மன்னார்.  வருத்தத்துடன் சிரிக்கிறாள் மங்களம்.

"ஏன்?...  படிப்பு, கெளரவம், பணம், அழகு - இதெல்லாம் இருந்தாத்தான் மனிதனா வாழ முடியுமா என்ன?"

"எல்லாம் வேண்டாம், மங்களம்!  இதிலே ஏதாவது ஒண்ணு இருந்தாக் கூடப் போதுமே!"

"இவற்றில் ஒன்றுகூட உங்களுக்கு இல்லையென்று எண்ணுகிறீர்களா நீங்கள்?"

"நான் எண்ணணுமா என்ன?  உலகமே அப்படித்தான் சொல்றது!"

"அப்படிச் சொல்லாதீர்கள்!  'உலகத்தில் ஒரு பிறவி நீங்கலாக' என்று சேர்த்துக் கொள்ளுங்கள்!...  அது கிடக்கட்டும்!...  இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்யற அளவுக்கு என்ன நடந்தது!  அதைச் சொல்லுங்களேன்!..."

சற்று நேரம் மௌனமாயிருக்கிறான் மன்னார்.

"இன்னிக்கு என்ன?  என்னிக்குமே செய்யற ஆராய்ச்சிதான் இது!  பின்னே என்ன மங்களம்!  என்னை எவன் மதிக்கிறான் சொல்லு!  நாய்கூட என்னை ஒரு மனுஷன்னு எண்ணாது போலிருக்கே!  ஏதோ படிப்பு இல்லே, 'வாட்டர் மேன்' தொழிலைச் செய்யறேன்!...ஆளாவது உருப்படியாயிருந்தால் ஒருவேளை அலட்சியப்படுத்தாமல் இருப்பான்களோ என்னவோ!...  தண்ணி கொடுத்தா ஒருத்தன் 'தண்ணியா இது?'ன்னு விசிறி அடிக்கிறான்.  'ஏண்டா கொடுக்கற கரியைத் திருடறியா' ன்னு கேட்கறேன் இன்னொரு புண்ணியவான்.  'உன் மூஞ்சியைப் போலத்தாண்டா நீ கொடுக்கற வாட்டர் இருக்கு' ன்னு ஒரு சட்டைக்காரன் திட்டறான்.  இவங்க யாரும் நானும் மனுஷன்தான் என்கிறதை ஒப்புக்க  மாட்டாங்க போலிருக்கே!  எனக்கும் உணர்ச்சி இருக்கு, எனக்கும் இதயம் இருக்கு என்பதெல்லாம் அவங்களுக்குத் தெரியாம இருக்கறத நெனச்சால், என் மேலே எனக்கு சந்தேகம் வந்துடறது மங்களம்.  உண்மையிலேயே அவங்க நினைக்கறதெல்லாம் சரின்னு கூட ஒவ்வொரு சமயம் தோண்றது!...  மத்தவங்க என்னையும் மனிதன்னு ஏத்துக்கக் கூடிய யோக்கியதை ஒண்ணுமே என்கிட்டே கிடையாதோன்னு உணர்வுதான் எனக்கு அதிகமாயிட்டு வர்றது மங்களம்..."

அவன் நிறுத்துகிறான்.  வெகு நாட்களாக உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கும் பெரும் சுமை யொன்றை வெளியே தள்ளிவிட்ட அற்ப நிம்மதி அவன் முகத்தில் படர்கிறது.

புடவைத் தலைப்பை எடுத்து அவன் முகத்தைத் துடைக்கும் பாவனையில் கண்களில் துளிர்க்கும் கண்ணீரை மறைத்துக் கொள்கிறாள் மங்களம்.  அவள் இதயம் வேதனையால் விம்மித் தணிகிறது.

"நீயும் அழறியா மங்களம்?" என்று சோகச் சிரிப்புடன் கேட்கிறான் மன்னார்.

பரபரவென்று கண்களைத் துடைத்த வண்ணம், லேசாகப் புன்முறுவல் செய்கிறாள் அவள்.

"நானா அழறேன்?  யார் சொன்னது அப்படி!... பச்சைக் குழந்தை போல மனசு படைச்ச நீங்க எதிரில் இருக்கும் போது வர்ற அழுகையும் ஓடிப் போயிடுமே..." என்று சொல்லிச் சிரித்தாள் மங்களம்.

வாய் திறவாமல் உட்கார்ந்திருக்கிறான் மன்னார்.

"நான் சொல்வதைக் கேளுங்கள்!  என்ன நடந்து விட்டது இப்போ?  யாரோ உங்க ஆபீஸிலே - உங்களை விட உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் - சற்று அலட்சியமாகவோ கோபமாகவோ நடந்து கொண்டு விட்டார்கள் என்பதற்காகவா இவ்வளவு சலனம்!  உங்களை அவர்கள் கோபித்துக் கொண்டதாகவே இருக்கட்டும், அலட்சியப்படுத்துவதாகவே இருக்கட்டும்.  அப்படி யெல்லாம் அவர்கள் நடந்து கொண்டால் அதற்குக்காரணம், உங்களிடையேயுள்ள உத்தியோகத்தின் வித்தியாசம்தான்.  'உயர்ந்த ஸ்தானத்தில் நாம் இருக்கிறோம்' என்ற எண்ணத்திலே உங்களிடம் கோபமாகவோ, அலட்சியமாகவோ நடந்து கொண்டிருக்கிறார்கள்.  'அப்படி நடந்துகொள்ள எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது' என்றுஅவர்கள் சொல்லுவார்கள்.  ஆனால், ஒரு உண்மையை நீங்கள் மறந்து விட்டீர்கள்.  அவர்களால் அலட்சியப்படுத்தப்படும் நீங்கள், அவர்களுடைய அதிகாரத்துக்கும் அதட்டலுக்கும் கட்டுப்பட்டிருக்கும் நீங்கள்,  வேறொருவரை அலட்சியப் படுத்தவோ, அதிகாரமாக அதட்டவோ முழு உரிமையும் பெற்றுள்ள பெரிய அதிகாரியாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏன் மறக்க வேண்டும்?"

மங்களம் சற்று நிறுத்தினாள்.  சேர்ந்தாற்போல் பேசி விட்ட களைப்பு இரைப்பு அவள் நெஞ்சம் விம்மித் தணிவதிலிருந்து தெரிகிறது.

"ஏதோ ஆத்திரத்தில் உங்கள் துணி மீது தண்ணீர் தெளித்து விட்டார்கள் என்று சொன்னீர்களே?  அப்போது உங்கள் மனசு எப்படித் துடித்திருக்கும் என்று எனக்கும் புரியாமல் இல்லை.  ஆனால் அந்தத் துடிப்பிலும் உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியிருக்கணும்.  'ஒரு சொட்டுத் தண்ணீரை என்மேல் தெளிச்சானே இவன்!  ஆனால் குடம் குடமா எடுத்து தலை வழியக் கொட்டினாலும், எனக்குக் கட்டுப்பட்ட பிறவி ஒண்ணு இருக்கு.  எனக்கு இப்போ ஆத்திரம் வர்றது; ஆனால் நான் கொட்டினா, அந்தப் பயித்தியக்காரிக்கு கோபமே வராது!' என்று எண்ணியிருக்கக் கூடாதா?  இதை எல்லாம் நீங்கள் ஒரு கணம் எண்ணிப் பார்த்திருந்தால் இப்படி யொரு தாழ்வு உணர்ச்சி உங்களுக்கு நிச்சயம் தோன்றி இருக்காது.  நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் தெரியுமா?  ஊரார் கண்களுக்கு நீங்கள் அலட்சியமாகத் தெரியலாம்.  ஆனால் என் கண்களுக்கு ஆண்டவனாகத்தான் தெரிகிறீர்கள் நீங்கள்..   அவர்கள் உங்களை மனிதனாக மதிக்கவில்லையே என்று வருந்தலாம் நீங்கள்.  ஆனால் உங்களை- கேவலம் மனிதன் என்ன, மனித குலத்தைப் படைத்த பிரம்மனாகவே எண்ணியிருக்கிறேன் நான்.  வாழத் தகுதி பெற்றவனா என்று எண்ணுகிறீர்களே;  நான் மாத்திரமல்ல, தன் நிழலிலே வாழ வந்திருக்கும் இந்தப் பைத்தியக்காரியையும் வாழ வைக்க சக்தி படைத்த இறைவன் நீங்கள் என்று ஏன் எண்ணக்கூடாது?"

மேற்கொண்டு பேசாமல், முகத்தை மூடிக்கொண்டு விம்முகிறாள் மங்களம்.  அவள் உடல் குலுங்குகிறது.  சுவரில் சாய்ந்திருக்கும் மன்னார் கண்களைத் திறக்கிறான்.

"மங்களம்!  மங்களம்! ஏன் அழறே இப்போ?  என்ன வெல்லாமோ தெய்வம், ஆண்டவன் அப்படி இப்படீன்னு சொல்லிட்டு, நீயே அழறியே!  அழாதே அழாதே!"  என்று கூறும்போது அவனுக்கும் அழுகை வருகிறது.

முகத்தை உயர்த்திப் பார்க்கிறாள் மங்களம்.  "ஆமாம்!  ஆமாம்!  மறுபடியும் சொல்றேன்.  ஆபீஸிலேதான் நீங்கள் வாட்டர் மேன்.  தெருவிலே வரும்போது சாதாரண மனிதர்.  இவ்வீட்டுக்குள் இந்த அறைக்குள் நுழைந்து விட்டால், இங்கு நீங்கள்தான் அதிகாரி, எஜமானர், அரசன்.   உங்களுடைய விருப்பத்துக்கும், அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டுதான் இங்கு எல்லாம் நடக்கும்.  ஒரு மனுஷன் பல இடத்திலே பல்வேறு மனிதர்கள் கண்ணுக்கு, விதம் விதமா தெரிஞ்சாலும், அக்கினி சாட்சியா கைப்பிடிச்சவன் முன்பு, வானத்துக்கும் பூமிக்கும் நிற்கும் விசுவரூபமாய் என்னென்னிக்கும் இருக்கான்; இருக்கணும்.  ஆகையால் உங்களை எவர் அலட்சியம் செய்தாலும், உடனே உங்களுக்காக வாழும், உங்களையே தெய்வமாக எண்ணும் இந்த அசடை நினைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது உங்களுக்கு நீங்களே எஜமானனாகி விடுவீர்கள்...."

சொல்லி முடித்த்து விட்டு அவள் அழுகிறாள்.  இதயத்திலே கொந்தளித்த உணர்ச்சிகளை யெல்லாம் ஓசை வடிவில் வடித்தெடுத்து ஓய்ந்தபின் உன்மத்த நிலையில் அழுகிறாள்.

பரிவுடன், பாசத்துடன்- இவ்வளவு நாட்கள் அனுபவித்தறியாத பிரேமையுடன்- அவள் கேசத்தைத் தடவிக்கொடுக்கிறான் மன்னார்.  புரியாத விஷயம் புரிந்து விட்டதாகத் தோன்றுகிறது அவனுக்கு.  இல்லாத தென்பு இருப்பதாக எண்ணம் எழுகிறது.  எறும்பாக தன்னைத்தானே எண்ணியிருந்தவன், திடீரென்று யானையாகத் தோன்றி விட்ட உணர்வு ஏற்படுகிறது.  உள்ளம் நெட்டுயிர்க்கிறது. உடலில் ரோமாஞ்சலி ஏற்படுகிறது.

"மங்களம்!  மங்களம்!  அழாதே!  நீ அழக்கூடாது.!  என்னையே நான் புரிஞ்சு கொள்ளத் தூண்டின நீயா அழறது?  எங்கே, கண்ணைத் துடைச்சுக்கோ!" என்று கூறியவன், தானே அவள் கன்னத்தைத் துடைக்கிறான்.  இன்னும் சற்று வலுவாக அவளைத் தன்னருகே இழுத்துக் காதோடு காதாக "மங்களம்!... இவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தாண்டும் சக்தி எங்கிட்டே இருக்கான்னு ஹநுமானே மலைச்சாராம்.  'இது மாத்திர மென்ன, இதை விட ஏழுமடங்கு சமுத்திரத்தையும் நீ ஜீரணம் பண்ணலாமே' ன்னு ஜாம்பவான் எடுத்துச் சொன்னப்புறம் தான், ஹனுமானா மாறினார்.  ராமாயணத்திலே இப்படி வர்றதோ இல்லியோ?  இப்போ நீ ஜாம்பவானா மாறி, ஒண்ணுக்கும் உதவாம இருந்த என்னை விசுவரூபியாக்கிட்டே...  ஆமாம்; விசுவரூபியாக்கிட்டே!" என்று  கிசு கிசுத்த போது, மங்களம் தலையைத் திருப்பி நேருக்கு நேர் அவனைப் பார்க்கிறாள்.

தரைக்கும் உத்திரத்துக்குமாக விசுவரூப மெடுத்த  கோலத்திலே மன்னார் அவள் கண்களுக்குத் தோன்றுகிறான்.  அவள் உடல் சிலிர்க்கிறது.


- நிறைவு -

=================================================================================================


2014 இல் இந்துவில் வந்திருந்த கட்டுரையை பேஸ்புக்கில் பகிர்ந்தபோது....





இது மாதிரி விஷயங்கள் படிக்க நமக்கு எப்பவுமே சுவாரஸ்யம்தான் இல்லே? :)

இறுதி வரை துணிச்சல் காட்டிய சதாம்!

சதாமின் மார்பளவுச் சிலையின் கழுத்தில் அவரைத் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட உண்மையான கயிறு. அருகில் மொவாபக் அல் ருபேய்.

சதாம் ஒரு குற்றவாளி; உண்மை தான், ஒரு கொலைகாரர்;உண்மை தான், படுகொலை புரிந்தவர்; உண்மைதான். ஆனால், அவர் தன் இறுதி நிமிடம் வரை துணிச்சல் காட்டினார். ஒரு போதும் வருத்தப்படவில்லை, வருத்தம் தெரிவிக்கவுமில்லை.

ஈராக் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் சதாம் ஹுசேன் தூக்கி லிடப்பட்டதை அருகிலிருந்து பார்த்தவரான மொவாபக் அல் ருபேய், சதாமின் இறுதி நிமிடங்கள் குறித்த நினைவைப் பகிர்ந்து கொண்டபோது சொன்னவைதான் மேற்சொன்ன வாக்கியங்கள்.

மொவாபக் அல் ருபேய் இராக்கின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். கடந்த 2006 ஆம் ஆண்டு சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டபோது அருகில் இருந்த ஒரே நபர். சதாம் தூக்கிலிடப்பட்ட வடக்கு பாக்தாத் நகரின் காதிமியா பகுதியில் உள்ள சிறைக்கு அருகே மொவாபாக்கின் அலுவலகம் இருக்கிறது.

அங்கு சதாம் ஹுசேன் தன் பிரத்யேக ராணுவ உடையில் கம்பீரமான பார்வையுடன் காணப் படும் மார்பளவுச் சிலை வைக்கப்பட்டிருக் கிறது. அச்சிலையின் கழுத்தைச் சுற்றி, சதாமைத் தூக்கிலிடப் பயன் படுத்தப்பட்ட உண்மையான கயிறு சுற்றப்பட்டுள்ளது. அதனைப் பார்த்த படி சதாமின் இறுதி நிமிடங்களை அவர் நினைவு கூர்ந்தார்.

“சிறைக் கதவு வழியாக சதாம் உள்ளே நுழைந்தார். அவரை எதிர்கொண்டு அழைத்தேன். எங்களுடன் அமெரிக்கரோ வேறு வெளி நாட்டவரோ வேறு யாரும் இல்லை. அவர் வெள்ளை நிறச் சட்டையும் மேலங்கியும் அணிந்திருந்தார். நிதானமாகவும் மிக இயல்பாகவும் இருந்தார். அவரிடம் பயத்துக்கான அறிகுறி சிறிதும் இல்லை.

அவர் மிகக் குழப்பமான மன நிலையில் இருந்தார் அல்லது அவருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருந்தது என்று நான் சொல்ல வேண்டும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நான் சொல்வதுதான் வரலாற்றுச் சம்பவம். அவரிடம் எவ்வித வருத்தத்தை யும் பார்க்க முடியவில்லை; வருத்தம் தெரிவிக்கவுமில்லை. கருணை காட்டும்படி கடவுளிடம் அவர் கோரிக்கை விடுக்கவில்லை; கடவுளிடம் மன்னிப்பும் கோர வில்லை. இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்கள் வழக்கமாக, “கடவுளே என் பாவங்களை மன்னி்ப்பீராக, நான் உம்மிடத்திலே வருகிறேன்” என்று சொல்வார்கள். ஆனால் இதுபோன்ற எதையும் அவர் கூறவில்லை.

அவரை நான் நீதிபதியின் முன் அழைத்துச் சென்றேன். அவருக்கு கைவிலங்கு இடப்பட்டிருந்தது. சதாம் குர்ஆன் வைத்து இருந்தார். நீதிபதி குற்றப்பத்திரிகையை வாசித் தார். “அமெரிக்காவும், இஸ்ரேலும் அழிந்து போகட்டும், பெர்ஸியன் மேகிக்கு (ஜூராஸ்ட்ரியனிசம்) மரணம் சம்பவிக்கட்டும். பாலஸ் தீனம் நீடூழி வாழட்டும்! என்றார்.

பேசுவதை நிறுத்திய அவர், தூக்குமேடையைப் பார்த்தார். பின் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டுச் சொன்னார்: ‘டாக்டர், இது மனிதர்களுக்கானது’ என்று.

அவரை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. அப்போதும் அவரின் கால்கள் மிக உறுதி யாக நிலைபெற்றிருந்தன. ஆகவே, நானும் வேறு சிலரும் தூக்குமேடையின் படிக்கட்டுகளை நோக்கி அவரை இழுத்துச் சென்றோம். இராக்கின் வலிமையான ராணுவ ஆட்சியாளரான சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்ட அறையை அடிக்கடி பார்த்தபடி, அவரின் இறுதி நிமிடங்கள் குறித்து மொவாபாக் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இராக்கின் அதிபராக 1979ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சதாம் ஹுசேன், சுமார் 24 ஆண்டுகள் அதாவது அமெரிக்கா தலைமை யிலான ராணுவப் படைகள் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில், பண்ணைவீட்டின் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாமைக் கண்ட றியும் வரை அதிபராக நீடித்தார்.

மூன்று ஆண்டுகள் விசாரணைக் குப் பிறகு 2006 டிசம்பர் 30 ஆம் தேதி சதாம் தூக்கிலிடப்பட்டார். தான் அதிகாரத்தில் இருந்தவரை அமெரிக்காவுடனும், இஸ்ரேலுட னும் சதாம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். 1982 ஆம் ஆண்டில் துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சதாம் தூக்கி லிடப்பட்டார். இராக்கில் உள்நாட்டு ஸ்திரமற்ற தன்மையின்போது ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

[ தி இந்து ]   


அதற்கு அந்த சில கமெண்ட்ஸ்....



=======================================================================================================

நாற்பது சதவிகித என் எழுத்து வேண்டும் என்று நெல்லை சொல்லியிருந்தார்.   சமீபத்தில் முகநூலில் கிறுக்கிய ஒன்றை உடனே தருகிறேன்!  சாதாரணமாக பழசைதான் பகிர்வேன்!  சதவிகிதத்தில் கொஞ்சம் கூடக்குறைய இருந்தாலும் சமாளிக்கவும்!





===================================================================================================


என் போன்றவர்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடலாம்.  என்னோடு இருப்பவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்....   நிம்மதியாய்த் தூங்கலாம்!   இவர்கள் சொல்வது உண்மையாய் இருந்தால்!




=================================================================================================

பொக்கிஷம்  :

துல்லியமான கணக்கினால் பொங்கி வரும் பூரிப்பு!


போதுமே...    இந்த வாரம் இதோடு நிறுத்திக்கலாமே.....!

83 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம். கதைக்கான படம் வித்தியாசமா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..    காலை வணக்கம்.  கதைக்கான ஓவியம் வர்ணமென்று நினைக்கிறேன்.  அல்லது மாயா!  மாயாதான் என்று நினைக்கிறேன்.  கதையைப் படித்துவிட்டு உணர்ந்து வரைந்திருக்கிறார் போல...

      நீக்கு
  2. குற்றவாளியாக இல்லாமல் எந்த ஒரு ஆட்சியாளரும் கிடையாது. சதாம் செய்தது அரசியல் சம்பந்தப்பட்டது. கறைபடியாத ஆட்சியாளர்கள் எங்கு உண்டு?

    சதாமின் தூக்கு நிகழ்வு காணொளி எனக்கும் அப்போது வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கு காணொளி?   அப்படி வேறு வந்ததா?    ஆமாம் ஆட்சியாளர்கள் மேல் சரிபாதி மக்களுக்கு வெறுப்பு இருக்கும்தான்.

      நீக்கு
    2. ஆமாம்... அட்டடியொரு காணொளி வந்தது...

      நீக்கு
    3. நான் பார்த்த ஞாபகம் இல்லை.   அல்லது மறந்து விட்டேனோ என்னவோ!

      நீக்கு
  3. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. பழைய கதை மனதுக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது.

    சதாம் உசேன் தெரிந்த விடயமே....
    தூக்கிலிட்ட அன்று பக்ரீத் பண்டிகை அது உலக முஸ்லீம்கள் அனைவரையும் கலங்கடித்த கருப்பு நாள்.

    அந்நாளை தேர்வு செய்தது தவறே...

    பதிலளிநீக்கு
  5. பிலஹரி ஒரு மாஸ்டர். சந்தேகமில்லை. நம் இலக்கிய அசடுகளால் அவர் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லையோ என சந்தேகம் வருகிறது. அல்லது plain jealousy-யா!

    ஸதாம் ஹுசேனைத் ‘தண்டிக்க’ அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை. யோக்யதை அறவே கிடையாது. அமெரிக்க அதிபர்களோடு ஒப்பிடுகையில் ஸதாம் ஒரு அரசன். சிற்றரசன் என வேண்டுமானால் சுருக்கலாம். புஷ் & கோ. அன்று இழைத்த அக்ரமங்களுக்கு இப்போது அமெரிக்கா அனுபவிக்கிறது. இன்னும் இருக்கிறது அதற்கு.. சரித்திரம் சொல்லும். ஸதாமின் கடைசி தருணங்களைப் படித்து அறிந்தேன் முன்பே. அந்த உணர்வுத் தாக்கத்தில், அவரது அசையா மனம்பற்றி, சிறு கவிதை ஒன்றை எழுதினேன் க்யூபாவில் இருந்தபோது. அது எந்த டயரியில் எங்கே கிடக்கிறது என்றுதான் தெரியவில்லை.

    யாரை முழுதும் நம்புகிறோமோ அவரிடமிருந்து வருகையில்தான் அதன் பெயரே betrayal..பச்சைத் துரோகம். நம்பாதவர் என்ன செய்தால் என்ன, செய்யவிட்டால்தான் என்ன.. யார் கேட்கிறார்கள்?

    ‘அடடா.. என்ன அழகு.. அருகே வந்து ..!’ என ரீங்கரிக்கவைக்கிறதே ஓவியம். தூரிகை யாருடையது? லதாவா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.ஏகாந்தன் அவர்களின் கருத்து அருமை நன்றி ஸார்.

      (நான் சொல்ல நினைத்தவைகள் அனைத்தும் இங்கு)

      (எனக்கு ஜொள்'ள பயந்தேன் ஹி.. ஹி.. ஹி)

      நீக்கு
    2. நன்றி ஏகாந்தன் ஸார். அதே கருத்துதான் எனக்கும்.

      தூரிகைக்கு சொந்தக்காரர் ஸிம்ஹா அல்லது வினு.

      நீக்கு
    3. @ Killerjee, Sriram : நன்றிக்கு நன்றி.

      ஸதாம் ஹுசேன் ஒரு Arab Hero of modern times என நினைப்பவன் நான். ஈராக் போன்ற நாட்டிற்கு ஸதாம் போன்றவர்களே ராஜாவாக இருக்கமுடியும். வேறுவித அரசாட்சி முறைகள் அரேபியக் கூமுட்டைகளிடம் எடுபடாது. (ஜனநாயகப் பருப்பு எங்கும் வேகாது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை). ஸதாம் ஆண்டபோது ஈராக் எத்தகைய ராஜ்யமாக இருந்தது என எனக்கு ஓரளவு தெரியும். அவரில்லாத ஈராக் அமைதியை இழந்து அலங்கோலமாகிக் கிடக்கிறது. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே..அதன் குழப்பம், ஸ்திரமற்ற தன்மையிலிருந்து, பிராந்திய-அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது ஈரான். நிறைய அரசியல் அல்ஜீப்ராக்கள் அங்கே..

      நீக்கு
  6. /// ‘டாக்டர், இது மனிதர்களுக்கானது’ /// சுவாரசியம் தான்...!

    இந்த வாரம் நிறுத்துவதில், வழக்கமாக இடம் பெறு(ரு)ம் படம் இல்லையே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...்். DD... நீங்களே எதிர்பார்க்கிறீர்கள் போலவே... ஜஸ்ட் மிஸ்ட்...

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  8. கதை அருமை.
    மன்னாரின் விஸ்வரூபத்தை கதை சொன்னாலும், மங்களத்தின் விஸ்வரூபமும் தெரிகிறது.

    // வேறொருவரை அலட்சியப் படுத்தவோ, அதிகாரமாக அதட்டவோ முழு உரிமையும் பெற்றுள்ள பெரிய அதிகாரியாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏன் மறக்க வேண்டும்?"//

    தன் கணவனிடம் மங்களம் சொல்லியவிதம் மிக அருமை.

    //குடம் குடமா எடுத்து தலை வழியக் கொட்டினாலும், எனக்குக் கட்டுப்பட்ட பிறவி ஒண்ணு இருக்கு. எனக்கு இப்போ ஆத்திரம் வர்றது; ஆனால் நான் கொட்டினா, அந்தப் பயித்தியக்காரிக்கு கோபமே வராது!' என்று எண்ணியிருக்கக் கூடாதா? இதை எல்லாம் நீங்கள் ஒரு கணம் எண்ணிப் பார்த்திருந்தால் இப்படி யொரு தாழ்வு உணர்ச்சி உங்களுக்கு நிச்சயம் தோன்றி இருக்காது. நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் தெரியுமா? ஊரார் கண்களுக்கு நீங்கள் அலட்சியமாகத் தெரியலாம். ஆனால் என் கண்களுக்கு ஆண்டவனாகத்தான் தெரிகிறீர்கள் நீங்கள்.. அவர்கள் உங்களை மனிதனாக மதிக்கவில்லையே என்று வருந்தலாம் நீங்கள். ஆனால் உங்களை- கேவலம் மனிதன் என்ன, மனித குலத்தைப் படைத்த பிரம்மனாகவே எண்ணியிருக்கிறேன் நான். வாழத் தகுதி பெற்றவனா என்று எண்ணுகிறீர்களே; நான் மாத்திரமல்ல, தன் நிழலிலே வாழ வந்திருக்கும் இந்தப் பைத்தியக்காரியையும் வாழ வைக்க சக்தி படைத்த இறைவன் நீங்கள் என்று ஏன் எண்ணக்கூடாது?"

    மேற்கொண்டு பேசாமல், முகத்தை மூடிக்கொண்டு விம்முகிறாள் மங்களம்.//

    என்ன மாதிரி பெண் அவர் !

    //இவ்வீட்டுக்குள் இந்த அறைக்குள் நுழைந்து விட்டால், இங்கு நீங்கள்தான் அதிகாரி, எஜமானர், அரசன். உங்களுடைய விருப்பத்துக்கும், அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டுதான் இங்கு எல்லாம் நடக்கும். ஒரு மனுஷன் பல இடத்திலே பல்வேறு மனிதர்கள் கண்ணுக்கு, விதம் விதமா தெரிஞ்சாலும், அக்கினி சாட்சியா கைப்பிடிச்சவன் முன்பு, வானத்துக்கும் பூமிக்கும் நிற்கும் விசுவரூபமாய் என்னென்னிக்கும் இருக்கான்; இருக்கணும். ஆகையால் உங்களை எவர் அலட்சியம் செய்தாலும், உடனே உங்களுக்காக வாழும், உங்களையே தெய்வமாக எண்ணும் இந்த அசடை நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு நீங்களே எஜமானனாகி விடுவீர்கள்...."

    சொல்லி முடித்த்து விட்டு அவள் அழுகிறாள். இதயத்திலே கொந்தளித்த உணர்ச்சிகளை யெல்லாம் ஓசை வடிவில் வடித்தெடுத்து ஓய்ந்தபின் உன்மத்த நிலையில் அழுகிறாள்.//

    எவ்வளவு அழகாய் பேசுகிறார் மங்களம், தன் கணவனை இன்னொருவர் அவமதித்து விட்டாரே என்ற வருத்தமும் அழுகையில் தெரிகிறது.

    எங்கள் நெருங்கிய உறவினர் தன் கண்வரை எஜாமான் என்றே அழைப்பார். மற்றவர்களிடம் பேசும் போது பேச்சுக்கு பேச்சு எங்க வீட்டு எஜமான் இப்படி சொன்னார்கள், அப்படி சொன்னார்கள் என்று சொல்வார்கள். அந்த பேச்சில் நம் கண்வனை நாம் மதித்தால் தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்று இருக்கும் என்று நினைக்கிறேன்.



    நிறைய பேருக்கு கோபத்தை வீட்டில் தான் காட்ட முடியும், கேட்டால் உன்னைத் தவிர யாரிடம் கோபத்தை காட்டமுடியும் என்று வசனம் பேசுவார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். பிலஹரி சாரின் கதை சட்டென விஸ்வரூபம் எடுத்தது. எத்தனை உணர்ச்சிகள்.!இனி மன்னாருக்கு ஏது குறை.இந்த எழுத்துக்களைப் படித்து நாங்கள் வளர்ந்தோம் என்று நினைக்கையில் என் வாழ்வின் சம்பவங்களும் என் அப்பா, சிங்கம், என் சகோதரர்கள் என்று எல்லோருடைய அலுவலக நிகழ்வுகளும் நினைவுக்கு வருகிளறன. பெரிய இடத்தை அடையும் முன்னர் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள்.குடும்பத்தில் ஏற்பட்ட சலனங்கள்! பிலஹரி ஒரு இமாலய எழுத்துக்குச் சொந்தக்கார்ர். நடுத்தர மக்களின் வாழ்ககையையும் அதற்குக் கீழ் இருந்தவரகளின் வேதனையையும் எப்படிப் பிரதிபலிக்கிறார்! அந்தக் கதைக்க ஓவியம் வரைந்தவர் யாரோ தெரியவில்லை. ததரூபமாக மங்களமும் மன்னாரும் வந்து நிற்கிறார்கள். மிக நன்றி ஶ்ரீராம் பழைய காலத்துக்கு இட்டுச் சென்றுவிட்டீர்கள்.

      நீக்கு
    2. நன்றாய் ரசித்திருக்கிறீர்கள் கோமதி அக்கா... ஆம், அது உண்மையில் மங்களத்தின் விஸ்வரூபம் என்றுதான் எனக்கும் தோன்றியது.

      நீக்கு
    3. கோமதி அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் கடைசி வரியை நானும் ஓரிரு முறை சொல்லி இருக்கிறேன். :(

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா... எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் இது மாதிரி அனுபவங்கள் இருக்கும்தான்.

      நீக்கு
  9. அடுத்தது சதாம் ஹுசேன் .எனக்கென்னவோ மிகப் பாவப்பட்ட ஆத்மாவைப் பார்பபது போலத் தோன்றும்.நல்ல கட்டுரை. அந்த ஓவியம் கண்ணைக் கட்டுகிறது. வர்ணமாகத் தான் இருக்க வேண்டும். மாயாவுக்குத் தனி ஜாடை. வட்டமும் சதுரமுமாக அவர் படைப்பு. லதா சாண்டில்யனின் பேனாவுக்குக் கிடைத்த வரம். இந்த ஓவியம் முழுமை. மனதை அள்ளுகிறது. மீண்டும் நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதாம் ஹுசேன் மேல் இந்தியர்கள் யாருக்கும் கோபம் இருக்காது என்று நிடைக்கிறேன். நீங்கள் எந்த ஓவியத்தைச் சொல்லிப் பாராட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை. பத்தினிக்கோட்டம் நாவலுக்கான ஓவியத்தையா? (கடைசி படம்)

      நீக்கு
    2. ஓ!அது பத்தினிக்கோட்டமா. ஆமாம் அந்தக் கடைசி ஓவியத்தைதான் சொல்கிறேன்.
      கண் பேசுகிறதே.கச்சிதம்.

      நீக்கு
  10. உங்கள் கவிதை மிக வருத்தம் தருகிறது. மீண்டு அவர் என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  11. ஆன்ட்டி ஸ்நோரிங்க் உபயோகித்தவர்கள் சொன்னால் சௌகர்யமாக இருக்கும் குறட்டை பலர் தூக்கத்தைக் கெடுக்கும். பக்கத்தில் உறங்குபவர்கள் தலைவலியோடு எழுந்திருப்பார்கள். என்னால் கணவரும் அவரால் நானும் பாதிக்கப் பட்டோம்.:)

    பதிலளிநீக்கு
  12. ஜி.சி.சி. மீட்டிங்கில் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவை சப்போர்ட் செய்த ஒரே ஒரு மனிதர் சதாம் ஹுசைன். உங்களுடைய கவிதைக்கு முகநூலில் லைக் போட்டாச்சு. அந்த ஓவியம் மிக அழகு! லதாவின் கை வண்ணமோ? என்ன இருந்தாலும் அனுஷ்கா இல்லாத வியாழன் ஒரு மாற்றுக்  குறைச்சல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா...ஹா... ஒரு அனுஷ் படம் படம் ட்ராஃப்ட் வரை கொண்டு வந்து நிறுத்தி விட்டேன்! DD கூட கேட்டிருக்கிறார்!!!! அது வினு வரைந்த ஓவியம். அது சரி, அதற்கு கதை, கவிதை எழுதறூன் என்று இன்னும் யாருமே சொல்லவில்லையே... மிஸ்ஸிங் கீதா ரெங்கன்.

      நீக்கு
  13. ஜோக் பிரமாதம். இப்படி நிஜத்திலும் சில பேரை பார்க்க முடியும். ஆன்டி ஸ்நோரிங் டிவைஸ் எங்கே கிடைக்கிறது சொல்லுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அங்க்கிள் ஸ்நோரிங் டிவைஸ் கிடைக்கலாம்!!! ஹி...ஹி...ஹி..்். சிரிங்க... ஜோக்!

      நீக்கு
  14. இந்தக் கதையில் மங்களம் அல்லவோ விஸ்வரூபம் எடுத்திருக்கிறாள். அவளைப்  போன்ற பெண்கள் அருகிப் போனதால்தான் விவாகரத்துகள் அதிகமாகி விட்டதோ? 

    பதிலளிநீக்கு
  15. //சதாம் ஹுசேன் தன் பிரத்யேக ராணுவ உடையில் கம்பீரமான பார்வையுடன் காணப் படும் மார்பளவுச் சிலை வைக்கப்பட்டிருக் கிறது. அச்சிலையின் கழுத்தைச் சுற்றி, சதாமைத் தூக்கிலிடப் பயன் படுத்தப்பட்ட உண்மையான கயிறு சுற்றப்பட்டுள்ளது.//

    பார்க்கும் போது மனதுக்கு சங்கடம் தருகிறது.

    பதிலளிநீக்கு
  16. வல்லமையை பராசகதிதான் தரவேண்டும்.
    நமக்கு மிகவும் வேண்டியவர் நெருங்க்கியவர் எனும் போது மனது இப்படி உடைந்து அழும் தான்.

    பதிலளிநீக்கு
  17. //இவர்கள் சொல்வது உண்மையாய் இருந்தால்!//

    உண்மையாக இருந்தால் நம்பி வாங்கலாம் இந்த மூக்கு புல்லாக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரூபணம் கிடைத்தால் உடனே வாங்கி விடுவேனே நானும்!

      நீக்கு
  18. துல்லிய கணக்கு சிரிப்பை வரவழைத்தது.
    வினுவின் ஓவியபெண் போதுமே இத்துடன் என்று தோள்பட்டையில் முகவாயை இடித்துக் நிறுத்திக் கொள்ள் சொல்வது போல் இல்லை.
    படிக்க இன்னும் ஏதாவது இருக்கா என்று தன் காதளவு ஓடிய கண்களால் தேடுவது போல் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ.அப்படியா கோமதி மா.
      அவள் கண்ணால் ஜாடை செய்து ஓடுகிறாள் என்று நினைத்தேன்.:)
      வினு தானா அவள் தந்தை. மிக அழகு.

      நீக்கு
    2. காதளவு ஓடிய கண்கள்! நல்ல வர்ணனை கோமதி அக்கா.

      நீக்கு
    3. // வினுதானா அவள் தந்தை //

      ஆஹா... வல்லிம்மா....

      நீக்கு
    4. படைத்தவர் தந்தை இல்லையா ஸ்ரீராம்:)

      நீக்கு
    5. தெரியும் அம்மா...    அந்த இடத்தில் அப்படிச் சொல்லி இருக்கும் பொருத்தத்தை வியந்தேன்.

      நீக்கு
  19. சதாம் தூக்கிலிடப்பட்டது வைகுண்ட ஏகாதசி அன்று என்று என் தமக்கை சசிகலா விஸ்வேஸ்வரன் அலைபேசினார்! நேராக சொர்க்கத்துக்குச் சென்றிருப்பாராம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகரீத் அன்று கொன்று இஸ்லாமியர்களை அவமதிப்போம் என நினைத்த அமெரிக்க அராஜகர்கள், வைகுண்ட ஏகாதசியை கவனிக்கவில்லை! ஒய்ட் ஹவுஸுக்கு ஒரு பாம்பு பஞ்சாங்கம் பார்சல் அனுப்புங்க-இனியாவது திருந்தட்டும்.

      மேலும், குண்டர்களுக்கு வைகுண்டத்தைப்பற்றி என்ன தெரியும்? ஸ்தாம் நேரே சொர்கத்திற்கு என்றால், இவர்களால் அதை மாற்றவா முடியும்!

      நீக்கு
    2. சொர்க்கத்துக்குப் போனால் மறுபடி பிறந்து வரவேண்டும்.   மோட்சம் கிடைத்தால் பரவாயில்லை!!!!

      நீக்கு
    3. மோட்சம் என்ற சொல்லைவிட முக்தி என்று சொல்லலாம்!

      நீக்கு
    4. ’கர்மா’வை மனிதன் பார்க்கும் கோணம் வேறு. மேலிருப்பவன் அணுகும் கோணம் வேறு. அவனுடைய அளவுகோலில் நிறைய merit, demerit points நுட்பமாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ’இதுக்கு அது’, ’அதுக்கு இது’ என்கிற மனிதனின் எளிய கணக்கீடு அல்ல அது!

      நீக்கு
  20. ஒவ்வொருவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஓரோர் அபிப்பிராயம் சடாம்ஹுசேன் ஆனாலும் ஸ்ரீராமானாலும் ஜீஎம்பி ஆனாலும் சரி தவறு என்பது எல்லாம் கண்ணொட்டம் தான் பிலஹ்ரி என்னதான் சொல்ல வருகிறார் அடங்கிப்போய் ஒருவரை தூக்கி விடுவதுதான் சரி என்கிறாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லிஇருப்பது சரி.   எல்லாம் ஒரு கண்ணோட்டம்தான் ஜி எம் பி ஸார்.  பிலஹரி ஒரு சமயத்தில் சிலிர்த்தெழ வேண்டிய அவசியத்தைச் சொல்கிறார்.  கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்னியம், ஊட்டப்படும் தன்னம்பிக்கையைச் சொல்கிறார்.

      நீக்கு
  21. ஆன்டி ஸ்னோரிங் டிவைஸ் சுமார் ரூ 70000 விலையில் கிடைக்கும் அதை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்களாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜிஎம் பி ஸார்...  2,500 லிருந்தே கிடைக்கிறதாம்.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இந்த வார கதம்பம் அருமை. பிலஹரி அவர்கள் எழுதிய கதை முடிவு நன்றாக உள்ளது. தனக்கென தன்னை முழுமையாக அர்ப்பணிக்க யாராவது ஒருவர் உள்ளனர் என எண்ணும் போது, தன்னுள் எழும் தாழ்வு மனப்பான்மை குறையும் என்பது உண்மைதான்.

    மனைவியின் அன்பை உணர்த்தும் இடத்தில் மங்களம் தன் மனதை திறந்து காட்டியிருக்கிறார். இதுதான் உண்மையான ஆழமான காதலோ என மெய்சிலிர்க்க வைக்கிறார். இந்த மாதிரி மனம் திறந்து பேசினால், அதனை பொறுமையாக கேட்டால், எங்குதான் பிரிவினைகள் வரும்.

    எனக்கு சர்வர் சுந்தரத்தில் நாகேஷ் தான் அழகில்லை என வருத்தப்படும் போது, அவர் அம்மா "உனக்கென்னடா ராஜா மாதிரி இருக்கிறாய்" எனக்கூறி தாய் பாசத்தினால் அவரின் முகம் மலர செய்தது ஏனோ நினைவுக்கு வந்தது. அதனால்தான் அந்த ஓவியத்தில் இருப்பவரும் அவர் சாயலை பெற முயற்சித்திருக்கிறரோ எனத் தோன்றுகிறது. தவறெனின் மன்னிக்கவும்.

    சதாம் உசேனின் மரணம் பற்றி படித்தது. மனதை வருத்தியது.

    கவிதை அருமை. நிகழ்வில் மலர், நிழலில் மனதில் தோன்றும் வஞ்சத்தின் கருவி. துரோகத்தின் பிரதிபலிப்பு இரு வேடங்களில்..

    குறட்டை பரம்பரையாக வருகிறதா? தெரியவில்லை. ஆனால் நாமும் குறட்டை விடுவதும் உண்டென யாரும் உணர்வதில்லை. வழக்கம் போல் பிறரை மட்டுமே குற்றம் சொல்லும் செயல்.

    ஜோக் நன்றாக உள்ளது. ஒன்றை மட்டும் தனியாக்கிய அந்த ஊரின் மற்ற ஜனங்கள். ரசித்தேன்.

    ஓவியம் அழகு. அதையும் வாரம் வாரம் தொடரலாமே.. /போதுமே... இந்த வாரம் இதோடு நிறுத்திக்கலாமே.....!/ஓ.. இதை நான் தவறுதலாக புரிந்து கொண்டு விட்டேன். இன்றைக்கு நிறுத்தும் இடத்தில் என பின் உணர்ந்தேன். அத்தனையும் அற்புதமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   சர்வர் சுந்தரமுதற்றானாம் எனக்கும் தோன்றியது.  அதாவது ஏனோ சர்வர் சுந்தரம் எனக்குநினைவுக்கு வந்தது.  இதில் மன்னிக்க என்ன இருக்கிறது கமலா அக்கா?

      அனைத்தையும் விரிவாக அலசி காயப்போட்டதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. அதற்குள் என பதிலாக வந்த கருத்துரை எழுத்துக்கள் காய்ந்தே விட்டதா? ஹா. ஹா. ஹா. இங்கும் வெய்யில் பயங்கரமாக உள்ளது.

      நீக்கு
    3. ஹா...  ஹா...  ஹா...
      //சர்வர் சுந்தரமுதற்றானாம்//
      சர்வர் சுந்தரம் முகச்சாயல் எனக்கும் தோன்றியது என்று படிக்கவும்!  அவசர டைப்பிங்!

      நீக்கு
  23. நல்லதொரு கதம்பம். சதாம் ஹூசைன் பற்றிய புத்தகம் ஒன்று (ஆங்கிலத்தில்) படிக்கக் கிடைத்தது - அது நினைவுக்கு வருகிறது. அவரது ஆட்சியில் அவர் செய்த கொடூரச் செயல்கள் பற்றி அதில் எழுதி இருந்தார்கள். எத்தனை உண்மையானவை என்று தெரியாது!

    கதை - மிகவும் நன்றாக இருந்தது.

    உங்கள் முகநூல் இற்றைகள் என் பக்கத்தில் வருவதில்லை! :) ஒரு வேளை உங்கள் நட்பு வட்டத்தில் நான் இல்லையோ? பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.  அந்தப் புத்தகத்தில் என்ன எழுதி இருந்தார்கள்?   ஏகாந்தன் ஸார் சொல்லியிருப்பதைப் படித்தீர்களா?
      முகநூல் இற்றை ஏன் உங்களுக்கு வருவதில்லை என்று தெரியவில்லை.  நேற்று பகிர்ந்த ஒன்று கூட நிறையபேர் ஷேர் செய்திருக்கிறார்கள்!!!

      நீக்கு
  24. பல நேரங்களில், மனைவிமார்களின் தட்ட்டிக் கொடுப்பாலும், தைரியமான வார்த்தைகளாலும்தான் கணவன்மார் பிரச்சனைகளிலிருந்து மீண்டு உஷாராகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை:)).. ஆர் இதை எதிர்த்தாலும் இதுதான் உண்மை, இப்படி மனைவியின் ஊக்கத்தாலேயே முன்னுக்கு வந்தோர் பற்றி ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேன் நான், இப்போ தேட முடியவில்லை.. ச்ச்ச்சோஓஒ ரயேட்டாக இருக்குது.

    பதிலளிநீக்கு
  25. சதாம் அவர்களின் கட்டுரை அருமை. அவரைத்தூக்கிலிட்ட அன்று நான் சமைக்கவில்லை வீட்டில் தெரியுமோ.. எவ்ளோ கவலைப்பட்டேன்.. எனக்கு அவரை ஏனோ ரொம்பப் பிடிக்கும்.

    அவர் பதுங்கியிருந்த ஒரு இரவிலேயே அவரது கறுப்பு தலைமயிர் வெள்ளையாகி விட்டதாம் என நியூஸ் ஒன்றில் படிச்சேன்[உண்மை பொய் தெரியாது] அவ்ளோ தூரம் யோசித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   எல்லோருக்கும் வருத்தம் இருந்திருக்கிறது.  எல்லோர்  மனத்திலும் இருந்திருக்கிறார்!

      நீக்கு
  26. துரோகம் கவிதை நல்ல சிந்தனை.

    ஹா ஹா ஹா எங்கள்புளொக் ஏரியாவில் குறட்டை விடுவோரெல்லாம் வரிசையாக வந்து நில்லுங்கோ:)) மூக்கில் வயர் போட்டு விடுகிறேன்:))..

    ஹா ஹா ஹா பொக்கிஷம் இன்று சூப்பர்ர்..

    சோளர் காலக் கதையோ..

    சொல்ல மறந்திட்டேன், மேலே பிலஹரி கதைக்காக பிக்‌ஷர் பார்க்க சகிக்கவே இல்லை:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ இப்போ மன்னார் மங்களம் பிக்சரில் உங்களுக்கு என்ன பிரச்சினை :))))))))))))))

      நீக்கு
    2. //எங்கள்புளொக் ஏரியாவில் குறட்டை விடுவோரெல்லாம் வரிசையாக வந்து நில்லுங்கோ:)) மூக்கில் வயர் போட்டு விடுகிறேன்:))..//


      ஓ...   நீங்கள் வைத்திருக்கிறீர்களோ... 

      பிலஹரி கதைக்கான படம் உணர்ந்து வரைந்திருக்கிறார் ஓவியர்.

      நீக்கு
  27. எனக்கு இன்னிக்கு ரொம்ப பிடிச்சது துரோகம் பற்றிய கவிதை தான்.அனுபவிச்சவங்களுக்கே வலி புரியும்.ஆனால் துரோகங்கள் பற்றி அறியவரும்போதே நமக்ள்க்கு இன்னும் மனஉறுதி கூடுது இனியாவது  இன்னும் கவனமுடன் இருக்க கற்றுக்கொடுப்பது இப்படிப்பட்ட திராவகதுரோகங்கள் .
    மன்னார் கதை ..மன்னார் போன்றோருக்கு அதாவது எளிதில் உடையும் மனோபாவம் கொண்டோருக்கு மங்களம் போன்ற மனைவி அமைந்தால் நல்லா இருக்கும் ..
    சதாம் என்னதான் இருந்தாலும் சிங்கம் காட்டுராஜாதான் .நான் சந்தித்த பலர் ஈராக்கை சேர்ந்தவங்க சொன்னது எல்லாம் ஆமை அம்பேரிக்கா தான் இத்தனை குழப்பமும் செஞ்சுதுன்னு .
    குறட்டை :)) எங்க வீட்ல ஜெசி போதும் சின்ன குறட்டை சத்தத்துக்கும் நறுக்குன்னு காதை கடிச்சிடுவா :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சல்...   

      // எங்க வீட்ல ஜெசி போதும் சின்ன குறட்டை சத்தத்துக்கும் நறுக்குன்னு காதை கடிச்சிடுவா :))))))//

      அம்மா.....டி!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!