புதன், 27 மே, 2020

புதன் 200527 : மின் நிலா!


நெல்லைத் தமிழன்: 


1. ஆடிப்பெருக்கு அன்று கலந்த சாதங்கள் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரையில் ஊருடன் சாப்பிட்டுருக்கீங்களா?



# ஆறு அழுக்கு சாக்கடையாகாத 194★களில் அந்த அனுபவம் ஆண்டுதோறும் இருக்கும்.
கடலூரில் ஆற்றுத்திருவிழா என்று விமரிசையான கொண்டாட்டம், சுவாமி புறப்பாடு எல்லாம் உண்டு.

$ நிறையவே. ஆறும் ஊரும் வேறு வேறாய் இருந்தாலும், நண்பர்களுடன் நன்கு பொழு போயிற்று.

& கலவை சாதங்கள் செய்து, கருவடாம் பொறித்து அம்மா கொடுக்க, அவற்றை எடுத்துக்கொண்டு பல குடித்தனங்கள் குடியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று, வீட்டில் குடியிருந்த எல்லோரும் அவரவர் வீட்டுத் தயாரிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து, மகிழ்ந்திருந்த நாட்கள் நன்கு நினைவில் உள்ளன. 

2. நீங்க தலைக்காவிரி சென்று காவிரி உற்பத்தி ஸ்தானம் பார்த்திருக்கீங்களா? (காவிரி பாயும் தஞ்சைக்காரங்க என்பதால் இந்தக் கேள்வி)

# இன்னும் இல்லை. ஆசை இருக்கு அதிர்ஷ்டம் இருக்குமா தெரியவில்லை.

$ போயிருக்கிறோமே!

& இன்னும் இல்லை. 


3. 60 வயது என்பது ஓய்வு பெறும் வயது. ஓய்வு காலத்தில் எதுக்கு முக்கியத்துவம் தரணும்? எப்படி?


 # எது பற்றியும் நொந்து போகாத மனமும், யாரையும் நோகடிக்காத இயல்பும் கொண்டவராக இருப்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.  இதற்கான பொறுமையும் கருணையும் வளர்த்துக் கொள்ளப் பட வேண்டும்.
ரொம்பவும் loaded questions   நமக்கு நாமே கேட்டுக் கொள்ளப் பட வேண்டியவை. (பிறர் அபிப்பிராயங்கள் காதறுந்த ஊசிதான்.)

$ 60-இல் அரசாங்க வேலை செய்தவருக்கு தான் அந்த பாக்கியம்.  
அடுத்தவர் உதவி தேவையின்றி வாழ வேண்டும் என்றால், ஆரோக்கியம் அவசியம் பேண வேண்டும், வீட்டில் தேவைப்படும் எந்த வேலையும் செய்யலாம்.

& நான் ஐம்பத்துநான்கு வயதிலேயே விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு சந்தோஷமாக பொழுதைக் கழித்துக்கொண்டுள்ளேன். வேலைக்கு சென்ற காலத்தில் புத்தகங்கள் படிக்க நேரம் இல்லையே, ஓய்வு பெற்றவுடன் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பார்த்தால், இப்போவும்  புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை! எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டால், எது சந்தோஷமோ அதை செய்துகொண்டு, மற்றவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்துகொண்டிருந்தால், அது போதும். 

=================================
 & சொல்கிறார் : சென்ற வார பதில் ஒன்றில், ஒரு முழு பொய் சொல்லியிருந்தேன். அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை! ("நான் படித்தது Ribardo Bansi எழுதிய Pulao in Persia என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பு. )ஹி ஹி! யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. 

அதற்கு முன்பாக, ஒரு புத்தகம் என்னிடம் இருக்கு, வேண்டும் என்பவர்களுக்கு அனுப்புகிறேன் என்ற உண்மையையும் சொல்லியிருந்தேன். அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை!

=======================================

மின் நிலா 

சென்ற  வாரத்திலிருந்து ஒரு புதிய யோசனையை, செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். 

இங்கே, எங்கள் ப்ளாக் வலைப்பக்கத்தில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாங்கள் வெளியிடும் பதிவுகளை, அந்தந்த வாரம் அப்படியே வரிசையாகத் தொகுத்து, அதை ஒரு மின் நூலாக, புத்தக வடிவத்தில் வெளியிடுவது என்ற யோசனைதான் அது. 

சென்ற ஞாயிறு, முதல் நிலா வெளிவந்தது. 

நண்பர் குரோம்பேட்டை குறும்பன் அலைபேசியில் அழைத்து, வாரந்தோறும் வரும் புத்தகத்திற்கு நிலா என்று பெயரிடுவதைவிட, வேறு ஏதேனும் பொருத்தமாக பெயரிடுங்கள் என்றார். அவருடைய  நண்பர், தன்னுடைய சிறு வயதில், 'நிலா' என்ற பெயரில் மாதாந்திர கையெழுத்துப் பத்திரிகை நடத்தினாராம். அதனால் அவர் நிலா பெயருக்கு உரிமம் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்! 

மன்னார் & கம்பெனி இல்லை என்றால், ராஜமன்னார் கம்பெனி என்று நினைத்து, மின் நிலா என்று பெயர் வைத்துவிட்டோம். 

இந்தப் புத்தகம், எங்கள் ப்ளாக் பதிவுகளை தினந்தோறும் படிக்க இயலாதவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் விடுமுறை கிடைப்பவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கியுள்ளோம். ஒரு வாரத்துப் பதிவுகளை ஒரே இடத்தில் திரட்டி, அதைப் புத்தக வடிவில் இணைய அரங்கத்தில் அரங்கேற்றிவிடுவோம். 

முதல் நிலா புத்தகத்தை facebook வழியாக இணைப்புக்கு  சென்று படித்தவர்கள் எங்கள் முயற்சியை பாராட்டுகிறார்கள். 

இந்த வாரத் தொகுப்புப் புத்தகத்தை, இன்னும் மெருகேற்றி வெளியிட உள்ளோம். 

ப்ளாக் படிப்பவர்கள், உடனுக்குடன், அது பற்றி கருத்துரை இட்டு, அந்தக் கருத்தைப் பற்றி பதிவாசிரியரின் அல்லது மற்ற வாசகர்களின் கருத்தை அன்றே அறிந்துகொள்ளலாம். 

புத்தக வாசகர்களுக்கு அந்த கருத்துரைகளும், சுவையான சூடான விவாதங்களும் கிடைக்காது. 

அன்றன்று வெளியாகும் பதிவுகளும், விவாதங்களும், live relay match பார்ப்பதுபோல சுவாரஸ்யம். 

புத்தக வடிவம், recorded match பார்ப்பதுபோல. 

இப்போதைக்கு எங்கள் எண்ணம் : 

புத்தகத்திற்கு ஒரு அட்டைப்படம்.
வெளியீடு பற்றிய விவரங்கள். (தேதி, வரிசை எண் etc)
தலையங்கம் (இங்கே பதிவுகளில் வெளியிடப்படாதது)  
அந்த வாரத்து ஆறு பதிவுகள்.
ஒவ்வொரு பதிவுக்கும் வந்த கருத்துரைகளில்,  value adding கருத்து ஏதேனும் ஒன்று. 
எங்கள் ஞாயிறு ஆசிரியர் எடுத்த  (இங்கே வெளியாகாத) சில படங்கள்.
பழைய பதிவுகளில் அதிகம் பேர் ரசித்த ஒரு பதிவு இவற்றை வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளோம். 

புத்தக idea பற்றி உங்கள் கருத்துகளையும் இங்கே சொல்லுங்க. 


இதை அங்கிருந்து டவுன்லோட் செய்து, சேமித்துவைத்து பிறகு நேரம் கிடைக்கும்போது படித்துக்கொள்ளலாம். 

========================================

மீண்டும் சந்திப்போம். 

========================================

64 கருத்துகள்:

  1. செல்லிடத்துக் காக்க சினம் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லாத இடத்தும் தன் கோபத்தைக் காண்பித்தால், நம் அதிருப்தியை தைரியமாக வெளியிட்ட மாதிரியும் இருக்கும், விளைவைச் சந்திக்கும் தீரத்தைக் காண்பித்த மாதிரி இருக்கும் இல்லையா?

      நீக்கு
    2. செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
      காக்கின்என் காவாக்கால் என்
      (அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:301)

      பொழிப்பு (மு வரதராசன்): பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். முகநூலில் நிலாவைப் பார்த்தேன்,ரசித்தேன். நிஜ நிலாவுக்கு இருக்கும் தேய்தல் இல்லாமல் மின் நிலா என்றும் வளற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நெடுநாட்கள் கழிந்து இங்கே எங்கள் ப்ளாகிற்கு எப்போதும் போல் வருகை தந்திருக்கும் ஸ்ரீராமுக்குத் தொடர்ந்து இப்படி வரும்படியான நிலைமை இருக்கப் பிரார்த்தனைகள். கணினி பிரச்னை எல்லாம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். கொரோனா தாக்கம் படிப்படியாகக் குறையப் பிரார்த்தனைகளைச் செய்து கொண்டே இருப்பது தவிர்த்து வேறே வழியில்லை. தினம் ஒரு செய்தி வந்து கொண்டு இருக்கிறது. ஒண்ணும் புரியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஒரு மாதத்திற்கு கொரோனாவை மறப்போம்; நாராயணா என்று நினைப்போம்.

      நீக்கு
  5. மின் நிலாவுக்கு என் வாழ்த்துகள். இன்னும் நிலாவைப் பார்க்கவே இல்லை. இனிமேல் தான் பார்க்கணும். தொடர்ந்து பூரண நிலாவாக என்றென்றும் பிரகாசிக்கவும் வாழ்த்துகள். அது சரி, திங்கள் முதல் சனி வரை என்னும்போது ஞாயிறன்றுப் பதிவு விடுபடுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறு ஆசிரியர் எடுத்த பிரத்யேகப் படங்கள் சிலவற்றை ஆங்காங்கே நடுவில் வெளியிடுவோம்.

      நீக்கு
  6. நெல்லைத்தமிழரின் கேள்விகளுக்கும், பதில்களுக்கு பின்னர் வருகிறேன். இன்று ஸ்ரீராம் வந்துவிட்டதால் கௌதமன் சார் விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராமாவது இங்கு வருவதாவது.... கேஜிஜி சார்தான் என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. காலை முதல் மூன்று மணிநேரம் வீட்டில் பவர் சப்ளை இல்லை. பிறகு விசாரித்ததில் எனக்கு மட்டும்தான் அப்படி உள்ளது என்று தெரிந்துகொண்டேன். உடனே அபார்ட்மென்ட் புகார் பதிவு பகுதியில் புகார் அளித்து, அவர்கள் சரி செய்தார்கள். அதனால் இங்கே வருவதற்கு இப்போதான் சந்தர்ப்பம் வாய்த்தது.

      நீக்கு
    3. எங்களுக்கும் காலை ஏழு மணியிலிருந்து மின்சாரம் போயிட்டுப் பின்னர் ஒன்பதரைக்குத் தான் வந்தது. எங்க குடியிருப்பு வளாகம் முழுவதிலும் மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர் சரியில்லை என்று அதுவும் போடவில்லை. காலை லிஃப்டில் ஏறி, இறங்குபவர்கள் படிகளையே பயன்படுத்த வேண்டி இருந்தது.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. புத்தகம் பற்றி நீங்கள் குறிப்பிட்டுருந்ததும் தெரியும், மின்னூல் படிக்க வேண்டியதே ஏகப்பட்டது இருக்கு, கணிணியில் படிக்கும் பொறுமை இல்லாத்தால் கேட்கவில்லை.

    பதிலளிநீக்கு
  9. மின் நிலாவுக்கு வாழ்த்து. புதிய முயற்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி பதினெட்டு சித்ரான்னங்களுடன் காவிரிக்கரைக்கு 4 வருடங்கள் சென்ற அனுபவம் உண்டு. காவிரியில் வெள்ளம் ஓடிய நாட்கள் அவை. இனிமை.

      நீக்கு
    2. அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
    உலகம் முழுவதும் இந்த தொற்று காணாமல் போக பிரார்த்தனைகள்.

    மின் நிலா முதல் பாகம் படித்தாகிவிட்டது.
    ஏதாவது யோசனை சொல்ல முடியும் என்றால் இன்னும் புதிய பக்கங்களை
    இணைக்கலாம்.
    வளரும் நிலாவாக இருக்க வாழ்த்துகள்.

    54 வயதிலேயே ஓய்வு பெற்றது யார்.
    நல்ல தீர்மானம். நான் எழுதும் கதையில் வரும் தம்பி
    இப்படி செய்வதாக எழுதி வைத்திருக்கிறேன்.
    அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.



    பதிலளிநீக்கு
  11. மின் நிலாவுக்கு வாழ்த்துகள்.
    கேள்வி பதில்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  12. மின் நிலா - நல்ல விஷயம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
    கேள்களும் பதிகளும் அருமை.

    மின்நிலாவிற்கு வாழ்த்துக்கள்.

    ஆடிபெருக்கு சமயம் கடற்கரை சென்று இருக்கிறோம். கலவை சாதங்கள் எடுத்துக் கொண்டு, பிச்சாவரம் சென்று இருக்கிறோம். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்.

    எங்களுடன் அனுப்பி வைப்பார்கள் குழந்தைகளை அவர்கள் இப்போதும் அதை நினைவுகூர்ந்து போனில் பேசுவார்கள்.


    //எது பற்றியும் நொந்து போகாத மனமும், யாரையும் நோகடிக்காத இயல்பும் கொண்டவராக இருப்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதற்கான பொறுமையும் கருணையும் வளர்த்துக் கொள்ளப் பட வேண்டும்.//

    நன்றாக சொன்னீர்கள்.



    பதிலளிநீக்கு
  14. புத்தகத் தோற்றம் கிடைக்க இங்கிருக்கிற பதிவுகளைத் தூக்கி அப்படியே அங்கே போடக்கூடாது. நிறைய எடிட்டிங் சமாச்சாரங்கள் தேவை.

    திங்கள், செவ்வாய் போன்ற கிழமைப் பெயர்கள் பதிவுகளுக்கானவை. அதனால் புத்தகத்தில் அவற்றை எடுத்து விடுங்கள். ஒரு தலைப்பின் கீழ் வருகிற மேட்டர் என்ற தோற்றம் மட்டுமே கொடுக்க வேண்டும். பின்னூட்டம்?.. அறவே வேண்டாம். அதற்கு பதில் பத்திரிகை உள்ளடக்கம் பற்றி வாசகர் கருத்துச் சொல்ல வேண்டுமானால், 'ஆசிரியருக்கு..' என்று கடிதப் பகுதியைத் துவக்கலாம். பொறுக்கி எடுத்த மாதிரி பத்தே கடிதங்கள் போதும். அது ஆசிரியரின் தேர்வின்படி இருக்கலாம்.

    ஒரு கிழமைக்கான பதிவில் துண்டு துண்டாக இருக்கிற மேட்டர்களை புத்தகத்தின் வெவ்வேறு பக்கங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். திங்கள், செவ்வாய், புதன் கிழமைப் பதிவுகளைத் தவிர்த்து மற்ற கிழமைப் பதிவுகளில் இப்படிப் பிரித்துப் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    திங்கள், செவ்வாய் என்று இப்படி வரிசையாக புத்தகத்தில் வர வேண்டும் என்றில்லை.
    கலந்து கட்டி ஒரு வாரப் பதிவுகளை மாற்றி மாற்றிப் போடுங்கள்.

    கவிதைகள் முக்கியம். அதுவும் காலத்திற்கேற்பவான புதுக்கவிதைகள். ஸ்ரீராமின் கவிதைகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் பிளாக்கில் தனியே கவிதைகளுக்கான பக்கங்களைத் துவக்கலாம்.

    கேள்வி--பதில் பகுதிக்கு ஒரு பெயர் கொடுங்கள். 'தேசிங்குராஜனைக் கேளுங்கள்' என்ற பெயரில் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து கேள்விகளுக்கான பதில்களை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த மாதிரி ஒரு பெயர் கொடுங்கள்.

    கணினி விஷயத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியப்படும் என்று எனக்குத் தெரியாது.
    ஆசிரியர் குழுவின் பங்களிப்பு தான் முக்கியமாகிப் போகிறது.

    மின் நிலா -- நிலாவுடன் பொருந்தாத பெயராக எனக்குத் தோன்றுகிறது. நிலா வேண்டாம் என்றால் அம்புலி என்று பெயர் கொடுத்துக் கொள்ளுங்களேன். இல்லையென்றால் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பெயர்த் தேர்வு. யோசியுங்கள்.

    மனசில் தோன்றியவைகளை வரிசை படுத்தியிருக்கிறேன். அவ்வளவு தான். ஒரு ஆலோசனை என்றளவில் எடுத்துக் கொண்டால் போதும். 'எங்கள் பிளாக்' ஒரு பத்திரிகை ரூபமெடுப்பது தான் முக்கியமாகிப் போகிறது. அதனால் உங்களால் சாத்தியப்பட்டவைகளைச் செய்யுங்கள். அவை புதுமையாக இருக்கட்டும். மற்றவர்கள் பார்த்து வியக்கிற மாதிரி இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரைக்கு நன்றி ஜீவி சார். எல்லா ஆலோசனைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படுகிறோம்.

      நீக்கு
    2. உங்களின் மின் நிலா முயற்சிக்கு வாழ்த்துக்கள் இந்தப் பதிவைப்படித்துவிட்டு அருமை பாராட்டுக்கள் என்று சொல்லி செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு முயற்சி ஆரம்பிக்கும்போது அதைப் பாராட்டுவதோடு ஆக்கப் பூர்வமான எண்ணங்களைப் பகிர வேண்டும் அப்படிச் செய்ததில் ஜீவி ஒருவர் மட்டுமே அதற்காக அவருக்கு ஒரு பாராட்டு ஜீவி சார் சொன்ன சிறப்பான கருத்துக்கள் அனைத்தும் சரியாகவே இருக்கிறது


      அவர் சொன்ன கருத்தோடு என் மனத்தில் தோன்றுவதையும் சொல்லுகிறேன். நீங்கள் இந்த புக்கை வெளியிடும் தளத்தில் இந்த புத்தகம் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் அதன் பின் அதை டெலீட் செய்துவிடுகிறார்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அதற்குக் கட்டண சேவையைப் பயன்படுத்த வேண்டும்.. அதற்குப் பதிலாக நாம் மைக்ரோ சாப்ட் வோர்டில் பதிந்து அதை பிடிஎஃப் ஃபார்மெட்டில் சேமித்து அதை கூகுல் டௌகுமெண்ட்ல் சேவ் செய்து அதை embedded இணைப்பாக எடுத்து நம் தளத்திலே பதிவு செய்தால் நிரந்தரமாக இருக்கும்..

      அல்லது சில தளங்கள் இருக்கின்றன அதன் மூலம் இப்படி புத்தகமாக வடிவமைக்கலாம் இது பற்றி முழு விபரத்தை சுரேஷ் என்ற பதிவாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம் அவர் கையெழுத்து பத்திரிக்கை மாதிரி இணையத்தில் எழுதி வெளியிடுகிறார்


      அடுத்தாக தற்போதைய பதிவையே எடுத்து வெளியிடுவதற்குப் பதிலாக உங்களின் ஆரம்பக்கால பதிவுகளிலிருந்து ஒரு கதை சமையல் குறிப்பு கட்டுரைகள் இப்படி 2 வாரத்தில் வெளிவந்ததிலிருந்து சிறந்தவைகளை எடுத்து புக் செய்யலாம் இப்படிச் செய்யச் சொல்லக் காரணம் இப்போது பதிவைப் படிக்க ஆரம்பித்தவர்கள் உங்களின் ஆரம்பக் கால பதிவுகள் அனைத்தையும் படித்து இருக்கமாட்டார்கள் அப்படிச் செய்யாமல் இப்போது உள்ள கரெண்ட் பதிவுகளைப் போட்டால் இப்போதுதான் அதைப் படித்தோம் என்று கடந்து சென்றுவிடுவார்கள்...அதன் உங்கள் முயற்சி வீணாகிவிடும்

      இப்படி பழைய பதிவுகளை எடுத்து இதழ் தயாரிக்கும் போது உங்கள் குழுவில் உள்ளவர்கள் இது வரை வெளி வராத துணுக்குகள் கட்டுரைகள் நகைச்சுவைகளை ஆங்காங்கே சேர்க்கும் போது அந்த இதழ் புது பொழிவுடனும் ஏற்கனவே பழைய பதிவுகளை படித்தவர்கள் கூட இந்த இதழில் வேறு என்ன புதிய செய்திகள் வந்து இருக்கும் என்று ஆவலோடு மீண்டும் அதைப் பார்க்க ஆரம்பிப்பார்கள் அது உங்கள் முயற்சிக்கு உற்சாகம் மூட்டும்



      இப்படி பழைய பதிவுகளில் போடும் போது அதற்கு வந்த சிறப்பான பின்னூட்டங்களையும் சில வற்றை தேர்ந்தெடுத்து அதையும் அவர்கள் பெயருடன் போடுவது நல்லது காரணம் அதைப் பார்க்கும் அந்த கருத்தை இட்டவர்களுக்குச் சந்தோஷம் கொடுக்கும் உதாரணமாகச் சமையல் குறிப்பி வரும் திங்கள் பதிவைப் பகிரும் போது அந்த குறிப்பைப் படித்துவிட்டு சிலர் இப்படிச் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று தரும் டிப்ஸ் மற்றவர்களுக்கும் பயன்படும் அது போல உள்ள பின்னூட்டங்களையும் இந்த இதழில் பதியலாம்

      நீக்கு
    3. ஆலோசனைகளை, இப்போதான் படித்தேன். மிக்க நன்றி. எல்லாவற்றையும் கவனத்தில் கொள்கிறோம்.

      நீக்கு
  15. நிலாவின் சுட்டிக்கு போய் படித்தேன்.
    படிக்க முடியாத போது சேர்த்து படித்துக் கொள்ள வசதிதான்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மின் நிலாவுக்கு வாழ்த்துகள். சிறக்கட்டும் பணி.

    பதிலளிநீக்கு
  17. ///60 வயது என்பது ஓய்வு பெறும் வயது. ஓய்வு காலத்தில் எதுக்கு முக்கியத்துவம் தரணும்? எப்படி?//

    இப்பொழுதுதான் நாம் நமக்காக வாழத் தொடங்கும் வயது, எனவே நன்கு ஊர் சுற்றி, கவலை- சோகம் இன்றி லைஃபை என்.....சோய் பண்ணோணும்:)

    பதிலளிநீக்கு
  18. மின் - நிலாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.. எங்கள் புளொக்கில் பவனி வந்த நிலா இனி விண்ணில் பவனி வரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! நன்றி கேறறறறறற!

      நீக்கு
    2. கேக்குப் பின் ற இல்லை ற்..ற் ஆக்கும்... க்கும் க்கும்[இது எக்கோ:))]

      நீக்கு
    3. கெள அண்ணனுக்கு -ற்- இல கண்டம் ஹா ஹா ஹா.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
  19. “தேடுங்கள் கிடைக்கலாம்” எங்கே கெள அண்ணன்?.. அதைத்தூக்கிக் காவேரியில போட்டிட்டீங்களோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச காலத்திற்கு மறைத்து வைக்கலாம் என்று எண்ணம்.

      நீக்கு
  20. நிலா மின் புத்தகமாக எங்கள் பிளாகின் ஒரு வாரத்து பதிவுகளின் தொகுப்புகள் வருவதற்கு வாழ்த்துகள். நிலா ஒளிர்ந்து மிளிரட்டும்.

    கேள்வி பதில்களில் 60 வயதுக்கான பதில் சிறப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. முதலில் நிலாவுக்கு வாழ்த்துகள்! அதானே நல்ல கேள்வி வாரம் ஒரு முறை வருவதற்கு நிலா என்ற பெயரோ? நிலா எப்போதுமே வளர்பிறையாகவே இருந்து பௌர்ணமியாகவே ஒளி வீசிட வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மின் நிலா நல்ல ஐடியா. மின் நிலா என்பதால் எப்போதுமே ஓளிரும்!

    நெல்லையின் முதல் கேள்வி பல நினைவுகளை எழுப்பிவிட்டது. ஊரில் இருந்த வரை தாழம்பூ வைத்து ஜடை பின்னி கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் தான் ஊரே இருக்கும். கோடன் டேய்ஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

    பதினெட்டாம் பெருக்கு வீட்டில்தான் பெரும்பாலும். சித்ரான்னங்கள் அனைத்தும் வருடந்தோறும் உண்டு.

    /எது பற்றியும் நொந்து போகாத மனமும், யாரையும் நோகடிக்காத இயல்பும் கொண்டவராக இருப்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதற்கான பொறுமையும் கருணையும் வளர்த்துக் கொள்ளப் பட வேண்டும்/

    உண்மை. 60க்கு மேல் இந்தப் பக்குவம் இயல்பாக வர இறைவனிடம் மனமாற பிரார்த்தனை செய்திடல் வேண்டும். மற்றவர்களிடம் இது பற்றி கலந்து பேசினால் கூட பக்குவங்களுக்கு கண்டிப்பாக பங்கம் வந்து விடும்

    மின் நிலா என்றும் பொலிவுடன் திகழ நிலாவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. வார புத்தகம் சிறந்த முயர்ச்சி. புத்தகத்தை epub ஃபார்மேட்டில் freetamilebooks தளம் செய்வது போல பதிவேற்றிநால் திரைவாசிப்பான் மென்பொருள் கொண்டு வாசிக்கும் எம் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் உபையோகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் யோசனையை கவனத்தில் கொள்கிறோம். நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!