வெள்ளி, 22 மே, 2020

வெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்

நேயர் விருப்பப் பாடல் ஒன்று.

1995 இல் வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படத்திலிருந்து அன்பே அன்பே கொல்லாதே என்று ஹரிஹரன் அனுராதா ஸ்ரீராம் பாடும் பாடல்.  வைரமுத்துவின் வரிகளுக்கு ஏ ஆர் ரெஹ்மான் இசை.



அன்றைய நிலையில் இந்திய சினிமா உலகில் மிகவும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்.  பிரசாந்தின் ரோலில் முதல் விருப்பம் அப்பாஸ் ஆக இருந்ததாம்.  அவர் தேதிகள் இல்லை என்று சொல்ல அடுத்த சாய்ஸ் அஜித்துக்கு.  அவரும் கைவிரிக்க, பிரசாந்த் தனது 7 படங்களின் கால்ஷீட்டைத் துறந்து இதில் நடித்துக் கொடுத்தாராம்.  


கவுண்ட்டமணியை வில்லனாக போட ஆசைப்பட்ட சங்கரின் எண்ணம் அவரின் தேதி இல்லாக்குறையால் நடக்காமல் போனதாம்.  ஷங்கரின் படங்களில் முதல் முறையாக பெரும்பாலான பகுதிகள் வெளிநாட்டில் படம்பிடிக்கப்பட்டதாம்.  2013-2014 களில் பிரசாந்த் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதியை தனது தந்தையுடன் இணைந்து எடுப்பதாகச் சொல்லி இருந்தார்.  கைவிடப்பட்டு விட்டது போலும்.

நேயர் விருப்பத்தைக் கேட்டிருப்பவர் யார் என்று சொல்லவில்லையே...!  ரமா ஸ்ரீநிவாசன்.

அன்பே அன்பே கொல்லாதே 
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே

ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே


அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே


பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்

அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி



அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே


கொடுத்து வைத்தப் பூவே பூவே

அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா



அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி

அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்



மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து

மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்



அன்பே அன்பே கொல்லாதே



அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே 



அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே  



=======================================================================================================

இனி இந்த வார என் விருப்பப் பாடல்...

பிரம்மச்சாரிகள் படம் - 1983 -  புலமைப்பித்தன் - எம் எஸ் விஸ்வநாதன் - சுரேஷ் சுலக்ஷனா S V சேகர், YG மஹேந்திரா, வனிதா  ஆகியோர் நடித்தது.  -இயக்கம் ஸ்வர்ணமூர்த்தி   



பெயர் போடும்போது பழைய மவுண்ட்ரோடை - சென்னையைப் பார்க்கலாம்.  பெரிதாய் வேறு ஒன்றும் விவரம் கிடைக்கவில்லை.  படம் யூ ட்யூபில் கிடைக்கிறது.

இந்தப் பாடல் வழக்கம்போல SPB ட்ரீட்.  M S விஸ்வனாதன் செமையாய் போட்ட ட்யூனை அதகளப் படுத்தியிருக்கும் SPB.


கமதநி ஸாநிதப கமகஸ நிஸநித நான் பாட 
தகதிமி தாமென தோமென தையென நீயாட
இடை மின்னெழுதும் உடல் பொன்னெழுதும் ஒரு மான்தானோ 
சுரம் முன்னெழுதும் தமிழ் பண்ணெழுதும் இசை தேன்தானோ 
அழகிய திருமுக தரிசனம் தந்திட வாராயோ 
அபிநய விழிகளில் கவிமழை சிந்திட பாராயோ 

பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் 
பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும் 
அழகிய செம்பஞ்சு தீட்டாத முன்னே 
அல்லி பூவண்ணம் காட்டாதோ கண்ணே 
அது மண்படுமே அதில் புண்படுமே மனம் தாங்காதே 
எழில் தென்படுமே பிறர் கண்படுமே வழி போகாதே 

தங்க மேகலை சங்கீதம் பாட 
தாளம் தப்பாமல் செவ்வாழை ஆட 
அசைந்திடும் மேலாடை   பூப்பந்தல் போட 
ஆடும் உன் வண்ணம் நானென்ன கூற 
எழில்நந்தவனம் அதில் வந்தமரும் குயில் நானன்றோ 
உயர் கற்பனையில் இசை அர்ச்சனைகள் செய்யும் நாளென்றோ 
  தகதிமிதோம் தாம்தகித்தோம்   

137 கருத்துகள்:

  1. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
      நன்கலம் நன்மக்கட் பேறு.
      நலமே விளைக !

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  3. இன்று நல்லதொரு பாடல் மலரும் என்று காத்திருந்தேன்...

    !?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பாடல் என்பதையும் சொல்லிடுங்க!

      நீக்கு
    2. அச்சச்சோ...   என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்... கெட்டப் பாருங்களேன்...   ரசிப்பீர்கள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய வெள்ளி காலை வணக்கம்.
    இரு பாடல்களும் வெகு அழகு. இனிமையான
    சங்கீதம்.
    ஜீன்ஸ் வந்த போது டெட்ராய்ட்டில் முதல் பேரனின்
    வரவுக்காக வந்திருந்தேன்.
    அப்போதெல்லாம் காசெட்களும் டேப் ரெகார்டரும்
    தான் இசை கேட்கவென்று ஏற்பட்ட சாதனங்கள்.

    அதிலும் இந்தப் படத்தின் பாடல்கள்
    கேட்டுக் கேட்டு திளைத்து அதிலேயே பேரனைத் தாலாட்டிய
    1998 ஆம் வருடம்.
    நன்றியும் வாழ்த்துகளும் ரமா ஸ்ரீனிவாசன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய அனுபவங்களை பகிர்ந்ததற்கு நன்றி.

      நீக்கு
    2. பிரம்மச்சாரிகள் படம் புதிதாக இருக்கிறது.
      பாடல்மிக இனிமை ஸ்ரீராம்.
      பாடலை எழுதியவர் யாரோ.
      இது போல நல்ல தமிழ் வரிகளைப் படித்தே நாட்களாகிறது.

      SPB யின் மாயாஜாலம் பாடல் முழுவதும்
      தேனாகக் காதை நிறைக்கிறது.
      உண்மையில் இந்த வரிகளை உயிர்ப்பித்த MSV சாரின் திறமை
      வாவ் என்று வியக்கவைக்கிறது.

      வீடியோ கலைந்து கலைந்து வருகிறது.
      இங்கே இணையம் சரியில்லையோ என்னவோ.
      நல்லதொரு பாடலைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறீர்கள்
      மா. மிக மிக நன்றி. ரசித்துக் கேட்டேன். நன்றி,
      இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

      நீக்கு
    3. இரசித்ததற்கு எங்கள் நன்றி!

      நீக்கு
    4. அந்தப் பட வீடியோவே அப்படித் தான் வருகிறது வல்லி. கொஞ்சம் கலைந்தாற்போல் எடுத்திருக்காங்கனு நினைக்கிறேன். ஒருவேளை இது காமிராக்காரரின் கைவண்ணமாக இருந்திருக்கலாம்.

      நீக்கு
    5. வாங்க வல்லிம்மா...   இனிய வணக்கம்.  வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் வெளிநாட்டில் பார்த்தீர்கள் போல!   ஹிஹிஹி...

      ஆமாம், அப்போதெல்லாம், கேசெட்தானே?  பாடல்களும் பிரபலம்!
      பிரம்மச்சாரிகள் படப்பாடலை எழுதி இருப்பவர் புலமைப்பித்தன்.  படம் திராபையாக இருந்திருக்கும் போல...  இந்தப் பாடல் எனக்கு அப்போதிலிருந்தே பிடிக்கும்.

      நீக்கு
    6. ஆமாம்.  கீதா அக்கா சொல்வது போல காணொளியின் தரம் படுமட்டம்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவும் வாழ்த்துகளும். மஹாராஷ்ட்ரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இன்னமும் ஏற வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. எப்போது இவை எல்லாம் சரியாகும் என்பதும் புரியவில்லை. அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்குமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  வணக்கம், நன்றி.  உங்கள் கவலை நியாயமானதே...  நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தி காட்டியதாக பாஸ் சொன்னார்.  அதாவது, 2022 ம் வருடம் வரை முகத்தில் மாஸ்க், கையுறை சகிதம்தான் இருக்கவேண்டும் என்று சொன்னதாக...

      நீக்கு
    2. அது மாஸ்க், கையுறை தயாரிக்கும் கம்பெனிகளின் சதியாக்க்கூட இருக்கலாம்.

      நீக்கு
    3. ஹா...  ஹா...  ஹா...

      அறிவிப்பது அரசுதானே!!

      நீக்கு
  6. //வைரத்துவின் வரிகளுக்கு // If possible correct it Sriram. Thank You.

    பதிலளிநீக்கு
  7. இந்தப் படம் வெளிவந்தப்போவெல்லாம் அம்பத்தூரில் பிரச்னைகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை! அம்பத்தூர் ராக்கி திரை அரங்கில் படம் வெளி வந்திருந்தது. குடி இருந்த மாமி அனுமதிச்சீட்டு முன் பதிவு செய்து கொண்டு போய்ப் பார்த்துட்டு வந்து என்னிடம் பெருமையாகச் சொன்னதும், நான் சாதாரணமாக அப்படியா என்று கேட்டதும் நினைவில் இருக்கு! நான் இந்தப் படம் பார்த்ததில்லை. ஆனால் நித்யஸ்ரீ பாடிய பாடல் காட்சியைப் பல முறை தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். அப்போத் தான் நாங்க கேபிள் இணைப்பும் வாங்கி இருந்தோம். ஒரு வருஷத்துக்குள் என நினைக்கிறேன் மோதி இருந்தான் அப்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   தெய்வத்திருமகள் பார்த்து வந்தவரால் எல்லாம் அந்தப் படத்தைப் பார்க்காதோரை ஐந்து போல பார்த்தார்கள்.  அப்போது பென டிரைவில் அந்தப் படம் பார்த்தேன்.  இதே அனுபவம் பாஹுபலிக்கு ஏற்பட்டது.  சத்தியம் தியேட்டரில் படம் பார்த்தேன்!

      நீக்கு
    2. தெய்வத்திருமகள்? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பாஹுபலி ஒன்று இங்கே தான் ஸ்ரீரங்கத்தில் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போப் பையர் கூப்பிட்டார். மாமா, "அம்மா படம் பார்க்கிறா!" என்று சொன்னதும் பையருக்கு ஒரே ஆச்சரியம்! மயங்கி விழாத குறை! ஆனால் நீங்கல்லாம் ஆடிப்பாடிப் பேசிக்கிறாப்போல் படம் அப்படி ஒண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணும்! வேண்டாம் வம்பு, நான் ஊரிலேயே இல்லை! :))))))

      நீக்கு
    3. //படம் அப்படி ஒண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணும்! வேண்டாம் வம்பு, நான் ஊரிலேயே இல்லை! :))))))//

      ஹா ஹா ஹா இதே.. இதே.. இதே ஃபீலிங்ஸ் ஆலதான் மீயும் பகுதி 2 ஐ மிஸ் பண்ணியிருந்தேன், பகுதி ஒன்று பெரிதாக எழுப்பமில்லை, புகழ எதுவும் பெரிசாக இல்லை, சீனறிகளைத்தவிர...

      ஆனா நீங்கள் பகுதி-2 பாருங்கோ:))

      நீக்கு
    4. ரெண்டு பேரும் தெய்வத்திருமகள்னு பேசிக்கறீங்க யார் அது ??

      நீக்கு
    5. தெரியலையே ஏஞ்சல், அப்படி ஓர் படமாக இருக்கும்! தெய்வத்திருமகனை எழுத்துப் பிழையோடு "தெய்வத்திருமகள்"னு எழுதி இருப்பாரா இருக்கும்.

      நீக்கு
    6. //
      Angel22 மே, 2020 ’அன்று’ பிற்பகல் 2:46
      ரெண்டு பேரும் தெய்வத்திருமகள்னு பேசிக்கறீங்க யார் அது ??//
      பிஞ்சு ஞானியாக இருக்குமோ?:))

      நீக்கு
    7. தெய்வத்திருமகள் - எனக்கு ஏதோ காரணத்தால் விக்ரம் பிடிப்பதில்லை. இந்தப் படம் நல்லாருக்கு என்று மனைவிலாம் சொல்லியும், எங்கிட்ட படம் இருந்தும் பார்க்கலை. சிலரை இப்படி பிடிக்காமல் போவதற்கு காரணம் என்னவா இருக்கும்?

      நீக்கு
    8. இந்தப் படத்துக்கு இதே தளத்தில் விமர்சனமும் எழுதி இருந்தேன்.

      நீக்கு
    9. தெய்வத்திருமகள் அனுஷ் இல்லை ஏஞ்சல், ஒரு குட்டிப் பொண்ணு!

      நீக்கு
    10. ஓஹோ விக்ரம் நடிச்ச படமா? அநேகமா விக்ரம் நடிச்சது எதுவுமெ பார்த்தது இல்லை. இதுவும் பார்த்திருக்க மாட்டேன்.

      இந்த டெம்ப்லேட்டைப் பார்த்தால் எங்கேயோ புதுசா ஓர் இடத்துக்கு வந்துட்ட மாதிரி இருக்கு. எங்கள் ப்ளாகில் இருக்கும் உணர்வு வரலை! :(

      நீக்கு
  8. பிரமசாரிகள்னு படம் கேட்டதே இல்லை. ஆனால் வனிதானு ஒரு நடிகை தொலைக்காட்சித் தொடர்களில் எல்லாம் நடிப்பார். அவரும் இவரும் ஒருத்தர் தானா? சுலக்ஷ்ணா நடித்த படம் நான் பார்த்தது ஒன்றே ஒன்று தான், "தூறல் நின்னுபோச்சு!". மதுரை தங்கம் தியேட்டரில்(?) மதுரையில் பார்த்த கடைசிப் படமும் அது தான். பெரியப்பா பிள்ளை அழைத்துக் கொண்டு போனார். அவங்கல்லாம் நிறையத் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள். நானெல்லாம் இப்படி யாரேனும் கூட்டிக் கொண்டு போனால் மட்டும் பார்ப்பேன். இல்லைனா இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனிதா பல படங்களில் வொய் ஜி எம்முக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.  தூறல் நின்னு போச்சு மதுரைவ் அதுவும் தங்கம் தியேட்டரில் பார்த்தீர்களா?  அட...

      நீக்கு
    2. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை. இரண்டும் ஒரே வனிதாதானா? கோபத்தில் "க்"ஐ முழுங்கிட்டேன். :)))))

      நீக்கு
    3. ஆமாம், அப்போது ஒய்.ஜி.எம்மோடு நிறைய படங்களில் நடித்த வனிதா இப்போது படங்களில் அம்மாவாக வருகிறார். சீரியல்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் குயின் வெப் சீரீசில் வி.என்.ஜானகி(ஜனனி தேவி) ரோலில் வந்தார். ஒரு பொது இடத்தில் அவரை சந்தித்த நான் ஜனனி தேவி என்று அழைக்க குஷியாகி விட்டார். கெளதம் மேனனை வானளாவ புகழ்ந்தார். அவருடைய மகளும்,என்னுடைய மகளும் ஒன்றாகப் படித்தார்கள். என் பெரிய அக்காவிற்கு நெருக்கமானவர்.

      நீக்கு
    4. ஓஓ, நன்றி. நிறையப் பிரபலங்கள் உங்களுக்கு உறவு அல்லது தோழமை! குயீன் வெப் சீரீஸ்? வி.என்.ஜானகியாக வராரா? அப்போ அது ஜெயலலிதா கதையோ?

      நீக்கு
    5. பானு அக்கா பதில் சொல்லி விட்டார் கீதா அக்கா..

      நீக்கு
    6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான ப்ரார்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு நன்றி, நல்வரவு.  வணக்கம்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். படமும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். இப்போதும் ஏதாவது தொலைக்காட்சியில் போட்டால், பாதியிலிருந்தாவாது பார்க்க ஸ்வாரஸ்யமாக இருக்கும். அதன் விபரங்கள் தங்கள் மூலமாகத்தான் அறிகிறேன். நன்றி.

    இரண்டாவது படம் பார்த்ததில்லை. ஆனால் படம் கேள்விப்பட்ட மாதிரி உள்ளது. பாட்டு பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடலும் என்னைப்பொறுத்தவரை நன்றாகவே இருக்கும்.  அப்புறம் கேட்டுப்பாருங்கள் கமலா அக்கா.

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. இரண்டாவது பாடல் எனக்கு பிடித்தமானது ஜி.

    பிரமச்சாரிகள் மருமகளும், மாமனாரும் (எம்.எஸ்வி - சுலக்ஷனா) இணைந்த படம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஆமாம்...  மாமனாரும் மருமகளும்.  நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கும் நினைவுக்கு வருகிறது!

      அப்பாடி...   இரண்டாவது பாடலை ஏற்கெனவே கேட்டு ரசித்த ஒருவர்!

      நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
    2. அட? எம்.எஸ்.வி. சுலக்ஷணாவின் மாமனாரா????????

      நீக்கு
  13. முதல் பாடலை ரசித்துக் கேட்டிருக்கிறேன்.

    படம் பார்த்தபோது, என்னடா பிரசாந்தை வைத்து இவ்வளவு காஸ்ட்லி படமா என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..    வணக்கம்.

      எனக்கும் படம் பார்த்தபோது அப்படித் தோன்றியது.

      நீக்கு
  14. இரண்டாவது பாடல் சிறப்பாக பாடியிருக்கிறார்.

    முதல்முறை இந்தப் பாடலைக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யம், இதுவரை இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்காதது!


      அப்போது அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல்.

      நீக்கு
  15. //..அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி.. //

    ஓ.. தமிழின் முதல் ‘சயன்ஸ் ஃபிக்‌ஷன்’ கவிதையோ !


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   இந்தப் படத்தில் சுஜாதாவின் பங்கும் (பாடலில் அல்ல) உண்டு என்று ஞாபகம்.  ஆனால் எங்கும் குறிப்பிடப்படவில்லை.  படம் பார்த்தால் டைட்டில் கார்டில் பெயர் சின்னதாக வரலாம்!

      நன்றி ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
    2. ஜீன்ஸ் வசனத்தில் சுஜாதா சம்பந்தப்பட்டிப்பாரோ - எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. எழுத்தாளர்களை யார் சினிமாவில் கவனிக்கிறார்கள். அப்படியே கொஞ்சம் பழகினாலும், டைட்டில் போடும்போது மறந்துவிடுவார்கள்!

      நீக்கு
    3. ஜீன்ஸ் படத்தில் சுஜாதா சம்பந்தப்பட்டாரா என்று தெரியாது, இந்தியன், முதல்வன், இயந்திரன் போன்ற படங்களில் சம்பந்தப்பட்டார். இயந்திரன் பாதியில் இறந்து விட்டார். டைட்டிலில் சின்னதாக ஒரு நன்றி கார்ட் போட்டிருக்கலாம் என்று ஆ.வி.விமர்சனத்தில் கூட எழுதியிருந்தார்கள்.
      மனைவியைத் தேடி என்னும் சுஜாதாவின் கதையைத்தான் அலை பாயுதே என்று படமாக எடுத்தார்கள்.ஆனால் டைட்டிலில் கதை செல்வராஜ்,மணிரதனம் என்றுதான் போட்டார்கள். பத்திரிகைகள் அதைப்பற்றி எழுதிய பொழுது, சுஜாதா இதை பெரிது படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

      நீக்கு
    4. அந்தக் கதை ஒரு கல்கி தீபாவளி மலரில் வந்தது. என்னிடம் அந்த மலர் இருந்த நினைவு.

      நீக்கு
    5. Correct. கல்கி தீபாவளி மலரில்தான் வந்தது.

      நீக்கு
  16. பாடல்கள் இனிமை. இரண்டாவதை இப்பொழுதுதான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. இரண்டாவது பாடலும் நல்லாயிருக்கே...! (வரிகளும்...!)

    முடிவில் சட்டென்று முடிந்து போச்சே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க DD... ரசித்ததற்கு நன்றி.  காணொளி கடைசியில் சட்டென முடிந்து விடுகிறதா?

      நீக்கு
  18. தேவதை குளித்த தீர்த்தத்தை - பொன்மணி வைரமுத்து குளித்த தீர்த்தம்தான் வைரமுத்துக்கு தினமும் குடிதண்ணீராக உபயோகப்படுது போலிருக்கு. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   


      அம்மாடி...   இதுதான் காதலா....  அட ராமா...     இது என்ன மோசமோ....!!!!!!

      நீக்கு
    2. //பொன்மணி வைரமுத்து குளித்த தீர்த்தம்தான் வைரமுத்துக்கு தினமும் குடிதண்ணீராக உபயோகப்படுது போலிருக்கு. // !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இல்லை!

      நீக்கு
    3. இது..ல இந்த ஆராய்ச்சி எல்லாம் வேற நடக்குதா!..

      நீக்கு
    4. துரை சார்... கவிதை என்ற பெயரில் கண்டதையும் எழுதிடறாங்க இந்தக் கவிஞர்கள். அதுனாலதான் அப்படி எழுதினேன்.

      கீசா மேடம்... நோபல் பரிசு கிடைக்கும் என்பதற்காக மதம் மாறி, மனைவியைப் பிரிந்து.... இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்காதே

      நீக்கு
    5. நோ பல் ஆனதுதான் மிச்சம்!

      நீக்கு
    6. தெரியும் நெல்லை. பொன்மணியின் நிலைமை நன்றாகத் தெரியும். அதனால் தான் அந்தக் கருத்துப் போட்டேன். மனைவியைப் பிரிந்ததன் காரணம் வேறே!

      நீக்கு
    7. மணியும் முத்தும் சேரவில்லையா? கதை complicated ஆக இருக்கும்போலிருக்கிறதே!

      நீக்கு
  19. பாடல் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்...இசையின் மயக்கத்தில் பாடல் வரிகளில் கவனம் போகாது இருந்திருக்கிறது...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் காலை வணக்கம். என் நேயர் விருப்பத்தை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி.
    //பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி//
    ஆஹா ஆஹா...... என்னே கற்பனா சக்தியை மிஞ்சும் வரிகள். அன்றே சிரகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டது கற்பனை என்றால் அது உண்மை. எந்த விரசமும் இன்றி ஒரு பெண்ணை அழகாக வர்ணிக்கும் வரிகள். காலேஜ்ஜை கட்டடித்து விட்டு போய் பார்த்த படம். கல்லூரி நாட்கள். அன்று முழுவதும் என் கனவு ராஜகுமாரனைப் பற்றி ஒரே கனவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலேஜ்ஜை கட்டடித்து விட்டு போய் பார்த்த படம். கல்லூரி நாட்கள். அன்று முழுவதும் என் கனவு ராஜகுமாரனைப் பற்றி ஒரே கனவுதான்.// இந்த படம் 98ல் வெளியான படம். அப்போது நீங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தீர்களா...!!!??? எங்கேயோ இடிக்கிறதே??

      நீக்கு
    2. நானும் கவனித்தேன், இடிப்பதை!

      நீக்கு
    3. இந்தப் படம் வெளிவந்தபோது நான் பிறக்கவே இல்லை!!!

      நீக்கு
    4. நான் இனிமேல் தான் பிறக்கப் போறேன்.

      நீக்கு
    5. ஹா.ஹா.ஹா பிறப்பிலேயே ஒருவருக்கொருவர் சண்டை சுவாரஸ்யமாக உள்ளது. நான் இப்போதுதான் பார்க்கிறேன். ஆகவே நான் இப்போதுதான் பிறந்து கண் திறந்து பார்க்கிறேன்.:)

      நீக்கு
  21. பிரசாந்த் தவிர யார் நடிச்சிருந்தாலும் படம் ஹிட் அடிச்சிருக்காது.
    அஜீத் நடிச்சிருந்தால் அவரது கலையுக வாழ்க்கை எப்படி மாறி இருக்கும்ன்னு தெரில

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராஜி. கார்த்திக் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

      நீக்கு
  22. முதல் பாடல் கேட்டு ரசித்த பாடல். இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை. கேட்டுக் கொண்டிருக்கிறேன் - அலைபேசி வழி!

    தொடரட்டும் ரசித்த பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  23. முதல் பாடல் நன்கு கேட்ட பாடல், இரண்டாவது கேட்டதுபோலத்தான் இருக்குது, ஆனால் என்னவெனில், மனதில் நிற்கும் வரிகள் இல்லாத பாடல்கள்- நினைவில் இருப்பதில்லை. அதனால தான் பட்டுக்கோட்டை மற்றும் கண்ணதாசன் அங்கிளின் பாடல்கள் மனதில் தானாகவே ஒட்டிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடலில் ட்யூனும், குரலும்தான் சிறப்பு அதிரா.

      நீக்கு
  24. இந்த நடிகர் சுரேஸ் தானே இப்போ சமையல் நிபுணர் ஆகிட்டார்ர்?.. நான் சுரேஸ் எங்கே காணோமே எனத் தேடித்திரிஞ்சே, பின்புதான் சொன்னார்கள் அவர்தான் இவர் என.. இப்போ குண்டானதால் கட்டையாகிட்டார்.

    இதேபோலத்தான் நளினியையும் தேடித்திரிஞ்சேன், ஆனா என்னால நம்பவே முடியவில்லை, இப்பூடிக் குண்டாகி விட்டா என்பதனை.

    அப்பூடித்தான் இப்போ சரத்பாபு அங்கிளைத் தேடுகிறேன், அவரை எங்கும் காணம்.. நீங்கள் எங்காவது பார்த்தால்[இப்போதைய நிலைமை] எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ ஸ்ரீராம்.. அவரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

    என் இப்போதைய போஸ்ட் பாடலும் அவருடையதே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ்ஸ் எதுக்கு இப்போ அந்த அங்கிள்ஸ் எல்லாரையும் தேடறீங்க :) 

      நீக்கு
    2. லொக்டவுனால பழைய நினைவுகள் எல்லாம் வருது அஞ்சு:)) அது டப்பா? ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. அதே சுரேஷ்தான் அதிரா. இப்போ மொட்டைபாஸ்! சரத்பாபுவைப் பொதுவெளிப் புகைப்படங்களில் காண முடிவதில்லை.

      நீக்கு
    4. சரத்பாபுவின் வீட்டுக் கதையையும், அவர் மருமகளைக் கொடுமைப்படுத்துகிறார், அடிக்கிறார் என்று வந்த செய்திகளையும் படித்த பிறகுமோ சரத்பாபுவைப் பிடிக்கும் என்று சொல்கிறீர்கள் அப்பாவி அதிரா?

      நீக்கு
    5. அப்படியோ நெல்லைத்தமிழன், அவரின் அந்த அமைதியான சுபாவத்தால்தான் எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும், அத்தோடு அவரின் படங்களும் பார்க்கக்கூடிய கதையாக இருக்கும்.... நீங்கள் சொல்வது புதுக்கதையாக இருக்குது, அவரின் எந்தச் செய்தியையும் எங்கும் நான் படிக்கக் கிடைக்கவில்லை.

      நீக்கு
  25. ஜீன்ஸ் படம் பார்த்து அந்த இன்னொரு பிரஷாந்த் ஏமாறும் ஏமாற்றப்பட்ட காட்சியில் கஷ்டமா இருந்தது .:) நிஜமாலுமே இன்னொரு ஐஸை கொண்டாராமாட்டாரா இயக்குநர்னு தோணுச்சே .அதோட ஸ்ரீராம் இப்போ எல்லா படங்களும் க்ரிட்டிக் ஸ்பாய்லர்ன்னு விமரிசனம் என்ற பெயரில் முழு படத்தையும் திறந்து விடறாங்க அதனாலேயே படம் பார்க்கும் ஆசையில்லை ஆனா அதெல்லாம் இல்லாத காலத்தில் பார்த்த ஜீன்ஸ் பிடிச்சிருந்தது .காஸெட் பிளேயருளில்தான் பார்த்தோம் மெட்றாஸில் அஜித்துக்கு ஜீன்ஸ் சூட் ஆகியிருக்காது  ஐ மீன் படம்னு சொல்லவந்தேன் 

    பதிலளிநீக்கு
  26. முதல் பாடல் காட்சியில் பிரசாந்த் அரவிந்த்சாமியை காபி அடித்திருப்பார். இரண்டாவது பாடல் கேட்ட ஞாபகமே இல்லை. அந்த பாடல் காட்சியில் லாங் ஷாட்டில் ஆடுவது சுலக்ஷணா போல தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  27. முதல் பாடல் கேட்டு இருக்கிறேன்.
    இரண்டாவது பாடல் இப்போது தான் கேட்கிறேன்.
    இரண்டு பாடலும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. ஜுன்ஸ் படம் பார்திருக்கிறேன் பிரபலமான பாடல். பிரசாந்துக்கு இதுதான் சிறந்த படமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    சுலக்சனா படம் வேறு பார்திருக்கிறேன். இந்த படம் தெரியாது பாடலும் கேட்கவில்லை.

    பதிலளிநீக்கு
  29. முதல் பாடல் கேட்டதில்லை. ஜீன்ஸ் படம் பற்றி பேசப்பட்டது தெரியும் ஆனால் படமும் பார்க்கவில்லை.

    இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் அதிகம் கேட்டதில்லை என்றாலும். படம் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் நகைச்சுவை கலந்த படம் என்ற நினைவு.

    இரண்டு பாடல்களுமே கேட்க சுகம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. ஜீன்ஸ் படம் உறவினர் ஒருவருடன் சென்று பார்த்த படம். படம் செல்வதென்றால் யாரேனும் வீட்டிற்கு வரும் போது அவர்கள் சென்றால்...அதுவும் காலைக்காட்சி இருந்தால் மட்டுமே!!!!! அப்படி கோயம்புத்தூரில் இருந்தப்ப பார்த்த படம். நானும் தோழி லெவல் ஒன்றுவிட்ட நாத்தனாருமாகச் சென்றோம். அப்போது படத்தைவிட ஐஸ்வர்யாவைத்தான் பார்த்து ரசித்தோம். ஹிஹிஹி...நடிப்பு சுமார் ரகம் தான். பிரசாந்த் இதில் நல்லா பண்ணியிருப்பார் அவரைத் தவிர இதில் அஜித் யாரும் ஃபிக்ஸ் ஆகியிருக்கமாட்டாங்க.

    இரண்டாவது படமும் தெரியாது பாடலும் இப்பத்தான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

    பாட்டு செம. அதுவும் எஸ்பிபி வாவ்! எம் எஸ் வி அமர்க்களமாகப் போட்டிருக்கார் பாலுண்ணா கலக்குகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. அச்சச்சோ எங்கள் புளொக்குக்கு என்னாச்சு? கெள அண்ணன் ஏதும், புளொக்கை திருத்துறேன் பேர்வழி எனக் களம் இறங்கிக் குழப்பிப்போட்டாரோ.. கொமெண்ட்ஸ் பொக்ஸ் எல்லாம் ஒரு மாதிரி இருக்கே.. பலதடவைகள் ரிஃபிரெஸ் பண்ணியும் பார்த்திட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்கி சில மாற்றங்கள். சுலபமாக லோட் ஆவதற்கு.

      நீக்கு
    2. அது என்னமோ உண்மைதான். இப்போ எளிதாகக் கருத்துப் போட்டு மீண்டும் அதே இடத்துக்கு வர முடியுது!

      நீக்கு
    3. ஆஆ பச்சக் கலரு ஜிங்குசா.. பேப்பிள் கலரூ ஜிங்குசாஆஆஆஆஆ... நல்லா இருக்குது, மாற்றம் அனைத்திலும் தேவைதான், எப்பவும் ஒரே மாதிரி இருக்கக்கூடாது, வீட்டிலும் இப்படி மாற்றங்கள் அப்பப்ப செய்ய வேண்டும்..

      நீக்கு
  32. ஜீன்ஸில் பிரசாந்த் ஓகே என்றாலும் பெருந்தச்சன் எனும் மலயாளப் படத்தில் ப்ரஷாந்தின் நடிப்பு சிறப்பாக இருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்த படம் அவருக்கு.

    எம் எஸ் வி பாடல் அப்படியே அந்திமழை பொழிகிறது என்று போய்விடலாம்...அங்கிருந்து மின்சாரப் பூவேன்னு (இது அந்த ராகம் இல்லைதான் இருந்தாலும் லிங்க் செய்யலாம்...) போய் தேசுலாவுதே தேன் மலராலேனு பாடி இதழில் கதை எழுதும் நு (இதுவும் வேறு ராகம் ) பாடிட்டு போய் ரா ரா நும் போயிடலாம் (இதுவும் வேறு ராகம் தான்...) ஆனால் இவை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் பாசமிக்க!! கஸின்ஸ்!!!!! ஹா ஹா ஹா ஹா...அப்படி எம் எஸ் வி, இளையராஜா, ஏஆர் ஆர், ஆதிநாராயணராவ், வித்யாசாகர்னு எல்லா இசையமைப்பாளர்களையும் இணைத்துவிடலாம்!!

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிவரை என்ன ராகம் என்று சொல்லவில்லை நீங்கள் கீதா..!

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஆமாம். சொல்லாம போய்ட்டேன். போன முறையும் கூட சொல்லவில்லை. சமீபகாலமாகவே சொல்லுவதைத் தவிர்க்கிறேன். மற்றவர்களுக்குப் போரடிக்குமோ என்று.

      எம் எஸ் வி போட்டிருப்பது வசந்தா என் சிற்றறிவிற்கு. இடையில் கொஞ்சம் வேறு டச் செய்தாலும்..

      கீதா

      நீக்கு
    3. பெருந்தச்சன் பார்த்திருக்கேன். அம்பேரிக்காவில் இருந்தப்போ. இப்போ இல்லை, முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி!

      நீக்கு
  33. எங்கள் ப்ளாக் கருப்பு வெள்ளையாகிவிட்டதா.
    ஆனால் சீக்கிரம் லோட் ஆகிறது. நன்றி. கொஞ்சம்
    வண்ணம் சேருங்கள் கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் லோட் ஆவதற்காக சில மாற்றங்கள், சில தியாகங்கள்!

      நீக்கு
  34. Some change in எB ! வித்தியாசமாகத் தெரிவது நல்லதே.

    பதிலளிநீக்கு
  35. AR.ரஹ்மானின் இசை மட்டும் இல்லை என்றால் இந்தப் படத்தின் பாடல் வரிகள் எப்போதோ மக்கிப் போயிருக்கும்...

    பதிலளிநீக்கு
  36. ஆகா...
    எபியின் தோற்றமே தோற்றம்!.... அழகு....

    பதிலளிநீக்கு
  37. இப்போ தளம் ஐபேட்ல வேகமா இருக்கு. புது ஃபார்மட் அமாவாசை நல்ல நாள்னு பார்த்து மாத்தியிருக்கீங்க.தமன்னாவை மடிசார் மாமியாகப் பார்த்தால் ஏற்படும் அதிர்ச்சி. மனதில் பதிய நாளாகலாம்.

    பதிலளிநீக்கு
  38. லேப்டாப்லயும் வேகமா திறக்குது. ஆனா பாருங்க... வடிவமைப்பு பழக நாளாகும். லேப்டாப் முழு ஸ்க்ரீனும் வருவதில்லை. நடுல ஒரு பகுதியைத்தான் ஆக்ரமிக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே, வேகமாய் வருது. நடுவிலே பக்கத்தைக் காணோம்னு இருக்கு!

      நீக்கு
  39. கௌ அண்ணா வேகமாக வருது...

    பழைய எபி வடிவம் தான் மனதில் இருப்பதால் இந்தத் தோற்றம் டக்குனு பார்க்க என்னவோ போல இருக்கு ஆனா போக போகப் பழகிடும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருஷக்கணக்காப் பார்த்ததை எப்படி மறக்க முடியும்? ஆனால் எழுத்துகள் படிக்க முடிகிறது.

      நீக்கு
  40. அட கௌ அண்ணா இப்ப இன்னும் அழகா இருக்கு. அழகான பச்சைக் கலர். இந்த வடிவம் கொஞ்சம் முன் வந்ததை விட நன்றாக இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  41. எல்லாம் நம் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டுதல்படி - மாற்றியமைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வப்போது சிற்சில மாற்றங்கள் செய்து, எப்படி வருகிறது என்று பார்ப்போம். வாசகர் திருப்தி + சந்தோஷம், எங்கள் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  42. ஹையா...

    மறுபடியும் மெருகு... அழகு .. அழகு...

    பதிலளிநீக்கு
  43. if i am right jeans was a failure in box office, other than Aishwarya Rai and all the songs, story was a bad one. Prasanth dont know to pt expression ( much like his father ) :)

    பதிலளிநீக்கு
  44. இப்போது என் கணிணியில் சிறிய பிரச்சனை. அதனால் செல்ஃபோனில்தான் பார்க்கிறேன். எனக்கு எந்த மாறுதலும் தெரியவில்லையே..?!

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    இரண்டாவது பாடலும் கேட்டேன். எஸ். பி. பியின் குரலில் நன்றாக இருந்தது படம் பார்த்ததில்லை.காலையில் பார்த்ததை விட எ.பியின் தோற்றத்தில் தீடிர் பொலிவு. கலர்கலரான மாற்றங்கள். நன்றாக உள்ளன.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  46. இந்த வடிவம் அழகு. பழகிவிடும்.

    பச்சைக் கலரை மாற்றலாம். தொடரும் பதிவுகளில் எத்தனை மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டது மிஸ்ஸிங்.

    வேகம் நல்லா இருக்கு. ஆக்‌ஷன் எடுக்கலையேன்னு சில நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

    மனைவியின் பிறந்தநாள் என்பதால் பசங்க என்னை வலுக்கட்டாயமாக இப்போது எழுப்பிவிட்டதால் தளம் பார்த்து பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!